Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 20

நீண்ட நேரம் அதியன் வருவான், என்று அங்கேயே காத்து இருந்த, நேரம் சென்றுக்கொண்டு இருந்துதே தவிர அவன் வரும் தடம் இல்லை.

அப்போது அங்கு வந்த ஒருவன், உங்களை ஸார் restaurant  ல உங்க வைட் பன்ன சொன்னார் மேம், என்றவனை எந்த சார் என்றவள், அவனை சந்தேகமாக பார்க்க, 

இல்ல நான் இங்கயே இருக்கேன் என்றாள்.

மேடம் அது வந்து இந்த இடம் சேப்ப இல்ல, அதுவும் இல்லாம இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க ஒரு பார்ட்டி நடக்க போகுது, ஸார் போன்ல சார்ஜ் இல்லயாம் அதான், அது தான் என்கிட்ட சொன்னார்.

அவன் சொன்ன பக்கம் பார்த்தால்,  Restaurant அந்த பக்கம் ஒப்பனா கடற்கரை ஒட்டியபடி இருந்து, இங்கு மாதிரி இல்லாமல் அங்கு பார்கதற்க்கு சற்று இலகுவாக உணர்ந்தாள்.

அதியன் சென்னதிற்காக இல்லை என்றாலும், இங்கு மிகுந்த அசவுகரியமாக உணர்ந்தாள். இதைவிட அந்த இடம் அவளுக்கு மேல் என தேன்ற அங்கு அமர்ந்து இருக்கலாம் என முடிவு எடுத்தாள்.

சரி என்றவள் அந்த Restaurant நேக்கி நடந்தாள், அங்கு சென்றவள் அங்கு அமர்ந்தாள், கடலை ஒட்டியபடி இருந்த இந்த இடம் சற்சமயம் அவளுக்கு மன அமைதியை கொடுத்து, சென்னையில் இருக்கும் போது அடிக்கடி தோழிகளுடன் கடற்கரை சொல்லூவாள், மதுரை வந்த பிறகு இதை பற்றி யோசிக்க கூட நேரம் இல்லை.

இப்போது மிகவும் ஒய்வாக உணர்ந்தாள், அந்த சமயம் அவள் அருகில் வந்த வைடர் மேம் ஆடர் பிளிஸ், என்றதும் தான் தன் நினைவுக்கு வந்தாள்.

காலையில் கிளம்பியதில் இருந்து எதும் சாப்பிடாமல் இருந்ந்தாள், அவள் வயிறும் தன் இருப்பை உணர்த்தியதோ?

ஒரு பிரஸ் ஜுஸ் ஆடர் செய்தவள் மீண்டும் கடலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

15 நிமிடம் கழித்து அவள் கேட்ட ஜுஸ் கொண்டு வந்து வைத்துவிட்டு போனான்.

அதை எடுத்தவள் கடலை ரசித்தவாரே குடிக்க ஆரம்பித்தாள்.

பாதி குடித்து முடித்தும் தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள், அவள் மொதுவாக தன் நிலை இழப்பதாக அவளுக்கு பட்டது. அப்போது தான் இருக்கும் சூழ்நிலை உறைக்க ச்சே என்ன பன்னி வேச்சி இருக்கேன் நான்.

வெளி இடத்துல அதுவும் இந்த மாதிரியான இடத்துல தனி வந்து இருக்ககூடாது, இந்த மாதிரி இடத்துல சாப்பிடும் போது கவனமா இருக்குனும் யோசிக்காமா இப்படி பன்னி வேச்சி இருக்கேன்னே.

இப்ப இங்க இருந்து எப்படி தப்பிக்கறது, என்ற எண்ணத்தொடங்கியவள் தன் கட்டுபாட்டுகளை இழக்கும் முன் இங்கு இருந்து எப்படியாவது தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்தாள்.

ஏன் இன்னும் அதியன் வரவில்லை, இல்லை அவனுக்கும் ஏதும் ஆபத்து ஏற்பட்டு இருக்கும்மோ? 

அய்யோ இளா எங்கேயும் தனியாக செல்ல வேண்டாம் என்று எத்தனை முறை சொல்லி இருப்பார், இப்படி அவருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் வந்துவிட்ட தன் மடதனத்தை என்னி வருந்தினால்.

