Advertisement

ஜோல்னா பை – 8

தனியார் மருத்துமனை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அருகில் ஓய்ந்து அமர்ந்திருந்தனர் வீட்டு மக்கள். ஷர்மிளா, கண்ணன் மலர், ரோஷன், ராகினி ,ராகேஷ், அனு, ராகவ், மேகலா என்று அத்தனை பேரும் குழுமி இருந்தனர்.

நேற்றைய தினம் மதிய பொழுது அவசரமாக இராமநாதனை கொண்டு வந்து சேர்க்க. அவருக்கு மாரடைப்பு வந்திருப்பதாக மருத்துவர் சொல்லி சென்றதும்.ஷர்மிளாவை சமாளிக்க முடியவில்லை அவரைக் கொண்டு ரோஷனும் ராகினியும் கதறி நின்றனர்.

கண்ணன் முதல் கட்ட சிகிச்சை தொடங்கும் வரை சமாளித்தவன் அதற்கு மேல் முடியாமல் போக  ஷர்மிளா மூலம் அனுவுக்குத் தொடர்பு கொண்டு விடயத்தைச் சொல்ல இரவோடு இரவாக வந்து நின்றனர் அனுவும் ராகேஷும்.

மருத்துவமனைக்கு வந்தவர்கள் சற்று நேரம் பதட்டத்தில் இருக்க. அதுவரை கண்ணன் மலர் மற்றும்  ராகினியின் இருப்பை கவனிக்கவில்லை அதன் பின்பு தான் ராகேஷ் கவனித்தான்.

பெண்கள் அனைவரும் தன்னிலை மறந்து நிற்க கண்ணனிடம் பேசியாக வேண்டிய நிலையை உணர்ந்த ராகேஷ் மெதுவாகக் கண்ணன் அருகில் சென்றவன் பேச முடியாமல் சில நொடிகள் தயங்கி பின்பு முயன்று தன்னைச் சுதாரித்துக் கொண்டு.

“நீங்க எங்க? …” அவனது கேள்வியில் ஒரு வித சங்கடமாக உணர்ந்த கண்ணன் அதனை தனது பார்வையில் உணர்த்த பார்வையில் அந்த பதறிய ராகேஷ்.

“இல்ல இல்ல தப்பா இல்லங்க நீங்க…” அதற்கு மேல வார்த்தைகள் வராமல் தடுமாற

“ஈஸி ராகேஷ் உங்க மாமா எனக்கு இன்னொரு அப்பா மாதிரி” என்க சிறு அதிர்வு அவனிடம். அவர்களது பழக்கம் அவனுக்குத் தெரியாதே ஏன்? இந்த ஒரு வருஷ காலம் கண்ணனுடன் இராமநாதன் பழகி இருந்தது அனுவுக்கே தெரியாது.

“எப்படி?”

“அவர் துணை இல்லனா நாங்க சில சங்கடத்தைக் கடந்து வந்திருக்க முடியாது ராகேஷ். அதை விடுங்க பொறுமையா பேசலாம்.

“ரோஷன் வந்ததா சொன்னார் அதான் ராகினியை அழைச்சிட்டு வந்தேன். அவளும் ரொம்ப மாறிட்டா என்ன சொல்றது? இறுக்கமா…”என்றவுடன் ஒரு தந்தையாக அவனது உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது.

“விடுங்க கண்ணன் நானும் இப்போ வரை அதை எண்ணி தான் வறுத்த படுறேன். ஒன் இயர் நானும் அனுவும் பிரிஞ்சு தான் இருத்தோம்.

மாமா மேல ரொம்பக் கோவமா இருந்தேன். பட் தப்பு என் மேலையும் இருக்கு அதான்…”மேலும் தொடர முடியாமல் நிறுத்தி கொண்டான் ராஜேஷ்.

கண்ணன் ராகேஷ் தோளை வளைத்து “விடுங்க ராகேஷ் பார்த்துக்கலாம்”

“மாமாக்கு என்ன ஆச்சு? எப்படி அவருக்கு அட்டாக்?”

