Advertisement

 

வணக்கம் தோழிகளே, 

 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

 

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 17

 

காலை 6 மணிக்கு கண்விழித்த நேத்ரா, எழுந்து தன் காலை கடமைகளை முடித்துவிட்டு, நேற்று இரவு விட்டுப்போன நேட்ஸ்களை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து எடுக்க தொடங்கினால்.

 

அவளின் இந்த 4 மாத விடுதி வாழ்க்கை அவளுக்கு ஒர் சுகந்திர உணர்வை கொடுத்து இருந்து. எதை பற்றியும் கவலையில்லாமல், தன் லட்சியத்திற்காக முழுமனதாக உழைத்துக்கொண்டு இருந்தால்.

 

அவ்வபோது வழக்கு பற்றி தகவல்களை இளாவிடமோ இல்லை டிஐஜி இடமோ கேட்டுக்கோள்வாள். ஆனால் அவர்களிடமும் பேசி சில காலம் கடந்து இருந்து.

 

அதுவும் வளவன் மரணத்திற்க்கு பின் இளாவும் டிஐஜியும் அவளை இந்த வழக்கில் இருந்து தள்ளி நிறுத்தவே நினைத்தனர். 

 

ஏன் எனில் ஒரு வேளை வழக்கு குற்றவாளிகளுக்கு சாதகமாக மாறும்மானால், அதில் அவர்களின் அடுத்த குறி நிச்சயம் நேத்ராதான், என்று இருவரும் அறிந்து இருந்தனர்.

 

அதனால் தான் அவளை அதிகம் இதில் ஈடுபாடு காட்டாமல் அவள் கவணத்தை படிப்பில் செலுத்தும்மாறு கூறினர்.

 

அப்படியே அவள் மேலும் சற்று கவனம் வைத்து இருக்கலாம் என்று இருவரும் உணரும் போது எல்லாம் கைமீறி போய் இருந்து.

 

தன் படிப்பில் கவனமாக இருந்தவள் அலைபேசி சத்ததில் தன் கவணத்தை அதன் புறம் திருப்பினால், ஹாய் ஆதுமா குட் மார்ணிங் என்ற குறுதகவல் உடன் அவள் அலைபேசி வெளிச்சம் காட்டியது.

 

அதை பார்த்தும் அவள் இதழிலில் ஒரு மென்நகை, அதை எடுத்து பார்த்து அதற்கு பதில் அளித்தவள், தன் பாடபுத்தகங்களை முடிவைத்து குளிக்க சென்றால்.

 

கடந்து இரண்டு மாதங்களாக அவளுக்கு இது வாடிக்கை யாகி இருந்தது,

 

அவளின் அதிமா அவளுக்கு என அனுப்பும் இந்த குறுசெய்திகள் அவளின் விடியல்களை புத்துணர்வாகவும், இரவுகளை வண்ணமயமாகவும் மாற்றி இருந்து.

 

அவனிடம் இருத்து வரும் இந்த சிறு வாழ்த்துகளும் நல விசரிப்புகளும் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்து.

 

அதிலும் அதியனை அவளின் மனதிற்க்கு நெருக்கமாக உணர்ந்தாள். இத்தனை நாள் அவள் அனுபவித்த தனிமையை தன்  விசாரிப்புகள் மூலம் ஒன்றும் இல்லாமல் செய்பவனை அவன் இப்போது எல்லாம் எதிர்பார்க ஆரபித்தால்.

 

முதலில் அவன் வந்து பேசும் போது எல்லாம் குற்ற உணர்வில் தவிர்த்தவள், பின் அவனுடன் இயல்பாக இருக்கும் படி பார்த்துக்கொண்டதின் பெரும் பங்கு அவனையே சாரும்.

 

இப்போதும் இந்த வாரஇறுதி நாட்களை அவனை சந்திக்க முடியுமா என்று அனுமதி கேட்டே அவன் அவளுக்கு செய்தி அனுப்பி இருந்தான்.

 

ஆனால் இவள் தான் என்ன பதில் கொடுப்பது என்று தெரியாது அமைதியானால்.

 

அவனுடன் நேரம் செலவு செய்ய அவள் மணம் விரும்பினாலும், ஏதோ ஒன்று அவளுக்கு அதை செய்யவிடாமல் தடுத்து.

 

கடந்த 4 மாதமாக எங்கும் செல்லாமல் இங்கே இருப்பது அவளுக்கு சற்று சலிப்பை தந்தாலும், அவனுடன் போகவும் அவளுக்கு முடியவில்லை.

 

என்ன செய்வது என்று அறியாமால் நின்று இருந்தவள், தன் பின் பக்கம் குரல் கேட்டு திருப்ப அங்கே,அவளின் அறை தோழி நின்று இருந்தாள்.

