Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 19

காலையில் எழுந்தவள், தன் வேலைகளை முடித்துவிட்டு அதிகாலையில் கிளம்பி இருந்தாள், இங்கு இருந்து பாண்டி செல்ல எப்படியும் 6 மணி நேரம் ஆகும் என கணக்கிட்டவள், அங்கு 12 மணிக்கு போய்விடலாம் , அதியனை சந்தித்துவிட்டு 3 மணிக்குள் மீண்டும் பஸ் ஏறினால் இரவு 10 மணிக்குள் விடுதிக்கு வந்துவிடலாம் என்று கணக்கிட்டு கிளம்பினால்.

அவள் கிளம்பும் வரை அவள் வருவாளா? மாட்டாளா? என்ற நிலையில் இருந்த அதியன், அவள் கிளம்பிவிட்டாள் என்று அனுப்பி இருந்த செய்தியில், ஒர் முடிவுடன் தன் வேலைகளை முடிக்க சென்று இருந்தான்.

சென்னையில் இருந்தவன் தங்கள் குடியிருந்த விட்டை காலி செய்து ஏற்கனவே, அவன் பெங்களூரில் வேலை பார்த்த போது அங்கு தன்னுடன் வேலை பார்த்த நன்பர்கள் உதவியுடன், அங்கே ஒரு விட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்தவன், அங்கு முக்கியமான பெருட்களை ஏற்கனவே அனுப்பிவிட்டவன், இன்று தங்கை மற்றும் தாய்யை அனைத்து போலீஸ் பார்மாலிட்டியும் முடித்து இரயில் ஏற்றி இருந்தான்.

அவர்கள் அங்கு சேர்ந்த உடன் என் செய்ய வேண்டும் என்பனவற்றை தெளிவாக கூறியவன், தங்கைக்கும் அங்கு படிக்க ஏற்பாடு செய்து இருந்தான்.

மொத்ததில் தங்கள் சென்னை வாழ்ந்த எந்த அடையாளத்தையும் அவன் அவர்களுடன் அனுப்பவில்லை, அக்கம் பக்கத்தில் கூட அவர் தங்கள் சொந்த ஊருக்கு போவதாக கூறியிருந்தனர்.

அவன் தன் அம்மா மற்றும் தங்கையிடம் எக்காரணம் கொண்டும் தன்னை தொடர்புக்கொள்ள வேண்டாம் என்றும், தானே அவர்களுக்கு தேவையானதை மாதம் தோறும் அனுப்புவதாகவும் கூறினான்.

மேலும் ஏதும் அவசரம் என்றால் தன் மிண்ணஞ்சல் முகவரிக்கு மட்டும் செய்தி அனுப்ப சொல்லி தங்கையிடம் கூறியவன், அவனின் எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு பாண்டி நேக்கி புறப்பட்டான்.

அவன் 12 மணியளவில் பாண்டி வந்தவன், அவள் இன்னும் அரைமணியில் வந்துவிடுவாள், என்று அறிந்து, பேருந்து நிலையத்தில் காத்து இருந்தான், அவள் வந்தும் அவனுக்கு தான் வந்த தகவலை தெரிவிக்க, அவள் வந்து முதல் அவளை பார்த்துக்கொண்டு இருந்தவன், அவளை அங்கேயே இருக்கும் படியும் இன்னும் அரைமணி நேரத்தில் தான் வந்துவிடுவதாகவும், சென்னவன் அவளை காக்கவைத்தான்.

அவள் அறியாதவாறு அவள் பின்னால் அமர்ந்து இருந்தான், இந்த இடைபட்ட நேரத்தில் அவள் இளாவிற்கோ அல்லது டிஐஜிக்கோ தகவல் சென்னாலோ அல்லது பேசிவிட்டாலோ தன் திட்டமும் விணாகிவிடும் என்று அறிவான்.

