தாரகை 2

“ஏடி, என்ன கோலம் இது? எங்க போயிட்டு வர்ற?” நளினி சினமுடன் தன் மகள் தன்வியிடம் கேட்டார்.

மாம், “பைக்ல்ல இருந்து கீழ விழுந்துட்டேன். இந்த கோலத்துக்கு என்ன?” ஆடை லைட்டா கிழிஞ்சிருச்சு.

“அதான் என்ன கோலம்? நம்ம குடும்பம் எப்பேர் பட்ட குடும்பம். சொல்லுங்க அத்தை” தன் மாமியார் சௌபாக்கியத்தை துணைக்கு அழைத்தார் நளினி.

“சண்டைன்னா சட்டை கிழியிறதும் பைக்ன்னா கீழ விழுறதும் சகஜம் தான்” பாட்டி சொல்லு உன் மருமகளிடம்.

தன் பாட்டியிடம் வாயாடினாள் தன்வி.

“எதுக்கு இப்ப அம்மாவும் பிள்ளையும் என்னை இழுக்கிறீங்க? தனு..இதோ உன்னோட பிக்ப்பா வாரான். அவனிடம் முறையிடு பதில் கிடைக்கும்” தன் கண்கண்ணாடியை சரி செய்தார் சௌபாக்கியம்.

“பிக்ப்பா” என்று மல்டி நேசினஸ் கம்பெனிகளை நிர்வகிக்கும் சந்திரமுகன் பெரியப்பாவிடம் சென்று முறையிட்டாள் தன்வி.

“தனுகுட்டிய எதுக்கும்மா திட்டுற? பிள்ளைங்க விழுந்து எழுந்தால் தான் நிலையா நிப்பாங்க” இன்முகமாக படியிலிருந்து இறங்கி இறந்த தன் தம்பியின் மகள் தன்வியை ஆதரவாக அணைத்தார்.

“மாமா, ஆடையை கிழிச்சிட்டு வந்து நிக்கிறா? ரோட்டுல இதோட வந்துருக்கா? நம்ம குடும்ப மானம் என்னாவது?” குறைபட்டார் தன்வியின் தாய் நளினி.

நளினிம்மா, “குடும்ப மானம் நாம் நடந்து கொள்வதில் தான் இருக்கு.  உடுத்தும் ஆடையிலோ நம் பணத்திலோ இல்லை” என்றவாறு அமர்ந்தார்.

“டாட்” அவரருகே வந்தான் மூத்த மகன் ஜெய்கிரிஷ்.

சொல்லு ஜெய்?

குட் மார்னிங் டாட். இன்று நம்ம பிராஜெக் பினிஷிங் டேட். நாம பார்க்க போகணும்.

சரிப்பா.முதல்ல உட்காரு. நிதானமா சாப்பிட்டு கிளம்பலாம்..

டாட்? ஜெய் புரியாமல் விழித்தான்.

“விழி” சந்திரமுகன் தன் மனைவியை அழைத்தார்.

“வந்துட்டேங்க” கையில் இனிப்புடன் வந்து அவர்களுக்கு முன் வைத்தார் மான்விழி.

“டாட்” ஜெய் அழைக்க, உன்னோட மாம் செய்த இனிப்பை முதலில் ருசி பாரு. பின் நடக்க வேண்டிய எல்லாம் தானாக நல்லதாக அமையும்.

“ஷீ இஸ் மை லக்கி கெர்ல்”

“பிக்ப்பா பிக்ம்மா கெர்ல்லா?” குறும்புடன் நகைத்தாள் தன்வி.

அஃப் கோர்ஸ்ம்மா. “ஷீ இஸ் மை ஸ்வீட் கெர்ல்” சந்திரமுகன் குறும்புடன் தன் மனைவியை பார்த்து கண்ணடித்தார்.

“மாமா” நளினி சத்தமிட, “என்னம்மா?” அவர் நளினியை பார்த்தார்.

மாம்,  “பிக்ப்பா சோ லவ்லி. மோஸ்ட் ஹேண்ட்சம். வேர்ல்ஸ் நம்பர் ஒன் பிசினஸ் மேன் அன்ட் ஹஸ்பண்ட் மாம்” சந்திரமுகன் கழுத்தை கட்டிக் கொண்டாள் தன்வி.

அவர் சிரிக்க, நளினி முகம் வாடியது தன் கணவரை எண்ணி.

