Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 18

அண்ணன் உடன் போசலாம் என்று வந்த வெற்றி, இளாவின் செயலில் அதிர்ந்து நின்றது சில வினாடிகள் தான், அதன் பின் அதன் வெளிபாடு கோவமாக கவிதாவின் மேல் தான் திரும்பியது.

எனக்கு அப்பவே தெரியும் அவ ஆளும் டிரஸ்சும், எப்பவும் எனக்கும், என் அண்ணனுக்கும் நடுவில் நிற்பது தான் இவள் வேளையே, இப்ப இங்க என்ன நடக்க போதுனு தெரிஞ்தான் வந்து இருப்பா?

வந்த இடத்துல பாக்க வேளைய பாரு, இதுக்கு தான் தராதரம் பாத்து பழக்கவழக்கம் வெச்சிக்கனும் என்று மனதில் அவளை திட்டி தீர்த்தவன், அவள் மீது தீராத வன்மும் கொண்டான்.

அதிர்வில் நின்று இருந்த கவிதாவோ, உடனே சுதாரித்து, இந்த விஷயம் இளாக்கு தெரியுமா? என்றாள்.

அவளை விசித்திரமாக பார்த்த பத்மா, ஏன் அவன் உண்கிட்ட சொல்லயா? என்றார்!!!!

அவர் கேள்வியில் சுதாரித்தவள், கண்டிப்பாக இளாவிற்க்கு விஷயம் தெரியவில்லை!! ஒன்று இவர்கள் சொல்லும் போது அவன் வேறு வேலையாக இருந்து இருப்பான், இல்லை என்றால் அவன் அந்த விஷயத்தை கேட்டே இருக்கமாட்டான், என்று நன்பனை பற்றி சரியாக கணித்தால்.

ஆனால் இப்போது அவள் கவலை எல்லாம் இந்த சூழ்நிலையை எவ்வாறு கையால்வது என்றுதான்.

இதுவே இவளுக்கு நேற்று பத்மா அழைக்கும் போது கூறியிருந்தால், இந்த ஏற்பாட்டையாவது தடுத்து இருக்கலாம். நேற்று பத்மா அழைக்கும் போது, நாளைக்கு காலையிலே விட்டிற்க்கு வந்துடு, நிறைய வேளை இருக்கு, என்ற போது ஏதோ பூஜை அல்லது கணபதி ஒமம், என்று தான் நினைத்தாள்.

ஏன் என்றால் இது அவர்கள் வீட்டில் வாடிக்கையாக நடப்பதுதான், அதில் தவறாமல் அவளுக்கும் அழைப்பு இருக்கும், அவள் அழைப்பு எடுத்த போது மேலும் ஏதும் விவரம் கேட்காமல் விட, இளா இவளிடம் கூறி இருப்பான் என பத்மா அதற்கு மேல் ஏதும் கூறவில்லை.

அவருக்கு ஏதோ சங்கடமாக இருந்து, என்னவே பெரிதாக நடக்க போவதாக, ஏதற்க்கு இந்த கல்யாண விஷயத்தில் அவர் இத்தனை அவசரம் காட்டுகிறார், என்று, காலை மகன் வந்த போது அவன் முகத்தில் விஷேசத்திற்கான ஏதும் எதிர்பார்ப்பு இருக்கிறதா என்று பார்த்தவர் முகத்தில் ஏமாற்றமே.

எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும் ஆண்டவா? என்று மனதில் வேண்டிக்கொண்டார்.

மேலயே நடந்துக்கொண்டு இருந்த வெற்றி அண்ணனின் அறையை தட்டலாமா? வேண்டாமா? என்று குழம்பி இருந்தான்.

அந்த நேரம் இது பற்றி கேட்பதற்க்கு மேல வந்த கவிதாவை, தீ பார்வை பார்த்தவன், அவள் எதற்க்கு வந்து இருக்கறாள் என்று அறிய அங்கேயே இருந்த ஷோபாவில் அமர்ந்தான்.