 

என்ன பா இங்க இருக்க ரும்ல உன் போன் அடிச்சுகிட்டே இருக்கு. என்றவள், அதை அவள் கையில் தினித்துவிட்டு சென்றுவிட்டாள். 

 

தவறவிட்ட அழைப்பை பார்த்தவள் அது அவளின் அதுமாவிடம் இருந்து என்றுக்காட்டியது.

 

அவள் அடுத்து யோசிக்கும் முன் மீண்டும் அலைபேசி சப்பமிட இம்முறையும் அவன் தான். அழைப்பை ஏற்று காதிற்க்கு கொடுத்தவள், அவன் புறம் பேசும் வரை வாய்திறக்கவில்லை.

 

அவன் என்ன அதிமா இன்னும் என் மேல் நம்பிக்கை இல்லையா? என்றான் வருத்த குரல்லோடு?

 

என் மேல் நம்பிக்கை இல்லையா என்ற ஒற்றை கேள்வி தான் எவ்வளவு எளிதாக கேட்கபடுகிறது?

 

ஏற தாழா எல்லா வகையான் ஆண் பெண் உறவுகளும் இந்த கேள்வியை சந்திக்காமல் கடந்து இருக்க முடியாது. ஆனால் கேள்வியின் முக்கியத்துவம், கேட்கும் நபரும் அதற்கு பதில் அளிக்கும் நபருக்கும்மே அதன் உண்மை நிலை வெளிச்சம்.

 

இருவரில் ஒருவர் அந்த வாக்கை தவறிவிட்டாலும், அதன் காயம் காலங்களால் கூட ஆற்ற முடிவதில்லை.

 

இங்கே எளிமையாக கேட்டபடும் கேள்விகளால் அவற்றுக்கு பெறப்படும் பதில்களும் அவர்களின் மொத்த வாழ்க்கை பாதையே மாற்றிவிடும், என்பதை அக்கனம் அவர்கள் அறிவதில்லை.

 

அப்படி இல்லை அதுமா என்றவள், என்ன பதில் சொல்வது என்று தன் உதட்டை கடித்த வண்ணம் சிந்தித்தால்.

 

ஆனால் மறுபுறமோ சரி அதிமா    உணக்கு என் மேல நம்பிக்கை இருந்தா இந்த வாரம் என்ன பார்க்க வா, இல்லைனா பரவா இல்லை அடுத்த வாரம், ஆபிஸ் வேலையா திருப்பி அமேரிக்கா போக வேண்டி இருக்கு.

 

திரும்ப எப்ப வருவேன்னு தெரியல?

தீடீர் பிளான் அதுனால இங்க இருந்து என்னால நகர முடியல, இல்லனா நானே வருவேன்.

பரவா இல்ல வந்த உடண் உன்ன வந்து பாக்குறேன்.

 

கிளம்பறத்துக்கு முன்ன வர முயற்ச்சி செய்றேன், ok take care bye.

 

என்றவன் இனைப்பை துண்டித்து இருந்தான், அதற்கு மேல் அதை பற்றி யோசிக்காமால் அந்த நாள் அவளை இழுத்துக்கொண்டது.

 

அடுத்து வந்த இருநாட்களும் அவளுக்கு கல்லூரியில் கடந்துவிட, வெள்ளியன்று தான் சிறிது ஆஸ்வாசமா இருந்தாள். 

 

அன்று தான் கடந்த இரு நாட்களாய் அவளது அதுமாவிடம் இருந்து, எந்த தகவளும் இல்லை. அழைக்கவும் இல்லை என்பதை உணர்ந்தவள், நேரத்தை பார்த்துவிட்டு அவனுக்கு அழைத்தாள்.

 

அழைப்பு முழுவதும் சென்று நின்றது, இவ்வாரு இரு முறை நடக்க, இன்னும் கோவமா இருக்காரோ ?!!

 

என்றவள் கவனத்தை கலைத்து அவனிடம் இருந்து வந்த குறுச்சொய்தி,  I am in meeting, call you later.  

 

சரி என்று அன்றைய வகுப்பில் எடுத்தவற்றை புறட்டிக்கொண்டு இருந்தாள். அதே நேரம் அவளுக்கு செய்தி அனுப்பியவனோ, அவன் கைபேசியை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

 

இது வரை அவன் அவள் மேல் கொண்ட கோபமும், அவன் சிறு வயது பாசமும் எந்த முடிவையும் எடுக்கவிடாமல், அவனை இரு தலைகொள்ளி எறும்பாக இருக்க வைத்து.