நள்ளூ, “நீ எதுக்கு வருத்தப்படுற?” அதான் என்னோட மவன் சந்தூகிட்ட ஒரு வார்த்தை ஊ சொல்லு. உடனே உன்னையும் கட்டிப்பான் கேலியுடன் சௌபாக்கியம் சொல்ல, சந்திரமுகன் மனைவி மான்விழி மூக்கை உறிஞ்சிக் கொண்டு அழுதார்.

“பாட்டி” ஜெய் சினமுடன், “சும்மா மாம்மை அழ வைக்காதீங்க” சத்தமிட்டான்.

சரிடா, பையா என்ற பாட்டி கண்கலங்க, சந்தூ…நம்ம ரிஷி..அவர் இழுக்க,

“மா, அவனை பத்தி பேசுனா இந்த வீட்ல யாரும் இருக்கக் கூடாது. மானத்தை மொத்தமா வாங்கிட்டு போயிட்டான். அந்த பொண்ணை அவன் நண்பர்களுடன் சேர்ந்து ச்சே..என்னோட பையன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு” சீறினார் சந்திரமுகன்.

“நம்ம ரிஷி பண்ணமாட்டாங்க” மேலும் அழுதார் மான்விழி.

“அவனை பற்றி பேசினால் யாராக இருந்தாலும் இந்த வீட்டுக்குள்ள இருக்கக் கூடாது” சத்தமிட்டார்.

அவனை பற்றி செய்தியாளர்களே நல்லபடியாக செய்தியை வெளிவிட்ட போது, நீ அவன் மீது நம்பிக்கை இல்லாமல் அடிச்சு வெளிய பத்தின. அதனால தான் நம்ம ரிஷியின் பெயர் மொத்தமாக கெட்டு போனது.

“பணக்காரன் செய்த தவற்றை பணத்தை வைத்து மறச்சுட்டாங்கன்னு எவ்வளவு பேச்சு? அவனே உடைஞ்சு போயிட்டான்” பாட்டி கண்ணீருடன் பேசினார்.

மா, அவனுக்கு சாதகமாக யாரும் என்னிடம் பேச வேண்டாம். அவனே அவன் குற்றத்தை ஏற்றுக் கொண்டான். மறந்துட்டீங்களா? அவர் சத்தமிட்டார்.

மறக்கலைப்பா..மறக்கலை..என்னோட பேரன் ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழித்திருந்தால் அவனை அந்த பொண்ணுக்கு கட்டி வைக்கிறத விட்டு ஊர் உலகத்தை இப்படி பேச வச்சுட்ட? சௌபாக்கியம் தன் இரண்டாவது பேரன் ரிசாத்திற்காக பேசினார்.

“கல்யாணமா? அவனுக்கா? சினமுடன் எழுந்த சந்திரமுகன்…ஒரு வருசமாகிடுச்சும்மா அந்த பொண்ணு கோமாவுக்கு சென்று. அந்த பொண்ணு மட்டும் பிழைக்கலைன்னா என் கையாலே அவனை அடிச்சே கொன்றுவேன். அவ்வளவு கோபம். எல்லாரும் செல்லம் கொடுத்து அவனை கெடுத்து வச்சிட்டு இப்ப எதுவும் அறியாத அந்த பொண்ணை கட்டி வைக்கணும்ன்னு சொல்றீங்க?இதில் விபத்தையும் ஏற்படுத்தி இருக்கான். அதில் ஒரு பையன் வேற செத்து போயிருக்கான்” கத்தினார்.

மான்விழி அழுது கொண்டே, “ரிஷி நம்ம புள்ளங்க. எங்க என்ன கஷ்டம் படுறானோ?” மேலும் அழுதார்.

விழி, “அவனுக்காக நீ அழுதால் நான் செத்ததற்கு சமம்” தன் மனைவி அழுகையை நிறுத்தும் பொருட்டு அவர் பேச, வாயில் கை வைத்து அழுகையை கட்டுப்படுத்தி கண்ணீருடன் தன் கணவனை ஏறிட்டார்.

கஷ்டமா? அவனா? ஜாலியாக இருப்பான். அவனால் என்னோட மானம் போனது தான் மிச்சம் உறுமினார்.

மாம், டாட் சொல்றது சரிதான். ரிஷிக்காக யாரும் பேசாதீங்க. நல்ல நண்பர்கள் பிடிச்சு வச்சிருக்கான். நேற்று கூட சைக்கிளில் போகும் பொண்ணு கையை பிடித்து வம்பு செஞ்சிட்டு இருந்தானுக.

