திகம்பரனின் திகம்பரி அவள் 7

சில வருடங்களுக்கு முன்பு..

“ஈஷ்வர்.. என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட..? காலேஜ்க்கு இன்னும் நேரம் இருக்கே..” கங்கா கிளம்பிய மகனுக்கு குரல் கொடுக்க, அவனோ நிற்கவே இல்லை. வாசலுக்கு நடக்க ஆரம்பித்துவிட்டான்.

ஈஷ்வர்.. உன்னை தான்.. சாப்பிட்டு போடா..”  கங்கா  மகனின் பின் வர

எனக்கு வேண்டாம்மா, நான் வெளியில பார்த்துகிறேன்..”  சொல்லி கொண்டே அவனின் ஸ்போர்ட்ஸ் பைக்கிடம் வந்தவன் பைக்கில் ஏறும் நேரம்,   “ஈஷ்வர்..”  என்ற குரல். அவனின் கால்கள் அப்படியே நின்று திரும்பி பார்த்தது

சாப்பிட்டு போங்க.. ஏன் இவ்வளவு அர்ஜென்ட்..? இன்னும் நேரம் இருக்கே..?”   தோட்டத்தில் கட்சி ஆட்களிடம் பேசி கொண்டிருந்த நரசிம்மன் கையில் இருந்த வாட்ச் பார்த்து  மகனிடம் சொல்ல

சரிப்பா..” என்றவன் வழியில் நின்ற கங்காவை முறைத்த வண்ணம் உள்ளே சென்றான்

அவரை சாப்பிடாம அனுப்ப கூடாதுன்னு சொல்லியிருக்கேன் இல்லை.. சீக்கிரம் போய் சாப்பாடு போடு ஓடு..” மனைவியை கடிந்து உள்ளே அனுப்பினார் நரசிம்மன்

இந்த இட்லி சாப்பிட தான் கிளம்புன என்னை ஏலம் விட்டு அப்பாக்கு காமிச்சு கொடுத்தியா தாய் குலமே..?”   கங்காவிடம் கடுப்பாக கேட்டபடி வேக வேகமாக முழுங்கி பிளேட்டை காலி செய்ய, அடுத்து பூரி தட்டில் நிறைந்தது

ம்மா..”  ஈஷ்வர் பல்லை கடித்தாலும் வெளியே நின்று உள்ளேயே பார்த்து கொண்டிருந்த நரசிம்மனை கவனத்தில் கொண்டு அதையும் சீக்கிரம் சாப்பிட்டு முடித்தவன், முன் போல இல்லாமல் நிதானமான நடையுடன் வெளியே வந்தான்

சாப்பிட்டியாப்பா..?  காலேஜ் தானே..?  பார்த்து போங்க..”  மகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு  விடை கொடுக்க, கேட் வரை பைக்கை உருட்டியவன், கொஞ்சமா தள்ளி வந்ததும் பறந்தான்

காலை சென்னை டிராபிக் அதிகமாக இருக்க, நேரம் பார்த்தவன், பொறுமை காக்க முடியாமல் வளைத்து வளைத்து பைக் ஓட்டினான். அரை மணி நேரத்தில் வர வேண்டிய மாலிற்கு இருபது நிமிடத்தில் வந்தடைந்தவன் பார்க்கிங்கில் பைக் நிறுத்திவிட்டு மால் வாசலுக்கு வந்தான்

கண்கள் யாரையோ தேடஅவன் தேடிய ஆள் இன்னும் வரவில்லை போல. “இன்னும் என்ன பண்றா..? அவ ப்ரண்ட்ஸ் எல்லாம் வந்துட்டாங்க..?”   இவன் தான் டென்ஷனான்

ஐந்து நிமிட காத்திருப்பிற்கு பிறகு அவன் எதிர்பார்த்த  அந்த வெள்ளை கலர் ஹோண்டா அமேஸ் கார் கண்ணில் பட்டது. “வந்துட்டா..” ஈஷ்வர் முகம் டக்கென பிரகாசம் கொண்டது

காரில் இருந்து இறங்கியவளும் ஓரக்கண்ணால்  இவனை பார்த்தபடி மாலிற்குள் நுழைந்தாள். அவள் நண்பர்களுடன் அவள் சேருவதை பார்த்த பிறகே  அந்த கார் அங்கிருந்து கிளம்ப,  இவன் சில நிமிடங்கள் சென்று உள்ளே சென்றான். 

