திகம்பரனின் திகம்பரி அவள் 12 1 15528 திகம்பரனின் திகம்பரி அவள் 12 “ஈஷ்வர்.. பசங்க வராங்க..” குடிலிலே அமைதியாக அமர்ந்துவிட்டவனிடம் விஷ்ணு வந்தான். “ம்ம்..” முகம் துடைத்தவன் பல்லவி விசிறியடித்துவிட்ட சென்ற கிப்டை சில நொடிகள் வெறித்து பார்த்தவன், அதை எடுத்து வைத்தான். “டீ.. ஸ்னேக்ஸ் வந்துடுச்சா..?” பீச்சில் ஆட்டம் போட்ட பசியில் அவனின் நண்பர்கள் வர, “ஈஷ்வர்.. எல்லோரையும் கவனி..” விஷ்ணு கண்டிப்புடன் சொன்னான். “உன் பர்த் டேக்கு தான் எல்லாம் வந்திருக்காங்க, போ.. ஈஷ்வர்..” தன்னை தானே நெட்டி தள்ளி சென்றவன் நண்பர்களை கவனித்தான். “நீ சாப்பிடலையா..?” நண்பர்கள் கேட்க, “நான் சாப்பிடுறேன்.. நீங்க சாப்பிடுங்க..” மேலும் ஸ்னேக்ஸ் எடுத்து வர செய்தான். கண்கள் பல்லவியை தேட முயல, அடக்கி கொண்டவன் விஷ்ணுவிற்கு டீ எடுத்து வந்தான். “உனக்கு எங்க..?” விஷ்ணு கேட்க, “ம்ப்ச்.. குடிடா..” கையில் வைத்தான். “இரு..” விஷ்ணு சென்று இன்னொரு டீ எடுத்து வந்து அவனுக்கு கொடுக்க, “உன்னை இப்போ கேட்டேனா..?” என்று அவனிடம் பாய்ந்தான். “ச்சு.. குடி ஈஷ்வர்.. பெட்டரா பீல் பண்ணுவ..” அவனின் கையில் திணிக்க, ஈஷ்வர் அதை குடிக்காமல் அங்கேயே வைத்தான். “இவனோட..” விஷ்ணு தானும் குடிக்காமல் வைத்தவன், எழுந்து சென்றுவிட்டான். அங்கு குடும்பத்துடன் அமர்ந்திருந்த பல்லவி முகத்தை சாதாரணமாக வைக்க முயன்று கொண்டிருந்தாள். கண்கள் வேறு கலங்கி கொண்டே இருக்க, அது வேறு கோவத்தை கொடுத்தது. மூச்சை இழுத்து விட்டு ரத்னா பேச பதில் பேசி கொண்டிருந்தாள். “அவ்வளவு தான் போய் டீ, ஸ்னேக்ஸ் முடிச்சிட்டு கிளம்பலாம்.. இல்லை வீட்டுக்கு போக நேரம் ஆகிடும்.. நாளைக்கு ஆபிஸ் இருக்கு..” மூர்த்தி சொல்ல, எல்லோரும் குடிலுக்கு திரும்பினர். ஈஷ்வரின் குடிலை கடக்கும் போது பல்லவி அந்த பக்கமே திரும்பவில்லை. ஈஷ்வரும் அவளை கவனிக்கவில்லை. “பரவாயில்லை.. ஸ்னேக்ஸ் ரெண்டு, மூணு வெரைட்டி இருக்கு, டீ, காபி, பால் கூட இருக்கே..” கோமதி பார்த்து சொல்ல, “ம்ம்.. எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு, இனி அடிக்கடி இந்த மாதிரி குடும்பத்தோட வெளியே வரணும்..” சரணின் அப்பா சொல்ல, “ஆமாமாப்பா.. இத்தனை வருஷம் சென்னையில இருக்கோம்ன்னு தான் பேர், ஆனா சரண் காட்டி தான் இப்படி இடம் இருக்கிறதே தெரியுது..” தங்கை மகனை பார்த்து சொன்னார் மூர்த்தி. “நான் இல்லை.. பல்லவி தான் சொன்னா..” என்றான் அவன். “பல்லவியா.. உனக்கு எப்படி தெரியும்..?” கோமதி கேட்க, “க்கும்.. என் ப்ரண்ட் ஒரு டைம் இங்க குடும்பத்தோட வந்திருந்தா, அவ சொல்லி தெரியும்..” “ஓஹ்.. சரி