Advertisement

ஜோல்னா பை11

வீட்டுக்கு பெரியவர்களாக இருந்து கொண்டு வெகு அலட்சியமாகப் பேசி கொண்டிருக்கும் ராகவ், மீது சினம் துளிர்க்க வேகமாக,

அவரது அருகில் நெருங்கிய இராமநாதன் யாரும் உணரும் முன்னே சட்டையைக் கோர்த்து பிடித்து விட்டார்.அவரது செயலை எதிர் பார்க்காத அனைவரும் ஒரு நொடி அதிர்ந்து நின்று விட்டனர்.

ராகவ், “என்ன பண்ணுறீங்க முதல கையெடுங்க” என்று வர.

மேகலா,“என்ன நீங்க? விடுங்க அவரை” என்று சட்டையை விலக்க போராட,

ஷர்மிளா, “என்ன அறிவு கெட்ட தனம் பண்ணுறீங்க நீங்க! விடுங்க.இப்போ என்ன ஆச்சு? ரோஷன் நல்ல இருக்கான் தானே” என்றதும் இன்னும் கோபம் எல்லையை கடக்க.

“என்ன ஆச்சா? அது சரி ஏன் கேட்க மாட்ட நீ?  எல்லாம் உன்னால தாண்டி.உன் குடும்பத்து சக வாசம் தான், என் வம்சத்தை இப்படி கொண்டு வந்து நிறுத்திருக்கு.

அன்னைக்கே உன்னை முடிவா வேணான்னு சொல்லிருந்தேனு வை.இன்னைக்கு என் பிள்ளை வரை பாதிப்பு இருக்காது.

அது என்ன உனக்கு அத்தனை அலட்சியம். நடந்தது சின்ன விஷியாம?” என்றவர் அதற்கு மேலும் ஷர்மிளாவை பேசி நின்றார்.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற கூற்றுக்கு ஏற்ப.

அமைதியாக வந்து போனவர், ஓர் இரு வரிகளில் பேச்சை முடித்துக் கொள்ளும் இராமநாதன். இன்று ஆடி நின்றதும் அதிர்ந்து போயினர்.

அனுவுக்கு நடக்கும் கூத்தை எண்ணி கலவரம் பிறக்க அது தனது உடலை தாக்கி நின்றது கூட தெரியவில்லை.

ஆம் பனி குடம் லேசாக உடைந்து தண்ணி வெளியில் வந்து கொண்டிருக்க, அதனைக் கூட உணராது பெண் அதிர்ந்து நின்று கொண்டிருந்தது.

கணவன் பேசியதில் காயம் கொண்ட ஷர்மிளா கண்ணில் நீர் வர அமைதியாகி விட்டார். இத்தனை வருடம் வாழ்ந்த வாழ்க்கை கை கொட்டி சிரித்து நின்றது போல் பிம்பம்.

மேலும் இராமநாதன் “இனி உனக்கும் எனக்கும் பேச்சுக்கே இல்ல எல்லாரும் கிளம்புங்க. என் பொண்ணும் பேரனும் என்கூடத் தான்” என்றதும் அதுவரை அமைதியாக இருந்த ராகவ்

“என்ன பேசுறீங்க நீங்க? அவன் என் பையன்”

“ஓ! அப்போ உன் பிள்ளையை நீ வச்சுக்கோ என் பிள்ளையை நான் வச்சுகிறேன்”

“லூசா நீங்க?” என்று அவர் அருகே ராகவ் ஓர் எட்டு எடுத்து வைக்க இன்னும் பயந்த அனு ராகவ்! என்று கத்த. அப்பொழுதான் அவளது நிலையைக் கண்டனர். உதிரம் கொட்ட பெண் மயக்க நிலையில் சரிய தருணம் பார்த்து நின்றாள்.

“ஐயோ! அனு பாப்பா!” என்ற அழைப்பு மட்டுமே பெண்ணின் காதை எட்ட மயங்கி சரிந்தாள்.

