Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

நன்றி

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 15

அன்று காலையில் இருந்தே இளாவிற்க்கு பெரும் தலைவலியாக இருந்து. இதுவரை வளவன் மரணத்தில் அவனால் ஓரு முடிவுக்கு வரமுடியவில்லை.

அதற்க்குள் சிவநேசன் மரணம், அதுவும் நேற்று இரவு தான் அவரை சந்தித்துவிட்டு வந்தான், அவன் எதிர்பார்த்து போல் அதியன், வெளிநாட்டில் இருந்து வந்த உடன் தன்னை வந்து சந்திப்பான் என்று எதிர்பார்த்தான்.

அவன் வரவில்லை,    ஆனால் அவன் இங்கு வந்ததில் இருந்து அவன் நடவடிக்கைகளை கண்கானித்துக்கொண்டு தான் இருக்கிறான்.

அவன் வளவன் வழக்கு தொடர்பாக சேகரிக்கும் தகவல்களையும் அவன் அறிவான், இந்த நேரம் அவனுக்கு வளவன் மேல் தவறு இல்லை என்பது தெரிந்து இருக்கும், இருந்தும் அவன் ஏன் தன்னை வந்து சந்திக்கவில்லை.

என்று எண்ணியவன் சிவநேசனை பார்க்க போனான், அவரிடம் தான் அவன் வளவனை கைது செய்தபின், அவரை சந்தித்து வழக்கின் உண்மை நிலையை விளக்கி இருந்தான்.

அது மட்டும் இல்லாமல் வளவனை கைது செய்த அன்று இரவு அவனும் இளாவும் பேசிய பதிவையும் அவருக்கு காட்டினான். அதில் வளவன் கூறி இருந்த தகவல்களின் படி அவர் இளாவிற்க்கு உதவுவதாக கூறினார்.

ஆனால் அடுத்த நடந்த வளவனின் மரணம் அவரை மருத்துவமனையில் சேக்கும் படியானது, அடுத்த இருநாட்களுக்கு அவரின் தொடர் சிகிச்சை காரணமாக அவரை அவனால் அனுக முடியவில்லை.

அடுத்தடுத்து இந்த வழக்கில் நடக்கும் சம்பவங்கள் தான் நினைத்து போல் இந்த வழக்கு எடுத்து செல்ல முடியுமா? என்ற எண்ணமே அவனை ஆட்கொண்டது.

எல்லாம் நல்லபடியாக போவது போல் இருந்தாலும் உண்மையில் அப்படி இல்லை, தன் கண்ணுக்கு தொரியாத நூலினால் எங்கோ மெல்ல திசை மாற்றபடுவது போல் உணர்ந்தான்.

தன்னை சுற்றி இருக்கும் ஆட்களே உண்மையானவர்களா என்று அவனுக்கு சந்தேகம் வந்து.

டிஜிபி கூறியது போல் நான் இந்த வழக்கை கோட்டைவிட்டு விடுவேன்னா?

என் கண்ணுக்கு சிக்காத அந்த புள்ளி எது?

என்று பலவாறு மணதின் எண்ணங்களுடன் போராட வேண்டி இருந்து. இதில் சிவநேசன் மரணம் இயற்கை யானதா இல்லையா என்பதில் மிகுந்த குழப்பத்தில் இருந்தான்.

அதை பற்றி அவன் அன்று விவாதித்து க்கொண்டு இருந்த போதுதான், அவன் அம்மா அழைத்து, அவர் எண்ண சொன்னார் என்று கவணத்தில் கொள்ளாது இவன் உறைத்த பதில் அவன், குடும்பத்தையே புரட்டி போடும் என்று அவன் அப்போது அறிந்து அருக்கவில்லை.

……………………………….

நேத்தராவின் கல்லூரிவாழ்க்கை சிறப்பாக இருந்து, அவளின் வழக்கமான செயல்பாடுகளுடன், அவள் நாள்களை மேலும் வண்ணமாக்க அவள் அதிமா இப்போது அவளுடன்.

