Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை 20..

 பத்திரிக்கை மற்றும் டீவி மீடியாக்களுக்கு இவர்களின் திருமணத்தை அறிவித்து இருந்தார்கள்.. ஏசிபி விக்ரம் சாகர் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கிருஸ்ணா இருவருக்கும் ஒரே மேடையில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற உள்ளது.. அனைவரும் வந்து அவர்களை வாழ்த்தி செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.. இப்படிக்கு மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் குடும்பத்தார்.. என்று திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இந்த அறிவிப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது..

 திருமணம் முடிவாகியதும் துளசி மீரா நிஷா மூவரும் மீனாட்சியுடன் அந்த வீட்டிற்கு சென்று விட்டார்கள்..

அதில் நமது நாயகனுக்கு ஏக கடுப்பு.. இப்பொழுதுதான் அனைத்தும் சரியாகி அவனது மணிக்குட்டி மனதார அவனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் இருவரும் ஊர் சுற்றி திரிந்து பேசி மகிழ்வதற்கு நேரம் தராமல் திருமணத்திற்கு முன்பு இருவரும் சந்திக்க கூடாது என்று அவளை அழைத்து சென்று விட்டார்கள்..

அனைவரது காதலையும் வளர்க்கும் அதே கைப்பேசி இவர்களது காதலுக்கும் உதவி புரிந்தது.. தவற விட்ட 10 வருஷத்தை ஈடு கட்டும் விதமாக தினமும் அவனது ஆபீசுக்கு சென்று வந்து இரவில் அவளுடன் வீடியோ காலில் இனி வரும் வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று பேசிவிட்டு.. இறுதியில் வயதை மறந்து 20 வயது வாலிபன் போன்று காதலிக்க கற்று கொண்டே அவளுக்கும் கற்று கொடுத்தான்.. அவனின் ஆசை பேச்சை கேட்டால் பாவையின் அழகு வதனம் சிவக்க வைத்து அதன் பின் தான் அவளை தூங்க விடுவான்.. காதல் மன்னன் பட்டத்தையும் பெற்றுவிடும் ஆர்வத்தில் தீவிரமாக அவதாரம் எடுத்திருக்கும் ரிஷிவந்தியன் ….

நால்வரும் ஆவலுடன் எதிர்பார்த்த திருமண நாளும் அழகாக விடிந்தது..

எம்பெருமான் ஈசனின் கோவிலின் அருகே உள்ள பிரம்மாண்டமான திருமண மண்டபம் திருமணத்திற்கான சகல அம்சங்களையும் பெற்று மக்களின் சலசலபினால் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டது..

இரண்டு திருமணம் ஒன்றாக நடக்க இருப்பதால் மீனாட்சி குடும்பம் மிகுந்த பரபரப்போடு திருமணம் நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வருபவர்களை வாசலில் நின்று மீனாட்சி வரவேற்றார்..

சரியாக முகூர்த்த நேரம் வந்ததும் ஐயர் உச்சரித்த மந்திரத்தை கிருஸ்ணா பொறுமையாக உச்சரித்தான்.. ரிஷியோ பொறுமையின்றி எப்பொழுது அவனது மனதின் ராணியை பார்ப்போம் என்ற ஆவலில் போனா போகுது போடா என்னும் ரீதியில் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு துளசி வரும் வழியையும் பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனின் ஆசையையும் ஆவலையும் ஐயர் புரிந்து கொண்டாரோ என்னவோ அவனின் தவிப்பை போக்குவதற்கு உரிய வார்த்தையான ” மணப்பெண்களை அழைச்சிண்டு வாங்கோ. ” என்று ஐயர் கூறி அவனது கண்ணிற்கும் காதுக்கும் அமைதியையும் சாந்தத்தையும் கொடுத்து அவனின் தவிப்பை அடக்கினார்..

ஐயர் கூறிய சிறிது நேரத்தில் மணப்பெண்ணுக்கே உரிய சர்வ அலங்காரத்தோடு அடிமேல் அடிவைத்து தலைகுனிந்து வெண்ணிலவே தரையில் இறங்கி நடைபயிலுதோ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பதுமையாக பேதைப் பெண்கள் இருவரும் நடந்து வந்தார்கள்..

 ரிஷியோ அவனின் நாயகியின் மெதுவான நடையைப் பார்த்து அவனது கண்கள் சற்றே கோபம் கொண்டது..

