Advertisement

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 24

சூழ்நிலை கடினமானதாக இருந்து, இங்கு யார் யாரை தேற்றுவது, யார் யாருக்காக பரிதாப்படுவது, யாரிடம் என் விசாரிப்பது என்பது அறியாது எல்லோரும் மருத்துவரின் வரவிற்காய் காத்து இருந்தனர்.

இப்போது இரவு 7 மணியாகி இருந்து, கவி என்ற பத்மாவின் அழைப்பில் மொதுவாக கண்விழிந்நவள், அருகில் இருந்தவரை பார்த்தாள்.

அதில் என்? என்னையா அழைத்திர்கள் என்ற கேள்வி மட்டுமே அவள் பார்வையில், தவிர ஒரு வார்த்தை பேசவில்லை பெண்ணாவள். அவள் வாய்திறக்காது கண்டு முகம் வாடினார் பத்மினி, ஒரு காலத்தில் அம்மா என்ற அழைப்போடு ஒயாமல் தன் சுற்றிவந்தவள் இவள் என்றாள் யாரும் இப்போது நம்ப மாட்டார்கள்.

அவளாய் ஏதும் கேட்கமாட்டாள் என்று உணர்ந்தவர், முகிலை காட்டி பிள்ளைகளுக்கு பசிக்கும் என்றார், அவள் வந்து ஏறதாழ 1 மணி நேரமாய் அவளிடம்மே முகில் இருந்தான்.

அவனை ஏக்கமாய் பார்க்க முடிந்தே தவிர, அவரால் அவளிடம் சென்று அமர்ந்து அவனை கேட்க முடியவில்லை, அவனும் அவளிடம் அத்தனை பாங்காக அமர்ந்து இருந்து, அவள் அவனுக்கு புதியவள் இல்லை என்று உணர்த்தியது.

மேலும் அவள் பதிலுக்காக காத்து இருந்தார்.

மெல்ல தலை அசைத்தவள், அங்கு அவள் அருகில் அமர்ந்து இருந்த நந்தினியையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

தான் கேட்டதும் அவள் தன்னிடம் முகிலை கொடுப்பாள் என்று எதிர்பார்த்த பத்மாவிற்க்கு பெருத்த ஏமாற்றம். 

இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கு வெளியில் இருந்த டீக்கடைக்கு வந்தவள், அங்கு இருந்த இருக்கையில் இருவரையும் அமரவைத்தவள், தனக்கு ஒர் காபியும், பிள்ளைகள் இருவருக்கும் பால் மற்றும் பிஸ்கேட் வாங்கி கொடுத்தாள்.

அவர்களுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தவள், அதனை பருக ஆரம்பித்தாள், பிள்ளைகளை பார்வை இட்டபடி. இவர்களை தொடர்ந்து வெளிய வந்த வெற்றி அவள் டீ கடையில் அமர்ந்து இருப்பதை பார்த்து கடுப்பானான்.

அவன் அம்மா அவளிடம் பேசும் போது அவர் முகம் வாடுவதை கண்டவன் கோபம் ஏகத்துக்கும் ஏற, அம்மா முன்னால் ஏதும் சொல்லமுடியாது என்று தான் அவள் பின்னால் வந்தான்.

இங்கு அவள் வந்து இருந்த இடம் பார்த்து மேலும் அவன் கோபம் உச்சநிலையை அடைந்து. 

அதற்குள் அவன் சாப்பிடதற்கு பணம் செலுத்திவிட்டு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு மீண்டும் உள்ளே செல்ல வந்தாள். அவளை மறைத்து போல் நின்றவன், உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா?

அந்த இடம் எப்படி இருக்கு அங்க போய் குழந்தைகளை கூட்டிபோற, அம்மா கேட்கறாங்க ஏதும் சொல்லாம நீ பாட்டுக்கு எழுந்து வர என்ன நினைச்சுட்டு இருக்க. எல்லா நேரமும் அமைதியா இருக்க மாட்டேன். என்ன பழசு எல்லாம் மறந்து போச்சா?

உன்ன ஒன்னுமே இல்லாம பண்ணிடுவேன் ஜாக்கறதை, என்றவனை ஒர் வெற்று பார்வை மட்டுமே பார்தவள், அவன் பின்னால் பார்வை செலுத்தினால், பின் அவனை கண்டுக்கொள்ளாது அவனை தாண்டிசொன்றாள்.

திரும்பியவன் அவன் தாய் நிற்கவும், என்ன சொல்வது என்று தொரியாமல் மீண்டும் உள்ளே சென்று அமர்ந்துவிட்டான்.