ஆம் அவள் சிறுவயது விளையாட்டு தோழன், அளின் நலம் விரும்பி, அவள் வாழ்க்கையில் இன்று வரை பின்பற்றும் பல விஷயங்கள் அவன் சொல்லிக்கொடுத்தவை தான்.

சிறு வயதில் அவன் இல்லாத ஞாயிறு அவளுக்கு விடிந்தே இல்லை, அவன் கை பற்றி அவன் சொல்லும் கதைகளை கேட்டபடி அவன் வாங்கி வரும் சாக்லேட்களின் சுவையை இன்றும் அவள் நாக்கில் உணர்வதாய்.

முதலில் அவனை இந்த கல்லூரியில் சந்தித்த போது, இந்த பிரச்சனைகளை அவன் தன்னை என்ன நினைத்துக்கொள்வானோ என்று மறுகியவள், அவனின் அறிமுகத்திலும், இயல்கான பேச்சிலும், தன்னை அவன் புரிந்துக்கொண்டான் என்று மகிழ்ந்து போனால்.

வாழ்க்கையில் இது வரை அனுபவித்த தனிமை இனிதனக்கு இல்லை விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று மகிழ்ந்தும் போனால்.

……………………….

அங்கு அதியன் நேத்ராவை பற்றி தான் சிந்தித்துக்கொண்டு இருந்தான். எவ்வளவு முயன்றும் அவள் மேல் எழும் வன்மத்தை அவனால் கட்டுபடுத்த முடியவில்லை.

அவளின் ஒரு செயலால் தன் குடும்பம் சிதறடிக்கபட்டு விட்டதை அவனால் ஏற்க்கொள்ள முடியாவில்லை. இந்த 3 மாதங்களில் அவன் வாழ்க்கை இப்படி தலைகீழாக மாறும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

அதுவும் அவன் தந்தையின் மரணம், அவனை முற்றிலும் புரட்டி போட்டு இருந்து. தாய்யும், தங்கையும் திசைக்கு ஒருவாராக இருக்கிறார்கள்.

தன் எதிர்காலம், குடும்பம் எல்லாம் ஒரு சிறு பெண்ணின் தவறால், பெருப்பில்லாத தனத்தால் அதை நினைக்க நினைக்க அவனால் அவள் மேல் எழும் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை.

அவன் நினைவுகள் தந்தை இறப்பிக்கு ஓரு வாரம் முன்பு நேத்ரா அவரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தை நினைத்துக்கொண்டு இருந்து.

அவன் அந்த அறையை அடைந்த போது நேத்ரா எல்லாம் என் தவறு தான் மாமா, எனக்கு வளவன் உங்கள் மகன் என்று தெரியாது நேற்று வளவன் தற்கொலை விஷயமும், உங்கள் புகைப்படமும் பார்த்தபின் தான் நான் எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறேன் என்று புரிந்து.

நேற்று நான் உங்களை பார்க்க வேண்டும் என்று கேட்ட போது தான் இளா எல்லாவற்றையும் சொன்னார். என்னுடைய புகார் மற்றும் நான் அன்று அளித்த அந்த விடியோ தான் வளவனை இதில் மாட்வைவிட்டது. 

உண்மையான குற்றவாளிகல் எல்லாம் நன்றாக இருக்க  என்னால் இப்படி ஆகிவிட்டது என்று நினைக்கையில் ரொம்ப கஷ்டமா இருக்குமாமா. என்றவள் அவர் கையை பிடித்த படி அமர்ந்து இருந்தாள்.

அந்த நிமிடம் அவன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை என்ன நேத்ரா தான் அவளா?

அவனின் செல்ல பார்பியா இத்தனைக்கும் காரணம், அதற்கு மேல் அங்கு நில்லாமல் சென்றுவிட்டான்.

