தாரகை 10

காலை விடியல் அனைவரையும் கதற வைக்கலாமா? பதற வைக்கலாமா? என்று தான் விடிந்தது.

பனிமலர் ஸ்ரீநிதியிடம், ஜோவை காலையிலிருந்தே காணோம். ஏதாவது சொன்னானா? கிஷோரை வேற வரச் சொன்னதா சொன்னான். இன்று நேரம் கழித்து தான் கார்மென்ட்ஸ் போகணும்.

“அம்மா” ஸ்ரீநிதி அழைக்க, என்ன?

கிஷோரை நான் முடிவு செய்யலை. அவன் என்ன நினைக்கிறான்னு பேசி தான் பார்க்கணும்..

“ஜோ என்னிடம் எதுவும் சொல்லலை” சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்து அழைத்தாள். அவன் எடுக்கவில்லை.

எங்க போனான்? என்ன செய்றான்? சிந்தனையுடன் சஞ்சனா வீட்டை எட்டி பார்த்து, சஞ்சு ஜோவை பார்த்தாயா? ஸ்ரீநிதி சத்தம் கொடுத்தாள்.

பள்ளிச்சீருடையுடன் சஞ்சனா வெளியே வந்தாள்.

என்ன நிது?

ஜோவை காணோம்.

அவன் என்ன சின்னக் குழந்தையா? தேடிட்டு இருக்க?

“உள்ள வா நிது” சஞ்சனா அம்மா அழைக்க, உள்ளே சென்று அவரை பார்த்து, “மேரேஜ் பண்ணிக்கலாம்ல்ல அக்கா?” கேட்டாள்.

எதுக்கு நிது? சஞ்சு கஷ்டப்படக் கூடாது. அப்பா இறந்துட்டாருன்னா கூட பரவாயில்லை. வேறொருவரை திருமணம் செய்து இவளை அவங்க குடும்பத்துல்ல கஷ்டப்படுத்துனா தாங்க முடியாது.

“சாரிக்கா மாமா இறந்தப்ப உங்களுடன் நானில்லை” வருந்தினாள்.

நீயே போராட்டத்தின் பின் உயிரோட வந்திருக்க? அதுவே சந்தோசம் நிது.

புகழ் இறந்து ஒரு வாரத்திலே விபத்தில் இறந்துட்டார்.

பாட்டி இல்லையா?

கண்கலங்க அவர் ஸ்ரீநிதியை பார்க்க, “கிழவி போய் தொலையட்டும்மா. உனக்கு நானிருக்கேன்” பெரிய மனுசி போல பேசினாள் சஞ்சனா.

அக்கா..

ஆமாம்மா. எங்களை பார்த்துக்க என்னோட அத்தைக்கு சிரமமா இருக்காம். அதான் விட்டு அவங்க சின்ன மகன் வீட்டுக்கு போயிட்டாங்க.

“உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்க அக்கா” ஸ்ரீநிதி கூறினாள்.

ம்ம்!!

“அக்கா” ஜோ வந்துருவான். நான் பள்ளிக்கு போவதற்குள் என்னை வம்புக்கு இழுக்கலைன்னா இரவு அவனுக்கு தூக்கமே வராது.. வந்துருவான்..

“சரிக்கா வாரேன்” அவள் வெளியே வர, “நிது உங்க ஆளோட வந்தீங்க? என்ன விசயம்?” அவள் கேலியுடன் கேட்க, “உதவி செய்ய என்னையும் ஜோவையும் விட்டு போனார். அவ்வளவு தான் சஞ்சு” பேசிக் கொண்டே இருவரும் வந்தனர்.

ப்ளாக் ஹூட்டியை கழற்றிய ஜோ வியர்த்து இருந்தான்.

சஞ்சனா அவனிடம் ஓடி வந்து, “ஏன்டா இப்படி வேர்க்குது? நிது உன்னை காணோம்ன்னு தேடிட்டு இருக்கா? சொல்லீட்டு போக மாட்டியா?” அவன் காலில் இடித்தாள்.

