Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இது கொஞ்சம் பெரிய எப்பி.

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 26

காலை விடிந்து முதல் கவிதாவும், ஆதிரையும் (இனி நேத்ரா ஆதிரை என்ற அழைப்போம்) சிறு பதற்றத்துடன் கிளம்பிக்கொண்டு இருந்தனர். 

இன்று வழக்கு மீண்டும் விசாரனைக்கு வருகிறது. ஏற்கனவே கவிதா தாக்கல் செய்து இருந்த வழக்கு மறுவிசாரனைக்கு நீதி மன்றம் அவள் தரப்பு வாதங்களை கேட்டு, திரும்பவும் வழக்கு விசாரனைக்கு உத்தரவிட்டது.

அன்று கோட்டில் அவர்களை ஏதாவது செய்யமுடியுமா என்று ஆனந்தனின் ஆட்கள் மற்றும் அவன் தந்தையின் அடியாட்களும் இருக்க, ஆனால் அவர்களால் வெற்றி மற்றும் அதியனை மீறி ஒன்றும் செய்யமுடியவில்லை.

எல்லாவற்றிக்கும் மேல் கவிதா, இளாவின் மரணம் ஒரு விபத்து அல்ல அது ஒரு திடமிட்ட கொலை என்றும், இந்த வழக்கு தொடர்பாக அவர் அப்போது இந்த வழக்கு சம்பந்தமாக தான் விசாரித்துக்கொண்டு இருந்தார் என்றும், குற்றவாளிகள் அவரை கொலை செய்து இருக்காலம் என்றும் நீதி மன்றத்தில் அந்த வழக்கையும் விசாரிக்கோரி மனு செய்து இருந்தாள்.

தங்களுக்கும் கொலை அச்சூருத்தல் இருப்பதாகவும் தங்கள் மற்றும் தங்களை சேர்ந்தவர்களுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு குற்றம் சாட்டபட்டவர்கள் தான் காரணம் என்றும், தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்றும் நீதி மன்றத்தில் மனு செய்து இருந்தாள்.

நீதி மன்றம் இவர்கள் இவளின் மனுவை ஏற்று அதற்கு ஆவன செய்து இருந்து.

இன்று முதல் வழக்கு விசாரனைக்கு வருகிறது. அதனால் இருவரும் கிளம்பிக்கொண்டு இருந்தனர். வெற்றியும் கூட அது வரை இருந்த கோபம் மறைந்து, தன் அண்ணனுக்காக அவள் இத்தனை தூரம் போராடுவது கண்டு அவள் மேல் முதல் முறையாக ஒரு நல்ல எண்ணம் எட்டிபார்த்து.

அதனால் எல்லாவற்றிலும் அவர்கள் உடன் இருந்தான். 

அங்கே ரவி மற்றும் ராகவ் அவர்களின் தந்தைகள் மற்றும் ஆனந்து எல்லாரும் அடுத்து என்ன செய்வது என்று விவாத்தில் இருந்தனர். இதில் ரவியின் தந்தை தான் குதித்துக்கொண்டு இருந்தார். நான் அன்னிக்கே சொன்னேன் அவளை முடிச்சுடலாம், யார் என் பேச்ச கேட்டிங்க, எல்லாம் என்ன சொல்லனும் உன் நம்பினேன் பார் அது தான் நான் செஞ்ச தப்பு. என்று கொதித்து கொண்டு இருந்தவரை மேலும் கொடிப்படைய செய்யும் வகையில் என்ன இருந்தாலும் illegal க்கும் legal க்கும் வித்தியாசம் இருக்கு என்றான் ரவி ஆனந்தனை பார்த்தவாரே.

அவனுக்கு எப்போது தான் தான் அடுத்து வாரிசு என்ற உரிமை உணர்வு அதிகம், அவன் தந்தை எப்போது அந்த வீட்டில் தான் அதிகம் இருப்பார் என்பதும், ஆனந்தனை தான் தன் எல்லா அரசியல் மற்றும் நிழில் காரியத்திக்கு பயன் படுத்துவார் என்றும் நன்கு தெரியும்.

