Advertisement

*சொல்லாமல்…!*

*மௌனம் 15(ii)*

*இன்று…*

மெல்ல விழி திறந்து பார்த்தவனுக்கு தான் இருப்பது எந்த இடம் என்பது புரியவே சில நொடிகள் எடுக்க அவன் விழித்ததை உணர்ந்தது போல் கதவை திறந்து கொண்டு வந்தாள்,

தர்ஷினி.

கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தமர்ந்து கை மறைவில் கொட்டாவி விட்டவனை ஓரக் கண்ணால் பார்த்திட முகத்தை இயல்பாக வைத்துக் கொள்வதே பெரும் பாடாகத் தான் இருந்தது, அவளுக்கு.

“தண்ணீ இருக்கா..?” போர்வைய விலத்தாமலே அவன் கேட்டிட திடுமென ஒலித்த கம்பீரமான குரலிலும் அவன் தன்னிடம் கேட்பான் என எதிர்பாராததாலும் மெல்லிய அதிர்வு அவளுக்குள்.

“ஆ..ஆ..இ..இருக்கு..த…தர்ரேன்..” திணறிய படி பேசியவளின் கரங்கள் மேசையில் இருந்த தண்ணீர்ப் போத்தலை அவன் புறம் நீட்டிட அவனின் பார்வை அவளின் அறையை சுற்றி வந்தது.

“தேங்க்ஸ்..” என்றவாறு வாங்கிக் கொண்டவனின் விழிகள் சுருங்கி எதையோ பார்த்திட அவனின் பார்வை சென்ற திசையில் தன் பார்வையை திருப்பியவளுக்கு சடுதியாய் எம்பிக் குதித்தது இதயம்.

கட்டிலின் அருகே வைக்கப்பட்டிருந்த மேசையில் இருந்த ஓரிரு புகைப்படங்களில் தான் ஊர்ந்து கொண்டிருந்தது,

அவனின் பார்வை.

நாசூக்காய் அவனுக்கு காட்டாமல் அதை எடுத்து மறைத்து வைப்பதற்குள் அவளுக்கு உயிரே போயிருந்தது.

அவனிடம் இருந்து கிடைக்கும் காட்டுக் கத்தலை தாங்கிட யாரால் தான் இயலும்..?

அவனோ அவளை புருவம் சுருக்கிப் பார்த்து விட்டு அறையை ஒட்டியிருந்த குளியலைறக்குள் நுழைந்திடவே மூச்சு விட முடிந்தது, அவளால்.

மூன்றும் அவனின் புகைப்படங்கள் தான்.

அதனால் தானே இத்தனை பயம் அவளுக்கு.

முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்தவனுக்கு துவாயை எடுத்து நீட்டிட அந்த மேசையில் மீண்டும் பார்வையை படரவிட்டவாறே அவன் வாங்கிக் கொள்ள அவனுக்குள் சந்தேகம் முளைத்திருப்பது ஊர்ஜிதமாகிற்று தர்ஷினிக்கு.

வெகு சிரமப்பட்டு தன் மனதினுள் எழுந்த கலவரம் முகத்தில் வெளிப்படாமல் மறைத்து விட்டு அறையில் இருந்து வெளியேறிட பார்த்திட தடுத்து நிறுத்தியது, அவன் குரல்.

“இன்னிக்கு லன்ச்கு வெளிய போலாம்..வீட்ல இருக்குறவங்களுக்கு சந்தேகம் வந்துரக் கூடாதுல..” இயல்பாய் அவன் சொல்லிட முதலில் மகிழ்ந்தாலும் பின்பு அவன் சொன்ன வார்த்தைகளில் உள்ளுக்குள் உடைந்தது அவளுக்கு.

“சரி..” மனமே இல்லாமல் சொல்லிட்டவளுக்கு அவனுடன் செலவழித்திடும் நிமிடங்களை மறுக்கும் படி எண்ணங்கள் எழுவது சாத்தியமான விடயம் இல்லையே.

ஐந்து நிமிடங்களின் பின் உடை மாற்றிக் கொண்டு அவள் குளியலறையில் இருந்து வெளியே வந்த கண்ணாடி முன்னே நின்று தலைசீவிக் கொண்டிருந்தவனின் பார்வை தனது விம்பத்தை கண்ணாடியில் ஆராய்ந்து கொண்டிருந்தது.

