Advertisement

 முகூர்த்தம் 6

கனவுகளில் ஊடலா

கண்களில் கூடலா

தேடலில் காதலா

தெவிட்டா மோதலா….

”சார் என்ன சார் லீவ்னு சொன்னாங்க, வந்திருக்கீங்க” ,மைத்ரேயனை வங்கி வாசலில் எதிர்கொண்ட ப்யூன் சற்றே அதிர்வுடன் கேட்க, அவருக்கு பதிலளித்தபடியே உள்ளே நுழைந்தான் மைத்ரேய ராஜா.

“ஏன் வரக்கூடாதா” முகமும் அவனின் மொழியும் இயல்பாய் இல்லை.

“அதுக்கில்லை சார், நீங்க லீவுன்னு சொன்னீங்களே”

“ஆமா சொன்னேன்”

“வந்திட்டீங்க”

”நான் வரமாட்டேன்னு ஏதும் ப்ளான் பண்ணியிருந்தீங்களோ, விட்டா என்னை இப்பவே கிளப்பிருவீங்க போலயே”

“அய்யோ சார் அப்படி இல்லை”

“எல்லாரும் வந்தாச்சா”

”அதுவந்து சார்…”

“என்ன இழுக்கிறீங்க,”

“வாசு சார் மட்டும் கொஞ்சம் லேட்டா வருவேன்னு சொன்னாரு”

“அதானே பாத்தேன்”

“உங்களுக்கு என்ன சார் வாங்கீட்டு வரட்டும் டீயா காபியா”

“எதையோ ஒன்னு வாங்கீட்டு வாங்க, என்கிட்ட பதில் சொல்லமுடியாம கேக்குற கேள்வி தானே”

தலைகவிழ்ந்தபடி வெளியேறிய முருகனுக்கோ, “அப்பாடா தப்பித்தோம் “ என்றிருந்தது.

மைத்ரேயனிடம் பேசவே பயப்படும் வகையில் அவன் முகம் இருந்தது.

காரணம் புரிந்து கொள்ள முடியாமல் திணறிய மற்ற ஊழியர்கள் சேர்ந்து ப்யூன் முருகனை அனுப்பி வைக்க, அவரோ,

”இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேனோ தெரியலை, எழுந்ததுல இருந்து திட்டு மட்டும் தான் வாங்கீட்டு இருக்கேன்.” என்றபடி அருகிலிருந்த டீக்கடையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

உள்ளே சென்று வந்த முருகனின் முகம் சரியில்லை என்றவுடனையே, மற்றவர்கள் மற்ற நாட்களை விட கூடுதல் கவனத்தோடே தங்கள் பணியை தொடர்ந்தனர்.

காரணம் மைத்ரேயனின் கோவம் அப்படிப்பட்டது. தன்னுடைய தனிப்பட்ட கோபங்களை அடுத்தவர் மீது காட்டும் பழக்கம் அவனுக்கு எப்போதுமே கிடையாது என்றாலும், அவன் கோபமாக இருக்கிறான் என்ற பயத்திலேயே பதற்றத்தில் எதாவது தவறிழைத்து அவனிடம் திட்டு வாங்குவார்கள்.

வரமாட்டேன் என்றவன் சரியாக வந்து அமர்ந்திருக்கிறானே என்ற படி அவரவர் பணிகளை தொடர்ந்தனர்.

எப்போது வந்தாலும் முந்தைய நாளின் சிசிடிவி பதிவுகளை பார்ப்பது அவன் வழக்கம்.

அப்படி பார்த்ததில் அன்று காலை வங்கி திறக்கப்பட்டவுடனேயே ஒருவர் வந்து மிக அவசரமாய் பணத்தை செலுத்திவிட்டு சென்றிருந்தார்.

அதன் பின் வழக்கமான நடைமுறைகளே தொடர்ந்திருக்க, அவன் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவே இல்லை.

இதுவரை நடக்காதது சரி, இனியேனும் அவள் வருவாளா… என்று காத்திருக்கத் துவங்கினான்.

கண்களும் கைகளும் மூளையும் இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்க, இதயம் மட்டும் அவள் வரவை எதிர்நோக்கி இருந்தது.

அவன் அன்னையின் கட்டாயத்தில் விடுப்புக் சொல்லிவிட்டானே தவிர, பெண் பார்க்கச் செல்வதில் துளியும் விருப்பமில்லாமல் இருந்தான்.

அவனின் தேவதை அவளல்லவோ, அவளை விட்டு வேறொருத்தியை அந்த இடத்தில் வைத்து பார்க்க கூட மனம் ஒப்பவில்லை.

காலையிலிருந்து எப்படி இதை தவிர்க்கலாம் என்று தீவிரமாக யோசித்ததில், தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரி வருவதாகவும், தான் கண்டிப்பாக இருக்கவேண்டும் எனவும், காலையில் தான் மின்னஞ்சல் வந்ததாகவும் கூறி சாமர்த்தியமாய் வந்து அமர்ந்திருக்கிறான் வங்கியில்.  