“இந்த வெயில்ல எதுக்குடா ஹூட்டிய போட்ட?” ஸ்ரீநிதி அவனை ஆழ்ந்து பார்த்து, “இரவு தூங்கலையாடா?” கேட்க, முகத்தை திருப்பி “நான் போறேன் வா” என்றான்.

“எங்க போயிட்டு வர்ற? காலை எழுந்ததில் இருந்தே நீ வீட்ல இல்லைன்னு அம்மா சொன்னாங்க?” இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள் ஸ்ரீநிதி.

“நிது…இந்தா…” ஜோவை அடிக்க கம்பு எடுத்துக் கொடுத்தாள் சஞ்சனா. ஸ்ரீநிதி அதை வாங்கி தோளில் சாய்த்துக் கொண்டு அவனை பார்த்தாள்

ஏய் குட்டி சாத்தான், “என்னை அடிக்க கம்பா எடுத்து தர்ற? உன்னை என்ன செய்றேன்னு பாரு” சஞ்சனாவை விரட்டினான் ஜோ. சஞ்சனா சிரித்துக் கொண்டே ஓடினாள். ஸ்ரீநிதி இருவரையும் புன்னகையுடன் பார்த்தாள்.

கார் ஒன்று சஞ்சனா முன் வந்தது.

“சஞ்சூ” பதட்டமாக ஸ்ரீநிதி அவளை நோக்கி ஓடி வந்தாள்.

ஏய் அறிவில்லை. ஒழுங்கா கார் ஓட்ட மாட்டீங்களா? ஜோ சஞ்சனாவை துக்கிக் கொண்டே கார்க்காரனை திட்டினான்.

காரிலிருந்து இறங்கியவர்களை பார்த்து அதிர்ந்தாள் ஸ்ரீநிதி. ஜோவும் சஞ்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அவர்களை பார்த்தனர்.

“நீங்க தான் ஓடிப்பிடிச்சு விளையாண்டுட்டு இருந்தீங்க மச்சான்” ஜெய் கூற, “மச்சானா?” சஞ்சனா ஜோவை பார்த்தாள்.

சந்திரமுகன் புன்னகையுடன், ஜோ அருகே வந்து சஞ்சனா கன்னத்தை தட்டி விட்டு, “உள்ள வாங்க மாப்பிள்ள” சொல்லி, “உங்க வீட்டுக்கு நாங்க வரலாம்ல்லம்மா?” ஸ்ரீநிதியிடம் கேட்டார்.

“சார்..வாங்க…” அழைக்க, தாம்பலத்தட்டுடன் இறங்கினர் ரிஷியின் குடும்பம் அவனை தவிர மற்றவர்கள்.

தனு ஸ்ரீநிதியிடம் வந்து, நல்ல வரவேற்பு நிது அண்ணி..

அ..அண்ணியா?

“அம்மாடி கையில இருக்கிறத கீழ போடும்மா” பாட்டி கூற, கட்டையை பார்த்து கீழே போட்டு, “ஜோ” அழைத்தாள். அவள் பதட்டம் புரிந்து மான்விழியும் சந்திரமுகனும் புன்னகைத்தனர்.

சஞ்சு, நீ வீட்டுக்கு போ..

“ஜோ அவங்க உன்னை மாப்பிள்ளன்னு சொல்றாங்க. நீ யாருக்கும் ஓ.கே சொல்லக் கூடாது. சரியா? நான் தான் உன்னை கட்டிப்பேன்” சொல்ல, ஜோ கண்கள் தானாக தன்வியிடம் சென்றது.

“பாப்பா மாதிரி இருந்து நீ ஜோவை கல்யாணம் பண்ணிக்கணுமா?” தன்வி சஞ்சனாவிடம் சென்றாள்.

ஜோவை நான் தான் கல்யாணம் பண்ணிப்பேன்..

“இவ வேற…நேரம் காலம் புரியாமல்” ஜோ சினமுடன், “சஞ்சு..போ பள்ளிக்கு கிளம்பு” ஸ்ரீநிதி பின்னே ஓடினான்.

“அம்மா..அம்மா..” பதட்டமுடன் ஸ்ரீநிதி அழைக்கவும், “என்னாச்சுடி? எம் புள்ள எங்க இருக்கான்னு தெரியலையா?” விசயம் தெரியாமல் பதறினார் பனிமலர்.