சரி.. சாப்பிடுங்க.. கிளம்பலாம்..” என, பல்லவி காபி மட்டும் எடுத்து கொண்டு அமர்ந்தாள். “பல்லவி ஏன் காபி மட்டும்..?” சரண் கேட்க, “பசிக்கல சரண்.. வேண்டாம்..” அமைதியாக காபி குடிக்க, அவனும் நகர்ந்துவிட்டான். “ஆச்சா.. போலாமா..? சரண் பில் எதுவும் கொடுக்கணுமா..?” மூர்த்தி கேட்டார். “எல்லாம் முன்னாடியே புக் பண்ணி பணமும் கட்டியாச்சு மாமா..” என்றான். “ஓகே.. அப்போ கிளம்பலாம்..” என, எல்லோரும் கிளம்பினர். ஈஷ்வரும் நண்பர்களை வழியனுப்ப அவளின் பின்னால் தான் வந்து கொண்டிருக்க, பல்லவி அவர்களின் பேச்சு சத்தத்தில் புரிந்து கொண்டாள். “பை ஈஷ்வர்.. தேங்க்ஸ் பார் ட்ரீட், நல்லா என்ஜாய் பண்ணோம்..” நண்பர்கள் கார் பார்க்கிங்கில் கட்டி தழுவி விடைபெற்றனர். இறுதியாக ஹீனா சென்று அவனிடம் பேசிவிட்டு காரில் ஏற, பல்லவி அவளின் காரில் அமர்ந்தபடி பார்க்க, ஈஷ்வரும் அவளின் பார்வை உணர்ந்து அவளை பார்த்தான். ஒரு நொடி இருவரின் கண்களும் உரசி கொண்டது. கார் கிளம்ப, இருவரின் மனமும் வெறுமை கொண்டது. செல்லும் பல்லவியின் காரையே பார்த்த ஈஷ்வர் சில நொடி சென்று விஷ்ணுவை தேடி சென்றான். சுப்ரமணியுடன் பீச்சில் அமர்ந்திருந்தான். குடில் சென்று இருவருக்கும் டீ எடுத்து சென்றவன், “இந்தா..” அவனின் முன் நீட்ட, விஷ்ணு அமைதியாக வாங்கி கொண்டான். “என்ன ஆச்சு..?” சுப்ரமணி இருவரையும் கவனித்து கேட்க, “ஒன்னுமில்லைடா..” என்றான் விஷ்ணு. “அட சொல்லுடா.. நான் முன்ன இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன், ஏதாவது பிரச்சனையா..?” அவன் மேலும் கேட்க, விஷ்ணு உதட்டோரம் நெளிந்தது. “அது ஒன்னுமில்லை, பில் கட்ட ஈஷ்வர்கிட்ட பணம் இல்லை, பர்ஸ் தொலைச்சிட்டான், நானும் என் பர்ஸ் வீட்லே வச்சுட்டு வந்துட்டேன்..” விஷ்ணு அவனின் ஷர்ட் பேக்கெட் பார்த்தான். “ஆத்தி.. பேசாம நானும் ஒரு ஷேர் ஆட்டோ பிடிச்சு கிளம்பியிருக்கலாம் போலயே..” சுப்ரமணி கையால் ஷர்ட் பேக்கெட்டை மூட, “என்ன மூடினாலும் பில் கட்டாம அனுப்பி மாட்டாங்க, பார்த்த இல்லை அங்கங்க எத்தனை பேர் சுத்துறாங்கன்னு..” “ஆஹ்.. சுத்தி சுத்தி பார்த்தவன், பேசுமா உங்க அப்பாகிட்ட சொல்லு, அவர் ஏதாவது பண்ணுவார்..” என்றான் ஈஷ்வரிடம். “ம்ஹூம்.. சொன்னா பயங்கரமா திட்டு விழும், என்ன தான் இருந்தாலும் பர்த் டே பாய், நமக்காக தானே செஞ்சான், நாம தானே ஹெல்ப் பண்ணனும்..” விஷ்ணு முகத்தை சோகமாக வைத்து சொல்ல, “ஆமா இல்லை..” சுப்ரமணி அழுவது போல சொன்னான். “ஆமா தான்.. சொல்லு எவ்வளவு வச்சிருக்க..?” “அப்பா புக்ஸ் வாங்க கொடுத்த காசு தான் ஒரு மூணாயிரம் இருக்கு..” “க்கும்.. இது எங்க