நளினியோ, “ஆமா மியூசிக் மியூசிக்ன்னு அவனுக பின்னாடியும் கிளப்புக்கும் போறேன்னு மொத்தமா செஞ்சிட்டு போயிட்டான். இப்ப அவன் பேச்சை விடுங்க. ஜெய் சொன்னது போல உங்க பிராஜெக்ட்டை பார்க்க போங்க மாமா” என்றார்.

“உணவை எடுத்து வை விழி” சந்திரமுகன் உணவுமேசையில் அமர, ஜெய்யும் அவருடன் அமர்ந்தான். பின் மற்றவர்களும் அமர்ந்தனர். உணவை முடித்து விட்டு ஜெய்யும் அவன் தந்தையும் அவர்கள் ஆபிஸிற்கு சென்றனர்.

“அமரேசன் முதியோர் இல்ல காப்பாளர் அம்பிகாவிடம் உங்களுக்கு பணம் வந்து சேரும். இனி பவன் எங்களுடன் இருக்கட்டும்” அலைபேசியில் கூறி அணைத்தார்.

ஆமாம், அமரேசன் தான் அம்பிகாவிடம் ஏதோ காரணத்திற்காக அறிந்தே பவனை அவர் வீட்டிற்கு வர வைத்திருந்தார். ஆனால் பவனோ மகிழ்ச்சியுடன் பவிதாவை சைட் அடித்துக் கொண்டிருக்கிறான்.

பவிதா பவனுடன் தினசரி வேலைகளில் ஈடுபட்டாள். தாத்தாவிற்கும் பவனிற்கும் இடையே சகஜமாக செல்ல, பவி மட்டும் பவன் மீது சினமுடனே இருந்தாள். அவ்வப்போது எரிந்து விழுவாள். ஆனால் அவளின் கோபம் கூட அவனை மெய் சிலிர்க்க வைத்தது.

ஆனால் பவன் ஒன்றை மறந்து விட்டான். வீட்டில் தாத்தா தவிர மற்றவர்களிடம் நன்றாக பேசும் பவிதா எப்போதும் தன்னிடம் மட்டும் சீறுகிறாள் என கவனிக்கத் தவறினான்.

பவன் பவிதாவை காதலிக்கத் தொடங்கினான்.

நாட்கள் கழிந்தது.

அன்றொரு நாள் ஆபிஸிற்கு வந்த பவிதா உள்ளே வரும் போது, “மேம்..எஸ். எம் மல்டி நேசனல் கம்பெனி சேர்மன் மகன் ஜெய்கிரிஷ் உங்களை பார்க்க வந்திருக்கார்” சொல்லி பார்கவி பவனை பார்க்க, அவன் கார்ச்சாவியை சுழற்றியவாறு வந்தான்.

“எங்க இருக்கார்?” பவிதா கேட்க, “உங்க கேபின்ல்ல?”

பாரு, என்னோட கேபின்ல்ல எதுக்கு யாரையும் உள்ள விடுற?

நான் எங்க மேம் விட்டேன்? அவரே உள்ள போயிட்டார். பவன் புரியாமல் இருவரையும் பார்த்தான்.

மேம், கெல்ப் வேணுமா? அவன் கேட்க, ஏளனப்புன்னகை சிந்திய பவிதா, “தேவையில்லை” கூலரை கண்ணில் மாட்டி நடந்தாள்.

பாரு..இப்ப வேண்டாம். அவரை மாலை சந்துரூ கஃபேல்ல மீட் பண்ணலாம்ன்னு சொல்லு..

“மேம்” பாரு தயங்க, கண்ணை மூடி திறந்தாள் பவிதா.

ஜெய் வெளியே வந்தான். அவனை பார்த்து விரைந்து ஓரிடத்தில் மறைந்த பவன், “இவன் இங்க என்ன செய்றான்?” சிந்தித்தான்.

“ஹாய்  பவிதா மேம்” ஜெய் வழிந்தான் பவியை பார்த்து.

பவிதா புன்னகையுடன், “ஹாய் சார்” கையை குவித்து வணங்கி அவனை பார்த்து புருவத்தை ஏற்றினாள். அவன் மெச்சுதலாக அவளை பார்த்தான்.

நாம பிசினஸ் விசயமா பேசலாமா மேம்?