தனக்கான நேரம் மிக குறைவு அதற்குள் ஒர் பாதுகாப்பான இடம் சொல்ல வேண்டும் என்பதே அவள் தற்போதைய எண்ணமாக இருந்து. 

என் செய்வது வேகமாக யோசித்தாள், கையில் இருந்த தன் போனில் அதியனுக்கு அழைத்தாள் அவன் தொடர்பு எல்லைக்குள் இல்லை என்ற பதிலே கிடைத்து.

அடுத்து என்ன செய்????

அடுத்து அவள் இளாவிற்க்கு அழைத்தாள், அங்க அவன் தன் போனை தன் அறையில் வைத்து இருந்தான்.

அது அடித்து ஒய்ந்து போனது, அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

இவளை கண்கானித்தபடி இருந்த இருவர் அலைபேசியில், அண்ணே துக்கிடலாமா? என்றான்.

அந்த புறம் மயங்கிட்டாலா? என்றது குரல்

இல்லை அண்ணா இன்னும் முழுசா மயக்கமாகள

அப்போ இப்போ கிட்ட போக வேணாம், அவ கத்தி கலாட்டா பண்ணா நீங்க மாட்டிப்பிங்க.

அவ அங்க இருந்து வெளிய வரவரைக்கும் வைட் பன்னுங்க, கண்டிப்பா அங்க இருந்து எதாவது வண்டி எடுத்து பஸ் ஸ்டாடு போக முயற்சி செய்வ, நம்ம ஆளுங்க யாரையாவது ஆட்டோவேட அங்க நீக்க சொல்லு, அவ ஏறினதும் அவள நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வந்தடுங்க.

அந்த அதியன் போய்டான?

ஆமா அண்ணா அவன் போய்டான்.

சரி என்றவன் தன் இனைப்பை துண்டித்தான்.

அங்கு இருந்து எழுந்தவள் எப்படியாவது இங்கு இருந்து போருந்து நிலையம் செல்ல வேண்டும் என்று முடிவுடன், அந்த இடத்தின் வரவேற்ப்பு அறை நேக்கிச்சொன்றாள்.

அவள் வெளியில் வருவாள் என்று நினைத்தவர்கள் அவள் வரவேற்ப்பு அறைக்கு சென்றாதால் ஒரு வேலை அவள் வேறு யாருக்கும் அழைத்து உதவி கேட்பாளே என்று பயந்தானர். 

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், தவித்தவர்கள், அவள் அருகில் செல்லலாமா வேண்டாமா? என்ற யோசனையில் இருந்தவர்கள் காதில் விழுந்து. போலீஸ் வண்டியின் சையிரன் சத்தம்!!!!!!!!!!!

……………………………………….

அடுத்து என்ன நடக்கிறது என்று உணரும் முன் இளா வின் அப்பா ஏகமா வேர்த்து இருக்க, அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நின்றனர் இளாவின் குடும்பத்தினர்.

பத்மனி நிலை மோசம்மாவதை உணர்ந்தவர், இந்த விஷயத்தை முன்னமே கணவனிடம் சொல்லாத தன் மடதனத்தை நெந்துக்கொண்டார்.

வெற்றி அப்பாவை பிடி ஹாஸ்பிடல் போகலாம் என்றான் இளா

எல்லாம் உன்னாலதான் ணா?

அப்பா விட இவதானே உனக்கு முக்கியம், இப்போ இந்த விஷயத்தை சொல்லாம இருந்து இருந்தா இந்த மாதிரி ஆகி இருந்து இருக்காது!

என்றவன் இளாவை அந்த நிலைக்கு தள்ளியவன் தான் தான் என்பதை அந்த சமயம் வசதியாய் மறந்து இருந்தான்.

இப்போது என்ன செய்வது என்று பெண்கள் நினைக்க?

வெற்றியை முறைத்தவன், கவி அப்பாவை பிடி ஹாஸ்பிட்டல் போகனும், நீயும் அம்மாவும் அவரை வாசல் வரை கூட்டி வாங்க நான் கார் எடுத்துடு வரேன் என்றவன், சாவியை எடுத்துக்கொண்டு வெளியே போனான்.

அவர்கள் இருவரையும் தடுத்தவன் தன் கையில் அப்பாவை ஏந்திக்கொண்டான், வாசல் நேக்கி சொன்றான்.

இருக்கும் சூழ்நிலையில் யாருக்கும் எதற்க்கும் விளக்கம் தேவை இருக்கவில்லை, வத்யாவும் அவள் தந்தையும் அவர்கள் வந்த காரில் மருத்துவமனைக்கு வர.

