தாரகை 1

“என்னை விட்டுருங்க…விட்டுருங்க…” ஒரு பெண்ணின் அலறல் சத்தத்தில் படாரென கண்விழித்து நெஞ்சை பிடித்து அமர்ந்தான் பவன். அவன் நினைவுகள் பின்நோக்கி சென்றது.

இந்த வருடத் தொடக்கத்தில்..

“உலக பிஸினஸ் சாம்பிராஜ்யத்தை கைக்குள் அடக்கியிருக்கும் எஸ். எம் நிறுவன முதலாளி சந்திர முகனின் இரண்டாவது மகன் ரிசாத் ஷாலினி என்ற பெண்ணை கொடூரமாக கற்பழித்திருக்கிறார். அந்த பெண் அவசர சிகிச்சையின் பிரிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்” செய்தி காட்டுத்தீ போல் செய்தியாளர்கள் மத்தியில் வலம் வந்தது.

சற்றுநேர தகவலின் படி அந்த பெண் ஷாலினி கோமாவிற்கு சென்றதாகவும், கற்பழிப்பு இருவரால் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ரிசாத் அவ்விடத்திலே இல்லை என்றும் வீடியோக்கள் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஷாலினியின் கற்பழிக்கப்பட்டது ரிசாத்தால் இல்லை என்றால் யாரால்? யார் அந்த இருவர்? கேள்விகள் வலம் வந்த படி இருந்தது.

ஷாலினி படிக்கும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சரவணனும் மூர்த்தியும் என்று இருவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். அக்கேஷ் முடிந்து அந்த இருவரும் தற்பொழுது சிறையில் உள்ளனர்.

இறுக்கிய கையை தளர்த்தி எழுந்து குளியலறை சென்று தயாராகி வெளியே வந்தான் பவன்.

“தாத்தா கிளம்பலாமா?” தடியை எடுத்து தாத்தா ஓருவர் கையில் கொடுத்து அவருக்கு நடக்க உதவினான். அவர்கள் இருப்பது முதியோர் இல்லம். அங்கே தான் பவன் சேவகனாக இருக்கிறான்.

“பவன் இங்க வா” முதியோர் இல்லத்தை நிர்வகிக்கும் நிர்வாகி அம்பிகா மேம் அவனை அழைத்தார்.

“இதோ வர்றேன் மேம்” தாத்தாவை அமர வைத்து, “தாத்தா இப்ப வந்துடுறேன். நாம சேர்ந்தே வாக்கிங் போகலாம்” சொல்லி அம்பிகாவிடம் ஓடினான்.

மேம்..

“வா பவன், இவங்கள பார்த்துக்க ஆள் ஒருத்தர் வந்துருக்காங்க” என்று ஒரு நடுத்தர ஆணை காட்டினார்.

சரி மேம்..

உனக்கே தெரியும். நம்ம இல்லத்திற்கு நன்கொடை முன் போல வரதில்லை.

இந்த போஸ்டரை பாரு. இதுல இருக்கிற அமர் இண்டஸ்ரீஸ், ஷாப்பிங் மால், தியேட்டர்ஸ் எல்லாவற்றையும் நிர்வாகம் செய்து வந்த அமரேசன் உடல்நலமில்லாமல் ஒரு வருடமாக ஓய்வில் இருக்கிறார். அவரின் எல்லா பொறுப்புகளையும் அவர் பெயர்த்தி தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்…

அந்த பொண்ணுக்கு வேலை செய்ய நம்பிக்கையான டிரைவர் வேண்டுமாம். ஆனால் அவ்வேலையை பார்ப்பவர்கள் அங்கேயே தங்கி மாலையின் பின் அமரேசனை பார்த்துக் கொள்ளணுமாம். அவருக்கு உதவியாக இரவு இருக்கணுமாம்.

நீ அங்கே சென்று வேலை செய்து நல்ல பெயர் வாங்கி நம்மஇல்லத்தை பற்றி கூறி நன்கொடை வாங்க முடியுமான்னு பாரு. இன்று காலை பத்து மணிக்கு இன்டர்வியூ..

மேம், நான் அங்க…. பவன் பதட்டமாக கேட்டான்.