தலை சீவி சிகையை களைத்து விட்டு அவன் நகர்ந்திட நிலைக் கண்ணாடி முன்னே நின்று தன் உருவத்தை பார்த்தவளுக்கு முகத்தில் இருந்த சோகம் புலப்படாமல் இல்லை.

இருந்தாலும் என்ன செய்ய இயலும்..?

முடிந்தளவு தன்னை சமப்படுத்தி விட்டு கூந்தலை வாரிக் கொண்டிருக்க தன் சிகையை சரி பார்த்த படி மீண்டும் வந்து நிலைக்கண்ணாடியில் தனது விம்பத்தை பார்த்திட அவளின் பின்னே.

அவளை விட அவன் உயரம் என்பதால் அவனுக்கு பின்னே நிற்பதில் பிரச்சினை இருக்கவில்லை.

சிறு பொட்டை நெற்றியின் நடுவே வைத்து விட்டு நிமிர்ந்தவளுக்கு தனக்கு பின்னே அவன் நின்றிப்பது கண்ணாடியில் விம்பமாய் தெரிந்த இமை சிமிட்டல் உறைந்து நின்றிருந்தது,சில நொடிகளுக்கு.

இயல்பாய் அவனிருக்க இவளுக்குள் தான் பிரளயமே நிகழ்ந்து கொண்டிருந்தது, உள்ளுக்குள்.

அதிலும் தற்செயலாய் அவன் பார்வை அவளின் விம்பத்தை உரசிடும் போதெல்லாம் உள்ளுக்குள் புயலே அடித்தது.

பட்டென அவள் விலகி நின்றிட தன் தலைகோதிய படி நின்றவனின் பார்வை அவளை ஒரு கணம் அழுத்தமாய் தழுவி மீண்டாலும் அவனின் முகத்தில் இருக்கும் உணர்வு எத்தகையது என்பது யாருக்கும் புரிந்திட இயலாததாய்.

“ரெடியாகிட்டியா..?” அவள் முகம் பாராது அவன் கேட்டிட “ஆ..ஆமா..” திக்கித் திக்கி பதில் சொன்னாள், அவள்.

அதே நேரம்…

சுற்றும் முற்றும் பார்த்த படி அமர்ந்திருந்தாள்,

கயல்விழி.

இன்னும் சாரதாவைக் காணாதிருக்க ஒரு வித சலிப்பு எழுந்தது.

மெல்ல எழுந்து அந்த புற்றரையில் நடக்கத் துவங்கியவளுக்கு அந்த இடத்தின் பரப்பே சொன்னது அவர்களின் செல்வச் செழிப்பை.

அவள் உலாவுவதை பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்,

சித்தார்த்.

தூரத்தில் இருந்ததால் அவளின் முகம் சரியாயத் தெரியாதிருக்க அப்படியே தெரிந்து இருந்தாலும் கருத்தில் பதிந்து இருக்காதே. வேறொருத்தியைச் சுற்றி அல்லவா வட்டமடித்துக் கொண்டிருந்தது அவனின் எண்ணங்கள்.

தற்செயலாய் அவள் நிமிரவும் அவள் உள்ளே செல்லவும் சரியாய் இருக்க அவனின் முதுகுப் புறம் மட்டுமே காட்சியளித்தது கயல்விழிக்கு.

மீண்டும் வந்து சோர்வுடன் கல் இருக்கையில் அவள் அமர்ந்திடும் நேரம் வெளிப்பட்டார், சாரதா.

“அம்மாடி..ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா..?” கொஞ்சம் சங்கடத்துடன் அவர் கேட்டிட அவளின் இதழ்களில் புன்னகை அரும்பிற்று.

“ஐயோஓஓஓ..அப்டிலாம் இல்ல மேடம்ம்ம்ம்..இப்போ தான் வந்தேன்..”

“ம்ம்ம்..அப்டின்னா சரி..”

“மேடம் இன்னிக்கு உங்கள பத்தி சில கேள்விகள் இருக்கு..”

