வீட்டிற்கு சென்ற பின் ரிஷி வீட்டில் யாருக்குமே வேலை ஓடவில்லை.
வெளியே செல்ல தயாராகி வந்த தனுவை நிறுத்திய பாட்டி, “யாருடி அந்த கிஷோர்?” கேட்டார்.
தனு சோர்வுடன் அமர்ந்து ரிஷியின் அறையை பார்த்தாள். அறை பூட்டி இருந்தது.
வெளிய போயிட்டானா?
இல்ல, உள்ள தான் இருக்கான்.
ரிஷி அண்ணாவுடன் படித்தவன் தான் அந்த கிஷோர். அண்ணா போல அவரும் ரொம்பவே ஃபேம். கிஷோருக்கும் நிதுவை ரொம்ப பிடிக்கும். அதனால தான் ஜோவும் புகழும் அவ கூடவே இருப்பாங்க. கிஷோர் நல்லவர் தான். ஆனால் படிக்கும் போது கல்லூரியில் எல்லா பொண்ணுங்களும் அவர் பின்னாடி சுத்துவாங்க..
இப்ப இந்த ஜோ எப்படி அவளோட அக்காவை அவனுக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறான்? நளினி கேட்டார்.
மாம், நிது ஹாஸ்பிட்டலில் இருந்தப்ப எங்களை போல கிஷோரும் வந்து அவங்கள பார்த்துட்டு தான் போவார். புகழண்ணாவும் இல்லை. ஜோவுக்கு உதவியாக இருந்தார். முதலில் ஜோ கோபப்பட்டாலும் இருவரும் நண்பர்கள் போல பழகி விட்டனர். அது இப்படி வினையாகும்ன்னு நான் நினைக்கலை.
பாட்டி, இதை விட பெரிய விசயம். கிஷோர் டாட்டும் நம்ம பிக்ப்பாவும் கூட இருவர் கம்பெனியிலும் ஷேர் போட்டிருக்காங்க.
ஷேர் பற்றி உனக்கு எப்படி தெரியும்? மான்விழி கேட்க, பிக்ம்மா கிஷோர் தான் ஜோவிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரும் அங்க ஒரு பெரிய பொறுப்புல இருக்கார்.
இவன் தான் எந்த வேலவெட்டியும் இல்லாமல் சுத்திட்டு இருக்கான். யாராவது இப்படி இருப்பவனுக்கு பொண்ணை கொடுப்பாங்களா? அவன் மேல உள்ள குற்றம் கூட தவறுன்னு இப்ப நிரூபிக்கப்படலை. கண்டிப்பா ஆன்ட்டி அண்ணாவை ஏத்துக்க மாட்டாங்க..
“ஜெய் அண்ணாவுக்கு வேணும்ன்னா பவிதாவை பொண்ணு கேட்டு நீங்க போகலாம். ஆனால் உங்க ரிஷிக்கு…வாய்ப்பேயில்லை” உதட்டை சுளித்தாள்.
ஆமா, உன்னோட செல்ல மாம் செத்துட்டேன். என்னோட பிள்ளைய பார்க்க முடியாமலும், அவன் பெயரை சரி செய்ய முடியாமலும் திணறிக் கொண்டிருந்தேன்.
ஆனால் இப்ப எம் பிள்ள என் கண்ணு முன்னாடி இருக்கான். அவனை யாரிடமும் என்னால தொலைக்க முடியாது. அவனுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்.
இன்று கம்பெனி பொறுப்பை எடுத்துக்கிற. இப்ப தான் உங்க அண்ணாவும் அப்பாவும் கிளம்பினாங்க. நீயும் இப்பவே கிளம்பு. நான் அவரிடம் பேசிக்கிறேன். இதை வைத்து தான் நாம பொண்ணு கேக்கணும்..
முடியாதுன்னா..
முடியாதுன்னா நான் இந்த வீட்டை விட்டு ஆசிரமத்துக்கு போயிருவேன்..
