Advertisement

தட்பவெட்பம் : அத்தியாயம் 20 

 

அத்தியாயம் 20 பகுதி 2 

 

ஆசையாக வளர்த்த மகள் தேன் ஊட்டி பால் ஊட்டி, கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து பழகியவர்கள்.

இவளின் பிடிவாதத்திற்கு முன் இவர்களுக்கு இந்த உலகத்தில் எது ஒன்றும்  பெரிதில்லை . அப்படிப்பட்ட மக்கள் இன்று ஒருவரை விரும்புகிறேன் அதுவும் நம் தகுதிக்கு ஏற்றவன் இல்லை என்று தெரிந்தும் மகளுக்காக இறங்கிவர துணிந்தார்கள் . இத்தகைய செயல்களால்  முற்றிலும் அவன் மீது நம்பிக்கை இழந்தனர். இப்படி தன் கண் முன்னே அவன் கோபத்தில் கை ஓங்க துணிந்தவன் . அவனை நம்பி மகளை அவன் உடன் வாழ அனுப்பிவைத்தால் இவன் கோபத்தில் ஏதாவது செய்து விடுவானோ என்கிற பயம் வந்து விட்டது. ராணியின் பெற்றோர்கள் சொன்ன நிபந்தனையில் இருந்து மாறவில்லை..

 

“அதே நிலை தான் எனக்கு, நீ சம்பாதித்து தான் நாம் வாழ வேண்டும் என்ற நிலை எனக்கு இங்க இல்ல. எங்கிட்ட எல்லாம் இருக்கு. நீயும் இங்கே வந்துவிட்டால் நான் ராணி. யுவராணி”   ஆணவத்தில் வார்த்தைகளை வீசியவள் . சற்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டு மீண்டும் அவனிடம் வந்து நின்றாள் 

 

“இதுதான் உன் முடிவா பேபி மா ?”

 

“என் முடிவு இதுவே . நீ உன் முடிவை மாற்றிக்கொள்ள பார் ” என்று பார்வையாலேயே அவளுக்கு செய்தி கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் மீது கடும் கோபம் கொண்டிருந்தாள். அவன் அவளிடம் பேசாமல் தவிர்த்து வந்தான். அதன் பின் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை 

இதற்கிடையில் அவளின் லண்டன் பயணத்திற்கு உரிய  நாளும் நெருங்கியது .

 

அவளின் கோபம் யாரை பாதிக்கும் . அவன் கோபம் யாரை பாதிக்கும் ? 

 

இவர்களின் காதல் விளையாட்டில் வசந்த காலமாக இருந்தவர்கள் இன்று அக்னி நட்சத்திர  வெப்பத்தில் குடை நிழலில் நிற்கும் இடம் என் வீடு உன் வீட்டில் இல்லை என்று அவர்களின் நிலை ஆனது . யாரிடத்தில் இருந்தாலும் வாழ்வது அவர்கள் தான் . 

————————————————————————–

 

அவளிடம் சண்டை போட்டு வீடு திரும்பிய வினய் க்கு மனம் முழுவதும் வலி யே மிஞ்சியது. தன் அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டு படுத்துவிட்டான். தேவி வேலையிலிருந்து வந்ததும் சின்னவன் இன்று தமக்கு முன் அலுவலகத்திலிருந்து  வந்திருந்ததை கவனித்தவர் ஆச்சரியம் அடைந்தார். கல்லூரி படிக்கும் காலத்திலும் பத்து மணி குறையாது வீடு வந்து சேரமாட்டான். இப்பொழுது வேலைக்கு சேர்ந்த நாள் முதல் அவன் அதையே வழக்கம் ஆக்கிக்கொண்டான்.

 

வினய் காலையில் என்னதான் யுவராணியை கல்லூரியில் பார்த்தாலும் தனிமையில் சில பொழுது நேரம் பேசினால் மட்டுமே அவர்கள் இருவருக்கும் அன்றைய நாள் முழுமை பெரும் . இதோ வேலையில் சேர்ந்தால் ராணி தன்னை வந்து பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்று  அவனுக்கு அன்பு கட்டளை விடுத்தாள். அவள் அழைக்காமல் இருந்தாலும் அவன் அவளை தேடி சென்று  பார்த்துவிட்டு தான் வீடு திரும்பு வான் . நண்பர்கள் பட்டாளம் இருந்தும் அவர்களிடத்தில் அரட்டை அடித்தாலும் பின் ஏதேனும் ஒரு காரணம் காட்டி  விட்டு யுவராணியை பறந்து விடுவான் .  