 அவனது கோபத்தை சற்று தணிக்கும் விதமாக பெண்ணவள் அவன் அருகில் வந்தமர்ந்தாள்..

 தூரத்தில் வரும் போது முழுமையாக அவளது அழகை பருக முடியாத தனது இயலாமையை போக்கும் விதமாக அருகில் இருக்கும் அவளின் முக அழகையும் அக அழகையும் சற்று நேரத்தில் அவனுக்கே சொந்தமாகப் போகும் பாவையை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனின் அட்டகாசத்தை கண்கொண்டு பார்க்க முடியாமல் ஐயரே கோபம் கொண்டு ” க்கும் க்கும் ” என்று தொண்டையை செருமி அவரின் இருப்பை அவனுக்கு தெரியப்படுத்தினார்..

 அதை உணர்ந்த அவன். கோபம் கொண்டு அவரை சற்று முறைத்துவிட்டு அவர் தொடர்ந்து கூறிய மந்திரத்தை அவனும் அவளும் இணைந்து கூறி அவளை அவனுக்கானவளாக நிரந்தரமாக சொந்தமாக்கும் நேரத்தை துரிதப்படுத்தினான்..

 இவ்வளவு காலம் அவனையும் அவனது மனதையும் ஒரு நிலை இல்லாமல் தவிக்க வைத்த மங்கையை இன்னும் சற்று நேரத்தில் கை பிடிக்க போகின்றோம்.. என்ற ஆனந்தத்தில் மிதந்தான் அவன்..

 அவன் எதிர்பார்த்த நேரமும் வந்தது. அவனின் உறவுக்காரப் பெண் திருமாங்கல்யத்தை அங்கு கூடியிருந்த பெரியவர்களின் ஆசியை பெற்று ஐயரிடம் ஒப்படைத்தாள்..

 ஐயரும் அதைவாங்கி இரு மணமகன்கள் கையில் கொடுத்து. ” இந்தாங்கோ பிடிங்கோ திருமாங்கல்யத்தை மண பெண்ணுக்கு கட்டுங்கோ ” என்றார் சற்றே சிடுசிடுவென்ற முகத்தோடு. ஏனென்றால் அவரும் எத்தனையோ திருமணங்கள் செய்து வைத்திருக்கிறார். ஆனால் இந்தத் திருமணம் போன்றும் இந்த மணமகன் போன்றும் அவருக்கு எதுவிதமான தொல்லைகளும் இதுவரை இருந்ததில்லை.

 அவனும் ஆசையோடு திருமாங்கல்யத்தை கையில் வாங்கி அவளது முகத்தைப் பார்ப்பதற்காக இடுப்பில் கிள்ளினான். ” ஸ் ஆஆஆஆ” என்று மெதுவாக சத்தமிட்டாள்.

 தலைநிமிர்ந்து அன்று கனவில் காணாத மணவாளனை இன்று பார்த்து கண்ணடித்த துளசியை இடுப்பை கிள்ளி முகம் சிவக்க வைத்து கண்களாலேயே அவளிடம் சம்மதம் பெற்று பத்து வருட தவத்தை அவளது கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்து போக்கிக் கொண்டான்..

இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் முடிந்ததும் அடுத்தடுத்து அவர்களுக்கான சடங்குகள் ஆரம்பமாகியது..

 சடங்குகள் முடிந்ததும் ரிஷியின் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாததால் மீனாட்சியின் குடும்பமே அவனுக்கும் சேர்த்து அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார்கள்..

 விஜியும் கிருஸ்ணாவும் விஜியின் வீட்டிற்கும் துளசியும் ரிஷியும் இரு பெண் குழந்தைகளுடன் மீனாட்சியின் வீட்டுக்கு சென்றார்கள்..

 துளசி கழுத்தில் மஞ்சள் தாலி மின்ன நெற்றி வகிட்டில் அவள் சுமங்கலி என்பதை ஊருக்கே எடுத்து காட்டும் விதமாக குங்குமப் பொட்டும் இட்டு மனம் நிறைந்த மங்கையாக அவளது நாயகனுடன் கைகோர்த்து இரு பெண் குழந்தைகளையும் முன்னிறுத்தி மீனாட்சி ஆரத்தி எடுக்க இருவரும் வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் சென்றார்கள்..