ஜோவை பார்த்து, “எங்கடா போன? வியர்வையுடன் வந்துருக்க? சொல்லிட்டு போக மாட்டீயா? எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?” பேசிக் கொண்டே அவர் முந்தானையால் அவன் வியர்வையை துடைத்தார்.

“அம்மா” ஜோ அவரை தடுத்து நகர்ந்தான்.

சந்திரமுகனும் அவர் குடும்பமும் வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

தன் மகன், மகளை பார்த்துக் கொண்டே அவர்களிடம் சென்று, “வாங்க” அழைத்தார் சிந்தனையுடன்.

இரு தாம்பூலத்துடன் அவர்கள் வருவதை பார்த்து ஜோ, நிதுவை யோசனையுடன் பார்த்தார் பனிமலர்.

“அம்மாடி கொஞ்சம் தண்ணீர் எடுத்துட்டு வாம்மா” பனிமலரை பார்த்து பாட்டி கூற, “நான் எடுத்துட்டு வாரேன்” நிற்காமல் சமையலறைக்குள் ஓடி விட்டாள் ஸ்ரீநிதி.

வெளியே கார் சத்தம் கேட்க, ஜோ எட்டி பார்த்தான்.

பவிதா காரை பார்த்து, “இவ இப்ப எதுக்கு இங்க வர்றா?” அவன் எண்ணும் போது தாத்தாவும் இறங்கினார். இருவரும் பதட்டமுடன் இருக்க, அருகே வந்த பவிதா, ஜோவை பார்த்து விட்டு அவன் பைக்கை பார்த்தாள்.

தாத்தாவும் அவளை போலவே பார்க்க, “வீ..இங்க இப்ப வர மாட்ட? என்ன?” அவன் கேட்க,

“உனக்கு ஒன்றுமில்லையா? உனக்கு விபத்தாகிடுச்சு. பெரிய அடியில்லை. ஆனால் நெற்றியில் காயம்ன்னு தனு தான் சொன்னா” உள்ளே வந்த பவிதா சந்திரமுகன் குடும்பத்தை பார்த்து அதிர்ந்தாள்.

“பிக்ப்பா அண்ணியும் ஜோவும் என்னை கொல்லப் போறாங்க. எனக்கு உங்க உதவி வேணும்” அவர் காதில் அவள் பேசிக் கொண்டே, “ஹாய்…” பல்லை காட்டிக் கொண்டு கையை ஆட்டினாள் தன்வி.

ஜோ அவளை முறைத்து பார்க்க, தாத்தா சந்திரமுகனை பார்த்துக் கொண்டே பனிமலரிடம் வந்து, “எதுக்கும்மா வந்துருக்காங்க?”

“தாம்பூலம் இரண்டு இருக்கு” அர்த்தமுடன் தாத்தாவை நோக்கினார் பனிமலர்.

பவிதா விழித்துக் கொண்டே நிற்க, “பிக்ப்பா நான் தப்பிச்சேன்னு நினைக்கிறேன்” ஜோவை பார்த்து, “பிக்ப்பா..அவன் என்னை முறைக்கிறான்” என்றாள் கொஞ்சலாக.

“நம்ம மீதும் தப்பிருக்குல்லம்மா. சொல்லீட்டு வந்திருக்கணும். பொய் சொல்லி நாங்க தான் அமரேசனை வர வைத்தோம். அதுக்காக எங்களை மன்னிச்சிருங்க” என்றார் சந்திரமுகன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை” அவர் கூற, அவரை முறைத்தார் பனிமலர்.

“சரிம்மா நீ பேசு” என்றார் அமரேசன்.

“பவிதாவுக்கும் அவளோட தாத்தாவுக்கும் விருப்பம்ன்னா உங்க மூத்த மகனை பேசிக்கோங்க” அவர் நகர, ட்ரேயில் ஜூஸ்ஸூடன் வந்தாள் ஸ்ரீநிதி.