ஆனாலும் தான் தான் அதிகாரபூர்வ வாரிசு என்றாலும், எல்லாவித்திலும் அதிகாரம் என்பது ஆனந்தன் கையில் தான் இருந்து, அதை அவன் தந்தையும் அறிவார், அவன் இன்றி அவரால் தனித்து செயல் படமுடியாது என்ற நிலையில் தான் ஆனந்தன் அவரை வைத்து இருந்தான். இந்த நிலையை அவன் அறவே வெறுத்தான். எல்லாவற்றிக்கும் அவனை எதிர்பார்ப்பதும், அவனிடம் நிற்பதும் அவனுக்கு பொரும் வெறுப்பை தந்து.

அதனால் தான் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவனை மட்டம் தட்டி இருந்தான். எல்லாவற்றையும் கேட்டு இருந்தவன். 

கொஞ்சம் வாயா மூடிட்டு இருக்கிங்களா இல்லையா?? என்று அவன் போட்ட சத்ததில் அந்த இடமே அமைதியாக, இங்க பாருங்க எனக்கு ஒன்னும் இது எல்லாம் கேக்கனும் அவசியம் இல்லை, என்னோட திறமைக்கு எனக்கு இது அவசியமும் இல்லை. ஏதோ என்னால தான் எல்லா பிரச்சனையும் அப்படிகிற மாதிரி பேசிட்டே போறிங்க. 

இது எல்லாத்துக்கும் காரணம் இதோ நீங்கறானே உங்க நேரடி லீகல் வாரிசு அவன் தான் காரணம். என்ன பழசு எல்லாம் மறந்து போச்சா. 

8 வருஷத்துக்கு முன்னால நடந்து எல்லாம் நீங்க மறந்து இருக்கலாம் நான் இல்ல, இந்த உதவகரை இதோ நீக்குதே இந்த உதவாகரை கூட சேந்து செய்த எல்லா காரியமும் இப்போ உங்கள இங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. 

ஆனா இப்ப கூட நீங்க என்ன குத்தம் சொல்லுவிங்களா? இங்க பாரு நீ ஆட்சில இருந்தாதான் உனக்கு பவர், ஆனா அப்படி இல்ல இங்க எங்கல மாதிரி ஆட்கள் இல்லாம நீ அரசியல் பன்ன முடியாது ஞாபகம் வெச்சுக்க……  

என்றவன் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான் போகும் போது அங்கு இருக்கம் தன் ஆள்ளிடம் கண் அசைத்தே சென்றான். அவனுக்கு தெரியும் இவர்கள் தனக்கே எப்போது வேண்டுமானும் குழிபழிப்பார்கள் என்று, அதனால் தன் நிழலை கூட அவன் நம்பமாட்டான். அவனுக்கு யார் மூலம் எப்படி செய்தி போகிறது என்றே தெரியாது. ஒற்று பார்பவனுக்கே ஒரு ஒற்றன் இருப்பான்.

இல்லை என்றால் இந்த வயதில் இந்த உயரம் அவனுக்கு சாத்தியம் இல்லை. அவன் அந்த இடம் விட்டு சென்றவுடன், ஏன்யா இருக்கற பிரச்சனை போது நீ வேற ஏன்யா இழுத்து வைக்கற. இப்ப இருக்குற இருப்புல எவன் எங்க இருந்து நமக்கு ஆப்பு அடிப்பான் தெரியல, இப்ப இருக்குற எந்த சூழ்நிலையும் நமக்கு சாதகமா இல்ல இதுல நீ வேற அவகீட்ட மேதுற. என்ற ராகவின் அப்பா தலையில் கைவைத்தார்.

இந்த வழக்கை திரும்ப மறுவிசாரனைக்கு உத்தரவிட்டதில் இருந்து எல்லாமே பிரச்சனை தான்.  முதலில் இவர்கள் சார்பாக வாதாட எந்த வக்கீலும் சரியாக அமையவில்லை, அவர்கள் பக்கம் எந்த ஆதாரம் இல்லை ஆனால் எந்த நம்பிக்கையில் அவர்கள் மறுபடியும் தெடங்குகிறார்கள் என்று இவரகளுக்கு தெரியவில்லை. (வழக்கு தொடர்பான எல்லா ஆதாரத்தையும் இவர்கள் இந்த இடைபட்ட காலத்தில் ஒன்றும் இல்லாமல் செய்து இருந்தார்கள்.