“யா, அஃப் கோர்ஸ் சார்” அவள் விழிகள் பவனை தேடியது.

பாரு அவனை பார்த்து கண்ணை காட்ட, அவள் அவன் பயத்தை ரசித்து பார்த்தாள் ஏளனமாக தான்.

சார், மேம் என்று பாரு பவிதா கூறியதை சொல்ல, “மாலை மீட் பண்ணலாம் சார்” பவிதா நகர, அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜெய் புன்னகையுடன் “அழகு பப்ளிம்மா” முணுமுணுத்து நகர்ந்தான்.

“இவன் எதுக்கு பவி மேம்மை பார்த்து சிரிக்கிறான்?” பவன் தலையில் கை வைத்தான்.

ஹே ஜெகா, “அந்த ஷாலூ இன்னும் உயிரோட தான் இருக்காடா. அவளுக்கு நம்மை நன்றாக தெரியும். அவ மட்டும் வாயை திறந்தால் நாம உள்ள போகணும்” ஜானி கூறினான்

மச்சீ, எப்படியோ அவளோட படிக்கிற பசங்கள மாட்டி விட்டாச்சு. இப்ப இவளை முடித்தால் போதும்ன்னு நிம்மதியா இருந்தேன். அவளோட அண்ணன் எப்போதுமே அருகிலே இருக்கான். பணத்துக்கு என்ன தான் செய்றான்? ஒன்றுமே புரியல. இந்த ஒரு வருசமா அவளோட பாடிக்கு பாடிகார்டு போல தான் இருக்கான். அந்த செவிலியரும் கரெக்ட் ஆக மாட்டேங்கிறா. என்னடா பண்றது? ஜெகதீஸ் தலையை பிடித்தான்.

“அதான் அந்த குடிகார பலியாடு நம்மிடம் இருக்கே! பிடிடா…அவன் வழியே சென்று அவனை வைத்து ஷாலூவை கொல்ல வைத்து அவன் மீதே பழியை போட்டுறலாம். ஏற்கனவே அவன் மீது பழி இருக்கு. அதனால் எல்லாரும் நம்புவாங்க  ஜானி கூற,

அவனை கண்டுபிடிக்கணுமேடா? எப்படியும் குடியுடன் தான் ரிசாத் இருப்பான். வீட்ல எல்லாரும் அடித்து விரட்டிய கோபத்தில் இருப்பான். அவனை பார்த்து முன் போல நல்ல விதமாக நடந்து கொண்டால் பையன் கச்சிதமாக முடிச்சிருவான் ஜெகதீஸ் கூறினான்.

“ஜெகா கொலை செய்ய அவன் சரிபடுவானான்னு கொஞ்சம் பயமா தான் இருக்கு” என்ற ஜானி “முயன்று பார்க்கலாம்” என்றான்.

ம்ம்! “அந்த ரிசாத்தை தேட ஆளுங்கள அனுப்புடா ஜானி. மத்த எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” எக்களமாக நகைத்தான் ஜெகதீஸ்.

மாலை நேரம் ஜெய்யும் பவிதாவும் சந்திக்க காரில் இறக்கி விட்டு கடுப்புடன் காரினுள்ளே அமர்ந்திருந்தான் பவன்.

என்றும் இல்லாமல் காஃபி சாப்பிட வர்றீயா? பவிதா கேட்க, வந்த வாய்ப்பை தவற விடக் கூடாதுன்னு நினைத்தாலும் அந்த ஜெய்யை பார்க்கணுமே! மறுத்து விட்டான்.

இருவரும் நேரம் கழித்து கை கோர்த்து சிரித்து பேசியவாறு வந்தனர்.

“பப்ளிம்மா. நீங்க முதல்ல கிளம்புங்க” கார்க்கதவை அவளுக்கு திறந்து விட்டான் ஜெய். பவன் தன் முகத்தை மறைத்தவாறு தொப்பி ஒன்றை அணிந்து அமர்ந்திருந்தான்.

ஹே டிரைவர், “மேம் வந்தால் கார்க்கதவை திறக்க மாட்டீங்களோ? ஓனர் மாதிரி உட்கார்ந்திருக்கீங்க?” சினமுடன் கேட்டான் ஜெய்.