 

ஆனால் இன்று காலை அவன் தாய்யிடம் இடம் இருந்து வந்த செய்தி அவனை முற்றிலும் நிலை குலைய வைத்து இருந்து, அவன் தங்கை தங்க வைக்கபட்டு இருந்த ஊரில், விஷயம் அறிந்து அவளிடம் சிலர் தவறாக நடக்க முயன்றதாகவும் , அதை அறிந்து அவளது மாமா அவளை காபாற்றி இப்போது அவள் மருத்துவ மனையில் இருப்பதாகவும் கூறினார்.

 

நமக்கு இந்த ஊரே வேணாம் அதி நாம வேற எங்கையாவது போய்டலாம், என்றவர் கதறி அழுத அழுகை இன்னும் அவன் நெஞ்சை அறுத்து.

 

ஆனால் அங்கு உண்மையில் நடந்து, அவள் தங்கைக்கு அந்த ஊர் இளவட்டங்கள் அவளிடம் பகடி பேச அதற்கு இவள் பதில் பேச என சிறு தகராரு ஏற்பட்டு இருக்க, அவள் மாமா ஆனந்தியை அழைத்து அவளை இங்கு இருந்து அழைத்து செல்லும்மாறு, கூறியிறுந்தார்.

 

ஆனால் அந்த சந்தர்பத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள நினைத்த ஆனந்தி, ஊரைவிட்டு எவ்வளவு சீக்கரம் கிளம்ப முடியும்மே அவ்வளவி சீக்கரம் கிளம்ப நினைத்தார்.

 

அவரிடம் ரவி மற்றும் ராகவ் இடம் இருந்து வாங்கி பெரும் தொகை இருந்து, அதை அவரால் அவர் இஷ்டபடி எதும் செய்ய முடியவில்லை, அதே சமயம் உண்மை தெரிந்தால், போலீஸ் அல்லது ரவி மற்றும் ராகவ் ஆட்கள் அவர்கள் தப்புவதற்க்கு தங்களை ஏதும் செய்து விடுவார்கள் என்று பயந்தார்.

 

அவருக்கு நன்றாக தெரியும் அதியனுக்கு மட்டும் உண்மை தெரிந்தால் அவன் தான் ஆனந்தியை முதலில் போலீசில் ஒப்படைத்துவிடுவான் என்று.

 

அதனால் முடிந்தவரை அந்த ஊரில் இருந்து வெளியேற நினைத்தார், அதனால் நடந்தை அப்படியே மகனிடம் திரித்து கூறியிறுந்தார்.

 

மகன் கண்டிபாக மாமாவிடம் கேட்க மாட்டான் என்று அவருக்கு தெரியும், மகளிடம் கேட்டால் என்ன சொல்ல வேண்டும் என்று ஏற்கனவே சொல்லி இருந்தார்.

 

அவளும் கடந்த 6 மாதமா இந்த கிராம வாழ்க்கை அவளுக்கு நரகமாக இருக்க, அன்னை சொல்வதை ஆராயமல் சொல்வதாக ஒப்புக்கொண்டாள்.

 

இரவு 10 மணிக்கு அவளுக்கு அழைத்தவன், வரும் திங்கள் அன்று ஊருக்கு கிளம்ப வேண்டும் என்றும், இனி மதுரை வரமுடியாது என்றும் கூறினான்.

 

அதுவரை அவன் அழைப்பிற்க்கு போகலாம்மா வேண்டாமா என்று குழம்பியவள், அவன் ஊருக்கு கிளம்புவாத சொல்லவும் அவன்னை சென்று பார்பது என்று முடிவு எடுத்தாள், அதை அவனிடம் சொல்லவும்.

 

அவன் நாளை மாலை ஒரு நன்பனை சந்திக்க பாண்டிச்சேரி வருவாதாகவும் பின் அங்கு இருந்து கிளம்பி வந்து ஊருக்கு புறப்படுவதாகவும் சொல்ல, அவள் சற்றும் யேசிக்காமல் அவனை பாண்டிச்சேரில் சந்திப்பதாக கூறியிருந்தாள்.

 

அவளின் பதில் அவன் முகத்தில் வன்ம புன்கையை தேற்றிவிக்க, அவன் எதிர் பார்த்த பதிலும் இதுதான், அவளை அறியாமல் அவள் வாய் மொழியாகவே அவளை விழ்த்த நினைத்தான்.

 

அவன் திட்டத்தின் முதல் படி வெற்றிகரமாக நடந்துவிட்டது, சரி நான் அங்க வந்த பிறகு எங்கு வர வேண்டும் என்று கூறுகிறேன் என்றவன் இனைப்பை துண்டித்தான்.

 

அவன் அவளை சந்திக்க அழைத்ததும் அவள் தயங்கியதற்க்கு அவள் சென்னை செல்ல வேண்டும்மா? என்று எண்ணியதும் ஒரு காரணம்.