“முடியாதுன்னா நீ இனி இங்கு வர வேண்டாம்” அம்பிகா ஓரக்கண்ணால் அவனை பார்த்து கண்டிப்புடன் கூறி விட்டு “எல்லாரையும் நீங்க கவனிச்சுக்கோங்க. அதோ பெரியவர் இருக்காரே! அவரை வாக்கிங் அழைச்சிட்டு போங்க” வந்தவரிடம் கூறி அவர் வேலையை கவனித்தார்.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த பவன், “நான் இன்டர்வியூக்கு போறேன் மேம்” அவனறைக்கு சென்று அமர்ந்தான். அவன் மனம் படபடத்தது.

நான் வந்த நோக்கம் மாறுகிறதே! சிந்தனையை தள்ளி வைத்து விட்டு அவன் பொருட்களை ஓர் பையில் அடைத்து தயாராகி வெளியே வந்தான்.

“இந்தா இதை வச்சிக்கோ” அவன் கையில் சில ரூபாய் நோட்டுகளை திணித்தார் அம்பிகா.

எதுக்கு மேம்? வேண்டாம்..

தேவைப்படும். பெரிய இடம். உன் கையில் அவசரத்திற்கு பணம் இருக்கணும். உன் வாழ்க்கை மாற கூட வாய்ப்பிருக்கு.

“என்ன வாழ்க்கை? மாற்றம்..” சலிப்புடன் அவரை பார்த்து, “வாரேன்” கிளம்பினான்.

அவன் இனி தான் சரியான இடத்திற்கு செல்லப் போகிறான் என்று அவனுக்கு தெரியவில்லை.

பவன் செல்லவும் அம்பிகா யாரையோ அழைத்து, “சார் பவன் கிளம்பீட்டாரு” கூறி அலைபேசியை வைத்தார்.

“அமரேசன் இல்லம்” பெயர் பொறிக்கப்பட்ட பெரிய பேலஸ் முன் நின்று பவன் அவ்வீட்டை பார்த்துக் கொண்டிருந்தான்.

தம்பி, யார் நீங்க? எதுக்கு இப்படி வீட்ட உத்து பார்த்துட்டு இருக்கீங்க? வாட்ச் மேன் சோமு கேட்டார்.

இன்டர்வியூ..

மேலிருந்து கீழே பவனை அளவிட்ட சோமு, “உள்ள தான். போங்க” கேட்டை திறந்தார்.

பிரம்மாண்டமான இடத்தை கடந்து சற்று தூரமாக தெரிந்த பேலஸை பார்த்துக் கொண்டே வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே நடந்தான்.. நடந்தான்.. நடந்தான்.. நடந்து கொண்டே இருந்தான்.

பேலஸை அடையவும் அங்கே சிலர் அமர்ந்திருந்தனர்.

சார், “இன்டர்வியூ?”

“அதுக்கு தான் நாங்களும் வந்திருக்கோம். வாங்க” ஒருவன் பவனை அருகே இழுத்து அமர வைத்தான்.

“அந்த பொண்ணு ரொம்ப திமிரு பிடிச்ச பொண்ணாம். யாரையும் மதிக்கவே மதிக்காதாம். இவங்க மால்ல தான் என்னோட மாமா வேலை பார்த்துட்டு இருக்கார். இந்தாளு அமரேசன் பயங்கர கண்டிப்பானவராம். இங்க வர எனக்கு விருப்பமேயில்ல. என்ன பண்றது? பணம் நிறைய தருவாங்க. அதான் வந்தேன்” ஒருவன் பக்கமிருந்தவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

கைத்தடியுடன் மெதுவாக நடந்து வந்தார் அமரேசன்.

லட்சுமி, “வந்திருக்கிறவங்களுக்கு ஜூஸ் எடுத்து வா” சத்தமிட்டு போடப்பட்டிருந்த நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்தார் அமரேசன்.

“வந்துட்டேன்ய்யா….” வீட்டு வேலைக்கார லட்சுமி கையில் ஜூஸ் ட்ரேயுடன் வந்து அனைவருக்கும் கொடுத்தார்.

பவன் முன் அவர் வர, அவன் ஜூஸ்ஸை கையில் எடுத்து “தேங்க்ஸ்” என்றான். அவர் புன்னகைத்தார். எல்லாவற்றையும் இரு கயல்விழிகள் கேமிராவில் பார்த்துக் கொண்டிருந்தன..

