Advertisement

அத்தியாயம் – 23

காலையில் பள்ளியில் பரிசு வழங்கும் விழா அனைத்தும் முடிந்து இருந்து இன்று இரவு  மறுபடியும் இவர்கள் ஊர் திரும்ப வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகளில் இருந்தனர் எல்லோரும்.

அண்ணே இன்னிக்கு இராத்திரி எல்லோரும் கிளம்பராங்க ண்ணா… இப்ப என்ன செய்யறது. இங்கயே ஜோலிய முடிச்சுடவே? என்றான் அழைப்பை செய்தவன்.

கண்டிப்பா அவ இங்க இருந்து உயிரோட போக கூடாது, அவ என்னோட 7 வருஷ தேல்வி, இத்தன வருஷம்மா இவ எங்க எல்லாம் தேடி இருப்பேன். என்னோட இத்தன வருஷத்துல நான் எதுக்கும் இத்தனை மெகேட்டது இல்லடா!!! அவளோட சேர்த்து அந்த இளாவேட பையனையும் போட்டு.

அவல முடிக்கனும் அதே சமயம் அது சாதாரணமாக இருக்க கூடாது. சரி ண்ணா. இங்க பக்கத்துல தான் நம் லாரி நிக்குது, கண்டிப்பா அவ இன்னிக்கு உயிரோட போகமாட்டா. என்றவன் இனைப்பை துண்டித்து இருந்தான்.

என்னடா ஆச்சு என்றான் உடன் இருந்தவன், ஆனந்தண்ணா இன்னிக்கு எண்ண நடந்தாலும் அவளயும் அந்த இளா பையனையும் போட சொல்லிடார் டா என்றவன், அந்த லாரி டிரைவரை பார்க்க போனான்.

இது வரை இவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்த அதியன், அவர்கள் ஆதிரை பற்றிதான் பேசுகிறார்கள் என்பதை உணர்ந்தான். அய்யோ அவள இங்க வரவச்சு இப்படி ஒரு பிரச்சனையில அவள மாட்டிவிட்டுடேனே.

போன முறைதான் அவள இக்கட்டில் மாட்டிவிட்டு போய்டேன். அதுக்கு அப்பறம் 6 வருஷம் கழிச்சு தான் அவள கண்டுபிடிக்க முடிஞ்சுது. மறுபடியும் அவளுக்கு என்னால பிரச்சனை வரக்கூடாது, என்று நினைத்தவன், அவளை எப்படி காப்பாறுவது என்று சிந்தித்தான்.

…………………………

வெற்றி இன்னிக்கு முகிலும் அந்த பெண்ணும் ஊருக்கு போறாங்க போல ? என்றார் வெற்றியின் அம்மா அவனிடம். அம்மா நீங்க எதை நினைத்து கவலை படாதிங்க இன்னிக்கு முகில் நம்ம வீட்டுக்கு வந்துடுவான்.

அவன் நம்ம வீட்டு வாரிசு அவன இங்க கூட்டிட்டு வர வேண்டியது என் பொறுப்பு. அதற்கு நான் எந்த எல்லை வரைக்கும் போவேன் மா. என்றவனை பார்த்தவர், போதும் வெற்றி, இந்த அவசர புத்தியால நாம இழந்து எல்லாம் போதும். தயவு செயஞ்சு நிதானமா இரு, இன்னும் ஒர் இழப்பை தாங்க எனக்கு மனசு உடம்புல தெம்பு இல்ல, என்றொர் அந்த இடம் விட்டு நகர்ந்தார்.

போகும் தாய்யை பார்த்தவன், நான் அன்னிக்கு இன்னும் கொஞ்சம் நிதானமா இருந்து இருந்தா அப்பாவும் அண்ணாவும் என் கூட இருந்து இருப்பாங்க என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

தன் அலை பேசியை எடுத்தவன், அவங்க எல்லாரும் எப்ப கிளம்பறாங்க என்றான், ஸார், இன்னிக்கு நைட், அதுக்கு முன்னால சாயந்திரம் எல்லோரும் இங்க இருக்க கோயிலுக்கும், புடவை கடைக்கும் போறாங்க ஸார் என்றான்.

அதை கேட்டவன் மனதில் ஏதோ கணக்கிட்டவன், ஆதிரையை கோயிலில் சந்திப்பது எண்று முடிவு எடுத்தான். அதற்கு உண்டான ஏற்பாடு செய்து முடித்தான்.