அவள் பழையபடி அமர்ந்து இருக்க, அவள் பக்கத்தில் முகிலும், நந்தினியும் அமர்ந்து இருந்தனர். பத்மாவும் வெற்றியின் பக்கத்தில் அமர்ந்தார்.

அதியனும், சுதாகரும் அவர்களுக்கு எதிரில் அமர்ந்து இருந்தனர், அதியன் எதையும் கவணிக்கும் நிலையில் இல்லை, இத்தனை நாள் கடந்து அவளை கண்டுபிடுத்து இப்படியாகி விட்டதே என்ற எண்ணமே அவனை முடக்கி இருந்து, அவளுக்கு ஒன்றும் ஆககூடாது என்று மணம் அவளை எண்ணி கவலையில் முழ்கிடந்து.

 

எல்லார் பொருமையும் சேதித்த மருத்தவர்,   9 மணிக்கு வெளியில் வந்தவர், சிடி ஸ்கேன், பரிசேதனை எல்லாம் முடிந்து. இப்போது வெளிகாயத்துக்கு எல்லாம் மருந்து இட்டு இருக்கிறோம், அவங்களை அறுவை சிக்சை செய்ய தயார் செய்ய வேண்டும், இப்போது இங்கு அதற்கான டாக்டர் வர 11 மணி ஆகும், அறுவை சிகிச்சை காலையில் 3 மணிக்கு ஆரம்பிக்கலாம், எப்படியும் 5 மணி நேரம் ஆகும், என்றவர் தன் அறை நேக்கி சென்றுவிட்டார்.

அதுவரை அவர் சொன்னதை கேட்டபடி இருந்த அனைவரும் அடுத்து என்ன என்று மற்றவர் முகத்தை பார்த்தனர். இருக்கையில் அமர்ந்த கவிதா அங்கு சென்றுக்கொண்டு இருந்த நர்ஸ் கூப்பிட்டு பேஷன்டு இப்போ காண்சீயஸ்ல இருக்காங்கள என்றாள், அந்த நர்ஸ இல்லை அவங்க மயக்கத்துல இருக்காங்க, இப்போ அவங்களுக்கு central anaesthesia கொடுப்போம், அதனால நாளைக்கு ஆப்பரேசன் முடிஞ்சுதான் கண்விழிப்பாங்க.

என்றவள் சென்றுவிட்டாள். தன் கைபேசியை எடுத்தவள் அருகில் தங்கும் இடம் பார்த்தாள், மருத்துவமனை என்பதால் நிறைய தங்கும்விடுதிகள் இருந்து. அதில் ஒன்றை தெடர்புக்கொண்டு விவரம் கேட்டவள், மீண்டும் வேறு ஒர் விடுதிக்கு அழைத்து அதிலும் விவரம் கேட்டாள், பின் சில கால்களை பேசிவிட்டு. மீண்டும் அந்த நர்ஸ் அங்கே வர, அவரிடம் தன் சென்று அருகில் இருக்கும் தங்கு விடுதியில் ரிப்ரஸ் ஆகிவிட்டு வருவதாகவும், அதுவரை ஆதிரையை பார்த்துக்கொள்ளும் படியும் கூறியவள், தன் கைபேசி எண்ணை கொடுத்தவள், ஏதும் அவசரம் என்றாள் இந்த எண்ணுக்கு      அழைக்கும் படி கூறியவள், தன் உடமைகளை எடுத்துக்கொண்டு, முகில் மற்றும் நந்தினியை அழைத்துக்கொண்டு கிளம்ப தயாரனால்.

அதுவரை அவள் செயல்களை பார்த்துக்கொண்டு இருந்த பத்மனி, அவள் அருகில் வந்து இந்த நேரத்துல தெரியாத ஊர்ல பசங்க கூட்டிகிட்டு எங்க போற கவி, எதாவது ஆச்சுனா என்ன பன்னுவே அவன் குழந்தை அவன எங்க வெச்சுபே, அவன ராத்தி பூரா ஆஸ்பத்திரில வெச்சுக்க முடியாது, அவனுக்கு சாபிட எண்ணபன்னுவே.  என்றார் தவிப்புடன் முகிலை பார்த்தபடி.

அவரை ஆழமாக நேக்கிவிட்டு, ஒன்னும் பிரச்சனை இல்லை முகில் இதவிட சின்னதாக இருந்தப்பவே இவன ஆதிரையும், நானும் தினியாதன் பார்த்துக்கிட்டோம், 

என்று சொன்னவள் நடக்கதொடங்கவும், மீண்டும் அவளை அழைத்தவர், ஏன் என்கிட்ட கொடுத்தா நான் அவனை பார்த்துக மாட்டேன்னா? என்ன இருந்தாலும் அவன் இளாவேட பையன், எனக்கு பேரன் என்றார். தனக்கு அவன் மேல் உன்னைகாட்டிலும் அதிக உரிமை உள்ளது என்ற அர்த்ததுடன்.

