Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 27

என்று ஆர் கே சொல்லி முடித்த கதையில் யார் அதிகம் அதிர்ந்தனர் என்று அவர்களே அறிவர். 

அவர்கள் மட்டும் இல்லை ரவி மற்றும் ராகவன் குடும்பங்கள் கூட இவனின் பேச்சில் அதிர்ந்து தான் போயினர். இவன் எத்தனுக்கு எல்லாம் எத்தானா இருப்பான் போல, இப்படி அசால்டா கதை சொல்லறான், நான் கூட இப்படி பொய் சொன்னது இல்லை என்றார் ரவியின் தந்தை.

ஆதிரையோ இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை இத்தனை வருடம் பாடுபட்டு இப்படி ஒரு கதை கேட்டவா இவ்வளவு கஷ்டங்களையும் கடந்து இந்ந வழக்கை திரும்ப கையில் எடுத்தேன் என்று எண்ணினாள்.

அதியன்னோ அவன் சொன்ன கதையில் என்ன வளவனும் ஆதிரையும் காதலித்தார்களா? என்ற அந்த எண்ணத்திலே இருந்தான்.

வெற்றியோ இங்க என்னதான் நடக்குது யார்ராவது சொல்லுங்களேன் என்ற நிலையில் இருந்தான். 

கவிதாவோ ஆர் கே வை முறைத்தபடி இருந்தவள், எழுந்து நின்று என் மதிப்பு மிக்க எதிர் கட்சி வக்கீல் இது வரை சொன்ன கதை திரைப்பகதைகளை எல்லாம் மீஞ்சும் அளவிற்க்கு இருந்து, ஆனால் இந்த அளவிற்க்கு கதை சொல்ல தொரிந்த வக்கீலுக்கு அதற்கு தேவையான ஆதாரம் வேண்டும் என்ற விஷயம் தெரியாது போலும், இப்போது இவர் சொன்ன கதைக்கு இவரிடம் என்ன ஆதாரம் இருக்குறது என்ற் இந்த நீதி மன்றத்தில் சமர்பிக்கமுடியும்மா?

அப்படி இல்லாமல் இவர் இஷ்டத்திற்க்கு கதை சொல்லி நீதி மன்றத்தின் நேரத்தினை வீண்டித்துக்கொண்டு இருக்கிறார். என்றவள் தகுந்த ஆதாரம் இல்லாமல் என் கட்சிகார் மீது அவதூறு கூறுவது சட்டத்திற்க்கு புறம்பானது யுவர் ஆனர்.

என்றவள் இவர் கூறி பொய்களுக்கு இங்கு இவர் மண்ணிப்பு கேட்டாதக வேண்டும் என்றாள் அவனை முறைத்தபடியே.

மிஸ்டர் ஆர் கே  நீங்கள் கூறிய குற்றசாட்டிற்க்கு என்ன ஆதாரம் வைத்து உள்ளிர்கள் அதை கோட்டில் சமர்பிக்க வேண்டும்.

மை லாடு நான் கூறவை யாவும் உண்மை அதற்கான ஆதாரங்களை கோர்டில் சமர்பிக்க எனக்கு சிறுது அவகாசம் வேண்டும் என்றான்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சரி இரண்டு வாரகலாம் அவகாசம் தருகிறேன் அதற்குள் உங்கள் ஆதாரங்க்ளை இங்கு சமர்பிக்க வேண்டும் என்று கூறி விசாரனை முடிந்தாக கூறினார்.

எல்லாரும் வெளியில் வந்தவர்கள் அவர்வர் மனநிலை யில் இருக்க, என்ன கவிகுயிலு இன்னும் என்ன முறைக்கறத விடலயா நீ? இன்னும் சீனியருக்கு மரியாதை தர தொரியல என்ன படிச்சு என் லாயரோ நீ என்றான் ஆர் கே.

அவனை முறைத்தவள் ஏதும் சொல்லாமல் அந்த இடம் விட்டு நகர்ந்தாள். அவளும் ஆதிரையும் ஏறிக்கொள்ள வீடு வந்தனர். 

அதுவரை யாரிடமும் ஏதும் பேசாமல் இருந்தவள். வீட்டினுள் வந்தும் முதலில் பிடித்து ஆதிரையை தான். 

