Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

நன்றி

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 14

ஆம் அவன் சொன்ன யேசனை இது தான், விசாரனை கைதிகள் இருக்கும் இடத்தில் அவர்கள் இருக்கும் அறையில் அருகில் இருக்கும் சுவிச் போர்டு இல் கை வைத்து,  மின்சாரம் பாய்ந்து போல் நடிக்க வேண்டும்.

அப்போது அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கேயே எப்படியாவது சிறிது நாட்கள் தங்குவது போல், நடத்து கொள்ள வேண்டும்.

இதற்குள் ஆனந்தன் இன்னும் ஒர் இரு நாளில் தன் நன்பன் மூலம் இது மாதிரி வழக்குகளில் சீக்கிகொள்பவர்களுக்கு என உதவ நிறைய வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளது. 

அவர்கள் மூலம் தான் தன் நன்பன் தனக்கு உதவுதாக கூறியவன், தான் வெளிவந்து   வளவனையும் வெளிக்கொண்டு வருவதாக ஆனந்தன் அவனை பலவாரு பேசி சம்மதிக்க வைத்தான்.

அதன் படி அன்று இரவு படுக்க சொல்லும் முன், அவன் அங்கு இருக்கும் காவலர்கள் மற்றும் அவர் இருக்கும் இடம், என எல்லாவற்றையும், கவணிக்க ஆரம்பித்தான். அடுத்த இரு நாட்களுக்கு அவனுக்கு துனையாக ஆனந்தனும் இருந்தான்.

இளா மாலையில் வேலூர் செல்வதாகவும் ஏதேனும் அவசரம் என்றால் எனக்கு தெரியபடுத்துமாறும் கூறிவிட்டு சொன்றான்.

இளா வெளியூர் சென்ற அன்று அவர்கள் திட்டம் மிக அழகாக அரங்கேற்றப்பட்டது. இளா வெளியேறி சிறிது நேரத்தில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது, அதன் பின் அவர்கள் அங்கு இருக்கும் கழிவறைக்கு சென்று வந்தனர்.

வந்தவர்களை மறுபடியும்  செல்லூக்குள் அடைக்க ஒரு காவலர் மட்டும் அங்கு இருக்க, பணியில் இருந்த மற்ற இருவரையும் ஏதோ பேசி திசை திருப்பி இருந்தார். அவர்கள் ஏதோ வழக்கு பற்றி பேசிய படி பழைய ரேக்காடுகளை எடுக்க அந்த அறைக்கு செல்ல. 

அந்த நேரத்தை சரியாக பயன்படுத்திய ஆனந்தன், வளவனுக்கு கண்காட்டினான், வளவன் கை வைத்தவுடன் ஆனந்தன் மற்றவர்களை கத்தி கூச்சல் போட்டு மற்றவர்களை அழைக்க வேண்டும், என்பது தான் அவர்கள் திட்டம் (வளவனுக்கு சொல்லபட்டது).

ஆனால் வளவன் அதில் கை வைத்தும், அந்த காவலரும் மற்றும் ஆனந்தனும் மறுபடியும் கழிவறை நேக்கி சொன்று இருந்தனர். வளவன் அதிர்ச்சியில் தனக்கு என்ன நடக்கிறது என்று உணரும் முன்னே அவன் மெல்ல அடங்கிக்கொண்டு இருந்தான்.

அவன் மற்றும் ஒரு முறை நம்பிக்கை துரோகத்தால் தன் வாழ்க்கை பயனத்தை முடித்து இருந்தான். அதன் பிறகு முழுவதும் அவன் துடிப்பு அடங்கிய பிறகே அவர்கள் அவன் இடம் வந்தனர்.

அதன் பிறகு அவர்கள் அவனை மருத்துவமனை கொண்டு சென்ற போது அவன் இறந்துவிட்டதாக கூறினர்.

இளா செய்தி கேட்டு உடனே சென்னை வந்தவன், மருத்துவரை சந்தித்து, வளவனது பிரதேபரிசேதனை அறிக்கை பற்றி விவாதித்துக்கொண்டு இருந்தான்.

