Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

நன்றி

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 16

இளா சிவநேசனை சந்தித்த அதே நேரம், வளவனின் தாய் ஆனந்தியை சந்தித்தனர், ரவி மற்றும் ராகவ் வின் ஆட்கள், அவர்களுக்கு இளா வளவனிடம் தனியாக பேசியது கூறித்து தகவல் கிடைத்து, ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அறியமுடியவில்லை.

ஆனால் அது லேப்டாப் பற்றியதாக இருக்கலாம் என்ற யுகத்தில் அவர்கள் சிவநேசன் மற்றும் இளாவை தொடர்ந்து கண்ணானித்து வந்தனர்.

அதன் படி இன்று சிவநேசன் இளாவை சந்தித்து பேசியதும் அவர்களின் கணிப்பு சரியாக இருக்க, எப்படியும் அதை கைபற்ற முடிவு செய்தனர், ஆனால் வளவன் சென்ன மறைமுக செய்தி அவர்களை அடையவில்லை.

அதனால் அவர்கள் லேப்டாப் பற்றி மட்டுமே செய்தி தெரிவித்தனர்.

அதன் படி அவர் இளாவுடன் இருக்கும் போது, இங்கு ஆனந்தி இடம் அந்த லேப்டாப்பை பற்றி விசாரித்தனர்.

அவருக்கு அதை பற்றிய விவரம் ஏதும் தெரியவில்லை, ஆனால் அவர் அல்லாமல் அதை எடுக்கமுடியாது என்று உணர்ந்தவர்கள்.

அதில் தான் முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகவும், அது கிடைத்தால் தான் இந்த வழக்கை உடைத்து வெளி வரமுடியும் எ்ன்று அவரிடம் கூறினர்.

அவர்களை சந்தேகமாக பார்த்தவர், அதனால் எனக்கு என், அதை நான் தரமுடியாது என்றார்.

அவர்கள் ஏற்கனவே வளவன் குற்றத்தை ஒப்புக்கொண்டால் பணம் தருவதாக கூறியவர்கள். அப்போதே இவர் கண்களில் தெரிந்த ஆசையை அறிந்துக்கொண்டவர்கள்.

இங்க பாருங்கமா இந்த கேஸ்ல இப்ப வரைக்கும் வளவன் தான் முத குற்றவாளி, இன்னும் எங்க மேல யாரும் புகார் கொடுக்கல, இந்த நிலைமைல இந்த கேஸ்ல இருந்து வெளிய வரது எங்களுக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல.

அது எல்லாத்தையும்விட பணம் பத்தும் செய்யும், எங்களா எவ்வளவு வேன பணத்தை செலவு செய்து இதுல இருந்து வெளிய வந்துடுவோம்.

இப்ப நீங்க தரமாட்டேன் சொல்ற இதே லேப்டாப் நீங்க போலீஸ்ல கொடுத்தாலும் எங்களால அதை எடுக்கமுடியும், என்ன அது தலைய சுத்தி மூக்க தொடுற வேல, அதுக்கு நாங்க நிறைய செலவு செய்யனும்.

தேவை இல்லாத தலைவலி, யாரே சாப்பிடப்போற காசு பாதிக்கபட்ட நீ சாப்டா என்ன.

உனக்கு தெரியாது ஒன்னும் இல்லை, எப்படியும் இந்த மாதிரி கேஸ்ல பணக்காரங்க, அரசியவாதிங்க எப்ப மாட்டி இருக்கோம், அப்படியே மாட்டினாலும் அதுல இருந்து வெளியவர எங்களுக்கு தெரியும்.

அதே சமயம் வளவன் தம்பி இதுல எந்த தப்பும் செய்யல அப்படினும் தெரியம், இருந்தும் ஏழை சொல் அம்பலம் ஏறுமா?

அதனால நான் செல்லற கேளு எப்படியும் இதுல வளவன் பேர் கொட்டுபோச்சு, இனி தம்பி விடுதலை ஆகி வந்தாலும் மே ஒர் வேல கிடைச்சு அது சம்பாதிக்கறது எல்லாம் நடக்க விஷயம் இல்ல.

முதல அதுக்கு எவ்வளவு நாள் ஆகும்மே கடவுளுக்கு தான் வெளிச்சம் .

அய்யா முதல இத வேற மாதிரி டீல் பண்ண சொன்னாறு, நான் தான் அந்த வளவன் பாவம், ஏற்கனவே தப்பே செய்யாம அந்த தம்பி ஜெயில் இருக்கு இது இந்த பாவம் வேற நமக்கு வேனா! அப்படி சொல்லி அவரை சரிகட்டி இருக்கேன்.

அந்த காலம் மாதிரி நீதி நியாயம் எல்லாம் பேசுற நேரம் இது இல்ல.

