Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 4..

 இருட்டான அந்த இடமே மிகவும் அமைதியாகவும் நிசப்தமாகவும் ஒரு பெரிய கடத்தல் கூட்டத்திற்கு சாட்சியாக காட்சியளித்தது..

 சந்தோஷ் மற்றும் பையாவின் அதி நம்பகமான ஆட்கள் ஜெகனின் வாகனம் வரும் பாதையை ஆக்கிரமித்து விட்டார்கள்..

 பையா சந்தோசை அழைத்து ” நான் சொன்ன மாதிரி பிளான் பண்ணி ஏசிபி-யை டைவர்ட் பண்ணி விட்டியா?..” என்றான்..

” யா எஸ் கச்சிதமா டவுட் வராத அளவிற்கு பண்ணிட்டேன் மாமா பையா.. ” என்றான் சந்தோஷ்.

” நாம பொண்ணுங்களை டெல்லிக்கு அனுப்ப போறதா நினைச்சு அந்த ஏசிபி நம்மள தேடி அங்க அலைந்து திரிவான்.. கிடைத்த கேப்பில் ஜெகனுக்கு ஆப்பு வைத்து விட்டு அவன் மும்பைக்கு அனுப்ப போற பொண்ணுங்கள நாம தூக்கிடனும். அதுக்கு நான் சொன்ன பிளான் படி தீவிரமாக செயல்படுங்க.. என்னோட கெஸ் சரின்னா ஏசிபி கிட்ட இருந்து உனக்கு இன்னும் 5 மினிட்ஸ்ல கால் வரும்.. அது அட்டென்ட் பண்ணி அதுக்கு நான் சொன்ன மாதிரி பேசிட்டு சீக்கிரம் வேலைய ஸ்டார்ட் பண்ணு.. ” என்று கூறிவிட்டு அங்கிருந்த அவனது காரில் போய் ஏசியை ஆன் செய்துவிட்டு அமர்ந்து அவனுக்கு பிடித்தமான பாடல்களை கேட்க ஆரம்பித்தான் பையா..

 சந்தோஷும் பையா சொன்னது போன்று ஆட்களை அழைத்து அவர்கள் செய்யப்போகும் வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தை கூறி அவர்களை அலர்ட் பண்ணிவிட்டு அங்கிருந்து சற்று நகர்ந்து அவனது கைப் பேசியில் ஏசிபியின் அழைப்பு வருவதை பார்த்து பேசுவதற்கு சென்றான்..

” ஹலோ சார் நான் சந்தோஷ். பேசுறேன்.. ” என்றான்.

 சந்தோஷ் ஃபோன் காலை அட்டன்ட் செய்தவுடன் ” ஹலோ நீ எவனா வேனுமென்றாலும் இரு. உங்களால என் — இத கூட புடுங்க முடியாது.. உங்க கேங் அண்ட் கேங் லீடர் பிடிக்கிறதுக்கு தான் சென்னைக்கு ஸ்பெஷல் பிரமோஷன்ல வந்திருக்கேன்.. என்னோட 5 வருட சர்வீஸ் ரொம்ப ஈஸியா எடை போட்டுட்டீங்க. இது தப்பாச்சே..! நீங்க கிரிமினல்ஸ் இப்படி யோசிக்கிறிங்க அப்பிடின்னா நாங்க உங்களுக்கு மேலே டீப் திங்க் பண்ணனுவோம்.. என்ன அந்த சைட் டைவர்ட் பண்ணிட்டு.. இங்க உங்க கடத்தலை பிளான் பண்ணி இருக்கீங்க.. போய் சொல்லு உன்னோட பாஸ் கிட்ட ஏசிபி விக்ரம் சாகர் ஆன் த வே.. ஒருத்தரையும் விடாம உரு தெரியாமல் கன கச்சிதமா கூடிய சீக்கிரமே அழிச்சிட்டு உங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி அவர்களுக்கு விடுதலை அளிக்கிறேன்.. இதுதான் என்னோட ஃபர்ஸ்ட் ஆம்பிஷன்.. ” அங்கு சிங்கம் ஒன்று கர்ஜித்தது போன்று கத்தி விட்டு போனை வைத்தான் ஏசிபி விக்ரம் சாகர்..