ராகவ் அவளைப் பிடிக்க வர அதற்குள் அனுவை கையில் தூக்கி கொண்டு விரைந்தார் இராமநாதன். அடுத்து ஒரு மணி நேரம் நரகம் என்பதை உணர்ந்து நின்றனர் குடும்ப மக்கள். 

விளையாட்டு வினை தொட்டு நிற்கும் என்பது போல், சிறுவர்கள் விளையாட்டாகச் செய்த ஒரு செயல். இன்று இரு குடும்பத்தைப் பதம் பார்த்து நின்றது.

எத்தனை வசதி இருந்தாலும், நாகரிகம் வளர்ந்தாலும், சமூகம் முன்னேறி நின்றாலும் பெரியவர்கள் சொல்லும் எச்சரிக்கும் சில விடயங்களுக்கு நாம் செவி கொடுப்பதே சிறந்தது,

இல்லையென்றால் அனுபவம் வலிக்கக் கற்று கொடுக்கும். அது தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது

சரியாகப் பல மணி நேர போராட்டத்திற்கு பின் அனு கண் விழிக்க, அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார் இராமநாதன்.

அவரைச் சோர்வாகப் பார்த்த பெண் சற்று தயங்கி ஆவல் ததும்பும் விழியுடன் குழந்தையைக் கேட்க. அவரும் தனது பேத்தியை தூக்கி காட்டினார்.

மகளை ஆசையாகப் பார்த்த அனு நடந்த நிகழ்வை எண்ணி கலக்கமாகத் தந்தையைப் பார்க்க. அவர் பொறுமையாகப் பேத்தியை மகளுக்கு அருகில் கிடத்தி ஒரு பெருமூச்சுடன் பேச்சை தொடங்கினார்.

வலி இருக்கா அனு” தலையை வருடி இராமநாதன் கவலையாகக் கேட்க.

ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள் அனு

ஹ்ம்ம்”

இப்போ இதைப் பேசுற நேரம் இல்லத்தான் அனு உன் வலி எனக்குப் புரியுது, ஆனா பேச வேண்டிய கட்டாயத்துல நான் இருக்கேன் நீ கொஞ்ச நாள் என்கூட இரு.

உன்வீட்டு ஆளுங்களுக்கு இருக்குற அலட்சியம் என் பேர பிள்ளைகளைப் பாதிக்குது. இப்போ வேற பொண்ணு பெத்து வச்சிருக்க,

ரோஷனுக்கே இந்தக் கவனிப்புனா, இவளுக்கு? எனக்குப் பயமா இருக்கு அனு.இந்தக் காலத்துல பெண் பிள்ளைகள் படுற பாடு என்னான்னு உனக்கே தெரியும்” சற்று நிறுத்தியவர் அனுவின் கைப் பற்றி.

“உன் நல்லதுக்கு தான் அப்பா சொல்றேன், ரோஷன் தனியா இருக்கட்டும் அப்போ தான் தப்பு அவங்களுக்குப் புரியும் அவனுக்கும் புரியும்” என்றதும் அனு கண்ணில் இருந்து நீர் வழிந்தது.

அழுகாத அனு கஷ்டமா தான் இருக்கும், ஆனா ரோஷனுக்கு எதாவது வேற மாதிரி ஆகியிருந்தா?” இதில் அவர் நிறுத்த பெற்றவள் உயிரும் ஓர் நொடி நின்றே துடித்தது.

“அந்த ராகினி பொண்ணுக்கு ஒன்னும் இல்ல ஜஸ்ட் ஆல்கஹால் எபெக்ட்னு அவங்க சொல்லுற வரைக்கும்.அந்தப் பொண்ணோட அப்பாவும் அம்மாவும் துடிச்ச துடிப்பிருக்கே ப்பா!. என்னால கண் கொண்டு பார்க்க முடியல,

அந்த நிலை உன் பொண்ணுக்கு வந்தா ..” அவர் வார்த்தையை முடிக்க விடாமல் “அப்பா வேணாம்ப்பா”

பதறுதா அனு? சொல்லுறதுக்கே,அப்போ யோசிச்சுக்கோ உன் வீட்டுக்காரரும் வீட்டு ஆளுங்க யாரையும் நான் பார்க்க விடுறதா இல்ல உடம்பு சுகமாச்சுன்னா கிளம்பி என்னோடு ஊருக்கு வந்துடு” என்றதும் சிறு கேவல் பிறக்க மகளின் நிலையை உணர்ந்தார் போல.

