Advertisement

 நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை 19..

 ரிஷி துளசியுடன் பேச வேண்டும் என்று கூறிவிட்டு அவனது அறைக்கு சென்று துளசிக்காக காத்திருந்தான்..

மீனாட்சிக்கு துளசி மகள் என்று தெரிந்ததும் அவளது வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பொறுப்புடன் அவளிடம் பேசி ரிஷியின் அறைக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தார்…

 கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்ற துளசி அவனை கட்டிக்கொண்டு ஓவென்று கதறி அழுதாள்..

ரிஷியும் துளசியை அணைத்து ஆறுதல் படுத்தி கட்டிலில் அவளை அமரவைத்தான்.. சில விஷயங்களைப் பேசி தெளிவு படுத்த வேண்டி உள்ளதால் அவளின் அழுகையை கட்டுப் படுத்த கூறி அவளை தேற்றிவிட்டு பேச தயாறானான்..

 துளசியின் கையை அவனது கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு பேசினான் ரிஷி.. ” மணிக்குட்டி என்னை பாருடா 18 வயசுல எப்படி உன்னைப் பார்த்தேனோ அதே மாதிரி இப்பவும் அந்த சந்தோஷத்தோட உன்னை பார்க்கனும்னு ஆசையா இருக்குடி.. என்னைக்கு உனக்கு நான் சடங்கில் மாமா முறை செய்தேனோ அப்பவே நீ இங்கே என்னோட மனசுக்குள்ள வந்துட்டடி.. நீ ரொம்ப சின்ன பொண்ணு. உன்னோட மனசை நான் கெடுத்திட கூடாதுன்னு நினைத்து தள்ளி இருந்தேன்.. ஐந்து வருஷம் கழிச்சு உனக்கு 18 வயசு ஆக இரண்டு மாதம் இருக்கும் போது கூட அம்மா என்கிட்ட வந்து உன்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டாங்க. அப்போ நானும் அம்மாவும் சேர்ந்து உனக்கு 20 வயசு ஆகட்டும் அம்மா. அப்போ நானே உன்னிடம் பேசுறேன் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு என்று அம்மாகிட்ட சொன்னேன்.. உன்னோட வயசு பார்த்து நான் தள்ளி இருந்தது தப்பா போயிடுச்சா?. மணிக்குட்டி அதனால தான் நாம பிரிஞ்சிட்டோமா?… இதுல என்னோட தப்பு என்ன இருக்குன்னு எனக்கு தெரியல. ஆனா நான் உன்னிடம் சொல்லி இருக்கலாம். சொல்லாம நான் வெளியே போனது என்னோட தப்பு தானே.. என்ன மன்னிச்சிடு மணிக்குட்டி.. ” என்றான். ரிஷி இவ்வாறு சொல்லும்போது அவனது முகத்தில் வேதனையின் சாயலைக் பார்த்து அவளால் தாங்கிக்கொள்ள முடியாமல் மீண்டும் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் துளசி..