” ஷ் ஷ் ஷ் ப்பா..” என்று காதை குடைந்து விட்டு ” என்கிட்டயே இந்த கத்து கத்துறான். நம்ம பையாவை பற்றி அவனுக்கு சரியா தெரியல ஆன் த வே யாம்ல ஆன் த வே வந்து பாருடா பையா யாருன்னு தெரிஞ்சுப்ப.. ” ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அவன் கூறியவற்றை அவனது பையாவிடம் கூறுவதற்கு சென்றான் சந்தோஷ்..

 அவர்கள் திட்டமிட்டபடியே ஜெகனின் முட்டாள் கூட்டங்கள் அதே வழியாக பெண்களைக் கடத்திக் கொண்டு அந்த வாகனத்தில் வந்தார்கள்..

 பையாவின் திட்டப்படி ஒருவன் அந்த வாகனத்தின் மீது போய் விழுந்து விட்டான்..

 அவர்களும் சற்றும் யோசிக்காமல் வாகனத்தை நிறுத்திவிட பையா சந்தோஷ் இன்னும் சிலர் அந்த வாகனத்தில் ஏறி அங்கிருந்து ஆட்களை அடித்துப் போட்டுவிட்டு பெண்களை அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து செல்ல முற்படும்போது ஏசிபி யின் வாகனமும் அங்கே வந்தது..

 மயிரிழையில் தப்பிப்பது என்பதை உண்மை படுத்திவிட்டு ” நீ போலீஸ்னா நான் இன்டர்நேஷனல் கிரிமினல் மாமா பையா டா. ” என்று வேங்கையாக உருமி விட்டு அவ்விடத்தில் இருந்து பறந்து சென்றான்..

 மாமா பையா சென்றதும் ” நீ இப்போ தப்பி போனதாக நெனச்சிகிட்டு இருக்குற. நோ வே உன்னையும் உன்னோட ஆட்களையும் உனக்கு யாரு சப்போர்ட் பண்ற என எல்லாரையும் கூண்டோடு பிடிக்கிறது தான் என்னோட மாஸ்டர் பிளான்..” என்று சிரித்து விட்டு அங்கிருந்து சென்றான் ஏசிபி..

ஜெகனின் ஆட்களிடம் இருந்து வந்த தகவலை கேட்டு கொந்தளித்துவிட்டான்..

” முட்டாள் பசங்களா முட்டாப் பசங்களா எல்லாம் மாட்டு முளைகளா இருக்கானுங்க. ஒரு வேலையை உருப்படியாக செய்றதேயில்லை இவர்களை நம்பி அனுப்பினதுக்கு நானே போய் இருந்திருக்கணும்..” என்று அனைத்தும் போன கவலையில் ஒரு மூலையில் போய் இருந்து புலம்பினான் ஜெகன்..

நேரம் நள்ளிரவு 12 30..

ஒருவழியாக ஏசிபியிடம் இருந்து தப்பித்து அவர்கள் கடத்திய பெண்களையும் அழைத்து கொண்டு மாமாவின் கோட்டைக்குள் வந்து விட்டார்கள்..

 பெண்கள் அனைவரையும் வைக்கும் இடத்தில் கொண்டு இருக்க வைக்க சொல்லி பொறுப்பை சந்தோஷிடம் ஒப்படைத்து விட்டு பையா அவனது அறைக்கு சென்றுவிட்டான்..

 சந்தோஷும் அந்த பொறுப்பை நிறைவேற்றி விட்டு அவனது அறைக்கு வந்தான்..

 அவனின் காலடிச்சத்தம் கேட்டு அங்கிருந்த பெண்ணும் உடனடியாக எழுந்து முழங்காலை கட்டிக் கொண்டு பயந்த முகத்துடன் சந்தோசை நிமிர்ந்து பார்த்தாள்..

