Advertisement

ஜோல்னா பை – 7

கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வகையில் திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை பசுமையை அள்ளி தெளித்திருக்க, அதனைக் கண்டு குதூகலித்துக் கொண்டிருந்தனர் ரோஷனும் ராகினியும்.

பிள்ளைகள் இருவரும் அன்றைய தினம் பேசி பேசி ராசியாகி நிற்க. அவர்களுடன் தனது நேரத்தை பிணைத்துக் கொண்டார் இராமநாதன். நிறையப் பேசினார் நிறைய விடயங்களை யோசிக்க வைத்தார்.

சமூகத்தின் இன்றைய நிலை, சீர் கேடு, அவர் பார்த்த ஒரு சில ஒவ்வாமைகளை எடுக்காட்டி வைத்து, அவர்களுக்குத் தகுந்த விதத்தில் புகட்டி கொண்டிருந்தார்.அத்தனை பாங்கு பொறுமை அவரிடம்.

அவருடைய செயல் அனைத்தும் முதல் முதலில் திட உணவை உண்ண மறுக்கும் குழந்தைக்கு ஒரு தாய் எப்படிப் புகட்டுவாளோ அப்படி இருந்தது.

திட உணவை ஏற்காத குழந்தை அதனைத் துப்பி வைப்பது போல, சில விடயங்களை ஏற்றுக் கொள்ளாமல் பிள்ளைகளின் வயது வம்பு செய்து வைக்க.

பத்து முறை துப்பினாலும் தாயின் தொடர் முயற்சியில் இரு முறையாவது அக்குழந்தை உணவை விழுங்கி நிற்கும் அல்லவா,

அதே போலப் பல மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவர் சொல்லிய விதத்தில் இருவருமே அதனை செவி வழி விழுங்கி நின்றனர்.

முக்கியமாகச் சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்யாத தப்பிற்கு மாட்டி நிற்கும் அவல நிலையில் எப்படி தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லி கொடுத்தார்.

பிள்ளைகளின் இருப்பு குறைவென்றாலும், அதற்குள் அவரால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார் மனிதர்.

காலம் பிடிக்கும் ஓட்டத்தில் தாய் தந்தை தடுமாறி நிற்க வீட்டில் உள்ள பெரியவர்கள் தானே கை கொடுப்பது. ஆனால் இன்றைய நிலை மாறுபட்டு நிற்க அல்லாடி நிற்கிறது இன்றைய தலை முறை.

ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்களின் அவசியம் வேண்டும் என்பதைக் காலம் வித விதமான வலிகளைக் கொண்டு பாடம் எடுத்துக் கொண்டே நிற்கிறது,

ஆனால் நாம் தான் அதனைச் சரியாகப் படிக்க மறுக்கிறோம் அதன் விளைவு அபாயகரமான இழப்பு.

ராகினி வந்து ஐந்து நாட்கள் கடந்த நிலையில் இன்னும் இரு தினங்களில் ஊருக்கு செல்ல வேண்டும் அதனால் வழமை போல் நண்பனது வயலுக்கு அழைத்து வந்து விட்டார்.

தங்களை மறந்து தண்ணியில் விளையாடி கொண்டிருந்த பிள்ளைகளை உரக்க கத்தி அழைத்தார் இராமநாதன்

“ரோஷன் ராகி வாங்க, போதும் நேரமாகுது பார் சாப்பிட வேண்டாமா?”

“தாத்தா இன்னும் கொஞ்ச நேரம்” குரல் கொடுத்தால் ராகினி. ரோஷன் தாத்தன் பேச்சுக்குச் செவி சாய்த்து எழுந்து கொண்டான்.

தண்ணீர் சொட்ட சொட்ட வந்தவனை இழுத்து தலையைத் துவட்டி விட்டு அவனது உடையைக் கொடுத்து மாற்றி வர சொல்ல.

மோட்டார் அறை சென்று மாற்றி வந்தவன் இராமநாதன் மடியில் அமர்ந்து அவரது கழுத்தை வளைத்துக் கொள்ள. அவரும் சிறு புன்னகையுடன் அவனை இறுக்கி கொண்டார்.

தாத்தனும் பேரனும் மிகுந்த நெருக்கம் தான் இந்த ஒரு வருட கால பிரிவு மட்டுமே ஓர் பிணக்கு.

“ஜோல்னா! ராகி டூ டேஸ் ல போயிடுவா?” சிறு சோகம் இழையோட சொன்ன ரோஷனை அனைத்து கொண்டவர்.

“ஆமா ஸ்கூல் இருக்குல்ல”

“ப்ச் போர் அடிக்கும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்”

“நீயும் ஸ்கூல் போ” என்றவரை சிறு ஆச்சிரியம் காட்டி பார்த்தவன்.

