அவன் நேற்று வந்ததிலிருந்து எதுவுமே சாப்பிடலை. அறைக்கதவை திறக்கவே மாட்டேங்கிறான். அப்பா அவன் மேல கோபமா இருக்கார். கம்பெனிக்காகவாது இன்று கிளம்பி இருக்கலாம். அதுவும் அவன் செய்ய மாட்டேங்கிறான். நீ முடிந்தால் அவனிடம் பேசிப் பாரேன்.
ஜோ, நிதுவையும் இந்த ஒரு முறை மட்டும் கூட்டிட்டு வா..ப்ளீஸ்…
நிதுவா? அம்மா விட மாட்டாங்கக்கா. அவள எங்க கார்மென்ட்ஸ் போகவே விட மாட்டேன்னு சொல்லி தான் வீட்ல விட்டு வந்திருக்கோம்.
எங்க இருக்க?
ரிஷி வீட்ல..
ஓ…சாரி..அவர் கூற, “அதெல்லாம் ஒன்றுமில்லைக்கா. நான் அம்மாவிடம் எப்படியாவது பேசி அழைச்சிட்டு வந்திடுறேன்” அலைபேசியை அணைத்தான்.
அவனை பார்த்துக் கொண்டிருந்த ரிஷியை பார்த்துக் கொண்டே அவனை கடந்து உள்ளே சென்றான். அவர்கள் கிளம்பி வெளியே வரவும் விசயத்தை பனிமலரிடம் கூறினான் ஜோ.
“நீ மட்டும் போயிட்டு வா. அவளை விட முடியாது” கண்டிப்புடன் பனிமலர் கூற, அம்மா இதான் கடைசி. உங்களுக்கும் அவன் நிதுவை காதலிப்பது தெரியும்ல்ல?
ஆமாடா. அதான் வேண்டாம்ன்னு சொல்றேன். ஏற்கனவே புகழை வைத்து திருமணத்தின் பின் பிரச்சனை வருமோன்னு வயித்துல்ல நெருப்பை கட்டிட்டு இருக்கேன். இதுல கிஷோரையும் பார்த்து ஏதாவதுன்னா அவ்வளவு தான். என்னோட பொண்ண பத்தி மாப்பிள்ள தப்பா பேசிருவார்டா.
“தாத்தா என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? அவன் என்னை போலவோ புகழ் போலவோன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா?” ஜோ சத்தமிட்டான்.
“நானும் வாரேன்” ரிசாத் அவர்களிடம் வந்தான்.
மாப்பிள்ள..அது வந்து..பனிமலர் தயங்க,
இருக்கட்டும் ஆன்ட்டி. உங்க பொண்ணு அவனை சீனியரா மட்டும் தான பார்க்குறா.
“நீ முதல்ல கிஷோரை போய் பாரு. நான் ஸ்ரீயோட வாரேன்” பைக்கை எடுத்தான் ரிசாத்பவன்.
ஜோ நம்பமுடியாமல் அவனை பார்த்தான்.
“போடா” பனிமலர் கூற,
ம்ம்! அவன் சென்றான்.
“கார்ல்ல ஏறும்மா. உன்னை விட்டுறேன்” அமரேசன் பனிமலரை அழைத்தார்.
“பரவாயில்லை இருக்கட்டும். நான் பேருந்தில் போய்ப்பேன்” அவரை விட்டு அவர் செல்ல, கண்கலங்க அமரேசன் பனிமலரையே பார்த்தார். அவர் தோளில் கை படவும் திரும்பி பார்த்தார்.
சந்திரமுகனும் பாட்டியும் நின்றிருந்தனர்.
தவறு செய்வது எல்லாரின் இயல்பு தான். அதான் நீங்க புரிஞ்சுக்கிட்டீங்களே! பாட்டி கூற,
“புரிஞ்சு இப்ப எதுவும் என்னிடம் இல்லையே! மனசார என்னிடம் யாரும் பேசவில்லை. இந்த கிழவன் யாருக்கும் தேவையில்லை” அவர் கலங்கினார்.
அப்படியெல்லாம் இல்லை. அப்படியிருந்தால் நீங்கள் செய்யவிருப்பதை மலர் தடுத்திருப்பாங்களே! சந்திரமுகன் கூறினார்.
