Advertisement

 

வணக்கம் தோழிகளே,

 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

 

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 22

 

டிஜிபி அந்த செய்தியை படித்தபின், என் செய்வது என்று அவருக்கு தெரியவில்லை, அவர் சர்வீசில் இது கடைசி வருடம், அவர் வேலையில் சேர்ந்து முதல் அந்த அமைச்சர் பற்றி நன்கு அறிவார்.

 

அந்த அமைச்சர் அரசியல் அறிமுகம் முதல் அவன் வளர்ச்சி வரை அனைத்தையும், அவன் கருப்பு வெள்ளை பக்கம் அனைத்தும், அவர் அறிவார், ஆனாலும் அவரால் தன் பதவியை வைத்து அவனை ஒன்னும் செய்யமுடியவில்லை.

 

அவர் எதிர்பாராதது தான் நேத்திராவின் புகார், அதனால் தான் இந்த வழக்கில் அவர் இவ்வளவு முனைப்பு காட்டியது, ஒரு முறை அவனை எப்படியாவது கைது செய்ய வேண்டும். அதன் பின் அவனின் மற்ற வழக்குகளை தோண்டுவது அவ்வளவு சீரம்ம் இல்லை, அதற்கு தான் அவர் இளாவை இங்கு வரவழைத்து.

அதே சமயம் அவருக்கு தயாளன் பற்றியும் தெரியும், தயாளன் அவரின் குடும்ப நன்பர்களில் ஒருவர். அவர் குடும்பத்தில் சொத்து பிரிக்கும் போது இவருக்கு வாரிசு இல்லாதை காரணமாக சொல்லி பங்குகள் பிரிக்கபட, அதற்கு அவர் குடும்ப நபர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு, அதன் பின் அவரின் குடும்ப வக்கீல் எல்லா குடும்பச்சொத்துகளும் வாரிசுகளுக்கு முறையாக பிரிக்கபட்டு இருக்கிறது என்றும், அதில் அவர் பிரச்சனை செய்யமுடியாது என்றும் விளக்கினார்.

 

அப்படியே அவர் நீதிமன்றம் சென்றாலும் வழக்கு அவருக்கு சாதகமாக இருக்காது என்றும், அதை எல்லாம் விட இது சீவில் வழக்கு என்பதால் எவ்வளவு வருடம் வழக்கு நடக்கும் என்றும் தெரியாது என்று கூறியவர், முடிவை தாயளனிடம் விட்டு சென்றுவிட்டார்.

 

அவர் அந்த பிரச்சனைக்கு தீர்வாக கண்டது தனக்கு வாரிசு கொண்டு வருவது, அதற்கு அவர் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று முடிவு செய்தனர் தயாளன் தம்பதியினர், அவர்கள் முடிவு தான் நேத்திரவை அவர்கள் வளர்ப்பு மகளாக்கியது.

………………

கோவை அருகில் இருக்கும் சிறுமுகையில் பள்ளி ஆசிரியாக வேலை பார்த்தவர்கள் தான் சிவநேசனும் அவர் நன்பர் அறிவுஅழகனும். சிவநேசனுக்கு அப்போது திருமணம் முடிந்து 7 வயதில் வளவன் மற்றும் 5 வயதில் அதியன் இருக்க,  அறிவுக்கு அந்த ஊரைசேர்ந்த கயல்விழியுடன் காதல் மலர்ந்து.

 

அந்த காதல் விவகாரம் அந்த ஊரில் பெரிய பிரச்சனையை கிளப்ப சிவநேசன் தான் காவலர் உதவியுடன் அறிவு மற்றும் கயல் திருமணத்தை நடத்தி வைத்தார். அதன் பின் அவர்கள் அந்த ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி சென்றனர். சிவநேசனுக்கு திருச்சியிலும், அறிவுக்கு புதுகோட்டையிலும் மாற்றல் கிடைத்து.