அதனால் அவளை முதலில் மதுரையில் சந்திக்கும் போதே அவள் கைபேசியில் அவள் அறியாமல் தன் கட்டுபாட்டில் கொண்டு வந்து இருந்தான், இந்த 3 மாதமும் அவள் யாரிடம் எல்லாம் பேசினால், என்ன வெல்லாம் பேசினால் என்று அவனுக்கு அத்துபடி, அதே சமயம் அவன் அறிந்த மற்றோர் விஷயம், அவள் இங்கு வந்த பிறகு சில முறை இளாவிடமும், டிஐஜியிடம் பேசி இருந்தாலும் தங்கள் சந்திப்புகள் குறித்து அவள் ஏதும் சொல்லவில்லை, என்பது அவள் தொலைபேசி இளாவுடன் இனைக்கபட்டு அவள் கண்ணானிக்கபடுகிறாள் என்பதும்தான்.      

அதனால் தான் அவளை அவன் இங்கு வரவழைத்து. தன் திரும்பிச்சொல்லவும், இது தான் வசதி என்றும் அவன் இந்த முடிவு எடுத்து இருந்தான்.

சிறிது நேரம் அமர்ந்து இருந்தவளோ, ஒர் மாதிரியாக உணர, தான் யாருக்கும் சொல்லாமல் இங்கு வந்து இருப்பது அவளுக்கு ஏதோ போல இருக்க, தான் ஒரு நன்பனை சந்திக்க வந்து இருப்பதாக இளாவிற்காவது செய்தி அனுப்ப நினைத்து, அதனை டைப் செய்ய, அதை தன் கைபேசிமூலம் அறிந்தவன், அவளுக்கு ஒர் குறுஞ்செய்தி அனுப்பினான், தன் நன்பனுக்காக காத்திருப்பதாகவும், இன்னும் அவன் வரவில்லை என்றும்.

அவள் அலைபேசியில் அதியனின் செய்தி பார்த்தவள், அவனுக்கு பதில் அளிக்கும் பொருட்டு, 

இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டு இருந்தாள்.

இன்னும் அரைமணியில் வந்து விடுவதாகவும் பதில் வந்து.

மேலும் அவளிடம் நேரம் கடத்தும் பொருட்டு செய்திகளை அனுப்பிய வண்ணம் இருந்தான். அதில் அவள் இளாவிற்க்கு செய்தி அனுப்ப மறந்து இருந்தால்.

இப்படியே மேலும் 1 மணி நேரம் கடத்தியவன், இன்னும் தன் நன்பன் வரவில்லை என்றும், அவன் வர இன்னும் ½ மணி ஆகும் போல ஆதிமா , என்றவன்.

சரிவிடு இனிமே இங்க இருந்து அவனை பார்த்துட்டு வந்தா உனக்கு நேரம் ஆகிடும், ஊருக்கு போரதுக்குள்ள அவனை பாக்கனும், நினைச்சேன்!!!! முடியாது போல…..

இனிமே வேற யாராவது ஊருக்கு வந்தா அவன பாத்துக்கட்டும்??? நீ அங்கேயே இரு நான் வந்து லன்ச் முடிச்சிட்டு, உன் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு, உன்னை பஸ் ஏத்திவிட்டு, நான் அப்படியே கிளம்பிறேன். என்றவன் அவள் பேசவே விடாமல், இவனே எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

எல்லாவற்றையும் கேட்டவள், அது என்ன அதுமா வேற யாரவது வந்தா பாத்துக்கடும் அப்படினா? நீங்க உங்க பிரண்ட பாக்க வேணாமா?

என்றால் தானே அவன் வலைக்குள் சிக்க போவது அறியாமல்!!!

இல்லடா அவனோட தங்கச்சிக்கு குழந்தை பிறந்து இருக்குனு அவன் அம்மா அமெரிக்கா போய் இருக்காங்க, போகும் போது அவங்க மருந்த தேவையான அளவு எடுத்துக்கிட்டு போல, அந்த ஊர்லா இங்க வாங்க மாதிரி இசியா மருந்துவாங்கிறமுடியாது, உடம்புக்கு ஏதாவது நாலும் உடனடியா எதும் பன்ன முடியாது, அங்க ஹஸ்பிட்டல் போறது, எல்லாம் இன்சூரன்ஸ் இல்லாம பன்னமுடியாது.