“ம்ம்..கேளுமா..”

“உங்களுக்கு புடிக்காத கலரு..?”

“ஆரஞ்ச் மா..”

“உங்கப்பாம்மாக்கு தெரியாநீங்க செஞ்ச ஒரு விஷயம்..?”

“எய்த் படிச்சிட்டு இருக்கும் போது ஒரு தடவ வீட்ல யார் கிட்டயும் தெரியாம படத்துக்கு போயிருக்கேன்..அதுவும் நைட் ஷோ..எங்கண்ணனும் நானும் தங்கச்சியும்..”

“வாவ்..செம்ம ஜாலில மேடம்..”

“உங்க லைப்ல நீங்க பாத்ததுல மறக்க முடியாத ஒரு இன்சிடன்ட்..?”

வருடம் 2022 செப்டெம்பர் மாதம் 07ம் திகதி.

அன்று வேலை சற்று சீக்கிரம் முடிந்திருக்கவே சீக்கிரமாக கிளம்பி வீட்டுக்கு வந்தவரை உடைகள் வாங்க வேண்டும் என அந்த துணிக் கடைக்கு அழைத்துச் சென்றிருந்தாள்,

ஆரிணி.

அவளோ ஆடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க தனக்கு பின்னே நிழலாடியதில் திரும்பி பார்த்தவருக்கு பெரும் அதிர்வைத் தந்திட நின்றிருந்தது,

அவனே தான்.

அவனருகே பயத்தை விழிகளில் தேக்கி அடிக்கடி அவனையும் அந்த இடத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்,அவள்.

அந்த விழிகளில் கொஞ்சம் மிரட்சியும் கலந்திருந்தது.

அவர்களைக் கண்டதும் ஏனோ தன்னை மீறி புன்னகையை ஏற்றிக் கொண்டன, அவரின் அதரங்கள்.

மனதுக்குள் அவர்களை ரசித்து ஆசிர்வதித்து வாழ்த்தவும் தவறிடவில்லை அவர்.

அவனோ அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது தான் நிஜம்.

அவளிடம் தேவையான ஆடைகளை தேர்ந்தெடுக்கச் சொல்லி அவன் பின்னே நகர்ந்து நின்றிருக்க ஓரமாய் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்திருந்தவனின் பார்வை அலைபேசி திரையில் பதிந்திருந்தாலும் அடிக்கடி விழியுயர்த்தி அவளைப் பார்த்திடவும் மறந்திடவில்லை, அவன்.

ஓரிரு ஆடைகளை எடுத்துக் கொண்டு அவனருகே வந்திட எழுந்து நின்றவனின் கரங்கள் அவள் கையிலிருந்த ஆடைகளை பற்றி ஒரு தரம் ஆராய்ந்தது.

“செக் பண்ணி பாக்கல..? அதோ அங்க பிட் ஆன் பண்றதுக்கு ரூம் இருக்கே..” இயல்பான குரலில் அவன் கேட்டிட மறுப்பாய் தலையசைத்தவளின் செயலில் அவனின் புருவங்கள் சுருங்கின.

“யேன்..”

“இ..இல்ல..அங்க கேமரா எல்லாம் இருக்குமாம்..” சுற்றும் முற்றும் பார்த்த படி மெதுவாய் அவள் சொல்லிட விரிய முயன்ற இதழ்களை தடுத்துக் கொண்டான்,அவன்.

“அப்டிங்குற..சரி வா நா செக் பண்ணி பாக்கறேன்..எதுவும் இருக்கலனா பிட் ஆன் பண்ணு பாரு..ச்சரியா..?” குழந்தைக்கு சொல்வது போல் அவளின் கன்னத்தை தட்டிச் சொல்ல சரியென தலையசைத்தவளோ கொஞ்ச நாட்களாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியாமல் இல்லை சாரதாவுக்கு.

பெரிதாய் இல்லை.

சிறு பாதிப்பு தான்.

அதற்கே அவன் கொடுக்கும் அக்கறையும் காதலும் அவரை பிரமிக்கச் செய்திருந்தன.

