Advertisement

சொல்லாமல்…

மௌனம் 08(ii)

இன்று..

அந்த இருட்டறையில் கசிந்து கொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் சுற்றும் பார்த்தவரின் விழிகளில் அத்தனை பயம்.

வாய் முழுக்க துணியை அடைத்து வைத்திருக்க மூச்சு விடுவதே சிரமமாய் இருந்த நிலையில் கத்துவதற்கு திராணி ஏது..?

கைகள் கதிரையின் பின்னே கட்டப்பட்டிருக்க கால்களோ கதிரையுடன் கால்களுடன் சேர்த்து பிணைக்கப்பட்டிருந்தது.

அசையக் கூட முடியவில்லை,

மனிதரால்.

கட்டுக்களை கழற்ற முயன்று கதிரையை அங்குமிங்கும் பியரத்தனப்பட்டு அசைத்துக் கொண்டிருக்க அது அந்த அமைதிக்கு பெரும் சத்தமாய் இருந்தது.

அது தந்த எரிச்சலில் பக்கத்து அறையில் இருந்தவனோ விளக்கை போட்டு விட்டு அந்த அறையின் கதவை திறக்க அதீத வெளிச்சத்தில் கண்கள் கூசிற்று,

அவருக்கு.

இமைமூடி விழி சுருக்கி வெளிச்சத்தில் தப்பிக்க முயன்றவரின் செயல் அவனிதழ்களில் புன்னகையைத் தூவி விட்டிட ஏனோ அவரின் அசௌகரியத்தில் இவனிதழ்களில் அப்படி ஒரு புன்னகை.

“யோவ்வ்வ்வ்..ஆடாம இருய்யாஆஆஆ…எப்ப பாரு தய்யா தகான்னு கிட்டு..”

ஏகத்துக்கும் நக்கல் தொனிக்கும் குரலில் கூறி விட்டு ஏளனப் பார்வையை அவர் மீது வீசிட முறைக்க மட்டுமே முடிந்தது,

அவரால்.

இதழ்கள் தன்னாலே ஏதோ திட்டித் தீர்க்க முயன்றிட சிரிப்பு வந்து விட்டது அவருக்கு.

“யோவ்வ்வ்..திட்ட போறேன்னு வாய்ல இருக்குற துணிய துப்பிராத..திரும்பி என்னால துணி கொண்டு வர முடியாது..பொத்திட்டு இரு கொஞ்ச நேரத்துக்கு எப்ப பாரு நொய்யு நொய்யுன்னு..உன்னோட இவ்ளோ நாள் குடும்பம் நடத்திச்சே அந்த அம்மா..அவங்களுக்கு செலயே வச்சிர்லாம் போல இருக்கே..”

“………..”

“யோவ் என்னய்யா..மொறக்கிறேன்னு மூஞ்ச சுருக்கி காமெடி பண்ணிகிட்டு இருக்க…இப்டி ஏடாகூடமா ஏதாவது பண்ணிகிட்டு இருந்தன்னு வையி..

மத்யானம் சாப்பாடு கெடயாது..சொல்லிட்டேன்..” என்ற அவரை மிரட்டி விட்டு கதவை அடைத்துக் கொண்டு வெளியே வந்தான்,

அவன்.

மனிதரை கடத்தியதில் இருந்து இவன் பாடு திண்டாட்டமாய் போனது.

ஏன் கடத்தினோம் என்பதாய் ஒரு மனநிலை.

நேரம் இரவு எட்டுமணியை காட்டவே அந்த வீட்டை அடைத்துக் கொண்டு வெளியேறிட அந்த வீட்டில் அவர் மட்டுமே.

அவர் தப்பித்து போய்விடுவார் என்கின்ற நம்பிக்கை துளியும் இல்லை அவனுக்கு.

எல்லா ஏற்பாடுகளையும் துல்லியமாய் செய்து விட்டல்லவா விட்டு வருகிறான்..?

ஏனோ அதனால் பயமில்லை துளியும்.