கவிதாவும், ஆதிராவும் அவர்கள் வண்டியில் மருத்துவமணை வந்தனர்.

வழக்கமான மருத்துவமணை என்பதால் வரும் போதே தகவல் தந்து இருக்க, எல்லாம் தயாராக இருந்து, உடனே மணிமாறன் மருத்துவமணையில் அவசரசிகிச்சையில் சேர்க்கப்பட்டார்.

எல்லோரும் ஒய்ந்து அமர்ந்து இருந்தனர்.

அப்போதும் வெற்றியின் கண்கள் பெண்கள் இருவரையும் முறைத்து படி இருந்தன்.

காலையி்ல் எவ்வளவு சந்தோஷமாக தெடங்கிய நாள் 2 மணி நேரத்தில் எல்லாம் தலைகீழாய் மறியதை நினைத்து வருந்தியபடி அமர்ந்து இருந்தார் பத்மனி.

அங்கு அமர்ந்து இருந்த பெண்கள் மீது கோபம் இல்லை என்றாலும், இனி தன் குடும்பம் என்னவாகும்மோ என்ற கவலையில் இருந்தார் அவர்.

அந்த வருத்தத்தில் அவர் யாருடனும் பேசாமல் கண்முடியிருந்தார்.

இளா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மருத்தவர் வருகைக்காக காத்து இருந்தார்.

வத்யாவும் அவள் அப்பாவும் அங்கு அமர்ந்து இருந்தனர், இன்று தன் பெண்னின் நிச்சய விழவிற்காக மனமகிழ்வுடன் இருந்தவர், இப்போது அதற்கு முற்றிலும் மாறான மனநிலையில்.

தாய் இல்லாத தன் ஒரே பெண்னின்    வாழ்வு இனி எப்படி இருக்கும்மோ  என்ற கவலை அவருக்கு.

அனைவரும் ஒவ்வெரு மனநிலையில் இருக்க, வெளிவந்த மருத்துவர், அவருக்கு இதயத்துல நிறைய இடத்துல அடைப்பு இருக்கு, அதோடே அவருக்கு BP யும், இந்த நிலைமையில் அவருக்கு உடனே ஏதும் செய்ய முடியாது, அவர பதடபடுத்தர மாதிரி எந்த விஷயத்தையும் அவர்கிட்ட சொல்லாதீங்க, இன்னும் 

 நாள் observation இருக்கட்டும் அதன் பின் பார்க்கலாம் என்றவர் சென்றுவிட்டார்.

அதன் பின் வித்யாவும் அவள் அப்பாவும் பிறகு வருவதாக கூறி சென்றனர்.

இளா பெண்கள் இருவரையும் கிளம்ப சொன்னவன், அன்னையின் அருகில் அமர்ந்துவிட்டான்.

ம்மா அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுமா

கண்டிப்பா நம்மகிட்ட வந்துடுவார் மா

என்று அவன் அன்னையை தன் தோள் சாய்த்து கைபிடித்து கூறினான்.

வெற்றி ஏதும் சொல்லாமல் அவர்கள் அருகில் அமர்ந்து இருந்தான்.

அப்போது தான் தன் கை பேசியை தேடினான் இளா, கடைசியாக அதை தன் அறையில் வைத்த ஞாபகம், நெற்றியில் தட்டிக்கொண்டவன், ச்சே எப்படி மறந்தேன்.

என்றவன் தந்தையின் உடல் நிலை பற்றி மீண்டும் உறுதி செய்துக்கொண்டு, தாய்யிடம் சென்றான், ம்மா இப்போதைக்கு டாக்டர் எந்த பயமும் இல்ல, இன்னிக்கு இங்க இருக்கடும்.

நாளைக்கு பீபி நார்மல் ஆகிட்டா அப்பறம் மற்றவற்றை பார்க்கலாம் சொல்லியிருக்கார் மா.

என்றவன், வெற்றியின் புறம் திரும்பக்கூடயில்லை.

மா நான் என்னோட போன் வீட்டுல வச்சுட்டு வந்துடேன், நான் போய் அத எடுத்துக்கிட்டு, சாப்பிட எதாவது எடுத்துக்கிட்டு வரேன்மா.

என்றவன் தாய்யின் சரி என்ற தலையாட்டலில் அந்த இடம் விட்டு நகர்ந்தான்.

