அடுத்த பெல் மணி நான்கு என்றது. “பல்லவி.. போதும்.. இது காதல் இல்லை.. தயவுசெஞ்சுதூங்கு.. இப்படியேயோசிச்சிட்டுஇருந்தாபைத்தியம்பிடிச்சிடும்..” மிகவும்முயன்றுதூங்கிபோனவள்மனக்கண்ணில்கண்டதுஎன்னமோஈஷ்வர்முகம்தான்.
“பல்லவி.. பொழுது விடிஞ்சிருச்சு பாரு, எழுந்திரு.” கோமதி எப்போதும் போல பேத்தியை ஐந்தரை மணிக்கு எழுப்பிவிட, பல்லவியால் கண்ணை கூட திறக்க முடியவில்லை.
“இன்னும் கொஞ்ச நேரம் பாட்டி..” திரும்பி படுக்க,
“பல்லவி.. என்ன பழக்கம் இது.. சூரியன் வரதுக்கு முன்னாடி பொட்டை புள்ளை எழுந்திரிச்சிருக்கணும், இல்லை அந்த வீடு விளங்கின மாதிரி தான், பெட்டை விட்டு எழு முதல்ல..” அவளின் பெட் ஷீட்டை உருவி கத்த, அவளுக்கு காலையிலே கடுப்பாகி போனது.
கோவத்தில் ஏதும் பேசிவிட்டால் விடவே மாட்டார், அவரின் பெரிய தொண்டையில் கத்தி கொண்டே இருப்பார்.. பாட்டியை தெரிந்தவள் என்பதால் நேரே அம்மாவிடம் சென்றவள்,
“ம்மா.. கொஞ்ச நேரம் தூங்குறேன், பாட்டி, அப்பா கேட்டா ரூம்ல படிச்சிட்டு இருக்கேன் சொல்லிடு.. ப்ளீஸ்..” கெஞ்சி, தூங்க சென்றாள். மூர்த்தி வரும் போது பல்லவி எங்க கேட்டு கொண்டே வர, ரத்னா மகள் சொன்னதை சொல்லி சமாளித்தவர், அவருக்கும், மாமியாருக்கும் காபி கலந்து கொடுத்தார்.
காலேஜ் பஸ் வருவதற்கு அரை மணி நேரம் இருக்கும் போது ரத்னா சென்று மகளை எழுப்பிவிட, அவசர அவசரமாக குளித்து கிளம்பி கீழே வந்தாள். “இன்னிக்கும் உன்னால தலை வலி..” மனதுக்குள் ஈஷ்வரை திட்டி கொண்டே கிட்சன் சென்றவள்,
“ம்மா.. ப்ளீஸ்ம்மா ஒரு காபி மட்டும் கொடு..” என்றாள்.
“காபியா..? டிபன் சாப்பிடு பல்லவி, காலேஜ்க்கு நேரம் ஆச்சு, பஸ் வந்துடும்..” இட்லி வைத்து கொடுக்க, சரியாக வந்தார் கோமதி.
“இதென்ன அவளுக்கு நீ இட்லி போட்டு கொடுத்திட்டு இருக்க..? விட்டா ஊட்டிவிடுவ போல.. பல்லவி நீயே எடுத்து சாப்பிடு போ..” என்று பேத்தியை விரட்ட, பல்லவிக்கு அந்த இட்லி இறங்கவே இல்லை.
அதிக தலைவலி. சாப்பிட முடியவில்லை. “என்ன ஆச்சு பல்லவி..? ஏன் அப்படியே வச்சிட்டிருக்க..?” ரத்னா மகளுக்கு லன்ச் எடுத்து வந்தவர் கவனித்து கேட்டார்.
“இல்லைம்மா.. தலை வலியில பசிக்கல..” என,
“என்ன இப்போ எல்லாம் உனக்குஅடிக்கடி தலைவலிவருது.. பாருகண்எல்லாம்சிவந்துஇருக்கு..” ரத்னாமகளைபார்த்துகவலைபட,