டேய் அதி எல்லா ஞாயிற்றுகிழமையும் அவ வீட்டுல என்ன வேலைடா உனக்கும் உங்க அப்பாக்கும், அவ அம்மா அப்பானால என் வாழ்க்கை போச்சு, இவளா யார் வாழ்க்கை போக போகுதே, இத்த வருஷம் இல்லாம மறுடியும் எங்க இருந்து வந்து சேந்தாங்களோ இவங்க!!!!!!!!!!!  

என்ற அம்மாவின் குரல் அவன் காதில் மீண்டும், அம்மா அன்று சொன்னது போல் இவளால் என் குடும்பத்தின் குடிதான் கெட்டுவிட்டது.!!??

என் குடும்பத்தை எப்படி இதுல இருந்து மீட்டு எடுப்பேன், இவளால் நான் என் அப்பாவையும் அண்ணன்னையும் இழந்து தவிக்க, இவள் மட்டும் அவள் வாழ்கையில் மகிழ்ச்சியுடன் இருப்பதா?

நினைக்க நினைக்க அவன் உள்ளம் கொதித்தது. 

அதை தெடர்ந்து அவன் மதுரை சென்று நேத்ராவை சந்தித்த போதும், அவனால் அந்த முகத்தில் தவறு இருப்பதாக நினைக்க முடியவில்லை. தான் ஏதும் அன்று தந்தையுடன் பேசும் போது தவறாக கேட்டுவிட்டோம் மா என்ற எண்ணம் தான் அவனுக்கு.

அதனால் மீண்டும் ஒரு முறை அவளிடம் அவன் வளவனை பற்றி கேட்ட போது அவள் தன் மேல் தான் தவறு என்றும் தான் சற்று நிதானமாக இதில் செயல்பட்டு இருந்தால், இந்த இழப்புகள் ஏற்பட்டு இருகாது என்று கூறியதில்.

அதியன் தன் முடிவில் மேலும் உறுதியாணன். 

ஆனால் அவள் மட்டும் அன்று நடந்தை முழுமையாக அதியன் இடம் கூறியிருந்தால், பெரும் விபரிதங்கள் தடுக்கபட்டு இருக்கும்.

அன்று வளவன் தேவியுடம் பயிற்சி மையத்தில் வைத்து பேசிய பிறகு, தான் நினைக்கும் அளவிற்க்கு நன்பர்களின் தவறு சாதாரணமானது இல்லையோ என்று தோன்றியது.

அன்று இரவே அனைவரும் கிளம்பியபின் அவன் மையத்தில் இருக்கும் கணிகளையும் மற்றும் அங்கு இருக்கும் மற்ற கோப்புகளையும் ஆராய்ந்தில் அவனுக்கு கிடைத்த தகவல்கள் தான் எப்படி பட்ட இடத்தில் சிக்கி இருக்கிறோம் என்பதை உணர்த்தியது.

அவனுக்கு கிடைத்த தகவலின் படி கனிணியில் நிறைய தகவல்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம், என்று நினைத்தவன், ரெக்கவரி மென்பொருள் மூலம் அனைத்தையும், மீண்டும் சேகரித்தான். 

தேவையான எல்லாவற்றையும் எடுத்தவுடன் முக்கியமான் இரு லேப்டாப்பை மட்டும் வீட்டுக்கு எடுத்து வந்து இருந்தான், அதில் மேலும் அவன் ஆராய்ந்து பார்த்தில், இதில் ஈடுபட்டு இருந்த அனைவரின் தகவல்களும் அவர்களின் நெட்வர்க்  மற்றும் அவர்களின் தகவல் பறிமாற்றங்கள். 

என எல்லாம் காண காண ஒரு சக மனிதானய் அவன் கெதி்த்துதான் போனான்.

ஒரு வேளை நேத்தரா புகார் அளிக்கவில்லை என்றாலும், இது எல்லாவற்றையும் வைத்து அவன் கண்டிப்பாக இவர்களை சிக்க வைத்து இருப்பான், ஆனால் அவன் தயங்கி நின்றதற்க்கு ஒர் காரணம் ஒரு வேலை இவையனைத்தும் தவறானவன் கையில் கிடைத்தால், அதனால் தனக்கும் தன் குடும்பத்திற்க்கு ஏற்படப்போகும் நிலையை அவன் அறிவான்.

