Advertisement

ஜோல்னா பை – 9

உயர் தர கல்வி கூடம் போலும். உயர்ந்த கட்டிடமும் அதன் ஆடம்பரமும் மிரட்டி தான் பார்த்தது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை வாரி கொண்டு அழகாகக் கட்டிருந்தார்கள்.பள்ளியின் அமைப்பை கொண்டே அதன் தரத்தை குறித்து விடலாம் என்பது தற்போது நாகரிக கூடம் கற்ற பாடம்.

பெரும்பாலும் அங்குப் படிக்கும் மாணவர்கள் யாவரும் சிறப்பான பின் புலம் உள்ளவர்களாகத் தான் இருக்க வேண்டும்.

காசுக் கேத்த பணியாரம் என்பது போல் கல்வியும் ஆகி போக வெகு சிறப்பான பாடத் திட்டம் அமைப்பிருந்தது. அப்பள்ளியில் தான் எட்டாம் வகுப்பு படித்து வந்தான் ரோஷன்.

தோழர் தோழியெனப் பத்துக்கும் மேற் பட்ட ஆண் பெண் குழுமி இருக்க. நடுவில் இருந்து அவர்கள் கேட்டதை ஆர்டர் சொல்லி கொண்டு இருந்தான் ரோஷன் பெரிய மனிதனின் தோரணையோடு.

குட்டி பிள்ளையின் வரவுக்கு ஐயா ட்ரீட் இன்று நேற்றைய தினம் தாய் தந்தை மூலம் விடயத்தை அறிந்தவன்.

சந்தோசத்தில் துள்ளி குதித்தான் இது தனியாக இருந்த பிள்ளையின் ஏக்கம் என்று தான் சொல்ல வேண்டும். புது வரவின் களிப்பு இதோ தற்போது வரை அடங்க மறுக்கத் தோழர்களுக்கு ட்ரீட்.

எட்டாம் வகுப்பு மாணவனுக்குக் கையில் பணம் புகுந்து விளையாடியது. அசோக், ராகவி, ரோஷன் மானு, சங்கீதா, மோனல், ரித்விக் என்று நண்பர்கள் பட்டாளம் கூடி நின்று கொண்டாட்டம்.

அசோக் ரித்விக் நோக்கி குனிந்து மெதுவாக “ரித்து நான் கேட்டது என்னடா ஆச்சு?” என்றதும் சிறு பதட்டத்துடன்.

“டேய் வேணாம் டா நம்ப அப்புறம் பேசலாம் எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு”

“ப்ச் நான் இருக்கேன். சும்மா அதுல என்னதான் இருக்குனு பார்ப்போம் டா ரித்தி” அசோக் சொல்ல அரை மனதாக.

“சரி நாளைக்கி ஸ்கூல் முடியட்டும்” இவர்கள் இங்கே பேசி கொண்டு இருக்க நண்பர்கள் குழுவியில் ஒருத்தி,

“ஹே! அசோக் அது என்ன எப்போ பாரு நீங்க இரண்டு பேரும் தனியாவே பேசிக்கிறீங்க. சம்திங் எதோ பண்ணுறீங்க என்னது அது?” என்றதும் மற்றவர்களும் பிடித்துக் கொண்டனர்.

சமீப காலமாக இருவரும் தனியாகச் செல்வதையும் அவ்வப்போது இருவரும் மெல்லிய குரலில் பேசி கொள்வதையும் தோழமைகள் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றனர்.

“ப்ச் அது வேற மேட்டர் டா” என்றது ஓர் விடலை.

இருவரும் திருத் திருவென முழித்து விட்டுப் பெண்களைப் பார்த்து தயங்கி நிற்க அதில் ஓர் மங்கை “ஹே! என்ன எங்களைப் பார்த்து முழிக்கிற என்ன விஷயம் சொல்லு?” என்க ஆவலுடன் மற்ற தோழிகளும் சேர்ந்து கொண்டனர்.

அவர்களது கூச்சல் அதிகமாக அசோக் “வெயிட்! வெயிட்! சொல்லுறேன் எல்லாரும் க்லோசா வாங்க” என்றதும் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு தோழமைகள் கூட்டம் நெருங்கி அமர்ந்தது.