” ஹே பொண்ணு இப்போ உன்ன கடிச்சு தின்னுடவா போறேன்?.. இந்த சந்தோஷ் எப்பவுமே சொன்ன வார்த்தையை மீறவே மாட்டான் மா.. பயப்படாத உனக்கு இன்னும் ரெண்டு நாள் டைம் தந்திருக்கேன். அது வரைக்கும் நீ உன்னோட முடிவை திங்க் பண்ணிட்டே இந்த அறையில் பயமில்லாமல் சுத்திட்டு இருக்கலாம்.. இந்தா சாப்பாடு சாப்பிட்டு இந்த கட்டிலில் படு. நான் சோபாவில் படுக்குறேன்.. உன் சம்மதம் இல்லாம என்னோட சுண்டு விரல் கூட உன் மேல படாது நல்ல நிம்மதியா படுத்து தூங்கு.. குட் நைட்.. என்றுவிட்டு படுத்து சிறிது நேரத்திலேயே அவன் மெல்லிய குறட்டை சத்தத்தோடு தூங்கிவிட்டான்..

 அவனோ அவளை கட்டாயப்படுத்தி பயம் காட்டி விட்டு அவன் தூங்கிவிட்டான். அவளோ இங்கு வந்த நாளிலிருந்து மனதளவில் மிகவும் சித்திரவதையை அனுபவித்து கொண்டிருக்கிறாள். இங்கு இருந்து எவ்வாறு தப்பிப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. இங்கிருக்கும் கயவர்கள் பெண்களை வைத்து தொழில் செய்பவர்கள் அவர்களிடம் ஈவு இரக்கம் என்பவற்றை சற்றும் எதிர்பார்க்க முடியாது என்பது அவளுக்கு நன்றாக புரிந்து விட்டது..

 அதனால் இங்கிருந்து தப்பித்து இவர்களை போலீசிடம் காட்டிக் கொடுத்து தன்னைப்போன்ற பாதிக்கப்பட்டவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே அவளது லட்சியமாக கருதிக் கொண்டிருக்கிறார்கள்..

 அடுத்த நாள்காலை யாருக்கும் காத்திராமல் அழகாக விடிந்தது யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்பது நாளின் முடிவிலேயே அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்,

 வழமைபோன்று துளசி காலையில் எழுந்து விட்டாள். காலையில் புத்துணர்ச்சியோடு எழுந்தாலும் நேற்றைய அவளின் தாக்கம் இன்னும் அவளது முகத்தில் இருந்து மறையவில்லை..

 மீராவின் அப்பா யார்? என்று தெரியாமல் துக்கத்தை மனதிலேயே மறைத்து வைத்துக் கொண்டிருந்தாலும். அதனால் அவளைத் தவிர வேறு யாருக்கும் பாதிப்பில்லை.. ஆனால் நேற்று தன் மகள் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை கண்கூடாக பார்த்த பிறகு நிம்மதி மன அமைதி என அனைத்தையும் தொலைத்துவிட்டு தான் ஏன் வாழவேண்டும் என்பதை போன்று துளசி யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்..

 அவளுக்கு தனிமையான அமைதியான இடம் தேவைப்படுவதால் வேலைக்கு கைபேசியில் விடுமுறை சொல்லிவிட்டு மகளை மெட்ரிகுலேஷன் ஸ்கூல் அனுப்பி விட்டு அவள் விரும்பி செல்லும் சிவன் கோயிலுக்கு சென்று விட்டாள்..

 ரிஷியின் வீட்டில் நிஷா காலையில் எழுந்ததும் குளித்து ஸ்கூல் செல்வதற்கு அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அந்த சிறு பெண்ணின் மனதில் தந்தை தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்து அது வடுவாக மாறி இன்று தந்தையைக் காணாமல் எங்கும் செல்ல போவதில்லை எனும் உறுதியை எடுக்க வைத்து விட்டது..

அங்கிருந்த கண்ணாடியால் ஆன அலங்கார பொருட்களை உடைத்தும் வேலையாட்களை அருகே நெருங்கவிடாமல் செய்வது என்று கலாட்டா பண்ணி கொண்டு இருக்கிறாள்..

