Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 25

இன்றோடு மருத்துவமனை விட்டு வந்து 1 வாரம் முடிந்து இருந்து. இப்போது அதிரை வெற்றியின் விட்டில் தான் இருக்கிறாள் முகிலுடன்.

அன்று அறுவை சிகிச்சை முடிந்த பின் மருந்துவர், அவள் உடல் நிலையை 2 நாட்கள் கவணித்துவிட்டு, எந்த பிரச்சனையும் இல்லை, தலையில் இருந்த இரத்த கசிவு முழுமையாக அகற்றபட்டு விட்டது, மேலும் இரத்த கசிவு ஏற்படவில்லை, அதனால் பயப்பட தேவையில்லை. என்று கூறியவர் அடுத்த இரு வாரத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தார்.

அவள் மருத்துவமனையில் இருந்த நாட்களில் முகில் வெற்றியின் வீட்டில் இருந்தான். முதல் நாள் அவனை தன்னோடு தங்க வைத்துக்கொண்ட கவிதா அதன் பின் அவன் தேவைகளை கவணித்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவர அவளுக்கு முடியவில்லை அதிலும், வெளிசாப்பாடு அவனுக்கு ஒத்துக்கொள்ளவும் இல்லை.

எல்லாவற்றிக்கும் மேல் அதிரை அறுவை சிகிச்சை நடந்த பின் ஆனந்தனின் ஆட்கள் அவளை கொல்ல முயன்றதும் ஒரு காரணம். ஆதிரை தான் கவிதாவிடம் எப்படியும் இது ஒர் நாள் நடக்க போவது தான், அவன் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருப்பது தான் நமக்கு நிம்மதி. 

நாம் அடுத்து செய்ய போகும் வேலைக்கு அவனை நம்மால் பாதுகாக்க முடியாது என்று கூறியவள், அன்று அவளை கான பத்மினியிடம் முகிலை ஒப்படைத்துவிட்டாள்.

அவருக்கு அவ்வளவு சந்தோஷம், மகன் கணவன் என்று தன் இழப்பில் இருந்தவர், தன் பேரனை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். வெற்றி இதை எதிர்பார்க்கவில்லை, எப்படியும் அதிரையிடம் இருந்து முகிலை பெற அவன் போராட வேண்டும் என்று எண்ணியிருந்தான், ஆனால் இது சுலபமாக நடந்து அவனுக்கு அதிர்ச்சிதான்.

அவன் கண்டதும் கேட்டதும் வைத்து அவன் ஆதிரை பற்றி கணித்து வைத்துருந்து வேறு ஆனால், அவன் நினைத்துக்கு முற்றிலும் மாறகவே நடந்து. வாழ்வின் முதல் முறையாக எல்லாம் தன் அவசர குணத்தினால் நடந்தோ என்று அவனுக்கு உறுத்தலாக இருந்து.

முகில் அவர்களிடம் இருந்தாலும், பத்மினி தினமும் வந்து ஆதிரையை பார்த்து செல்வார், சில சமயம் முகிலையும் அழைத்து வருவார், முதலில் அவன் ஆதிரையை பார்த்துவிட்டால் தன்னுடன் வர மாட்டானோ என்று பயந்தவர், முகில் இருநாட்கள் கழித்து ஆதிரை பற்றி கேட்டவும், மருத்துவமணைக்கு அழைத்து சென்றார். ஆனால், அவர் நினைத்து போல் இல்லாமல், ஆதிரை பார்த்துவிட்டு அவன் பத்மினி கிளம்ப அவருடன் கிளம்பிவிட்டான்.

அவருக்கோ  அது ஆச்சரியம் தான், மொதுவாக முகிலிடம், உனக்கு அம்மா விட்டு இருக்க கஷ்டமா இருக்கா என்றார், அதற்கு அவன் இல்லை, அம்மாக்கு உடம்பு சரியில்லை சரியானதும் வந்துடுவாங்க. 

அம்மா சொன்னாங்க இவ்வளவு நாள் பாட்டி நான் இல்லாம ரொம்ப கஷ்டபட்டாங்க இனிமே நீ அவங்க ஹப்பியா பாத்துக்கனும், நான் பிக் பாய் ஆகிட்டேன் இனிமே என்னோடு எல்லா வேலையும் நான் செய்யனும், இனிமே இது தான் என் வீடு நான் இங்க தான் இருக்கனும்.