லட்சுமிம்மா, “பாப்பாவை வர சொல்லு” அமரேசன் சொல்ல, “இதோ போறேன் அய்யா” அவர் ஓர் அடி எடுத்து வைக்க, ப்ளவர் வாஷ் ஒன்று அவர் முன் வந்து விழுந்தது. ட்ரேயை கீழே போட்டு நகர்ந்து நின்றார்.

“பவிம்மா” அமரேசன் சத்தமிட்ட, அறையிலிருந்து வெளிப்பட்டாள் பவிதா.

நீலம் கலந்த மஞ்சளில் உடலை ஒட்டிய கையில்லாத தொடையளவு இருக்கும் ஆடையுடன் கையில் கூலரை சுற்றியவாறு திமிறான நடையுடன் மாடியிலிருந்து இறங்கினாள்.

“பவிம்மா இன்டர்வியூவுக்கு வந்திருக்காங்க” அமரேசன் அழைக்க, அவரை முறைத்து ஓரிடத்தில் அமர்ந்தாள்.

லட்சுமி பவிதாவை பார்த்து புன்னகையுடன் அடுக்கலைக்குள் சென்றார்.

சொடக்கிட்டு ஒருவனை அழைத்தாள் பவிதா..

“மேம்” அவன் வேகமாக அவள் முன் வந்து நின்றான்.

அவளுடைய ஹை கீல்ஸை அவன் முன் நீட்டி, “துடைச்சு விடு” என்றாள் திமிறாக.

வாட்? அவன் நகர்ந்தான்.

“பவி” அமரேசன் சத்தமிட, அவரை முறைத்து விட்டு எழுந்த பவிதா..

“லட்சும்மா பிரேக்பாஸ்ட் எடுத்து வை” உணவுமேசையில் அமர்ந்தாள்.

“பாப்பா சாப்பிடும் போது அலைபேசியை பார்க்காதீங்க” உணவு மேசையில் பாத்திரங்களை அடுக்கினார் லட்சுமி..

என்ன சொன்னீங்க? அவளது தோரணையான கேள்வியில், அவர் தயங்கினார்.

நீங்க…சொல்லுங்க?

அவளை புரிந்த லட்சும்மா, அவளது திமிறான பேச்சில் “ஒன்றுமில்லை பாப்பா” அவர் உணவை எடுத்து வைத்தார். எல்லாரும் அவளை பார்த்தனர்.

பெருமூச்சுடன் அமரேசன் இன்டர்வியூவை ஆரம்பித்து பவனை தேர்ந்தெடுத்தார்.

சார், “இந்த மேம் எதுவும் பேசலை” அவன் கேட்க, பவி பிடிவாதம், கோவக்காரி.. மத்தபடி நல்ல பொண்ணு தான்.

சார், நான் அவன் பேச தொடங்க..

“லட்சும்மா டிரைவர் வருவானா? நானே ஆபிஸூக்கு கிளம்பவா?” சீற்றமுடன் சத்தமிட்டாள்.

“நாம மாலை பேசலாம். நீ கிளம்புப்பா. பார்த்துக்கோ” அவர் கண்ணியமுடன் பவனிடம் சொல்ல, சார் என்னோட பொருட்கள்..

அதை நாங்க பார்த்துக்கிறோம்.

ராகவா… அவர் சத்தமிட்டார். வெளியிலிருந்து ஒருவன் ஓடி வந்தான்.

இவரோட பொருட்களை என்னோட அறையில எடுத்து வை..

“சரிங்கய்யா” ராகவன் பவனை முறைத்துக் கொண்டே சென்றான்.

“இந்த வீட்ல எல்லாரும் ஒவ்வொரு ரகமா தான் இருக்காங்க” மனதில் எண்ணியவாறு பவன், “கார்க்கீ சார்?” அமரேசனிடம் கேட்டான்.

“பவிம்மா கார்க்கீயை இந்த பையனிடம் கொடு”

“ஓ! கொடுக்கணுமா?” கண்ணில் அணிந்திருந்த கிளாஸை கழற்றி கையில் சுழற்றியவாறு பவனை பார்த்து, “கேச்” கார்க்கீயை தூக்கி போட்டாள். அவன் தவறவிட்டான். கலகலவென சிரித்தாள் பவிதா. அவன் கீயை எடுப்பதை விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“லட்சும்மா ஈவ்னிங் ஸ்னாக் தயாரா வச்சிருங்க” சொல்லி, “ஹே..க்விக் பாஸ்ட்” விறுவிறுவென வெளியே நடந்தாள்.