அவர்கள் அனைவரும் அசோக் முகத்தைப் பார்க்க அவனோ ரித்விக்கை பார்த்து நின்றான். அவர்களது செய்கை சிறு எரிச்சலை தர “டேய் என்ன இரண்டு பேரும் மாறி மாறி லுக்குச் சொல்ல போறீங்களா? இல்லையா?” ராகினி அதட்ட.

“சொல்றேன் பட் விஷயம் வெளில போகக் கூடாது” அசோக்.

“ஹ்ம்ம்! சொல்லு டா நம்ப ப்ரண்ட்ஸ் தானே”

“நான் எங்க அப்பா கூட இன்டர்நேஷனல் பிசினஸ் மீட் போயிருந்தேன் தானே போன மன்த். அங்கே நிறையப் பார்த்தேன் டா.

ட்ரிங்க்ஸ் அண்ட் ட்ரக் வெரைட்டிஸ் அப்பாக்கு தெரியாம சில பிளவர் எடுத்துட்டு வந்து இருக்கேன் ரொம்ப ஆல்கஹால் இல்ல டா பட் சூப்பர்” கிசு கிசு குரலில் அசோக் சொல்ல.

“அட பாவி இதெல்லாம் ரொம்பத் தப்புடா. எங்க அப்பாவும் போவார் பட் ட்ரிங்க்ஸ் பார்ட்டி அலோ இல்லை அம்மாக்கு பிடிக்காது” ரோஷன்.

“ஜஸ்ட் அதுல அப்படி என்ன இருக்குனு தெருஞ்சுகாத் தானே. இதெல்லாம் ஒன்னும் தப்பில்ல டா நெட்ல பாரு எத்தனை வீடியோ இருக்கு தெரியுமா? ப்ராண்ட் மாதிரி” அசோக்

“ஏன்டா பொண்ணுகளுக்கு வோட்கா மாதிரி வேற எதாவது இருக்கா மைல்டு ஆல்கஹால்” தோழிகள் கூட்டத்தில் ஒரு பெண் ஆர்வமாகக் கேட்க. அதன் பின் பேச்சு சற்று எல்லை மீறிய விடயங்களுக்குச் சென்றது.

கையில் உலகத்தைத் திணித்து விட்டுக் கண்ணை மூடி கொள்கிறோம், ஆனால் கையில் திணிக்கப் பட்ட தொழில்நுட்பம் எத்தகைய ஆபத்தான விடயத்தை வெகு ஆர்வமாகச் செய்யத் தூண்டுகிறது பாருங்கள்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஒரு புறம் நல்ல பொருளாதார வளர்ச்சியையும் எளிய முறையையும் கொடுத்து வசதி செய்து கொடுப்பது வரமென்றால்,

மறுபுறம் தேவையற்ற கழிவுகளைத் திணித்துச் சிறியவர் முதல் பெரியவர் வரை அதில் சிக்கி நிற்பது பெரும் சபா கேடு தான்.

அத்தகைய விடயம் தான் இங்கு நடந்தது. அதில் என்ன அப்படி என்று பார்க்க போயி, இன்னும் பல கற்று இந்தத் தோழமைகள் குழு ஒரு ரகசிய குழு அமைத்து இதனைப் பற்றி இரவில் பேசும் அளவிற்கு ஆர்வத்தைத் தூண்டி நின்றது.

கண்ணாடி பாத்திரத்தை ஒற்றைக் கையில் கையாளும் பருவத்தில் நிற்கும் இவர்களுக்கு அதனை எப்படி பிடிக்க வேண்டும்.

எத்தகைய கவனத்துடன் அதனைக் கையாள வேண்டும். எந்த வழி தனது பாதையை அமைத்தால் கண்ணாடி உடையாமல் கொண்டு சேர்க்க முடியும் என்பதைக் கற்பிக்க வேண்டியது பெற்றவர்கள் கடமை அல்லவா.

ஆனால் இங்குச் சில பெற்றவர்களே வழி தெரியாமல் தங்களது சூழலுக்குள் சிக்கி பிள்ளைகளைக் கவனிக்கத் தவற.அது எத்தகைய பாதிப்பை கொடுக்கப் போகிறது என்பதைக் கனவில் கூட எண்ண முடியாது.