அவர் வளவன் உடம்பில் எந்த காயமே, இல்லை அவனை வற்புறுத்திவே இல்லை, இறப்பதற்க்கு முன் உண்ட உணவு அவன் வயிற்றியில் இருந்து.

அதில் விஷம்மே, மயக்க மருந்தே இல்லை, என்றவர் இது தற்க்கொலையாக இருக்கதான் வாய்ப்பு அதிகம் என்றார்.

அதற்கு ஏற்றது போல் அவன் சிசிடிவி புட்டேஜ்களில், அந்த காவலரும், வளவன் மற்றோரு கைதியும், கழிவறை செல்வதும், பின் சிறிது நேரத்தில் வளவன் மட்டும் வருவதும், சுற்றும் முற்றும் பார்த்தவன், தானாக சென்று எலட்ரிக் போர்டில் கைவத்துதான் பதிவாகி இருந்து. அதற்கு முன் மற்ற இருவர் டாக்குமொன்டு அறைக்கு செல்வதும், தெளிவாக இருந்து.

அதில் எந்த விதமான தவறும் இருப்பதாக தெரியவில்லை, எவ்வளவு முயன்றும் வளவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று அவனால் முடிவு வரமுடியவில்லை.

ஆனால் அவன் ஆனந்தனை பற்றி விசாரிக்காமல் விட்டதுதான் அவன் செய்த தவறு, அவன் ஏதோ பெட்டிக்கேஸ் வந்திருப்பதாக இருந்ததால் அவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் அவனுக்கு 100% நம்பிக்கை இருந்து கண்டிப்பாக வளவன் தற்க்கொலை செய்யவில்லை, ஆனால் அதேசமயம் அவனால் அவன் ஏன் இப்படி நடந்துக்கொண்டான் என்றும் ஒர் முடிவுக்கு வரமுடியவில்லை.

அதனால் தான் அவன் நேத்ரா கேட்ட போது கூட சிவநேசனை சந்திக்க வேண்டாம் என்றான்.

…………………………

 ஆனால் அவள் அதை பற்றி தெரியாமல், எப்படியாவது சிவநேசனை சந்தித்து தன் தரப்பை விளக்க வேண்டும் என்று நினைத்தால், தனக்கும் சிவநேசன் மாமாவிற்க்கு இருக்கும் உறவுமுறையை இளாவால் புரிந்துக்கொள்ள முடியாது என்று நினைத்தால்.

அதனால் தான் இளா ஊரில் இல்லாத போது அவரை சந்திக்க நினைத்து மருத்துவமனை சென்றாள்.

அவன் சிவநேசனை சந்தித்து தன் நிலையை விளக்கவேண்டிய அவசியமே இல்லாமல், அவராகவே இளா சொன்னவற்றை சொன்னவர், இதில் வளவன் எப்படி சிக்கினான் என்பதையும் கூறினார். 

இது எல்லாம் ஏற்கனவே இளா கூறியிருந்தாலும், எதிலும் கூறுக்கிடாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள்.

என்னை மண்ணிச்சிருங்க மாமா தப்பு என்னோடது தான், இதை பத்தி சரியா விசாரிக்காம, புகார் கொடுத்துடேன். எல்லா பிரச்சனையும் என்னால தான், 

என் தப்பு தெரிஞ்சி இளா கிட்ட பேசினப்ப இப்ப நம்ம ஒன்னும் பண்ணமுடியாது, நாம வளவனுக்கு ஆதரவா எதாவது செய்தால் மற்ற இரண்டு பேரும் தப்பிச்சுருவாங்க, அதனால வளவன் கொஞ்ச நாள் உள்ள இருக்கடும், அப்படினு செல்லிடாங்க.

இவர்களின் இந்த பேச்சின் போது கடைசியில் வந்த அதியன் கடைசி பகுதியை மட்டும் கேட்டுவிட்டு, இவர்கள் மேல் உள்ள தப்பை மறைப்பதற்காக தன் அண்ணை கொன்று விட்டதாக எண்ணினான்.