 

தேவி எதுவாக இருந்தாலும் வினோத்தை நாடுவார். அப்பொழுது அவன் பெங்களூரில் குடியேறியதால் இவர்க்கு வினய் யை தவிர யாரும் இல்லை. ஆனால் இவனோ பொறுப்பு தெரியாமல் நேரம் காலம் தெரியாமல் வீட்டிற்கு வருவது தேவிக்கு சற்று கோபத்தை உண்டாக்கியது. கோவிலுக்குப் போக வேண்டும் இன்றைக்கு சஷ்டி , சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை , ஏகாதசி என்று மாதத்தில் குறைந்தபட்சம் ஆறு ஏழு முறையேனும் அவர் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து வருவது உறுதி, அது மட்டும் அல்லாது அவருக்கு மருத்துவ பரிசோதனைக்கு மாதம் ஒருமுறை மருத்துவரிடம் சென்று வரவேண்டும் அதற்கு அவர் அவனை அழைத்துப் பார்த்துவிட்டார். இப்படி எதற்கு அழைத்தாலும் வினய்யிடம் இருந்து வரும் ஒரே பதில் ” அம்மா நம் வீட்டில் தான் கார் இருக்கு அதுல போய் வர வேண்டியது தானே. நான் வேண்டுமானால் நம் ட்ராவில்ஸ் டிரைவர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் சொல்லி விடுகிறேன். சாரிம்மா முக்கியமான வேலை இப்போ இருக்கு நான் அங்கு போய் தான் ஆக வேண்டும்”. என்று கூறி விட்டு தன் வேலையை பார்க்கச் சென்று விடுவான். 

 

தேவிக்கு இவன் கூறும் வார்த்தைகள் மனதை அழுத்தும். “அவன் சொல்லித்தான் எனக்கு கார் நம் வீட்டில் இருப்பது தெரியுமா என்ன ? அல்லது எனக்கு அதை எடுத்துக் கொண்டு போகத்தான் தெரியா தா? நம் பிள்ளை ஆயிற்றே இவனைக் காலையில் அலுவலகம் செல்லும் நேரம் தான் பார்க்கிறோம் . மாலை எப்பொழுது வருவான் எங்கே சென்று வருகிறான் ஒன்றும் தெரியவில்லை. இவனிடம் சிறிது நேரம் பேசலாம் அதற்குக் கோவில் குளம் சென்றால் நேரம் கிடைக்கும் அந்த சந்தர்ப்பத்தில் இவனிடம் பேசலாம் என்று இருந்தால் இப்படி பொறுப்பு இல்லாமல்  இருக்கிறது . தாயின் உடல் நிலை பற்றிய அக்கறை இவனுக்கு உள்ளது என்றால் அதுவும் இல்லை “அம்மா உனக்கு பிரஷர் அதிகமாக இருக்கு நீங்கள் வீட்டில் இருங்கள் சென்னை கிளையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இவன் கூறுவான் என்று இருந்தால் , இவன் தனக்கு விருப்பமான வேலையைத் தான் பார்ப்பேன் என்று கூறிவிட்டான் . அவன் இந்த பிசினஸ் பார்க்க வைத்துவிட்டு, தான் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்தார் தேவி . இவனை நினைக்கும் போதெல்லாம் அவருடைய கணவரை நினைக்காமல் இருந்தது இல்லை. தந்தை ஒருவர் வீட்டில் இருந்தால் பிள்ளைகள் சற்று பயத்திலோ அல்லது பாசத்திலோ “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று வாழ்வார்கள் என்னவோ என்று அவருக்குத் தோன்றும் . மூத்த பிள்ளை பொறுப்புடன் இருந்தால் இளையவன் வீட்டிற்கு கடைக்குட்டி செல்லப் பிள்ளை இதனால் இவன் வேலை செய்ய வேண்டாம் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன ?  என்ன தான் இருந்தும் தேவிக்கு அவன் மீது வினோத்தை விட சற்று பாசம் அதிகம் தான் . தந்தை முகம் பார்த்து மறந்து வளர்ந்த பிள்ளை என்பதால் அதிகம் கண்டிக்கவும் மாட்டார் . இவனுக்கு தாய் மற்றும் அண்ணன்  இடத்தில் சலுகைகள் அதிகம் . வினோத் சில நேரம் அவனை கண்டித்து இருக்கிறான். “தோளுக்கு மிஞ்சினால் தோழன்” என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறிவுரை அளிக்கவும் தவற மாட்டான் . “வீட்டுக்குப் பொறுப்பாக இரு டா”என்று.