அப்படியே தப்பித்தாலும் அவரையே வந்து சரணடைய வைத்திடும் வழி தான் தெரியாதா..?

அந்த நினைவில் வந்த சிறு புன்னகையுடன் வண்டியை கிளப்பியவனின் இலக்கு தனது வீடு தான்.

அதே நேரம்…

அந்த பிஸினஸ் பார்ட்டியில் கலந்து கொண்டிருந்த அனைவரினதும் பார்வையும் ஒரு கணம் அவனைத் தழுவித் தான் மீண்டது.

தன் மகளைத் தேடிக் கடந்து செல்லும் போது ஒரு ஓரமாய் இருந்த இடத்தில் அமர்ந்திருந்த ஆதித்யாவை கண்டதும் அவரின் முகம் யோசனையில் சுருங்கிற்று.

அதுவும் அவனுக்கு பக்கத்தில் ஏறத்தாழே அதே சாயலில் அமர்ந்திருந்த இன்னொருவனைக் கண்டதும் அவரின் விழிகளில் சிறு வியப்பு.

அவர்களை பார்த்துக் கொண்டே பேச்சுக் கொடுத்தார், தன் தோழரிடம்.

“ராகவேந்திரன்..அது நம்ம சாரதா டாக்டரோட பையனுங்க தானே..”

“ஆமா..மூர்த்தி நீங்க பாத்தில்லயா முன்ன பின்ன..?”

“பாத்துருக்கேன்..ரெண்டாவது இருக்காரே..அவர பாத்துருக்கேன்..கார்னர் இருக்குவரு தான்..”

“அது அவங்களோட மூத்த பையன்…பேரு சித்தார்த்..”

“சித்தார்த்தா..இவர எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே..”

“ம்ம்..பாத்துருப்பீங்க..

இப்போ ஒரு டூ இயர்ஸ் முன்னாடி ஒரு மூவில நடிச்சு பேமஸ் ஆகுனாரு ரொம்ப..அதுக்கப்றம் அவர் லவ்லர ஏதோ ரீசன்காக பிரிஞ்சு வந்தப்றம்  எந்த மூவிலயும் வர்க் பண்ணல..ரொம்ப அழுத்தமான கேரக்டர்..”

“சரி..இப்போ இங்க..?”

“போன வாரம் தான் பாரின்ல இருந்து வந்துருக்குறதா சொன்னாங்க..”

“ஓஹ்..பையன் ரொம்ப நல்ல போல இருக்கு..”

“சார்..பத்து வார்த்த பேசுனா ஒத்த வார்த்தைல பதில் சொல்ற ரகம்..கொஞ்சம் டெரர் பீசு தான்..”

“ஆமா..ஆனா அவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காலே..”

“ரெண்டு பேரும் ட்வின்ஸ்..சித்தார்த் தான் அண்ணன்..ஆதி தம்பி..”

“ரெண்டாவது பையன் எப்டி..?”

“அவரு ரொம்ப நல்ல மாதிரி தான்..சித்தார்த்த மாதிரி அழுத்தமான கேரக்டர் எல்லாம் கெடயாது..”

“ஆமா..இவங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்கு தான..”

“ஆமா..பேரு ஆரிணி..இப்போ காலேஜ் படிக்கிற பொண்ணு..”

“ஆமா..இவங்க பேமலி மெம்பர்..”என்று ஏதோ கேள்வி கேட்க வரும் முன்னரே அவ்விடத்துக்கு வந்து சேர்ந்திருந்தார்,

ரகுவரன்.

ஆதித்யனின் தந்தை.

அவரின் வருகையால் இவர்களின் பேச்சு தடைப்ப மெல்ல சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்திட அவருக்கும் அவர்களின் சமாளிப்பு புரியாமல் இல்லை.

அவரும் எதையும் வெளிக்காட்டாது புன்னகைத்திட  அவர்களுக்கும் வலுக்கட்டாயமாக புன்னகைக்க வேண்டிய நிலை அல்லவா..?

