Advertisement

ஜீவ தீபங்கள் -17

அத்தியாயம் -17

இன்னும் சரியாக விடிந்திருக்காத இந்த வேளையில் யாரும் பிரியாவை இங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. பேருந்து நிலையத்திலிருந்து நேராக மருத்துவமனைக்குத்தான் வந்திருந்தாள். 

தனியா வந்தியா நீ? யாருக்கும் சொல்லாம என்ன இது புதுப்பழக்கம்?” தங்கையை கண்ட உடன் கடிந்தான் ஆதவன்

அண்ணனை தவிர்த்த பிரியா உத்ராவை பார்த்து, “நிஜமா அவருக்கு பெருசா ஏதும் இல்லதானே?” எனக் கேட்டாள்

என்னடி நீ? நான்தான் நைட்டே சொன்னேன்ல? இப்படியா கிளம்பி வருவ? வருண் வந்திட்டான், அவன்தான் அண்ணன் கூட இருக்கான். வாஎன சொல்லி அவள் கை பிடித்து பாலன் இருந்த அறைக்கு அழைத்து சென்றாள்

கழுத்தில் கட்டு போடப் பட்டு சலைன் ஏறிக் கொண்டிருக்க உறக்கத்தில் இருந்தான் பாலன். பிரியாவை கண்ட வருணும் இப்படி வரலாமா என கடிந்தான். அவன் பேசுவது எதுவும் பிரியாவின் கவனத்தில் இல்லை. கணவனது மார்புக் கூடு ஏறி இறங்குவதையே உற்று உற்று பார்த்து அவன் சுவாசிக்கிறான் என்பதை தெளிவு செய்து கொண்டாள்

பாலன் தலைமாட்டில் நாற்காலி எடுத்து போட்ட வருண், “நீ அண்ணன் கூட இரு, நான் வெளில இருக்கேன்என பிரியாவிடம் சொல்லி உத்ராவையும் கவனித்து கொள்ள சொல்லி விட்டு வெளியே சென்றான்.

அமைதியாக அழுத பிரியாவின் கண்ணீரை துடைத்த உத்ரா தன் அழுகையை அடக்கிக் கொண்டே, “கழுத்துல சின்ன காயம்னுதான் எனக்கும் உன் அண்ணன் சொன்னார். இங்க வந்தப்புறம்தான் டாக்டர் சொன்னார்  அண்ணனோட கழுத்துல இரத்தகுழாய் கட் ஆகியிருக்குன்னு, அப்படியே விட்ருந்தா இரத்தம் அதிகம் போய்…” என சொல்லாமல் நிறுத்தி எழுந்த கேவலை அடக்கினாள்.

இரவிலிருந்து மிகுந்த பயத்தில் இருந்த உத்ரா தனக்கு ஆறுதல் வேண்டி தன்னை அறியாமல் பிரியாவை கலவரம் செய்து விட்டாள்

பிரியா தேம்ப ஆரம்பிக்கவும் சுதாரித்த உத்ரா, “பயப்பட ஏதுமில்லைனு டாக்டர் சொல்லிட்டாங்கடி. அண்ணன் பேச எல்லாம் செஞ்சார். வலிக்கும்னு தூக்க ஊசி போட்ருக்காங்க. எழுந்ததும் அண்ணாகிட்ட பேசலாம் நீஎன ஆறுதலாக சொன்னாள்

திருமணம் ஆனதிலிருந்து பிரியாவின் தைரியமே சிவபாலன்தான். அவனால் எல்லாம் முடியும் என அத்தனை உறுதியாக அவள் நினைத்திருக்க இப்படி அவன் படுத்து கிடப்பது மனதளவில் வெகுவாக அவளை பலவீனம் ஆக்கியது

தாத்தா பாட்டி பிரகதீஸ்வரி மூவருக்கும் இன்னும் விஷயம் தெரியாது. துர்காவை சற்று முன்புதான் வீட்டில் விட சென்றிருந்தார் மலையரசன்

பாலனை மருத்துவமனையில் அனுமதித்த உடனே வருணுக்கு சொல்லி விட்டான் ஆதவன். அவனது யோசனை படியே வடிவம்மாளுக்கு மட்டும் விஷயத்தை சொல்லி பிரகதீஸ்வரிக்கு தெரியாமல் பார்த்து கொண்டனர்

போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கனும்வருணுக்கு நினைவூட்டினான் ஆதவன்

இல்ல அண்ணன் வேணாம்னு சொல்லிட்டார்என்றான் வருண்

ஏன் வேணாம். சும்மா விடுறதா அவனுங்கள?” கோவப்பட்டான் ஆதவன்

பாஸ்கர்கிட்ட சொல்லியாச்சு. இந்நேரம் பிடிச்சிருப்பார்” 

பிடிச்சு?” 