அசோக் ரித்விக் வீட்டில் பெற்றோர்கள் இருவரும் தொழில் அதிபர்கள் என்பதால் பெற்றவர்கள் அவர்களைக் கவனிக்கும் நேரம் மிகவும் குறைவு சங்கீதா மானு மோனல் அனைவரும் ஒரே ராகம் தான்.

ராகவி பிரியா இருவரும் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் நகரத்தில் வளர்ந்த பிள்ளைகள்.

ரோஷனும் அப்படியே ரோஷன், ராகவி ,பிரியா மூவரது தாயாரும் இல்லத்தரசிகள் என்பதால் பிள்ளைகளிடம் சற்று கண்டிப்புடன் தான் இருப்பார்கள்.

அதிலும் பிரியாவிற்குத் தந்தை இறந்து போகத் தாய் தான் எல்லாம்.இந்நிலையில் ரோஷனது தாய் அனுப்பிரிய தாய்மை உண்டாக. அவளது உடல் சோர்வு படுத்தியெடுக்க ரோஷனை கவனிக்க முடியவில்லை.

தாத்தா பாட்டியான ராகவ் மேகலா ரொம்பச் செல்லம் என்பதால் பிள்ளை உண்டு விளையாடி படித்துத் தூங்க என வழமையான இடத்தை மற்றுமே தாத்தா பாட்டி நிரப்பி நின்றனர்.

அது இன்னும் வசதி பண்ணி கொடுக்க மெது மெதுவாக விஷம் பரவத் தொடங்கியது.

அன்று காலையில் பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்த ரோஷன் தனது தந்தையிடம் வந்து “அப்பா எனக்கு ஒரு பைவ் தோவ்சான் வேணும்”

“எதுக்கு டா”

“வேணுப்பா பிரண்ட்ஸ் எல்லாம் வெளில போறோம்” என்றதும் ஏன்? எதற்கு? எங்கு? என்ற கேள்விகள் இல்லாமல் அலுவலகம் செல்ல வேண்டிய அவசரம் வேறு உள்ளதால்.தனது பையில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்து விட்டுச் சென்றான் ராகேஷ்.

“ராகவ், மேகலா இருவரும் அங்குத் தான் அமர்ந்திருந்தனர். ஏன்? எதற்கு?” என்று பேரனிடம் எந்த விதமான கேள்வியும் கேட்க வில்லைப் பணத்தை வாங்கிக் கொண்டு பள்ளி வாகனத்தில் சென்று விட்டான் ரோஷன்.

அங்குப் பள்ளியில்…

“ஹே நீ சொன்ன மாதிரி என் பங்கு கொடுத்துட்டேன்” என்று தந்தையிடம் வாங்கி வந்த பணத்தை ரோஷன் அசோக்கிடம் கொடுக்க. அவரவர் பங்கு என்று அனைவரும் அவன் கையில் கொடுத்தனர் ராகினி மட்டும் மூவாயிரம் கொடுக்க.

“என்ன ராகினி வெறும் த்ரீ தோவ்சன் கொடுக்குற”

“ப்ச் அம்மா செம கேள்வி என்னால சமாளிக்க முடியல டா ப்ளீஸ்! ப்ளீஸ்! நெக்ஸ்ட் வீக் மீதி தரேன்” என்றதும் மோனல்.

“டேய் அசோக் ராகிக்கு நான் தரேன்” என்று ராகினிக்கும் சேர்த்து பணத்தை கொடுத்தாள்.

ரித்விக் “உனக்கு ஏது இவ்வளவு பணம்”

“எஸ்பிரிமெண்ட் புக் அண்ட் பீஸ் சொல்லி அப்பாகிட்ட காசு வாங்கிட்டேன்”

“லூசு ஸ்கூலை வந்து கேட்டா மாடிப்போம் யா” மானு பயந்து சொல்ல.

“அதை அப்போ பார்த்துக்கலாம்” என்றது மங்கை ஓடும் பாம்பை அதன் விஷ தன்மை அறியாது பிடித்து விளையாடும் பருவம் போலும்.