பின் அலுவலகம் சென்றவன் தன் வழக்கமான வேலைகளில் முழுமையாக தன்னை இனைத்துக்கொண்டான். 

…………………..

அன்று மத்தியம் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு கடைக்கு செல்லவது என்றும் அதன் பின் 4 மணியளவில் அங்கு இருந்து கிளம்பி கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு 7 மணிக்கு ஊருக்கு கிளம்பலாம் என்று முடிவு எடுத்தனர்.

அதன் படி எல்லாம் கிளம்பி காஞ்சிபுரத்தின் பிரபலாமான பட்டு வீதி என்று அழைக்கப்படும் காந்தி ரோடு வந்தவர்கள் அங்கு இருந்த பட்டு செசைட்டியில் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கினர். ஆதிரையும் நந்தினிக்கும் ஒரு பட்டு பாவாடை தாவனியும், அவள் தாய்க்கு ஒர் பட்டு புடவையும் எடுத்தாள். அங்கு இருந்த பிற கடைகளில் முகிளுக்கும் புது துணி மற்றும் விளையாட்டு சாமான்கள் வாங்கினாள். பின் அங்கு இருந்து கிளம்பி கச்சபேஸ்வர் கோயிலூக்கு சென்றனர்.

தரிசனம் முடிந்து கோயில் பிரகாரத்தில் அமர்ந்து இருந்தனர், முகிலும், நந்தினியும் மற்ற மாணவர்களுடன் வியாடிக்கொண்டு இருந்தனர்.

அவர்களை  கவணித்தபடி அங்கு இருந்த மண்டபத்தில் அமர்ந்து இருந்தாள் ஆதிரை. முகில் விளையாடுவதை ஆர்வமாக பார்த்தபடி சற்று தள்ளி அமர்ந்து இருந்தார் பத்மாவும், வெற்றியும்.

ம்மா கவலை படாதிங்க இன்னிக்கு முகில் நம்மகிட்ட வந்துடுவான் நான் எல்லா ஏற்பாடும் பண்ணிடேன். என்றவன் அம்மாவின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டைன். அவன் அப்படி உறைத்த நொடி அவர் ஆதிரையை தான் பார்த்தார், அவளின் தேற்றத்தில் அவரால் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவள் அமர்ந்து இருந்த விதமே நான் நிறைய தன்னபிக்கை உடையவள் என்று கூறியது, அதே சமயம் அவள் கண்களில் முகிலுக்காக தெரியும் அன்பு அது பொய்யில்லை. தன்னை சுற்றி கவனம் இருந்தாலும், முகில் மீது அவள் கவனம் முழுவதும். இவள் தப்பானவளா? இல்லை அப்படி இருக்க முடியாது என்று தன் நினைவில் இருந்தவரை, வெற்றி அழைத்தான்.

அம்மா அவங்க கிளம்ப போறாங்க வாங்க நாம போய் பேசலாம் என்றான், வெற்றி ஏதா இருந்தாலும், பார்த்து பேசு, என்றவர் அவனுடன் சென்றார்.

அவர்கள் எழுந்து இருக்கும் போதே அவர்கள் வாயிலை அடைந்துவிட, அவர்களை பின் தெடர்ந்தனர், அதே சமயம் ஆதிரைக்கு தெரியாமல் அவள் பின்னே அதியனும் சுற்றுபுறத்தை அலசியபடி வந்தான்.

அவர்கள் வாயிலில் எதிரில் இருந்த கடையில் காலனிகளை அணியும் போது, முகிலன் வெற்றியையும், பத்மனியும் பார்த்தவன், ஆதிரையின் கையை விட்டு அவர்களை நேக்கி ஒட, ஒரு கனம் திகைத்தவள் அவன் எங்கு செல்கிறான் என்று நிமர்ந்து பார்த்தவள். அவன் வெற்றியை நேக்கி போகவும் அவன் பின்னால் போக எத்தனித்தவள், சாலையை கவணியாமல் கடக்க அந்த நேரத்தில் கடந்த மணல் லாரி அவளை துக்க அடித்து இருந்து.

முகில் சாலை சட்டென்று கடப்பான் என்று எதிர்பார்காத அதியனும் அந்த நேரம் அந்த லாரியை எதிர்பார்க்கவில்லை.