போய் காணும்..?” “அப்போ எவ்வளவு வேணும்..?” “அந்த மூணாயிரத்துக்கு பக்கத்துல இன்னொரு ஒரு ஜீரோ ஆட் பண்ணிக்கோ..” “என்ன..? அவ்வளுவா..? இப்படின்னு தெரிஞ்சிருந்தா பிரியாணி, பிஷ் மூணாவது ரவுண்ட் போயிருக்க மாட்டேனே..?” சுப்பிரமணி மூக்கால் உறிஞ்ச, அதுவரை கட்டுப்படுத்தி கொண்டிருந்த விஷ்ணு சத்தமாக சிரித்துவிட்டான். ஈஷ்வர் முகத்திலும் மெலிதான சிரிப்பு. “என்னடா சீரியஸ்னஸ் புரியாம சிரிக்கிற, பணத்துக்கு என்ன பண்றது..?” சுப்ரமணி முகம் இருண்டு கேட்க, “அட என்ன மக்கு டாக்டரே.. இன்னுமா நம்புற..?” விஷ்ணு மேலும் சிரித்தான். “அடப்பாவி.. எப்போவும் போல என்னை பல்ப் கொடுத்துட்டியா..?” “அது வேற தனியா கொடுக்கணுமா..?” “டேய்..” அவன் விஷ்ணுவை அடிக்க, இருவரும் மணலில் உருண்டு புரண்டனர். “உன்னால என் டீ போச்சு..போய் இன்னொரு டீ எடுத்துட்டு வா..” விஷ்ணு மணலை தட்டியபடி சுப்ரமணியிடம் சொல்ல, “எது.. எல்லாம் குடிச்சிட்டு கடைசில் இருந்த அந்த சொட்டு டீயா..?” என்றான் அவன். “உனக்கென்னடா தெரியும் கடைசி சொட்டு டீயோட அருமை.. போடா, போய் எடுத்துட்டு வா..” “க்கும்.. போறேன்..” சுப்ரமணி எழுந்து செல்ல, ஈஷ்வர், விஷ்ணு மட்டும். “என்ன பல்லவியோட சண்டை போட்டாச்சா..? மூணு வருஷம் பிரிஞ்சிருந்து பேசுறீங்க, சண்டை தானா..? ரொமான்டிக்கா ஒன்னும் கிடையாதா..? இல்லை தெரியாதா..?” விஷ்ணு கிண்டலாக ஓட்டினான். “ம்ப்ச்.. என்னை வெறுப்பேத்தாத..” “அதை நான் ஏன் செய்யணும்..? நீங்களே போதும் உங்களுக்கு..” “விஷ்ணு..” “எஸ் விஷ்ணு தான்.. முன் கோபி ஈஷ்வர் இல்லை..” “ஸ்ஸ்.. என்னடா வேணும் உனக்கு..?” “எனக்கு என்ன வேணும்ன்னு நீ கேட்கிறியா..? முதல்ல உனக்கு என்ன வேணும்ன்னு நீ யோசி..” “எனக்கு என்ன வேணும் அவளை தவிர..” மனம் முணுமுணுத்து கொண்டது. “இந்தா டீ..” சுப்ரமணி அவனுக்கும் ஒரு டீ எடுத்து வர, “இதுக்கு நீ தனியா பே பண்ணனும்..” என்றபடி வாங்கினான் விஷ்ணு. “அப்படியா..?” கையில் டீயுடன் முழிக்க, “அட கஞ்சூஸ்.. இதுக்கு கூட பே பண்ண மாட்டியா..?” “என்ன இருந்தாலும் டிரீட்ல குடிக்கிற ஓசி டீ போல வருமா..? உனக்கு இந்த அருமை தெரியாதுடா..” சுப்பிரமணி சொல்ல, விஷ்ணு சிரிப்புடன் குடித்தான். இருள் சூழ ஆரம்பிக்க, “போலாமா..?” என்றான் சுப்ரமணி. விஷ்ணு திரும்பி ஈஷ்வரை பார்க்க, அவன் தூரத்தில் அலையில் கால் வைத்து நின்றிருந்தான். “ஈஷ்வர்..” இவன் குரல் கொடுக்க, திரும்பி பார்த்தான். போலாம்.. என்று வாட்ச் காட்ட, மூவரும் கிளம்பினர். இருவரையும் வீட்டில் டிராப் செய்த ஈஷ்வர் இரவு உணவை குடும்பத்துடன் முடித்தான். நரசிம்மன் மகனை அமரவைத்து வர போகும் எலெக்ஷன் பற்றி