இப்போதைக்கு நம்ம கஸ்டடில இருக்கானுங்க. அண்ணன் எழட்டும், சொல்வார் என்ன செய்யணும்னு?” 

லூசுத்தனமா ஏதாவது செய்யாதீங்க. போலீஸ் போலாம்என ஆதவன் சொல்ல, “நீ ஏன் இப்போ என்கிட்ட கத்துற? எதா இருந்தாலும் அண்ணன் சொல்லட்டும்என்ற வருணுக்கும் அந்த மனோகர், பூபதி மற்றும் உடனிருந்த மனோகரின் நண்பன் ஒருவன் மூவர் மேலும் கோவம் வராமல் இல்லை

வருணை பற்றி தெரிந்ததாலோ என்னவோ அவர்களை பிடித்து வைக்க மட்டும் சொல்லியிருந்த பாலன் எக்காரணம் கொண்டும் வருண் அவர்களை காண செல்லக் கூடாது என உறுதியாக சொல்லிவிட்டான்

நேரடியாக பாலனை தாக்கியிருந்தால் மூவரையும் துவம்சம் செய்திருப்பான் பாலன். பூபதியை வழி மறித்து இறக்கி ஏதோ குடும்பத்தகறாரு போல கோவமாக பேச ஆரம்பித்தான் மனோகர்

இவனுக்கு சப்போர்ட் பண்ணி திரும்ப கடையில சேர்த்து விடலைன்னு என் மேல கோவம் தம்பி. நான் பேச்சு வச்சிக்கிறது இல்ல இப்போ இவன்கிட்ட. சொத்து பிரச்சனை ஒண்ணு. அதை வச்சு அடிக்கடி வீட்டு பக்கம் வந்து தகராறு செய்றான். இப்ப நிறுத்துங்க தம்பி, இல்லைனா வீட்டு வாசல்ல வந்து கத்துவான். நீங்க ரெண்டு மிரட்டு மிரட்டினா பயந்து போய் என்கிட்ட வாலாட்டாம இருப்பான்என பூபதி சொன்னதால்தான் பைக்கை நிறுத்தியிருந்தான் பாலன்.

அதே நேரம் பிரியா தொடர்ந்து மூன்றாவது முறையாக அழைக்க அழைப்பை ஏற்ற பாலனின் கவனம் பிசகி விட்டது

மனோகரின் நண்பன் சட்டென பாலனின் பின்னாலிருந்து அவனது கைகள் இரண்டையும் பின் பக்கமாக வளைத்து அழுத்திப் பிடிக்க மனோகர்தான் பாலனின் கழுத்தில் காயம் செய்தது. உயிர் எடுக்கும் உத்தேசத்தோடுதான் மனோகர் செயல் பட்டான். ஆனால் பாலன் தன்னை பிடித்திருந்த மனோகரின் நண்பனை தன் உடலால் பின்னோக்கி சரிய செய்து ஓரடி பின்னால் நகர்ந்திருக்க மிக ஆழமான வெட்டு இல்லை

தனக்கு கழுத்தில் காயமான போதும் கீழே விழுந்திருந்த மனோகரின் நண்பனின் கழுத்தில் மிதித்து மனோகரை வளைத்து பிடித்து அவன் கையிலிருந்த ஆயுதத்தை தன் வசப் படுத்தினான் பாலன்

கீழே விழுந்திருந்த மனோகரின் நண்பன் எழுந்து ஓட ஆரம்பிக்க மனோகரும் பாலன் பிடியிலிருந்து தப்பித்து ஓடப் பார்த்தான். ஆனால் விடாமல் மனோகரை வலிமையாக பிடித்த பாலன் திகைத்து நின்றிருந்த பூபதியை பார்த்து, “அண்ணா ஓடுறவனை பிடிங்கஎன சத்தமிட்டான்