அப்படியே அவசரத்துக்கு போனாலும், நம்ம சொத்தையே எழுதிக்கொடுத்துடு தான் வரனம்.

அதான் அவன் அம்மா மருந்து எடுத்துட்டு போக முடியுமானு கோட்டான், முதல அவன் சென்னை வரதா இருந்து, நான் தான் அப்படியே உன்னபாத்துடு, அவன் கிட்ட மருந்து வாங்கிட்டு போகலாம் வந்தேன், ஆனா முடியாது போல?!!

என்றவன் சரி நான் கிளம்பிட்டேன் இன்னும் 15 நிமிஷத்துல அங்க இருப்பேன் என்றவன்.

அலைபேசியை வைத்து இருந்தான்.

அவன் சென்ன செய்தி ஒரு மருத்து மானவியாய் அவளை அடைந்து, அந்த நேரத்தில் அவள் அந்த அம்மா மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை மட்டுமே கருத்தில் க்கொண்டவள், மற்றவற்றை யோசிக்க தவறினால், அதியன் எதிர்பார்த்த அந்த வார்த்தையை அவளையே சொல்ல வைத்தான்.

ஆம் வேனா அதி அவங்க மருந்து மிஸ் பன்னிட்டா ரொம்ப கஷ்டம், நீங்க வேனா அங்கயே இருங்க, நான் அங்க வந்து உங்கள பார்த்துட்டு, அப்பறம் இரண்டு பேரும் இங்க வந்து பஸ் ஏறலாம்.

என்றால் சற்றும் யோசிக்காது, இவள் அங்கு சொல்வதற்க்கு பதில் அவன் இங்கு வந்து இவளை சந்தித்து, அவன் நன்பனை இங்கு வந்து மருந்து கொடுக்க சொல்லாம் என்று, அவளுக்கு தோன்றாது அவளின் துர்தஷ்டமா?     இல்லை அவனின் அதிஷ்டாமா? 

ஆனால் அவன் நினைத்து போல் தான் எல்லாம் நடந்து, அவளே அவன் வலையில் விழ்ந்தால். தான் போகப்போகும் இந்த பயனம் தன் தலை எழுத்தையே மாற்றிவிடும் என்று அந்த நேரத்தில் அவள் அறியாள்!!

அந்த நேரத்தில் அவள் எண்ணம் எல்லாம் அதியன் ஊருக்கு சொல்வதற்க்கு முன் சந்திக்க வேண்டும் என்பதாகவே இருந்து. அதனால் அதன் பின் விளைவுகளை எண்ணிப்பார்க்கவில்லை.

அடுத்து பேருந்து நிலையம் வெளியில் வந்து ஒரு ஆட்டோபிடித்து அவன் சொன்ன பீச் ரிசார்ட் சொல்ல சென்னாள், அவளை அவனும் பின் தொடர்ந்தான்.

அவள் அடுத்த 15 நிமிடத்தில் அவ்விடத்தை அடைந்ததும் மீண்டும் அவனை அழைத்தாள், அவன் அவளை உள்ளே வந்து வரவேற்பறையில் காத்து இருக்குமாறு கூறினான். அவளும் வரவேற்பறையை அடைந்தவள், அங்கு காத்து இருந்தால்.

அவள் வந்த கொஞ்ச நேரத்திலே அந்த இடத்தை தன் பார்வையாள் அளந்தவள், அது பெண்கள் தனியாக வர ஊகந்த இடம் இல்லை என்பதை அறிந்தாள், அந்த வரவேற்றப்பறை ஒட்டி பார் இருந்து, அதுவே அவள் அங்கு அமர்ந்து இருப்பதை அசவுகரியமாக உணர்ந்தாள்.

தான் இங்கு வந்து இருக்க கூடாதோ என்று தோன்றியது, உடனே அதியனுக்கு அழைத்தாள், இவள் அழைப்பாள் என்று எதிர்பார்த்தவன், அவள் அழைப்பை ஏற்றான்.