“பிக்ம்மா அவன் மூஞ்சிய இப்படி வச்சிருந்தான்னா யாரும் அவனோட வேலை பார்க்க முடியாது” தனு ஏற்றி விட்டாள். அவளை முறைத்து மான்விழியை பார்த்து பல்லை காட்டினான் ரிஷி.
“ஆடையை மாத்திட்டு போ” மான்விழி சொல்ல, அறைக்கு சென்று “ஹேய் ஸ்ரீநிதி நீ மட்டும் வீட்டுக்கு வா. அப்புறம் உன்னை வச்சுக்கிறேன்” சீறினான் ரிசாத்பவன்.
கோர்ட் சூட்டுடன் அவன் கீழே வர, காரை போர்ட்டிக்கோவில் நிறுத்தினார் டிரைவர்.
சமையலறைக்கு ஓடிச் சென்று இனிப்பை எடுத்து வந்து அவனுக்கு ஊட்டி விட்டு மகனை ஆசைதீர அணைத்து, “சமத்தா வேலை பாக்கணும்” மான்விழி கொஞ்ச,
“இடுப்பில தூக்கி வச்சு கொஞ்சு. அவன் திருந்திடப் போறான்” நளினி கிண்டலாக கூறினார்.
நான் என் பிள்ளய எங்கு வேணும்ன்னாலும் தூக்கி வச்சுப்பேன். உனக்கென்ன? என்னோட ரிஷி நல்லா வேலை பார்ப்பான்.
“நல்…லா…வேலை…பார்ப்பான்” தன்வி கூறி அவனை பார்த்தாள். அவன் எதையும் கண்டுகொள்ளாமல் காரில் ஏறி அவர்களது கம்பெனியின் ஒன்றான எஸ் எம் நகை வடிவமைக்கும் கம்பெனிக்கு சென்றான்.
தன் தம்பியை அங்கே பார்த்த ஜெய் முகம் மாற, “இவன் எதுக்கு டாட் வந்திருக்கான்?” கேட்டான்.
நீ ஆடை செக்சனை பார்த்துக்கோ ஜெய். இவன் ஜூவல்லை பார்க்கட்டும்..
டாட்..
“அவன் உன் தம்பி தான? அவனுக்கு உரிமை இல்லையா?” அவர் கேட்க, “ஓ.கே டாட்” முக வாட்டமுடன் ஜெய் நகர்ந்தான்.
ஊழியர்கள் அனைவரும் ரிஷியை வேற்றுகிரக வாசி போல பார்த்தனர்.
ரிஷி, இவன் உன்னோட அசிஸ்டென்ட் துரியன். இவங்க உன்னோட டீம் மேட்ஸ் என்று அவர்களை பார்த்து, “இனி உங்க பாஸ் ரிஷி தான். பார்த்து நடந்துக்கோங்க” தன் மகனை அவன் கேபினுக்கு அழைத்து சென்று அவனை சீட்டில் அமர வைத்தார்.
ரிஷி, இது விளையாட்டில்லை வாழ்க்கை. எந்த காரணத்தை கொண்டும் நம்ம கம்பெனி பொருட்கள் விற்பனை ஆகாமல் போகக் கூடாது. கவனமா இரு.
அம்மா சொன்னா. நாளை நிதியை நிச்சயம் செய்துட்டு வந்து கம்பெனியை பார்க்கணும் என்றார்.
ம்ம்! மட்டும் அமைதியாக கூறியவன் அவர் செல்லவும் அவன் கோர்ட்டை கழற்றி விசிறியடித்தான்.
“ஸ்ரீநிதி எல்லாம் உன்னால் தான். என் கையில சிக்கின அவ்வளவு தான். உன்னை பார்த்தால் அப்பாவி மாதிரி இருக்கு.உன்னால எல்லாரும் என்னை டார்ச்சர் பண்றாங்க. நீ வா. உன்னை நான் டார்ச்சர் செய்கிறேன்” சினமுடன் கூறி இருக்கையில் சாய அவன் அலைபேசி ஒலித்தது.
