Advertisement

வருண் யாரையோ காதலிக்கிறான் என பாலனுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் கடுகளவு கூட அவனது காதலி சுயம்புலிங்கம் குடும்பத்தை சேர்ந்தவளாக இருக்க கூடும் என்ற கணிப்பு இல்லை. வேறு மதம் அல்லது சமூகத்தை சேர்ந்த பெண்ணாக இருப்பதால் தன்னிடம் சொல்ல தயங்குகிறான் என்றே நினைத்திருந்தான்

அறைக்கு வந்த பின் உறங்கலாம் என வருண் நினைத்தாலும் சௌமியா அதற்கு விட்டால்தானே? ஒரு வார காலமாக பார்த்திருக்கவில்லை, அதற்கே அத்தனை ஏக்கமாக பேசி தீர்த்தாள்

பிரியாவும் தன் கணவன் அருகாமைக்காக ஏங்கினாலும் கால் மணி நேரம் அவளிடம் பேசிய பாலன்இல்லையில்லை அவள் பேசுவதை கேட்டிருந்த பாலன், “டைம் என்ன ஆகுது? நாளைக்கு காலையிலேயே கூப்பிட வந்திடுவேன், ஒழுங்கா தூங்குஎன சொல்லி விட்டான்

வந்து…” இழுத்தாள் பிரியா

என்ன ஆறு மணிக்கு அலாரம் வேலை பார்க்கணுமா நான்?” சரியாக கேட்டான்

ம்இன்னொரு விஷயம் கூட சொல்லணும்” 

என்ன?” 

அது இப்போ டைம் ஆகிடுச்சு. தூங்கிட்டு நாளைக்கு சொல்றேன்” 

ஹேய் என்னன்னு…” பாலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பை துண்டித்து விட்டாள் பிரியா

வாலு வாலுஎன் தூக்கத்தை எப்படியெல்லாம் கெடுக்குது பாரு!” பாலன் முகம் மலர்ந்திருந்தது.

உத்ரா முதல் நாள் போலவே தரையில் கம்பளி விரிக்க அறைக்குள் வந்தான் ஆதவன். அன்றைய தினம் காலையில் அருகில் இருக்கும் குல தெய்வ கோயிலுக்கு சென்று வந்தனர். நாள் நன்றாக இருப்பதாக சொல்லி அன்றே ஏதாவது சமை என மருமகளிடம் துர்கா சொல்லி விட, மதிய சமையல் பிரியா உதவியோடு செய்து அனைவருக்கும் பரிமாறினாள். பின் இது வரையிலுமே பிரியா உடன் இருப்பதால் நேரம் எப்படியோ நகர்ந்து விட்டது

வெளியூரிலிருந்து வந்த நண்பர்கள் இன்று கிளம்புகிறார்கள் என சொல்லி மதியத்திற்கு மேல் அவர்களை சந்திக்க சென்ற ஆதவன் இரவு சாப்பாட்டுக்குத்தான் திரும்பினான்.

நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு சுதாவை ஆதவனுக்கு பேசி வைத்திருந்தது தெரியும். ஆதவன் இயல்பாக இல்லாமல் இருக்க அவள்தான் காரணம் என்பதை ஊகித்தவன் தனியாக அழைத்து கேட்டே இருந்தான். ஆதவனும் ஆம் என ஒத்துக் கொண்டான்

என்ன செய்றதா இருக்க, உத்ராவை டிவோர்ஸ் பண்ணிட்டு திரும்ப சுதாவை…” என அவன் கேட்க, பதறி விட்டான் ஆதவன்

ம்ம்அப்படி செய்ய முடியாதுதானே? உத்ராதானே உன் வைஃப்? முடிஞ்சு போனதை நினைச்சு இனி இருக்க நீளமான வாழ்க்கைய சிதைச்சுக்காத. பின்னால வருத்த படுவஎன அறிவுரை சொல்லியிருந்தான்