“விடுங்க ஜெய். எல்லாரும் உங்களை போல ஜென்யூன்னா இருக்க மாட்டாங்கல்ல? அவன் அப்படி தான். நானே உங்களுக்கு கால் பண்றேன்” பவிதா கையை நீட்ட, ஜெய் புன்னகையுடன் அவள் கையை குலுக்கி விடைபெற்றான்.

வயிற்றெரிச்சலுடன் பவன் ஜெய்யை மனதில் திட்டிக் கொண்டிருந்தான். பவிதா காரில் ஏறி அமர, அவளது அலைபேசி சிணுங்கியது..

ம்மா..அவள் அழைக்க, அந்த பக்கம் பேச்சில் பதட்டமுடன், எங்க போனான்? கேட்டாள்.

“ம்மா..நோ வொர்ரி. அவனை நான் தேடுறேன். நீங்க உங்க கெல்த்தை பார்த்துக்கோங்க” அணைத்து விட்டு, யார் யாருக்கோ அழைத்து பேசினாள்.

மேம், “யாரை தேடணும்?” பவன் கேட்க, “மைன்ட் யுவர் ஓன் பிசினஸ்” என்றவள் எண்ணத்தில் காலேஜ் பெயரை கூறி போக சொன்னாள்.

ராகவ்வா மேம்?

“செட் அப்” சீற்றமுடன் கத்தினாள்.

அலைபேசியில் அழைத்துக் கொண்டே அவள் இருக்க மறுபக்கம் அணைக்கப்பட்டிருந்தது.

கல்லூரி வரவும் வேகமாக இறங்கி அவள் ஓட, பவன் அக்கல்லூரியை பார்த்துக் கொண்டிருந்தான்.

நேராக ஓரிடம் சென்ற பவி, அழுது கொண்டே “ஜோ” அழைத்தாள்.

கல்லூரியை பார்த்துக் கொண்டே பவிதா பின் வந்த பவன் இவள் அழைப்பில் அங்கேயே நின்று விட்டான்.

ஜோ அழுது சோர்ந்து இருந்தான். பவி அழைத்த மறுநொடி…”வீ” அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டு கதறினான். பவியும் அழுதாள்.

கல்லூரி விடுதி மாணவ மாணவியர்கள் இவர்களை பார்த்தனர்.

பவனை கடந்து சென்ற ஒருவன், இவனுக என்னடா ஏப்ரல் மாதத்தில் ஸ்ரீகாந்த்- சினேகா மாதிரி நடந்துக்கிறாங்க. இந்த மரத்தை யாரும் வெட்டவில்லையே! கேலியுடன் பேசிக் கொண்டே சென்றான். மற்றவர்கள் சிரித்தனர்.

பவன் சினமுடன் இருவரிடம் வந்தான்.

இருவரும் நகர்ந்தனர்.

“என்னால எதையும் மறக்க முடியல வீ. ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு அவன் நினைவாகவே இருக்கு” பவிதாவை மீண்டும் அணைத்தான்.

ஹேய், “என்ன பண்ற? இது காலேஜ்” இருவரையும் பிரிக்க, அவன் கன்னத்தில் சப்பென அறைந்து, “லீவ் நௌ” சீற்றமுடன் கத்தினாள் பவிதா.

கண்ணை துடைத்த ஜோவின் விழிகள் பவனை எறித்தது. அவன் பவிதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“வா, நாம வீட்டுக்கு போகலாம். அம்மா உன்னை தேடுறாங்க. அவங்கள கஷ்டப்படுத்தாதடா” பவிதா அவனை காரில் ஏற சொன்னாள்.

“நான் போய்க்கிறேன். இவன் இருக்கும் காரிலெல்லாம் நான் ஏறமாட்டேன்” என்றான் ஜோஜித்.

“ப்ளீஸ் ஜோ. பைக்கை நாளை எடுத்துக்கலாம். எனக்காக வர மாட்டீயா?” கண்கலங்க பவிதா அவனை பார்க்க, அவன் ஏதும் கூறாமல் காரில் ஏறினான்.

“காரை எடு” சினமுடன் கூறி விட்டு ஜோ அருகே அமர்ந்து கொண்டாள் பவிதா. அவன் அவளது தோளில் சாய, கை இறுக ஸ்டியரிங்கை பற்றினான் பவன்.

ஜோ, நடந்த எதையும் மாத்த முடியாது. அதனால எல்லாத்தையும் ஏத்துக்கோ..

