Advertisement

சிங்கா: ஒவ்வொரு மாவட்டத்துலயும்  ஒவ்வொரு சிறப்பு இருக்குல்ல அண்ணா.

தேவா:

ஆமா  சிங்கா, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நாகலாபுரத்தில் வேதநாராயணப் பெருமாள் தலையில் இருந்து இடுப்பு வரை மனித உருவமும், கீழே மீன் வடிவமும் கொண்டு காட்சியளிக்கிறார்.

ஆராவும் , சாயும்  பேசியபடியே  பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விட… அங்கு இருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது   ஏதோ  தெரியாத  காட்டுக்குள் கண்களை கட்டி விட்டது போல் இருந்தது.

ஆராவைப் பார்த்ததும் ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள் விதுர்ணா..

“ஹேய் ஆரா நீ வர மாட்டேன்னு நினைச்சேன்,  நீ வந்தது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? ஐ அம் வெரி ஹாப்பி” என்றவள்,  அவள் கையில் இருந்த  பரிசுப் பொருளைப் பார்த்ததும், “இதுலாம்  எதுக்கு ஆரா?, நீ வந்ததே  எனக்கு பெரிய கிப்ட் தான்” என்றாள்.

விதுர்ணா சந்தோசத்தில் ஆராவின் பக்கத்தில்  இருந்த  சாயை கவனிக்காமல்  விட்டுவிட்டாள் விதுர்ணா…

“விது இவங்க என்னோட அண்ணா… சாய்” என்று  அண்ணாவிற்கு அழுத்தம் கொடுத்து ஆரா  அறிமுகப்படுத்தும் வரைக்கும் சாயை கவனிக்காமல்  இருந்த விதுர்ணா,அதன்பின்  “சாரி சாய், நான் உங்களை கவனிக்கல” என்றாள்.

ஏற்கனவே ஆராவின் அண்ணணாக  சாயை  விதுர்ணாவிற்கு தெரியும்,

இன்று விதுர்ணா கவனிக்கவில்லை என்றதும்  தான் ஆரா வேண்டும் என்றே அண்ணா என்ற  வார்த்தையில் அழுத்தம் கொடுத்து அறிமுகப்படுத்தினாள். தனக்காக  அழையாத இடத்திற்கு வந்தவனை  தெரியாமல்  கூட யாரும் புறக்கணிக்கவோ, அவமானப்படுத்திடவோ கூடாது என்று நினைத்தாள் ஆரா.

“இது என்ன புதுசா?, வழக்கமா  நடக்கறது தானே விடு ஆரா” என்றான் குத்தலாக..

“சாரி சாய். வேணும்னு பண்ணல, ஆரா  இதுமாதிரி  பார்ட்டி எல்லாம் இக்னோர் பண்ணிடுவா, பர்ஸ்ட் டைம் என்னோட பர்த்டே பார்ட்டிக்கு வரவும் தான்,  ரொம்ப எக்சைட் ஆகிட்டேன், அதுல தான் உங்களை கவனிக்கல” என்றாள்..

“ஒன்னும் பிரச்சனை இல்லை.. நான் இங்க அழையாத  விருந்தாளி தானே, அப்புறம் கண்டுக்கலைன்னு கவலைப்பட்டு என்ன பண்ண போறேன்?” என்றவன்,  “எனிவே   ஹாப்பி பர்த்டே” என்று வாழ்த்தினான்.

“தேங்க்ஸ்”  என்றவளின் முகம்  சாயின் ஒட்டாத பேச்சில் வாடிவிட்டது..

“ஏய் சாய் பர்த்டே அதுவுமா அவளை எதுக்கு கஷ்டப்படுத்தர.? பிரீயா  விடு” என்ற ஆரா..

“அவன் சொன்னதை கண்டுக்காத விது.. உன்னோட அப்பா அம்மாவை எல்லாம் இன்ட்ரோ தர  மாட்டியா?”  என்றாள் விதுர்ணாவின்  கவனத்தை திசை திருப்ப…

உடனே தலையில் அடித்துக் கொண்ட விது.. “வா வா” என்று ஆராவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனவள்  இந்த முறை  சாயை  அழைக்க மறக்கவில்லை, “வாங்க சாய்” என்றாள்.