சுதாவும் யாரையாவது கல்யாணம் செய்துகிட்டா சரியாகும்னு நினைக்கிறேன் டாஎன ஆதவன் சொல்ல, “சுதாவுக்காக நீ காத்திருக்கலாம், உன் வைஃப் எதுக்கு வெயிட் பண்ணனும்? யாருக்கோ நியாயம் செய்றேன்னு உன் வைஃப் க்கு கொடுமை பண்ணாத. யோசிஎன பட்டவர்த்தனமாக சொல்லியிருக்க ஆதவனுக்கு குழப்பமாகி விட்டது

இப்போது வரை தான் செய்வது சரியா தவறா என புரியாமல் முடிவு கிட்டாமல் தவித்தவன் வேறு ஆடை மாற்றி வந்தான். கீழே படுத்திருந்த உத்ராவை கண்டு நெருடலாக இருந்தது

இவ வேணாம்னு சொல்லியிருக்கலாம்தானே?’ என இப்போதும் தோன்றாமல் இல்லை. முடிந்ததை பேசி நடக்க போவது ஒன்றுமில்லை என எண்ணியவனுக்கு உத்ராவை மனைவியாக ஏற்க முடியாமல் சுதா உறுத்திக் கொண்டிருந்தாள்

உத்ரா மீது கோவம் இருந்தாலும் இப்போது பார்க்க பாவமாக இருந்தது. ஆனாலும் தண்மையாக பேச வரவில்லை

என்னடி இது? என்னை கொடுமைக்காரன் ரேஞ்சுக்கு எல்லார்கிட்டேயும் ப்ரொஜக்ட் பண்ண நினைக்கிறியா? மேல ஏறி படுஎன்றான்

அவனை ஒரு பார்வை பார்த்தவள் புரண்டு படுக்க, “காது அவுட் ஆகிடுச்சா உனக்கு?” எனக் கேட்டான்

நான் யார்கிட்டேயும் போய் சொல்ல போறது இல்லை. யார் கரிசனமும் எனக்கு வேணாம்கண்களை மூடியிருந்த படியே சொன்னாள் உத்ரா

நீ யார்கிட்டேயும் சொல்ல வேணாம், எனக்கே நான் கெட்டவன்னு தோண வைக்கிற நீ. ப்ச்எந்திரி முதல்ல” 

நான் ஏன் உங்க பெட்ல படுக்கணும்? நான் மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் உங்களை, உங்க ஆசைய கெடுத்திட்டேன்என்ன முயன்றும் உத்ராவின் குரல் கலங்கியது.

அவ்ளோ யோசிக்க வேணாம் நீ. இந்த தேக்கு மர கட்டில் உன் அண்ணன் வாங்கி கொடுத்தது. நான் படுக்கதான் உன் பெர்மிஸன் வேணும்என்றான்

உத்ராவின் மனம் சமாதானம் அடையாமல் இருக்க அவள் அசையவில்லை

என்ன உத்ரா, படுத்தாம எழுந்திரி” 

என்னிக்கு உங்க பொண்டாட்டியா நினைக்குறீங்களோ அன்னிக்கு வர்றேன்சூடாக சொன்னாள்

என்னத்த நினைக்கணும் நான்? ஊர் கூடியிருந்தப்பதான் உனக்கு தாலி கட்டினேன். நீ வேற மாதிரி ஸாஃப்ட்னு நினைச்சிருந்தேன். இப்போ இப்போதான் நீயும் உங்கண்ணனுங்களுக்கு கொஞ்சமும் குறைஞ்சவ இல்லைனு புரியுது” 

என்னை பத்தி பேசத்தான் உங்களுக்கு உரிமை இருக்கு, ஒரு வார்த்தை என் அண்ணன் பத்தி பேசுனீங்க நல்லா இருக்காது சொல்லிட்டேன்” 

இந்த திமிர்இது இதைதான் சொல்றேன், கொஞ்சமாச்சும் வாயடக்கமா பேசுறியா நீ? எல்லாம் பிரியா அங்க இருக்கிறா என்ன செஞ்சிட போறோம்ங்கிற நினைப்புல வர்ற திமிர்” 

எப்பவாவதுதான் இப்படியா? இல்ல, எல்லா நேரமும் இப்படித்தான் சம்பந்தமே இல்லாம பேசுவீங்களா?”