 

அதை நினைத்துத்தான் தேவிக்கு பல நேரம் கவலை வரும் . தனக்கு முன் வந்தவன் வீட்டில் தேடியவர் அவன் அறை கதவு சாத்தப் பட்டிருப்பதை பார்த்து அவருக்கு சற்று பதற்றம் ஏற்பட்டது . அவன் உடம்புக்கு ஏதேனும் உபாதை ஏற்பட்டு உள்ள அதனால் தானோ என்னவோ தன்  வேளையில் இருந்து சீக்கிரம் வந்து விட்டான்  என்று ஒரு தாயாக துடித்து விட்டாள் . அவன் அறை  கதவை தட்டுவதற்கு கதவின் மீது கை வைத்ததும் தானாகக் கதவு திறந்தது. கதவை தாளிடாமல் இருக்கிறது என்று சற்று அமைதி கொண்டார். அறையினுள் நுழைந்தவர் வினய் நன்றாக தூக்கத்தில் இருந்ததால் எழுப்பாமல் நெற்றியை தொட்டு பார்த்து  காய்ச்சல் இருக்குமோ என்று . அப்படி ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் அறையை விட்டு வெளியேறிவிட்டார் . 

 

வினோத் வினய் தேவி மூவர் ஒன்றாக இருக்கும் சமயங்களில் அங்கு கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. சகோதரர்கள் சண்டை ஆகட்டும்  இருவரும் சேர்ந்து வீடியோ கேம் விளையாடுகிறோம் என்ற பெயரில் வீட்டை ஒரு வழி செய்து விடுவார்கள். இவர்களுக்கு நடுவில் பஞ்சாயத்துக்கு தேவி சென்றால் அவ்வளவுதான் உனக்கு அவன் தான் ஒஸ்தி, உனக்கு இவன் தான் செல்லப்பிள்ளை, நீ எப்போதும் அவருக்கு தான் பரிந்து வருவாய் என்று அவர் தலையை உருட்டி எடுத்து விடுவார்கள். 

 

பின் மூவரும் சேர்ந்து படம் பார்ப்பது. பிள்ளைகள் இருவரும் அவரவருக்கு பிடித்த உணவு செய்து தர சொல்லி நாங்கள் அவருக்கு உதவுவதாகச் சொல்லி சமையல் அறையை அலங்கோலமாக மாற்றி விடுவார்கள்.  

 

வினோத் வினய்யிடம் மிரட்டி உருட்டி அடம்பிடித்து மாதம் ஒரு முறையேனும் அவர்கள் வீட்டு மாடியில் போடப்பட்டிருக்கும் மாடித் தோட்டத்தில் நிலாச் சோறு சாப்பிட அழைத்து வந்துவிடுவான்.

 

இவை யாவையும் நினைத்துப் பார்த்த தேவியின் கண்களில் கண்ணீர் முத்துக்கள் உருண்டோடும். தேவிக்கு இரு பிள்ளைகளுடன் இருந்த நாட்களை எண்ணி எண்ணி மிகவும் சோர்ந்து போய் விட்டார் . ஏனோ அவருக்கு கடைக்குட்டி வீட்டிலிருந்தும் அவன் தன் இடம்  இருந்து தள்ளியே இருப்பது  உணர்ந்து இருந்தார் சில நேரங்களில் .