பவன் கார்ச்சாவியை எடுத்துக் கொண்டு அவள் பின்னே சென்றான்.

காரை எடுக்க சொல்லி அலைபேசியை எடுத்து மூச்செடுத்து விட்டு கண்ணை மூடி திறந்து யாரையோ அழைத்தாள்.

எங்க இருக்க? வரலையா? அவள் கேட்டுக் கொண்டே பவனை பார்த்து, ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

“நீ முன்னாடி போ. நான் வந்துருவேன்” ஓர் ஆணின் குரல் கேட்டது.

வீட்ல இருந்து கிளம்பீட்டியா?

ம்ம்..

ம்ம்! பவி முகம் சோகமாக அலைபேசியை பார்த்து, அம்மாடா???

வொர்க் இருக்கு. அவங்க முன்னாடியே பார்த்துட்டு ஆபிஸ் கிளம்பிட்டாங்க.

ஏன்டா தனியா போக விட்ட?

நீ வா. நீயும் என்னை டென்சன் ஆக்காத..

“சரி வா” அலைபேசியை வைத்து விட்டு சீட்டில் வருத்தமுடன் சாய்ந்தாள்.

மேம், “போகும் இடம் நீங்க சொல்லவில்லை” பவன் கேட்க, அவனை முறைத்து அவள் சொன்ன முகவரி வரவும் “மேம்” அழைத்தான். சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து இடத்தை பார்த்து, “அடுத்த வீதி போ..”

மேம்..

“செட் அப். சொன்னதை செய்” சத்தமிட்டாள்.

“சாரி மேம்” பவன் அவ்விடம் நிறுத்த, கார் மனநல காப்பகத்தின் முன் நின்றது.

மேம், இங்கேயா? பவன் கேட்க, “ஜஸ்ட் செட் அப்” சீற்றமுடன் கத்தினாள். அவளை மீறி கண்ணீரும் வந்து விட்டது.

பவன் அமைதியாக, கூலரை கழற்றி கீழே இறங்கினாள் பவிதா.

பவன் டிரைவர் சீட்டிலே அமர்ந்திருந்தான். அந்நேரம் பைக் ஒன்று வந்தது. பைக்கிலிருந்து இறங்கியவன் பவிதாவை நோக்கி வந்தான்.

அம்மா, “கிளம்பீட்டாங்களா?” பவிதா வருத்தமுடன் கேட்க, “ஆமா வா” அவன் அழைக்க, அவன் கையை பிடித்து பவி அவனிடம் ஏதோ கூற, சினமுடன் அவன் அவளது காரின் டிரைவர் சீட்டில் இருக்கும் பவனை முறைத்தான்.

“இவன் யாரு? என்னை எதுக்கு இப்படி முறைக்கிறான்?” எதுவும் விளங்காமல் விழித்தான் பவன்.

“வா..” பவிதாவும் பவனை முறைத்து விட்டு அவன் கையை கோர்த்து உள்ளே சென்றாள்.

அரைமணி நேரத்தின் பின் இருவரும் வந்தனர். இருவரின் முகமும் சோர்வுடன் இருந்தது.

“போய்ட்டு கால் பண்ணு”

ம்ம்! மட்டுமே கூறிய பவிதா காரிலிருந்து தண்ணீரை எடுத்து முகத்தை கழுவினாள். பின் சிறிது ஒப்பனையை முடித்து விட்டு பவனை காரை எடுத்து மேப்பை பின் தொடர்ந்து செல்லும் படி பணித்தாள்.

மேப் மூலம் அவளை இறக்கினான்.

“என்னோட வா” அவள் சொல்ல, “மேம்” அழைத்தான் அவன்.

யா, “பாலோ மீ”

அவள் உள்ளே நுழையவும் அம்மால் பரபரப்புடன் செயல்படத் தொடங்கியது..

சங்கர், “என்ன இது? இவ்வளவு டர்ட்டியா இருக்கு?” சினமுடன் ஒருவரிடம் சத்தமிட்டாள்.

மேம், கஸ்டமர் பேபி..