“ஏய் மெதுவா போடி.. எதுக்கு இந்த வேகம்”  என்ற  ஆராவின் வார்த்தைகள் காற்றில் பறந்து  சென்றது..

தனது அப்பா அம்மாவிடம் ஆராவையும், சாயையும் அறிமுகப்படுத்தியவள் “இவங்க என்னோட அம்மா பார்கவி,இவங்க அப்பா அன்பரசன்.. என்னோட பெரிய  அண்ணா முகிலன், இவங்க அண்ணி  கிருத்திகா” என்றவள்

“பாட்டியும், சக்தி அண்ணாவும் எங்க போனாங்க” என்றாள்.. மூச்சிவிடாம

“விது  கூல் கூல் எதுக்கு இவ்வளவு அவசரம்?”  என்றாள் கிருத்திக்கா..

“அது அண்ணி”  என்று அசடு வழிந்த  தங்கையை தலையை  தடவிக் கொடுத்து புன்னகையுடன்

“பாட்டிக்கு முடியல, அதனால அவங்களை வீட்டுல விட்டுட்டு ஆபிஸ்ல ஏதோ  வேலை இருக்குனு சக்தி  கிளம்பிட்டான்”  என்றான் முகிலன்.

“இன்னிக்குக் கூட ஆபிஸ் தானா?”  என்று  முகம் திருப்பியவளை , “வந்துருவான் அவன்,   நீ உன்னோட பிரண்ட்ஸை கவனி”  என்றார் பார்கவி..

அதன்பின்  விதுவை கையில் பிடிக்கவே முடியவில்லை.கால் தரையில் படாமல்  நடந்தவளை  பார்க்கும் போது  பெற்றவர்களுக்கு சந்தோசமாக  இருந்தது..

தன் மகளை இதுமாதிரி எல்லாம் பார்த்ததே  இல்லை பெற்றவர்கள், எப்போதும் அமைதியே  உருவாய் இருப்பவளை, கலகலவென்று பார்க்கும் போது அதற்கு காரணமான  ஆராவை அனைவருக்கும் பிடித்து விட்டது.

நேரம் 9 மணியை கடந்திருக்க.. விதுர்ணாவிடம் சாய் ஏதோ  பேச முயல்வது போல் ஆராவிற்கு  தோன்றவும், அவர்கள் இருவருக்கும் தனிமை  கொடுத்துவிட்டு கையில் இருந்த கேக் பிளேட்டுடன் அங்கிருந்து நகர்ந்தவளை  வெளியே இருந்த தோட்டத்தின் அழகு  ஈர்க்கவும் அங்கு சென்றாள்.

சுற்றி இருந்த தோட்டத்தையும், அழகுக்காக வைக்கப் பட்டிருந்த பறவை கூண்டுகளையும், வேடிக்கைப் பார்த்தபடியே வெகுதூரம் நடந்து வந்துவிட்டாள்.

அதன்பின் தான், வெகுதூரம் வந்து விட்டோம் என்று தோன்ற, மீண்டும் திரும்பி வீட்டை நோக்கி நடந்தவளுக்கு,

இருள் சூழ்ந்த அந்த பகுதியில் இருந்து  யாரோ, யாரையோ  அடிக்கும் சத்தமும், அதற்கு  அடி வாங்குபவனிடம் இருந்து “விட்டுருங்க, ஐயோ வலிக்குதே, இனி பண்ண மாட்டேன் ப்ளீஸ் விட்டுருங்க” என்ற  சத்தமும் கேட்டது.

‘இந்த நேரத்துல இவ்வளவு பேர் இருக்கும் போதே எவ்வளவு தைரியம் இருந்தா அடிக்கற வேலையைப் பார்ப்பாங்க’ என்று நினைத்தவள்,  மெதுவாக குரல் கேட்ட இடத்தை நோக்கி நகர்ந்தாள்.

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் மனம்  பதைபதைக்கவும்   செடியை நகர்த்தி விட்டு சத்தம் வந்த  திசையைப் பார்த்தாள், அங்கு நாலுபேர் சேர்ந்து ஒருவனை போட்டு மிதி மிதியென்று மிதித்துக் கொண்டிருந்தனர்.