அவன் அங்கு இருப்பான் என்று எதிர்பார்க்காத கவிதா, திகைத்து நின்றாள், ஏற்கனவே இவனுக்கும் எனக்கு ஏழாம் பொருத்தம். இப்போ இங்க வேற இருக்கான், என்ன செய்யலாம்?

இளாவை எப்படி கூப்பிடுவது, என்று யேசித்தவள் தன் அலைபேசியை எங்கு வைத்தோம் என்று யோசித்தாள், அந்தோ பரிதாபம் அதுவும் அவன் அமர்ந்து இருந்த ஷோபாவின் அருகில் இருந்தது.

என்னடா இன்னிக்கு நமக்கு வந்த சேதனை என்று நினைத்தவள், அவன் அருகில் சொன்று அந்த போனை எடுத்தவள் இளாவிற்க்கு அழைத்தாள்.

அவள் செயல்களை நேட்டம்விட்டு கொண்டு இருந்தவன், அவள் இளாவிற்க்கு தான் அழைக்கிறாள் என்று யூகித்தவன், அவள் கையில் இருந்த போனை பரிக்கவும், அந்த நேரம் இளா அழைப்பை எடுத்து இருந்தான்.

அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்காதவள், அவனை அதிர்ந்து நேக்க, அடுத்து அவன் கூறியதில் யார் அதிகம் அதிர்ந்தார் என்று தெரியவில்லை?

அடுத்த நோடு இளா, ஆதிராவோடு அறையில் இருந்து வெளிவந்தவன், தம்பின் கண்ணத்தில் அறைந்து இருந்தான்.!!!!!

என்னடி எங்க அண்ணனுக்கு மாமா வேலை பாக்கிறியா??????     

என்ற அவன் வார்த்தையில் அவனை அதிர்ந்து பார்த்து இருந்தவள், இளாவின் அடியில், அடுத்து அதிர்ந்து இருந்தால்.

அவளுக்கு நன்றாக தெரியும், வெற்றியின் மீதான இளாவின் பாசம், அதுதானே அவளை அந்த குடுபத்தில் ஒன்ற செய்த்து. இன்று இளா இப்படி நடந்துக்கொண்டதில் அவள் என்ன செய்வது என்று அறியாமல் இருந்தாள்.

பத்மா சொன்னதும் இவள் மேல வந்து இளாவிடம் இந்த விஷயம் சொல்லி, ஏதும் பொரிதாக நடக்கும் முன், ஆதிரா விஷயத்தை வீட்டில் சொல்லிவிடலாம் என்றுதான்.

ஆனால் நடந்துக்கொண்டு இருப்பதோ அதற்கு முற்றிலும் மாறான விஷயம், வெற்றி கேட்டதே அதிர்ச்சி என்றால், அதற்கு இளா நடந்துக்கொண்டது அதைவிட அதிர்ச்சியானது.

அப்போது தான் கைபேசி இனைப்பு ஏற்பட்டு இருப்பதை பார்த்தவள், இளா அனைத்தையும் கேட்டுவிட்டான் என்று உணர்ந்தாள்.

அடுத்து ஏதும் நடக்கும் முன் இளா அருகில் நெருங்கி இருந்தாள், அதை பார்த்த வெற்றி இன்னும் ரௌத்திரமானான், எல்லாம் இவளாள் தான் என்று எண்ணியவன், இளா அவனை அடித்த கோவத்தில் அவளை அறைந்து இருந்தான்.

இதை எதிர்பார்க்காத கவிதா, அவமானத்தில் நிற்க்க, இளா மறுபடியும் வெற்றியின் செயலில் அவனை நேக்க அந்த நேரத்தில், இவர்களின் சத்தம் கேட்டு மேல வந்த பத்மா இங்கு நடப்பதை பார்தவர் என்ன சொல்வது என்று தெரியாமல், நிறுத்துக இரண்டு பேரும் என்றவர், கவிதாவின் அருகில் வந்து அவள் கையை பிடித்துக்கொண்டார்.