“வாட் ரீசன் ஆர் யூ டாக்கிங்?…இமீடியேட்டா கிளியர் பண்ணுங்க” சீறலுடன்..

“கவிதா” ஒப்பனை ஷாப் வைத்திருந்த பெண்ணை அழைத்து, “உங்க ஷாப்ல்ல நியூ பிராடெஜ்ட் எப்படி சேல் ஆகுது?” ஒப்பனை பொருட்களை ஆராய்ந்தாள்.

ம்ம்! ஓ.கே மேம்…

வாட் ஓ.கே? எனக்கு பணத்தை விட பொருளின் தரம் தான் முக்கியம். உங்களது பொருட்கள் நான் சொன்ன அளவிற்கான மக்கள் வாங்கணும் இல்லை இனி உங்க ஷாப் இங்க இருக்காது..

மேம்..

வாட்?

நோ மேம். நாங்க கண்டிப்பா ரீச் பண்ணிடுவோம்..

ம்ம்! அடுத்த டாமினோஸ் ஷாப்பிற்குள் நுழைந்தாள்.

சர்வர் கஸ்டமரை கவனிக்காமல் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான். அவ்வளவு தான்..

ஹே, “வாட் ஆர் யூ டூயிங்? கஸ்டமரை வெயிட் பண்ண வைக்கும் ஆள் எங்களுக்கு தேவையில்லை. கெட் அவுட்” கத்தினாள்.

அவன் பவிதா முன் மண்டியிட்டு, சாரி மேம். கெர்ல் ப்ரெண்டோட பிரச்சனை. அதான் மெசேஜ் செய்து கொண்டிருந்தேன்.

ஓ! “கெர்ல் ப்ரெண்டால பிரச்சனையா? இனி பிரச்சனையே வராது. போ அவ பக்கத்திலே இருக்கலாம். சார்லி….” சினமுடன் அந்த ஷாப் ஓனரை அழைத்தாள்.

நடுத்தர வயதுடைய ஒருவர் ஓடி வந்தார்.

ம்மா..சாரிம்மா..பையனை கவனிக்காமல் விட்டுட்டேன்.

இப்ப இவன் இங்கிருந்து போகணும். அதே போல உங்களுக்கும் இது தான் முதலும் கடைசியுமாக இருக்கணும். புரியுதா?

ம்ம்! புரியுதும்மா. அவர் அவனை வெளியே அனுப்ப, நீ மட்டும் தான் மால் வச்சிருக்கியா? பணம் இருக்கும் திமிரு தான உனக்கு? அவன் பவிதாவிடம் எகிறிக் கொண்டு வந்தான்.

பவன் அவனருகே செல்லும் முன் அவன் சட்டையை பிடித்த பவிதா,

ஹேய், “என்ன சவுண்டு குடுக்கிற? நீ சொன்ன கெர்ல் ப்ரெண்டு இங்க இருக்கா? நீ எவளுக்கு மேசேஜ் பண்ற?” அவள் கேட்க, அவன் பதறி அவர்கள் முன் வந்த அவளது கெர்ல் ப்ரெண்டை பார்த்தான்.

“பொறுக்கி ராஸ்கல். பொண்ணுண்ணா உங்கள மாதிரி பொறுக்கிகளுக்கு சாதாரணமா போச்சுல்ல? பணம் இல்லாதவனும் இப்படி தான் இருக்கானுக. பணம் இருக்கும் பரதேசிகளும் இப்படி தான் பத்து பொண்ணுங்களோட சுத்தி ஏமாத்துறானுக? நீ என்னை பேச வந்துட்ட?

தாரிகா..இவனை என்ன பண்ணப் போறீங்க? சும்மா விடாதீங்க” அவனை அவனது கெர்ல் ப்ரெண்டு முன்னே தள்ளி விட்டு, “கிரவுட கிளியர் பண்ணு” பவனை பார்த்தாள்.

வாட்?

சொன்னது கேட்கலையா? அவனிடம் கத்தினாள்.

“பண்ணிடுறேன் மேம்” அவனும் செய்து விட்டு அவள் பின்னே சென்றான். எல்லா ஷாப்பையும் பார்த்து விட்டு அவள் கேபினுக்கு வந்து அமர்ந்தாள்.