எல்லாவற்றிக்கும் மேல் அன்று காலையில் அவர்கள் நீதிமன்றம் வரும் போது அவர்களை முடித்துவிட இவர்கள் ஆட்களை ஏற்பாடு செய்து இருக்க, அது வெற்றிகரமாக முறியடிக்கபட்டது வெற்றியில் ஆட்களால், அதானல் தங்கள் பாதுகாப்புக்காக அவர்கள் தாக்கல் செய்த மனுவேறு மேலும் தலைவலியை கொடுத்து இவர்களுக்கு.

இவர்கள் இந்த மாதரி ஆட்களை ஏற்பாடு செய்து ஆனந்தனுக்கு தெரியாது, அதை பற்றி ஏதும் கூறவில்லை அவனிடம் அது தான் இப்போது நடந்த விவாத்திற்க்கு காரணம்.

அடுத்து என்ன செய்வது எப்படி இந்த வழக்கில் இருந்து வெளிவருவது என்பது இப்போது அவர்கள் தலை மேல் தொங்கு கத்தி போல். போன் அடிக்க அதை எடுத்த ரவியின் தந்தை சொன்ன செய்தியில் அவர் முகம் வசீகரித்து.

என்னையா என்ன விஷயம் உன் முகம் டால் அடிக்குது, எல்லாம் நல்ல விஷயம் தான், நம்ம கேஷ் எடுக்க அந்த டெல்லி வக்கீல் ஒத்துகிட்டான், அப்பா இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு, பின்ன சும்மாவா ஒரு ஹேரிங்க்கு 1 கோடி ஆச்சே என்றார் ராகவ்வின் தந்தை. அட அத விடுய்யா இந்த கேஷ் முடிஞ்சு தேர்தல்ல ஜெயிச்சா, 100 மடங்கு திரும்பி வரும். 

என்றவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

…………….

என் சொல்ர நிகில், அந்த ஆர் கே இந்த கேஸ்ல அவங்களுக்கு favour ஆஜர் ஆகிறார்ரா? என்றவள் அடுத்து என்ன ஏதும் பேசாது அந்த பக்கம் சென்னவற்றை கேட்டவள் இனைப்பை துண்டித்தாள்..

என்ன கவி என்னாச்சு என்றால் ஆதிரை, நமக்கு எதிரா லீடிங் லாயர் ஆர் கே ஆஜர் ஆகிறார்னு நிகில் கால் பன்னான், அதனால என்ன நம்மகிட்ட தான் இவ்வளவு ஆதாரம் இருக்கே அப்புறம் என்ன, 

ஏன் நீ சரியா படிக்கலயா? அந்த வக்கீல் அளவுக்கு என்று அருகில் இருந்த வெற்றி கவியை பார்த்து கேட்க அதில் கோபம் கொண்டவள், அவனை முறைத்தவாரே சென்றுவிட்டால், அவள் சென்றதும் ஆதிரையும் அவள் பின்னால் போக.

போகும் அவர்களை பார்தவாரே தன் அலைபேசியை எடுத்து அழைப்பு எடுத்தவன், சில வஷயங்களை கூறிவிட்டு பால்கனியி்ல் நின்று இருந்த கவிதாவையே பார்த்து இருந்தான்.

அடுத்தநாள் காலை யாருக்கும் காத்து இருக்காமல் விடிந்து, கவிதா ஆதிரையும் வெற்றி ஏற்பாடு செய்து இருந்த ஆட்களுடன் நீதி மன்றம் சென்று இருந்தனர்.

வெற்றி 10 மணிக்கு வருவதாக கூறியிருந்தான். அதியன் தனியாக வந்து கவிதாவுடன் நீதி மன்றத்தில் இனைந்துக்கொண்டான்.

இதுவரை தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை பற்றி மட்டுமே சொன்ன அதியன், ஆதிரையின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் என்று கூறவில்லை, இவர்கள் இருவருக்கும் ஏதோ சரியில்லை என்று மட்டும் தெரியும் ஆனால் அதியன் பற்றி முழுமையாக விசாரிக்கவில்லை கவிதா.