பல்லவி கேங் முதலில் ப்ளோர் ப்ளோராக சுற்றி வர, பெண்கள் உடை பார்க்க ஷாப்பிற்குள் சென்றனர். “எல்லாம் துணி எடுக்கிறேன்னு படம் பார்க்க லேட் பண்ணிடாதீங்க..” ஆண் நண்பர்கள் சொல்லி சென்றனர். 

“இந்த டாப் நல்லா இருக்கு இல்லை..” ரேகா சொன்னவள் முன் பார்த்து, “ஏய்.. பல்லவி ஈஷ்வர் அண்ணா வராங்க..” என்றாள் சற்று சத்தமாக.  

“ஷ்ஷ்.. சத்தமா சொல்லாத..”  என்ற பல்லவியோ பின்னால் திரும்பவே இல்லை. ஈஷ்வர் சாவகாசமாக பல்லவி முன் வந்து நிற்க, ரேகா தான் இருவரையும் கண் விரித்து பார்த்து கொண்டிருந்தாள். 

“எப்படி இருக்க ரேகா..? ஒரு வழியா ஸ்கூல் லைப் முடிஞ்சுடுச்சு போல..?” நேற்று தான் ப்ளஸ் டூ பைனல் எக்ஸாம் முடித்ததை கேட்டான்  ஈஷ்வர்.  

“ஹா.. ஆமா.. ஆமாண்ணா.. முடிஞ்சிடுச்சுண்ணா.. நேத்து தான் முடிஞ்சது, அதான் லாஸ்ட்டா ஒரு கெட் டூ கெதர் மாதிரி ப்ரண்ட்ஸ் எல்லோரும் படத்துக்கு வந்தோம்..” என்றாள். 

ம்ம்..”  குனிந்திருந்த பல்லவியையே அவனின் கண்கள் வட்டமிட, பல்லவியின் உள்ளங்கைகள் வேர்த்தது. அவளின் தவிப்பு எப்போதும் போல ஈஷ்வரை மயக்க, கண்கள் அச்சடித்து அவள் மேலே நின்றது

ரேகா இருவரையும் சுவாரசியமாக  அடிக்கண்ணால் இருவரையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க,  “சரி.. நீ டிரஸ் பாரு..”  என்றான் ஈஷ்வர்.  

“சரி.. சரிண்ணா..”  அவள் பல்லவியை பார்த்து விலகினாள். இப்போது தனியே பல்லவி.. ஈஷ்வர் மட்டுமே. 

உங்க கேட் டூ கெதர் முடிச்சிட்டு இங்கேயே வெய்ட் பண்ணு, பேசணும்..” என்றான் ஈஷ்வர் பல்லவியிடம்.

.. இல்லை.. அண்.. அண்ணா வருவாங்க..”   பல்லவி கொஞ்சம்  பதட்டத்துடன் சொன்னாள்

“அவங்க வரதுக்குள்ள பேசிடுவேன்..”

இல்லை.. வேண்.. வேண்டாம்..”

லவி முதல்ல என்னை பாரேன்..”  ஈஷ்வர் மயக்கும் குரல், குனிந்திருந்த பல்லவியை அவனை பார்க்க வைத்தது

கொஞ்ச நேரம் தான்.. மிஞ்சி போனா ஒரு பைவ் மினிட்ஸ்.. ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டேன்,  ப்ளீஸ்..”   கண் சுருக்கி கேட்க, பல்லவியின் தலை தானாகவே சரியென்று அசைந்தது

தேங்ஸ்..” பளிச்சென்று சிரித்தவன்,  “ஹவ்   கிரேட் டைம்..” என்றான்

ம்ம்..” பல்லவி விட்டால் போதும் என்று நண்பர்களுடன்  ஓடிவிட்டாள். 

அவள் வரும் வரை அங்கு காத்திருக்க ஈஷ்வருக்கு ஆசை தான். ஆனால் முடியாதே. லன்ச் நேரம் வந்து கொள்ளலாம் என்று  அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் பைக் எடுத்து காலேஜ் கிளம்பினான்

பைக் மெதுவாக ஊர்ந்தது. வரும் போது எல்லோரையும் மின்னலாக கடந்து வந்தவன், இப்போது எல்லோருக்கும் வழி விட்டு சென்று கொண்டிருந்தான். காலேஜ் செல்ல விருப்பமில்லை. ஆனால் சென்றுதான் ஆக வேண்டும்