போலியான நடிப்புக்களுடன் அவர்களின் உரையாடல் தொடர்ந்திட சாரதா மட்டும் அந்த இடத்துக்கு வந்திருக்கவில்லை.

நேரம் எட்டரை மணியை நெருங்கிய சமயம் அது.

சாரதாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்,

கயல்விழி.

“மேம்..உங்க ஸ்கூல் லைப்..காலேஜ் லைப்..அதுக்கப்றம் பேமிலி..ஒரு ஹவுஸ் வைபாவும் ஒரு டாக்டராவும் நீங்க பட்ட செரமம்..பத்தி எல்லாத்தயும் பத்தி சொல்லிட்டீங்க..”

“ம்ம்..”

“இப்போ உங்க கிட்ட ஒரு பர்சனல் கொஷ்டின்..ஒரு டாக்டரா இல்லாம ஒரு சாதாரண பொண்ணா பாக்கும் போது உங்க வீவ்ல லவ்..அது காதல் எப்டி பட்டது..?”

“ஒரு பொண்ணா என்னோட பாய்ன்ட் ஆப் வீவ்ல பாக்கும் போது நா அத ஏத்துக்கவே மாட்டேன்னு தான் இருந்தேன்..ஈவின் எங்க கல்யாணம் கூட பக்கா அரேன்ஜ்டு மேரேஜ் தான்..”

“ம்ம்ம்ம்..”

“நா வளர்ந்த சூழல் எனக்கு காதல் மேல அந்தளவு ஒரு நம்பிக்கய கூட தர்ல..காதல்னு தா பாத்தவங்க யாருமே உண்மயா லவ் பண்ணல..அது ஒரு வெறும் ஆட்ராக்ஷன் மாதிரி எனக்கு அப்போவெல்லாம் தோணிட்டு இருக்குள்…யேன் ஆப்டர் மேரேஜ் லவ் மேல கூட சுத்தமா நம்பிக்க இருக்கல..ஆனா அப்டி இல்லன்னு ப்ரூப் பண்ணது என்னோட ஹஸ்பண்ட்..”

“அப்போ உங்களுக்கு காதல் மேல இருக்குற தாட்ட அப்டியே உடச்சு மாத்தி எழுதுனது சார் தானா..?” கேட்கும் போதே அவளிதழ்களில் புன்னகை ஓடியது.

“உடச்சு போட்டது என்னோட ஹஸ்பெண்ட் தான்..பட் மாத்தி எழுதுனது என்னோட பையன்..”

“என்ன மேடம் சொல்றீங்க..? “

“ம்ம்..என்னோட மூத்த பையன் தான்..பாக்குறதுகு தான் கரடுமுரடா இருப்பான்..ஆனா ஹீ ஈஸ் அ ஜெம்..”

“மேம்ம்..”

“யெஸ்ஸ்ஸ்..நா அவன் கூட அவ்ளவா பேசுறதில்ல தான்..ஆனா அவன் மேல எனக்கு மத்த பையனுங்கள விட அதிகமாவே மதிப்பு இருக்கு..அவன பாக்கும் போது ஒவ்வொரு தடவயும் மனசுக்குள்ள நம்ம வளர்ப்பு தப்பாதுன்னு  தோணிட்டே இருக்கும்..” என்றவரின் விழிகளில் மெல்லிய நீரேற்றம்.

“மேம்..சாரி..சாரி..” அவரின் கண்ணீர் கண்டு பதறியவளாய் அவள் மன்னிப்பு கேட்டிட தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புன்னகைத்தவரின் முகத்தில் ஏதோ ஒரு வித சோகம்.

“நீ ஒன்னும் தப்பா சொல்லல மா..எதுக்கு மன்னிப்பு கேட்டுகிட்டு..இப் யூ டோன்ட் மைன்ட் இதுல என் பையன பத்தி எழுதுறதுல அப்சட் இல்ல தான..”

“இல்ல..இல்ல மேம்..நீங்க சொல்லுங்க..”