அன்னிக்கு சென்னமாதிரி, உனக்கு 5 கோடி பணமும், வெளியூர் எங்காவது வேலையும் வாங்கி தரோம்.

நீங்க் அந்த போலீஸ்ல கொடுத்தாலும் அது எங்க கைக்கதான் வரபோகுது. அதுக்கு நீயே கொடுத்துடா உனக்கு லாபம் எங்களுக்கும் அலைச்சல் மிச்சம்.

நல்லா யோசிச்சி சொல்லு நாங்க நாளைக்கு வரோம் என்று கிளம்பினர், ஆனந்தின் ஆட்கள்.

அவர் சென்றபின் அதை பற்றி யோசனையில் இருந்தவர், அவர் கணவன் வந்தையோ அவர் அந்த Hard disk எடுத்து அதை தன் புத்த அலமாரியில் பத்திர படுத்தியதையும் கவணிக்கவில்லை.

அவர் எண்ணம் எல்லாம், அந்த 5 கோடியில் இருந்து, அதை தான் வாங்கிக்கொண்டு அவர்கள் கேட்பதை கொடுத்தால் அது தவறா சரியா என்று தன்னுள் விவாத்த்தில் இருந்தார்.

அவர்கள் சென்னபடி இப்போது இருக்கும் நிலையில் வளவன் வெளியே வந்தாலும் அவனுக்கு வேலை கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் அதில் என்ன சம்பளம் வரும்.

அது வரை தங்களை தொடர்புக்கொள்ளாத \ தொடர்புக்கொள்ளமுடியாத அதியன் இந்த விஷயம் கேட்டு அப்படியே அங்கே இருந்து விட்டால்.

என் மகள் நிலை என்னவாகும், அவளுக்கு எப்படி கல்யாணம் செய்து வைப்பேன், இவரை நம்பி நாம் எத்தனை நாளைக்கு இருக்கமுடியும்.

எப்படியும் நீதி நியாயம் எல்லாம் பணம் இருப்பவர்கள் வசம், நான் கொடுக்கலனாலும், அதை யாரோ அவனுங்கிட்ட கொடுக்க போறாங்க, எல்லாம் போய் கடைசில கஷ்டமும் எனக்கே.

இவருகிட்ட சொன்னா வேலைக்கு ஆகாது, நாமலே அதை தேட வேடியதுதான்.

நாளைக்கு அவங்களுக்கு சொல்லி பணத்தை  எப்படி வாங்கறது அப்படினுபாக்கனும்.

இதபத்தி வெளிய எங்கையும் சொல்லமா, நம்ம பெண் சாக்க வெச்சு இந்த ஊரவிட்டு போய்டா, அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு எல்லாத்தையும் சரிபண்ணிக்கலாம் என்ற முடிவுடன் உறங்க சென்றார்.

அடுத்தநாள் இளாவை சந்திக்க முடியவில்லை, அதற்க்கு அடுத்து வளவன் மரனம், இதை போலீஸ் பயன்படுத்தி வளவன் விட்டை சோதனை செய்தால், லேப்டாப் அவர்களிடம் சீக்கிக்கொள்ளும்.

அதனால் வளவன் இறந்த உடன் ஆனந்தன் ஆட்கள் வளவன் வீடு வந்து லேப்டாப்பை தேட தெடங்கினர், இளா ஊரில் இல்லாத்து அவர்களுக்கு வசதியாக போனது.

ஆனால் அவர்கள் எதிர்பார்காத நேரத்தில் சிவநேசன் வந்து, ஆம் அன்று இரவு அவர்கள் வருவார்கள் என்று முன்பே பாலில் தூக்க மாத்திரை கலந்து தன் கனவனுக்கு கொடுத்து அவர் உறங்கிவிட்டால். 

விட்டில் தேடுவது சுலபம் மற்றும் யாருக்கும் சந்தேகம் வராது, அப்படியே கனவன் கேட்டாலும்மே தனக்கு எதும் தெரியாது என்று சொல்லிவிடலாம் என்று நினைத்து அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்தார்.

இந்த கேஸ் விஷயமாக அவர்கள் விட்டை சுற்றி எப்போதும் போலீஸ் மற்றும் பிற நபர்களின் நடமாட்டம் இருப்பதால், அவர்கள் வீட்டில் நூழைவதை யாரும் பெரிது படுத்தமாட்டார்கள்.

தங்களுக்கு தேவையான ஆட்கள் முதல் அனைத்து ஏற்பாட்டையும் செய்த பின் அவர்கள் தேட தெடங்கிட 10 நிமிடங்களில், சிவநேசன் எழுந்து வந்துவிட, இவர்கள் யார் என்று தெரியாமல் பதட்டத்தில் மனைவி எங்கே என்று தேடினார்.