அதன் பின் இளாவை சந்திக்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டவன், இருவரையும் கண்ணானிக்க துவங்கினான்.

அதன் பயனாக நேத்ரா தன் வாழ்நாளில் மீளமுடியா துன்பத்தில் சிக்கவிருக்கிறாள், என்பதை அவள் அறியவில்லை.

………………….

நேத்ரா மதுரை வந்து 3 மாதம் முடிவடைந்துவிட்டது. 

ஒர் அளவு அவள் கல்லூரி வாழ்க்கையின் அன்றாட முறைகள் அவளுக்கு பழகி இருந்து.

அவள் அதிக மதிப்பெண் எடுத்தும் மதுரையை தேர்ந்து எடுத்தால் அவள் தோழிகள் யாரும் அவளுடன் இல்லை. இங்கு பெரியதாக நட்பு வட்டம் இல்லை என்றாலும், எல்லாருடனும் சகஜமாக இருந்தால்.

அவள் பார்டைம் வேலை படிப்பு, ஹஸ்டல் என்று அவள் நேரம் இறக்கை கட்டி பறந்து.

இளாவிடம் அடிக்கடி தெடர்புக்கொண்டு வழக்கின் நிலவரம் அறிந்துக்கொள்வாள்.

மற்றபடி எல்லாமே இலகுவாக போய்க்கொண்டு இருந்து.

………………………..

கோவையில் இளாவின் வீட்டில் அவன் தந்தை காலை நேர உணவின் போது, இளாவிற்க்கு தன் நன்பன் மற்றும் பிசினஸ் பார்டனர் மகள் ராகவியை திருமணம் முடிக்கலாம் என்று தன் மனைவி மற்றும் வெற்றியிடமும் கூறிக்கொண்டு இருந்தார்.

அவருக்கு மகன் தன்னுடன் தொழிலில் இல்லை என்பது பெரிய வருத்தம். அதனால் தன் நன்பரின் மற்றும் பார்ட்னரின் ஒரே மகள் மகள் அவன் தரப்பில் பிசினஸ்சை பார்த்துக்கொள்கிறாள்.

மகன் தான் இல்லை மருமகளாவது தன்னுடன் தொழிலில் இருக்கட்டடும் என்று நனைத்தவர் அவ்வாரு முடிவேடுத்தார்.

ஆனால் தன் முடிவை சம்பந்த பட்ட மகனிடம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அவர் எண்ணவில்லை. எப்போதும் காவல் துறையில் விரைப்புடன் சுற்றும் மகன், ஒரு பெண் மீது காதல் கொள்வான் என்று அவர் எண்ணவில்லை.

அப்படியே இருந்தாலும் மகன் யாரையாவது காதலித்தால் தனக்கு தெரியாமல் இருக்காது என்று நினைத்தார். ஆம் என்னதான் மகன் மீது கோவம் இருந்தாலும், மகனின் பாதுகாப்பிற்காக, அவனை பற்றி அனைத்து விஷயமும் அவர் பார்வைக்கு வந்துவிடும்.

அவருக்கு தெரிந்தவரையில் மகன் யாரையும் காதலிக்கவி்ல்லை, ஆனால் மகன் தன் காதலை தன் காதலியிடம் உறுதி செய்த அன்றே வேலை காரனமாக சென்னை சென்றுவிட்டான். 

அதனால் அவன் ஆதிரா உடனான சந்திப்புகள் நிகழவாய்ப்பு இல்லாமல் போனது, மேலும் அவன் கிளம்பும் அன்றும் அவர்கள் தங்கி இருக்கும் வீட்டில் தான் அவர்கள் சந்திப்பு நிகழ்ந்து, அதனால் அது அவன் தோழி கவியை கான சென்றதாக கருதப்பட்டது.

கவியுடன் இருக்கும் அவனது நட்பு அனைவரும் அறிந்து தான் அதனால், அவன் அன்று அங்கு சென்றதை கணக்கில் கொள்ளவில்லை.