 மீனாட்சி மீராவை போன்று நிஷாவையும் குழந்தைக்கு அவளின் பெற்றோர் மற்றும் பாட்டி இவர்களின் பாவங்களில் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதை உணர்ந்து குழந்தையை குழந்தையாகவே பார்த்து ஒரே மாதிரியாக அரவணைத்து சேர்த்துக்கொண்டர்..

 அவளும் தாயின் சொந்தத்தோடு இணைந்து ஐந்து வருடமாக தாயின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்ததை ஈடு கட்டுவதற்காக துளசியுடன் சுற்றி திரிந்தாள்..

விஜியின் வீட்டு ஆட்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி எந்தவித தொந்தரவும் இல்லாமல் இந்தத் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு பூரண ஒத்துழைப்பை கொடுத்து இருந்தார்கள்..

மீண்டும் துளசியும் ரிஷியும் அவர்களின் வீட்டிற்கு செல்வதற்கு மீனாட்சி அவர்களை அங்கே கொண்டு விட்டு விட்டு அவரின் வீட்டிற்கு வந்தார்..

 அதன் பின் வரும் மகனையும் மருமகளையும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து அவர்களுக்காக பாலும் பழமும் கொடுத்து அவர்களையும் மகிழ்ச்சியோடு கவனித்தார்..

 இந்த திருமண விஷயம் எதிலுமே திலகவதியை யாரும் அழைக்கவும் இல்லை.. அவரும் வர முயற்சி செய்யவும் இல்லை.. அவர் முன்பிருந்த அதே அறையில் ஒரு நர்ஸ் உதவியோடு இருந்து கொண்டார்..

 அன்று துளசி அதிகாலையில் கண்ட கனவு இன்று அப்படியே அவளுக்கு நிறைவேறிவிட்டது.. அந்த பூரிப்பில் அவள் இன்னுமும் நடந்தவற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒருவித பரவச நிலையிலேயே இருந்தாள்..

திருமணம் முடித்தவர்களுக்கு அன்று இரவு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டது..

 அறைக்குள் ரிஷி காத்திருக்க துளசி பால் சொம்புடன் தலை குனிந்து முகத்தில் நாணத்தை ஏந்தி உள்ளே வந்தாள்..

 ரிஷி எழுந்து வந்து பால் சொம்பை வாங்கி அருகே இருந்த மேசையில் வைத்துவிட்டு.. துளசியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று கட்டிலில் அருகே அமர வைத்தான்..

” மணிக்குட்டி நம்மளோட வாழ்க்கை வேதனையில் ஆரம்பித்து அதை நாம சோதனையோடு கடந்து இப்போ சாதனையாக மாற்றி வாழ்க்கையில் இணைந்து விட்டோம்.. இனி வரும் இளம் தம்பதியருக்கு நமது வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.. துன்பங்கள் வந்தால் அதை நினைத்து சோர்ந்து போகாமல் கடந்தால்தான் இன்பத்தை எட்ட முடியும்.. ” என்று சிறிது நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு.. அன்று இருவரும் அறியாமல் ஒன்றிணைந்த தாம்பத்திய வாழ்க்கையில் இன்று அறிந்து தெரிந்து கொள்வதற்கு அடி எடுத்து வைத்தார்கள்..

 அவனது மணிக்குட்டி மேல் அவன் எவ்வளவு காதல் கொண்டு இருக்கிறான் என்பதை ஒவ்வொரு செயலிலும் காட்டினான்..

 சேலை விலகிய சிற்றிடையில் மீசை உரசி அவளை நானம் கொள்ளச் செய்து தாம்பத்தியத்தின் ஆரம்ப பாடத்தை அவனும் கற்று அவளுக்கும் கற்றுக் கொடுத்தான்..

அங்கே அழகான ஒரு தாம்பத்தியம் அரங்கேறியது..

 இதழும் இதழும் சண்டையிட்டு மோக சத்தங்கள் எழுப்பி அவர்களது தாம்பத்தியத்தை இன்னும் மெருகேற்றி அவ் அறையை நிறைத்தது..

 பெண்ணவள் நாணம் கொண்டு மன்னவனுக்கு அவளை முழுதாக விருந்து படைத்தாள்..

 தாம்பத்யத்தில் இருவரின் பங்கும் சரிசமமாக இருந்தால் யாருக்கும் தோல்வியின்றி நீ பெரியவன் நான் பெரியவள் என்ற பாகுபாடின்றி வாழ்க்கை சரிசமமாக செல்லும்..