“அண்ணி வெயிட்” தனு அதை வாங்கி அடுக்கலையில் வைத்து விட்டு பவிதா, ஸ்ரீநிதியை அருகருகே நிறுத்தி வைத்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, பவிதா ஸ்ரீநிதி கையை இறுக பற்றினாள்.

பவிதா மட்டுமல்ல ஸ்ரீநிதியும் எங்க வீட்டு மருமகள் தான். மான்விழி தன் கணவனை பார்த்துக் கொண்டே கூறினார்.

“முடியாது. என்னோட அக்கா உங்க வீட்டுக்கு வரவே மாட்டா. நான் விடவும் மாட்டேன்” ஜோ பவிதா ஸ்ரீநிதி கையை பிரித்து விட்டு அவன் அக்கா கையை பிடித்தான்.

“உன்னோட கோபம் புரியுதுப்பா. எங்க பையன் மேல தவறு இருக்கு தான். அவன் இனி அவ்வாறு நடந்து கொள்ள மாட்டான். அவன் எங்க கம்பெனியை கவனிக்க தொடங்கி விட்டான். உன்னோட அக்காவையும் நல்லா பார்த்துப்பான்” மான்விழி பேச, ஜோ சந்திரமுகனை பார்த்தான்.

அவர் புன்னகையுடன் அவனை பார்த்தார்.

“பிக்ப்பா” தனு அழைக்க, ஜோ அவளை முறைத்தான்.

“நான் என்னடா செய்தேன்? சும்மா வந்ததுல இருந்து முறைச்சிட்டே இருக்க?” உதட்டை சுளித்து அவனை பார்த்தாள் தன்வி.

ரிஷி.. அம்மா பையன். என்னிடம் அதிகம் ஒட்டியதில்லை. நான் கண்டித்தாலும் அதை காற்றோடு கரைத்து சென்றிடுவான். ஆனால் இனி அவ்வாறு இருக்க மாட்டான். அவன் பொறுப்பா நடந்துப்பான். நிதிம்மாவுக்கு எந்த பிரச்சனையும் வராது..

“எனக்கு நம்பிக்கை இல்லை. பொண்ணு பார்க்க வந்துருக்கீங்க? உங்க பையனை மட்டும் காணோம். எங்க சார் பப்புக்கு போயிருக்காரா?” கேட்டான் ஜோ.

“நீ ஓவரா பேசிட்டே போற?” நளினி எழுந்தார்.

“நள்ளூ” அவங்க பேசட்டும். பொண்ணோட தம்பி பேச தான செய்வார். பேசட்டும் என்றார் பாட்டி.

பேசட்டுமா? அம்மா கூறியது போல் தாத்தாவுக்கு விருப்பமிருந்தால் ஜெய் மாமாவை வீக்கு கல்யாணம் செய்து வைக்கலாம். பொறுப்பில்லாத உங்க பையனை நம்பி என் அக்காவை விட முடியாது.

பவிதா அவனை நெருங்கி, “நிஜமா தான் சொல்றீயா? என்னோட பேசாம இருந்திற மாட்டேல்ல?” அவன் காதில் கேட்டாள்.

அவளை பார்த்து புன்னகைத்த ஜோ, “உன்னோட செலக்சன் ஓ.கே தான். என்ன அவர் தான் பாவம்” ஜோ ஜெய்யை பார்த்து விட்டு பவிதாவை பார்த்து சிரித்தான்.

“ராஸ்கல்” சத்தமாக கூறி, அவன் காலை மிதித்தாள்.

இனி உன் தொந்தரவு இல்லாமல் நிம்மதியா இருப்பேன். ஜெய் மாமா தான் பாவம்..

“வீயை சமாளிப்பது கஷ்டம் உங்களால முடியும்ன்னா எனக்கு பிரச்சனையில்லை மாமா” என்றான் உரிமையுடன்.

“கண்டிப்பா. சமாளிச்சுப்பேன்” ஜெய் கூற, பவிதா அவனை பார்த்து விட்டு தரையை பார்த்தாள்.

“பார்க்க சகிக்கலை. வெட்கப்படுறேன்னு ஏதாவது அன்று போல செய்யாத?” கேலி செய்த ஜோ தன் அக்காவை பார்த்தான். அவள் அமைதியாக நின்றாள்.