ஆனால் பூபதியோ பாலனின் தலையில் மரக்கட்டை கொண்டு தாக்க பூபதியும் துரோகி என தெரிய வந்த திகைப்பிலும் அடி கொடுத்த அதிர்விலும் மனோகரை விட்டான் பாலன்

இரத்த இழப்பால் கண்களில் பார்வை மங்கி நினைவு தப்பி செல்வது புரிந்தாலும் தன் கையிலிருக்கும் கத்தியை இறுக்கி பிடித்து கால்களை தரையில் அழுத்தமாக ஊன்றி நின்றான் பாலன்

இதுதான் சந்தர்ப்பம் என மனோகர் பாலனை நெருங்க பயத்தில் இருந்த பூபதி, இனியும் அங்கிருந்தால் ஆபத்து என அறிவுறுத்தி மனோகரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்

கழுத்திலிருந்து இரத்தம் நிற்காமல் வெளியேறிக் கொண்டிருக்க பாலன் மயங்கி விட்டான். சரியான நேரத்துக்கு ஆதவனும் மலையரசனும் அங்கு வந்து விட்டனர்

மருத்துவமனை வந்து சிகிச்சையளிக்கப் பட்ட பின் கண் விழித்த பாலன் தம்பியிடம் எல்லாம் சொல்லி என்ன செய்ய வேண்டும் எனவும் சொல்லியிருந்தான்

நான் அண்ணன் கூட இருந்துக்கிறேன், உத்ரா பிரியா ரெண்டு பேரையும் வீட்டுக்கு அழைச்சிட்டு போஎன ஆதவனிடம் சொன்னான் வருண்

பாலனிடம் பேசாமல் நான் வர மாட்டேன் என பிரியா அடமாக சொல்லி விட அவளை விட்டு தானும் வர முடியாது என்றாள் உத்ரா

இப்படி எல்லாரும் இங்கேயே உட்கார்ந்திட்டா ஆச்சா? நீ வா உன் அம்மாகிட்ட சொல்லணும்என சொல்லி உத்ராவை மட்டும் அழைத்து சென்றான் ஆதவன்

பிரியா அறையில் இருந்ததால் வெளியில் அமர்ந்திருந்தான் வருண்

கண் விழித்த பாலன் எதிரில் பிரியாவை கண்டு விட்டு, “பிரியா!” என சின்ன குரலில் திகைப்பாக அழைக்க நிறுத்தி வைத்திருந்த அழுகையை மீண்டும் ஆரம்பித்தாள் பிரியா

பாலன் அதிர்ந்து ஒரு வார்த்தை பேசினாலும் கழுத்தில் வலி எடுத்தது. ஆனாலும் அவளது அழுகையை நிறுத்தும் வகை தெரியாமல், “நிறுத்து!” என சின்னதாக ஒரு அதட்டல் போட்டு வலியில் கண்களை மூடி முகத்தை சுருக்கினான்

வேகமாக கண்களை துடைத்தவள் எழுந்து அவன் படுக்கையில் அமர்ந்து அவனது கையை பிடித்துக் கொண்டாள்.

 “தனியா வந்தியா?” மெல்லிய குரலில் கேட்டான்

எதுவும் பேச வேண்டாம் என்பது போல அவன் வாயை தன் விரல்களால் மூடியவள், “முன்னாடி நிறைய முறை தனியா வந்திருக்கேன். அதான் வந்திட்டேனே. உங்களுக்கு ரொம்ப வலிக்குதா?” எனக் கேட்டாள்

இல்லை என்பது போல கண்களால் சொன்னவன், தன் வாய் மூடியிருந்த அவள் கையை விலக்கி, “எப்ப கிளம்புற?” எனக் கேட்டான்

அதுவா முக்கியம்? நான் எவ்ளோ பயந்திட்டேன் தெரியுமா? ஜாக்கிரதையா இருக்க மாட்டீங்களா நீங்க? கார் இருக்கும் போது பைக் எதுக்கு, என்ன பெட்ரோல் மிச்சம் பண்றீங்களா?” என பட படத்தாள்

அவள் கை அவன் கையில் இருக்க அதை எடுத்து தன் நெஞ்சின் மீது வைத்துக்கொண்டவன், “ஏன் வாடிப் போய் தெரியுற? பசிக்குதா உனக்கு? எதுவும் சாப்பிட்டியா?” எனக் கேட்டான்

Advertisement