 

அதில் மிகவும் வருத்தம் கொண்டது சிவநேசன் மனைவி ஆனந்தி தான் அவருக்கு சிறு வயது முதல் நல்ல வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று கொள்ளை ஆசை, ஆனால் அதற்கு ஏற்றது போல் அவர் பிறந்த வீடும், புகுந்த வீடும் இல்லாது அவரின் துரதிஷ்டம். அதில் மேலும் இந்த மாற்றல் மற்றும் அறிக்கு என்று தன் கணவர் ஊர் மக்களை பகைத்துக்கொண்டது, அவர்கள் கல்யாணத்திற்க்கு என்று அவர் செய்த செலவுகள் எல்லாம், அவருக்கு அறிவு மற்றும் அவர் சார்ந்தவர்கள் மேல் மேலும் வெறுப்பை வளர்த்துக்கொண்டார்.

 

இரு வரும் தனித்தனியே இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் தொடர்பில் இருந்தனர், அறிவுக்கு 3 வருடம் கழித்து அடுத்தடுத்த வருடங்களில் இரு பெண் குழந்தைகள், அவர்களுக்கு ஆதிரா மற்றும் ஆதிரை என்று பெயர் இட்டு மிகவும் மகிழ்ச்சியாக இவர்களின் வாழ்வு சென்றுக்கொண்டு இருந்து.

 

அவ்வபோது வரும் நன்பன் வரவும் அவர்களுக்கு மகிழ்ச்சையே, அறிவை பார்க்க சிவநேசன் உடன் அதியன் தான் எப்போதும்  வருவான். வளவன் எப்போதும் அம்மாவிடம் தான், ஆனந்திக்கு அங்கு செல்ல விருப்பம் இருந்து இல்லை, அதுவும் இல்லாமல் அவர்கள் இங்கு வந்த 3 மாத்திலே ஆனந்தி மீண்டும் தாய்மை அடைந்து இருந்தார், அதை காரணம் காட்டி பின் குழந்தையை காரணம் காட்டியும் அங்கு செல்வதை தவீர்த்து வீடுவார்.

 

அதியனுக்கு ஆதிராவை விட ஆதிரை அதிகம் பிடிக்கும், அங்கு வந்தால் அவனின் பெரும்பான்மையான நேரம் அவளுடன் தான். இப்படியே இவர்கள் வாழ்வு சென்றுக்கொண்டு இருக்க, ஆதிரை மற்றும் ஆதிராவுக்கு 6,7 வயது இருக்கும் போது கடைவீதிக்கு சென்ற அவர்களின் பெற்றவர்கள் விபத்து என்று மொத்தமாக முட்டையாக தான் வீடு வந்தனர்.

 

அங்கு என்ன நடக்கிறது யார் வருகிறார்கள், என்று கூட தெரியாமல் இருந்த சிறுமிகள் மிரண்டு இருக்க, அவர் வேலை பார்த்த பள்ளி ஆசிரியர்கள், அவருக்கு சொந்தங்கள் யாரும் இல்லை என்று தெரியும், அவர் நன்பர் சிவநேசனுக்கு தொடர்ப்பு கொள்ள முயல அந்த அழைப்பை ஏற்றது ஆனந்தி, அந்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லாது அவருக்கு வசதியாக போய்விட, அப்படி யாரும் இங்கு இல்லை என்று கூறி தொடர்பை தூண்டித்துவிட்டார், அதன் பின் அவர் இதை பற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை.

 

அதனால் அறிவு மற்றும் கயல் மறைவு அவருக்கு தொரியாமல் போனது. அங்கு அவருக்கு யாரும் இல்லாதால் அவர்களே அவர்களை அடக்கம் செய்தனர், பின் அவர்களின் பொருட்களை தேடி கயல்விழின் ஊர் முகவரியை அறிந்தவர்கள், குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

 

ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர், வந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல், கோவை அருகில் இருந்த ஒரு ஆஸ்ரமத்தில் குழந்தைகளை சேர்த்தவர்கள், அவர்களின் பொற்றோர் சேமிப்பு என்று ஒரு தொகையும் அவர்களிடம் ஒப்படைத்து சென்றனர்.