 அவளது அணைப்பை சற்று தளர்த்தி மீண்டும் பேசினான்.. ” அப்பா உன்னை தவறாக சொல்ல கூடாதுன்னு நினைச்சு உனக்கு கல்யாணம் முடிந்துவிட்டதா சொன்னார்.. நானும் ரொம்ப வேதனை பட்டேன்.. எங்க நீ எனக்கு கிடைக்காமல் போய்டுவியோன்னு பயந்தேன்.. அப்புறம் இதுதான் காலத்தோட முடிவுனு நினைத்து மனசை தேற்றிக்கொண்டு என்னோட கடமையை நோக்கி ஓட முயற்சி செய்தேன்.. ஆனா என்னால முடியலை.. எங்க நான் உன்னை தேடப் போய் உன்னோட கல்யாண வாழ்க்கையில் நான் யார் என்ற கேள்வி வந்து அதனால் உனக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்து உன்னை தேடாமல் விட்டேன்.. அப்பா இருக்கார். தானே அவர் நல்ல பையனா என்று பார்த்து விசாரிச்சு சொன்னதுக்கு அப்புறம் தான் பார்வதியம்மா கல்யாணம் முடித்து கொடுக்க சம்மதித்து இருப்பாங்கனு நினைத்து விட்டேன்.. காலத்தின் சூழ்நிலையோ..? இல்ல இவங்களோட சூழ்ச்சியோ. பத்து வருஷம் பிரிந்து நமது வாழ்க்கையையே இழந்து இருக்கோம்.. எனக்கு உன்னோட சேர்ந்ததும் தெரியாது. நமக்கு மீரா என்று ஒரு குழந்தை பிறந்ததும் தெரியாது. என் வாழ்கை பயணம் பிசினஸ் மற்றும் அண்டர் கிரவ்ண்ட் மிஷன் என்று என்னோட இந்த பத்து வருஷ வாழ்க்கையும் ரொம்ப பிஸியாகவே போயிடுச்சு. அதனால எனக்கு இது தெரியாததால என்னால கடந்துவர முடிஞ்சிது.. ஆனா நீ பார்வதி அம்மாவும் இல்லாத நிலைமையில் மீராவையும் சுமந்துகிட்டு எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருப்பன்னு என்னால உணர முடியுது.. சொல்லு மணிக்குட்டி எப்படி சமாளிச்ச?.. ” என்றான் ரிஷி..

 கடந்து சென்ற வாழ்க்கையி கஷ்டத்தால் அவன் அடையும் வேதனையை எவ்வாறு குறைப்பது என தெரியாமல் தவித்து இருந்தவள் அவளின் அனைத்து துன்பங்களையும் அவனுக்கு கூறி இன்னும் வேதனை படுத்த விரும்பாமல் அதை தவிர்க்கவே நினைத்தாள் துளசி..

 அவள் அதைத் தவிர்க்க நினைக்க அவன் கட்டாய படுத்தினான் கூறுமாறு..

 துளசியும் அவளைப் பற்றி கூற ஆரம்பித்தாள்.. ” நீங்க வீட்டை விட்டு போனதும் மூணு மாசத்துலே எனக்கு வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சது.. தேவியும் தெரிஞ்சிட்டு எல்லார் முன்னாடியும் என்ன அவமானப்படுத்தி பார்வதி அம்மாவோட வீட்டைவிட்டு அனுப்பிட்டார்.. அப்புறம் அவங்க சொந்த ஊருக்கு போணோம்.. அங்க போய் இரண்டு மாதத்திலேயே அவங்க இறந்துட்டாங்க.. எனக்கு அங்க யாரையுமே தெரியல அதனால நான் திரும்பவும் சென்னைக்கு வந்துட்டேன்.. இங்க வந்ததும் எனக்கு அங்க போக விருப்பம் இல்லை.. தேவி திட்டினது என் மனசுல ஆழமா பதிஞ்சு அதிக வேதனை குடுத்துது.. என்ன அவமானப்படுத்தி அனுப்பின வீட்டுக்கு எனக்கு போக விருப்பம் இல்லை.. அப்புறம் என்னோட பத்தாம் வகுப்பு வரையில் ஒண்ணா படிச்ச கலா வீட்டுக்கு போனேன்.. அவங்க ரொம்ப ஏழ்மை பட்டவங்க.. அப்படி இருந்தும் என்ன அரவணைத்துக் கொண்டாங்க.. அவங்களோடு சேர்ந்து நானும் அங்க இருக்கிற வசதியான ஒரு வயது போன அம்மா வீட்டுக்கு அவங்களை பார்த்துக் கொள்வதற்கு வேலைக்கு போனேன்.. அப்படியே மீரா பிறந்ததும் கலாவோட அம்மா தான் எனக்கு எல்லாம் செஞ்சு என்னையும் மீராவையும் பாத்துகிட்டாங்க.. மீராக்கு ஐந்து வயசு ஆகவும் அந்த அம்மாவும் இறந்துட்டாங்க.. கலா கல்யாணம் முடிச்சு வந்த இடத்துக்குத்தான் நானும் அவளுக்கு பக்கத்துல ஒரு வீட்டை பார்த்து வந்தேன்.. அப்புறம் கலா வீட்டுக்கார் தான் ஆர் வி நிறுவனத்தில் எனக்கு சமையல் வேலையை வாங்கித் தந்தார்.. ராஜேஸ்வரி அம்மா உதவி மூலமா எனக்கு கிடைச்ச சமையல் கலை மூலம் அந்த நிறுவனத்தில் வேலை கிடைத்து.. இந்த 5 வருத்தத்தையும் பொருளாதார நெருக்கடி இல்லாமல் மீராவை வளர்க்க உதவியது.. அந்த நிறுவனத்தோட முதலாளி அங்க வேலை செய்ற கஷ்டப்பட்டவங்க குழந்தைகளை படிக்க வைப்பாங்க.. அப்படித்தான் மீராவும் படிக்க அவங்களே பணம் கட்டி உதவி செய்து அந்த ஸ்கூல்ல சேர்த்தாங்க.. இப்பவும் மீரா அந்த ஸ்கூல்ல தான் படிக்கிறாள்.. இப்படித்தான் எனக்கு இந்த பத்து வருஷம் போச்சு.. ” என்றாள் துளசி..