அதியன் நீங்க எங்க இருக்கிங்க, இங்க எனக்கு comfortable இல்லை please  கொஞ்சம் சீக்கரம் வரங்க, ஏய் ஸாரி மா, இன்னும் சரியா   நிமிஷத்துல அங்க இருப்போன்.

என்றவன் அழைப்பை தூண்டித்து பின் அலைபேசியை வெறித்தான். அவன் அவளை இங்க வரவழைத்தே அவளை ஏதாவது ஒரு வகை அவமான படுத்தவேண்டும் என்றுதான்.

கல்லூரி காலங்களில் இங்கு ஓர் முறை நன்பர்களுடன் வந்து இருக்கிறான், அப்போதே இந்த இடம் சரியில்லை என்று தெரியும், தெரிந்து தான் அவளை இங்கு வரவழைத்தான்.

என்னதான் அவள் மீது தவறு இல்லை என்றாலூம், தன் குடும்பத்தின் இந்த நிலைக்கு ஒரு வகையில் இவளும் காரணம், ஆரம்பத்தில் அவள் மேல் கொலை வெறியில் இருந்தவன், அதன் பின் வழக்கின் உண்மை நிலை அறிந்து அவள் மேல் கோவம் மட்டு பட்டு இருந்தாலும். முற்றிலும் அகலவில்லை, அதனால் அவளை ஏதாவது செய்து பதிலுக்கு அவமானபடுத்த வேண்டும், அதை அவள் வாழ்நாளில் மறக்க கூடியதாக இருக்க கூடாது என்றி நினைத்துதான்.

அவளை இங்கு வரவழைத்தான், ஆனால் ஏதோ ஒன்று அவளை ஏதும் செய்யவிடாமல், மனது தடுத்து அது அவன் தந்தையின் வளர்போ, அதற்கு மேல் அவளை அவனால் ஏதும் செய் இயலவில்லை.

அதனால் அவளிடம் ஏதும் சொல்லாமல், அவ்விடத்தை விட்டு புறபட்டான், இன்று இரவு அவன் அமெரிக்க பயத்திற்க்கு, ஆம் அவன் நேத்திராவிடம் சொல்லியபடி அவனுக்கு நாளை அல்ல விமானம் இன்றே அவன் புறபடுகிறான்.

அவன் நினைத்து, அவள் அங்கே தனக்காக காத்து இருந்து தன்னை சந்திகாமல் மனம் நெந்து கிளம்பிவிடுவாள், பின் அவளால் தன்னை தொடர்புக்கொள்ள முடியாது என்று.

ஆனால் அவன் அறியாது!!! அவன் மட்டும் அவளை தொடவில்லை, இன்னொரு வல்லூரும் அவளை தொடந்துக்கொண்டு இருக்கிறது. இத்தனை நாள் அவளை அனுக முடியாமல் இருந்தவன், இன்று அவன் கை கொட்டும் தொலைவில் ??????????

எப்போதும் இவள் கைபேசியை தன் கைபேசி மூலம் அவளை தன் கண்கானிப்பில் வைத்து இருந்த இளாவும் கூட அன்று நடந்த சம்பவங்களால், அதை கவணிக்க தவறி இருந்தான். அவள் எங்கு இருக்கிறாள் என்று?  

………………………………………………………….

வெற்றி அப்படி சொன்னதும் இளா அதிர்ந்தவன், பின் நேரக பெண் தந்தையிடம் மண்ணிக்கனும் எனக்கு இந்த திருமனத்தில் விருப்பம் இல்லை என்றவன். நான் வேற் பெண்னை விரும்புகிறேன் என்றவன், வித்யாவையும் பார்த்து ஸாரி என்னை மண்ணிச்சிருங்க என்றான்.

அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வில் பத்மினி கணவன் முகம் பார்க்க, அவர் இங்கு என்ன நடக்கிறது என்று யூகிக்கும் முன் வியர்த்து இருந்தார்…………………….

நிலவு தேயும்………… 

தோழிகளே யார் அந்த வல்லூரு?

Advertisement