சிறிது நேரம் பேசி கொண்டிருந்தவர், மகனை பார்த்தார். “சரிப்பா.. நீ தூங்க போ..” அவனிடம் வித்தியாசம் தெரிந்து அனுப்பிவிட்டார். ரூம் சென்றவன் பெட்டில் விழுந்தான். திரும்ப மாலை நடந்தது மனதில் ஓடியது. பல்லவியை பார்த்தது, இருவரும் சண்டை போட்டது. அவள் கிப்டை விசிறிவிட்டு கிளம்பியது.. இது தான். இது மட்டும் தான் அந்த நாளின் முடிவாக அவனுக்கு கிடைத்தது. “இவ்வளவு கூட நான் எதிர்பார்க்க கூடாதா..?” திரும்ப திரும்ப ஒரே கேள்வி. “எதுவும் நினைக்காத.. போதும் தூங்கு..” ஹெட் செட்டை காதில் மாட்டியவன் அவனின் பிளே லிஸ்ட்டை வைத்தான். பாடல்கள் ஓடி கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் தானே தூங்கி போனான். மறுநாள் மிகவும் தாமதாக எழுந்தான். சம்மர் விடுமுறை. சந்தோஷத்தை கொடுக்கவில்லை. ரிப்ரெஷ் செய்து கீழே சென்றான். நரசிம்மன் எலெக்ஷன் பிரச்சாரத்துக்கு சென்றிருக்க, மகா காலேஜ் சென்றிருந்தாள். அவர்களுக்கு எக்ஸாம் இன்னும் முடியவில்லை. விஷ்ணுவும் எக்ஸாம்க்கு படிச்சிட்டு இருப்பான்.. காபி மட்டும் குடித்தவன் மொபைல் பார்க்க ஆரம்பித்தான். எல்லாம் சுற்றி வந்தவன் பேஸ்புக் சென்றான். அவனை டேக் செய்து நிறைய போஸ்ட். நேற்று பீச்சில் எடுத்த போட்டோஸ் கொட்டி கிடந்தது. எல்லாவற்றிக்கும் லைக் மட்டும் போட்டவன் விரல்கள் அவனின் பழக்கமான பல்லவி ப்ரொபைல் சர்ச் கொடுத்தது. இருவரும் அதில் நண்பர்களாக இருந்தனர். நேற்று ரிசார்ட் செல்லும் முன் பரணி, சரண் உடன் எடுத்து போட்டோ ப்ரொபைலாக வைத்திருந்தாள். பார்த்தே இருந்தான். அங்கு பல்லவியும் ரூமில் அதை தான் சென்று கொண்டிருந்தாள். ஈஷ்வர் ப்ரொபைல் பார்த்திருந்தாள். அவனை டேக் செய்து போட்டிருந்த ஒவ்வொரு போட்டோவையும் பார்த்து கொண்டிருந்தவளுக்கு, ஹீனா அவனுடன் எடுத்த போட்டோ பார்க்கவும் கண்கள் அதிலே நிலைத்தது. அந்த வாரம் அப்படியே சென்றது. இருவருக்கும் இடையில் எந்த கான்டெக்ட்டும் இல்லை. மிகவும் அமைதியாக இருந்தனர். அவர்களின் அமைதியே அவரவர் சரி என்ற அவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்க, மற்றவரும் அதை புரிந்து கொண்டனர். “இருக்கட்டும்.. போ..” இருவரும் ஒன்று போல இதையே நினைத்தனர். அந்த வார முடிவில் விஷ்ணுவிற்கு போன் செய்தான் ஈஷ்வர் எங்கேயாவது போலாம் என்று. அவனுக்கும் எக்ஸாம் படிப்பது ஸ்டர்ஸை கொடுத்திருக்க, போலாம் என்றான். “ண்ணா.. வெளியவா போறீங்க, நானும் வரேன், எக்ஸாம் படிச்சு படிச்சு கண் இருட்டுது..” மகா பக்கத்தில் இருந்து அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தவள் கேட்க, ஈஷ்வர் அவளையும் கிளம்ப சொன்னான்.