 துளசியின் தலையை பிடித்து ஆட்டிய ரிஷி ” அடி மண்டு மணிகுட்டி நம்மளோட கம்பெனிதான் ஆர் வி கம்பெனி என்று உனக்கு தெரியாதா?.. 18 வருஷம் இங்கே இருந்து இருக்க நீ நம்ம கம்பெனியை பத்தி உனக்கு ஒன்னுமே தெரியாதா?.. இவ்ளோ பக்கத்துல தினமும் நீ என்கூடவே இருந்து இருக்க ஆனா அது கூட எனக்கு தெரியாமல் நான் தான் மடையணா இருந்து இருக்கேன்.. அப்போ மீரா பாப்பாவை நான் தான் படிக்க வைச்சிருக்கேனா?.. என் பொண்ணுக்கு இந்த அளவிற்கு செய்ய முடிஞ்சதே எனக்கு மனசுக்கு நிம்மதி.. உன்னோட சமையல் பற்றி எல்லாருமே ரொம்ப ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசுவாங்க.. சூர்யா கூட நிறைய டைம் எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து தந்திருக்கான். ஆனா நான்தான் சாப்பிட்டதில்லை.. ஒரு டைம் உன்னோட சமையலை சாப்பிட்டு இருந்தேன் என்றால் அந்த வித்தியாசமான ருசியை வைத்து உன்னை அடையாளம் கண்டு இருப்பேன்.. அது கூட என்னால் முடியாம போயிருச்சு.. இப்படியே அவங்களும் காலமும் சேர்ந்து நம்மளை பத்து வருஷம் பிரித்து வைக்கணும் என்று முடிவு செய்து இருக்கு அதை யாராலயும் மாத்த முடியாது.. என்ன பத்து வருச வாழ்க்கைதான் வீணா போயிடுச்சு..” என்று நினைத்து பெருமூச்சு விட்டான் ரிஷி..