அவர் பேச்சில் நின்றவள் அவரை நேக்கி திரும்பி, அந்த நம்பிக்கை தான் அவன் 2 மாத குழந்தையாக இருக்கும் போது, அவன பாதுகாப்ப உங்கிட்ட விட வந்தோம், அன்னிக்கு எங்கள யார்னு தெரியாது, நாய்ய விரட்டமாதிரி விரட்டிவிட்டப்ப தெரியலையா இவன் உங்க இளாவோட புள்ளைனு, அன்னிக்கு யாரும் இல்லாம, தனியா நடுரோடுட்டு இந்த குழந்தையோட உயிர காப்பாதவும், அவள காப்பாத்திக்கவும், எல்லாத்தையும் விடு, இந்த பிள்ளைக்காக மறைந்து வாழ்ந்து, இன்னிக்கு இங்க வந்து அடிபட்டு படுத்து இருக்களே   அவள விடவா உங்களுக்கு உரிமையும், பாசமும் வந்துட போகுது.

இளாவையே வேணாம் துக்கி வெளிய போட்டவங்கதான் நீங்க, இரண்டு முறை உங்க நம்பி உங்க வீட்டு வாசல் வந்தது போதும். இது வரைக்கும் நாங்க பார்த்த மாதிரி இனிமே எங்களுக்கு பாத்துக்க தெரியும்.

என்றவளின் பேச்சில் இருந்த உண்மை அவர் முகத்தில் அறைய என்ன பேசுவது என்று தெரியாமல் அப்படியே நீன்றார். இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த வெற்றிதான் தனக்குள் கொதித்தான், இவள எல்லாம் ஒர் ஆளு அம்மா பேசவிட்டு பாத்துட்டு இருக்காங்க. இவள………. 

என்று பேச வாய் எடுத்தவன்.

அதற்கு முன் பத்மா சரிமா எனக்கு இங்க இருக்க முடியல, நானும் உன் கூடவந்து கொஞ்சம் ஒய்வு எடுத்துடு வரேன், என்றவர், வெற்றியின் புறம் திரும்பி, வெற்றி நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துடு வரேன், நீ வீட்டுக்கு போறிய? நாங்க வர வரைக்கும் இங்க இருக்க போறியா? என்றார் அவன் ஏதும் கேட்கும் முன்.

அவருக்கு தெரியும் அவன் பேசினால் கன்டிப்பாக அது பிரச்சனையில் தான் முடியும். அதனால் அவனுக்கு வாய்ப்பு அளிக்காமல், எனக்கு என் கேள்விக்கு பதில் வேண்டும். என்ற தோனியில் இருந்து அவர் பேச்சு.

அம்மாவை பற்றி அவன் அறியாதா? நான் என்ன பன்னனும் அதையும் நீங்களே சொல்லுங்க, என்றான் முகத்தை தூக்கி வைத்தபடி.

அவன் நடந்துக்கொண்டதில் முகத்தில் புண்னகை அறும்பினாலும், அதை முகத்தில் காட்டாமல், நீ இங்கேயே இரு, நாங்கள் வந்தும் நீ கிளம்பு என்றார்.

இப்போது அவர் கவிதாவின் பதிலை எதிர் பார்க்காமல், அவளிடம் இருந்து முகிலை வாங்கியவர், அவளுக்கு முன் நடக்க ஆரம்பித்தார்.

அவளும் ஏதும் சொல்லாமல் நந்தினியை மறு கையில் பிடித்தபடி வெளியேறினால்.

அதுவரை அவர்கள் போவதையே பார்த்து இருந்த வெற்றி பெருமூச்சு விட்ட படி மீண்டும் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

சுதாகர் அதியனிடம் நாமும் போய் refresh செய்துவிட்டு வரலாம்டா அதியா என்றான், நன்பன் இந்த கண்டிப்பாக இந்த இடத்தை விட்டு நகரமாட்டான் என்று, அவன் அறிவான், கடந்து 2 வருடமாக அவன் ஆதிரையை தேடியதை அறிவான் அவன், அதுவும் அவன் திருமணத்திற்காக அமெரிக்காவில் இருந்து வந்தவன், அதற்கான வேலையில் இருந்தவன், தீடிர் என்று ஒரு நாள் அழைத்தான். சுதா உன்னோட WhatsApp group ஒரு profile photo இருக்கே அது எங்க எடுத்த என்றான் எடுத்த எடுப்பில்.

அவன் கேட்க வருவது ஒன்றும் புரியவில்லை தான், ஆனாலும் டேய் எதுக்கு டா இத கேக்கற என்றான்.