நரசிம்மனிடம் காலேஜ் போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தாச்சு, அவரை பொறுத்தவரை முதல்லே உண்மையை சொல்லிவிட வேண்டும். காலேஜ் கட்டடித்து விட்டு படத்திற்க்கு போகிறேன், நண்பர்களுடன் அவுட்டிங் போகிறேன் என்று சொல்லி சென்றால் கூட  ஒன்றும் சொல்ல மாட்டார். பார்த்து போ, பத்திரம் என்றதோடு நிறுத்தி கொள்வார்

ஆனால் காலேஜ் தான் போகிறேன் என்று பொய் சொல்லி ஊர் சுற்ற கூடாது. “நீங்க  இந்த நேரத்துக்கு இங்க தான் இருப்பீங்கன்னு அப்பாக்கு தெரியணும்.. அவ்வளவு தான் நான் உங்ககிட்ட எதிர்பார்க்கிறது..”  முதல்லே மிகவும் கண்டிப்புடன் சொல்லிவிட்டார்

அவனும் அவனின் ப்ரைவசியில் அவர் தலையிடுவதில்லை என்பதால் அதை மட்டும் சரியாக பாலோவ் செய்து விடுவான். இப்போதும் பைக் உருட்டி சென்னையின் மிக பிரபலமான  ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ்  கேம்பஸிற்குள் நுழைந்தான்

அவனின் நண்பன் படை அவனுக்காக காத்திருக்க, எல்லோருக்கும் ஹாய் சொன்னவன், உள்ளே வர,

என்ன காலையிலே போய்ட்டு வந்தாச்சா..?” விஷ்ணு எரிச்சலாக கேட்டபடி அவனுக்காக காத்திருந்தான்

இன்னிக்கு என்ன பிரச்சனை..?” ஈஷ்வர்  அவனின் அருகில் அமர்ந்து  கேட்டான்

ம்ப்ச்.. எனக்கு என்ன பிரச்சனை இருக்க போகுது அந்தாளை தவிர..? லீவுக்கு வந்துட்டார் மனுஷன்..”

ம்ப்ச்.. விஷ்ணு, உன்  அப்பா அவர்..”  ஈஷ்வர் கண்டிப்புடன் அதட்ட

உனக்கு புரியாது, நீ எப்போவும் அந்தாளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ..” அவன் கடுப்பாக சொன்னான்

சரி விடு..  வா கேன்டீன் போலாம்..”  அவன் சாப்பிடவில்லை என்று வாடிய முகமே காட்டி கொடுக்க, நண்பர்களை கிளாஸ் போக சொல்லிவிட்டு அவனுடன் கேன்டீன் சென்றான்.   தோசை மட்டும் இருக்க, அதையே வாங்கி கொடுக்க, முகம் சுருக்கி சாப்பிட்டான்

வீட்லே சாப்பிட வேண்டியது தானே..?” ஈஷ்வர் சொல்ல,  

சாப்பிட உட்காரும் போது தான் அந்தாள் பேசவே செய்வார்.. எனக்கு சுர்ர்ன்னு ஏறும்.. என்ன செய்யட்டும்..?” விஷ்ணு எரிச்சலாக சொன்னான் 

அத்தைகிட்ட கேட்டு ரூம்லே சாப்பிட்டுக்க வேண்டியது தானே..?”

யாரு உங்க அத்தை..? காமெடி பண்ணாம போடா.. புருஷனுக்கு பிடிக்காத ஒரு வேலை கூட செய்ய மாட்டாங்க, என்னமோ மிலிட்டரி ரூல்ஸ் மாதிரி டேபிள்ல தான் சாப்பிடணும்ன்னு கடுப்பேத்துறாங்க..”  தோசையை கடமைக்கே முழுங்கி வைக்க, ஈஷ்வர் அத்தையிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டான்

நரசிம்மனின் உடன் பிறந்த தங்கை மகன் தான் விஷ்ணு. ஈஷ்வர்க்கும், விஷ்ணுவிற்கும் இரண்டு வருட வயது வித்தியாசம் உண்டு, ஆனால் சிறு வயதில் ஒன்றாக வளர்ந்தவர்களுக்கு அந்த வயது வித்தியாசம் ஒன்றும் இல்லாமல் போக, பேர் சொல்லியே கூப்பிட்டு கொண்டனர்

விஷ்ணு சாப்பிட்டு முடிக்கவும் இருவருக்கும் காபி வாங்கி வந்த ஈஷ்வர், “குடிச்சிட்டு காலேஜ் கிளம்பு..” என,  

ம்ப்ச்.. இன்னிக்கு போக மூடில்லை..” என்றான் அவன்

விஷ்ணு.. டாக்டருக்கு படிக்கிற பொறுப்போடு பேசு.. ஒரு கிளாஸ் மிஸ் பண்ணாலும் கஷ்டம்.. போ..”