ஏத்துக்கணுமா? அவளை விட்டு நகர்ந்து, “எதை ஏத்துக்கணும்? அவன் இல்லை. என்னால ஏத்துக்க முடியாது. அவனும் அக்காவும் இல்லாத இந்த வாழ்க்கையே எனக்கு சுத்தமா பிடிக்கலை. நீ தான் ரொம்ப ஜாலியா இருக்க” ஜோ சினமுடன் கேட்க,

அவனை அடித்து விட்டு, “நான் மட்டும் சந்தோசமாகவா இருக்கேன். மொத்த நிம்மதியும் போச்சு. உனக்கு தெரியாத மாதிரி பேசாத” அழுதாள் பவிதா.

பவின் காரை நிறுத்தி அவளை திரும்பி பார்க்க, “காரை எடுடுடா” சீற்றமுடன் கத்தினாள்.

அவன் காரை எடுக்க, ஜோ பவிதாவை தன்னருகே இழுத்து அணைத்தவாறு. “சாரி கோபத்துல்ல பேசிட்டேன்”.

நீ ஏத்துக்க சொல்ற? உன்னால ஏத்துக்க முடியுமா?

“ஊகூம்” தலையசைத்து பவிதா மேலும் அழுதாள். அவள் முகத்தை நிமிர்த்தி அவளது கண்ணீரை துடைத்து, அவங்களுக்கு நீ அழுதா பிடிக்காது. தெரியும்ல்ல?

ம்ம்..நீயும் தான அழுற?

இப்ப அதை தவிர என்ன செய்ய முடியும்? அவன் முகத்தை வெளியே திருப்பினான்.

அவனை விட்டு நகர்ந்து திடீரென சத்தமில்லாமல் எழுந்து முன்னிருந்த தண்ணீரை எடுக்க, பவன் பயந்து நெஞ்சில் கை வைத்தான்.

என்ன? காரை எடு. தண்ணீர் தான் எடுத்தேன்.

“அத சொல்லீட்டு எடுத்திருக்கலாம்ல்ல? பயந்துட்டேன்” பவன் கூற, “உனக்கு நான் முதலாளியா இல்லை எனக்கு நீ முதலாளியா? உன்னிடம் சொல்லி தான் நான் செய்யணுமோ?” சிடுசிடுத்தவாறு பேசினாள்.

“வீ அமைதியா இரு” என்ற ஜோ, முதல்ல உன்னோட வீட்டுக்கு போகலாம்..

உன்னை அம்மா தேடுறாங்க.

இரண்டு நிமிசத்துல்ல பஸ் வரும். நான் அதுல்ல போய்க்கிறேன். இந்த நேரத்துல்ல நீ வந்திருக்கக் கூடாது. எவனையும் நம்ப முடியாது என்ற ஜோ பவனை முறைக்க, அவனும் இவனை முறைத்து தள்ளினான்.

இல்லடா..

“காரை நிறுத்து” சினமுடன் ஜோ கூற, “கிளம்புடா ராசா” என்பது போல பவன் ஜோவை பார்த்தான்.

“வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணு” சொல்லி அவன் இறங்கி செல்ல, பவன் காரை எடுக்க, “எடுக்காத” என்ற பவிதா காரிலிருந்து இறங்கி கையில் ஒரு கவரை எடுத்து, “இது உனக்கு தான்” ஜோ கையில் கொடுத்து காரில் ஏறினாள்.

“வீ அழுதுட்டு இருக்காத. ஐ அம் ஓ.கே. பை” கையசைத்தான்.

“பைடா. நல்லா ரெஸ்ட் எடு” பவிதா சத்தமிட்டு இதழ் குவித்தாள். பவனுக்கு சினம் ஏறியது.

மேம், “யாரோ ஒருவனுக்கு எதுக்கு இப்படி பப்ளிக்ல்ல கிஸ் கொடுக்குறீங்க?” சினமுடன் கேட்டான்.

“நான் என்ன செய்தால் உனக்கென்ன? இடியட்” சினமுடன் கூறி சீட்டில் சாய்ந்து கொண்டாள்.

வீட்டிற்கு வரவும் நிற்காமல் அவளறைக்கு ஓடினாள். கார்ச்சாவியுடன் உள்ளே வந்து பார்த்து அவள் இல்லை என்றவுடன் அவளது தாத்தாவை பார்க்க சென்றான் பவன்.

நடு இரவில் அலைபேசியுடன் வெளியே வந்தாள் பவிதா.