“நாம ஒருத்தர லவ் பண்றோம்னா அத கண்டிப்பா வார்த்தயால சொல்லனும்ங்குற எந்த அவசியமும் இல்ல..இவன் இப்டி ஒரு பொண்ண சைலன்டா லவ் பண்ணி இருப்பான்னு என்னால நம்ப கூட முடியல..ஆரம்பத்துல அவன் மேல ரொம்ப கோபமா வந்துச்சு..பெத்த பையன் ஒரு பொண்ண லவ் பண்றது தெரிஞ்சா கண்டிப்பா ஒரு அம்மாக்கு கோபம் வரத் தான செய்யும்..எனக்கு அப்டி ஒரு கோபம் வந்துச்சு..”

“…………”

“ஆனா யேன்னு கூப்டு கேள்வி கேக்குற நெலம இருக்கல அப்போஓ…

அதுக்கப்றம் நா அவன் கூட அதிகமா பேசல..ஆனா அதுக்பறம் நடந்துச்சு பாரு ஒன்னு..ஏன்னு தெரியல அவன் காதல பாத்து எனக்கே ரொம்ப பொறாமயா போய்டுச்சு..பட் நா அத இந்த எடத்துல மென்ஷன் பண்ண விரும்பல..”

“………….”

“நீங்க நெனச்சுக்கலாம்…ஒரு அம்மாங்குறதால நா இப்டி பேசுறேன்னு..ஆனா கண்டிப்பா அப்டி கெடயாது..நீங்களே அவன் கதய முழுசா கேட்டா மாறிடுவீங்க..”

கண்ணீருடன் அவர் சொல்லி முடிக்கும் போது இவளுக்கும் என்னவோ போல் ஆகி விட்டிருந்தது.

“சாரி மேம்..சாரி..நீங்க ரொம்ப எமோஷனல் ஆகற மாதிரி நானும் கேள்வி கேட்டுட்டேன்..”

“இல்லமா..அப்டிலாம் கெடயாது..நா தான் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்..கண்டிப்பா ஒரு நாள் வா..நா உனக்கு என் பையன மீட் பண்ண வக்கறேன்..”

அவர் சிறு புன்னகையுடன் சொல்ல ஆமோதிப்பாய் தலையசைத்து வைத்தாள், அவளும்.

அவரை மேலும் கஷ்டப்படுத்த விரும்பால் சில கேள்விகளோடு முடித்துக் கொண்டவனோ இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் வருவதாக கூறி விட்டுக் கிளம்பிச் சென்றிட புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார், அவரும்.

மறுநாள் பொழுது அழகாய் விடிந்திட அடித்துப் பிடித்துக் கொண்டு பேரூந்து நிலையத்திற்கு ஓடி நிறுத்தி வைக்கபட்டிருந்த பேரூந்தில் ஏறிய தர்ஷினிக்கு மூச்சு வாங்கியது.

யன்னலோர இருக்கையை பிடித்து அமர்ந்து கொண்டவளுக்கு தூக்கம் கண்ணை சுழற்றினாலும் விழி மூட மனம் வரவில்லை.

நேற்று தாயார் கேட்ட கேள்வி மண்டையைக் குடைந்திட தலை வலித்தது.

“நீயும் மாப்ளயும் ஏதாவது சண்ட போட்டுடு பேசாம இருக்கீங்களா..?”

தான் அவனுடன் பேசாமல் இருந்ததை தாய் கவனித்து கேட்ட கேள்வியில் அவளுக்கு திக்கென்றானதும் பின் ஏதோ சொல்லி சமாளித்ததும்.

இன்று அவனிடம் கூறி இதற்கு ஏதாவது தீர்வு கட்ட வேண்டும் என்பதற்காக தானே இந்த பயணம்.

சுருக்கமாய் சொல்லப் போனால் அவனைக் காணச் செல்வதற்கு இது ஒரு சிறு காரணம்.

அவனைக் காணப் போகின்றோம் என்கின்ற ஆர்வம் முகத்தில் பரவிக் கிடந்த உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சி.