அலைபேசியை எடுத்து, “நான் வந்துட்டேன். ஆன்ட்டி அங்கிளை பார்த்துட்டியா? அம்மாவை பத்திரமா பார்த்துக்கோ. நான் ஈவ்னிங் வாரேன்” வாய்ஸ் மேசேஜ் அனுப்பி விட்டு பவனை பார்த்தாள்.

அவன் மனம் குழப்பமுடன், “இவள் நல்லவளா? கெட்டவளா?” போராடிக் கொண்டிருந்தான்.

ஹேய்…பவிதா அழைக்க, அவன் யோசனையில் அவளது சத்தம் அவனுக்கு கேட்கவில்லை..

“ஹேய் இடியட்? என்ன கனவுல மிதந்துட்டு இருக்கீயா?” சத்தமிட்டு அவன் மீது  பூச்செண்டை தூக்கி எறிந்தாள். அவள் தூக்கி எறிந்ததில் பூக்கள் அவன் மீது சாரலாய் தீண்டியதில் அவனுக்கு மனம் சிறகடித்து பறந்தது.

“ஹேய்” பேப்பர் வெயிட்டை கையில் எடுத்தாள்.

கதவை தட்டும் சத்தம் கேட்டு பவன் சுதாரித்து அவள் கையிலிருக்கும் பேப்பர் வெயிட்டை பார்த்து, “மேம்” அழைத்தான்.

“ஹௌ டேர் யூ ட்ரீமிங் இன் மை கேபின்?” சத்தமிட்டாள்.

சாரி மேம். கதவு தட்டும் சத்தம் கேட்டு, “யாருய்யா? வந்து தொலைங்க” சீறினாள்.

அவளது அசிஸ்டென்ட் பார்கவி தான் உள்ளே வந்தாள்.

என்ன? சினமுடன் அவள் கேட்க, மேம்..நம்ம எண்டர்பிரைசஸ் கம்பெனியில பிராபிளம்..

வாட் பிராபிளம்? கன்னத்தை தாங்கி பார்கவியை பார்த்தாள் பவிதா. அவளையே விழித்து பார்த்தான் பவன்.

இரு பிராஜெக் கையை விட்டு போயிருச்சு.

டேமிட், யார் பிராஜெக் ஹெட்? அவங்க என்னை பார்க்கணும். தயாரா இருக்க சொல்லு..

எஸ் மேம். நாம கிளம்பலாமா? பார்கவி கேட்க “யா, ஹே வா”  பவனை அழைத்தாள்.

மேம் கால் மீ பவன்..

வாட்? அவள் சினமுடன் அவன் பக்கம் திரும்ப, “மேம் லேட் ஆகுது” பார்கவி பவனை முறைத்து, “கிளம்பலாம் மேம்” அவள் பின் ஓடிக் கொண்டே, “வாடா” என்றாள்.

டாவா?

“ஆமா. வா” கையசைத்து பவிதா பின் பார்கவி ஓடினாள்.

மூவரும் காரில் ஏறினார்கள்.

“சீக்கிரம் போ” பார்கவி கூறி விட்டு பவிதாவிடம் பிராஜெக்ட் சம்பந்தப்பட்ட கோப்புகளை நீட்டினாள்.

அதை பார்த்துக் கொண்டே பார்கவியை பார்த்த பவிதா, கோப்புகளை மூடி விட்டு, “அப்பா இப்ப நல்லா இருக்காரா?” கேட்டாள்.

ஆமா மேம், உங்க புண்ணியத்துல்ல நல்லா இருக்கார். சர்ஜரி நல்லபடியா முடிந்தது. அம்மா உங்களை பார்க்கணும்ன்னு சொன்னாங்க. நமக்கு தான் நேரமிருக்காதே! பார்கவி பவிதாவை பார்த்தாள்.

பவிதா புன்னகையுடன்..அப்புறம்..

“மேம்” சிணுங்கினாள் பார்கவி.

பவன் அதிர்ந்து இருவரையும் பார்த்தான்.

“ஏன்டி? அம்மாகிட்ட இப்படி பேசுன?” பார்கவி தோளை தன்னுடன் இழுத்துக் கொண்டாள் பவிதா.