சுழல் நாற்காலியில் தலை சாய்த்திருந்தவன் சட்டென வந்த யோசனையில், காசாளரை நோக்கி நடந்தான்.

அவர் என்னவோ ஏதோவென அதிர்ந்து எழப்போக, அவரை அமர்த்திவிட்டு, அங்கிருந்தவற்றில் தேடி, பணம் போடும் செலான், எடுக்கும் செலான் இதுவரை வந்தவற்றை ஆராய்ந்தான்.

மைவிழிச்செல்வி, xxxxxxxxxxxx என்ற கணக்கில் பணம் செலுத்தப்பட்டிருந்தது. ”ப்ப்ப்ஸ்ஸ்ஸ்” என்று தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியவன்,

“எப்படி தவறவிட்டேன் ” என்றபடியே மீண்டும் வேகமாய் வந்து சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தான்.

எவ்வளவு மெதுவாக ஓட்டுப்பார்த்தாலும் அவள் வரவில்லை.

வங்கி ஆரம்பிக்கப்பட்ட உடன் செலுத்தப்பட்டது அவளின் கண்க்கில் தான் மீண்டும் சிசிடிவி பதிசுகளை ஓட்டிப்பார்த்தவனுக்கு புரிந்தது.

முதல் ஆளாய் மிக அவசரமாய் பணம் செலுத்தியவர் தான் மைவிழிச்செல்வியின் கணக்கில் செலுத்தியிருக்கிறார். ஏன் அவள் வரவில்லை, இத்தணை நாளில் ஒருமுறை கூட மைவிழி அவனை தவிர்த்ததில்லை.

அதற்கும் ஒரு காரணம் உண்டு, கல்லூரியின் முதல் வருடத்தில் வந்த அந்த நாள் இன்று வரை அவன் மனதில் பசுமையாய் இருந்தது.

“டேய் ராஜா, என்னடா பண்ணுன, அந்த மைவிழி தப்பித்தவறி கூட இருக்கிற பக்கம் வரமாட்டேங்குறா, நீ என்னடான்னா அவளை லவ் பண்றேன்னு சொல்லீட்டு இருக்க,”

“உன் ஒருத்தன் கிட்ட மட்டும் தானே டா சொன்னேன், காலேஜ் முழுக்க சொல்லீட்டியா”

“ச்சே, ச்சே அப்படிலா சொல்லமாட்டேன் டா, இந்த சந்துருவை பத்தி என்ன நினைச்சிட்ட டா,”

“உன்னை அப்படிலா நம்ப முடியாதே”

”சத்தியமா டா”

“சரிவிடு நம்பீட்டேன்”

“மச்சி மச்சி, உன் ஆளு வருது டா, நீ இருக்குறதை பாக்கலை போல”

“சரிசரி அப்படியே மறைச்சிக்கோ, அவ கிட்ட வரும் போது சர்ப்ரைஸா போய் நிக்கணும்”

“இந்த சின்ன புள்ளைங்கல்லா, கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டு ’பே’ ந்னு கத்துவாங்களே அப்படியா”

“உனக்கெலாம் உலக ஞானமே கிடையாதுடா, எவ்வளவு அழகா சர்ப்ரைஸுன்னு சொல்றேன், சின்னபுள்ளை தனமா பேசிகிட்டு”

“நம்ம ஊரு வாய்க்கால் கரையில, கிட்டிபுல்லும், கிச்சுகிச்சான் தாம்பாலமும் விளையாண்ட பய தானே நீ வேற எப்படி யோசிப்ப,”

“அடேய் வாயை மூடு டா”

“சரியாக மைவிழி அவன் மறைந்திருந்த தூணை நெருங்கவும், இவன் சரியாக அவள் முன்னே சட்டென போய் நின்றான்,”

அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அவனால் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட சலனம், அப்போதே பதில் கொடுத்துவிட்டாலும், எனோ சில நாட்களாய் மனதை குடைந்தபடியே இருந்தது. அதை மறந்து சராசரி வாழ்விற்கு திரும்பிக் கொள்ள அவனைப் பார்ப்பதை தவிர்த்து வந்தாள்.

இந்த நிலையில் அவள் எதிர்பாராத நேரத்தில் முன்னே வந்து ஒய்யாரமாய் நிற்கும் அவனை என்ன செய்வாள். முதலில் அதிர்ந்தாலும், அதை சமாளித்து அவனை கடந்து போக முற்பட்டாள்.

மிக நெருக்கத்தில் அவளை இடைமறித்தவன்,

“ஹே டாலிங், என்ன மாமாவை பார்த்து வெட்கமா, கண்ணு முன்னாடி வரவே மாட்டேங்குற , எனக்கு தெரியாம  நின்னு ஓரக்கண்ணால சைட் அடிக்கிறியாமே, வொய் டா…..”