“என்ன பண்ணீட்டு இருக்க ரிஷி?” சீற்றமுடன் சந்திரமுகன் சத்தமிட்டார். அவன் சுற்றி பார்த்து சிசிடிவி அறையில் இருப்பதை பார்த்து, “செட்” மேசையை தட்டினான்.
“டாட் எனக்கு பிடிக்கலை. என்னை விட்ருங்க. நான் சினிமாவில் ஃபேம் ஆகணும்” கத்தினான்.
“சினிமாவா? அதெல்லாம் முடியாது. ஒழுங்கா வேலையை பாரு. இல்ல வீட்ல மட்டுமல்ல இந்த நாட்டுலவே நீ இல்லாமல் பாரின் அனுப்பிடுவேன்” சத்தமிட்டார்.
அவன் அமைதியாக அலைபேசியை வைத்து விட்டு, “ரெஸ்ட் ரூம்” சென்று முகம் கழுவி வந்து அமர்ந்து அவன் செக்கரட்டரி துரியனை அழைத்தான்.
அன்றைய மாலைப் பொழுது.
ஜோஜித் படித்த பள்ளியின் கால்ப்பந்து மைதானத்தில் காத்திருந்தாள் தன்வி. ஏழாகியும் ஜோ வரவில்லை. அப்பள்ளியின் விடுதியில் படிக்கும் மாணவர்கள் கால்ப்பந்துடன் வந்தனர்.
நீங்க யாரு? இங்க என்ன பண்றீங்க? ஒருவன் கேட்க, என்னோட லவ்வருக்காக காத்திருக்கேன்.
யாரு உங்க லவ்வர்?
“சொன்னால் உங்களுக்கு தெரியாது” பெருமூச்சுடன் அலைபேசியில் நேரத்தை பார்த்தாள். அதில் ஒருவன் மட்டும் தன்வியை ஒருமாதிரி பார்த்தான்.
என்ன? அவள் அவனிடம் புருவம் உயர்த்தினாள்.
“இவ்வளவு அழகா இருக்கீங்க? கொஞ்சமும் உங்க காதலுக்கு சூட் ஆகாத ஆளுக்காக காத்திருக்கீங்க” என்ற அவன் கண்கள் அவளது இடுப்பில் பதிந்தது. பவிதா போல தன்வியும் மாடர்ன் ஆடை சாதாரணமாக அணிபவள் தான்..
பள்ளியானாலும் யாருமில்லாமல் மாட்டிக் கொண்டோமோ என்ற எண்ணம் அவளை பிடிக்க, மற்றவன் அவளை நெருங்கி அவள் தோளில் கை வைக்க, மற்றவர்கள் அவளை ஆராய்ந்தனர்.
விரைந்து எழுந்து நகர்ந்தாள்.
உங்க காதலன் என்ன செய்கிறார்? வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் கேட்க, அவன்..அவன்..திக்கினாள்.
“சுரேஷ் அவங்கள விட்டு நகர்ந்து வா” ஒருவன் அழைக்க, ஏன்டா அவங்களா தான வந்துருக்காங்க?
“என்ன? நா..என்னோட ஜோவ பார்க்க வந்தேன். அவன் நல்லா கால்ப்பந்து விளையாடுவான்” அவர்களின் பார்வையில் அழுகை வந்து விட்டது தன்விக்கு.
எதுக்கு அழுறீங்க?
“நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நானில்லை” அழுது கொண்டே கூற, பைக் சத்தம் கேட்டு அனைவரும் அவ்விடம் நோக்கினார்கள்.
ஜோவின் பைக் சத்தம் கேட்கவும் எதிர் திசையில் திரும்பி, முகத்தை தனது கைக்குட்டையால் அழுந்த துடைத்து திரும்பினாள்.
“தனு” ஜோ அழைக்க, விரைந்து அவனிடம் ஓடி வந்தாள்.