சென்னை வந்த பிறகும் கூட வழக்கு காரணமாக அவன் ஆதிராவை தொடர்புக்கொள்ளவில்லை.

அதனால் அவன் காதல் விஷயம் அவன் வீட்டினர் கவனத்திற்க்கு வராமல் போனது. அதனால் தான் அவன் தந்தை அவன் திருமணத்தை உறுதி செய்யலாம் என்று தன் மனைவி மற்றும் மகனிடம் கூறினார்.

ஆனால் பத்மினி மகனிடம் கேட்டவில்லையா என்று கனவரை கேட்க அவர் பத்மினியையே கேட்கும்படி கூறிவிட்டார்.

பெண் மிகவும் அழகாக இருந்தால் அதில் அனைவருக்கும் பரம திருப்பதி. அவரும் கணவரிடம் பேசுவதாக கூறினார்.

அன்று இரவே இளாவிற்க்கு அழைக்கவும் செய்தார், ஆனால் அன்று தான் அவன் வளவன் தற்க்கொலை செய்துக்கொண்ட தகவல் கிடைத்து சென்னை விரைந்துக்கொண்டு இருந்தான்.

அதனால் அம்மாவின் அழைப்பை ஏற்கவில்லை பல முறை முயன்றவர், அவனின் வாட்ஸ் அப்பில் பெண்ணின் தகவலும் மற்றும் புகைப்படம் அனுப்பிவிட்டு, அவன் பார்த்துவிட்டு கூப்பிடுவான் என்று இருந்தார்.

ஆனால் அவன் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை என்று அவர் அறியவில்லை.

இரண்டு நாள் கழித்து கணவர் கேட்டதிற்க்கு, அவர் என் பதில் சொல்லவது என்று தெரியாமல் தவித்தவர், இன்று எப்படியும் இளாவுடன் பேசிவிட வேண்டும் என்று எண்ணினார்.

அதன் படி அவர் அன்று இரவு இளாவிற்க்கு அழைப்புவிடுக்கும் போது, அவன் அதை எடுக்கும் சூழ்நிலையில் இல்லை. இருந்து பல முறை அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தால். 

எடுத்தவன் முக்கிய வேலையாக இருப்பதாக தானே அழைப்பதாகவும் சொன்னான். அதற்கு அவன் அன்னை அவன் திருமணம் பற்றி சுறுக்கமாக கூறி பெண்ணின் புகைப்படம் மற்றும் விவபரங்கள் அனுப்பி இருப்பதாக கூற அதை கேட்க வேண்டியவனோ அருகே இருந்த காவருடன், பேசிக்கொண்டு இருந்தான்.

மறுபடியும் அவன் அம்மாவிடம் காதை கொடுத்த போது உணக்கு எல்லாம் பிடிச்சி இருக்கா இளா என்ற வார்த்தையை தான். 

அதற்கு அவன் தான் இங்கு இருப்பதால் அன்னை அப்படி கேட்கிறார் என்று நினைத்தவன், ம்ம் மா எல்லாம் ஒகே நீங்க அங்க பாத்துக்கோங்க தான் இந்த வாரம் வரேன் என்றான்.

ஏன் என்றால் அவனுக்கு ஆதிராவை சந்திக்க வேண்டி இருந்தது. அவனுக்கு நிறை விஷயம் தெளிவு படுத்தவேண்டி இருந்து. 

ஆரம்பத்தில் மிகவும் சுலபமாக இருந்த வழக்கு, வளவன் இறப்பிற்க்கு பிறகு சிக்கல்லானது என்றால்.

இப்போது அவன் தந்தை சிவநேசன் மரணத்திற்க்கு பிறகு திசை மாறுகிறது!!!!!!!!!!!!!!   

அவன் பேச்சை அவன் திருமணத்திற்க்கு சம்மதித்துவிட்டான் என்று நினைத்த அவன் அன்னை, அவர் கணவனிடம் கூற அவர் அவன் வரும் நாளில் நிச்சயத்தை ஏற்பாடு செய்தார்!!!!!!!!!

.

நிலவு தேயும்………… 

Advertisement