கீதாவின் சித்தி வீட்டினர் உள்ளே வந்து உட்கார்ந்து விஜயன் போன் பேசுவதை கவனித்தனர். அவன் சற்றே குரலை மாற்றி பேச திகைத்தனர்.
மறுபுறமோ கீதாவின் அம்மா, “என்னடா விளங்காதவனே? போன்னை எடுக்க இவ்வளவு நேரமா? உன் பொண்டாட்டிகிட்ட சொல்லி ஒரு ஐம்பது அறுபது பேருக்கு டீயோ, காபியோ போட்டு ரெடியா வைய்யி. நாங்க எங்க அண்ணமுட்டுல இருந்து கிளம்பிட்டோம்” என திமிராக பேச
“யேன் பொண்டாட்டி இன்னும் எழுந்து வர்ல. வந்தா கழனி தண்ணிய போட்டுவைக்க சொல்றேன் வாங்க” என சொல்லி பட்டென போனை வைத்தவன், திரும்பி கீதாவின் சித்திய பார்த்து “என்ன நடக்குது இங்க? ஒழுங்கு மரியாதையா சொல்லுங்க!” என மிரட்ட
“இதென்ன கொடுமையா இருக்கு? எங்க புள்ளைக்கு வளையல் அடுக்கி சோறு ஆக்கிபோட வந்த மரியாதை இல்லாம நடந்துக்கிறிங்க?” என தெனாவெட்டாக கேக்க
“ஓ… வளைகாப்பு பண்ண போறிங்க.. செய்யிங்க.. ஆனா அதை முன்னாடியே எங்ககிட்ட சொல்லியிருந்தா மண்டபத்துல மூணாவது குழந்தை பெற்றெடுக்கும் எங்கள் குலவிளக்கேன்னு உங்க பொண்ணோட முழு போட்டோ போட்டு பேனர் வச்சி ஆயிரம் பேர கூப்பிட்டு அன்னதானம் பண்ணியிருப்பேனே! இப்போ எங்க பக்கம் யாரையுமே கூப்பிடலையே? தெரிஞ்சா எல்லாரும் கோவிச்சுப்பாங்களே!!”
“ஆண்டவா நீதான்பா இன்னைக்கு எல்லோரையும் காப்பாத்தனும்” என நக்கலாக சொன்னான் விஜயன்.
“ஆமாம் இந்த மூட்டை எல்லாம் என்ன?” என்று மீண்டும் ஆரம்பிக்க
“அதுவந்து…மளிகை சாமான், காய்கறி, பழம்” என மென்னு முழுங்கியபடி கீதாவின் சித்தி மழுப்ப
“யாரு லிஸ்ட் குடுத்தாங்க? உங்களுக்கு எப்ப சொன்னாங்க?” என அவன் விசாரணையை துவக்க,
திருதிருத்தபடி “மாப்பிள்ளை அக்கா நாலஞ்சு நாள் முன்னாடியே வந்து சொல்லிட்டு லிஸ்ட் குடுத்துட்டு போச்சு.” என்க
“சமையலுக்கு யாரு வர்றாங்க? எப்போ வருவாங்க?” என கேக்க
“ஏங்க மாப்பிள்ளை விளையாடறீங்க? வீட்டுல ஒருத்திய வெட்டியா வச்சிக்கிட்டு சமையலுக்கு ஏன் தண்டமா ரெண்டு, மூணாயிரம் அழுவனும்? உங்களுக்கு இன்னும் விவரம் பத்தலைன்னு கீதா சொல்றது நூறு சதவீதம் உண்மைதான் போங்க” என எரிந்து கொண்டிருப்பதில் எண்ணெய் ஊற்ற,
“வெட்டிய திண்ணைய தேய்க்கிற உங்க மண்ணு ச்சி உங்க பொண்ணு கீதா சமையலா இன்னைக்கு? பேஷ் பேஷ்…ரொம்ப நல்லா இருக்கும் ஆஸ்பத்திரிக்கு வருமானம்” என விஜயன் கேலியாக கூற
“ஏய் வாய மூடு. மாப்பிள்ளைகிட்ட என்ன பேசற?இங்க இத்தனை பொம்பளைங்க இருக்கும்போது எதுக்கு சமையலுக்கு தனியா ஒரு ஆளு? அதைதான் உங்க மாமியாகாரி இந்த லட்சணத்துல சொல்றா….ங்க மாப்பிள்ளை. எங்க உங்க தம்பி சம்சாரம் இன்னும் எழுந்து வர்லிங்களா?” என வாழைப்பழத்தில் ஊசி ஏற்ற
“வளையல் அடுக்கிக்க ஆசப்பட்ட பொம்பளையே இன்னும் முழிக்கல. படுக்கையில உருளதண்டம் போடறா…! இதுல அடுத்தவங்கல பத்தி நமக்கு என்ன கவலை? வாங்க இந்த காய்கறி எல்லாத்தையும் இந்த பாயில பிரிச்சி வைப்போம்” என அந்த மனிதரை கூட்டிச் சென்றான் விஜயன்.