நான் போகல.. டாட்..”  

இதற்கு பிறகு பேச முடியாது.  “சரி இங்கேயே இரு, எனக்கு கிளாசுக்கு நேரமாச்சு..” ஈஷ்வர் கிளம்ப, 

எனக்கு இங்க முடியாது, வா வெளியே போலாம்..” என்றான் விஷ்ணு.

அப்படி என்ன தான்டா ஆச்சு..?” ஈஷ்வர் கேட்டு கொண்டே இருக்க, அவன் பைக் இருக்குமிடம் சென்றுவிட்டான்

மிகவும் அப்செட்டாக இருக்கிறான் புரிய, நரசிம்மனுக்கு விஷ்ணுவுடன் வெளியே போகிறேன் மெசேஜ் அனுப்பிவிட்டு அவன் பைக் எடுத்தான். விஷ்ணு முன்னால் செல்ல, இவன் அவன் பின்னால் சென்றான்.

எங்கும் நிறுத்தாமல் சென்று கொண்டே இருந்தான். பல்லவி  சென்றிருக்கும்  மால் எல்லாம் கடந்து போய் கொண்டே இருக்க, ஈஷ்வர் அவனுக்கு முன் சென்று நிறுத்த சொன்னான்

ம்ப்ச்.. என்னடா..?”

இப்போ எங்க போறோம்..?”

“ECR தான்..”

நம்ம பிரைவேட் பீச்சுக்கா..?”

ஆமாம்.. ஏன்..?”

டேய்.. இந்த மொட்டை வெயில்ல நீ போய் அலைய வெறிச்சு பார்த்து மணி கணக்கா உட்கார்ந்திருக்க நான் ஏண்டா வரணும்..?”  

விஷ்ணு பதில் சொல்லாமல் ஈஷ்வரை  கண் சுருக்கி பார்த்தான்

பல்லவியை  xxx மால்ல  வெய்ட் பண்ண சொல்லியிருக்கேன்..”  ஈஷ்வர் உண்மையை சொல்ல

அட்லாஸ்ட் இன்னிக்கு ப்ரொபோஸ் பண்ண போற..?” லேசான சிரிப்புடன் கேட்டான் விஷ்ணு

ஆமாம்டா.. அவ்வளவு தூரம் போய்ட்டு திரும்ப சிட்டிக்குள்ள வர லேட் ஆகிடும்.. இன்னும் இரண்டு மணி நேரம் தான் இருக்கு..”

சரி..  எங்க போலாம் நீயே சொல்லு..”  விஷ்ணு அவனிடமே கேட்டான்

உனக்கு மால் போக பிடிக்காது.. வேறெங்க போக..?”  ஈஷ்வர் சலித்து கொண்டான்

இன்னிக்கு மாலே போகலாம்..” விஷ்ணு சொல்ல

பல்லவி போயிருக்கிற மால் ஓகேவா..?”  கேட்டு இருவரும் அங்கு சென்றனர்

ப்ரொபோஸ் பண்ண எதுவும் வாங்கலையா..?” விஷ்ணு கேட்க

என்ன வாங்க..?” என்றான் ஈஷ்வர் மென் சிரிப்புடன்.

றென்ன ரிங், ரெட் ரோஸ், பெரிய டெய்ரி மில்க் சாக்குலேட்இது தானே காதல் சொல்ற முறையா நம்மாளுங்க வச்சிருக்காங்க, நீயும் அந்த காமெடியையே  பண்ண வேண்டியது தானே..”

விஷ்ணு..” ஈஷ்வர்  உர்ரென்று  அதட்ட

என்ன காதலோ போ, அதுவும் பப்பி  லவ் வேற.. நீ  டென்த் படிக்கும் போது, அந்த அம்மணி நைன்த் படிக்க  நம்ம ஸ்கூல்க்கு நியூ அட்மிஷன் வந்தப்போசெம கியூட்டா இருக்கா  இல்லைன்னு  பார்க்க ஆரம்பிச்ச, அந்த கியூட் இந்த நாலு வருஷத்துல கிரிஷ்ஷா மாறி, இப்போ காதல்ல வந்து நிக்குது..”