அதை  அருகில் கைகட்டியபடி  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது  ஒரு நெடிய உருவம்,  அந்த  இருளில்  அங்கிருந்தவர்களின் முகம் தெளிவாக தெரியவில்லை ஆராவிற்கு.

“சத்தம் போட்டு அனைவரையும்  வரச் சொல்லலாமா?”என்று  நினைத்தவள்

“வேண்டாம் நம்ப இப்போ கத்துனா, அங்க இருக்கவிங்களுக்கு கேக்கறதுக்கு முன்னாடி  இங்க இருக்கற இந்த மிருகங்களுக்கு கேட்டுடும், அப்புறம் நம்பலையும் ஏதாவது பண்ணிடுவாங்க” என்று வாய்விட்டு சொன்னவள்,  “ஐயோ!! இதுகூட கேட்டுடும்”  என்று  வாயை  இரு கைகளால் மூடி  ஒரு நொடி தன்னை சமன் செய்துகொண்டு அங்கிருந்து நகரப் போனாள்..

ஆனால் அதற்குள்,  “சரி வேலையை முடிச்சிட்டு எனக்கு கால் பண்ணுங்க..” என்றவன்,  “பார்த்து சத்தம் இல்லாம முடிங்க”  என்றான்.

மெதுவாக கேட்டாலும், அந்த குரலில் ஒரு கம்பீரமும் அழுத்தமும் இருந்தது போல் தோன்றவும் அந்த குரலுக்கு ஒருநிமிடம் தன்னை மறந்து  கட்டுப்பட்டாள் ஆரா..

பேசிய குரல் அங்கிருந்த காரில் ஏறி கிளம்ப. அப்போதும் அவனது முகத்தை  ஆராவால் காணமுடியவில்லை, ஆராவை கடந்து  சென்ற காரைப் பார்க்கும் போது  ஆராவின் உடலில் உதறல் எடுத்தது..

அவளைக் கடந்து  கார் ஐந்து அடி தூரம் தான்  சென்றிருக்கும்,  கார்  மீண்டும் நின்று ,பின்னால் வந்து ஆராவின் எதிரில் நின்றது..

“ஹாப்பா போயிடுச்சி” என்று பெருமூச்சு விட்டவள், கார் திரும்ப வந்ததும் ,மீண்டும் பயத்துடன் தொண்டைக் குழியில் எச்சில் விழுங்கியள், வியர்வைகளுடன்   இரு விழிகளும் வெளியே தெரித்து விடுவது போல் காரையே  பார்த்து நின்றாள்..

ஒரே நிமிடம் முழுவதும்  அவள் முன் நின்ற கார், அதன்பின் அங்கிருந்து சென்று விட்டது.

“ஏன் என்னையப் பார்த்தும் கார்ல  இருந்து யாரும் இறங்கி வரல..நான் இவங்க அடிச்சதை  யார்கிட்டயாவது  சொல்லிட்டா என்ன பண்ணுவாங்க..? சொல்ல மாட்டேங்கற தைரியமா? இல்ல சொல்லி மட்டும் இவளால  என்ன பண்ண முடியுங்கற  திமிரா?” என்று யோசித்துக் கொண்டிருந்தவள், அந்த ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் காரையும், அதன் எண்ணையும் மனதில் ஆழ பதிய வைத்துக் கொண்டாள்..

அதன் விளைவு தானோ என்னவோ இன்று அதே எண் உடைய காரைப் பார்த்ததும், அதன் ஓனரை பார்த்துவிட வேண்டும் என்று  துடித்த மனதிற்கு  விருந்து வைப்பதற்காக கார்காரனிடம் வீண் சண்டைக்கு சென்றாள்.

இதை எல்லாம் யோசித்துவிட்டு தான் , சாயிடம் “மரியாதை குடுத்தா தான்,  மரியாதை கிடைக்கும், அவன் பணக்காரனா இருந்தா என்ன? பிச்சைக்காரனா இருந்தா என்ன?”, என்றவள், “நான் கிளாஸ் போறேன் சாய், நீயும் கிளம்பு” என்று  ஓடிவிட்டாள்..

போகும் தன் தங்கையைப் பார்த்தவன், திரும்பி தன் வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

மாலை வரை ஆரா வகுப்பில் இருந்தாலும் , மனம்  முழுவதும் ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் காரின் மீதே  இருந்தது..