தற்செயலாக வெளியே வந்த பவன் நின்று அவளை பார்த்தான். வெளியிலிருந்து கையில் ஒரு பையுடன் வந்தாள் பவிதா.

மேம், “என்னது இது?” பவன் அவள் கையிலிருந்ததை பிடுங்க வந்தான். அவள் ஏதும் பேசாமல் அவனை விட்டு நகர்ந்து செல்ல முனைய, அவன் அவளிடமிருந்து பறித்து விட்டான்.

ஏய், “ஹௌ டேர் யூ?” கையை அவள் ஓங்க, “பவிம்மா” லட்சுமி ஓடி வந்தார்.

பவிதா அவன் கையிலிருந்து பிடுங்கி அறைக்கு செல்ல எண்ணினாள்.

“வேண்டாம்மா” லட்சுமி பவிதா பின்னே வந்தார்.

“வராதீங்க” பவிதா சொல்ல, “வேண்டாம்மா சொன்னா கேளு” அவர் கூற, கவரை பிரித்து மதுபாட்டிலை எடுத்து நொடிக்குள் ஓபன் செய்து மடமடவென வாயில் கவிழ்த்தாள்.

“ஹேய்” பவன் அவளருகே வந்தான்.

அதற்குள் முடித்து விட்டிருந்த பவிதா தள்ளாடியவாறு படியில் ஏற, லட்சுமி அவளை தாங்கினார்.

“விடு லட்சும்மா. நான் அவனை பார்க்கணும்” அவர் கையை பவிதா தட்டி விட்டாள்.

“பாப்பாவை கொஞ்சம் அவங்க அறைக்கு மட்டும் அழைச்சிட்டு போப்பா. நான் வாரேன். அமரய்யாவுக்கு தெரிய வேண்டாம்” மதுபாட்டில், கவர் எல்லாவற்றையும் எடுத்தார் லட்சுமி. ஆல்கஹால் வாடை வராமல் சுத்தம் செய்யத் தொடங்கினார்.

பவன் பவிதாவை அவளறைக்கு இழுத்து சென்றான். குடி போதையில் அவளாகவே பேசிக் கொண்டே வந்தாள். அவளை தன் தோளில் தாங்கி அவளை பார்த்துக் கொண்டே பவன் அவளறைக்குள் சென்றான்.

பயங்கர இடியில் விளக்குகள் அனைத்தும் அணைந்தது. அவளை படுக்கைக்கு அழைத்து சென்று அவளை கூர்ந்து பார்த்தான். விளக்குகள் பிரகாசிக்க, அப்பிரகாசத்தில் அவன் கண்ணிற்கு அழகாக தெரிந்த பவிதாவை முத்தமிட வந்தான் பவன்.

“ஐ ஹேட் யூடா” அவனை தள்ளி படுக்கையில் பொத்தென விழுந்து, “ஏய்..ரிஷி நீ எங்கள பிரிச்சுட்ட? உன்னை கொல்லாமல் விட மாட்டேன். ஐ வில் கில் யூ…டேமிட்” கத்தினாள்.

பவன் அதிர்ந்து அவளை பார்க்க, “புகழ்..நிது..லவ் யூ சோ மச் உங்களுக்காக அவனை நா…நான் கொல்வேன்டா” போதையில் கண்டவாறு பேசினாள்.

கண்ணை மூடி திறந்த பவன் விழிகள் அவளறையில் மாட்டியிருந்த புகைப்படத்தில் பதிய அதிர்ந்து நின்றான்.

பவிதா ஜோவுடன் ஒரு பொண்ணும் பையனும் சிரித்த முகத்துடன் இருந்தனர்.

புகழா? பவின் அதிர்ந்து பவிதாவை பார்த்தான்.

புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்த பவனை பார்த்துக் கொண்டே லட்சுமி புகைப்படத்தை பார்த்து பவிதாவை நெருங்கி, தண்ணீரால் அவளது முகம், கை, கால்களை துடைத்து விட்டார்.

“நீங்க போங்க தம்பி. நான் பார்த்துக்கிறேன்” லட்சுமி அவனை பார்க்காமலே பேச, “அக்கா…இது புகழ் தான?”

புகைப்படத்தை பார்த்த லட்சுமி கண்கள் கலங்கியது. திரும்பி பவனை பார்த்தாள்.