“மூணு மாசம் இங்க தான்னு சொன்னீங்க?”

“சொன்னேன் கொஞ்சம் பேச யோசனை, ஆனா அதுக்குத் தேவை கொஞ்சம் கம்மி தான் போல, ஏன்னா? என் செல்லத்துக்கு எல்லாமே தெரியுதே” என்றவர் பல் படாமல் அவனது கன்னத்தை கவ்வி விட,

எப்பொழுதும் போலத் தாத்தனது செயலில் கன்னத்தைத் துடைத்தவன் அவரைச் சிறு முறைப்புடன் பார்க்க.

“என்னடா பொடி பையலே”

“எப்போ பாரு இப்படி பண்ணுறீங்க” தனது கன்னத்தை சுட்டி காட்டி மீண்டும் முறைக்க.

“அப்படிதான் பண்ணுவேன்” என்றவர் மீண்டும் கவ்வி விட  அவரது கன்னத்தைப் பல் பதிய கடித்து வைத்து விட்டு ஓடினான் இராமன்தான்.

“ஹா! எரும எரும வலிக்குது டா”

“ஹா! ஹா! நீங்க இப்படி பண்ணா அம்மாச்சி கடிச்சு வைக்கச் சொன்னாங்க” என்று ஓட்டம் பிடிக்க

“அடிப்பாவி அவளால செய்ய முடியலன்னு சொல்லி வச்சிருக்கா போல” என்றவர் கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே ராகினியை நோக்கி சென்றார். தன்னை மறந்து மீனாகத் துள்ளி திரிந்தது மடந்தை.

“பாப்பா போதும் வாங்க” என்றதும் இதோ என்றவள் மனமே இல்லாமல் எழுந்து வர, அவளது கையில் உடையைக் கொடுத்தவர் மறைவிடம் காட்ட.

அங்கே சென்று உடை மாற்றி வந்தவள் அவரிடம் வந்து அமர, ரோஷன் அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.

சிறுது நேரம் மௌனம் கொண்டவர் மெல்ல மெல்ல பேச்சை தொடங்கினார் “ராகினி உன்னை ஏன் வர சொன்னேன்னு தெரியுமா?” திடுமென அவர் கேட்கவும் சற்று குழப்பத்துடன் உதட்டை பிதுங்கி தெரியாது என்று கை ஆட்டி வைத்தது மடந்தை.

ரோஷனோ “நாங்க குட் இருக்கோமா? இல்ல பேட் இருக்கோமான்னு பார்க்க” அவன் சொன்ன பாவனையில் பக்கெனச் சிரித்து விட்டார் இராமநாதன்.

அவர் சிரிப்புக்கும் காரணம் உண்டு கண்ணை உருட்டி கொண்டு முகத்தை எதோ போல் வைத்துக் கொண்டு மிகத் தீவிரமாகச் சொன்னவனைப் பார்க்க சிரிப்பு வந்து விட்டது போலும் தாத்தனுக்கு.

“டேய் யாருடா சொன்னா அப்படி?”

“மை டாட்”

“விளங்கும் உங்க அப்பனை என்ன செய்றதுன்னே தெரியல எனக்கு. அப்படி பார்த்தா உங்க அப்பத்தா தாத்தா எல்லாத்தையும் நான் கூட்டி வச்சு செக் பண்ணனும்” சலிப்பாக முனகி கொண்டவர் ரோஷனை பார்த்து.

“அதெல்லாம் இல்ல இன்னும் கொஞ்சம் சுதாரிப்பா இருக்கனும். கொஞ்சம் பழக்கம் மாத்திக்கனும் அதெல்லாம் உங்களுக்குத் தெரிய வேண்டி வர சொன்னேன்.என்னால அங்க வந்து இருக்க முடியாது இல்லையா? அதான்.

“இந்தத் தாத்தா உயிரோட இருக்குற வரை என்னால முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கு உதவியா இருக்கனும்” என்றதும் ராகினி

“கண்டிப்பா தாத்தா ஒரு ஆர்வத்துல கெத்தா செஞ்ச தப்பு…” மேலும் தொடர முடியாமல் ராகினி கண்ணில் இருந்து கண்ணீர் வர

“இங்க பார் ராகி பாப்பா நான் அதைப் பத்தி பேச விரும்பல. ஒரு விஷியத்தைத் தப்பா எடுத்து பண்ணியாச்சு.

அதுக்குத் தண்டனையும் வாங்கியாச்சு இனிமே அதை பத்தி பேச அவசியமே இல்லை.பார்க்க போன தப்பு உங்க மேலன்னு மட்டும் சொல்ல முடியாது தானே?

இப்போ பொதுவா ஒரு நெருப்பு எரியுது அதுல கை வைக்க கூடாது வச்சா சுட்டும்னு உங்க அப்பாவோ அம்மாவோ சொல்லி கொடுத்து இருக்கனும்.