ஆதிமாக்கும் கவிமாக்கும் முக்கிய மான வேலை இருக்காம் அதனால அவங்களா என் கூட இருக்க முடியாது என்றவன் தன் கையில் இருந்த ஆப்பிளை கடிக்க ஆரம்பித்து இருந்தான்.

அதை கேட்டவர்க்கு தான் என்னவோ போல் ஆனது, இத்தனை நாள் நாம் தான் அவர்களை புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டோம் என்று குற்ற உணர்வாகி போது, அன்று முதல் தினமும் மருத்துவமணைக்கு செல்பவர் முகிலையும் அழைத்து சொல்வார். ஆதிரை அவருடன் பேசினாலும், கவிதாவின் வாயில் இருந்து எந்த வார்த்தையும் வராது. அவரும் முதலில் முயன்றவர் பின் விட்டுவிட்டார், அவள் இந்த அளவிற்க்கு இருப்பதே போதும்.

இவர்கள் நினைத்து இருந்தால் முகிலை என்னிடம் இருந்து பிரித்து இருக்கலாம், எங்களை பற்றி தவறான பிம்பத்தை அவன் மனதில் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவன் அவருடன் கான்பிக்கும் ஒட்டுதல் ஒன்றே அவருக்கு போதும்.

அன்று அவர்கள் எந்த சூழ்நிலையில் வீட்டில் நின்றார்கள் என்று அறிவார், ஆனால் அவர்களுக்கான எந்த சந்தர்பத்தையும் வழங்காது, எல்லாவற்றிக்கும் மேல் வெற்றி பேசிய வார்த்தைகள், என எதையும் தடுக்காமல் இருந்து இப்போது அதற்கு வருந்துவது தால் என்ன பயன்.

ஒரு வேலை அன்று இளா வீட்டை விட்டு போகாமல் இருந்தால் இன்று என்னுடன் இருந்து இருப்பான்னோ?

அவர்க நினைவுகள் எங்கோ செல்ல முகிலன் அழைப்பில் கலைந்தவர், அவனுடன் வீடு வந்தார்.

அடுத்த இருவாரங்களில் ஆதிரையிடம் நல்ல முன்னேற்றம் இருக்க , அவளை அழைத்து செல்லாம் என்று மருத்துவர்கள் கூறினர்.

கவிதா இதற்கு இடையில் பிற வேலைகளை கவணிக்க ஆரம்பித்தாள், பழைய டிஜிபி உடன் இருவரும் தெடர்பில் தான் இருந்தனர். அவர்தான் இத்தனை நாள் இவர்களுக்கு, பாதுகாப்பு ஏற்பாடு செய்து.

இந்த முறை ஆதிரை இங்கு வந்து கூட முகிலனை அவன் பாட்டி மற்றும் சித்தபாவிடம் ஒப்படைத்துவிட்டு, மீண்டும் அந்த கேஸை ரிஒப்பன் செய்யலாம் என்ற நேக்கத்துடன் தான்.

முதலில் இரு தினங்கள் அதியன் மருத்துவமனை வந்தாலும், யார்ரிடமும் ஏதும் பேசவில்லை, ஆதிரை கண் விழித்த உடன் தானே கவிதா விடம் சென்று தன்னை வளவனின் தம்பி என்று அறிமுகம் செய்துக்கொண்டான்.

முதலில் அவன் இருந்தை கவிதா கவனிக்கவில்லை என்றாலும் பின் அவனை கண்டுக்கொண்டாள், வளவன் கேஸ் பைலில் அவன் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரம் அவள் அறிந்து தான்.

மேலும் ஆதிரா மூலம் அவன் குடும்பத்திற்க்கும் இவர்களுக்கும் இருக்கும் அறிமுகம் அறிந்து இருந்தாள். ஆனால் அவன் ஏன் இப்போது இங்கு வந்து இருக்கிறான். 

இவனை ஆதிரைக்கு தெரியுமா? என்று யோசித்தவள் பின் பிற வேளைகளில் அதை ஒதுக்கி வைத்தால். ஆதிரையும் அவன் இருப்பை அறிந்தாலும், அவனிடம் ஏதும் பேச முயற்ச்சிக்கவில்லை.