தெரியல. பார்க்கலாம். எல்லாரும் என்னை மன்னித்தால் தான் என்னோட சாவு கூட நிம்மதியாக இருக்கும்.
“பிள்ளைங்க திருமணத்தை வச்சிட்டு என்ன பேச்சு பேசுறீங்க? நீங்க உங்க பேத்தியின் பிள்ளைங்களோட பசங்க திருமணம் வரை இருப்பீங்க” ஆதரவுடன் அமரேசனை அணைத்தார் சந்திரமுகன்.
“ம்ம்! இருந்தால் நல்லா தான் இருக்கும். நானும் கிளம்புறேன். ரிஷிகிட்ட கடுமையா நடந்துக்காதீங்க” சந்திரமுகனிடம் கூறி சென்றார் அமரேசன்.
பைக்கை நிறுத்தி விட்டு ஸ்ரீநிதி வீட்டிற்கு சென்றான் ரிசாத்பவன்.
கதவு திறந்திருக்க, சிந்தனையுடன் உள்ளே சென்றான். இனிப்பின் வாசம் மூக்கை துளைத்தது.
புகழ், இங்க தான இருக்க? கேட்டுக் கொண்டே வந்தாள் ஸ்ரீநிதி. ரிஷி அதிர்ந்து அங்கேயே நின்றான்.
ஸ்ரீநிதி பயத்தில் மயங்கி விழ, ரிஷி அவளை தாங்கியவாறு அவள் கன்னத்தில் தட்டினான்.
தண்ணீரை எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தான்.
அவளுக்கு நேராக இருந்த ரிஷியை பார்த்து, “புகழ் இருக்கான்” சொல்லி அவள் நன்றாக விழித்து ரிஷியை பார்த்தாள்.
பயப்படாத..
புகழை பார்த்தீங்களா ரிஷி? அவன் இங்கே தான் இருக்கிறான்.
ரிஷியோ சினமுடன், “புகழ் இல்லை. செத்துட்டான். எத்தனை பேர் சொல்லியும் ஏன் நீ காதுல வாங்கவே மாட்டேங்கிற? அவன் இத்தனை வருசமா உன்னருகே இருந்ததால் தான் உனக்கு அவன் அருகே இருப்பது போல தோணுது”..
இல்ல ரிஷி, அவன் இருக்கான். அவனுக்கு பிடித்த பாசந்தி தான் செய்தேன். அவன் எப்போதும் நான் ப்ரிஜ்ஜில் வைக்கும் முன்னே ருசி பார்ப்பான். இன்றும் என்று ரிஷி கையை பிடித்து அவள் செய்ததை காட்டினாள். அதில் செய்தது அப்படியே இருந்தது.
“அவனுக்காக நீ செய்திருக்கலாம். அவன் சாப்பிடலை. அவன் உயிரோட இல்லை. நீ செய்தது அப்படியே தான் இருக்கு” ரிஷி சினமுடன் கத்தினான்.
இல்ல ரிஷி அவன் இருக்கான். என்னால உணர முடியுது.
புகழ் வர மாட்டான்.
“ஸ்ரீ இப்ப நீ என்னோட வா” ஸ்ரீநிதியை ரிஷி தன் பக்கம் இழுத்தான்.
ரிஷி அலைபேசி அலறியது. ஸ்ரீநிதியை பிடித்துக் கொண்டே அலைபேசியை எடுத்தவன் அதிர்ந்து அவள் கையை விட்டான்.
ஜோ, நிஜமாக அவனா தற்கொலை முயற்சி செய்திருக்கான்? ரிஷி கேட்க,
“ஆமாம், அக்காவை அழைச்சிட்டு வாங்க” ஜோ அலைபேசியை அணைத்தான்.
ஸ்ரீ வா. நாம இப்பவே போகணும்.
“யாரு தற்கொலை?” அவள் பதட்டமுடன் கேட்க, “வான்னு சொல்றேன்ல்ல?” அவளை அதட்டினான். அவள் பயத்துடன் அவனை பார்த்தாள்.
ஸ்ரீநிதியை தூக்கினான் ரிஷி.
ரிஷி யாருன்னு சொல்லுங்க? அவன் காலரை பிடித்து அவள் கேட்க, கிஷோர் என்று அவளை பைக்கில் அமர வைத்து பைக்கை எடுக்க, ஸ்ரீநிதி பதட்டமாக, “ரிஷி அவருக்கு ஒன்றுமில்லைல்ல? காப்பாத்திட்டாங்கல்ல?” அழுது கொண்டே கேட்டாள்.