“எனக்கும் தெரியலைங்க ராகேஷ் நல்லா தான் இருந்தாரு. எல்லாரும் சேர்ந்து சாப்டுட்டு இருந்தோம் நாங்க இன்னைக்கு ஈவினிங் கிளம்ப முடிவு,

சோ மதிய சாப்பாடு முடிச்சுட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் பிளான்ல இருந்தோம். தீடீர்னு அவருக்கு வேர்க்க ஆரம்புச்சு இப்படி ஆகிடுச்சு”

“அவர் உடம்பை நல்லா வச்சுப்பார் அவருக்கு எப்படின்னு தெரியல” தவிப்பாக ராகேஷ் சொல்ல அவனது தோளில் ஆறுதலாகத் தட்டி கொடுத்த கண்ணன்.

“ஒன்னும் ஆகாது ராகேஷ் அவர் நல்ல மனசுக்கு நல்லா ஆயிடும் நல்லா ஆகனும். இன்னும் கொஞ்ச நாள் அவர் கை பிடிச்சு போக எனக்கு ஆசை” என்றவனை ஆச்சிரியமாகப் பார்த்த ராகேஷை

“எஸ் ராகேஷ் எங்க அப்பா இடத்துல இருந்து என்னை வழி நடத்துறது அவர் தான்” என்றான் கண்ணன்.

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே மேகலா ராகவ் வர அதன் பின் அவர்களுக்கு விடயம் சொல்ல பட்டு அனைவரும் பேசி கொண்டிருந்தனர்.

ராகவுக்குக் கண்ணன் இருப்பதும் அவர்களது பிணைப்போம் ராகேஷ் மூலம் தெரிய வர. மனதால் மெச்சி கொண்டார் இராமநாதனை நல்ல மனிதன் என்று.

அதன் பின் ஒருவித பதட்டத்தில் சென்றது இராமநாதன் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் பயந்து பதறி நின்றனர்.

அழுது அழுது சோர்ந்து போன பிள்ளைகளையும் பெண்களையும் பார்த்த ஆண்கள் ஒரு பெருமூச்சுடன்  அவர்களுக்கு சற்று தள்ளி அமர்ந்து கொண்டனர் என்ன சமாதானம் செய்தும் அவர்களைச் சமாளிக்க முடியவில்லை.

சோர்ந்த மனது ரணத்தைக் கிளறி பார்க்க எண்ணியதோ அல்லது ரணமான காயத்தை நாவு கொண்டு வருடி அதன் ரணத்தைக் கூட்ட எண்ணியதோ தெரியவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்னான சம்பவத்தை அசை போட்டனர்.

எண்ணி பார்க்க பிடிக்காத விடயமென்று நாம் மறக்க நினைப்பதை காலம் எப்படி நம்முள் திணிக்கின்றது என்ற ஆற்றாமையில் எண்ணத்தைத் தொடர்ந்தனர்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு சென்னையில்…

“அனு இன்னும் கிளம்பலையா நீ? மணி என்னனு தெரியுமா? டாக்டர் வந்துருவாங்க முதல் அப்பாயின்மென்ட் நம்பத் தான்” என்று ராகேஷ் கடிந்து கொள்ள.

“இங்க பாருங்க உங்க பையன் இப்போதான் ஸ்கூலுக்குக் கிளம்புனான்.அவனை அனுப்பின கையோட கிளம்பிகிட்டு இருக்கேன் என்னை எதுவும் சொல்ல கூடாது சொல்லிட்டேன்” கணவனது குரலுக்கு இணையாகக் குரல் கொடுக்க அதனைக் கேட்டவாறு வந்த மேகலா.

“இப்போ எதுக்கு இரண்டும் பேரும் சத்தம்? இன்னும் நேரமிருக்கு நான் டாக்டர் கிட்ட பேசுறேன் பொறுமையா போயிக்கலாம்” என்றவாறு கிளம்பி வந்தார்.

தொடர்ந்து இடுப்பு வலி காரணமாகச் சில மாதங்களாகவே அனு கஷ்ட பட்டு வந்தாள் போலும் இத்தனை நாள் வேலை பளு என்று எண்ணி கொண்டவள்.

ஒரு வாரத்திற்கு முன்பு இடுப்பு வலியுடன் சேர்ந்து மூச்சும் வாங்க சற்று பயந்து தான் போனாள்.

அதிலும் நேற்றைய தினம் நிற்காமல் வேர்த்து வாந்தி வந்து விட்டது இனியும் தாங்காது என்று எண்ணியவள் ராகேஷிடம் சொல்ல.