லாரி நிற்காமல் சென்று விட தூக்கிவீசப்பட்டவள் அருகில் இருந்த கட்டிடம் கட்டும் பொருள்கள் மேல் விழுந்தாள். யாரும் எதிர் பார்க்காத இந்த நிகழ்வில், எல்லோரும் அதிர்ச்சியல் இருந்து மீண்டு அவள் அருகில் செல்ல, முகிலை பார்த்தபடி தன் நினைவை இழந்தாள்.

அதிர்ச்சியில் இருத்த முகில் வெற்றியை அனைத்துக்கொண்டு வெற்றிபா அம்மா என்று அழ ஆரம்பித்தான்.  அவனை அனைத்தவாரு தன் கைபேசியை எடுத்தவன் ஆம்புலன்ஸ்க்கு அழைத்தான். உடனே செயல் பட்டு அவளை மருந்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அங்கு காரில் அமர்ந்த வாரு அங்கு நடந்ததை பார்த்துக்கொண்டு இருந்த ஆனந்தன், அங்கு இருந்த அதியன் மற்றும் வெற்றியை பார்த்தான். 

அதியனை அவனுக்கு ஏற்கனவே தெரியும், ஆனால் இவன் யார் புதியதாக என்று வெற்றியை பற்றி யேசித்தவன், அவனை பற்றி தன் ஆட்களிடம் விசாரிக்க சென்னான். பின் அவன் ஆள் ஒருவனை அவர்களை பின் தொடர்ந்து நடப்பதை தெரிவிக்கும் படி கூறியவன். அங்கு இருந்து சென்றான்.

ஆதிரையை மருத்துவமனைக்கு அனுப்பியவன் முகில் மற்றும் நந்தினியை தன் காரில் மருத்துவமணைக்கு அழைத்து செல்வதாகவும், அங்கு இருந்த பள்ளி ஆசிரியர் இடம் தெரிவிக்க, அவரும் பிள்ளைகளை தான் அழைத்து செல்வதாகவும், அங்கு சென்றபின் தகவல் தெவிக்கவும் சொன்னார். அவர் கையில் தன் பிஸ்னஸ் கார்ட்டை கொடுத்தவன் ஏதாவது தகவல் என்றால் அழைக்க சொன்னவன் கிளம்பிவிட்டான்.

அங்கு நடபவற்றை என் என்று உணரும் முன் அனைத்தும் நடந்து முடிந்து இருக்க, தன்னால் தான் அவள் ஒவ்வெரு முறையும் ஏதேனும் ஆபத்தில் சீக்கி கொள்கிறாள், அங்கு பாதுகாப்பாய் இருந்தவளை நான் தான் இங்கு வரவழைத்து இந்த ஆபத்தில் அவளை சீக்கவைத்துவிட்டேன் என்று நினைத்த அதியன், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு அமர்ந்துவிட, சுதாகர் டேய் என்னடா இப்படி இருக்க, வா ஆஸ்பிட்டல் போகலாம் என்றான்.

என்னால தான் சுதா இப்படி ஆகிடுச்சி, நேத்து அவனுங்க பேசினத கேட்டப்பவே நான் சுதாரிச்சு இருக்கனும் ஆனா……..

என்று தன்னையே நொந்து கொள்பவனை என்ன சொல்வது என்று தெரியாமல், பார்த்தவன் 

சரிடா வா ஆஸ்பிட்டல் போகலாம், அங்க என்ன நிலம என்று தெரியல, முகில் வேற தனியா என்ன பன்னுவான். கூட போய் இருக்கறது வேற யார்? தெரியலா என்றவன் பேச்சில் இருந்த நிலை புரிய, அடுத்து இருவரும் மருத்துவமனை அடைந்தனர்.

அங்கு ஏற்கனவே அவசரசிகிச்சை பிரிவில் இருந்த வெற்றி மற்றும் அவன் தாய் மற்றும் பிள்ளைகளை பார்த்தவர்கள், அவர்கள் அருகில் சென்றனர், முகில் தேம்பியபடி வெற்றியின் தோளில் சாய்ந்த இருந்தான், அந்த அம்மா அருகில் நடப்பது எதுவும் புரியாது நந்தினி அமர்ந்து இருந்தாள். 

மருத்துவர்களும், செவிலியர்களும்,  அங்கும் இங்கும் விரைந்தபடி இருந்தனர், இவர்களை எல்லாம் கண்காணித்தபடி சற்று தொலைவில் ஆனந்தனின் ஆட்கள் நின்று இருந்தனர்.