“தெரியல. ஜோ வச்சுட்டான்” பைக்கின் வேகத்தை கூட்டி, “நல்லா பிடிச்சிக்கோ” என்றான்.
கிஷோரும் ரிஷியும் பார்க்கும் போதெல்லாம் முட்டிப்பாங்க. இன்று ஸ்ரீக்காக அவன் உயிரை விடும் அளவு சென்றிருக்கானா? என்ற எண்ணமும் ஜெகதீஸ் ஆருவை காதலிப்பதாக சொன்னதும் அவள் சீனுவின் குழந்தையை வயிற்றில் சுமப்பதையும் ஒப்பிட்டவனுக்கு கிஷோரிடம் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டோமோ எண்ணம் வந்தது.
ஸ்ரீநிதி ரிஷியை இறுக கட்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள்.
சிந்தனையில் இருந்த ரிஷி பைக்கை மெதுவாக்கிய பின் தான் ஸ்ரீநிதி அவனை இறுக அணைத்திருப்பதை உணர்ந்தான்.
என்ன நினைத்தானோ அவன் வயிற்றில் அழுந்த பதிந்திருந்த அவளது கை மீது ரிஷி கையை வைக்க, கண்ணை திறந்து அவளது கையை தளர்த்தி இழுக்க முயன்றாள்.
ரிஷி அவள் கையை பிடித்துக் கொண்டே பைக்கை செலுத்தினான். அவன் பயத்தில் இருக்கானோ? என்ற எண்ணம் தோன்ற, “ஆர் யூ ஓ.கே ரிஷி?” கேட்டாள்.
“நோ. கொஞ்ச நேரம் கையை எடுக்காத” ஆறுதலாக பற்றினான்.
ரிஷியை மேலும் இறுக்கி அவன் முதுகில் முகம் புதைத்தாள். அவளின் பேச்சும் செயலும் அவனுக்கு ஆறுதலாக அமைந்தது.
அவர்கள் ஹாஸ்பிட்டலில் பைக்கை நிறுத்தி இறங்கினார்கள். ஸ்ரீநிதி கையை பற்றியவாறு பதட்டமுடன் வந்தான் ரிசாத்பவன்.
வரவேற்பறையில் விசாரித்து அறைக்கு சென்றான். ஜோ வெளியே அமர்ந்திருப்பதை பார்த்து, கிஷோருக்கு ஏதுமில்லையே! கேட்டான்.
கிஷோர் அக்கா ரிஷியை பார்த்து சினமுடன், நீ எதுக்கு வந்த? கேட்டார்.
அக்கா..இவரு..
நிது இவனுக்காக நீ பேசாத..
“சாரிக்கா. நான் இவருக்காக மட்டும் தான் பேசுவேன். நாங்க இப்ப சீனியரை பார்க்க வந்திருக்கோம்” ஜோவை பார்த்தாள்.
ரிஷி கையை பிடித்து ஸ்ரீநிதி கிஷோரை பார்க்க அழைத்தாள்.
ஸ்ரீநிதி அவனை பார்க்க, “நான் எப்படி அவனை ஃபேஷ் பண்றது? ஜானி பேச்சை கேட்டு இவனோட தேவையில்லாமல் சண்டை போட்ருக்கேன். நான் உள்ளே வரலை” ஜோ அருகே அமர்ந்தான்.
எதுக்கு இப்ப நல்லவன் மாதிரி நடிக்கிற? கிஷோர் அக்கா கேட்க, “இங்க எந்த நடிப்பு போட்டியும் நடக்கலை” ஸ்ரீநிதி ரிஷியை பார்த்தாள்.
அவன் தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருந்தான். அவனருகே அமர்ந்து அவனது கையை பிடித்தாள். நிமிர்ந்து ரிஷி அவளை பார்த்தான்.
யாரும் தவறு செய்யாமல் இல்லை. எல்லாரும் ஏதாவது ஒரு தவறு செய்ய தான் செய்றாங்க. அதை திருத்திக்கிறதுல்ல தவறில்லை. கிஷோர் சீனியர் புரிஞ்சுப்பார். பேசி பார்க்கலாமே! அவனை ஆழ்ந்து பார்த்தாள்.