 

“இந்த தேஜு குட்டி, இங்கேதான் வேலை பார்க்கிறேன் அத்தை நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று பேசியவள் இதுவரை இரண்டு முறை வந்திருப்பாளோ ? அவளை அழைத்து பேசினால் அதோ வரேன் இதோ வரேன் சொல்ல வேண்டியது இல்லை அவள் உடைய  முதலாளி போட்டு வறுத்து எடுக்க வேண்டியது. என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு சரியான விளக்கம் கொடுப்பதில்லை. ஹ்ம்ம் இரண்டு பிள்ளையை பெற்றேன் என்று தான் பெயர் சாப்டியா அம்மா, மருந்து எடுத்துக் கொள், என்று பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதற்கு கூட எந்த பிள்ளைக்கும் நேரம் கிடைப்பது இல்லை . இதோ இந்த வினய், வீட்டில் நான் ஒருத்தி இருக்கேன் என்று நினைப்பு இருக்கிறதா ? அப்படி என்னதான் வேலை யோ. நம் தொழில்  வளர்ப்பதற்கும் தங்கள் நிலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக வினோத் பெங்களூரில் அவர்களின் போக்குவரத்துக்கு வணிகத்தின் புதிய கிளையை ஆரம்பித்து அங்கு பார்த்துக்கொண்டு இருக்கிறான் . இவன் இங்கு இந்த கிளையை பார்க்க வேண்டும் என்று நான் ஆசை பட்டது தவறு . சின்னவனை பெங்களூர் அனுப்பியிருந்தால்  அவ்வளவுதான் இங்கு விலகி இருப்பது போல் தான் உள்ளது. அங்கு சென்றால் நிரந்தர விடுதலை கொடுத்தார் போல் ஆகிவிடும்   என்று அவர் எண்ணிக்கொண்டார். பிள்ளைகள் உழைக்கும் காலத்தில் அவர்களை தடுக்க கூடாது. பெரியவனை பற்றிய கவலை  கூட எனக்கு  இல்லை. இதோ இந்த சின்னதுதான் என்ன செய்கிறான் எப்போது வீட்டிற்கு வருகிறான் என்று தான் தெரியவில்லை . இவனுக்கு முதலில் கால் கட்டு போடவேண்டும். ஆமாம் இந்த தேஜு குட்டி வீட்டுக்கு வந்துவிட்டால் பின் எனக்கு கவலை என்பது இல்லை. அவன் என்னைக் கண்டுகொள்கிறானோ இல்லையோ . இவனுக்கும் சற்று பொறுப்பு வந்து விடும் . நேரத்துக்கு வீடு வந்து சேர்த்துவிடுவான். அவனுக்கும் இந்த பிசினெஸ் கொடுத்துவிட்டு வினோத்திடம் சென்று விட வேண்டும். பெரிய மருமகள் வேறு மாதமாக இருப்பதால் அவளை நான் சென்று பார்த்துக்கொள்வதுதான் நல்லது. இங்க இரண்டும் எதுவேண்டுமானாலும் உருட்டி கொண்டிருக்கட்டும். சின்னஞ்சிறுசுகள் தனிமை விரும்புவார்கள் நாம் ஏன் அவர்களுக்கு நடுவில் நந்திபோல். என்று இவர் கனவு கோட்டை மேலும் மேலும் கட்டிக் கொண்டே போனார் . பாவம் அவருக்கு தெரியவில்லை  இதில் எது ஒன்றும் நடக்கப்போவது இல்லை என்று. 

 

அதன்படி அவர் வினய் யை விழுப்புரம் அழைத்துச் சென்று தேஜு விற்கு மணம் முடித்து வைத்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டி கொண்டிருந்தார். அதற்கு முதல் படியாக நீளமேகத்திடம்  விஷயத்தைக் கூறி விட்டார். நீலமேகம் அருள்மொழி இருவருக்கும் மனம் நிறைந்த சந்தோஷம். திருமணத்திற்கு ஏற்பாடுகளும் செய்வதாக உறுதி அளித்து விட்டார். மகளுக்கு அழைத்து வரும் விடுமுறைக்கு வீட்டுக்கு வருமாறு கூறிவிட்டனர். 

 

மனிதன் ஆத்திரத்தில் யோசிக்காமல் எடுக்கும் முடிவு. சந்தோஷத்தில் தன் நிலை மறந்து மற்றவர்களுக்கு கொடுக்கும் வாக்கும் மிக மோசமான நிலையை உருவாக்கும். 

 

தொடரும் 

Advertisement