வாழ்க்கையில் ஒரு மனிதன் தோற்கும் முதலிடம் தாம்பத்தியமாக இருந்தால் அவனது வாழ்க்கையில் தொட்டது அனைத்தும் தோல்வியிலேயே முடியும்..

 இல்லாளின் மகிழ்ச்சியான முகத்தை பார்த்துவிட்டு எந்த ஒரு ஆண் வெளியே சென்றாலும் அவனுக்கு அன்றைய நாளும் அவர்களது வாழ்க்கையும் எப்பொழுதும் வசந்தம் விசியபடி இருக்கும்..

முப்பத்தி எட்டு வயதில் அனைத்தையும் ஓரளவிற்கு தெரிந்துகொண்ட ரிஷியும் அவனும் இன்பத்தைப் பெற்று அவனது மணிகுட்டிக்கும் இன்பத்தை சமமாக கொடுத்து அவர்களது அன்றைய தாம்பத்தியத்தை முடித்துக் கொண்டு வாடிய கொடியாக இருந்த அவளை உரமேறிய மார்பில் சாய்த்து இருவரும் துயில் கொண்டார்கள்..

கிருஷ்ணாவின் வீட்டில் அவனது அறையில்.. அவனது மனைவி விஜி

நடிப்புக்கு என்றாலும் அப்பொழுது அவளை படுக்கைக்கு அழைத்த கோபத்தில் இன்று சந்தோஷ்க்கு எந்த ஒரு சம்பவமும் நடக்காமல் காயப் போட்டு விட்டாள்..

அவனும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டான்.. இப்பொழுதும் விஜி மனம் இரங்காமல் கட்டிலில் ஒரு ஓரத்தில் போய் படுத்து விட்டாள்.. அசைவம் தான் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் சைவமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காதல் மனைவியை அணைத்துக் கொண்டு உறங்கி விட்டான்..

அடுத்த நாள் காலையில் இரண்டு தம்பதிகளும் மீனாட்சியின் வீட்டில் விருந்திற்காக ஒன்று இணைந்தார்கள்..

 அன்று நாள் முழுவதும் ஒன்றாக உணவு உண்டு மகிழ்ந்து விளையாடி பீச்சுக்கு சென்று கொண்டாடித் தீர்த்தார்கள்..

 அன்று இரவு ஈஸ்வரமூர்த்தி மீனாட்சி தம்பதியர் அடுத்த நாள் காலை புது தாம்பதிகள் ஹனிமூன் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அதற்குரிய டிக்கெட்டை ரிஷி மற்றும் கிருஸ்ணா இருவரிடமும் கொடுத்து அடுத்த பத்தாவது மாதத்தில் அவர்களுக்கு பேரக் குழந்தையை பெற்றுக் கொடுக்குமாறு ஆசீர்வதித்தார்கள்..

 அதைப் பெற்றுக்கொண்டு கிருஸ்ணா தம்பதியர் அவர்களது அறைக்கு சென்றதும்.. மீனாட்சி துளசி மற்றும் ரிஷியை வைத்து.. ” ராமன் கைகேயியின் சூழ்ச்சியால் 16 வருஷம் வனவாசம் மேற்கொண்டர்.. பஞ்சபாண்டவர்கள் சகுனியின் சூழ்ச்சியால் 13 வருஷ வனவாசமும் ஒரு வருட அஞ்ஞாதவாசமும் இருந்தார்கள்..ஆனானப்பட்ட கடவுள் அவதாரங்களுக்கே அப்படி ஒரு நிலை என்றால் சாதாரண மனிதர் ஆகிய நமக்கு பல சூழ்ச்சிகளால் பிரிவுகள் கஷ்டங்கள் வரத்தான் செய்யும்.. இருவரும் அதை கடந்து இப்போ அற்புதமான வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள் .. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து இனிவரும் வாழ்க்கையை சொர்க்கமாக மற்றுவது உங்க கைலதான் இருக்கு.. துளசி மா மாப்பிள்ளையை புரிஞ்சிட்டு அவரோட வேலைபளு தெரியும் அதற்கேற்ற மாதிரி என்னோட பொண்ணு நடந்துக்கணும்.. இனி நீதான் மாப்பிள்ளைக்கு அம்மா அப்பா எல்லாமாய் இருந்து அவரை பார்த்துக்கணும்.. ” என்று மகளின் தலையை தடவி ஒரு தாய் ஒரு மகளுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்தார் மீனாட்சி..