விடுதியில் வசிக்கும் மாணவனுக்கு பெற்றோர் தன்னை கண்டிட வந்திடும் பொழுது உண்டாகிடுமே ஒரு மனநிலை.

அந்நிலையில் தான் அவளும்.

அன்று தன்னிடம் வெளிநாடு செல்வதாக பொய் கூறியது தெரிந்து வருத்தம் எழுந்தாலும் அவன் மீது கோபம் வரவில்லையே.

அன்று தன்னை கை நீட்டி அடித்த பின்னும் அதே நிலை தான்.

ஏனென்று தெரியவில்லை.

அவன் மீது சற்றும் கோபம் வருவதில்லையே அவளுக்கு.

மெதுவாக அவர்கள் இருந்த வீட்டின் அருகே இறங்கி நுழைவாயிலைத் திறந்து கொண்டு வந்திட வீட்டின் கதவு திறந்திருப்பது புரிந்திட அவன் எழுந்து தான் இருக்கின்றான் என்கின்ற எண்ணம்.

ஆர்வம் மின்ன துள்ளல் நடையுடன் வீட்டை நெருங்கியவளின் பார்வை ஏனோ ஹேன்ட் ட்ரில்லில் படிந்திட அதில் பாதி மாத்திரம் மீதிமிருந்த அவனின் கைரேகைகள்.

இப்போது தான் நின்று விட்டு உள்ளே சென்றிருக்கிறான் போலும்.

சரியாக ஊகித்தவளுக்கு இத்தனை நாட்களின் எண்ணம் நிறைவேற்றிடும் தருணம் இதுவெனத் தோன்றிட்டதோ வந்த நோக்கம் மறந்து அவனின் கை ரேகைகளின் மீது தன் கரம் பதிக்க முனைந்த நொடி கேட்டது அவனின் நடைச் சத்தம்.

பட்டென தன் கைகளை பின்னே எடுத்துக் கொண்டவளோ நல்ல பிள்ளையாய் சென்று கதவருகே நின்று கொண்டிட வெளியே செல்ல கதவைத் திறந்து கொண்டு தன் முன்னே நின்றவனின் பார்வையே சொன்னது அவளை துளியும் எதிர்ப்பார்க்காததை.

ஒரு கணம் விழிகளை அழுந்த மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவளை பார்வையாலே துளைக்க உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை,

அவள்.

“நா..நா..கொஞ்சம் உங்க கூட பேசனும்..” எங்கெங்கோ பார்த்த படி சொல்லி முடித்தவளுக்கு இப்போது சில நாட்களாய் அவனின் விழிகளை நேரிய பார்வையுடன் சந்திக்க முடிவதே இல்லை.

“எதுக்கு..?” விட்டேற்றியாய் வந்த சொல்லில் சரிவிகிதமாய் கோபமும் கலந்திருந்தது.

“வீ..வீட்..வீட்ல கொஞ்சம் ப்ரச்சன…”

“ஓஹ்..ஷட்..ஏதாவது ப்ராப்ளம்னா போன் பண்ணி சொல்லு..நா எங்க மீட் பண்ணனும்னு சொல்றேன்..இப்டி திடுதிடுப்புன்னு வீட்டுக்கு வந்து நிக்காத..புரிஞ்சிதா..?” சீறலாய் அவன் கேட்டிட உள்ளுக்குள் சுருக்கென்று தைத்தாலும் தலையாட்டி வைத்தவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சமாய் உடைந்தது.

“சரி வா…” அழைத்து விட்டு முன்னே நடந்திட்டவனுக்கு கடுங்கோபம் உள்ளுக்குள்.

அவனைப் பின் தொடர்ந்து அவள் நடந்திட தன் வண்டியில் ஏறி கிளப்ப அவளும் ஏறிக் கொண்டாள்,

அவனை விழிகளுக்குள் நிரப்பியவாறே.

தொடரும்.

🖋️அதி…!

2023.08.10

Advertisement