“ஐய்யோ அந்த பொண்ணு இன்னும் எழுந்து வர்ல போல! அது எப்போ எழுந்து எப்போ காபி குடுக்கும்? இந்த ராட்சசி வேற காபி குடுக்காம, இங்க கீதா கொழுந்தன் பொண்டாட்டி அருமையா காபி போடுவான்னு இழுத்துக்கிட்டு வந்துட்டாளே” என மனதினுள் புலம்பியபடி வாசற்படியை அப்பப்போ நிமிர்ந்து பார்த்தபடி காய்களை பிரித்தார் அவர்.
அவர் வாசற்படியை அடிக்கடி பார்ப்பதை வைத்தே காரணம் அறிந்த விஜயன் தனக்குள் சிரித்தபடி தன் செல்போனை கையில் எடுத்து ஏதோ தகவல் வந்ததை பார்த்து, “இனிதான்டி நிறைய இருக்கு உனக்கு” என வன்மமாக சொன்னான்.
“என்ன சொன்னிங்க? எனக்கு ஒன்னும் புரியல” என அந்தாள் பதற, சிரித்த விஜயன், “ இது வேற கணக்கு. திடீரென ஞாபகம் வந்துச்சு. ஏதோ உளறிட்டேன். நீங்க வேலையை பாருங்க” என சொல்லவும், கீதா அம்மா உறவினர்களை கூட்டிட்டு வரவும் சரியாக இருந்தது.
டிராவல்ஸ் வண்டியில இருந்து இறங்கியபடி, “மாப்பிள்ளை எங்க அந்த கழுத? டீ, காபி போட்டு வைக்க சொன்னேன். ரெடி பண்ணிக்கிட்டிருக்காளா? கொண்டு வரச்சொல்லுங்க. வயிறு கபகபங்குது.” என கட்டளை இட்டபடி வர விஜயன் மரம் போல அசையாமல் நின்றான்.
“வந்தவங்கள வந்து வாங்கன்னு கேட்டுட்டு போய் அதை எடுத்துட்டு வரச் சொல்லுங்க” என சொல்லி உட்கார,
வாங்கன்னு கேட்காமல், ஒன்றும் பேசாமல் மருமகன் நிற்க, கீதா முன்பே பிரச்சனையை ஆரம்பித்து விட்டாள் போல என நினைத்தவர், தானும் கோல்போட நினைத்து,
“எங்க அந்த கழுதை இன்னமும் எழுந்து வரலையா? என்ன படிமானத்தை பழக்கி வச்சிருக்காங்க? இவள நம்பி எப்படி மாப்பிள்ளை உங்க பசங்கள விட முடியும்?” என்க
“ஏன் உன் பொண்ணு என்ன புடுங்க போறா புள்ளைங்கள பார்க்காம?ன்னு யாராவது கேக்க மாட்டாங்களா”ன்னு வந்தவர்களை திரும்பி பார்த்தான் விஜயன்.
அதையறியாத கீதாவின் அம்மா, “ஆகா ஒர்க்அவுட் ஆகுது கண்டினியூ பண்ணலாம்” என திரும்ப ஆரம்பித்தார்.