அவன் மேகலவிடம் சொல்லி அவரது தோழியான சுசீலாவிடம் விடயத்தைச் சொல்லி அவரது மருத்துவமனையில் அப்பாய்ன்மெண்ட் வாங்கி விட்டார்.

ரோஷனை பள்ளிக்கு அனுப்பி விட்டு ராகவ்வை அலுவலகம் அனுப்பி வைத்துவிட்டு ராகேஷ்,அனு, மேகலா மூவரும் மருத்துவமனைக்கு கிளம்பி விட்டனர்.

மேலும் அரை மணி நேரம் தாமதித்தே மூவரும் கிளம்பி வர. வரும் வழியில் எல்லாம் திட்டி கொண்டே வந்தான் ராகேஷ்.இன்னும் ஒரு மணி நேரத்தில் அலுவலகத்தில் முக்கிய வேலை வேறு உள்ளது போலும் அவனுக்கு.

“ராகேஷ் பேசாம போ சீக்கரம் பார்த்துட்டு அனுப்பிடு வாங்க. இல்லனா நான் பேசுறேன் சுசிலா கிட்ட அப்படி நேரமான நீ கிளம்பு நான் அனுவை பாத்துக்கிறேன்” என்ற பின் தான் சற்றுத் தணிந்தான்.

பொதுவாக அனு அமைதியான பெண் தேவைக்கு மட்டுமே பேச்சு அதற்கு மீறிய பேச்சுகள் எல்லாம் கணவனிடமும் மகனிடமும் தான்.

இல்லத்தரசி என்றாலும் ரோஷன் அவளது நேரத்தை களவாடி கொள்வான்.பள்ளி செல்லும் நேரம் தான் ஓய்வு அதுவும் பத்தி மணிக்கு மேல் பிறகு இதர வேலைகள்.

மீண்டும் சிறு ஓய்வுக்குப் பிறகு ரோஷன் மாலையில் வீடு வந்தால் அவனது சிறப்பு வகுப்பு என்று நேரம் ரெக்கை கட்டி கொண்டு பறக்கும்.அப்பொழுதும் இது போல் ராகேஷ் கடிந்து கொள்வது உண்டு

அப்படியான நேரங்களில் அனு மௌனமாகக் கடந்து விடுவாள், ஆனால் இந்த உடல் நோவு கண்டதில் இருந்து அவள் இயல்பே மாறி போயி நின்றது.

எலியும் பூனையுமாக இருவரும் சண்டை பிடித்து ஒரு வழியாக மருத்துவமனை வந்து சேர

மேகலா பேசி அவர்களை உள்ளே அழைத்துச் சென்று விட்டார் “வா வா மேகலா ஹொவ் ஆர் யூ?” சுசிலா பல நாள் சென்று பார்க்கும் தோழியை ஆர்ப்பாட்டமாக வரவேற்று ராகேஷ் அனுவையும் வரவேற்றார்.

“எஸ் ஐயம் குட் தென் ஹொவ் ஆர் யூ? தோழிகள் இருவரும் பொதுவாகச் சில மணித்துளிகள் பேசி கொண்ட பிறகே அனுவை கவனித்தார்.

“சொல்லுங்க என்ன பண்ணுது?”

“ரொம்ப முதுகு இடுப்பு வலிக்குது அடிக்கடி வேர்த்து வேர்த்து கொட்டுது மூச்சே விடமுடியால” ஒரு வித பயத்தில் அவள் சொல்ல சின்னச் சிரிப்புடன்.

“பயம் வேண்டாம் அனு” என்றவர் வழமையாகச் சில செக் அப் செய்ய அவளது ஹார்ட் பீட்டில் சிறு மாற்றம் புருவம் உயர்த்திச் சற்று யோசித்தவர்.

சில வற்றை எழுதி அங்குள்ள செவிலியிடம் கொடுத்து “உடனே வாங்கிட்டு வாங்க” என்று சொல்ல.

அவளும் உடனே வாங்கி வந்தாள். அதற்குள் ரெத்த பரிசோதனை நடந்தது. மேகலா தோழி என்பதால் வேலை சற்றுத் துரிதமாக நடக்க. அவரது வேகத்தில் சிறு பயம் பிறக்க ராகேஷை திரும்பி பார்த்தாள் அனு.

அவனும் பயந்து தான் இருந்தான். அவளது முகத்தைப் பார்த்தவன் ஆறுதலாகக் கையைப் பற்றிக் கொள்ளச் சில நிமிடங்கள் அவர்களைப் பயத்தில் வைத்து விட்டு.