யோசனையுடன் அவன் எழ, ஸ்ரீநிதி கதவை திறந்து அவனை பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.
ஸ்ரீநிதி வந்துட்டியாம்மா? கிஷோர் அம்மா அவளை அணைக்க, ஸ்ரீநிதி அவனை பார்த்தாள்.
கண்ணீருடன் கிஷோர் அவளை பார்த்து, “நிது” அழைத்தான்.
“ஐ அம் சாரி சீனியர்” அவள் அவன் அம்மாவிடமிருந்து விலகி நகர, ரிஷி உள்ளே வந்தான். அவன் தந்தையும் அண்ணனும் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ரிஷி” கிஷோர் எழுந்து அமர முற்பட்டான்.
“படுத்துக்கோ” ரிஷி அவனருகே வந்து அமர்ந்தான். ஏதும் பேச முடியாமல் ரிஷி அமைதியாக அவன் குடும்பத்தை பார்க்க, கதவை திறந்து உள்ளே வந்தாள் மித்ரா. கிஷோர் அக்காவின் மகள்..
“மித்து” ஸ்ரீநிதி அழைக்க, அவளை முறைத்து விட்டு ரிஷியை பார்த்தாள்.
ஏய், “இங்க எதுக்கு வந்த? போ” ரிஷியை இழுத்தாள்.
“மித்து, மாமா கூட அவர் பேசட்டும்” ஸ்ரீநிதி அவளருகே வந்தாள். அவளது கையை தட்டி விட்டு ஸ்ரீநிதி கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள் மித்ரா.
மாமா, “இவ உங்கள சீட் பண்ணீட்டா. ஐ ஹேட் ஹர். ஐ ஹேட் ஹர் அலாட்” சத்தமிட்டாள். பத்தாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருந்த மித்ராவிற்கு கிஷோர் மீது அலாதி பிரியம்..
“மாமாவை அவ சீட் பண்ணல மித்து. நான் தான் நிதுவை தொந்தரவு செய்துட்டு இருந்தேன்” கிஷோர் கூற, மித்ரா ஸ்ரீநிதியை பார்த்தாள்.
ரிஷி அவள் கையை பிடித்து, “முதல்ல ஸ்ரீகிட்ட சாரி சொல்லு” என்றான்.
“அதை சொல்ல நீ யாரு?” மித்ரா திமிருடன் பேச, “ஸ்ரீநிதியோட புருசன். நான் கேட்காமல் யாரு கேட்பா? சாரி சொல்லு” சத்தமிட்டான்.
அவன் கையை தட்டி விட்டு, “தாத்தா இவனை பாருங்க. இன்னும் நிதுவை அவன் கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்றான்” சினமுடன் கத்தினாள் மித்ரா.
ஸ்ரீநிதியின் புருசன் என்ற வார்த்தையில் அனைவரும் அவனை அதிர்ந்து பார்க்க, கிஷோர் கண்ணீருடன் ஸ்ரீநிதியை பார்த்தான்.
“மித்து” கிஷோர் அம்மா சத்தமிட்டு கிஷோரை பார்க்க, அவன் கண்ணீரை பார்த்து…
கிஷோர் அவளை பார்த்து, காதல் வெறும் வார்த்தையில்லை மித்து. அது தான் வாழ்க்கை. காதலிக்கிறவங்க இல்லைன்னா நம்மால் ஒரு நிமிசம் கூட வாழ முடியாது.
இங்க எல்லாரும் காதலித்து விட்டு போயிட்டால் மூவ் ஆன் பண்ணிட்டேன்னு சொல்றாங்க. அது உண்மையில்லை. பொய் தான். காதலித்தால் மூவ் ஆன் ஆக முடியாது. எங்காவது அவங்க நினைவு இருந்துட்டு தான் இருக்கும்.
யாராவது நான் என் காதலை மறந்துட்டேன்னு சொன்னால் அவங்க மறக்கல. மறைக்கிறாங்கன்னு அர்த்தம். அதை விட நம்மை நம்பி வரும் துணையிடம் பழைய காதலை சொல்லி விட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கணும்.
“மாமா” மித்ரா அழைக்க, ம்ம்! நான் என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல நினைக்கிறேன். ரிஷி நிது தான் பொண்டாட்டின்னு மனசுல நினைத்ததால் தான் அந்த வார்த்தை அவனிடம் வந்திருக்கு. அவன் நிதுவை பார்த்துப்பான்.