 

அதன் பின் சிவநேசனுக்கு   மாதம் கழித்தே அறிவின் இறப்பு செய்தி எட்டியது, அவர் அதியனுடன் அங்கு சென்று விசாரித்து குழந்தைகள் சேர்த்து இருக்கும் ஆஸ்ரமத்திக்கு வந்தவர், குழந்தைகளை பார்த்து கண்களங்கினார்.

 

ஆதிராவிற்க்கு அப்போது 8 வயது ஒர் அளவு சூழ்நிலை உனர்ந்து, எல்லாவற்றையும் சமாளிக்க கற்றுக்கொண்டாள், அதற்கு மற்றோர் காரணம் அவள் வயது உடைய அவளின் மற்றும் ஒர் தோழி கவிதா, அவளும் தன்னை போல் இங்கு சேர்க்கப்பட்டவள் என்று அறிந்தவள், அவளுடன் தன் தோழமையை வளர்த்துக்கொண்டாள்.

 

ஆனால் இதில் மிகவும் ஒடுங்கி போனது ஆதிரைதான், அவள் எப்போது அப்பா செல்லம் அவளுக்கு எல்லாவற்றிக்கும் அப்பா வேண்டும், அப்பாவிற்க்கு அடுத்து அவள் நெருங்கும் ஒரு ஆள் அதியன் தான்.

 

தீடீர் என்று ஏற்பட்ட இந்த இழப்பு அவளை அப்படியே ஒடுங்க செய்து இருந்து, அவள் நிலை அறிந்த கவிதாவும், ஆதிராவும் அவளை முடிந்தவரை நன்றாக பார்த்துக்கொண்டனர்.

 

அப்போது தான் சிவநேசன் அதியனுடன் அங்கு வந்து, அவர் வந்தும் அவர்களை கண்ட குழந்தைகள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர், தாங்களை இங்கு இருந்து அழைத்து சொல்லும் படியாக ஆதிரா சிவநேசன்னிடம் கேட்க அதே கேள்வியை ஆதிரை அதியனிடம் கேட்டால், ஆனால் அவரால் அதற்கு பதில் சொல்லமுடியவில்லை.

 

பின் ஆதிராவைவும், ஆதிரையும் அருகில் அமர்த்தியவர், இப்போது அது முடியாது என்றும், தான் அடிக்கடி வந்து பார்பதாகவும் கூறினார். அதில் அவர்கள் முகம் வாடினாலும், சரி என்று தலை அசைத்தனர்.

 

மேலும் 3 மாதங்கள் கடந்து இருக்க, அப்போது தான் தயாளன் குழந்தையை தத்து எடுக்க அந்த ஆஸ்ரமம்  வந்து இருந்தார், அவருக்கு ஆதிரையை பிடித்துவிட அவளை தத்து எடுப்பது என முடிவு செய்தனர். ஆனால் அவள் தன் அக்காவை விட்டு வரமாட்டேன் என்று கூறி அழுகவும், நிவாகத்தீனர் இருவம் அக்கா தங்கைதான் இருவரையும் தத்து எடுக்க முடியுமா என்று கேட்க, அவர்கள் யேசிக்க சிறிது அவகாசம் கொடுத்து சென்றனர்.

 

தயாளன் தம்பதியினர், தங்களுக்குள் விவாதித்து, வேறு குழந்தையை தேர்வு செய்யலாம் என்று நினைக்க இதை அந்த அறையின் வெளியில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்த கவிதா மற்றும் ஆதிரா, தங்கையை அவர்களுடன் சென்றுவிட்டாள் அவள் நன்றாக இருப்பாள் என்று நினைத்து, ஆதிரையிடம் பேசி அவளை மட்டும் போகும் படி கேட்டனார்.

 

அவளுக்கு என்ன புரிந்தோ, தன்னை யாரும் தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று அவள் மனதில் ஆழமாக பதிந்து போனது அந்த வயதில்.