 இன்னும் நெருங்கி ரிஷியின் அருகே சென்று அவனது தலையைக் கோதி ஆறுதல் படுத்தி விட்டு.. ” நீங்க பத்து வருஷம் வீணா போயிடுச்சு என்று நினைச்சு கவலைப் படாதீங்க.. நீங்களும் உங்களுடைய டீம் சேர்ந்து இவ்வளவு பெரிய ஒரு காரியம் பண்ணி இருக்கீங்க என்று உங்களுக்கு தெரியுமா?…. என்னை மாதிரி தனியா இருக்குற பொண்ணுங்க மற்றும் குழந்தைகள் என அனைத்து பொண்ணுங்களும் இப்ப நீங்க வந்த ஐந்து வருஷத்துக்குப் பிறகு நிம்மதியா சந்தோஷமா வேலைக்கு போறவங்க. ஸ்கூல் போறவங்க. காலேஜ் போறவங்க. எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்த்துட்டு நிம்மதியா இருக்காங்க.. என்றால் அதுக்கு காரணம் நீங்க.. இங்க நீங்க வருவதற்கு முன்பு எனக்கு தெரியும் இந்த சென்னை எப்படி இருந்துச்சுன்னு.. ஒவ்வொரு தாயும் அவங்க மனசுல பயத்தோடுதான் பொண்ணுங்கள காலேஜ் ஸ்கூல் அனுப்புவாங்க.. தினமும் ஒரு கடத்தல் ஒரு கொலை நடக்கும்.. அதிக பயத்தோடு தான் நான் வேலைக்கு போய் வருவேன்.. திடீரென்று கொஞ்சம் கொஞ்சமா இந்த கடத்தல் குறைய ஆரம்பித்தது.. காரணம் யார் என்ன எதுவுமே தெரியாது?. ஆனா மனசுக்கு கொஞ்சம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருந்தது.. ஆனா அது உங்களால் என்று தெரிந்ததும் எனக்கு அப்படி ஒரு சந்தோசம்.. இப்ப நீங்க உங்க அம்மாவுக்கும் வளர்ப்பு அம்மாவுக்கும் மட்டும் மகன் இல்லை.. நீங்க காப்பாற்றி விட்ட பொண்ணுங்களோட எல்லா அம்மாவுக்கும் நீங்க மகன்தான்.. இனி பொண்ணுங்க பாதிக்கப்படாமல் நிம்மதியா இருப்பாங்க அப்படின்னா இந்த சென்னையில இருக்கிற ஒவ்வொரு தாய்க்கும் நீங்க மகன்.. எவ்வளவு பெரிய ஒரு விஷயத்தை சாதாரணமாக செஞ்சிட்டு அதை வீணான டைம் என்று சொல்லாதீங்க.. இப்போ என்ன நம்ம காதலுக்கு சாட்சியாக நம்மளுக்கு பத்து வயசுல மீரா இருக்கா.. இனி விட்ட வாழ்க்கையை சந்தோஷமா வாழ ஆரம்பிப்போம்.. கவலையை விட்டு கல்யாணத்துக்கு உரிய வேலையை பாருங்க.. ” என்று அவனுக்கு சம்மதம் கூறிவிட்டு அவனது கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து அங்கிருந்து வெளியேறி விட்டாள் துளசி..

அவளை தொடர்ந்து ரிஷியும் வெளியே வந்து திலகவதி மற்றும் தேவியின் குற்றங்களை அவன் எப்படி கண்டுபிடித்தான் என கூற ஆரம்பித்தான்.. ” மீராவை ஜெகனின் ஆட்களிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தேன்.. நிஷா மூலமா அவள் அந்த ஸ்கூல்ல படிக்கிறது தெரிந்ததும்.. அவங்களோட பேசி மீரா அம்மாவை — இந்த மருத்துவமனைக்கு சீக்கிரம் வரச் சொல்லுங்க என்று கூறினேன்.. அப்புறம்தான் துளசி அங்க வந்தாள்.. பத்து வருஷத்துக்குப் பிறகு துளசியை அப்போதான் முதன்முதலில் பார்த்தேன்.. ” என்றான் ரிஷி..

 அவன் பேசியதை இடைமறித்து துளசி பேசினாள்.. ” மீராவை கடத்துவதற்கு ஒரு மாசத்துக்கு முன்ன நான் உங்களை நிஷாவோட பார்த்தேன்.. அப்பதான் மீரா நிஷா தான் உங்க பொண்ணு என்று சொன்னாள்.. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. என்று நினைத்தேன்.. நீங்க என்னை பார்த்தால் என்னை பற்றி கேட்டு துன்பப்படுவீங்கன்னு உங்களை பார்த்தும் பேசாம வந்துட்டேன்..” என்றாள் துளசி..