அது வரை எதும் போசாமல் இருந்த வெற்றி அன்னையின் அருகில் வந்தவன், இப்பகூட இங்க இல்லாம அவன் அந்த பெண் பார்க்க போகனுமா மா?

அவனை முறைத்த அவன் அன்னை வெற்றி எப்போ இருந்து நீ இப்படி நடந்து ஆரம்பிச்ச, அவன் உன் அண்ணன்.

இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு பெருசா ஆக்கின, உனக்கு கவிதாவ பிடிக்கவில்லை என்றால் அதை வெளிபடுத்த இது நேரம் இல்லை.

அதோட உனக்கு கவிதா மேல இருக்க கோவம் அர்த்தம் இல்லாதது, இப்போ அது எங்க வந்த நின்னு இருக்கு பாரு, என்றவர் அதன் பின் ஏதும் சொல்லாமல் கண்களை முடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்தார்.

அவருக்கு இந்த நாள் இப்படி முடிந்துவிட்டது மிகவும் வருத்தம்.

………………………………………….

வீட்டினை அடைந்த இளா தன் அறைக்கு சென்று தன் கைபேசியை பார்த்தவன் அதில், நேத்தாவின் தவறி அழைப்புகள் இரண்டும், டிஜிபி யிடம் இருந்து தவறிய அழைப்புகளையும் கண்டவன்.

உடனே நேத்திராவிற்க்கு அழைத்தான் அது அனைத்து வைக்கபட்டு இருந்து.

கண்ணானிப்பு அறைக்கு தொடர்புக்கொண்டு அந்த அலைபேசி எண் கடைசியாக எங்கு இருந்து என்று அறிய சொன்னைன் அவர்கள் அது அரை மணி நேரத்திற்க்கு முன் அனைக்கப்பட்டுள்ளது என்றும், அலைபேசி இருக்கும் இடம் பாண்டிசேரி என்றும் கூறினர். 

அடுத்து அவன் அழைத்து டிஜிபிக்கு தான், அவர் இளா அழைத்த உடன், இளா ஏன் இவ்வளவு நேரமும் கால் அட்டன் பண்ணல என்றார்.

ஸார் வீட்டுல சின்ன பிரச்சனை அப்பாக்கு உடம்பு சரியில்லை, ஹாஸ்பிட்டல அட்மிட் பன்னிட்டு அங்கே இருந்தேன், போற அவசரத்துல போன் வீட்டுவிட்டு போய்டேன். இப்போதான் வீட்டுக்கு வந்தேன்.

நேத்திராவும் கால் பன்னியிருக்கா. இப்போ போன் swift off வருது, கன்ட்ரோல் ரும்ல சொல்லு டிரேஸ் பண்ண சென்னோன்.

கடைசியா பாண்டிசேரியில swift off ஆகி இருக்கு, என்ன ஆச்சு ஸார்?

என்றான் பதட்டமாக

அவருக்கும் அழைப்பு வந்து அந்த நேரத்தில் அவரால் எடுக்கமுடியவில்லை, பின் மீண்டும் தொடர்புக்கொண்ட போது, அவருக்கும் இளாவிக்கு கிடைத்த பதிலே கிடைக்க, பின் அவர் அழைத்து இளாவிற்க்கு தான்.

ஏன்னோ ஏதோ தாவறாக நடப்பதாக பட்டது அவருக்கு, எது நடக்கூடாது என்று அவர் நினைத்தாரோ, அது தான் நடந்துக்கொண்டு இருந்து.

அவர் இளாவிடம் பேசியபடியே அவர் அறையில் ஒடிக்கொண்டு இருந்த செய்தியை பார்த்தவர். இளா டிவில நீயூஸ் பார் என்றார், உடனே தன் அறையில் இருந்த டிவியில் செய்தி பார்த்தவன், அதிர்ந்தான்.

அதில் பிரேக்கிங் நீயூஸ்சாக – சென்னையை சேர்ந்த மருத்துவ மானவி, பாண்டிசேரியில் போதை மருந்து வழக்கில் கைது. 

என்ற செய்தியில் அதிர்ந்து நின்றான் இளா!!!!!!!!!!!!!!!!!!

நிலவு தேயும்………… 

சென்றமுறை சரியாக ஊகித்த தோழிக்கு பாராட்டுகள்

Advertisement