என்னமா ஆச்சு?

அவகிட  ஏன்மா கேட்கிறீங்க? எல்லா பிரச்சனையும் இவளாதான், எத்த நாள் சொல்லி இருப்போன் இவள இங்க சேகாதிங்க, இவளாதான் எங்க இரண்டு பேருக்கும் பிரச்சனை வரபோகுதுனு, கேட்டிங்களா?

எத்தன நாள் இந்த விட்டு சாப்டு இருப்ப, உன் படிப்பு செலவுல இருந்து உனக்கு தேவையானது எல்லாம் இந்த விட்டுல இருந்து வாங்கிட்டு எப்படி இந்த வீட்டுக்கு உனக்கு தூரோகம் பண்ணமுடியுது?

என்றான் தன் இத்தனை நாள் ஆதங்கம் எல்லாம் சேர்த்து……

அதில் மேலும் கூசிப்போனவல் தன் நிலையை நினைத்து தன்னிரக்கம் கொண்டாள்.

அதோடு உன்னை விட்டேனா பார் என்றவன், இன்னிக்கு இளாக்கு நிச்சயம் தெரிஞ்சு எப்படி உண்ணால இப்படி ஒரு விஷயத்தை பன்ன முடிஞ்சுது.

என்றவன் கூற்றில் இம்முறை அதிர்வது ஆதிராவின் மற்றும் இளாவின் முறையானது, இன்னும் அவள் இளாவின் அருகில் நின்று இருந்தாள். அறையில் இருந்து வெளிவந்து முதல் இங்கு நடக்கும் எதும் புரியாமல் இருந்தவள், இளாவின் நிச்சயம்   என்றதில் தான், அவன் முகம் பார்த்தால்.

என்னது எனக்கு நிச்சயமா?

யாரை கேட்டு முடிவு பன்னிங்கமா?

என்றான் அதர்வாய் தாய் பார்த்து??!!!

அவன் கேள்வியில் விழித்த பத்மா எல்லாம் தவறாய் நடப்பதை நெடியில் கணகிட்டவர், சூழ்நிலையை மாற்றும் பெருட்டு முதல எல்லாரும் அமைதியா இருங்க,

அவங்க வீட்டுல இருந்து வர நேரம், அவங்க வந்துட்டு போனதுக்கு அப்பறம் எல்லாம் பேசிக்கலாம் என்றார்.

மா என்ன பேசுறீங்க நான் ஆதராவ தான் காதலிக்கிறேன், இங்க இருந்து சென்னை போற அன்னைக்கதான் அவகிட்ட சென்னேன், அப்போ என்க்கு உடனே உங்கிட்ட சொல்லமுடியல, அங்க போனதும் நிறைய வேலை, என்னால எதையும் யேசிக்கமுடியல.

நான் இப்போ வந்ததே ஆதரா பத்தி பேசநான், நீங்க எனக்கு நிச்சயம் சொல்ரிங்க. என்கிட்ட எப்ப சொன்னிங்க?

என்றவனது கேள்வியில் நிச்சயம் இன்று இந்த வீட்டில், ஒரு பூகம்பம் வெடிக்க போகிறகு என்ற முடிவுக்கே வந்துவிட்டார் அவர்.

அவருக்கு யாரை எப்படி அனுகுவது என்று தெரியவில்லை. எல்லாம் கைமீறிய நிலை. மகன்கள் இருவரும் எதிர் எதிர்ராக நிற்பதே அவருக்கு நெஞ்சடைத்து.

யார் கண்பட்டது என் குடுபத்தின் மீது என்று என்னி மறுகினார்.

இங்கே பார் மாறா அம்மா சொல்லத கேளு இப்போதைக்கு எதையும் பேசாதிங்க, அவங்க வர நேரம், அவங்க வந்துடு போகட்டும், அப்பறம் நம்ம இதபத்தி பேசலாம், என்றார் இளாவிடம் தன்மையாக.