“போடா போண்டா”

“என்னது போண்டா வா ஆக்சுவலா இந்த இடத்துல டால்டா தானே சொல்லுவாங்க, “

அவள் பதில்  பேசாமல் போகவே,

“அச்சச்சோ  பார்டா என் ப்யூட்டிக்கு வெட்கத்தை, ஆயிரம் சொல்லு,  உன் வெட்கத்து உலகமே ஈடாகாது பேபி”

”நீ என்ன லூசா, ராஜா நீ ப்ரப்போஸ் பண்ணுண அன்னைக்கே நான் தெளிவா சொல்லீட்டேன், அப்புறம் எதுக்கு இந்த வீணான சீன்”

“ அஹான், தெளிவா சொல்லீட்டியா,”

“ஆமா”

“ஆனா நீ தெளிவா இல்லயே”

“நான் தெளிவா இல்லாம இருக்கேன்னு உனக்கு தெரியுமா”

“எஸ் எஸ் எனக்கு தான் தெரியுது”

“வாட்ட்ட்ட்ட்ட்” (ஆரம்பிச்சுட்டாயா)

“நீ தான் ஓவர் தெளிவாச்சே, அப்புறம் ஏன் என்னைய கண்டதும் இப்படி ஓடி ஒளியுற”

“ஆங், அது ….. அது வந்து”

“ரொம்ப கஷ்டப்படாதே மைடியர் மைவிழி, உனக்கு பயம் , எங்கே என்னை பார்த்தா லவ் பண்ணிடுவோமோன்னு”

”நோ வே”

“அப்ப இது தான் ரீசன், நீ என்னைய லவ் பண்ணுறது எனக்கு தெரியக்கூடாதுன்னு ஓடுற, ரைட்ட்ட்ட்ட்”

“ஊஉப்ப்ப்ப்ஸ்ஸ்ஸ்ஸ்”

“ஓ எஸ் சொல்றியா, அப்பாடி இப்பயாச்சும் ஒத்துகிட்டியே,”

“அடேய்”

“நோ பேபி, பப்ளிக் பப்ளிக்”

“உனக்கெலாம் ஒரு தடவை சொன்னா புரியாதா”

“அடியே டைலாக்கை மாத்துங்கடி”

“வாட்ட்ட்ட்ட்”

“அட டா டா டா அப்ப இனிமே என்னை பேஸ் பண்ணு, என்னை டெய்லி பேஸ் பண்ணிணாலும் உன் முடிவு மாறதுல்ல”

“நீ என்ன பண்ணுனாலும், யூ நெவர் சேஞ்ன்ச் மீ”

“அப்புறம் என்ன, பீ நார்மல், கேஸுவலா இரு, எந்த சூழ்நிலையிலும் நான் எதிரே வந்தா நீ என்னை அவாய்ட் பண்ணாம பேஸ் பண்ணனும்”

”டன்”

கண்முன் விரிந்த காட்சியில் உலகை மறந்திருந்தவன், மீண்டும் ப்யூன் வந்து அழைத்ததில் சுய நினைவிற்கு வந்தான்.

“சார் சார் சார், உங்களைத்தான் சார்”

நிஜத்திற்கு வந்தாலும் நினைவில் அவள் முகமே, என்று அமர்ந்திருந்தவன் சுதாரித்து,

“ என்ன முருகா”

”சார் உங்களுக்கு லன்ச்”

“ ம்ம் வாங்கீட்டு வாங்க” என்றவன் முகத்தில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது.

சட்டென தன் எதிரே இருந்த கணினி திரையில் அவளின் அக்கௌண்ட் நம்பரை அழுத்தியவன், அதில் வந்த விபரங்களை மனதில் குறித்துக் கொண்டான்.

ப்ரொபஸனல் எத்திக்ஸ் என்று இத்தனை நாளாய் எடுக்காத அவளின் தொலைபேசி எண் இன்று அவன் விரல்களின் வழியாக காற்றில் சென்று கொண்டிருந்தது அழைப்பாக.

ஒருமுறை, மறுமுறை, என ஆறு முறைக்கும் மேல் முயன்றும் அவள் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

என்னவாக இருக்கும், ஒருவேளை உடல்நிலையில் பிரச்சனையா, அய்யோ கடவுளே அப்படி ஒன்றும் இருக்கக்கூடாது,

ஒரு வேளை திருமணத்திற்கு பெண் பார்க்க, எனக்கு வந்த அதே சூழல் அவளுக்கும் வாய்த்திருக்குமோ, கண்டிப்பாக இருக்காது, இருக்கவும் கூடாது, நான் தான் அவளின் கணவன்…

ஆனால் உனக்கென பெண் பார்க்க சென்றிருக்கிறார்களே உன் அம்மா, என்ன செய்ய போகிறாய் ராஜா, அவளோ உன் காதலை ஏற்ற பாடில்லை, உன் அன்னையோ, உன் பேச்சை காதில் கூட போட்டுக்கொண்ட பாடில்லை….

இதில் வீராவேசமாக சாவல் மட்டும் விட்டு என்ன பயன் என்று கேட்டுக் கொண்டிருந்தது அவனின் மனசாட்சி….

Advertisement