ஆதி எத்தனவாட்டி கேட்டேன் என் கிட்ட ஏதாவது மறைக்கிறியா? அப்படினு எதும்இல்லை  சொன்ன, அதனால இன்னிக்கு என்ன நடந்தது பார்த்தியா? 

நீ பாண்டிச்சேரியில் அதியனத்தான் பாக்க போன அப்படினு ஏன் எங்கிட்ட சொல்ல, நீ  சொல்லாம விட்ட அந்தவிஷயம் இன்னிக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை கொண்டு வந்து இருக்கு பார்த்தியா? அவன் அந்த ஒர் விஷயத்தை வைச்சி கேஸையே எப்படி மாத்திடான் பார்த்ததானே?

அவனுக்கு தொரிஞ்சு இருக்கு இந்த விஷயம் எப்படி அவனுக்கு தெரியும்?

இத பத்தி நீயார்கிட்ட எல்லாம் சொன்ண என்றாள் கோபமாக …

இல்லை கவி இதை பற்றி யாருக்கும் தெரியாது, நான் அதியன பாக்க போனேன் அன்னிக்கு இளா கிட்ட கூட சொல்ல என்றாள்.

அப்போ எப்படி அவனுக்கு தொரியும் என்றவள் மண்டையை பிடித்துக்கொண்டாள்.

அது சரி ஏன் அதியன பத்தி ஏன் எதும் சொல்ல என்ற கேள்விக்கு அமைதியாக இருந்தவள், பின் ஏற்கனவே இளா வளவன் இந்த தப்புக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை, அவனுக்கே இது சமீபத்துல தான் தொரிவந்து இருக்கு, நீ இந்த விஷயத்தை வெளியில் கொண்டு வரவில்லை என்றாலும் கண்டிப்பா அவன் கொண்டு வந்து இருப்பானு சொன்னாங்க.

அதும் இல்லாம வளவன் சிவநேசம் மாமா பையன் எனக்கு தொரியாது அவங்க கைது செய்த அப்பறம் பேப்பர் பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன், 

அப்பறம் சிவநேசன் மாமாவ தான் ஹாஸ்பிட்டல் பார்த்தபோது அவர் என்னால இப்போ ஏதும் அதிகமா பேசமுடியாது, ஆனா உன் மேல எந்த தப்பும் இல்லை நீ இதை நினைத்து வருத்தபடாதே. வளவன் எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான், அதற்கான எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன், அதியன் வந்தும் அவன் உனக்கு துனையா இருப்பான், வளவனும் சீக்கரம் வெளியில் வந்துவிடுவான் நீ கவலை பட தேவையில்லை அப்படி சொன்னார், அதுக்கு மேல அவர் பேச வரும் பொது அவர் மனைவி வந்துடாங்க, அதனால நான் ஏதும் போசல, அவங்களும் என்கிட்ட அன்னிக்கு இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம் சண்டை போட்டாங்க, அதுக்குள்ள இளா எண்ணை அங்க வந்து இருக்கறது தெரிஞ்சு, என்னை அங்க இருந்து போக சொல்லிட்டாங்க.

அதுக்கு அப்பறம் தான் வளவன், மாமா இறந்து எல்லாம், நானும் காலேஜ் போனப்பறம் அதியன் எண்ண தொடர்பு கொண்டாங்க, நான் மாமா சொன்ன மாதரி எல்லாம் அவருக்கு தெரியும், எனக்கு உதவி செய்யதான் வந்து இருக்கார் அப்படி நீனச்சுதான் அன்னிக்கு பாண்டி போனேன் ஆனா அது இப்பட ஆகும் எனக்கு தெரியாது.

ஏற்கனவே வளவன் இறந்து, மாமா இறந்து எல்லாம் என்னாலதான் ஒரு குற்ற உணர்ச்சில இருந்தேன், இதுல என்ன அன்னிக்கு போலீஸ் கைது பண்ணப்ப இது எல்லாத்துக்கும் அதியதான் காரணம் சொல்லி அதியனையும் இதுல மாட்ட வைக்க எனக்கு விருப்பம் இல்ல. 