 இதற்கு அவனால் என்ன பதில் சொல்வது என்று தெரியமல் பேச ஆரம்பித்தான்.. ” அப்போதான் துளசியை பார்த்தும் துளசி என்னோட பேசாம வேற்று ஆள் போல் ஒதுங்கியே இருந்தாள்.. என்னால துளசியை கஷ்டப் படுத்த முடியலை .. துளசியா வந்து என்கிட்ட பேசட்டும் நாம் பேசப் போய் ஏதாவது பிரச்சனை வந்து விடும் என்று நினைத்து நானும் என்னோட வேலையை பார்த்து ஒதுங்கி இருந்தேன்.. அப்புறம் என்னால தனியாக அவங்கள விட முடியாமல்.. அவங்களை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்.. அப்புறம் தான் துளசியும் மீராவும் தனியாக இருக்கிற விஷயம் தெரியவந்தது.. பாதுகாப்பு இல்லை என்று தெரிந்துகொண்டு ரிஷியாக வீட்டுக்கு வான்னு துளசியை கூப்பிட்டேன் வரவில்லை என்று கூறிவிட்டாள்.. அப்புறம் விக்ரமா அவங்க வீட்டுக்கு பாதுகாப்பு போட்டேன்.. மீரா குணமாகி அதற்குப் பிறகு துளசி கோயிலுக்கு வந்த இடத்தில இதோ இருக்காங்களே உங்க அம்மா அவங்க கோயிலுக்கு வந்து இருந்தாங்க. அப்போ துளசியின் பர்ஸில் இருந்து பார்வதி அம்மாவோட போட்டோ கீழே விழ அதை எடுத்து உங்க திலகவதி அம்மா பார்த்ததும் இது தான் அவங்க பார்வதிக்கு கொடுத்த பொண்ணு.. என்று நினைத்து துளசி இனி உயிரோட இருந்தால் எப்படியாவது உங்களுக்கு அவள் உங்க பொண்ணு என்று தெரிய வந்துடும் என்று பயந்து அவங்க லேடிஸ் கிளப் மூலமா ஒரு ரவுடி பொம்பளைகிட்ட உதவி கேட்டு ரவுடி பயலுகளை விட்டு துளசியை கொல்ல ஏற்பாடு பண்ணினாங்க.. அப்போ நானும் பையாவா டெல்லிக்கு போறதா எல்லாரையும் நம்ப வைத்து விட்டு ஜெகனிடம் இருந்து காப்பாத்தின பொண்ணுங்கள காப்பகத்தில் கொண்டு சேர்க்க போயிருந்தேன்.. அப்போதான் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் தகவல் சொன்னதும் நான் வாரத்துக்கு இடையில் அந்த லாரி துளசியை இடிச்சிட்டு போய்விட்டது.. துளசியைக் கொண்டு ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு நானும் சந்தோஷம் அங்கிருந்து கோயிலுக்கு வந்து அங்க பக்கத்து கடைகளை பூட்டி இருந்த சிசிடிவி கேமராவில லாரி நம்பர் பார்த்து அவங்களை ட்ரேஸ் பண்ணி பிடித்தபோது.. அவங்கதான் திலகவதியை கை காட்டினாங்க .. திலகவதி தான் இப்படி செய்ய சொன்னதாக சொன்னாங்க.. அப்புறம் தான் சந்தோஷ் கிட்ட உங்க குடும்பத்தை பற்றி கொஞ்சம் விசாரித்தேன்.. அப்போ சந்தோஷ் அவனோட தங்கச்சி பிறந்ததுமே இறந்துடுச்சு என்று சொன்னான்.. அந்தக் குழந்தை பிறந்ததும்.. துளசியோட பிறந்த நாளும் ஒரே நாள்.. எல்லாத்தையும் கோர்த்து பாக்கும்போது எனக்கு சின்ன சந்தேகம் ஒன்று ஏற்பட்டது.. அப்போது தான் அம்மா துளசியைப் பற்றி சொல்லும் போது பார்வதி அம்மா துளசியை வளர்த்தவங்க பெத்தவங்க யாருன்னு தெரியாது என்று சொன்னாங்க.. அது எனக்கு நினைவு வந்ததும்.. பார்வதி அம்மா துளசி கல்யாணம் முடிக்கும் போது கொடுக்கச் சொல்லி என்கிட்ட ஒரு சின்ன பெட்டி ஒன்று தந்தாங்க.. சரி நாம தானே துளசியை