“நீ தான் ஓடிக்கிட்டே இருக்க? இதுல அங்க வேற…” பார்கவி தயங்கி கூற,

என்னை விட்டால் நான் வொர்க் பிளைசிலே தங்கிடுவேன். தாத்தாவிற்கும் என்னை விட்டால் யாரு இருக்கா? அதான்…

ஜோ, ஓ.கே வா?

ம்ம்!

ஓ.கே. அம்மா மதியம் உனக்கு சேர்த்து உணவு கொடுத்தாங்க..

என்ன சமையல்?

உனக்கும் நம்ம நிதுவுக்கும் பிடித்த பிரியாணி..

பட்டென கண்ணீர் துளிகள் பவிதா கண்ணில்..

இல்லடி. அவ இல்லாமல் நான் சாப்பிட மாட்டேன்.

அம்மா, ஆசையா செய்து கொடுத்தாங்க. நீ அவளோட சேர்ந்தே சாப்பிடலாமே!

காலையே போயிட்டு வந்துட்டேன்.

அதனால என்ன? நான் மதியம் அவளை பார்க்க போறேன். நீயும் வா..

“சரி..பார்க்கலாம்..” இருவரும் பேசிக் கொண்டே செல்ல, கம்பெனி வரவும் அங்கேயும் பவிதாவின் கோபமான முகமே பிரதிபலித்தது. எல்லாவற்றையும் கண்ட பவன் மனதினுள் புன்னகைத்துக் கொண்டான்.

மாலை ஆள் அரவமில்லாத இடத்திற்கு பவனுடன் காரில் சென்று இறங்கினாள் பவிதா. நேரம் கழித்து தான் வந்தாள்.

இரவாகி இருந்தது. வீட்டிற்குள் அவள் வரவும், “பாப்பா ஸ்னாக் அனுப்பினேன். வந்ததுல்லம்மா?”

“வந்தது லட்சும்மா. ராகவ் கொண்டு வந்தான்” அவரருகே இருந்த ராகவ்வை அணைத்து, “ராகவ், கான்சன்டிரேட் யுவர் ஸ்டடிஸ். இப்ப பீவர் குறைஞ்சிருக்கு”.

கல்லூரி படிக்கும் ராகவன் லட்சுமியம்மாவின் மகன்.

அக்கா, நான் நல்லா இருக்கேன். நீங்க அவன் பேச தொடங்க..இவர்களையே பார்த்துக் கொண்டே வந்த பவனை பார்க்கவும், “அக்கா இவனை வெளிய அனுப்பலாமா?” கேட்டான்.

நோ..ராகவ். தாத்தாவுக்காக இருக்கட்டும். இவனை நான் வச்சி செய்யப் போறேன்.

“சும்மா விடாதக்கா” ராகவ் சொல்ல, “ராகவா?” லட்சுமி திட்டினார்.

இவர்களை பார்த்து நின்று கொண்டிருந்த பவனை பார்த்து, “தம்பி சாப்பிட வாங்க” லட்சுமி பவனை அழைத்தார். அவன் அலட்டிக் கொள்ளாமல் வந்து அமர்ந்தான்.

“கூப்பிட்டால் கூச்சமே இல்லாமல் வர்றான் பாரு” ராகவன் கூற, “ராகவா” அமரேசன் சத்தமிட்டார்.

“மன்னிச்சிருங்கய்யா” பவனை முறைத்துக் கொண்டே ராகவன் சென்று விட்டான்.

லட்சும்மா, நான் சாப்பிட்டேன். போதும். மத்தவங்க சாப்பிடட்டும்.

“தாத்தாவோட பேசும்மா” அவர் சொல்ல, “தேவையில்லை லட்சும்மா”  வேகமாக அவளறைக்குள் சென்று விட்டாள் பவிதா.

“சின்னப்புள்ள புரியாம நடந்துக்குது” லட்சுமி அமரேசனிடம் சொல்ல,

“பரவாயில்லைம்மா. என் மீது தவறு தான். பவி கோபம் நியாயம் தான்” அவர் உணவுண்டு பவனையும் அவரறைக்கு அழைத்து சென்றார். அவனும் அமைதியாக அவர் பின் சென்று விட்டான்.

அமரேசன் பவனிடம் நன்றாகவே பேசினார். இவர் கண்டிப்பானவர்ன்னு சொன்னாங்க. பார்க்க அப்படி தெரியவில்லையே! சிந்தித்தான் பவன்.