அவங்க சொல்லி கொடுக்கல அது அவங்க தப்பு உங்க தப்பு என்ன தெரியுமா?

ஆர்வம் தூண்ட அப்படி என்ன இருக்கு அதுலனு  நெருப்பை நெருங்கி தொட்டு தான் பார்ப்போம்னு எண்ணம்.

போய்த் தொட்டாச்சு அதுவும் சுட்டாச்சு. இப்போ நெருப்புனா சுடுங்குற பயம் இருக்கும் தானே” என்றதும் இருவரும் தலையை பலமாக ஆட்டி வைத்தனர்.

“சரி இனி கவனமா இருக்கனும். லீவு விட்டா தாத்தா கிட்ட வந்துடு. நீயும் தான் ரோஷன் இனி பொறுப்பா அம்மா தங்கச்சி பாப்பாவை பார்த்துக்கனும்.உன்னைக் கொண்டு தான் இனி அது கத்துக்கும் அப்போ நீ எப்படி இருக்கனும்?”

“ரொம்பக் குட் டா இருக்கனும் நான் இருப்பேன் பிக்காஸ் ஐயம் பிக்”

“எஸ் நீ பிக் ஆனா ப்ரசென்ஸ் ஆப் மைண்ட் இருக்கனும்.விழிப்பா இருக்கனும் நம்பள சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியனும்”

“சரிங்க தாத்தா” இருவரும் ஒரு சேர கூறினர்.

“என்ன தான் வசதி வாய்ப்பு இருந்தாலும் தேவைக்குப் பயன் படுத்துங்க. நல்லா கை, கால் அசைச்சு ஓடி ஆடி விளையாடுங்க. செல் போன் ரொம்ப வேணாம் அது தான் எல்லாத்துக்கும் காரணம்.

தெரியாததைத் தெரிய கூடாததை வெளிச்சம் போட்டு காட்டி பிள்ளைகளை ஒண்ணுமே இல்லமா அகிடுது.அதுனால தான் அந்தக் கருமத்தை நான் தொடுறதே இல்ல” பெரும் எரிச்சல் முகத்தில் மண்ட சொன்னவரை ஆச்சிரியமாகப் பார்த்து வைத்தது பிள்ளைகள்.

“ஆனா தாத்தா அது இல்லாம இப்போ எதுவுமே இல்ல. எங்க ஸ்கூல கூட ஹோம் டெஸ்ட் மொபைல் ப்ராக்டீஸ் தான்” ராகினி சொல்ல.

“சரி தான் டெக்னாலஜி வளர்ந்து நிற்கிறதும் மனுஷன் மூளையால தான், ஆனா அதைத் தவறான முறையில பயன் படுத்துறது தான் அபத்தம்” இராமநாதன் பேச்சில் பெரும் ஆதங்கம்.

“சரி அதை விடுங்க நான் சொல்லுறது புரியுதா? உங்க அப்பா அம்மா எல்லாம் பயந்து இருப்பாங்க கொஞ்சம் அந்த பயம் உங்க மேல கட்டுப்பாடா திரும்பலாம் அப்போ ரொம்ப சோர்ந்துட கூடாது”

“சரி தாத்தா” ராகினி

“ரோஷன் அனு பாவம் ரொம்ப பாதிக்க பட்டது என் பொண்ணு தான் அம்மாவை நல்ல பார்த்துக்கோ உனக்கு வேண்டியதை செய், ஆனா ஆகாத வேலை வேணாம். நண்பர்கள் கண்டிப்பா வேணும் அதுக்குன்னு தப்பு செஞ்சா துணை போக கூடாது என்ன?”

“சரி தாத்தா நான் இப்போ யார் கூடையும் பேசுறதில்ல” ரோஷன் சொல்ல.

“இதுவும் தப்பு தான். இரண்டு பேருக்கும் பொதுவா சொல்றேன் கேட்டுக்கோங்க. உங்க இயல்பை தொலைச்சுட்டு தாத்தா வாழ சொல்லல,

உங்க ஆகாத பழக்கத்தை விட்டுட்டு தான் வாழ சொல்றேன். எல்லார் கூடவும் பேசுங்க பழங்குங்க வரையறை கொண்டு என்ன? அது தான் இந்த காலத்துக்கு சரி” என்றவரை பார்த்து தலையை ஆட்டினர் பிள்ளைகள்.

சமத்தாகக் கேட்டு தலையை ஆட்டும் பிள்ளைகள் செயலில் சிறு கனிவு பிறக்க “இந்த நாலு நாள் முழுக்கத் தாத்தா கொஞ்சம் உங்களைப் பேசியே அறுத்துட்டேன் தானே” சன்ன சிரிப்புடன் அவர் வினவ.