முதல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு தா ப்ளிஸ்…

அது நான் வேலை செய்ற ஸ்கூல்டா, என்றான் சுதாகர்.

அது எங்க இருக்கு ?

ஊட்டில…..

அந்த போட்ல உனக்கு பின்னால இருக்க பெணு அவ அவ யார்?

என்றான் தின்றலூடன்….

டேய் உனக்கு என்ன வேணும் உனக்கு எதுக்கு? நீ ஏன் அந்த பெண்ண பத்தி கேக்கற என்றான் சுதாகர். 

சுதா ப்ளிஸ் எல்லாம் சொல்றேன் அதுக்கு முன்னால நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு என்றான் அதியன்.

சரி சரி, அவங்க பேர் ஆதிரை இங்க சயின்ஸ் டீச்சர்.

எங்க தங்கு இருக்கா? வீடு தெரியுமா?

இங்க staff quarters தான் அவங்க பையன்னோட இருக்காங்க.

என்ன பையனா?

என்ன டா சொல்ற அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா???

என்றான் அதிர்ச்சியுடன்.

என்ன தான்டா உண் பிரச்சனை, 

ஏய் ப்ளிஸ் கோவபடதா சுதா…

என்றவன் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை அவனிடம் கூறினான்…

எல்லாவற்றையும் கேட்டவன், அப்போது ஆதிரையை பாண்டிச்சேரில விட்டு வந்த பிறகு அவங்களை பாக்கலையா?

இல்லை சுதா, நான் அப்பறம் அமெரிக்கா போய்டேன், நான் யார் கூடவும் எந்த தொடர்பும் வச்சுக்கல. 

தாரா கூட என்னோட கல்யானம் பிக்ஸ் ஆனப்பறம் தான் இந்தியா வந்தேன், அப்பாவோட செந்தகாரங்க அட்ரசுக்காக அப்பாவோட பொருக்களே தேடும் போது தான் அப்பா எனக்கு எழுதின லட்டர் கிடைச்சது, அதுக்கு அப்பறம் தான், எனக்கு எல்லாம் தெரிஞ்சுது, இது எல்லாம் அப்பாக்கு தெரியும்னு, 

அதுக்கு அப்பறம் தான் ஆதிய தேட ஆரம்பிச்சேன், இப்பதான் அவ என் கண்ணுல பட்டு இருக்கா……..

சரிடா ஆனா இப்போ எதுக்கு அவங்க தொல்லை பண்ணற, உனக்கு இப்போ கல்யாணம் ஆகபோது, அவங்களும் ஒர் குடும்பத்தோட இருக்காங்க.

இப்போது எதுக்கு அவங்கிட்ட பேசபேற…

இல்லை டா அவ வாழ்க்கையில் என்ன நடந்து, அவ நல்லா இருந்தா தான், என்னால என் வாழ்க்கை பற்றி யேசிக்கமுடியும்.

ப்ளிஸ் டா எப்படியாவது அவ கிட்ட பேசனும் என்றான்.

அதற்கு நிறை முயற்சி செய்து முடியாமல், தான் இந்த டிரிப்பை அவர்கள்    பிளான் செய்து. 

ஆனால் அது இப்படி அவள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

சுதாகர் புறம் திரும்பியவன் நீ போய் ஏதாவது சாபிட்டு ரெஸ்ட் எடுத்துடு வா. நான் இங்கு இருக்கிறேன் என்றவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டான்.

எப்படியாவது அவளை தன்னுடன் அழைத்து சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன்.

அதே நேரம் வெற்றியின் போன் அடிக்க அம்மா என்று திரையில் பார்த்தவன், அட்டன் செய்தவன் சொல்லுங்க அம்மா என்றான்.

வெற்றி இங்க பார் இப்ப இருக்க நிலையில நம்ம கூட முகில அனுப்புவாங்க எனக்கு நம்பிக்கையில்லை. அதனால அந்த பெண்ணையும் நம் கூட கூட்டிக்கொண்டு போலாம். 

இது தேவையான எல்லா வேலையும் பார் என்றவர் அவன் பதிலை எதிர் பார்க்காமல் வைத்துவிட்டார். 

ச்சே என்று காலை உதைத்துக்கொண்டவன், அவ தான் இவளுக்கு கார்டியன் கையொழுத்து போட்டு இருக்கா, அவள மீறி எப்படி நம்ம கூட அனுப்புவாங்க, அதுவும் அவ கிட்ட போய் நான் நிக்கனும்மா?

என்று தனக்குள் புலம்பியவன், இருக்கையில் சாய்ந்தான்.

இருவருள் யார் ஆதிரையை அழைத்து செல்லவர்? 

 

நிலவு தேயும்…………

Advertisement