அவனோ அந்த அறைக்குள் நுழைந்து சரி பார்த்து விட்டு வெளியே வந்திட உள்ளுக்குள் நுழைந்தவள் வெளியே வந்திட ஐந்து நிமிடங்கள் எடுத்தன.

திருப்தியாக புன்னகைத்துக் கொண்டு அவள் வெளியே வர அவள் திருப்தியில் அவனின் மனமும் நிறைந்திற்று.

அவனோ முன்னே நகரப் பார்த்திட அவனின் கையைப் பற்றி தடுத்து நிறுத்தியிருந்தாள்,

அவள். சிறு புன்னகையுடம் ஏறிட்டவனுக்கு அவளின் இந்த சிறு செயல் பெரும் மகிழ்ச்சியே.

“என்னடா..? என்னாச்சு..?” அத்தனை மென்மையும் காதலுமாய் உதிர்ந்திட்டன, அவனின் வார்த்தைகள்.

“இ..இல்..இல்ல உங்களுக்கு..?” அண்ணாந்து தன் முகத்தை ஏறிட்டுச் சொன்னவளின் செயலில் அவன் விழிகளில் ரசனை சேர்ந்தது.

“எனக்கா..வீட்ல நெறய இருக்கே..இப்போ வேணாமே..” அவன் நெற்றியை தடவிய படி கூறிட சரியென தலையைத்தாலும் அவளின் முகம் தெளியவில்லை என்பது புரியாமல் போகுமா அவனுக்கு.

“எனக்கும் எடுக்கனுமாடா..?” இதழில் புன்னகையை ஓடவிட்ட படி அவன் கேட்டிட அதி விரைவாய் மேலும் கீழும் ஆடிய அவளின் சிரசே சொன்னது, அவளின் எதிர்பார்ப்பை.

“ம்ம்ம்ம்..அப்டிங்குற..சரி வா..” என்று அவளின் கரம் பற்றி அழைத்துச் செல்ல கடந்து சென்ற ஓரிரு ஆடவர் கூட்டத்தை கண்டதும் அவளின் உடல் நடுங்குவதையும் உணர முடிந்தது,அவனால்.

“ரிலாக்ஸ்டா..ரிலாக்ஸ்..ஒன்னுல்ல..நா பக்கத்துல இருக்கேன்ல..” அவளின் தோளணைத்துச் சொல்ல மூச்சு வாங்க அவளை ஏறிட்டவளின் முகத்தில் அத்தனை பயம்.

அந்தப்பயத்தில் உள்ளுக்குள் வலித்தது, அவனுக்கு.

அவனின் கரத்தை அவளின் விரல்கள் இறுகப் பற்றி இருக்க அதன் அழுத்தம் வார்த்தையின்றி உணர்த்திட போதுமாய் இருந்ததே அவளின் பயத்தை.

மெதுவாய் அவளின் தோளணைத்தவாறே கடையின் மறுபுறம் இருக்கும் உணவகத்துக்கு அவன் அழைத்துச் சென்றிட நொடியும் அவளை விட்டு விலகவில்லை அவன்.

ஒரு குழந்தையாய் அவளை அவன் தாங்கியிருக்க அதைக் கண்டு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது சாரதாவால்.

உணவகத்துக்கு அழைத்து வந்து அவளை அமர வைத்து விட்டு அவளின் பக்கத்தில் அமர்ந்தவனின் கரமோ மேசையில் இருந்த நீர்க்குவளையை அவள் புறம் நீட்டிட அதைப் பற்றி முயன்றவளின் விரல்களில் சிறு நடுக்கம்,பயத்தால்.

அதைப் புரிந்தவனாய் அவளுக்கு நீரை புகட்டி விட்டு கேசத்தை ஒதுக்கி விட அவளின் விரல்கள் கையில் இருந்த டிஷ்ஷுவினால் முகத்தை துடைத்துக் கொண்டது.

“இப்பொ எப்டி இருக்குடா..?ஆர் யூ ஓகேஏஏஏ..? ” அவள் முகம் பார்த்து கேட்டிட ஆமோதிப்பாய் தலையசைத்தவளுக்கு பேச நா எழவில்லை.அதீத பயத்தில் அவளுக்கு இப்படி நேர்வதுண்டு.