அடுத்த நாள் காலை அவர்களுக்கு குதூகலமாக ஆரம்பித்தது..

 இரு தம்பதிகளும் முதலில் ஊட்டிக்கு ஹனிமூன் சென்றார்கள்.. அடுத்து அடுத்து அவர்களது ஹனிமூன் வேறு வேறு இடங்களுக்கு திட்டமிடப்படும் என்பது வேறு கதை..

 மூன்று நாட்கள் அதிகம் வெளி உலகம் காணாத அவனது மனைவிக்கு அனைத்தையும் சுற்றிக் காட்டி தாம்பத்யத்தையும் போதும் போதும் என்கிற அளவுக்கு திகட்டாத இன்பத்தை பெற்றுக்கொண்டார்கள்.. 

 சந்தோஷ் ஒருவழியாக ஹனிமூன் சென்று அவனது சரிபாதியை சமாதானப்படுத்தி தாம்பத்தியத்தில் முக்குளித்து விட்டான்.. விழுந்தவன் வாழ்நாட்களில் எழ விரும்பாமல் அவளின் நாணத்தில் சிவக்கும் வசனத்தில் சிக்கிக் கொண்டான்..

 ஹனிமூன் முடிந்து அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வாங்கிய பொருட்களையும் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொடுத்து விட்டு சந்தோஷ் மற்றும் விஜி அவர்களது இன்ஸ்பெக்டர் டியூட்டியை பார்க்க சென்றுவிட்டார்கள்..

 ரிஷி வீட்டில் தனது மனைவி குழந்தைகள் தங்கை வந்தன என்று அவர்களையும் கவனித்துக் கொண்டு அவனுக்கு விடுமுறை அளித்த ஆறு மாதத்தில் அவனது பிசினஸை இன்னமும் வளர்ச்சியடைய வைக்க பகலில் அவனது கவனத்தை அதில் செலுத்தி விட்டான்.. இரவில் மணிக்குட்டியின் மடியில் கிடப்பது வேறு கதை.. அவளும் ஆசையாக மாமா என்று அழைத்து அவனை அவளுக்குப் பின் சுற்ற வைப்பாள்..

அவனது மணிக்குட்டி மட்டும் மாமாஆஆஆஆ என்று அழைத்தால் உடல் தூக்கி போடாமல் அவனுக்கு ஜில் ஜில் நினைவுகள் மட்டுமே வரும்..

 மீராவின் பிறப்பு அவளது வளர்ச்சி எதையும் பார்த்து அனுபவிக்காத ரிஷி தற்போது மூன்று மாதங்களாக அவனது மணிக்குட்டி குழந்தை உண்டாகி இருக்கும் செய்தியை அறிந்ததிலிருந்து அவளைத் தாங்கிக் கொண்டிருக்கிறான்.. துளசியும் காலை நேர உபாதைகளை கணவனின் அருகில் சற்று மறந்து அவனது அன்பில் அந்த சிறு சோர்வையும் கடந்து மகிழ்ச்சியாக இருந்தாள்..

ஒவ்வொரு மாதத்திற்கும் ரிஷியே எந்த வேலை இருந்தாலும் அவளை அழைத்துச் செல்வான்.. அங்கு அவனது குழந்தையின் துடிப்பையும் அசைவையும் பார்த்து பூரித்து மகிழ்ந்து போவான்.. காதல் கணவனின் இந்த மகிழ்ச்சியை நிலைக்க வைப்பதற்கு துளசி இன்னும் எத்தனை குழந்தைகள் வேண்டும் என்றாலும் பெற்றெடுக்க தயாராக இருந்தாள்..

 இதோ அவனுக்கு அளித்த விடுமுறை காலம் ஆறு மாதங்கள் கடந்ததும் அவனது போலீஸ் வேலைக்கு மீண்டும் இணைந்து விட்டான்.. இனிவரும் காலங்களிலும் அவனது வேட்டையாடல் தொடர்ந்து சென்னை மக்களின் சகலவிதமான பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பான்..

 இதோ அவனது குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் அணுவணுவாக ரசித்து அன்றைய நாள் ஆரம்பித்து முடியும் தருணத்திலும் மனைவியின் மணிவயிற்றில் குழந்தைக்கு முத்தமிட்டு அதை தாங்கியிருக்கும் மனைவிக்கும் இதழ் முத்தம் இட்டு அணைத்தால் மட்டுமே அவனது நாள் ஆரம்பித்து நிறைவாக முடிவடையும்..