“அனு கசப்பு மருந்து உடம்புக்கு நல்லது மனச இறுக்கி கட்டி நில்லு பிள்ளைங்க எதிர் காலத்தை மனுசில வை. இந்த கஷ்டம் பெருசா தெரியாது” என்றவர் அதற்கு மேல நிற்காமல் வெளியில் செல்ல.

அங்கே வெளியில் ஷர்மிளா கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார் இராமநாதன் வரவும் ”நான் எங்க வீட்டுக்கு கிளம்புறேன்”

கோபம் இன்னும் தான் உச்சிக்கு நின்றது அவருக்கு. இங்கு என்ன சூழ்நிலை இவள் என்னவென்றால் கையில் பையுடன். பல்லை கடித்தவர் “நல்லா போயிட்டு வா” என்று நிற்காமல் செல்ல,

“கொழுப்பை பார்த்தியா இந்த மனுசனுக்கு” என்றவர் அழுது கொண்டே தனது அண்ணனுக்கு அழைத்துத் தன்னைக் கூட்டி செல்லும் படி சொன்னவர் அனுவை பார்க்க உள்ளே செல்ல.

அங்கே தனது குழந்தையைப் பார்த்துக் கொண்டே அழுது கொண்டிருந்தாள் அனு.

“அனு!” என்றவர் அவளை நெருங்கி அவளது கை பற்றி “உன்னையும் உங்க அப்பா அழுக வச்சுட்டாரா? நல்லது”

“அவர் சொல்லறதுல என்னம்மா தப்பு?”

“என்னடி நீ இப்படி பேசுற என்ன வேலை பார்த்து வச்சு இருக்கார் தெரியுமா? ரோஷன் கண் முழிச்சு பிள்ளை எழுந்து அப்போ தாண்டி உட்காந்தான் வந்த மனுஷன் சப்புன்னு அரை வச்சுட்டார் பிள்ளையை”

“ஐயோ!…”

“ஆமாடி ராகவுக்குக் கோபம் வந்து உங்க அப்பாவை பேச, அவர் உன்னைப் பார்க்க கூடாதுனு ஒரே வம்பு பண்ணிட்டார்”

“இப்போ ரோஷன் எப்படிமா இருக்கான்” பெற்றவள் உள்ளம் பிள்ளைக்காக துடித்தது.

“நல்ல இருக்கான்டி வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. நீ உங்க அப்பா பேச்சை கேட்காத அனு பிள்ளை பாவம்டி சின்னப் பையன்”

“சின்னப் பையன் பண்ணுற வேலையாம்மா இது? கொஞ்சம் தப்பா போயிருந்தா வாழ்க்கையே போயிருக்கும்”

“நீயும் உங்க அப்பா மாதிரியே ஓவர் இமாஜின் பண்ணுற”

“இது இமாஜின் இல்ல ஒரு அம்மாவோட பயம், வலி உனக்குப் புரியாதும்மா”

“நான் என்ன மக்கா அப்பாவும் பொண்ணும் மாறி மாறி உனக்குப் புரியாதுனு சொல்லிறீங்க, புரிஞ்ச நீங்களே இருந்துக்குங்க. நான் எங்க அண்ணன் வீட்டுக்கு போறேன்” என்றவர் கோபமாகக் கிளம்பி செல்ல அவரைப் பார்த்தவாறே உள்ளே நுழைந்தார் இராமநாதன்.