“என்னோட பேத்தி உங்க மருமகளா வருவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” தாத்தா கூறினார்.

“நிச்சயம் எப்ப வச்சுக்கலாம்?” பனிமலர் கேட்க, “அம்மா அதுக்குள்ள” என்று ஜோ அவன் அம்மாவை பார்க்க, பனிமலர் தன் மகள் ஸ்ரீநிதியை பார்த்தார்.

“ஆன்ட்டி” தனு அவரருகே வந்தாள்.

“நிதுவுக்கும் பவிக்கும் ஒன்று போலவே நாங்க சீர் செய்றோம்” அவர் கூற, “அம்மா” சினமுடன் அழைத்தான் ஜோ.

“நான் என் மகனிடம் பேசிட்டு வாரேன்” அவன் கையை பிடித்து அறைக்கு அழைத்து சென்று, “மருத்துவர் சொன்னது உனக்கு நினைவிருக்குல்ல? உன்னோட அக்காவோட விதி இதான்னா யாராலும் மாத்த முடியாது. என் பொண்ணு உயிரோட இருக்கணும். மறுபடியும் அவள பழைய நிலையில் பார்த்தால் செத்தே போயிருவேன்டா” அழுதார் பனிமலர்.

நாம எத்தனை பேரை காட்டினாலும் அந்த பையனை அவளால மறக்க முடியாதுடா. அவளுக்கு ஒன்னுன்னா அநாதையா விடாமல் நிப்பேல்லடா? கேட்டார் பனிமலர்.

வாழ்நாள் முழுவதும் அவனோட கஷ்டம்மா. அவனுக்கு அக்காவை பிடிக்காதும்மா..

நான் தனியே வாழலையா? ரொம்ப இக்கட்டான நிலைன்னா மட்டும் கூட நீ நில்லு..

அம்மா, அவள எப்படி நான் தனியே விடுவேன்?

புகழை மறந்து அந்த பையனோட அவள் வாழ்க்கையை தொடங்கட்டும்டா..

அம்மா, ரிஷி…

இன்று காலை கிஷோரை பற்றி பேசும் போது அவளோட கண்ணில் பயத்தையும் வேதனையையும் பார்த்தேன். அந்த கடவுள் மேல பாரத்தை போட்டு கல்யாணம் செய்வோம்..

ம்ம்! கண்கலங்க ஜோ தன் அம்மாவை அணைத்து, அம்மா நீங்க, வீ, அக்கா எனக்கு ரொம்ப முக்கியம். யாருக்கு எதுவானாலும் எந்த நிலையிலும் உடன் இருப்பேன். என் பயமே அக்கா தான். அவன் ஏதாவது செய்து அவள் கஷ்டப்படுவாளோன்னு பயமா இருக்கு..

தினமும் அவளை பார்த்துட்டு வா..

“ம்ம்! இதையும் கண்டிசனா அவங்களிடம் நான் சொல்லுவேன். நீங்க தடுக்கக் கூடாது” ஜோ கூற, பனிமலர் அவன் நெற்றியில் முத்தமிட்டார். அவன் அவரை அணைக்க, “வா போகலாம்” இருவரும் வெளியே வந்தனர்.

அவ்விடமே அமைதியாக இருந்தது.

எல்லாரும் ஜோவை பார்க்க, “என்னோட அக்காவின் காதலுக்காக ஒத்துக்கிறேன். உங்க பையனால என்னோட அக்கா அழவே கூடாது. முக்கியமான கண்டிசன். நான் தினமும் நிது, வீயை பார்க்க வருவேன். யாரும் தடுக்கக் கூடாது” கண்டிப்புடன் கூறினான்.

டேய், உனக்குள்ள ஆவி புகுந்திருச்சா? எப்படிடா ஒத்துக்கிட்ட? பவிதா கேட்க, “எனக்கும் ஒரு கண்டிசன் இருக்கு” ஸ்ரீநிதி கூற, அனைவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.

சந்திரமுகனை பார்த்து, உங்க பையனை பொறுப்பாக்க நீங்க கம்பெனிக்கு அனுப்பி இருக்கீங்க? அவருக்கு சுத்தமாக இது பிடிக்காது..