“அக்கா” அவன் அழைக்க, இவன் புகழமுதன் தான். இப்ப உயிரோட இல்லை. இவங்க நால்வரும் சிறுவயதிலிருந்து சேர்ந்தே தான் வளர்ந்தாங்க. பவிம்மாவுக்கு தாத்தாவை தவிர யாருமில்லை என்பதால் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் இவங்க தான்..

பவிதா, புகழமுதன், ஸ்ரீநிதி, ஜோஜித்…

ஜோ மட்டும் இவர்களை விட ஒரு வயது சிறியவன். நிதுவும் ஜோவும் அக்கா தம்பிகள். நால்வரும் பிரிந்து பார்த்ததேயில்லை.

கல்லூரியில் கூட..

நம்ம பவிம்மா அவங்க நண்பர்கள் படிக்க தேர்ந்தெடுத்த ஃபேசன் டிசைனிங் தான் எடுப்பேன்னு அய்யா கூட ஒரே சண்டை. அப்புறம் பவிம்மாவுக்காக அவங்க தேர்ந்தெடுத்த கல்லூரியை விட்டு நிதுவும், புகழும் எம். பி. ஏ சேர்ந்தாங்க. ஆனால் பேசன் டிசைனிங் கோர்ஸ் படிக்க போனாங்க. பவிம்மாவும் அவங்களுடன் அவங்களுக்காக அந்த கோர்ஸ் சேர்ந்தாங்க. அடுத்த வருடமே ஜோவும் அவங்களோட சேர்ந்தான். அப்படியொரு ப்ரெண்ட்ஷிப்..

நடந்த விபத்தில் “புகழ் இறந்துட்டான்” அழுதார் லட்சுமி.

யாருக்கும் எந்த தவறும் எண்ணாத புள்ளைங்கப்பா. எனக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கு. பாவம் பவிம்மாவும் ஜோவும்..

ஜோவோட அம்மாவை தன் அம்மாவாக எண்ணி வாழ்ந்துட்டு இருக்காப்பா பாப்பா..

“ஜோவுக்கு அவன் அக்கான்னு அவ்வளவு உயிர். எல்லாம் முடிஞ்சு போச்சு” கண்ணீரை துடைத்து, “நான் பாப்பாவை பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க” பவனை அவ்வறையை விட்டு கிளப்பி அப்புகைப்படத்தில் இருந்த ஸ்ரீநிதியை பார்த்து,

“பாரும்மா. பவிம்மா என்ன செய்றாங்க. நீ சொன்னா கண்டிப்பா கேட்பாங்க. சொல்லுமா?” அழுதார்.

அமரேசன் அறைக்கு சென்ற பவனால் உறங்க முடியவில்லை. அவன் மனம் பாரமாகி தூக்கம் தூர தள்ள, கவலையுடன் ஹாலில் இருக்கும் ஊஞ்சலில் படுத்தான். சற்று நேரத்தில் கண்ணயர்ந்தான்.

காலை விடியலில் எதுவும் நடவாதது போல பவிதா தயாராகி வந்தாள். பவன் மனம் கனத்து தயாராகி வந்தான்.

உணவுண்ண பவிதா அமர, அவள் அலைபேசி அலறியது.

சொல்லுங்க. அலைபேசியை காதுக்கு கொடுத்தாள்.

வாட்? சினமுடன் உணவுத்தட்டை தட்டி விட்டு, “எதுக்கு அவள விட்டீங்க? அவள பார்த்துக்கிறத விட உங்களுக்கு என்ன வேலை?” எதிரே உள்ளவர் முழுவதாக பேசும் முன் வைத்து, ஜோவை அழைத்து விசயத்தை சொல்லி,

“ஹே வா, காரை எடு” விறுவிறுவென நடந்தாள் பவிதா. பவனும் ஏதும் கேள்வி கேட்காமல் அவள் பின் சென்றான்.

பவிம்மா, “என்னாச்சு?” அமரேசன் தன் பேத்தியிடம் கேட்க,

“லட்சும்மா, யாருக்கும் எதுவும் தெரிந்து ஒன்றும் ஆகப் போறதில்லை” சினமுடன் கூறி காரை திறந்து ஏறினாள். அவரை பார்த்துக் கொண்டே பவனும் டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.

அவளது அலைபேசியில் மேப்பை ஆன் செய்து காரின் முன் வைத்து, “இது காட்டும் இடத்திற்கு போ” என்றாள். இருவரும் கிளம்பினார்கள்.