நம்மிடம் தான் எல்லா ஆதாரமும் இருக்கிறதே இனி இந்த வழக்கில் சுலபமாக   வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்து இருந்தான் அதியன்.

நேற்றுவரை தன் பக்கம் எல்லாம் சரியாக தொரிந்தாலும், ஏதோ கண்ணுக்கு தெரியாத புள்ளி இருப்பதாக பட்டது கவிதாவிற்க்கு இல்லை என்றால் கண்டிப்பாக ஆர் கே இந்த வழக்கில் ஆஜர் ஆக வாய்ப்பு இல்லை. வெற்றிக்கான வாய்ப்பு இல்லாமல் அவன் எந்த வழக்கிலும் ஆஜர் ஆவது இல்லை, இது வரை அவன் எடுத்த வழக்குகள் எல்லாமே வெற்றிதான், 

அதில் நியாயம் அநியாயம் எல்லாம் இல்லை எடுத்துக்கொண்ட வழக்கில் வெற்றி ஒன்றே அவன் குறிக்கோள். 

எல்லாம் இப்படி இருக்கையில் எல்லாம் அடுத்தநாள் நீதிமன்றத்தில் சந்தித்தனர்.

எல்லோரும் அமர்ந்த உடன்  நீதிபதியிடம் தவாலி அன்றைய வழக்கு விசாரணைக்கான தகவல்களை தெரிவித்தார்.

பின் கவிதா எழுந்து, My lord இந்த வழக்கானது சுமார் 6 வருடங்களுக்கு முன் என் கட்சிகார் திரு. ஆதிரை என்ற நேத்திராவால் தொடரப்பட்டது.

ஆனால் அதை தொடர்ந்து நடைப்பெற்ற சில சம்பவங்களாலும், அதாவது இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி திரு. இளமாறன் அவர்களில் விபத்து ஒன்றில் அவர் குடும்பத்திடன் உயிர் இழந்தார், அதை அடுத்து என் கட்சிகாரின் உயிருக்கு இருந்த அச்சுருத்தல்   காரணமாக அவர் தலைமறைவாக இருந்தார்.

இதை பயன் படுத்திக்கொண்ட குற்றவாளிகள் தங்களின் அரசியல் பலத்தாலும், பணபலத்தாலும் தங்களுக்கு சாதகமாக வழக்கை முடித்துவிட்டனர். இந்த வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்யும் படி எனது கட்சிக்கார் மனு செய்து அதற்கான ஆவணங்களையும் இங்கு சமர்பித்து இருக்கிறார். 

என்றவள் அந்த ஆவணங்கள் அடங்கிய பைலை நீதிபதியிடம் கொடுத்தனர்.

அதை பெற்றுக்கொண்டவர் அதை பார்வையிட்டார், 

மேலும் தொடர்ந்த கவிதா சென்னையில் 9 ஆண்டுகளுக்கு முன் வி. ஆர். ஆர் என்ற கல்வி பயிற்சி நிலையம் வளவன், ரவி மற்றும் ராகவ் ஆகிய 3 பேரால் ஆரம்பிக்கப்பட்டது, அதில் மாணவ மாணவிகளுக்கு நீட் போன்ற பயிற்சி வகுப்புகளும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டது, ஆரம்பிக்கபட்ட சில வருடங்களிலே இந்த மையம் சென்னையில் 3 கிளைகளையும் ஆரம்பித்தனர்.