 ஒன்பதாவது மதத்தில் ஊரை க்கூட்டி சீமந்தம் செய்தான் ரிஷி.. தனது குழந்தையை தாங்கி நிற்கும் மனைவியின் சிவந்த முகத்தையும் சந்தனத்தால் மிளிர்ந்த அழகையும் அவனது மனதிலும் புகைப்படமாகவும் எடுத்து பத்திரப்படுத்தினான்..

 சீமந்தம் நடந்த மூன்றாவது நாள் ரிஷியின் ஆசை புதல்வன் தாயின் வயிற்றை விட்டு தந்தையைக் காண வெளியேறிய அவசரத்தால் துளசிக்கு வலி ஏற்பட்டது.. வந்தனா அவளது ஆறு மாத பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு துளசியின் அறைக்கு அவளது சத்தம் கேட்டு சென்றாள்..

துளசி பிரசவ வலியில் துடிப்பது தெரிந்துகொண்டு சத்தமிட்டு மீனாட்சியை அழைத்து அதன் பின் அவளது அண்ணனுக்கும் அழைப்பு விடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி கூறிவிட்டு வைத்தாள்..

மீனாட்சியும் வந்தனாவும் கைத்தாங்கலாக அழைத்து வந்து துளசியை காரில் ஏற்றி டிரைவரின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.. துளசியின் பலமே அவள் கணவன் தான் என அறிந்த ரிஷி விரைந்து மனைவியை சேர்த்திருக்கும் மருத்துவமனைக்கு வந்தான்..

அனைவரையும் அதிக நேரம் காக்க வைக்காமல் ரிஷியின் தவப்புதல்வன் தாயின் வயிற்றிலிருந்து அழுகை சத்தத்தோடு வெளியே வந்தான்..

மகன் என்று அவனின் கையில் குழந்தையை கொடுத்ததும் அதை அவனால் வாங்க தெரியாமல் தடுமாறி போனான்..

 குழந்தை பிறந்த நற்செய்தியை கேட்ட கிருஸ்ணா விஜி தம்பதிகளும் அங்கே வந்து சேர்ந்தார்கள்..

விஜிக்கு இன்னும் குழந்தை இல்லை.. அதை நினைத்து அவள் கவலைப்படவும் இல்லை.. சந்தோஷ் தான் அவனின் ஆட்டம் போதவில்லை இன்னும் அதிகமாக ஆடவேண்டும் என்று மனைவியின் அருகே சென்று அடிவாங்குவது வேறு கதை..

 தினமும் பிஸினஸ் பார்த்துக்கொண்டு ஏசிபி ஆக மக்களையும் காத்து கொண்டு அதற்கு சரிசமமாக அவனது குடும்பத்தையும் கவனித்து வருகிறான் ரிஷி வந்தியன்..

 தினமும் மகனின் வளர்ச்சியையும் பார்த்துக்கொண்டு அவனது மணிக்குட்டியுடனும் இன்பமாக வாழ்ந்து மகள் மீரா மற்றும் நிஷாவையும் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான்..

 இதோ அவனது மகன் சிவராஜ் அவனது தாய் சிவகாமி மற்றும் வளர்ப்பு தாய் தகப்பன் ராஜேஸ்வரி ராஜேந்திரனின் நினைவாக சிவராஜ் என்னும் பெயரைச் சூட்டினான்..

 இன்று ஒரு வயது பிறந்தநாளை அவனது திருமணத்தை விட விமர்சையாக ஊரை அழைத்து ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து அவனால் காப்பாற்றப்பட்ட அனைத்து பெண்களும் குழந்தைகளையும் காப்பகத்தில் இருந்து அழைத்து வந்து அனைவருக்கும் உடை மற்றும் உணவும் அளித்து மகிழ்ச்சியாக கொண்டாடினான்..

அனைவரது ஆசி மற்றும் வாழ்த்தும் அந்த குடும்பத்தை என்றும் துன்பம் அண்டாமல் காக்கும்..

துளசி ரிஷிவந்தியன் தம்பதிகளுக்கு இனி தொட்டது அனைத்தும் ஜெயமே…

          

             ———சுபம்??——–

.

 

Advertisement