பசங்களை பார்த்து விட்டு தனுவை பார்த்தான். அவள் முகத்தை காட்டாதவாறு தரையை பார்த்தவாறு நின்றாள்.
பைக்கிலிருந்து இறங்கி பசங்களை முறைத்துக் கொண்டே, “தனு” மெதுவாக அழைத்து அவள் முகத்தை நிமிர்த்தினான். அவளையும் மீறி கண்ணீர் வந்து விட்டது.
எதுக்கு அழுற? பிரச்சனை பண்ணாங்களா? கேட்டான்.
“இல்லை” தலையசைத்தாள்.
அப்புறம் எதுக்கு அழுற? சினமுடன் கேட்டான்.
“எதுக்கு இவ்வளவு லேட் பண்ணீட்ட? எவ்வளவு நேரம் காத்துட்டு இருக்கேன் தெரியுமா? என்னோட ப்ரெண்ட்ஸோட செலிபிரேட் பண்ணீட்டு உன்னை பார்க்க வந்துட்டேன். நாலு மணி நேரமா தண்ணீ கூட குடிக்கலை” அழுதாள்.
“அடக் கடவுளே! நாலு மணி நேரமா ஸ்நாக்ஸ் சாப்பிடாமல் இருக்கீயா? பெரிய விசயம் தான்” கேலி செய்தான். அவள் இருந்த நிலையில் அவள் மேலும் அழுதாள்.
ஜோ அதிர்ந்து அவளை பார்த்தான்.
நீ இப்படியெல்லாம் அழ மாட்டீயே? பசங்க பக்கம் திரும்பி, “என்னடா பண்ணீங்க?” கேட்டான்.
அவங்க ஒண்ணும் பண்ணலை. நீ தான் வர லேட் பண்ணீட்ட?
இல்லையே! அவன் பைக்கில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.
அவள் நீரை பருக ஒருவன் புன்னகையுடன், “ஏன்? உங்களுக்கு அப்படி என்ன வேலை? உங்க லவ்வரை பார்த்துக்கிறத விட பெரிய ஆளா நீங்க?” கேட்டான்.
தண்ணீர் குடிப்பதை நிறுத்தி அவனை பார்த்தாள் தன்வி.
“என்னது? லவ்வரா? இவளா?..நெவர்..” வயிற்றை பிடித்து சிரித்தான்.
“ஓ! உங்க லவ்வர் இல்லையா?” அவள் தோளை பற்றியவன் ஜோ முன்னே அவளது கையை பிடித்தான்.
“விடுடா” கண்கலங்க தன்வி அவன் கையை எடுக்க முயன்றவாறு ஜோவை பார்த்தாள்.
சிரிப்பதை நிறுத்திய ஜோ முகம் மாற, “கையை எடு” பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.
டேய், “அவங்க நம்மை விட பெரியவங்க. என்னோட அக்கா வயதிருக்கும்” மற்றவன் கூற, வேறொருவன் அவளது கையை பிடித்தான்.
பக்கமிருந்தவன் கையிலிருந்த பந்து அவன் கையில் வந்து விழுந்தது. ஜோ அதனை தட்டி மட்டும் தான் விட்டான்.
எல்லாரும் அவனை பார்க்க, இருவரையும் முறைத்து பார்த்த ஜோ, “தனு வா” அழைத்தான். அவள் கண்ணீருடன் மற்றவன் அவள் கையை பிடித்திருப்பதை எடுக்க முயன்று கொண்டே ஜோவை பார்த்தாள்.
“என்ன நீ எங்களோட பெரியவன்னா ஓவரா சீன் போடுற? உனக்கு கால்ப்பந்துன்னா என்னன்னு தெரியுமா? “அவள் கையை பிடித்தவன் கேட்டுக் கொண்டே தனுவை இழுத்தான்.
“அவள விடுடா. இவன் நம்ம விளையாட்டில் என்னோட விளையாண்டு ஜெயித்தால் அவள அழைச்சிட்டு போகட்டும் இல்லைன்னா..” மற்றவன் தனுவை பார்த்த பார்வையில் ஜோவிற்கு சினம் உச்சிக்கு ஏறியது.