“அவளுக்கு பொறாமை.. அதான் எழுந்து வராம படுத்து கிடக்கா. நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க மாப்பிள்ளை, அந்த தறுதலையை அத்துவிட்டுட்டு ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி கூட்டிட்டு வந்துடலாம்” என கொக்கரித்தவர்
சுஜா, ஜெய்யின் அறை கதவுகளை படபடவென தட்டி ஆரம்பித்தார். தட்டும் கைகளுடன் போட்டி போட்டன அவர் வார்த்தைகள்.
“ஏய் எருமை மாடே எழுந்து வாடி! தறுதலை நாயே உன்னை சொல்லி குத்தமில்லை, உன்னைத்தான் கட்டிட்டு வரனுமுன்னு அந்த நாதாரி அடம்பிடிச்சி கட்டிட்டு வந்தா இங்க நீயே அரசாளலாமுன்னு கனவு வேணா காணலாம். நானிருக்கும் வரை அது நடக்காது” என பொரிந்தபடி தட்ட கதவு திறக்கப்படவே இல்லை.
சுஜா உள்ளே இருப்பதாய் நினைத்தே அவர் தட்ட, உள்ளே உடனிருந்த மாமியாரிடம் கீதா,
“ திறக்காதிங்க அத்த.. அந்த கழுத நல்லா திட்டு வாங்கட்டும். நாம திட்டினா உங்க மகன் நம்மல உண்டு இல்லைன்னு ஆக்கிடுவார். காது குளிர கேளுங்க” எனச் சொல்லி அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு என்ன பிரச்சனை? அந்த குரங்க ஓட்டி விட்டுட்டு கிளி மாதிரி உங்க பேச்சிக்கு மறுபேச்சி பேசாத அடக்கமான பொண்ண நான் பாத்து கட்டி வைக்கிறேன்.” என வந்த காரியம் இப்படி ஈசியா முடிஞ்சிடுச்சி கீதா பயந்ததுபோல இல்லைன்னு பெருமூச்சு விட
“பேச்சி மாறக்கூடாது நீங்க. இதுக்கு நீங்க எல்லோரும் சாட்சி. உள்ள இருக்குற குரங்கை துரத்தி விட்டுட்டு ச்சீ அத்துவிட்டுட்டு யேன் பேச்சிக்கு மறுபேச்சி பேசாத பேரழகிய எனக்கு யேன் மாமியாரே கட்டி வைப்பாராம். பேச்சி மாறினா இனி இந்த வாசப்படியை நீங்க மிதிக்க கூடாது.” என கட்டளை போல சொன்னவன்
“கதவை திறங்க.. திறந்து ரெண்டு பேரும் வாங்க வெளியே” என்க, வருபவர்களை எகத்தாளமாக பார்த்து கீதா அம்மா நிற்க, “வாம்மா தறுதலை! உங்கம்மாவே ஏழு மணிவரைக்கும் தூங்கினா , குடும்பத்துக்கு ஆகாதது, அத்து விடனுமுன்னு சொல்லியாச்சி. இப்படி இருந்தா யேன் குழந்தைங்கள எப்படி பாத்துப்பன்னு கேள்வி வேற கேட்டாங்க நீயே பதில சொல்லும்மா இன்றைய கதாநாயகியே”
“இந்த தறுதலைதான் வேணுமுன்னு இவங்க வீட்டுக்கு போன நீங்க நாதாரியாம் அம்மா. உங்க நிஜபேரைவிட புது பேர் சூப்பர்” என விஜயன் சிலாகிக்க பேந்த பேந்த முழித்தனர் அனைவரும். இப்படி தங்களுக்கே பேக் பையர் ஆகுமுன்னு நினைக்கல போல..
“உங்க பொண்ண திட்ட உங்களுக்கு உரிமை இருக்கு. அடுத்தவங்க பொண்ண திட்ட நீங்க யாருங்கத்த..? இங்க நீங்க அரசாளலாமுன்னு கனவு காணலாமா அத்த? அப்புறம் கனவு காணகூட கண்ணில்லாம பண்ணிடுவேன் பாத்துக்கங்க.”