என் வாழ்க்கையில மண்ண அள்ளி போட்டீங்க, இப்ப போனா போகுதுன்னு நானா இறங்கி வந்தா திமிரடியா பேசுற. எங்கேயோ படு, எக்கேடோ கெட்டு போ எனக்கென்ன வந்தது?” 

யாரு யாரு வாழ்க்கையில மண்ண அள்ளி போட்டது? இறங்கி போங்கன்னு கேட்டேனா உங்களை?” உத்ராவும் சத்தம் போட, ஆத்திரம் வரப் பெற்றவன் மேசையில் வைக்க பட்டிருந்த தண்ணீர் சொம்பை தரையில் விட்டெறிந்தான்.

 கோவமாக பார்த்த உத்ரா மீண்டும் கண்களை மூடிக் கொண்டு போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டாள்

கட்டிலின் அந்த பக்கம் தரையில் பாய் விரித்தவன் மின் விளக்கை அணைத்து படுத்து விட்டான்

உத்ராவுக்கு சுத்தமாக உறக்கம் வரவில்லை. மெல்ல அவன் பக்கம் திரும்பி படுத்தாள். உறக்கம் வராமல் அவனும் புரண்டு கொண்டிருப்பது தெரிந்தது. சில்லிப்பை உணர்ந்த உத்ரா என்ன என பார்க்க சொம்பில் இருந்து சிந்திய தண்ணீர் அவளது கம்பளி வரை வந்து நனைத்திருந்தது

எழுந்தவள் விளக்கை போட, “ஆஃப் பண்ணு லைட்டஎன எரிந்து விழுந்தான்.

அவனை கண்டு கொள்ளாமல் நனைந்த கம்பளி வைத்தே தண்ணீரை ஒற்றி எடுத்து ஓரமாக போட்டவள் கோவத்தில் போர்வையை விரித்துக் கொள்ளவும் பிடிக்காமல் வெறும் தரையில் படுக்க அவன் எழுந்தமர்ந்து விட்டான்

அவள் அப்படி படுத்திருப்பது கண்டு மனம் பொறுக்கவும் இல்லை, மேலும் எதுவும் பேசவும் பிடிக்கவில்லை. கப்போர்ட் திறந்து பெட் ஷீட் எடுத்து அவள் பக்கத்தில் வைத்தவன் குரலை செரும அவள் கண்டு கொள்வதாக இல்லை.

என்னடி உனக்கு வேணும்? உடம்புக்கு ஏதாவது வந்து தொலைச்சா என்னைத்தான் ஏதோ பண்ணிட்டேன்னு சொல்வாங்க. மரியாதையா மேல படு, இல்ல இதை விரிச்சு படுஎன அதட்டல் போட்டான்

உத்ராவாலும் வெறும் தரையில் படுத்திருக்க முடியவில்லை. ‘ஏன் என் உடம்ப கெடுத்துக்கணும் நான்?’ என நினைத்தவள் வீம்பு செய்யாமல் அந்த பெட் ஷீட் விரித்து படுத்துக் கொள்ள ஆதவனும் படுக்க சென்றான்

அடுத்த நாள் காலையில் மற்றவர்களை விட சீக்கிரம் தயாராகி ஆவலாக வாயிலையே பார்த்திருந்தாள் பிரியா. பாலன் வரவும் வேகமாக அவன் முன் சென்றுவாங்கஎன அழைத்தாள்

அவளுக்கும் பின்னால் எட்டி பார்த்து யாருமில்லை என உறுதி செய்து கொண்டவன், “என்கிட்ட என்னமோ சொல்லணும்னு சொன்னியே என்ன?” எனக் கேட்டான்

பார்த்து பார்த்து தயாரானா ரசனையா ஒரு லுக் இல்ல, மண்டைய குடையுற விஷயத்தை மட்டும் உடனே தெரிஞ்சுக்கணும்!’ மனதில் சிலிர்த்தவள் உடனே சொல்லக்கூடாது என முடிவு செய்து கொண்டாள்.

