“என்னடி பேசிட்டு இருக்கும் போதே கிளம்பிட்ட..?” இவன் ஆரம்பித்தான்.
“ம்ப்ச்.. அதுக்கே இவ்வளவு நேரம் பேச்சு வாங்கிட்டு வந்தேன்..”
“உங்க பாட்டியா..? அவங்க அப்படி தானே, ப்ரீயா விடு..” என்றவன், “நாளைக்கு எந்த பேட்ச் கிளாஸ் வர..? கேட்டான். அவன் எதற்கு கேட்கிறான் புரிந்தது.
“நாளைக்கு நான் கிளாஸ் வரல..” என்றாள்.
“ஏன்..?”
“அம்மாவும் நானும் ஓம் சக்தி கோவிலுக்கு போறோம்..”
“ஓஹ்.. என்ன திடீர்ன்னு..”
“எல்லா வருஷமும் போவோம், இந்த வருஷம் அண்ணா மேரேஜ் ப்ரீபிரேஷன்ல லேட் ஆகிடுச்சு..”
“ம்ம்.. எப்படி போறீங்க..?”
“ஆக்டிங் ட்ரைவர் வர சொல்லி நம்ம கார்லே போறோம்..” என, ஈஷ்வர் கண் சுருக்கி எதையோ யோசித்தவன், மேலும் கேட்டு தெரிந்து கொண்டான்.
“சரி நான் வைக்கிறேன்.. அம்மா வந்து பார்த்துட்டு போறாங்க..” வைத்துவிட, ஈஷ்வருக்கு அவ்வளவு எரிச்சலாக இருந்தது. பேசமுடியறதில்லை, பார்க்க முடியறதில்லை. என்ன லவ் பண்றோமோ நாங்க..?
போன் எடுத்தவன் அடுத்த சில நிமிடங்கள் யாருக்கோ பேசிவிட்டு மலர்ந்த முகத்துடன் படுத்தான். இரவு பனிரெண்டு மணிக்கு டான் என்று பல்லவிக்கு அழைத்துவிட்டான். அவள் இதை எதிர்பார்த்திருப்பாள் போல, சீக்கிரமே எடுத்துவிட்டாள்.
“ஹாப்பி ஹாப்பி பர்த் டே லவி.. அடுத்த வருஷம் மிஸர்ஸ் பல்லவி ஈஷ்வராக விஷ் பண்றேன்..” விளையாட்டாக வாழ்த்த, சிரித்தவள்,
“தேங்க யூ..” என்றாள் கிசுகிசுப்பாக.
“நீ இப்படி பேசும் போது கிளு கிளுப்பா இருக்கு..” குறும்பாக சீண்டியவன், “சொல்லு.. என் லவிக்கு என்ன கிப்ட் வேணும்..?” கேட்டான்.
அவள் யோசிக்கவே இல்லை. “நான் உங்களுக்கு கொடுத்த கிப்டை யூஸ் பண்ணுங்க..” என்றாள்.
“இது தான் உனக்கு வேணுமா..?”
“ஆமா.. நான்அன்னிக்கு அப்படி செஞ்சது தப்பு தான், சாரியும் கேட்டுட்டேன், இப்போவாவது அதை பிரிங்க, நான் ரொம்ப ஆசையா யோசிச்சு வாங்கினேன், அண்ணா கூட பேக் பண்ணும் போது பார்த்துட்டு கேட்டான் தெரியுமா..? ப்ரண்டுது சொல்லிட்டேன்..” பல்லவி சொல்லி கொண்டிருக்க, அங்கு ஈஷ்வர் அவளின் கிப்ட்டை கையில் எடுத்து அமர்ந்தான்.
மறுநாள்காலைபல்லவிகுளித்துகீழேசெல்ல, ரத்னாமகளுக்குபிறந்தநாள்வாழ்த்துசொன்னவர், அவளுடன்பூஜைசெய்தார். மூர்த்தி, பரணி, கோமதிஎல்லாம்வாழ்த்துசொல்ல, நண்பர்கள்போன்செய்தனர். எல்லார்வாழ்த்தையும்பெற்றுகொண்டவள், கோவில் கிளம்பும் முன் ஈஷ்வரிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
“பல்லவி.. நீபோய்கிளம்பு, அம்மாஅதுக்குள்ளபாட்டிக்குஎல்லாம்எடுத்துவச்சுடுறேன்..” ரத்னாசொல்ல, பல்லவிரூம்சென்றவள் ஈஷ்வருக்கு தான் அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. திரும்ப முயன்றவள், நேரம் ஆவதை உணர்ந்து கிளம்பிவரவும், ரத்னாவும்தயாராகஇருந்தார்.