இவல முதல இங்க இருத்து அனுப்பிவிடுங்க, எல்லாம் நல்லதே நடக்கும் என்று மறுபடியும் கவி மீது பாய்ந்தான் வெற்றி.

எல்லோரும் எங்க போய்டாங்க, பத்மா என்ற மணிமாறனின் சத்தத்தில் தூக்கிவாரி போட்டது பத்மாவிற்க்கு, இதே வரேன் ங்க, என்றவர், மகன்களிடம், அவங்க வந்து போனதுக்கு அப்பறம் எல்லாத்தையும் பேசிக்கலாம்டா, கிளம்புங்க.

என்றவர் கையோடு கவிதாவையும், ஆதிராவையும் அழைத்துச்சென்றுவிட்டார்.

அவர்கள் போனதும், வெற்றி இளாவின் கேள்வியில் தலை கவிழ்ந்தான்.  

அவள பார்த்து என்ன கேட்ட மாமா வேலை பாக்கறியானு? தானே?

நீ அவள மட்டும் அசிங்க படுத்தல என்னையும் தான். என்றவன் தன் அறை புகுந்தான்.

அங்கு எந்த வார்த்தை சொல்லி யாரை தேற்றுவது என்று தெரியவில்லை, கவிதாவிற்க்கும், ஆதிராவிற்க்கு இங்கு இருக்க வேண்டுமா? போக வேண்டுமா? என்ற நிலை.

எப்படியும் தன்னவன் எல்லாவற்றையும் சரி செய்துவிடுவான் என்ற நம்பிக்கை இருவருக்கும் இருந்தாலும், அதை பிறர் மணம் நேகாமல் செய்யமுடியுமா? என்ற கேள்வியே அவர்கள் மனதை குடைந்து.

ஆனால் இது வரை நடந்து எல்லாம் ஒன்றும்மே இல்லை, இனிமேல் தான் முக்கிய காட்சி இருக்கிறது, என்று யார் செல்வது?!

தன் தந்தையிடம் எவ்வாறு தன் நிலை எவ்வாறு விளக்குவது என்று சிந்தித்த வண்ணம் அறை விட்டு வெளிவந்தான்.

அதே நேரம், அவர்களின் தொழில் பங்குதார் ஆனா கோபால் மற்றும் அவர் மகள் வித்யாயும் அவர்களுடன் சில சொந்தங்களும் வந்து இருந்தனர்.

இளாவின் வேலை காரணமாக இப்போது எளிமையாக உறுதி செய்துவிட்டு திருமணத்தை விமர்சையாக நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

வந்து இருந்தவர்களை பார்த்து சற்று நிம்மதியாக உணர்ந்தான் இளா, அப்பா பெருசா ஒன்னும் கூட்டம் இல்லை, எப்படியாவது சமாளிச்சிடலாம் என்று எண்ணினான்.

வந்தவர்கள் அமர்ந்தனர், வித்யா அழகாக இருந்தாள், இவர்கள் தொழில் முறைக்கூட்டத்தில் இளாவும், அவளை ஒர் இரு முறை சந்தித்து இருக்குறான், நேர்ரான பார்வை பார்த்து புண்ணகைத்தவர் முகத்தில் அன்றைய நாளுக்கான ஆர்வம் இருந்து.

வந்தவர்களை அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க மணிமாறனிடம் இளா பேச்சை துவங்கும் முன்.

வெற்றி அங்கிள் கல்யாணத்திற்க்கு மண்டபம் முடிவுபண்ணிட்டிங்களா?

என்றவன் கேள்வி அவனை அதிர்வுடன் பார்த்தான் இளா?!!

……………………………….

காலை எழுந்தது முதல் மணதில் ஏதே பாரமாக உணர்ந்தவள், அந்த கலக்கத்துடன்னே கிளம்பினால், பேருந்து நிலையம் வந்து பாண்டிசேரி செல்லும் பேருந்தில் அமர்ந்தவள் அறியவில்லை இனு தான் திரும்ப போவது இல்லை எண்பதை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நிலவு தேயும்………… 

Advertisement