“எதுக்கு இங்க வந்துப்பான்?, காலேஜ்க்கும், ரவுடிக்கும் என்ன சம்மந்தம் இருக்கும்?” என்று  யோசித்துக் கொண்டிருக்க…

“ஆரா, ஆரா, நான் கூப்பிடறது காதுல  விழுதா?,  இல்லையா?எந்த லோகத்துல இருக்கடி ஆரா”என்று ஆராவை உலுக்கிக் கொண்டிருந்தாள் விதுர்ணா.

“ஹா… சொல்லு விது”

“என்ன  யோசனையில  இருக்க?”

“அது  உன்னோட பர்த்டேக்கு வந்தப்ப  ஒரு காரை பார்த்தேன்னு சொன்னேன்ல”என்றாள்.

அன்று நடந்த  எதை பற்றியும் யாரிடமும்  சொல்லவில்லை ஆரா. ‘அப்படி சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள், அதைவிட பணக்காரர்கள் செய்யும் தப்பை  பணத்தை கொண்டே மறைத்து விடுவார்கள்,’என்று நினைத்தவள்

தான் அவசரப்பட்டு யாரிடமாவது சொல்லி அதனால் தன் குடும்பத்திற்கு ஏதாவது  பிரச்சனை வந்துவிடுமோ என்று  பயந்து தான்  வாயை திறக்கவே இல்லை ஆரா.

விதுர்ணாவிடம்  காரைப் பற்றி மட்டும் சொல்லி அந்த காரில் ஒருநாளாவது போக வேண்டும் என்று ஆசை இருப்பது போல் சொல்லிருந்தாள்.

முழுவதும்  சொல்லிருந்தால் விதுர்ணாவின் பதில்  வேறு மாதிரி இருந்திருக்கும் என்று  தெரியவில்லை ஆராவிற்கு.

“ஆமா அந்த கார் கூட உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்ன, அதுக்கு என்ன?”

“அந்த காரை இன்னிக்கு காலேஜ்ல பார்த்தேன்”

“ஓ சரி,அதுக்கு என்ன?, ஊர்னு இருந்த நாலு கார் இருக்க தான்  செய்யும் லூசு” என்றவள்.. “சரி நான் எதுக்கு கூப்பிட்டேனே இன்டென்ஷிப் பண்ண  நீ எங்க போறன்னு கேக்கதான் கூப்பிட்டேன் சொல்லு. எங்க போற?”

“இப்போதைக்கு ஐடியா இல்ல விது, அப்பாகிட்ட கேட்டா, அவர் கம்பெனிக்கு வான்னு சொல்லுவார், அண்ணாகிட்ட கேட்டா அவர் கம்பெனிக்கு வான்னு சொல்லுவார். பார்க்கலாம், சசிண்ணா கம்பெனிக்கு தான்  போற மாதிரி இருக்கும்”  என்றவள், “என்னைய விடு, நீ எங்க போக போற..?”என்று கேட்டாள்.

“Msv  குரூப் ஆப் கம்பெனியில் ஏதோ  ஒன்னுல தான்  பண்ண முடியும், வேற எங்கையும் பண்ண எனக்கு அனுமதி இல்ல”  என்றாள் விதுர்ணா.

“ஏன்? உங்க அண்ணாவும் அங்க தான் ஒர்க் பண்றாங்களா?”

“உங்க அண்ணாவும்னா , அப்போ உங்க வீட்டுல யாராவது அங்க ஒர்க் பண்றாங்களா?” என்று எதிர் கேள்வி கேட்ட விதுர்ணா ஆராவின் கேள்விக்கு பதில்  சொல்லவில்லை.

“ஆமா  அண்ணாவும் அப்பாவும் அங்க இதான்  மேனேஜரா இருக்காங்க” என்றாள்.

“ஓ சரி,  அப்போ நீ அங்கையே இன்டென்ஷிப் பண்ணு” என்றாள்.

“ம்ம் பார்க்கலாம்” என்றவள்…கையில் இருந்த  பேனாவைக் கொண்டு நோட்டில் அந்த காரின் நிறத்தையும் எண்ணையும் மாறி  மாறி கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

Advertisement