இவனால் ஏற்பட்ட இழப்புகள் ஒன்றும் சாதாரணம் அல்லவே, முக்கியமாக ஆதிரா மற்றும் இளாவின் இழப்பு கையில் 2 மாத குழந்தையுடன் அவள் தவித்து, என எல்லாம் எப்போதும் அவள் மன கண்விட்டு அகலாத ஒன்று.

மருத்துவர் கூறியதும் கவி மற்றும் ஆதிரை தங்க ஒரு பாதுக்காபான இடம் வேண்டும், இதற்கு பிறகு தான் அவர்கள் உண்மையான போராட்டம் தெடங்குகிறது.

இதில் அவள் பக்கம் இழப்பு இல்லாமல் அவர்களின் இலக்கை அவர்கள் அடைய வேண்டும், இந்த வெற்றி தான் அவர்களின் இந்தனை நாள் வெற்றியை ஈடுசெய்யும்.

அதனால் டிஜிபி யிடம் தாங்கள் தங்கும் இடம் பற்றி பேசினால், அவர் தான் பார்த்துக்கொள்வதாக கூறியவர், அடுத்து அழைத்து பத்மினிக்கு தான். ஆதிரை மற்றும் கவிதாவிற்க்கு இப்போது இருக்கும் நிலையில் தங்க ஒர் பாதுகாப்பான இடம் வேண்டும், அதனால் அவர்கள் அவர்கள் வீட்டில் தங்க வைக்க முடியுமா? என்று கேட்டார்.

பத்மினியும் சம்மதித்துவிட இதில் குதித்தவர்கள் இருவர் தான்!!

வெற்றியும், கவிதாவும் இந்த ஏற்பாட்டிற்க்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் நடந்த கொலை முயற்சியில் இருவரும் அமைதியாகி விட்டனர்.

இப்படி தான் இவர்கள் இருவரும் வெற்றியின் வீட்டிற்க்கு வந்தனர். அதியனும் அவ்வபோது கவிதாவிற்க்கு துனையாக அவள் வேலைளில் உதவினான். இதில் வெற்றி மேலும் கடுப்பானான்.

இங்க ஆனந்தன் மிகுந்த கோவத்தில் இருந்தான், இப்போது அவர்கள் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இன்னும் 6 மாத்தில் தேர்தல், இப்போது இந்த பிரச்சனை எழுந்தால் எதிர் கட்சிகள் அதை தங்களுக்கு ஒர் வாய்ப்பாக எடுத்துக்கொள்ளும்.

கிட்டதட்ட எல்லாரும் இந்த வழக்கை மறந்த நிலையில், எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தால் மீண்டும் இதை நேத்ரா(ஆதிரை) தோண்டுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அதிலும், இப்போது அவளுடன் இருக்கும் கவிதா மற்றும் டிஜிபி மேல் அவனுக்கு கொலை வெறியே வந்து, இப்போது இது பத்தாது என்று அவள் வெற்றியின் பாதுகாப்பில் வேறு இருக்கிறாள்.

வெற்றி என்தான் அவர்கள் மேல் கோவத்தில் இருந்தாலும் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பக்காவாக செய்து இருந்தான்.

அதிலும் அவன் இறப்பிற்க்கு இந்த வழக்கிற்க்கும் சம்பந்தம் இருக்கிறது என்று அன்று டிஜிபி கூறியதில் இருந்து எப்போதும் அவர்களை நிழல் போல் பாதுகாத்தான்.

இன்றும் அவனுக்கு முழுமையாக நடந்தவை தெரியாது, ஆனாலும் அவர்களை பாதுகாத்தான்.

அதியன் ஆதிரையை தன்னுடன் அழைத்து செல்லவே விரும்பினான் ஆனால் அவளின் பாரமுகமும் அவளுக்கு இருக்கும் ஆபத்து களில் இருந்து அவளை பாதுகாக்க வெற்றியின் வீடுதான் சிறந்து என்று விட்டுவிட்டான்.

ஆனால் அதன் பின் அவன் தொடர்பில் இருந்து கவிதா உடன் அவர்கள் கேஸை ரீஒப்பன் செய்ய போகிறார்கள் என்று தெரிந்த உடன் தனக்கு தெரிந்த தகவல் மற்றும் அவன் தந்தை எழுதிய கடிதம் மற்றும் மறைத்து வைத்து இருந்த ஆதாரங்களை பற்றி கவிதாவிடம் கூறி இருந்தான்.

