Advertisement

ஜோல்னா பை – 5

மாலை வேளை தென்றல், சிறு பிள்ளை விரல் கொண்டு கன்னத்தை வருடுவது போல் உடலெங்கும் வருடி செல்ல அதனை அனுபவித்து வாறு அமர்ந்திருந்தனர் ரோஷன், ஷர்மி, மற்றும் இராமநாதன்.

காந்தி பூங்காவில் மாலை நேர நடை பயிற்சிக்கு வந்திருந்தனர் மூவரும் ரோஷனும் சற்று ஓடியாடி விளையாட ஏதுவாக, பூங்கா போகலாம் என்று முடிவு கொண்டு வந்திருந்தனர்.

ஷர்மி ரோஷனை அனைத்திருக்க, அவரது முந்தானையைப் பிடித்தவாறு வெகு சுவாரசியமாகக் கதை பேசி கொண்டிருந்தான்.

அம்மாச்சியும் பேரனும் தன்னை விடுத்து கதை பேசி சிரிப்பதை குறு குறுவெனப் பார்த்து வைத்தார் இராமநாதன்.

வெகு நேரம் பொறுத்து பார்த்தவர், அதற்கு மேல் முடியாமல் அவர்களது கவனத்தைத் தன் புறம் திருப்ப,

“டேய் பொடி பையலே அம்மாச்சிக் காரியை பார்த்தவுடனே என்னை மறந்துட்ட பார்த்தியா.அது என்ன அப்படி ஒரு சிரிப்பு? ஆஹான்!” என்றதும் உதட்டை சுளித்துப் பழிப்பு காட்ட.அவனது கன்னத்தைக் கிள்ளி வைத்தார்.

“ஸ்!…ஸ்!… ஆ! ஜோல்னா!… வலிக்குது” என்றதும் அவரது கையைத் தட்டி விட்ட ஷர்மி. அது என்ன எப்போ பார் கன்னத்தை வலிக்க வலிக்கக் கிள்ளி வைக்கிறது கையை எடுங்கங்க.

“என்ன பண்ணுறது பார்த்த உடனே கிள்ளனும் போல இருக்கு. ஏன்டா பொடி பையலே எந்தக் கடையிலடா அரிசி வாங்குற” என்றவர் பார்வை மனைவியையும் வம்புக்கு இழுக்க.

“இங்க பாருங்க என்னையும் பிள்ளையையும் கண்ணு வைக்காதீங்க” என்றவர் இன்னும் ரோஷனை இறுக்கி கொண்டார்.

ஷர்மியும் ரோஷனும் அப்படி ஒரு பால் நிறத்தில் ரோஜா வண்ணம் கொண்டு கொழு கொழு கன்னத்தோடு,சற்று பூசின உடல் வாகுடன் இருந்தனர்.அதனாலே இராமநாதன் அவ்வப்போது கிண்டல் செய்வதுண்டு.

மனைவியைத் தனிமையில் வம்பு செய்பவர், பேரனை பொழுதுக்கும் வம்பு செய்து வைப்பார். இன்றும் அது போலச் செய்ய அம்மாச்சியிடம் சலுகையாகச் சலித்துக் கொண்டான் பொடியன்.

“அம்மாச்சி இது கூட ஓகே நேத்து என்ன பண்ணார் தெரியுமா? என் கன்னத்தைக் கிள்ளி வச்சுக்கிட்டே துப்புத் துப்பு சொல்லறார். ஏன்‘னு’ கேட்டதுக்குக் கன்னத்துக்குள்ள பன் வச்சிருக்கத் தானே அதைத் தான் சொன்னேன் துப்புடான்னு கிள்ளி வச்சிட்டார்” என்றதும் ஷர்மி இராமநாதனை முறைக்க.

“என்னடா மாட்டி விடுறியா நீ!” என்றவர் மீண்டும் கிள்ள போகத் துள்ளி குதித்து ஓடினான் ரோஷன் அவன் ஓடுவதை பார்த்த ஷர்மி,

“ரோஷன் மெதுவா ஓடு”

ஓடியவன் அங்குள்ள சறுக்கு மரத்தில் விளையாட தொடங்க.அவனைப் பார்த்த வாறே அமர்ந்திருந்தனர் இராமநாதனும் ஷர்மியும் திடுமென மனைவியைப் பார்த்தவர்.