 

அதன் பின் அவர்களுடன் அவள் செல்ல ஒப்பக்கொண்டாள். அதன் பின்னான நடைமுறைகள் முடிந்து ஆதிரா அவர்களுடன் சென்னை பயனம்மானல், அங்கு தாயாளன் குடும்பத்தில் அவள் நேத்திராவாக அறிமுக படுத்தபட்டாள்.

 

இங்கு அவளுக்கு எல்லாம் கிடைத்து அன்பை தவிர, சில வருடங்களிலே தன் நிலை நன்கு அறிந்துக்கொண்ட நேத்ரா தனக்கான எல்லையை வகுத்துக்கொண்டாள்.

……………

 

அதன் பின் சிவநேசன் சில காரணங்களால் கோவை வரமுடியாமல் போக, ஓரு முறை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட போது குழந்தை தத்து கொடுக்கபட்டதை சொல்ல, அவர் இரு குழந்தைகளும் தத்து எடுக்கபட்டனார் என்று நனைத்து அதன் பின் தொடர்புக்கொள்ளவில்லை.

 

 இப்படியே இவர்களின் வாழ்க்கை திசைமாறி போனது.

 

………………………..

 

நேத்திர பற்றி நினைவி் இருந்தவர் தொலைபேசி சத்தத்தில் கவணம் கலைந்தவர், இளாவிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று அங்கு இருக்கும் நிலையை அறிந்தார்.

 

இதன் பின் கண்டிப்பாக நேத்திராவை காப்பாற வேண்டும், அவர்கள் கையில் இந்த சின்ன பெண் கிடைத்தால் அதை அவரால் யோசிக்கூட முடியவில்லை. அதனால் அதற்கான வேலை யில் இறங்கினார்.

 

இளாவிடம் சில விஷயங்களை கூறியவர், அடுத்து அதற்கான நடவடிக்கை எடுத்தார்.

 

………………..

 

ஆனந்தன் தாயாளன் முன் அமர்ந்து இருந்தான், ஆம் தயாளனின் இந்த தீடீர் பேட்டிக்கு காரணம் அவன் தான். அவனுக்கு நன்கு தெரியும். மருத்துவமனையில் கொடுக்கும் அறிக்கையை வைத்து நேத்திராவை இதில் இருந்து வெளியே எடுத்துவிடுவார்கள் என்று. அதற்க்குள் அவனுக்கு அவளை விட மனம் இல்லை, அதனால் தான் செய்தி தாளில் வந்த செய்தியை வைத்து, தன் ஆட்கள் எடுத்த விடியோ மற்றும் புகைப்படங்களை காண்பித்து, ஆனந்தன் தயாளனை மிரட்டி இருந்தான்.

 

அதில் நேத்திரா மட்டும் தனித்து எடுக்கப்பட்டதால், அந்த போட்டோ மற்றும் விடியோவை வைத்து அவர்கள் என்ன கதை வேண்டும்மானலும், சொல்லாம் அதை அவன் நெட்டில் போட்டுவிடுவதாக கூறி இதனால் அவர் தொழில் பாதிப்பு அடையும் என்றும் அவரை  பணிய வைத்து இருந்தான்.

 

அவர் தன் ஆதரவை விலக்கிக்கொண்டால், அவனுக்கு அது லபமே அவளிடம் இருக்கும் பணபலம் இல்லை என்றாள், அதன் பிறகு அவளை நெருங்குவது வெகு சுலபம் என்று கணக்கிட்டான்.

 

அதன் படிதான் இந்த அறிக்கை வெளியிடு.

 

இப்போது எல்லோரும் நேத்திரா விழிப்பதற்காக காத்து இருந்தனர்.

 இளாவிற்கு அவள் யாரை சந்திக்க வந்தாள் என்று தெரியவேண்டி இருந்தாது. ஆனந்தனுக்கு அவள் கண்விழித்தும் அடுத்து என்ன செய்து அவளை தங்கள் கஷ்டடியில் எடுப்பது என்று இருந்து.

 

இதில் யார் வெல்லார்கள்…………………………………

 

                                                      நிலவு தேயும்…………

 

Advertisement