யார் இடம் என்ன கேட்பது என்று தெரியாமல் அதியனும், சுதாகரும் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

சுதாகருக்கு இது யார், முகில் எப்படி இவரிடத்தில், இவரை முன்பே முகிலுக்கு தெரியும்மா? கடந்த இத்தனை வருடத்தில் ஆதிரை தேடி யாரும் வந்து இல்லை, அவள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் போது கூட, ஆபிஸ் கொசட்டில் மதர் மேரி தான் கார்டியன் என்று இருந்து மற்ற எந்த விவரமும் இல்லை.

பின் இவர் யார்? என்று எண்ணத்தில் இருந்தான்.

மருத்தவமனைக்கு வந்தும் தன் பள்ளிக்கும், காஞ்சிபுரத்திற்க்கு உடன் வந்த ஆசிரியர்க்கும் தொடர்புக்கொண்டு தான் மருத்துவமணைக்கு வந்து இருபதாகவும், தான் இங்கு பார்த்து கொள்வதாகவும் தெவித்து இருந்தான்.

இதற்கு இடையில் வெளியில் வந்த மருத்துவர், அவருக்கு கையில் எலும்பு முறிவும், உடலில் காயங்களும் ஏற்பட்டு இருப்பதாகவும், அவள் விழுந்த இடம் கருங்கல் குவித்து வைக்கபட்டு இருந்தால், அவள் தூக்கிவீசப்பட்டதில் அவளுக்கு  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

சி டி ஸ்கேன் செய்ய பின் தான் என்ன செய்யவேண்டும் என்று முடிவு எடுக்க முடியும் என்றவர், உறவினர்கள் யார் இருக்கிறார்கள், என்று விசாரித்தார். பின் அவர்களுக்கு தகவல் சொல்லி வர சொல்லுங்கள்.

ஒரு வேளை ஆப்ரேஷன் செய்யவேண்டி வரலாம், அப்போது கையோழுத்து இட வேண்டும் என்றவர் சென்றுவிட்டார்.

வெற்றி இப்போது என்ன செய்வது என்று தாய்யை பார்க்க அவர், நாமே கையோழுத்து போடலாம் வெற்றி என்றார், அதில் அவனுக்கு விருப்பம் இல்லை, என்றாலும் அம்மாவிடம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருத்தான்.

அவன் தோளில் இருந்த முகிலை பார்த்த பத்மா, முகில் கண்ணா பாட்டிகிட்ட வரியா என்றார், அவன் தலை அசைத்து அவர் மடிக்கு தாவினான். 

சற்று நேரத்தில் வெளி வந்த மருத்துவர், அவருக்கு தலையில் அடிபட்டு உள்ளே இன்டனல் ப்ளிடிங் ஆகி இருக்கு அதற்கு உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றவர். பேஷன்டு உறவினர் யார் என்று கேட்க? 

என்ன செய்வது என்று அதியன் யோசனையுடன் முன் வர…..

 இங்கு யாரும் இல்லை, என்று சொல்ல வாய் திறந்தவன்………

Excuse me Dr I am Advocate Kavitha, ஆதிரை யோட legal custodian நான் தான், என்றபடி தன் பின்னால் இருந்து பதில் தந்தவளை பார்த்தவன், மனதில் என்ன உனர்ந்தான் என்று அவனே அறிவான்.

மருத்துவர் நீட்டிய படிவத்தில் கையேழுத்து இட்டவள், அவரிடம் ஆதிரையின் நிலையை கேட்டு அறிந்து, அங்கு இருந்த இருக்கையில்  அமர்ந்தாள், அருகில் இருந்த அவள் டிராலி அவள் விமாநிலையத்தில் இருந்து வருகிறாள் என்று தெரிவித்து.

அவளை பார்த்து வெற்றி மற்றும் பத்மா அதிர்ந்து நிற்க, அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தனர்.

பத்மாவின் மடியில் இருந்து இறங்கிய முகில், கவிமா என்று அழைத்தபடி அவள் அருகில் சென்றான், அவனை தன் மடியில் தூக்கி அமரவைத்தவள், அவனிடம் ஆதிமாக்கு ஒன்னும் இல்லை சீக்கரம் சரியாகி நம்மகிட்ட வந்துடுவா சரியா என்றவள், அவனை அனைத்தபடி கண்முடினாள்.

அப்போது அவன் அழைப்பை   எண்ணியவன் முகில் என்னை வெற்றிபா என்றா அழைத்தான்?

அப்படி என்றாள் அவனுக்கு என்னையும் அம்மாவையும் தொரியுமா??????

 

நிலவு தேயும்…………

 

 

Advertisement