 நிசாவின் இந்த அகங்கார மான செயல் அங்கிருந்த பழைய வேலையாட்களுக்கு நிஷாவின் தாய் மோனிஷா வை பார்ப்பது போன்று இருந்தது..

மோனிஷாவும் இவ்வாறுதான் நடந்து கொள்வாள். அவளுக்கு தேவையான ஒன்று அவள் கேட்ட அடுத்த நிமிடம் கிடைக்கவில்லை என்றால் வயது வித்தியாசமோ சொந்தங்களோ பாகுபாடு இன்றி அனைவரையும் கையில் கிடைக்கும் பொருட்களால் தூக்கி அடித்து துன்புறுத்துவாள்.. அவள் கேட்டவற்றை தாயும் தந்தையும் செய்து கொடுக்கும் வரை அவளது அட்டகாசம் அதிகமாகிக்கொண்டே போகும். அதுபோன்றே நிஷாவையும் மோனிஷாவின் மறுபிறவி ஆகவே பார்க்கிறார்கள்..

 ஒருவழியாக அந்த வீட்டின் மூத்த வேலையாள் பெண்மணி ஜானகி வீட்டு தொலைபேசியில் ரிஷிக்கு அழைப்பு விடுத்து நிஷாவின் சேட்டைகளை சொல்லி வருமாறு கூறிவிட்டு வைத்தார்..

நிஷாவை அவளது பாட்டி தேவிகா கண்டுகொள்வதே இல்லை அவளது மகள் இறப்பிற்கு நிஷாவின் பிறப்பே காரணம் என்று நினைத்து அந்த குழந்தையை ஒதுக்கியே வைத்து விட்டார்..

ரிஷி ஆபீஸ் வேலை முடித்துவிட்டு அவனுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிஷாவுடன் நேரம் செலவழிப்பான்..

தாய் இல்லை பட்டியின் கவனிப்பும் இல்லை அதனால் அந்த குழந்தையின் மனநிலை சிறு வயதிலேயே வேறு பாதைக்கு செல்வதற்கு துணிந்து விட்டது..

ஜானகியின் அழைப்பை தூண்டித்து விட்டு ரிஷி பார்த்த வேலையையும் பாதியில் விட்டுவிட்டு அவனது காரில் வீட்டிற்கு விரைந்து புறப்பட்டான்..

நிஷாவை சமாதானம் பண்ணாத தனது முட்டாள் தனத்தை நொந்து கொண்டு வேகமாக வந்தான்..

ரிஷி மோனிஷாவுடன் வாழ்ந்த ஒரு வருடமும் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்து உள்ளான்.. அவனால் அவளின் செயல்களை தடுக்கவோ கண்டிக்கவோ இயலவில்லை..

அவனால் மோனிஷாவை அடக்க முடியா விட்டால் என்னவோ பண்ணிதொலைந்து போ என்றுவிட்டு போய் விடுவேன்..

ஆனால் நிஷா குழந்தையாகிட்டே அதுபோன்று விட்டுவிட முடியவில்லை அவனால். ஐந்தில் வளையாதது ஐம்பத்தில் வளையாது என்கிற பழமொழிக்கு மோனிஷா உதாரணம். தாயை போன்று பிள்ளை வந்துவிடக்கூடாது என்பதற்காக ரிஷி நிஷாவை அதிக கவனம் எடுத்து பார்த்துக்கொள்வான்.

எதோ அவசர வேலையால் இன்று நிஷாவை பார்க்க மறந்ததால் இதோ அதி வேகமாக செல்கிறான்..

அவ்வாறு ரிஷி வந்நியன் செல்லும்போதுதான்..

விதி அவனை வேறு பாதையில் திசை திருப்பி விட்டது..

[அப்பாடி இன்னைக்கு கோட்டாவை சிறப்பாக முடிச்சிட்டேன் மக்கா ????? இப்போதான் மனம் நிம்மதியா இருக்கு ஹி ஹீ ??????]

Advertisement