“ஏண்டி உன் பொண்ணுகிட்ட பேசுனியா நீ? அங்க எப்படி இருக்கலாம்?”

“இன்னும் பேசல பேசணும்ங்க”

“பேசிட்டு எனக்குச் சொல்லு” இப்படிச் சொன்ன கணவரை புருவம் சுருக்கி பார்த்து.

“ஏன்?”

“ராகேஷ் அம்மா அப்பாக்கு என் மேல கொஞ்சம் வருத்தமிருக்கும், அனு மேல ரொம்பவே கோபமிருக்கும் அதான். அங்க சூழ்நிலை எப்படின்னு தெரியனும் நீ பேசிட்டு சொல்லு”

“ஹ்ம்ம்! வீட்டுக்கு போயி பேசுறேன்” என்றவர் விளையாடும் ரோஷன் மேல் பார்வையைப் பதித்தவாறு இருந்தவர்.

இராமநாதன் தீடீர் கேள்வியில் தூக்கி வாரி போட அவரைப் பார்த்த ஷர்மி  “என்ன பேசுறீங்க நீங்க?”

“உண்மையா தான் கேக்குறேன் நீ தொடங்கி மாப்பிள்ளை, அவர் அம்மா, அப்பா, ரோஷன் ஏன் உங்க அண்ணன் வரை என்னை வில்லன் மாதிரி தான் ட்ரீட் பண்ணுறீங்க.

ஒரு வருஷம் அனு கூட என்கிட்ட சகஜமா பேசல தெரியுமா? நைட் தூக்கமே இல்லை ஒரு நிம்மதி இல்ல. நான் உங்களுக்கெல்லாம் என்ன பண்ணுனேன்? முக்கியமா உனக்கு என்னடி பண்ணி வச்சேன்?.

‘சொன்னா ஒரு சொல்லை போடறா பல்லாக்கை பொறந்த இடத்தைப் பார்த்துன்னு’ என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்ட,

மனசாட்சிய தொட்டு சொல்லு இத்தனை வருசத்துல நான் இப்படி நடந்திருக்கேனாடி” என்றதும் வார்த்தைகள் வராமல் தலையை மட்டும் இல்லையென்று ஆட்டி வைத்தார் ஷர்மிளா.

நான் பேசுனதுல என்ன தப்பு? பேசுன விதம் கொஞ்சம் தப்பு, ஆனா பேசுனது தப்பில்லை அனு பெண் பிள்ளையைப் பெத்த போது.

அப்படி ஒரு மோசமான மன நிலையில இருந்தேன் தெரியுமா? அவளை ரோசப்பட்டுக் கூட்டிட்டு வந்துட்டேன், ஒழுங்கா பார்த்துக்கிட்டேனான்னு எனக்குத் தெரியலை, ஆனா உன்னை ரொம்ப மிஸ் பண்ணிருப்பா”

“ரொம்பத் தப்பு தாங்க நீங்க என்னை அப்படி சொல்லவும் ரொம்பக் கோவம். சாரி! சாரி! எனக்கு யோசிக்கவே தெரியல” என்றவர் இராமநாதன் கையை இறுக்கி பிடிக்க,

ஆயிரம் கேள்விகளைக் கேட்டு சண்டையிட வேண்டுமென்று எண்ணிய மனம் அப்படியே எதிர் வாதம் செய்யாமல் அடங்கி நின்றது.

இதை விட ஒரு சாட்சி வேண்டுமா என்ன ஷர்மியின் மீது இராமநாதன் கொண்டுள்ள அன்புக்கு.

மீண்டும் சில நொடிகள் மௌனம் கொண்டு திடுமென “ஷர்மி நாளைக்கு ரோஷன் கூடப் படிச்ச பொண்ணு வருது ஒரு வாரம் இங்க தான் பார்த்துக்கோ” என்றதும் சிறு பதட்டம் கொண்ட ஷர்மி.

“அந்தப் பொண்ணா?”

“ஆமா”

“எப்படி?” என்றவர் முகத்தில் அதீத பதட்டம் தெரிய அவரது கையை இறுக்கி பிடித்த இராமநாதன்.