குறும்பு கூத்தாட ரோஷன் “கொஞ்சமில்ல ஜோல்னா ரொம்ப” என்று விட அவன் சொன்ன பாவனையில் சிரித்தவர்.

“பொடி பையலே” அடிப்பது போலப் போய் அவனை அனைத்துக் கொண்டு சிரிக்க அவனும் சிரித்துக் கொண்டான் சிரிப்பின் ஊடே

“எனக்கும் கொஞ்சம் பயம் அதான் பேசிக்கிட்டே இருக்கேன் போல? என்ன செய்ய இந்தத் தலை முறையப் பார்த்தா தாத்தாவுக்கு ரொம்பவே பயமா இருக்கே” அவர் சொல்லவும் இரு வாண்டுகளும் மௌனம் கொள்ள.

“ஏன் டல் ஆகுறீங்க என் எண்ணம் சொன்னேன் வேற ஒண்ணுமில்ல. நான் சொல்றதை காது கொடுத்து கேக்குறதே பெரிய விஷயம்,

ஆனா நீங்க அதன் படி நடந்திருக்கீங்க.தாத்தா சோ ஹாப்பி” என்றவர் இன்னும் ரோஷனை இறுக்கி கொள்ள என்ன நினைத்தானோ திரும்பி தாத்தன் கன்னத்தில் முத்தி நின்றான்.

என்னவோ இன்று காலையில் இருந்து உடல் சோர்ந்து நிற்க. சற்று பயந்து வந்தது அவருக்குச் சொல்ல முடியாத பயம் இதயம் வேறு தாறுமாறாகத் துடிப்பது போல் ஓர் எண்ணம்.

அதன் பின் சில மணி துளிகள் அங்கே செலவு செய்தவர்கள் வீடு நோக்கி சென்றனர்.

சரியாக இரு தினங்கள் கடந்து ராகினி ஊருக்குச் செல்லும் நாலும் வர அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை உண்டு கொண்டிருந்தனர்.

“அங்கிள் ராகிய லீவுக்கு இங்க கூட்டி வாங்க.நானும் இனி லீவுக்கு இங்க தான் வருவேன்” வெகு உற்சாமாகச் சொன்ன ரோஷன் முன் உச்சியைக் கலைத்தவாறு “கண்டிப்பா” என்றார் கண்ணன்.

ராகியும் ரோஷனும் பேசி கொண்டே உண்ண அவர்களைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த இராமநாதனுக்குச் சில நொடிகளில் அதிகமாக வேர்த்து வடிய தொடங்கியது.

அவரது நிலையைச் சற்று நேரம் சென்று கவனித்த ஷர்மிளா சரியாக அவர் மயங்கி சரியும் நேரம் என்னங்க! என்று பதறியெடுத்து அவரை அனைத்துக் கொள்ளப் பேசி கொண்டுருந்த. அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று விட்டனர்.

கண்ணன் தான் முதலில் சுதாரித்துக் கையைக் கழுவி கொண்டே “மலர் நான் ஆம்புலன்ஸ் கூட்டிட்டு வரேன் நீ பிள்ளைகளைப் பாரு” என்றவன் விரைய ஷர்மி பெருங்குரலெடுத்து அழுக ஆரம்பித்து விட்டார்.

ரோஷன் முதல் கட்ட அதிர்ச்சியைக் கடந்தவன் கண்ணில் நிற்காமல் நீர் வழிய மெதுவாகத் தாத்தன் அருகில் சென்று அவரது கன்னத்தைத் தீண்ட அதுவோ மிகவும் குளுமையாக இருந்தது.

ஜோல்னா ஜோல்னா என்னைப் பாரேன் ஜோல்னா என்றவன் அவரை இறுக்கி கொண்டு அழுக அவனைப் பார்த்து ராகினியும் அழுக தொடங்கி விட்டாள்.

ஒரு வருட பழக்கமே என்றாலும் அப்படி ஓர் அன்பையும் பாசத்தையும் பிணைப்பையும் அது போகப் பெரும் நம்பிக்கையையும் விதைத்திருந்தார் இராமன்தான்.

சூழ்நிலை அறிந்து பக்குவமாகப் பார்த்து அரவணைத்து நின்றவர் மேல் அலாதி பிரியம் கொண்டனர் அனைவரும்.

இராமநாதன் என்பவர் கண்ணியமான ஒழுக்கமான பொறுப்பான, பொறுமையான, புத்திசாலியான ஓர் ஆண் மகன்.

மகனாக, தோழனாக, கணவனாக, தகப்பனாக மாமனாராக, தற்போது தாத்தனாக அனைவரையும் தன் வசம் இழுத்துக் கொண்டு நிற்கும் ஒரு முழுமையான மனிதனை சோதித்து நின்றது முதுமை.

Advertisement