அதுவும் இல்லாம அதியனுக்கு எதுவும் தெரியாது, அவரும் என்ன தப்பா நீனச்சு இத்தனநாள் பழிவாங்க தான் என் கூடபேசினார் அப்படினு நினைச்சு என்க்கு ரெம்ப கஷ்டமா இருந்து, எப்படியும் என்னை இளா கபாத்திடுவார் நினைச்சேன், ஆனா நடந்து வேற அதுக்கு அப்புறம் இத பத்தி பேச நான் விரும்பல. என்றாள் கவியிடம்.

இந்த அதியன் கூட எங்கிட்ட இது எல்லாம் பத்தி ஏதுமஎ சொல்ல என்றவள் தன் தங்கி இருக்கும் பகுதிக்கு சொன்றாள், அவளுக்கு அடுத்து என்ன என்று யோசிக்க வேண்டி இருந்து.

ஆர் கே அடுத்து இதை எப்படி எடுத்து செல்வான் என்ற குழப்பம் அவளுக்கு இருந்து. தீடிர்னு இந்த ஆர் கே எப்படி இந்த கேஸ் ல வர முடியும்? ஏன் வந்தான்? என்ற நினைவில் தோட்டத்தில் அமர்ந்து இருந்தவள் அருகில் யாரே அமர்வது போல் இருக்க. திரும்பி பார்த்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனால்……..

ஏன்னொன்றால் அருகே அமர்ந்து வெற்றி?

அவன் இந்த விட்டில் இருக்கும் போது அவன் பார்வையும் நடவடிக்கையும் அவள் நன்கு அறிவாள்,அதில் ஒரு கோவமும், நீயொல்லாம் எனக்கு இடா என்ற திமிர் தனமும் தான் இருக்கும். ஆனால் இன்று அவன் பார்வையில் ஒர் தயக்கம்.

அவள் ஏதும் பேசாமால் திரும்பிக்கொள்……

வெற்றியே வாய்திறந்தான், அண்ணா கேஸ்ல என்ன தான் நடந்து? என்றான்…

அவனை கொள்ளும் அளவு கோவம் இருந்தாலும், கேட்க வேண்டிய நேரத்தில் இந்த கேள்வியை கேட்காமல் இப்ப வந்து என்ன விசாரனை எனதான் மனதில் தாளித்தால். வெளியில் ஏதும் காண்பிக்கவில்லை. சிறிது தேரம் கழித்து மீண்டும் தொடர்ந்தான். என்ன மனசுக்குள்ள என்னை திட்டு இருக்கியா? என்றாவன் அவன் வாய் மொழிக்காக காத்து இருந்தான். 

அவள் அதற்கும் ஏதும் சொல்லாமல் இருந்தால்.

மீண்டும் அவனே ஆரம்பித்தான்.

எனக்கு சின்ன வயசுல இருந்து அண்ணாதான் எல்லாத்துக்கும். ஆனா எப்போ அண்ணா உன்ன ஸ்கூல்ல பார்த்து உன் கூட பேசினது நீ அவர் கூட பிரண்டு ஆனாது எல்லாம், ஆரம்பத்துல எனக்கு பெருசா தெரியல. ஆனா போக போக அண்ணா உனக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுகற மாதிரி எனக்கு தோனுச்சு   அத என்னால ஏத்துக்க முடியில. அதனால தான் உன் கூட என்னால சுமுகம பழக முடியில.

எல்லாத்துக்கும் மேல நீ அண்ணாவ இளா கூப்டா எனக்கு அவ்வளவு கோவம் வரும். அம்மாவும் உனக்கு தான் சப்போட் பன்னுவாங்க. எனக்கு அண்ணாவ விட்டு தூரமா போற மாதிரி இருந்து. என்னோட இந்த குடும்பத்துக்குள்ள உன்ன சேத்துக்க எனக்கு பிடிக்கல.

அதனால தான் அண்ணாவோட காதல் தெரிஞ்சும், அத என்னால ஏத்துக்முடியில. அப்பவோட பிரண்டு பெண் பத்தி பேச்சு வந்தப்ப நான் அத எப்படியாவது நடத்திடனும் நினச்சேன்.

Advertisement