“சரி டா என்ன வாங்க போற” ஆர்வமாக ரோஷன்

“நிறையப் பார்த்தேன் அதுல ட்ரிங்க்ஸ் மட்டும் வாங்கிக்கலாம் ஒரு ஒரு சிப் ட்ரை பண்ணுற மாதிரி”, அசோக்.

ரித்விக் “பார்ட்டி எங்க வீட்டுல அம்மா அப்பா ஊருக்கு போகட்டும் நான் டேட் சொல்லுறேன்”

“டேய் நேத்து என்ன குரூப்ல ஒரு மாதிரி போட்டோஸ் போடுற அப்பா பார்த்தா நான் அவுளோ தான்” ராகினி பயத்துடன் சொல்ல.

“அது ஜஸ்ட் ப்ராண்ட் சொல்ல. அந்தப் பொண்ணு கையில இருக்குற லிக்கர் பாரு. உன்னை யாரு அந்தப் பொண்ணைப் பார்க்க சொன்னா” என்றதும் ராகினி யோசனையாக ப்ரியாவோ சிறு பயத்துடன்

“அசோக் இது மாதிரி பிக் போடாத குரூப்ல பொண்ணுங்க நாங்க இருக்கோம் தானே”

“அந்தப் பொண்ணு கொஞ்சம் லோ கட் டிரஸ் பண்ணிருக்கு மத்த படி ஒண்ணுமில்லை நீ ஒரி பண்ணாதே” வெகு சாதாரணமாக பேசினான் ரித்விக்.

சங்கீதா,“டேய் எப்படி இருந்தாலும் இனி போடாத”

“சரி சங்கி போடல” என்றான் அசோக் அரைகுறை கண்ணைக் கூசும் ஆடை அணிந்து ஒரு பெண் கையில் மது கோப்பையுடன் இருக்கும் பதிவை அனுப்பி வைத்தான் அசோக்.

அவன் அதில் உள்ள மதுவை குறித்து அனுப்பினாலும். ஒவ்வாமை கொடுக்கும் அந்தப் பெண்ணின் படம் சிறு நெருடலை கொடுத்தது பெண்களுக்கு.

சிறு சிறு தயக்கத்தை எட்டி பிடித்து நாகரிகமும் வளர்ப்பும் நின்றாலும். பெரும் ஆர்வமும் சிறு போதையும் பெரும் பிரளயத்தைக் கொடுக்கப் போவதை அறியாமல்,

இது தானே? சும்மா தானே? செய்தால் என்ன? அப்படி என்ன ஆகிவிடும்?அப்படி என்ன இதில்? என்று அசட்டை செய்து தீயில் விறல் வைக்கத் துணிந்து நின்றது விடலைகளும் மங்கைகளும்.

படிப்பு ஒரு புறம் சென்றாலும் இவர்களது ஆகாத குழுவில் ஆகாத வேலைகளும் பல ஒவ்வாத நட்புகளுடன் கை கோர்த்து மாதங்கள் தாண்டி தொடர்ந்து.

தினமும் இதனைப் பற்றிய பேச்சு ஒரு மணி நேரம் தோழமைகள் தொடர அதிகம் போனில் நின்றனர் தோழமைகள் குழு.

படிப்பிலும் விளையாட்டிலும் மற்ற செயல்களிலும் பிள்ளைகளின் கவனம் செல்லாமல் மந்த நிலையில் இருந்தனர். இதனைப் பெற்றோர்களும் கருத்தில் கொள்ளவில்லை.

சரியாக ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில் அனுப்ரியாவிற்கு இரு தினங்களில் பிரசவம் என்ற நிலையில்.

ஷர்மிளாவை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார் இராமநாதன். அன்று தான் பெரும் பார்ட்டிக்கு ரித்விக் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர் பிள்ளைகள்.

வாழ்க்கையில் அனைவருக்கும் மறக்க முடியாது நாளாக இருக்க போவதை அறியாமல் சிறு நேர களிப்புக்கு பல நாள் வடுவை இழுத்து வைத்து கொண்டனர் எதிர் கால தலைமுறையினர்.

 

Advertisement