“இனி வந்தா வாசலோட போயிடனும் வீட்டுக்குள்ள வரலாம், கலகம் பண்ணலாமுன்னு நினைச்சிங்க ஊரு போய் சேரமாட்டிங்க புரிஞ்சிதா? ஏற்கனவே ஒரு தடவை ராத்திரியோட ராத்திரி தொரத்தி விட்டேன் ஞாபகம் இல்லையா? இல்ல ஒரம்பரை முன்னாடி பேசமாட்டேன்னு தைரியமா அத்த..?” என விஜயன் பாய்ந்து வர
குறுக்கே வந்த மகேஷ், “அண்ணா விடுங்க. அவங்க ஏதோ தெரியாம…” என சொல்ல
“தெரியாமயா? அதெல்லாம் நல்ல தெரிஞ்சேதான் சொன்னாங்க. உள்ள இருக்குற பொண்ண அத்துவிட்டுட்டு வேற பொண்ண பாத்து கட்டி வைக்கறாங்கலாம். அவங்க பொண்ண இப்பவே அத்து விட்டுட்டு வேற பொண்ணு பாக்க சொல்லு.. இந்த ஏழரைகூட இனிமே குடும்பம் நடத்த முடியாது” என மூச்சிவிடாம கத்த
“யாரிருந்தா என்ன? உங்க பொண்ணுக்கு ஒரு நியாயம், ஊரான் பொண்ணுன்னா வேறையா? மரியாதை குடுத்தா இங்கே மரியாதை கிடைக்கும்” என கடுமையாக சொல்ல
“ஆமா அவ எங்கே? இவ்வளவு நேரமாச்சி வாங்கன்னு கேக்கல.. தண்ணி, காபி எதுவும் குடுக்கல.. கால டிபன் என்ன பண்ணியிருக்கா? நாங்க எல்லாம் கொல பசியோட வந்திருக்கோம்.. பரிட்சைதான் முக்கியம்னு கிளம்பிக்கிட்டு இருக்காளா?” என வரிசையாக அடுக்க,
மகேஷை பார்த்த விஜயன், “எங்கடா அடுப்பு?” என்க
“அண்ணா மொட்டையா அடுப்பும் ஒரு நூறு பேருக்கு சமைக்க பாத்திரமும் நம்ம வீட்டுக்கு கொண்டு வான்னு மெசேஜ் போட்டிங்க. நல்ல விசயமா இருந்தா முன்னாடியே அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணியிருப்பிங்க. திடீர்னு சொல்லவும் அப்பாவா, அம்மாவா யாரு மண்டைய போட்டாங்கன்னு தெரியலையேன்னு தலைதெறிக்க நான் ஓடி வந்தா நீங்க இதுவும் பேசுவிங்க.. இன்னமும் பேசுவிங்க” என நக்கலடிக்க
“டேய் நீ வேற ஏன்டா காலையில வெறுப்பேத்தற? இது இன்னைக்கு எழவு விழுந்த வீடுதான். யேன் மாமியாதான் மட்டைய போட போறாங்க. நீ போய் பாத்திரங்க, அடுப்பு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வா” என அனுப்பி வைத்துவிட்டு,
“ஏங்க மாமியாரே! நீங்க பெத்து வளர்த்த சொப்பன சுந்தரிய மட்டும் நீங்க பாருங்க. ஜெய் அவன் பொண்டாட்டிய பார்த்துப்பான். உங்க வேலைய, அதாவது இப்ப எதுக்கு வந்திங்களோ அந்த வேலைய மட்டும் பாருங்க.”