அவர்களை நேக்கியார் நீங்க இங்க என்ன செய்றிங்க என்றவர், கைகள் தன் கைபேசியை எடுக்க அவரை தள்ளிவிட்டவர்கள், அவர் தலையில் அடிக்க அங்கேயே மயங்கு சரிந்தார்.

அவர் சத்தம் கேட்டு விரைவந்து அவர் மனைவி அவர் கீழே கிடப்பதை பார்த்தவர், கத்த முன் அவர் வாய்யை அடைத்தவர்கள். ஒன்றும் இல்லை என்றும். 

அதிர்ச்சி மயக்கம் என்றும், தாங்கள் சென்றபின் மருத்துவமனைக்கு அழைத்து செல், யாராவது கேட்டால் வீட்டில் திருடவந்தார்கள் என்று சொல்ல சொன்றார்கள்.

அவர்கள் தேடிவந்து அரை மணி தேடலுக்கு பின் அவர்களுக்கு கிடைக்க, அதை எடுத்துக்கொண்டவர்கள். அவரை ஆனந்தன் யோசனைப்படி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர்களின் திட்டபடி வளவன் தற்கொலை செய்தி கேட்டு அவர் மயங்கி விழுந்துவிட்டதாக கூற செய்தனர், அவரை அடுத்த சில நாட்களுக்கு மயக்கத்தில் வைத்து இருக்க சொன்னவர்கள்.

இதை எல்லாம் இளா இல்லாத நேரத்தில் முடித்து அதன் பின் மருத்துவமனை பக்கம் செல்லவில்லை.

ஆனால் கெட்டதில் ஒரு நல்லதாக அவர் பத்திரபடுத்தி வைத்து இருந்த நாகல் அவர்கள் யார் கண்ணிலும் சிக்கவில்லை.

இளா வந்தும் அவர் நீண்ட மயக்கத்தில் இருப்பதால் அவனால் அவரிடம் லேப்டாப் பற்றி கேட்டமுடியாமல் போனது.

இதில் அதியன் ஊரில் இருந்து வந்தும் என்ன செய்வது என்று ஆனந்திக்கு தெரியவில்லை, ஒரு வேலை தன் கனவர் முழித்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் தன் நிலை என்ன.

இது எல்லாவற்றிக்கும் தான் தான் காரணம் என்று தெரிந்தால். அது எல்லாவற்றையும் விட வீட்டில் அவர் மறைத்து வைத்து இருக்கும் பணம்!!!!

அவர் நிலை திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக இருந்து.

அதனால் அவர் மருத்துவமனையே கதியாக இருந்தார். கண்விழிக்கும் கணவர் என்ன சொல்வார், அதற்க்கு தான் என்ன சொல்ல வேண்டும் என்பதிலே அவர் சிந்தனை நிலை கொண்டு இருந்து.

இதற்க்கு இடையில் தான் நேத்திராவிடம் பேசியது, அதை அதியன் கேட்டது எல்லாம். ஆனால் எல்லாருடைய பயம்மும் ஒன்னும் இல்லை என்பது போல் அவர் நிரந்திரமாக இல்லாமல் போனார்.

பலர் நிம்மதியாக முச்சுவிடமுடிந்து, ஆனால் யார்ரும் அறியாத ஒன்று அவர் மூச்சு ஆனந்தனால் ஏற்பாடு செய்தமருத்தவரால் நித்தபட்டது. 

அதை அவர் மனைவி ஆனந்தியும் அறிவார் என்பதையும் தான்!!!!!!!!!!!!!!!!

……………………………..

மிகுந்த மன ஊளைச்சில் தன் ஊருக்கு வந்து கொண்டு இருந்தான். தான் இந்த வழக்கு விஷயமாக இந்த ஊரில் இல்லாத நேரத்தை அவர்கள் சரியாக காய் நகர்த்தி தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டதை அவனால் இன்னும் ஏற்க்கொள்ள முடியில்லை.

எல்லாம் என் கட்டுபாட்டில் தான் இருக்கிறது என்று தான் தான் அஜாகிரதையா இருந்துவிட்டோம், என்று பெரும் அழுத்ததில் இருந்தவன், வீடு வந்தால் இருக்கும் நிலை என்ன ஆகும்?

இளாவிற்றகாக நிச்சயவிழா ஏற்பாடுகள் அவன் வீட்டில் தடபுடலாக நடந்துக்கொண்டு இருந்து.

அதற்குகாக காவிதாவை வீட்டிற்க்கு வருமாறு இளாவின் தாய் அவளுக்கு போன் செய்ய, அவர் எதற்க்கு அழைக்கிறார் என்று தெரியாமல் அவர்கள் வீ்ட்டிற்க்கு வருவதாக ஒப்புக்கொண்டால் கவிதா, உடன் அதிராவையும் அழைத்து செல்ல திட்டம்மிட்டால்…………………….

 

நிலவு தேயும்………… 

Advertisement