“ஆல் தி பெஸ்ட் ரிஷி” பட் ஒன் கண்டிசன். யார் என்ன சொன்னாலும் உடனே செய்யாத. சரியான்னு சிந்தித்து முடிவெடு” ஸ்ரீநிதியை பார்த்து, உன்னை போல எல்லாருக்கும் நினைச்ச வாழ்க்கை அமைந்தால் நல்லது தான் என்றான்.
ரிஷி அனைவரையும் பார்த்து, கிஷோரிடம் நான் தனியே பேசணும்..
எல்லாரும் வெளியேற ஜோ மட்டும் நின்று கொண்டிருந்தான்.
ரிஷி அவனை பார்த்து வாயிலை பார்க்க, “தேவையில்லாமல் எதுவும் பேசிட்டு இல்லாமல் சீக்கிரம் வாங்க” சொல்லி அவன் வெளியேறினான்.
காதல்ல மூவ் ஆன் ஆக முடியாதா? ஒரு வேலை மூவ் ஆன் ஆனால்..
எதுக்கு நீ கேக்குற? புருவம் சுருக்கி கிஷோர் கேட்க, அது..சும்மா தான் கேட்டேன். ஜெகா ஆரு பத்தி தெரிஞ்சுக்க?
அவங்க செய்றதெல்லாம் காதலே இல்லை. காதல் வந்தா அவங்களுக்கு அந்த பொண்ணை தவிர எதுவும் நினைவில் வராது.
ஒரு வேளை அவளுக்கு திருமணம்ன்னா உன்னை மாதிரி தான் தோணுமா?
இல்ல, எல்லாரும் என்னை போல இருக்க மாட்டாங்க. சிலர் அந்த பொண்ணையே நினைச்சிட்டு இருப்பாங்க இல்லை தற்கொலை முயற்சி பண்ணுவாங்க. அதுவும் இல்லைன்னா அவங்க அந்த பொண்ணோட கல்யாணத்தை நிறுத்தி எப்படியாவது கல்யாணம் செஞ்சுக்க நினைப்பாங்க.
“நீ யாரை லவ் பண்ற?” கிஷோர் நேரடியாக கேட்க, ரிஷி அவனை விழித்து பார்த்தான்.
“பவிதா” ரிஷி தரையை பார்த்து கூற, கிஷோர் சத்தமாக சிரித்தான்.
“உனக்கு சிரிப்பா இருக்கா?” ரிஷி சினமுடன் கேட்க, டேய் அவ உனக்கு செட்டே ஆக மாட்டா. நீங்க இருவரும் ஒரே டைப். பிடிவாதம் ரொம்ப அதிகம். நீ அவள கல்யாணம் பண்ண ஒரு வாரம் தாங்க மாட்ட. உடனே விவாகரத்து பண்ணிட வேண்டியது தான்.
ஏன்?
அவளும் நீயும் பிடிவாதக்காரவங்க. இருவரும் கண்டிப்பாக ஒருவரை ஒருவர் ஒத்து போக மாட்டீங்க.
இல்ல, என்னால முடியும்..
காதல் வாழ்க்கை முழுவதும் வேணும்ன்னா அது கண்டிப்பா பவிகிட்ட உனக்கு கிடைக்காது. அவ உன்னை பார்த்துக்க என்ன கண்டுகொள்ள கூட மாட்டா. அவளுக்கு நிதுவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவளை இத்தனை வருசமா கஷ்டப்படுத்தின உன்னோட அவ வாழ்வாளா? உன்னை கொல்ல கூட அவ தயங்க மாட்டா..
உன்னோட அண்ணாவும் அவளும் சரியான ஜோடி தான். அவர் அவள் பிடிவாதத்துக்கு ஏற்ற குணத்தவர். கண்டிப்பா அவர் அன்பா சொன்னால் உடனே செய்திடுவா. ஆனால் நீ பேசினால் கூட அவ கோபமா தான் பேசுவா.
இருக்கிறத விட்டு பறக்குறதுக்கு ஆசைப்படாத நண்பா. அதை விட நீ நிதுவுக்காக கோபப்பட்டிருக்க. அதுவும் அவ என்னோட பொண்டாட்டின்னு சொல்லி இருக்க..