அதை கேட்ட கவிதாவிற்க்கு புதையலை கிடைத்து போல் இருந்து ஏன் என்றால். அவர்கள் ஆதிரை பாண்டிச்சேரியில் இருந்து மீட்டு வந்துவிட்டாலும் அந்த நிகழுவு அவள் வாழ்கையை மொத்தமாக மாற்றி இருந்து.

டிரக்ஸ் கேஸ் அவள் மீது பதிவாகி இருந்து. அதானல் அவளால் தன் படிப்பை தெடரமுடியாத நிலை, எல்லாவற்றிக்கும் மேல் ஆனந்தனின் ஆட்கள் அவளை கொலை செய்ய தெடர்ந்த வண்ணம் இருந்தனர், இதற்கு நடுவில் அவர்களால் இந்த கேஸ் பற்றி யோசிக்க முடியவில்லை.

அந்த வருடம் நடந்த தேர்தலில் அவர்கள் கட்சி வெற்றி பெற்றுவிட, எல்லாமே அவர்களுக்கு சாதகமாக இருந்து, முடிந்தவரை வழக்கை திசை திருப்பி, எதிர்கட்சியினரால் தங்கள் மீது போடபட்ட பொய்வழக்கு என்று என்று வாதாடினர். ஆனாலும் அவர்கள் முழுமையாக வழக்கை தள்ளூபடி செய்ய வைக்க முடியவில்லை.

அவர்களால் நேத்திராவை(ஆதிரை ) அதன் பிறகு கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் இல்லாமல் அவள் அந்த எப் ஐ ஆர் அப்படியே இருந்து. அதற்கு டிஜிபியும் இளாவும் கூட காரணம்.

ஆனால் அவர்களால் அதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனந்தன் தரப்பும் அதற்கு மேல் இதை தொடராமல் கிடப்பில் போட்டனார். ஆனால் நேத்திராவை(ஆதிரை ) அவர்கள் தேடிக்கொண்டு தான் இருந்தனர்.

அவள் இங்கு வருவதற்க்கு 1 வாரம் முன்புதான் அவள் இருப்பிடம் கண்டு பிடித்தனர், அவள் இங்கு வருவது தெரிந்து சரி இங்கு வந்ததும் பார்த்துக்கொள்வோம் என்று இருந்தனர். ஆனால் அவளை சுற்றி இத்தனை பாதுகாப்பு அவன் எதிர்பார்காது.

கவிதா அந்த வீட்டில் இருந்த தோட்டத்தில் நிலவை வெறித்த படி அமர்ந்து இருந்தால், நாளை கோட்டில் வழக்கை மறுபடியும் ரீஒப்பன் செய்கிறார்கள், கண்டிபாக எதிர்ப்புகள் அதிகம் இருக்கும். அவ்வளவே ஏன் அவர்கள் உயிரே கூட போய்விடலாம்.

ஆனால் அதை எல்லாம் தாண்டி இந்த வழக்கில் வெற்றி பெறவேண்டும். இது அவளின் வெற்றி மட்டும் இல்லை, அவர்களின் இழப்புகளுக்கான நிவாரணம், இந்த நிமிடம் வரை அவளால் இளாவின் இழப்பில் இருந்து வெளிவரமுடியவில்லை.

அவளுக்கு எல்லாமும் அவன் தான். அவனின் இழப்பு அவளுக்கு ஒரு தகப்பனின் இழப்பிற்க்கு சமம்.

இங்கு நாளை எப்படியாவது எல்லா ஆதாரங்களையும் கோட்டில் ஒப்படைத்துவிட வேண்டும் என்று அதியன் என்னியபடி படுத்து இருந்தான்.

ஆனந்தனை போட்டு அவன் தந்தை காய்ச்சி இருந்தார், நாளை இந்த வழக்கு நீதிமன்றத்திற்க்கு வந்தால் தன் அரசியல் வாழ்வே அஸ்தமித்துவிடும் என்று நன்கு அறிவார்.

இவர்கள் இப்படி இருக்கா நாளைய விடியல் யாருக்காக????

 

நிலவு தேயும்…………

Advertisement