ஏன் எனில் அவல்களின் செயல்பாடுகள் அத்தனை மனித தன்மை யற்றதாக இருந்து.

இதி்ல் நேத்ரா புகார் அளித்து அவனுக்கு அதிர்ச்சி என்றால், அதில் அவனே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டது அவனுக்கு ஜீரனிக்கமுடியாத ஒன்று. 

அதில் இருந்து அவன் வெளிவந்து நிலையை உணரத்தொடங்கியதும் தான் இளா அவனிடம் பேசியது, அதில் அவனுக்கு நம்பிக்கை வந்து.

அவன் சேகரித்து வைத்த தகவல்கள் மற்றும் அது இருக்கும் இடம் பற்றி தன் தந்தை புரிந்துக்கொள்ளும் படி ஒரு செய்தியும் கூறினான், அவன் கூறியவற்றை கேட்ட இளா எல்லாம் பக்காவாக இருக்க இந்த வழக்க சீக்கரம் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்து இருக்க, அவன் நினைத்தற்க்கு மாறா எல்லாம் நடந்து.

இளா கைது செய்யபட்டவுடன், அங்கு கைபற்றபட்ட பெருட்களில் அவர்களின் லேப்டாப் இல்லை என்பதை அறிந்து கொண்டனர், உடனே அவர்கள் வாச்மேனிடம் விசாரிக்க பார்ட்டி நடந்த இரவு வளவன் திரும்பி வந்ததையும், அவன் செல்லும் போது பையில் ஏதே எடுத்துச்சொன்றதையும் கூறினான்.

உடனே அவன் வீட்டிற்க்கு சென்று போசுவது போல் அவன் வீட்டில் உள்ளவர்களிடம் இது தொடர்பாக ஏதாவது கூறியிருக்குறான என்று அறிய முற்பட்டனர், ஆனால் அவர்கள் பேசியவரை அவர்களுக்கு ஏதும் தெரியவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டனர்.

ஆனால் அவன் லேப்டாப்பை கண்டிப்பாக வீட்டில்தான் வைத்து இருக்கிறான் என்று உறுதி செய்தனர்.

அதே சமயம் வளவன் அந்த லேப்டாப் பற்றியும்  தான் வளவன் அப்பாவிடம் இளா கூறிக்கொண்டு இருந்தான்,அவரும் வளவனின் கானொளியை முழுமையாக கண்டதவர், இளாவிற்க்கு உதவுவதாக கூறினார்.

அவர் வீடு வந்த இரவு வளவன் கூறியபடி அவன் அந்த சேகரித்த      தகவல்கள் தனியாக ஒர் இடத்தில் பத்திரபடுத்தியவர், லேப்டாப்களை மட்டும் இளாவிடம் ஒப்படைக்க முடிவு செய்தார் வளவன் கூறியபடி.

ஆனல் அடுத்த நாள் இளா வேலூர் செல்லவும், சிவநேசனால் அதை செய்ய முடியவில்லை. ஆனால் அவருக்கு ஏதோ தவறாக பட்டது. அதனால் அந்த copy hard disk தனியாக எடுத்து அதை அதியன் அறிந்துக்கொள்ளும் படியான இடத்தில் வைத்தவர். 

இளா கூறியபடி வளவன் மற்றும் நேத்ரா பற்றியும் ஒர் கடிதம் எழுது அதை சுற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்தவர். உறங்க சென்றார், ஆனால் அவர் அப்போது அறியவில்லை அவர் மகன் மட்டும் அல்ல அவரும் துரோகத்தினால் வீழ்த்தப்படுவார் என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!! 

அதுவும் உறவுகளால்…..!!!!

 

நிலவு தேயும்………… 

Advertisement