என்ன சொன்ன? நண்பாவா?
ஆமா. உன்னிடம் எனக்கு கோபம் வரக்காரணமே உன்னோட ப்ரெண்ட்ஸ் தான்.
அதை விடு. நிது உனக்காக எதையும் செய்வா. அதை மட்டும் மறந்து பவியிடம் காதலை சொல்றேன்னு உங்க குடும்பத்தோட சந்தோசத்தை இழந்துறாத. உனக்கு பவி மேல இருக்கிறது காதலே இல்லை.
எப்படி சொல்ற?
உங்களோட திருமணத்தோட நல்லா கவனிச்சு பாரு. அவங்க மணமேடைக்கு வரும் போது அவங்க இருவரில் யாரை பார்த்தால் உனக்கு அழகா தெரியிறாங்களோ அவங்க தான் உன்னோட உண்மையான காதல்..
எப்படி அது?
“பார்த்துட்டு முடிவெடு. எல்லார் வாழ்க்கையும் உன் கையில் தான்” அவன் சொல்ல, ரிஷி அவனிடம் நன்றி கூறி விட்டு சென்றான்.
பக்கத்து அறையின் மறைவிலிருந்து அழுது கொண்டிருந்த பொண்ணை இழுத்தான் ஜோ.
“ஜோ என்னை விடு” சொல்லிக் கொண்டே அவனுடன் சென்றாள்.
ஜோவுடன் வந்த பெண்ணை பார்த்து, “சிவாங்கி இங்க என்ன பண்ற?” கிஷோர் அண்ணன் கேட்டான்.
“சார்” அவனை பார்த்து தலை கவிழ்ந்தாள்.
கிஷோருக்கு பதில் அவன் செக்கரட்டரி நீ தான மீட்டிங் அட்டென்ட் பண்ணணும்? சினமுடன் கிஷோர் தந்தை கேட்க, “சாரி சார்” அழுது கொண்டே வந்த வழியே ஓடினாள்.
தாத்தா, “அவங்கள பயமுறுத்திட்டீங்க?” மித்ரா சொல்ல, “அவளுக்கு வேலை இருக்கும் போது இங்க என்ன பண்ணீட்டு இருக்கா? அதான் கேட்டேன்”.
ஜோ அவரை பார்த்து விட்டு, “ஹே சிவாங்கி…நீ இப்பவே உன்னோட காதலை கிஷோரிடம் சொல்லு. அவன் உடனே பதில் சொல்லணும்ன்னு எதிர்பார்க்காத. அவனுக்கு நேரம் கொடு” கிஷோர் அறைக்கதவு திறந்திருப்பதை பார்த்து வேண்டுமென்றே கத்தினான்.
“காதலா? இவளுக்கா?” கிஷோர் அண்ணன் ஒரு மாதிரி கேட்க, கண்ணை விரித்தாள் மித்ரா.
நின்று ஜோவை பார்த்து விட்டு, அழுது கொண்டே சிவாங்கி ஓடினாள். வெளியே நின்று கொண்டிருந்த ஸ்ரீநிதியும் ரிஷியும் அவளை பார்த்து, “சிவாங்கி” கத்தி அழைத்தனர்.
கார் அடித்து தூக்கி வீசப்பட்டாள் தன்வியின் தோழி சிவாங்கி.
ஜோ பேசியதை கேட்டு கையிலிருந்த ஊசியை கழற்றி விட்டு வெளியே வந்தான் கிஷோர்.
“நீ எதுக்குடா வெளிய வந்த? உள்ள போ. ரெஸ்ட் எடு” அவன் அம்மா கூற, கிஷோர் அர்த்தமுடன் மித்ராவை பார்த்து விட்டு உள்ளே செல்ல, அவள் புன்னகையுடன் வெளியே நகர்ந்தாள்.
எங்க போற மித்து?
“மாம், கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வாரேன்” அவள் சொல்லிக் கொண்டிருக்க, சிவாங்கியை இரத்தம் சொட்ட சொட்ட ரிஷி உள்ளே துக்கி வந்தான்.
ஏய்ய்ய்ய்…சிவாங்கி..ஜோ சத்தமிட்டு, அவள் கையை பிடித்துக் கொண்டே ரிஷியுடன் நகர்ந்தான்.