அதனால…என்று எல்லாரையும் பார்த்து, நீங்க அவருக்கு நேரம் கொடுங்க. அவர் ஆசைப்படி அவர் சினிமாவில் பாடணும்.

“என்னம்மா பேசுற? இதெல்லாம் நடக்கும் காரியமா?” பாட்டி கேட்க,

“இப்ப நானிருக்கேன்ம்மா. எதிர்காலத்தில் அவனும் ஜெய்யும் சேர்ந்து தான கம்பெனி பொறுப்புகள் அனைத்தையும் எடுத்துக்கணும். ஜெய் தனியா கஷ்டப்படுவான்” சந்திரமுகன் கேட்டார்.

“ப்ளீஸ் அங்கிள். அவர் சந்தோசமே இசையில் தான் இருக்கு. அவர் அவர் வழியில் போகட்டும். ஒரு வருடம் நேரம் கொடுத்து உங்க துணையில்லாமல் மேல வரணும்ன்னு கண்டிசன் மட்டும் போடுங்க” அவர் வந்துருவார். அவருக்கு திறமையிருக்கு..

அப்ப கம்பெனிம்மா?

ஜெய் மாமாவுடன் சேர்ந்து நான் பார்த்துக்கிறேன். எனக்கு வேலைக்கான சம்பளம் மட்டும் போதும் என்றாள்.

அக்கா, “உன்னோட ட்ரீம்” ஜோ சினமுடன் சத்தமிட்டான்.

ஸ்ரீநிதி அமைதியாக அவனை பார்க்க, “அம்மா” அழைத்தான்.

எனக்கு என்னோட பொண்ணு சந்தோசம் தான் முக்கியம்..

“நான் பார்த்துக்கிறேன் அங்கிள். நிது அவ கோர்ஸை முடிக்கட்டும்” பவிதா கூற, “அம்மாடி இப்ப பார்க்கும் உங்க கம்பெனியையே நீ பார்த்துக்கோ” சந்திரமுகன் கூறினார்.

அப்ப வீட்ல யாரும் இருக்க மாட்டாங்களா? மான்விழி வருத்தமுடன் கேட்க, பாட்டி பேசும் முன், “மாலை வந்துருவோம் ஆன்ட்டி. நான் காலை என்னால முடிந்த எல்லா உதவியும் செய்துட்டு போறேன்” ஸ்ரீநிதி கூற, ஆச்சர்யமாக நளினி அவளை பார்த்தார்.

“பேச்சு மட்டும் கூடாதும்மா” நளினி கூற, அவள் புன்னகைத்தாள்.

ஜோ சினமுடன் அவரை முறைக்க, ஸ்ரீநிதி அவன் கையை பிடித்து, “நான் என்னோட கோர்ஸையும் முடிச்சுக்கிறேன். பிரச்சனையில்லைடா”.

உன்னால எப்படி முடியும்?

“நாங்க பார்த்துக்கிறோம்ப்பா” சந்திரமுகன் கூற, ஜோ மனமோ ஏற்றுக் கொள்ளவேயில்லை. அவன் சினமுடன் ஸ்ரீநிதி கையை தட்டி விட்டு வெளியே வந்தான். காரிலிருந்து ரிஷி கோர்ட் சர்ட்டுடன் இறங்கி அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.

ஜோ அவனை பார்த்து நின்று விட்டு சினமுடன் மேலும் நகர்ந்தான்.

“நில்லுடா” ஸ்ரீநிதி அவன் பின்னே ஓடி வந்தவள் ரிஷியை பார்த்து விட்டு ஜோ பின்னே ஓடினாள். ரிஷி கையை கட்டிக் கொண்டு அங்கேயே ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தான்.

சஞ்சனா புத்தகப்பையுடன் வெளியே வந்தாள்.