“ஒரு அரை மணி நேரம் பொறுத்துக்குங்க.. கீதா உங்களுக்கு காபி போட்டுத்தருவா. எங்கம்மா, கீதா அம்மா, அவங்க சித்தி சேர்ந்து சமைச்சி போடுவாங்க” என சொல்ல
“அடிங்க கிடக்கறது கிடக்கட்டும், கிழவிய தூக்கி மனையில வைய்யிங்கற கதையா இருக்கு நீ பண்றது. உனக்கு வளைகாப்பு பண்ண ஆசப்பட்ட. உங்கம்மாகிட்ட ரகசியமா சொன்ன. உங்கம்மா சமைச்சி போட்டு வளையல் அடுக்க உங்க சொந்த பந்தத்தை அழைச்சிட்டு வந்திருக்காங்க. நீ ஆசப்பட்டதை, உங்கம்மா செய்ய அவந்ததை நீங்க பாருங்க.. நீ யாருக்கிட்ட இன்னைக்கு உனக்கு வளைகாப்புன்னு சொன்ன.. சொல்லு.. “ என்க
“அம்மா உங்களுக்கு தெரியுமா?” என்க “நிஜமா தெரியாது விஜிப்பா” என சுசிலா பதற
“போயிட்டாங்களா? ஐய்யோ இப்போ யாரு சமைக்கிறது? அம்மா, அத்தையெல்லாம் சமைச்சா வாயில வைக்க முடியாதுங்க மாமா. அவங்கள திரும்பி வரச் சொல்லுங்க. நாளைக்கு போய் அந்த பரிட்சைய எழுதட்டும்” என கீதா கதற
“ஞானசூன்யத்தை கட்டிக்கிட்டு நான் படற பாடு.. ஐயகோ..! இதை கேக்க நாதியில்லையா? அதென்ன பரிட்சைய உங்கப்பனா வைக்கிறான். இன்னைக்கு யேம் பொண்ணுக்கு வளையல் போடனும், நாளைக்கு வந்து பரிட்சை எழுத சொல்றேன்னு சொன்னா சரி போய்ட்டு வாப்பா ராசான்னு அவங்களை அனுப்பி வைக்க?”
“ஊரு உலகத்துல நடக்கிறதகூட தெரியாத முட்டாள்கூட போராடுறேனே” என விஜயனும் கீதாவின் பாணியில் புலம்ப கீதா வாயடைத்து நின்றாள்.
“நான் வெளியில போயிட்டு வர்றேன். நீங்க வந்த வேலைய பாருங்க.” என விஜயன் கிளம்ப
“இப்பமட்டும் புருஷன் வேணுமா? சாரிமா.. இது எங்க வீடா இருந்தாலும், நான் அழையா விருந்தாளி. ஸோ பை பாருங்க. அப்புறம் போறப்ப இவளை உங்களோட கூட்டிட்டு போயிடுங்க.” என கீதாவை காட்டி சொல்லி வண்டியை எடுத்துக் கொண்டு வயலுக்கு சென்றான் விஜயன்.
“அவள பரிட்சை எழுத விடக்கூடாதுன்னு நான் போட்ட திட்டம் இப்படி புஸ்ஸுன்னு போச்சே. இதெல்லாம் உன்னாலதான்… நீதான் காலையில வரை சொல்லாத, நான் வந்து சொல்லிக்கிறேன்னு சொன்ன. இப்போ யேன் புருஷனும் இங்கில்ல, யாருமே இல்ல. சமையலுக்கு ஆளு வேணாம் அவளையே செய்யவச்சி கொற சொல்லி நாலு பேரு முன்னாடி அவமானப்படுத்தலாம்னு சொன்ன. இப்போ வந்தவங்களுக்கு நாமே வடிச்சி கொட்டறதா இருக்கு. எல்லாரும் நம்மல இப்போ கொற சொல்றாங்க.” என அம்மாவிடம் சண்டை போட்டாள் கீதா.
பின்வாசல் வழியாக உள்ளே வந்த விஜயன் அதை பார்த்துவிட்டு பார்க்காததுபோல தான் வாங்கி வந்த உணவை பிரித்து தட்டில் வைத்து உண்ண கீதாவுக்கு அவமானத்தில் உயிர் போனது.
“ஏங்க உங்க பொண்டாட்டிக்கு வளையல் போட எங்க சித்தப்பா மளிகை வாங்கிக்கிட்டு வந்தா நல்லாவா இருக்கு?” என கீதா பம்மியபடி சொல்ல
“நான் வாங்கிக்கிட்டு வர சொல்லல. அவரை யாரு வாங்கிக்கிட்டு வரச் சொன்னாங்களோ அவங்களே குடுப்பாங்க.” என்றவன்
“ஏம்மா சின்ன மாமியாரே! வளையல் போட வந்தவங்க உங்க கையில இருக்க வளையல கழட்டி போடுங்க. உங்க பொண்ணு நல்லா உங்கள போல சுகபிரசவத்துல குழந்தை பெத்து பொழச்சி வரட்டும். கண்ணாடி வளையல போட்டு ஏமாத்த பாக்காதிங்க.”