“நாங்க உன்னோட வர மாட்டோம்” மற்றவர்கள் கூற, “நான் வாரேன்டா” என்று சுரேஷ் கூற, தனு வேகமாக ஜோ அருகே வந்து அவன் கையை பிடித்தாள்.
ஜோ அவளது கையை பிடித்து, ஓரிடத்தில் அமர வைத்து அவளுக்கு பிடித்த ஃப்பிஸ் ஜில்லென்ற குளிர்பானத்தை கொடுத்தான். அவள் அதை வாங்கி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். மற்ற பசங்க அவளருகே வந்து அமர்ந்தனர்.
வார்டன் அவ்விடம் வந்து தனுவை பார்த்து, “தன்வி இங்க என்ன பண்றீங்க?” கேட்டுக் கொண்டே ஜோவை பார்த்து அதிர்ந்தார்.
“ஜோவா? அவன் விலகிட்டான்னு பசங்க சொன்னானுக?” அவர் கேட்க, இல்ல சார்.. அவனோட திறமையை பணக்காரன் தட்டி பறிச்சிட்டான்.
என்னோட காலேஜ் படிச்சான் சார். நேற்று தான் அவன் கால்ப்பந்து விளையாடுவான்னு தெரியும். இதுவரை அவன் காட்டிக் கொண்டதில்லை. வீடியோவில் தான் அவன் விளையாடுவதை பார்த்தேன்.
ம்ம்..கால்ப்பந்தில் ஜோவை அடிச்சிக்க யாராலும் முடியாது. அவரும் அவர்களுடன் அமர்ந்தார்.
வெகு வருடத்தின் பின் கால்ப்பந்து மைதானத்தில் இறங்கினான் ஜோ.
“ஒன்லி த்ரீ கோல். என்னை மீறி போடுங்கடா பார்க்கலாம்” காலை சுழற்றி பந்தை அவன் காலுக்குள் வைத்து அவர்களை பார்த்தான். இருவரும் பந்தை அவனிடமிருந்து வாங்க முயல இருவருக்கும் ஆட்டம் காட்டி அழகாக முதல் கோல் போட்டான்.
வாவ்…சூப்பரா பண்றார்.
தன்வி அவனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை ஒரு பார்வை பார்த்த வார்டன் ஜோ விளையாட்டை பார்த்தார்.
கொஞ்சம் கூட தயங்காமல் விளையாடுறான்ல்ல?
அவன் பந்தை கையெடுத்து அஞ்சு வருசமாகிடுச்சு. பிக்ப்பா சொன்னாரு.. இவனுக்கு இருக்கும் திறமைக்கு எங்கு போனாலும் இவர் தான் கப்பை அடிப்பான்னு..
ஓ..சாருக்கும் ஜோவை தெரியுமா?
அவரை பார்த்து, ம்ம்..அவருக்கும் இவனை ரொம்ப பிடிக்கும். இவன் தான் கோபமாக இருக்கான். எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல?
“இவனை புகழால மட்டும் தான் சமாளிக்க முடியும்” அவர் அமைதியானார்.
அண்ணா தான் இல்லையே!
ம்ம்ம்! அவர் அவளை பார்த்தார்.
இரு கோல்களையும் அசால்ட்டாக அடித்தவனுக்கு அவன் தன்வி கையை பிடித்தது தலையை குடைந்தது. பந்தை மிஸ் செய்துட்டான்..
என்னாச்சு அவருக்கு? ஒருவன் கேட்க, விரைந்து முன்னே ஓடிய தன்வி…ஜோ..ஜோ..ஜோ…
கத்தினாள். பசங்களும் அவன் நண்பர்களுக்காக இல்லாமல் ஜோவை ஊக்கப்படுத்தினார்கள். பந்தை வாங்கியவன் எப்படியோ கோல் போட்டு விட்டு அங்கேயே நின்றான்.
“எனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது? அவனுகள அடிக்கணும் போல இருக்கே! கட்டுப்படுத்த முடியலையே! தனு கையை அவன் பிடித்தால் எனக்கென்ன?” அவன் அவனுக்குள்ளாக பேசியவாறு நின்றான்.
அவன் விளையாடியதை பார்த்த மகிழ்ச்சியிலும் அவன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலும் “ஜோ” சத்தமிட்டுக் கொண்டே ஓடி வந்து அவனை இறுக அணைத்து, “ஜோ நாம ஜெயிச்சிட்டோம்…இல்ல..இல்ல நீ ஜெயிட்ட” அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் தன்வி.
வார்டன் அதிர்ந்து அவளை பார்க்க, தனு..நான்.. அந்த பசங்களை பார்க்க, வார்டன் அவர்கள் தலையில் குட்டு வைத்து விடுதிக்கு அனுப்ப, “ஆல் தி பெஸ்ட் கோச்” பசங்க கூறி செல்ல, அவன் தனுவை பார்த்தான்.
அவனுககிட்ட நீ தான் என்னோட கோச்சுன்னு சொன்னேன் அவள் கூற, வார்டன் அவன் முன் வந்தார்.
“சார்” குரலே வராமல் அழைத்தான் ஜோ.
சாரி ஜோ. உங்களோட கஷ்டமான நேரம் என்னன்னு கூட நான் பார்க்க வரலை. ஸ்ரீநிதி நல்லா இருக்காலா? கேட்டார்.
ம்ம்! தனுவை பார்க்க, அவளோ அணைத்திருந்த அவனை விலகவே விடவில்லை.
“ஃப்ரீயா இருந்தா வா. மீட் பண்ணலாம்” அவர் தன்வியை பார்த்துக் கொண்டே நகர்ந்தான்.
ம்ம்! அவளை பார்த்தான். அவன் மனதில் ஆயிரம் கேள்விகள்? பதில் தான் தெரியவில்லை.
கோச், “எனக்கு விளையாட சொல்லித் தருவீங்களா?” அவனை நிமிர்ந்து அவள் கேட்க, ம்ம்..அந்த பசங்க..
பரவாயில்லை ஜோ. நீ வந்துட்ட. நீ விளையாடுறத பார்த்துட்டேன். எனக்கு அது போதும். இன்று எனக்கு மறக்க முடியாத நாள். என்னோட சிறந்த பர்த்டே கிப்ட் என்று அவள் பேசிக் கொண்டே இருக்க, அவளை இழுத்து அணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டான். தன்வி அதிர்ந்து அவனை பார்த்தாள்.
ஏதும் செய்யாதது போல “கிளம்பலாம்” அவன் நகர, “இப்ப என்ன செஞ்ச?” தனு கேட்க, “ஒன்றுமில்லை. கண்டதையும் எண்ணாமல் இதை கனவா மட்டும் நினைச்சுக்கோ” என்றான்.
கனவா? அவள் கேட்க, அவன் வாங்கி வந்த கேக்கை அவளிடம் நீட்ட..,அவளால் நம்பவே முடியவில்லை. அக்கா, பவி உனக்காக வெயிட் பண்ணீட்டு இருக்காங்க. அங்க போய் கட் பண்ணலாமா? கேட்டான்.
ம்ம்! அவள் புன்னகையுடன் அவன் பைக்கில் ஏறி அவனை கட்டிக் கொண்டாள். ஏதும் சொல்லவில்லை என்றாலும் இவளை விட்டு விலகி இருக்க வேண்டும் மனதில் எண்ணிக் கொண்டான் ஜோஜித்.
அழகி- தர்மேந்திரன் வீட்டிற்கு சென்று பிறந்தநாளை கொண்டாடி விட்டு வீட்டிற்கு வந்தாள் தன்வி. ஜோ கேட்டின் முன்னே இறக்கி விட்டு சென்றான்.