“என்னம்மா உங்க அம்மா வேலு நாச்சியார் கணக்கா வீரமா போறாங்க”

“அப்பா அவங்க மாமா வீட்டுக்கு போறாங்க போல கொஞ்சம் என்னானு பாருங்கப்பா”

“நீ பேசாம இரு இன்னும் அதுங்களுக்குத் தப்புனு யோசனை வரல, பாரு இப்போ கூட உனக்கு அவ துணை வேணும்னு தோணல,உங்க அம்மாக்கு என்ன வயசு?

அவ பொறுப்பு புரியுதான்னு பார்த்தியா? காசு கொடுத்தா வேலை நடக்கும் அந்த எண்ணம் தான் அவளுக்கு” என்றதும் அணுவால் பேச முடியவில்லை.

என்ன தான் சண்டை என்றாலும் பெண்ணின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இருந்திருக்க வேண்டும் அல்லவா. இது போல் யோசிக்காமல் அலட்சியம் காட்டுவதைத் தான் சுட்டி நின்றார் இராமநாதன்.

“விடுங்கப்பா கொஞ்ச நாள் சரி ஆகிடுவாங்க ரோஷனை பார்த்தீங்களாப்பா?” தாய் சொன்னதை மறைத்து அவர் பேச்சில் நாடி பிடிக்கப் பார்த்தால் அனு.

“பார்த்தேன் பார்த்தேன் ஒரு அடி நல்லாவே போட்டேன். கொஞ்ச நாள் பேசாத அவனே வழிக்கு வருவான். ரொம்பப் பயந்து இருக்கான் போல உடம்பெல்லாம் நடுக்கம்”

“அச்சோ!”

“உன் இருப்பு அவனுக்கு அவசியம் தான் அனு, ஆனா நீ போனா அவனுக்குப் பயமே விட்டு போயிடும்.

நாளைக்கு இதை விடப் பெருசா பண்ணி நிப்பான், அவன் அப்பனே பார்த்துக்கட்டும் அவனைத் தேத்தி கூட்டிட்டு வரட்டும் விடு”

“அவருக்கு அதெல்லாம் தெரியாதுப்பா” என்றதும் மகளை முறைத்தவர்.

“அது என்ன தெரியாது கத்துக்கட்டும் அனு அப்பனுக்குப் பிள்ளையைப் பார்க்க தெரியலன்னா எதுக்குக் குழந்தை? நான் உன்னைப் பார்க்கல பிசினஸ் பண்ணா இதெல்லாம் பண்ண கூடாதுனு இருக்கானே? குடும்பத்துக்குனு நேரம் வேணும்.

ஒரு பக்கம் பணத்தைச் சேர்த்துக்கிட்டே போங்க இன்னொரு பக்கம் உங்க புள்ள கீழ போயிகிட்டே இருப்பான் அப்புறம் ஐயோ! அம்மானு கையில வாயில அடிச்சு பயனில்லை.

அவர் சொல்வது சத்தியமான உண்மை என்பதால் கண்களோடு மனதையும் இறுக்க மூடி படுத்து விட்டாள் அனு. உள்ளம் அனைத்தும் வலித்துக் கிடந்தது.

பழி ஒருபுறம் இருக்கப் பாவம் ஒருபுறம் இருக்க இடையில் தத்தளித்து தடுமாறி நின்றது என்னவோ தாய்மை தான்.

இன்றைய தலைமுறைக்குக் கிட்டிய சுதந்திரத்தின் அளவு சற்று பெரியது தான். வயதுக்கு மீறிய அறிவு வளர்ச்சி பேச்சு அனைத்தும் அவர்களை வழி மாறச் செய்கிறது.

பிள்ளைகள் பேச்சு செயல் பார்த்து பூரித்து நிற்பது சரிதான். நான் பார்க்காத உலகம் நான் காணாத வெற்றி. மெய் சிலிர்க்க வைக்கும் தருணம் தான். அது நேரம் தவறிய சில பொழுதுகள் உள்ளதே அங்கே கவனம் வைக்க வேண்டும் அல்லவா.

 

 

 

Advertisement