அந்த பயிற்சி பள்ளியில் எனது கட்சிகார் ஆதிரை நீட் பயிற்சி வகுப்புக்காக சேர்ந்து இருந்தார். 6 மாத பயிற்சிக்காலம் முடியும் தருவாய்யில் அங்கு நடைபெற்ற மாணவர்களுக்கான பிரிவு உபச்சார விழவால் கலந்து கொண்டரவர் அங்கு ஒர் மாணவியை அந்த மையத்தின் நிறுவனர்கள் மீரட்டுவதை கண்டு அதை தன் போனில் படம் பிடித்துள்ளார், அதன் பின் அந்த பெண்ணிடம் தனியே விராசித்த போது, அந்த மையத்தின் நிறுவனர் ராகவ் தன்னை காதலிப்பதாக கூறி தன்னுடன் கடந்த 3 மாதமாக பழகியதாகவும் அந்த நேரத்தில் அவர்கள் நெருக்கமாய் இருந்தை புகைபடம் மற்றும் வீடியோ எடுத்து தன்னை மீரட்டுவதாகவும் ஆதிரையிடம் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து ஆதிரை அந்த நிறுவணத்தில் அது சம்பந்தமான ஆதாரங்களை திரட்டி புகார் அளிந்தார். அந்த புகார் ஏற்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அதன் பின் அரசியல் மற்றும் பணபலத்தால் இந்த வழக்கு திசைதிருப்பட்டு ஆதிரை உயிருக்கும் அச்சுருத்தல் ஏற்பட்டது.

ஆனால் நீதிக்காக இந்த வழக்கை மீண்டும் மறுவிசாரனை செய்ய வேண்டும் என்று என் கட்சிகார் தரப்பு கோரியுள்னர்.

அது தொடர்பாக அனைத்து ஆவணங்களும் இங்கு சமர்பிக்க பட்டுவிட்டன என்றவள் தன் இடம் அமந்தாள்.     

இந்த வழக்கை பற்றி நீங்கள் உங்கள் தரப்பில் என்ன கூற விரும்புகிறீகள் என்ற நீதிபதி ஆர் கேவை பார்த்தார்.

ஆர் கே எழுந்தவன்.

நீதிபதியை வணங்கிவிட்டு  My lord

தற்போது இந்த வழக்கை மறுவிசாரனை நிச்சயம் வேண்டும், ஏன் எனில் இந்த வழக்கின் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கபடால் வெளியே சுகந்திரமாக உள்ளனர்.

எனவே இந்த வழக்கின் விசாரனையை நானும் என் கட்சிகாரகளும் வரவேற்றகிறோம்.

மேலும் அவர்கள் தரப்பில் கொடுக்கபட்டுள்ள ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை குறுக்கு விசாரனை செய்யவிரும்பவில்லை 

என்றவனை எல்லாரும் ஆவலாக பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இவன் நல்லவனா கொட்டவனா ?

என்று எண்ணமிட்டபடி ரவி மற்றும் ராகவ் தரப்பினரும் பார்த்து இருந்தனர்.

ஆனால் My lord என் தோழியும் எதிர்தரப்பு வக்கீல் கூறிய காரங்களை தான் என்னால் ஏற்கமுடியவில்லை.

இந்த வழக்கு ஆரம்பத்தில் இருந்தே முழுவதும் ஜோடிக்கபட்ட ஒர் பொய் வழக்கு. வழக்கின் ஆரம்பத்தில் இருந்தே ரவி மற்றும் ராகவ் இருவரும் குற்றவாளிகள் என்ற கண்ணோட்டத்தில் தான் வழக்கு விசாரணை நடைபெற்று இருக்கிறது.

இதில் அவர்கள் தங்கள் அரசியல் மற்றும் பணபலத்தை கொண்டு இந்த வழக்கில் இருந்து தப்பிவிட்டனர் என்று கூறுவது முழுவதும் அவர்கள் கற்பனையே யுவர் ஆனர்.

அப்ஜக்‌ஷன் மை லாட், இவரின் கற்பனைக்கு வழக்கின் போக்கை மாற்றுகிறார்.

என்றவள் அவனை முறைத்து பார்த்தாள்.

அப்ஜக்‌ஷன் ஒவர் ரூல்டு என்ற நீதிபதி  

மிஸ்டர் ஆர் கே  நீங்கள் சொல்லவந்தை தெளிவாக கூறுங்கள் என்றார்.

நீதிபதியிடம் தலை அசைத்து அதை ஏற்றவன், அவரை நோக்கி நான் இந்த வழக்கின் கட்சிகார் மிஸ். நேத்ராவை விசாரிக்க விரும்புகிறேன்.

அப்ஜக்‌ஷன் மை லாட் என்று மீண்டும் எழுந்தவள் என் கட்சிகார் பெயர் ஆதிரை, அதற்கான ஆவனங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் சமர்பிக்கபட்டு உள்ளது என்றாள் அவனை நக்கலாய் பார்த்தபடி.

அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர், முதலில் இந்த வழக்கை பதிவு செய்த போது அந்த முதல் தகவல் அறிக்கையில் நேத்திரா என்ற பெயரில் தான் புகார் அளிக்கபட்டு இருந்து, அதனால் நான் அந்த பெயரை அழைத்தேன். 

என்றான் கவிதாவை நக்கலாக பார்த்தபடி.

மண்ணிக்கவும் கணம் கோட்டார் அவர்களே எனக்கு நேத்ரா (எ) ஆதிரை விசாரிக்கவேண்டும் என்றான் தன் விளையாட்டு தனத்தை விட்டவனாய்.

அதன் படி ஆதிரை அழைக்கபட்டு, அவளிடம் சத்தியபிரமானம் செய்தபின். ஆதிரையிடம் வந்தவன்.

உங்கள் பெயர் 

ஆதிரை

என்ன செய்கிறீர்கள்?

ஊட்டியில் அறிவியில் ஆசிரியை யாக பணி புரிகிறேன்.

ஆனால் நீங்கள் மருத்தும் அல்லவா படித்துக்கொண்டு இருந்திர்கள் அல்லவா?

ஆம் ஆனால் சில எதிர்பாரத நிகழுவுகளால் என்னால் தொடரமுடியவில்லை.

வளவன், ரவி மற்றும் ராகவ்வை உங்களுக்கு தெரியுமா ?

தெரியும் நான் பயிற்சி வகுப்பில் படித்துக்கொண்டு இருக்கும் போது பார்த்து இருக்கிறேன்.

உங்களுக்கு நிறைய வசதிகள் இருந்த போதும் ஏன் அந்த வகுப்பில் சேர்ந்திர்கள்?

நான் என் சொந்த முயற்சியில் தான் என் வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள், அதனால் பகுதி நேர வேலை பார்த்து அங்கு படித்தேன்.

அந்த நிறுவனத்தின் நிறுவனர்களை அதற்கு முன் உங்களுக்கு தெரியுமா?

இல்லை

சிவநேசன் யார்?

அவர் என் தந்தையின் நன்பர். என் தந்தையுடன் பணியாற்றியவர்.

சிவநேசன் விட்டில் யார் எல்லாம் இருக்கிறார்கள்?

அவர் மனைவி, மகன் வளவன், அதியன் மற்றும் மகள் என்றாள்.

இப்போது தான் வளவன் யார் என்று தெரியாது என் கூறினிர்கள், இப்போது உங்கள் தந்தையின் நன்பர் மகன் என்று சொல்கிறிகள் ?

 என் தந்தை மற்றும் தாய்யின் இறப்பிற்க்கு பின் இவர்களின் தொடர்பு இல்லை.

அவரை பயிற்சி மையத்தில் சந்தித்த போது அவர் யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் அதன் பின் வந்த பத்திரிகை செய்தில் அவரின் குடும்ப புகைபடம் வெளிவந்து இருந்து அதன் பிறகு தான் அவர் சிவநேசன் மாமாவின் மகன் என்று எனக்கு தெரியும்.

இவர்கள் சொல்லவது முற்றிலும் பொய் யுவர் ஆனர்.

இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்கனவே பழக்கம் இருந்து இருக்கிறது, இவர் திட்டமிட்டே அந்த மையத்தில் சேர்ந்தார். சிறு வயதில் பொற்றோறை இழந்த இவர், ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து தயாளன் தம்பதியினர்ரால் தத்து எடுக்கபட்டு வளர்க்கப்பட்டார்.

ஆனால் தான் தத்து குழந்தை தான் தனக்கு சொத்தில் ஏதும் உரிமையில்லை என்பதை அறிந்துக்கொண்டவர், எப்படியாவது வசதியான வாழ்கை வாழ ஆசைப்பட்டார்.

இவருக்கு வளவனின் அறிமுகம் கிடைத்து, அதே சமயம் வளவன் அங்கு படிக்கும் மாணவிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதையும் அறிந்துக்கொண்டார்.