“சரி..சரி..கூல்..ஒன்னுல்லடா சரியா..நாம ஏதாவது சாப்டலாம்..” என்றவனோ பேரரை அழைத்து அவளுக்கு பிடித்தமான சாக்லேட ஐஸ்கீரிமை எடுத்து வரச்சொல்ல அவளின் பார்வை இமைக்காமல் அவனை ஸ்பரிசித்தது.

“என்னடா..? என்ன ஆச்சு..?” அவளின் பார்வையின் தாக்கத்தில் எழுந்த புன்னகையுடன் கேட்டவனின் விழிகளில் சிறு எதிர்ப்பார்ப்பும் மின்னியது.

மறுப்பாய் தலையசைத்தவளின் செயலில் அவனுக்கு சிரிப்பு வந்திட அவளின் விரல்கள் அவன் விரல்களுடன் தன்னை சேர்த்திட சிலிர்த்து எழுந்து நின்றன அவனின் தேக மயிர்கள்.

பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்.

அங்குமிங்கும் பார்த்தவாறு ஐஸ்கிரீமை சுவைத்துக் கொண்டிருந்தவளோ மெல்ல அவனின் காதருகே வந்திட அவளுக்கு வாகாய் தலை சரித்து நெருங்கினான்,அவனும்.

“என்னங்க..?” அவள் அவன் காதினும் கிசுகிசுத்திட “ம்ம்..” என்பதே அவனின் பதில் மொழி.

“அ..அங்க ரெண்டு பேரு உங்கள தான் பாக்கறாங்க..” தகவலாய் சொல்லி விட்டு மீண்டும் தன் வேலையில் ஆழ அவள் சொன்ன திசையில் பார்த்து விட்டு அவளைப் பார்த்தவனின் இதழ்களும் விரிந்தே இருந்தன.

“மேடம்ம்ம்ம்ம்ம்..”

“ம்ம்..என்னம்மா..?”

“வொண்டர்புல் லவ் மேடம்..யார் மேடம் இவங்க..”

“அது இப்போதக்கி வேணாம்மா..நா அப்றம் சொல்றேன்..”

அத்துடன் பேச்சைக் கத்திரத்திருந்தார்,

சாரதா.

நேரம் இரவு எட்டரை மணியாகிட இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன.

தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான், ஆதி.

விண் விண்ணென தலை வலித்தது அவனுக்கு.

அந்த கிருஷ்ணாவைத் தேடி அவர்கள் சென்னை வந்திருக்க அவனோ வேறெங்கோ சென்றிருப்பதாக அல்லவா அவனின் தோழர்கள் கூறி விட்டிருந்தனர்.

“பாஸ்ஸ்ஸ்..”

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..”

“நா ஒரு விஷயம் சொல்லட்டா..?”

“எனக்கென்னமோ நாம ராங்க் ரூட்ல இந்த கேஸ டீல் பண்ற மாதிரி ஒரு பீல் பாஸ்..யேன்னா அந்த கிருஷ்ணாவ பத்தி விசாரிக்கும் போது அவன் கொஞ்சம் பயந்தவனுக்கு வேற தெரிய வருது..அது மட்டுல்லாம ஒரு கொலய பண்ணிட்டு அவன் பாட்டுக்கு நார்மலா இப்டி இருந்திருக்க முடியாதே பாஸ்..”

“எனக்கும் அதே தாட் தான் கதிர்..அவன் கொல பண்ணி இருந்தா கண்டிப்பா அத நாம கண்டு புடிச்சி இருந்திருப்போம்..ஆனா கேஸ் எந்த ஒரு எவிடன்ஸும் இல்லாம அந்தரத்துல நிக்கிது..சம்டைம் அவன் கொல பண்ணியிருக்கவும் சான்ஸ் இருக்கு கதிர்..யேன்னா அவன் அந்த பொண்ண ரொம்ப லவ் பண்ணி இருப்பான் போலவே..அவன் ப்ரெண்ட்ஸ் சொல்றத பாக்கும் போது..” சொல்லி முடிக்கும் முன்னமே அவர்களின் முன்னே வந்து நின்றான், கிருஷ்ணா.

தொடரும்.

அதி…!

2023.09.02

Advertisement