“எனக்குப் பையன் இல்லாத குறையைக் கண்ணன் தான் தீர்த்து வைக்கிறான்.நல்ல புரிதல் கொண்ட குடும்பம் ஷர்மி, இல்லனா இந்த நெருக்கம் சாத்தியமில்லை.நீ பயப்புடுற அளவுக்கு எதுவுமே இல்லை.

நான் தினமும் பேசுறேன் அன்னைக்கு நடந்த நிகழ்வுக்கு அப்புறம்…அந்தப் பொண்ணும் நமக்கும் பேத்தி தான்”

“ஹ்ம்ம்!” என்றவர் முகம் இன்னும் தெளியாமல் இருக்க.

“சரி வா லேட் ஆகுது” என்றவர் மனைவி பேரனை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

அங்கே ராகவி வீட்டில்…

அன்றைய நாளுக்குப் பிறகு பெரும் மன உளைச்சலில் சிக்கி தவித்த ராகவியை அவரது தாயும் தந்தையும்,

அது போக இராமநாதனும் பேசி பேசி அவளை தெளிவு கொள்ள வைக்க படாத பாடுபட்டு நின்றனர்.

தற்போது இயல்புக்கு திரும்பி கொண்டிருந்தாள் பள்ளியில் இருந்து வந்தவளுக்குப் பால் குடிக்க  கொடுத்த மலர் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.

“ராகவி ஒரு வாரம் நம்ப வெளியூர் போறோம்.நீ ஸ்கூலுக்கு லீவு லெட்டர் எழுதி அந்த மீனா பொண்ணுகிட்ட கொடுத்து விடு.

நான் வாட்சப்ல உங்க கிளாஸ் மிஸ்க்குச் சொல்லிட்டேன்” என்றதும் சிறு குதூகலம் பிறக்க “எங்கம்மா போறோம்?”

“இராமநாதன் தாத்தா வீட்டுக்கு” தாய் சொன்னதில் சோர்ந்து போன ராகவி.

“வேணாம்! நம்பப் போக வேணாம்”

“ஏன்?”

“ரோஷன் இருப்பான் அவனை என்னால பார்க்க முடியாதும்மா” என்று தாயின் இடுப்போடு கட்டி கொண்ட ராகவியின் தலையை மெல்ல வருடிய மலருக்கு சிறு துளி கண்ணீர் பெறுக அதனை உள்ளே தள்ளியவாரே.

“ரொம்ப ஆசையா தாத்தா கூப்பிட்டு இருக்கார் ராகவி ரோஷன் உன்னை எதுவும் சொல்ல மாட்டான்”

“இல்லம்மா அவனை நான் தான் அன்னைக்கு ரொம்பப் போர்ஸ் பண்ணி கூப்பிட்டு போனேன் அவன் என்னை ரொம்பக் கெட்ட பொண்ணா நினைப்பான்” என்று அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல். தனது கணவனைப் பார்வையால் துணைக்கு அழைக்க.

அதுவரை தாய் மகள் உரையாடலில் கலந்து கொள்ளாமல் மகளது நிலையறிய அமைதி கொண்டு,

தனது அறையில் அமர்ந்திருந்த கண்ணன் மகள் அழுவது தாங்காமல் எழுந்து வந்தவர் அவளது அருகில் அமர்ந்து.

“கண்ணம்மா!” என்றழைக்க அந்த அழைப்பில் எப்போதும் போல் உருகிய ராகவி தந்தையைத் தாவி கழுத்தோடு கட்டி கொண்டாள்.

இக்காலத்து பெற்றோர்களின் நிலை என்ன தெரியுமா? ஓர் நற்செயலை பிள்ளைகளுக்குப் புகட்ட பல குரங்கு வித்தைகள் செய்ய வேண்டிய அவல நிலை.

செய்தும் பிள்ளைகளின் மனதை அவர்கள் தேவையை அறிய முடியாமல் போவது சோதனையிலும் சோதனை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு பிள்ளைகளின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாகி போயின என்பது மறுக்கப் படாத உண்மை.

இப்பிள்ளைகளை எப்படி தான் வளர்ப்பது? என்று தடுமாறி நிற்கின்றனர் இக்காலத்து பெற்றோர்கள்.எதை பேசுவது எதைப் பேசக்கூடாது எதனைச் செய்வது எதனைச் செய்யக் கூடாது.