பின் அந்த பெண் சந்தித்து எல்லாவற்றை அறிந்துக்கொண்டவர், அது தொடர்பான ஆவனங்களை அங்கு உள்ள கணிணியில் தேடும் போது பயிற்சி மையத்தின் பங்குகள் பற்றியும் அறிந்துக்கொண்டார், மேலும் வளவன் தன் தந்தையின் நன்பர்ரான சிவநேசன்னின் மகன் என்பதையும் அறிந்தவர்.

வளவனுடன் இனைந்து திட்டம் வகுத்தனர்.

பயிற்சி மையம் சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்து இருந்து, அதன் முக்கிய பங்கு தார்கள் ரவி மற்றும் ராகவ் அவர்கள் அதில் 80% முதலீடு செய்து இருக்க, வளவன் பங்கு வெறும் 20% மட்டுமே அதுவும் அவர் கடன்னாக பெற்ற தொகை, பயிற்சி மையத்தில் அதிக வருமானம் வந்த போதும் அவர் பங்கான வெறும் 20% அவர்க்கு போதவில்லை, அதனால் தான் அங்கு இருக்கும் மாணவிகளை தவறாக பயபடுத்த பணம் சம்பாதித்து உள்ளார்.

இதை முதலில் கண்டித்த ரவி மற்றும் ராகவ் விடம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று மழுப்பலான பதில் கூறியுளார். இந்த நேரத்தில் ஆதிரை இது பற்றி கேட்கவும்.

இருவரும் தங்களுக்கு இருக்கும் பனத்தேவையை நிறைவு செய்ய, ரவி மற்றும் ராகவ்வை இதில் சிக்கவைத்து இது எல்லாவற்றையும் அவர்கள் இருவர் செய்தாக கூறி மிரட்டி உள்ளனர், முதலில் அதை எதிர்த்தவர்கள், அவர்கள் காட்டிய பொய்யான ஆதாரங்களை கண்டு பயந்து அவர்களுக்கு அவ்வபோது பணம் கொடுத்து உள்ளனார். ஆனால் அதில் திருப்பதி அடையாத வளவன் மையத்தின் பங்குகளை தன் பெயருக்கு மாற்ற சொல்லி மேலும் அவர்களை மிரட்டி இருக்கிறார், அதன் படி மாற்றியும் இருக்கறார்கள்.

ஆனால் இருவரும் பின்னால் பிரச்சனை செய்தால் என் செய்வது என்று அவர்கள் மேல் போலியாக ஒரு புகார் ஆதிரையால் கொடுக்கப்பட்டது.

ஆனால் இதில் அவர்கள் எதிர்பாராமல் வளவனே கைது செய்யப்படுவான் என்று எதிர்பார்க்கவில்லை.

தீடிர் என்று எல்லாம் தனக்கு எதிராக போகவே பயந்து போன வளவன் சிறைசாலையில் தற்கொலை செய்துக்கொண்டான்.

அது வரை அவனுக்கு எதிராக இருந்த ஆதிரை அது கொலை என்று காவல்துறையில் தன் சந்தேகத்தை தெரிவித்து இருக்கிறார். ஏன் என்றால் ரவி மற்றும் ராகவ் இதில் தன்டனை பெற்றுவிட்டால், இது வரை சம்பாதித்த எல்லாம் தனக்கு தான் என கணக்கு போட்டார்.

ஆனால் அதற்குள் விஷயம் அறிந்த வளவன் தம்பி அதியன் தன் அண்ணன் மரணத்திற்க்கு ஆதிரைதான் காரணம் என்று அவளை தனியாக சந்தித்து பேசி பழகி ஆதிரையை பாண்டிச்சேரியில் ஒர் வழக்கில் சீக்க வைத்தார்.

அதன் பின் தன்னால் படிப்பை தொடரமுடியாது தலைமறைவாகி இருந்தார். இப்போது எல்லாம் கொஞ்சம் அடங்கியபின் மீண்டும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளார்.

என்று ஆர் கே சொல்லி முடித்த கதையில் யார் அதிகம் அதிர்ந்தனர் என்று அவர்களே அறிவர். 

இனி வழக்கின் நிலையும் ஆதிரையின் நிலையும் என் ஆகும்……….. 

நிலவு தேயும்…………

Advertisement