என்ன பிரியா? சீக்கிரம் சொல்லுஅவசர படுத்தினான்

அது…” என ஆரம்பித்தவள் அவன் காதை நெருங்கி, “கொஞ்ச நேரம் ஆகட்டும், ஏழு மணிக்கு வருவீங்கன்னு நினைச்சேன், எட்டு மணி ஆகிடுச்சு. ஒரு மணி நேரம் வெயிட் பண்ணினேன் நான்என்றாள்

பாலன் சிறிதாக புன்னகை புரிய தாத்தா பாட்டி மலையரசன் துர்கா என அனைவரும் வந்து வரவேற்றனர். பாலன் குரல் கேட்டு வேகமாக வந்த உத்ரா அண்ணன் கையை பிடித்துக்கொண்டு வரவேற்க ஆதவனும் அழைத்தான்

அரை மணி நேரம் அங்கிருந்தவன் அனைவரையும் விருந்துக்கு அழைத்து சென்றான். பாலன் வீட்டில் குறை எதுவும் இல்லாமல் விருந்து நடந்தது. மாலை கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டான் பாலன். இரவில் பிரியாவுடன் புறப்பட்டு விட்டான்

இந்த முறை பிரியா உறங்கவே இல்லை. அவனுடன் பேசிக் கொண்டே வந்தாள். நாளை மருத்துவமனை செல்ல வேண்டும் உறங்கு என அவனும் சொல்லிப் பார்த்து விட்டான்

சும்மா தூங்கு தூங்குன்னு சொல்லாதீங்க, தூக்கம் வந்தா நானே தூங்குவேன்அழகாக கோவப்பட்டாள்

சரி என்ன விஷயம்னாவது சொல்லு” 

நானே சொல்வேன்என அவள் அதற்கும் பிகு செய்ய பின் அவள் போக்கில் விட்டு விட்டான். விடியற்காலையில் சென்னை வந்து விட அவளது முகம் கூம்பிப் போனது

அவளது விடுதி முன் காரை நிறுத்தினான் பாலன்

என்ன விஷயம்னு கேட்க மாட்டீங்களா?” 

அதான் நீயே சொல்றேன்னு சொன்னியே” 

லேசாக முறைத்தவள் காரின் கதவை திறக்க கை வைக்க, “சொல்லிட்டு போஎன்றான்

இன்னும் கொஞ்சம் கெஞ்சலாக காதலாக அவன் கேட்கலாம் என நினைத்தாலும் அதற்கு மேல் மௌனம் வளர்க்காமல் அவனை பார்த்தவள், “நான் இப்படி உங்ககிட்டதான் நிறைய பேசுறேன். நிறைய எக்ஸ்பெக்ட் பண்றேன்என்றவள் அவன் முகத்தை பார்க்க ஏதோ செய்தி கேட்பது போல கேட்டிருந்தான் பாலன்

எனக்கு தெரியலை, உங்களை எனக்கு… ரொம்ப பிடிச்சிருக்கு போலஅதான்ரொம்ப தொல்லை செய்றேன் உங்களை. உங்ககிட்ட மட்டும்தான்…” சொல்ல வந்ததை திக்கி திணறி ஒரு விதமாக சொல்லி முடித்தாள்

ம்நாலு மாசம் ஒழுங்கா படிப்ப முடிச்சிட்டு வந்து சேரு. கவனமா பொறுப்பா நடந்துக்க” என அறிவுரை சொல்லிக் கொண்டே காரின் கதவை திறந்து விட்டான்

என்ன இவ்ளோதான் ரியாக்ஷனா!’ என அவள் பார்க்க இறங்க சொல்லி கை காட்டினான்

ஹ்ம்!” முகத்தை சுருக்கி காட்டியவள் இறங்கி செல்ல, அவள் தன் பார்வையிலிருந்து மறைந்த பின் கண்ணாடி பார்த்து தலை கோதிக் கொண்டே கர்வமாக சிரித்தான் சிவபாலன்.  

இதுவரை வராத வெட்கம் கூட வந்ததோ! ஆனால் அந்த அழகை காணத்தான் யாருக்கும் கொடுத்து வைக்கவில்லை

Advertisement