தப்பென்றால் அடித்துக் கண்டித்தால் ஆயுள் உள்ள வரை அதனைச் செய்ய மாட்டோம் என்பதற்காக அடித்துக் கண்டித்த நம் காலம் காலாவதியாகி போனது கலிகாலம் தான்.

தவறு செய்த பிள்ளையைத் தாய் கண்டித்தாலே தவறு என்று நிலையில் இக்காலம் பதற தான் வைக்கிறது.

மீறி கண்டித்தால் வளர்த்து கொடுக்கும் அவலமாகி போக உயிர் மட்டுமே லாபமாக எண்ணி வாழும் பெற்றோர்கள்.

மலர் சற்றுக் கலவரமாகக் கண்ணனை பார்க்க அவரோ கண்களை மூடி மனைவிக்குச் சமாதானம் செய்தவர் கண்ணம்மா.

என்ன இது எதுக்கு அழுகை தாத்தா ரொம்ப ஆர்வமா இருக்கார் டா.நம்பப் போகாம போனா ரொம்ப வறுத்த படுவார்.

ரோஷனும் உன்கூடப் பேசணும் சொன்னானாம் என்றதும் அழுது கொண்டிருந்தவள் வேகமாகத் தந்தையிடமிருந்து விலகி கண்களைத் துடைத்துக் கொண்டு உண்மையாப்பா.

“ஆமாடா தங்கம் உண்மையா அவன் த்ரீ மந்த்ஸ் மெடிக்கல் லீவ் போட்டிருக்கான்”

“எதுக்குப்பா த்ரீ மோந்த்ஸ்”

“தாத்தா கூட இருக்கத் தான்”

“ஓ!”

“இப்போ சொல்லு போலாமா?” என்றதும் மீண்டும் யோசனையாக நின்ற பெண்ணை.

“கண்ணம்மா!”

“ஹ்ம்ம்! போலாம் ப்பா! யாரும் என்னை எதுவும் பேச மாட்டாங்க தானே” என்று கலக்கமாகக் கெட்டப் பொண்ணா?

இப்பொழுது மலர் இழுத்து அனைத்துக் கண்ணீர் விடக் கண்ணன் மலரை பார்வையால் கண்டித்து விட,

அவசரமாக அழுகையை அடக்கிய மலர் முயன்று தன்னைச் சரி செய்து கொண்டு “யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க”

“உன்னைக் கஷ்ட படுத்திய மாதிரி இருந்தா அம்மாவும் அப்பாவும் உடனே உன்னைக் கூட்டிட்டு கிளம்பி வந்துடுவோம்”

“ஹ்ம்ம்!… சரிம்மா” என்றவள் தாயின் வயிற்றில் புதைய இறுக்கி அனைத்து கொண்டாள் மலர்.

கண்ணன் மலர் இருவரும் மதுரையைச் சார்ந்தவர்கள் சற்றுப் பாரம்பரியமிக்கக் குடும்பம் மலருடைய அம்மா அப்பா வயதின் மூப்புக் காரணமாக இறந்து போகக் கண்ணனுடைய பெற்றவர்கள் இருவரும் இருந்தனர்

சம்பவம் நடந்த அன்று அவர்களும் அங்கையே தான் இருந்தனர்.விடயத்தைக் கேள்வி பட்டு கண்ணன் தாய் பாண்டியம்மாள் காது கொடுக்க முடியாத சில வார்த்தைகளைப் பேசி விட, ஒரே பேத்தியின் நிலையை எண்ணி அதிர்ந்து நின்றார் பூபதி.

மனைவி பேசியதை எதிர்க்க முடியவில்லை அக்கால மக்களின் நெறி நீதி பேசி நிற்க அமைதியாக நின்றார்.

விளைவு கண்ணனின் கண்ணீர் தான் மனைவி மகளைக் காக்கும் பொருட்டுப் பெற்றவர்களை எதிர்த்து நிற்கும் நிலை.

தப்பே செய்தாலும் தன்னை நம்பி வந்த பெண்களை விட்டு கொடுக்க முடியாமல். அவர் தடுமாற உறவை முறித்துக் கொண்டு செல்லும் நிலைக்குத் தள்ள பட்டார் கண்ணன்.

இன்றளவும் அந்த வலி இருக்கத் தான் செய்கிறது ஆனால் அதிகம் அதனது தாக்கமில்லை.

Advertisement