 

முதலில் அவள் சென்னை சென்றால் அது இளாவிற்க்கு தெரிந்தால், அவன் என்ன சொல்லுவான் என்று தயங்கினால், மற்றோரு காரணம் தயாளன் அவள் அங்கு வீட்டிற்க்கு செல்வதை விரும்பவில்லை.

 

ஆனால் இப்போது அதியனை சந்தித்தே ஆக வேண்டும், இப்போது போனால் இனி எப்போது வருவான் என்று தெரியாது, அதனால் என்னவோ அவள் இந்த சந்திப்பை தவிர்க்க விரும்பவில்லை, அதனால் அவன் பாண்டிச்சேரி என்று சொன்னதும் எதை பற்றியும் யேசிக்காமல் சரி என்றவள், அதை இளாவிடமும் தெரிவிக்கவில்லை.

………………………………………………….

   

  அதிகாலையளவில் இளா கோவை வந்து சேர்ந்தான். வந்தவன் வீடு இருக்கும் தெருவை அடைந்தும் தன் வீட்டில் ஏதோ விஷேசம் மா? என்ன அம்மா எதும் சொல்லவில்லையே?

 

என்னவாக இருக்கும் என்ற நினைப்புடன் வண்டியை ஷெட்டில் விட்டவன், வீட்டுக்குள் வர அதுவரை அவன் வருவானோ? இல்லையோ? என்று தவித்த அவன் அன்னை சற்று மூச்சுவிட்டார்.

 

அவனிடம் வேகமாக வந்தவர் அவனை பேசவிடாமல் மாறா மேல போய் சீக்கரம் கிளம்பிவா, இப்போ எல்லாரும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க, என்றவர் அவன் கேள்விக்கு பதில் அளிக்க அங்கு இல்லை.

 

சரி வந்து பேசிக்கலாம் என்று நினைத்தவன் மேலே செல்ல, அங்கு மாடியில் கவிதாவும், ஆதிராவும் தட்டில் எதையே அடுக்கிக்கொண்டு இருக்க, முதலில் திகைத்தவன் பின், விசில் அடித்தவாரே அவர்களை நேக்கிவந்தவன், அவளை பார்த்து 6 மாதம் ஆகி இருந்து.

 

அன்று காதலை சொல்லிவிட்டு போனவன் இன்று தான் சந்திக்கிறான். அவன் அருகில் வந்ததும் நிமிர்ந்த பெண்கள் அவன் வந்ததின் மகிழ்ச்சியை முகத்தில் காட்ட, அவன் பார்வை என்னவே ஆதிரா மேல்தான். அதை உணர்ந்த கவிதா, அவகளுக்கு தனிமைகொடுத்து கிழே சென்றுவிட, அவன் அதிராவின் கைபிடித்து அவன் அறைக்கு அழைத்து சென்றான்.

 

அவன் அறைக்கு சென்றவன், கதவை தாளிட்டு அவளை அங்கு இருந்து ஷோபாவில் அமர்த்தி, அவள் மடியில் தலை சாய்த்து இருந்தான், கண்கள் முடி.

 

அவன் தலை கோதியவள் ஏதும் கேட்கவும் இல்லை, அவன் ஏதும் பேசவும் இல்லை,   அவர்களின் மௌனம் அவர்களின் அத்தனை நாள் பிரிவையும், அதற்கான ஆறுதலையும் ஒருங்கே தந்தது அவர்களுக்கு.

கீழே வந்த கவிதா, என் மா விஷேசம் இன்னிக்கு என்றாள் சமையல் அறையில் பிசியாக இருந்தவரிடம், அவர் அவளை ஒருமாதிரியாக பார்த்தவர்.

 

ஏன் உன் சீனியர் சொல்லையா? என்றார்?

 

நீங்க தானே கூப்பிட்டு அவர் என்ன சொல்லனும் என்றாள் குழப்பமாக?!

 

அவளை முறைத்தவர், இன்னிக்கு மாறா நிச்சயம் என்றார் அவள் தலையில் இடி இறக்கியது தெரியாமல்!!

 

அதே நேரம் அண்ணன் வந்தது பார்த்து அவனிடம் அண்ணியை பற்றி பேசி அவனை கலாய்க வேண்டும் என்று பின் வந்த வெற்றி கண்டது, கவிதா உடண் வந்த பெண்ணுடன் அவன் அறையில் கதவு அடைத்தைதான்.

 

கவிதாவும், வெற்றியும் அதிர்ந்து நிற்க்க காலம் இவர்களுக்கு என்ன வைத்து இருக்கிறது……………………………………

நிலவு தேயும்………… 

Advertisement