“ஜோ வா” சஞ்சனா அவனை அழைக்க, அவளை முறைத்து விட்டு அவன் செல்ல, சஞ்சூ அவனை நிறுத்து…

“என்னாச்சு நிது?” என்ற சஞ்சனா ரிஷியை பார்த்து, “நிது நான் கனவு காண்றேன்னு நினைக்கிறேன்” கண்ணை கசக்கி அவனை பார்த்து, “எனக்கு என்னமோ ஆச்சு? உன்னோட ஆளு என் கனவுக்குள்ள வந்துருக்கான்”.

ஸ்ரீநிதி நின்று அவனை பார்த்து விட்டு, “அவர் இங்க தான் இருக்கார் சஞ்சு. உன்னோட கனவு இல்லை. முதல்ல ஜோவை போக விடாமல் பண்ணு”  சொல்லிக் கொண்டே ஓடினாள்.

“ஷ்ஆ…அம்மா” ஸ்ரீநிதி சத்தமிட, ஜோ நின்று, “நடிக்காத. நான் போறேன்” என்றான்.

டேய் லூசு ஜோ, “நிஜமாகவே நிது கால்ல கல் குத்திருக்கு பாரு” சஞ்சனா சத்தமிட்டாள்.

ஒரு காலை தூக்கிக் கொண்டு பாவமாக ஜோவை பார்த்தாள் ஸ்ரீநிதி. ஜோ அவளிடம் ஓடி வந்தான்.

உன்னோட அக்காவை அப்புறம் பாரு. எனக்கு இப்ப முத்தம் கொடு கன்னத்தை காட்டினாள்.

போடி இல்ல உன்னோட அம்மாவை கூப்பிடுவேன்.

“வளந்திருக்க இன்னும் அம்மாவை கூப்பிடுவானாம். நிது பை. ஈவ்னிங் உனக்கு சாக்கி வாங்கிட்டு வாரேன்” சஞ்சனா கூற, “ஓ.கே பை” சொல்லி ஜோவை பார்க்க, அவன் அவளை முறைத்தான்.

“நிஜமாகவே குத்தியிருக்கு. நீயே பாரு” பாதத்தை காட்டினாள்.

“வா” அவன் தோளில் கையை போட்டு ரிஷியை முறைத்துக் கொண்டே அழைத்து வந்தான்.

ஏய், “என்னாச்சுடி?” பவிதா கேட்டுக் கொண்டே அவர்கள் பின் வந்த ரிஷியை பார்த்து அவன் குடும்பத்தை பார்த்தாள்.

“இதோ சின்னவன் வந்துட்டான்” பாட்டி கூற, வாங்க உட்காருங்க என்றார் பனிமலர்.

தலையசைத்து அவனும் அமர்ந்தான்.

“ஒன்றுமில்லை” அவளறைக்கு ஜோ நிதுவை அழைத்து செல்ல, பவியும் தனுவும் உள்ளே வந்தனர்.

பனிமலர் ஜெய்யை பார்த்துக் கொண்டே இருந்தார்.

அவனிடம் ஏதும் கேட்கணுமா? மான்விழி பனிமலரிடம் கேட்டார்.

ம்ம்! அவனை பார்த்து, “பவி ரொம்ப கோபப்படுவா. இனி குறைச்சுக்க சொல்றேன். வாய் அதிகமா பேசினாலும் நல்ல பொண்ணு. பிரச்சனைன்னா நீங்க கொஞ்சம் பார்த்து மட்டும் பேசுங்க” என்றார் தயக்கமுடன்.

அவளோட தாத்தா எதுவுமே பேச மாட்டேங்கிறார். அவளுக்காகவும் நீங்க தான் பேசுவீங்களா? நளினி கேட்க, என்னோட பேத்தி தான் பவிதா..

“ஆனால் வளர்ந்ததெல்லாம் இந்த வீட்டிலும் புகழ் தெரியுமா? அவன் வீட்டிலும் தான். அதனால அவங்க தான் அதிகமா அவளை புரிஞ்சு வச்சுப்பாங்க” சந்திரமுகனை பார்த்தார் தாத்தா.

என்னாச்சு? அவர் கேட்க, “எங்க புள்ளைங்க திருமண விசயத்துல்ல அவங்களும் சரின்னு சொல்லணும்” என்றார்.

யாரு? பாட்டி கேட்க, அழகியும் தர்மேந்திரனும் வந்தனர்.