“மேகலா இட்ஸ் எ குட் நியூஸ்” உங்க மருமகள் மாசமா இருக்காங்க.

“என்னது” சிறு அதிர்வு தான் அனைவருக்கும் பல வருடம் கடந்து பிள்ளை அல்லவா. அதனால் வந்த அதிர்வு. முதல் கட்ட அதிர்வு நீங்கி அனு சற்று ஆசுவாசமாக ராகேஷ் மெல்லமாக அவளை அனைத்து கொண்டான்.

மேகலா, “எத்தனை மாசம்?”

“மோர் ஓவர் சிக்ஸ் மன்த்” சிரித்து கொண்டே சுசிலா சொல்ல.

“என்னது!” என்றவர் அனுவை பார்த்து “உனக்கு சிம்டம்ஸ் தெரியலையா அனு?”

“இல்லையே அத்தை வயறு கூட இல்லையே ரோஷன் ஆபரேஷன் தானே சோ எப்போதும் போலன்னு யோசிச்சேன்” இருவரும் பேசி கொள்வதை பார்த்து சிறு புன்னகையுடன் சுசிலா.

இது மாதிரி நடக்குறது உண்டு தான், ஆனா ரொம்ப இல்ல ஆயிரத்துல ஒருத்தர்னு கணக்கு வச்சுக்கலாம் சரி மேகலா நான் கொஞ்சம் மாதிரிகளை எழுதி தரேன் ஒரு ஸ்கேன் பார்த்துடலாம்” என்றவர் மருந்துகளை எழுதி கொடுத்து விட்டு.

ஸ்கேன் பார்த்தார் அதில் குழந்தை ஆரோக்கியகமாக இருப்பதாகச் சொல்ல. அனைவர்க்கும் சற்று ஆறுதல் மேகலா பல நன்றிகளைச் சொல்லி விடைபெற ஜோடிகளும் தங்களது நன்றியை சொல்லி விடை பெற்றனர் மேகலா வேகமாக முன்னே சென்றுவிட.

சற்றுப் பின் தங்கி வந்தனர் ராகேஷும் அனுவும் மகிழ்ச்சி ஊற்று தான். அதுவும் பத்து வருடங்களுக்கு மேல் சென்று எதிர்பாராமல் ஓர் குழந்தை. ராகேஷ் குறும்பு சிரிப்புடன் நடந்து வர அவனைக் கண்டு கொண்ட அனு செல்ல சிணுங்கலுடன்

“சிரிக்காதீங்க ராக்கி” என்றதும் இன்னும் சிரிப்பு அவனுக்கு.

“ப்ச் ரோஷன் கிட்ட சொல்லனும்”

“இதுல என்ன இருக்கு அதெல்லாம் ஹாப்பி ஆகிடுவான். இதெல்லாம் யோசிக்காதே இது ப்ரிசியஸ் கிபிட் நமக்கு” என்றதும் சிறு புன்னகையுடன் அவனது கை கோர்த்து நடந்தாள்.

வீட்டுக்கு வந்த கையேடு ராகவுக்கு மேகலா சொல்ல தனது தாய் தந்தைக்கு அழைத்துச் சொன்னால் அனு அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோசம் உடனே வருவதாகச் சொல்லி வைத்தார்கள்.

சில மணி நேரங்கள் ஆரவாரமாக இருந்தது. மாலையில் வந்த ரோஷனுக்கும் விடயம் சொல்ல பட. அவர்கள் எதிர்பார்த்த கேள்விகள் எதுவும் இல்லாமல் அவனும் துள்ளி மகிழ்ந்தான்.

இனி வரும் நாளில் இவர்கள் சிரிப்பை மறந்து நிற்க போவதை அறியாமல் துள்ளி குதித்தனர்.

எத்தனை தூரம் களிப்பு இருந்ததோ அதே அளவு அதன் வருகைக்காகப் பெரியவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் அப்போது அவர்களுக்கு தெரியவில்லை இக்குழந்தை பிறக்கும் போது அதனைப் பார்க்க கூடத் தங்களால் முடியாமல் தவிக்கப் போகிறோம் என்று.

சில பிள்ளை காவியம் பிழை காவியம் தான் போலும்.

Advertisement