பாட்டு பாடிக் கொண்டே பரிசுப் பொருட்களுடன் வந்தவளை பார்த்து, “எங்கடி போன? சீக்கிரம் வந்துருக்கணும். வா சாப்பிட” நளினி அழைக்க, நான் புகழண்ணா வீட்டிலே சாப்பிட்டேன். “ஆல் ஆஃப் யூ குட் நைட்” அவள் நகர, அங்க எதுக்குடி போன?
பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிட்டு வந்திருக்கேன்.
ஆமா, இது என்ன ஆடை? போகும் போது வேற தான போட்டு போன?
அங்கிள், இதை கிஃப்டா குடுத்தாங்க. நல்லா இருக்குல்ல?
மேடம் இதுமாதிரி சுடி போட மாட்டீங்களே! உன்னோட அண்ணி மாதிரி மாறிட்டு வர்றீயா? மான்விழி புன்னகைக்க, ஆமான்னு வச்சுக்கோங்க. மாம் நாளை ஷாப்பிங் போய் ஆடை வாங்கணும்.
சரிம்மா, நீ போ. ரெஸ்ட் எடு அனுப்பி விட்டு, விடும்மா சின்னப்பொண்ணு தான? என்றார்.
“அவளுக்கு செல்லம் கொடுத்து ரிஷி மாதிரி நீங்க ஆக்கிடாதீங்க” நளினி சினமானார்.
“மாம் இவனை மாதிரி நான் ஆக மாட்டேன்” சோர்வுடன் உணவுண்டு கொண்டிருந்த ரிஷியை பார்த்து கூறி விட்டு செல்ல, அவன் கோபம் முழுவதும் ஸ்ரீநிதியிடம் திரும்பியது.
அறைக்கு சென்று கண்ணாடி முன் நின்று இடவலமாக திரும்பி திரும்பி பார்த்து புன்னகைத்தாள் தன்வி.
பிங்க் நிறத்தில் லாங் டாப்பும் அதே நிற பேண்டுடன் துப்பட்டாவும் ஸ்ரீநிதி அணியும் ஆடை போல அணிந்திருந்தாள் தன்வி.
“இதுவும் எனக்கு அழகா தான் இருக்கு” வெட்கமுடன் ஜோ கொடுத்த முத்தத்தை எண்ணி கனவுலகில் சென்று பொத்தென படுக்கையில் விழுந்தாள்.
எண்ணங்கள் அவனுள் செல்ல, காதல் உணர்வுகளில் மிதந்து கொண்டிருந்தாள்.
ஜோ அவனறையில் தன் சட்டையை கழற்றி விட்டு படுக்கையில் விழுந்தான்.
“என்னால தனுவை விட்டு தள்ளிச் செல்ல முடியவில்லையே! விலகி இருக்க எண்ணினாலும் மனசு ஏத்துக்க மாட்டேங்குதே!” எண்ணியவன் தன்வியை வீட்டிற்கு அழைத்து வந்ததை எண்ணினான்.
இந்தாம்மா, “இதை மாத்திட்டு வா” அழகி ஆடையை கொடுக்க, புன்னகையுடன் “தேங்க்ஸ் ஆன்ட்டி” சொல்லி மாற்றி வந்தாள்.
கேக் வெட்டுதல், பாட்டு, ஆட்டம் என்று அழகி தர்மேந்திரன் முதற்கொண்டு நடனம் புரிய, ஆறு பேரும் அன்றைய விழாவை சிறப்பித்தனர்.
தனு அவளாகவே ஜோவுடன் சேர்ந்து ஆட, அவன் மனம் முழுவதும் அவன் கட்டுப்பாட்டை இழந்து அவளிடமே இருந்தது. விலக வேண்டும் என்று எண்ணிய சிலமணி நேரங்களிலே அவர்கள் நெருங்க தான் செய்திருந்தனர்.
வீட்டிற்கு வந்து கண்ணை மூடி படுத்த அவனால் உறங்க முடியவில்லை. ஆனால் தன்வி மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் உறங்கினாள்.