“அழகி” பனிமலர் அழைக்க, கண்ணை மூடி திறந்து அழகியும் தர்மேந்திரனும் அனைவரிடம் “வாங்க வாங்க” தனித்தனியே அழைத்தனர்.

அண்ணீ, புள்ளைங்க எங்க?

நிது அறையில இருக்காங்க.

உள்ளே சென்று அவர் ஜோவை பார்த்து, ஸ்வீட் ஏதாவது கொடுத்தீங்களா? கேட்டார்.

“ஹாய் ஆன்ட்டி” தனு அவரை அணைத்துக் கொண்டாள்.

“என்னம்மா பிளான் போட்டு அழைச்சிட்டு வந்துருக்க போல?” கண்சிமிட்டி அவர் கேட்க, இல்லை. எனக்கே தெரியாது.

தெரியாதா? ஜோ அவளை முறைத்து கேட்க, “ஆன்ட்டி..இவன் என்னை முறைச்சிட்டே இருக்கான். அங்கிள் வந்துருக்காங்களா?” அவள் எட்டி பார்க்க செல்ல, “எங்க போற நில்லும்மா” என்று தனுவை நிறுத்திய அழகி..

ஏன்டி, பொண்ணு பாக்க வந்திருக்காங்க. இப்படி நின்னுட்டு இருக்கீங்க? நிது புடவை உடுத்தாமல்..

ஆன்ட்டி, “நாங்க வாங்கிட்டு வந்துருக்கோம்” மீண்டும் தனு வெளியே செல்ல முனைய, இப்ப உங்க புடவையை உடுத்தக் கூடாது. அவளது அலமாரியை திறந்து இருவருக்கும் புடவையை எடுத்து கொடுத்து விட்டு

ஜோ என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க? போ..ஸ்வீட், காரம் வாங்கிட்டு வா..

அவன் அப்படியே நின்றான்.

என்னடா?

எனக்கு பிடிக்கலை.

உனக்கில்லைடா. மாப்பிள்ளை வீட்டாருக்கு?

மாப்பிள்ளை தான் பிடிக்கலை.

“நீயா கல்யாணம் பண்ணிக்கப் போற. போடா வாங்கிட்டு வா” அவனை வெளியே தள்ளினார் அழகி. எல்லாரும் அவனை பார்க்க, திரும்பி கதவை தட்டினான்.

“என்ன…டா?…” அழகி கேட்க, “நான் போக மாட்டேன்” அவரை பார்த்தான்.

“சீக்கிரம் தயாராகுங்கடி” வெளியே வந்த அழகி ஜோ கன்னத்தை கிள்ளி, “என்னோட சமத்து பிள்ளைல்ல. என்னோட பட்டு தங்கம் எல்லாமே நீ தான். வாங்கிட்டு வாய்யா” எல்லாரும் இருவரையும் பார்த்தனர்.

“புகழ் இருந்தா அவன் சொல்லாமலே போயிருப்பான். நான் சொல்றதை நீ எதுக்கு கேக்கணும்?” திரும்பி கோபமாக இருப்பது போல திரும்பிக் கொண்டார் அழகி.

கண்ணை மூடி திறந்து, “போயிட்டு வாரேன். ஆனால் எனக்கு இவனை பிடிக்கவேயில்லை. நான் இவனை மாமான்னு கூப்பிட மாட்டேன்” அவன் செல்ல,

“ஹப்பா போயிட்டான். தப்பா நினைச்சுக்காதீங்க” ரிஷியை பார்த்து புன்னகைத்து உள்ளே சென்றார் அழகி.

உள்ளே வந்த ஜோ, எட்டிப் பார்த்து “மாமா” தர்மேந்திரனை அழைத்தான்.

ஸ்வீட் வாங்க சொல்லீட்டு, என்ன வாங்கணும்ன்னு லிஸ்ட்டே கொடுக்கலை.

அவர் புன்னகையுடன், “அவ சந்தோசத்துல்ல இருக்காடா. அதான் மறந்துட்டா. வா நாம போயிட்டு வரலாம்” அவனுடன் அவரும் சென்றார்.