கட்டிக்க போறோம்.. நம்மகிட்டயே இருக்கட்டும் என்று நினைத்து நானும் அதை வச்சிட்டு வேலை பிஸியில் மறந்தே போயிட்டேன்.. எல்லாமே ஒன்றுக்குப் பின் முரணாக இருக்கிறது தெரிஞ்சுகிட்டு ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு புரிஞ்சிட்டு அந்த பெட்டியை என்னோட அலமாரியில் இருந்து எடுத்துப் பார்த்தேன்.. அதுல அவங்க துளசிக்கு சேர்த்துவைத்த நகையும் ஒரு சின்ன டைரியும் ஒரு கடிதமும் இருந்தது.. டைரியை எடுத்து படித்து பார்த்தேன்.. அதுலதான் அவங்க எல்லாத்தையுமே தெளிவாக எழுதி வைத்து இருந்தாங்க.. கடிதத்தில் அவங்களுக்கு உடல்நிலை ரொம்ப மோசமா இருப்பதாகவும் அவங்க காலத்துக்குப் பிறகு துளசி தனித்து அனாதையா போய்விடக் கூடாது என்றும் இந்த டைரியை படித்து அவள் யார் என்ற உண்மையை தெரிந்து அவங்க குடும்பத்தோட போய் சேரும் படியும். அவருக்கு கொடுத்த வார்த்தையை திலகவதி மீறி விட்டதாகவும்.. சிறு வயதிலிருந்து துளசி கஷ்டத்திலேயே வளர்ந்ததாகவும். இனியாவது அவள் குடும்பத்துடன் இணைந்து மகிழ்ந்து சந்தோஷமாக இருக்கும் படியும் கூறிஇருந்தார்.. எனக்காவது துளசி கல்யாணம் முடிஞ்சிட்டா என்று தெரிந்ததும் அதை நினைவு வந்து இருந்தா அவ உங்களுக்கு மக்களாவது பத்து வருஷத்துக்கு முன்னே வந்து சேர்ந்திருப்பாள்.. அவளுக்கு இந்த கஷ்டமே வந்திருக்காது.. எல்லாமே காலத்தின் விதி நானும் துளசியும் இவ்ளோ கஷ்டப்பட்டு சேரணும் என்று இருக்கு அத யாராலயும் எந்த விதத்துலயும் மாற்ற முடியாம போயிடுச்சு.. இது தெரிந்ததுக்கு பிறகுதான் அன்னைக்கு நானும் சந்தோஷும் உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மா கிட்ட இத பத்தி நான் பேசினேன்.. அப்புறம் துளசியை ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு அழைச்சிட்டு வர ரிஷியா நான் சொன்னா கேட்க மாட்டாள் என்று தெரிந்து விக்ரமா முக கவசம் அணிந்து என்னை சிறிது மாற்றி கொண்டு ரொம்ப கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு வந்தேன்.. இங்கே வந்ததும் துளசி ரொம்ப ஒட்டாமல் இருந்தாள்.. இது முன்பு பழகின வீடு என்று காட்டிக்கொள்ளாமல் அவளும் அவளுடைய வேலையும் என்று ஒரு மாசம் இருந்தாள்.. வந்தனாவை அழைச்சிட்டு தேவி வீட்டுக்கு வந்ததும்.. மீராவை வைத்து துளசியை காயப்படுத்துவாங்க என்று நினைத்து நான் துளசியை கொஞ்சம் நிஷாவுக்காக பொறுமையா இருக்க சொன்னேன்.. என்னையும் மீறி அவங்க துளசியை ஆகாத வார்த்தைகளால் காயப்படுத்தி அவள் பத்து வருடத்திற்கு முன் அனுபவித்த அதே துன்பத்தை தற்போதும் அனுபவித்து மன வேதனையோடு இந்த வீட்டை விட்டு வெளியே போய்விட்டாள்.. நான் அந்த கேஸ் பைல் அனைத்தையும் கமிஷ்னரிடம் ஒப்படைத்து விட்டு இங்கே வந்ததும் துளசியை காணவில்லை என்று தேவியிடம் கேட்க வந்தபோது அவங்களும் அவங்களோட கணவரும் பேசிக் கொண்டதை கேட்டேன்.. அப்பொழுதுதான் அவங்க சூழ்ச்சி பண்ணி எங்க ரெண்டு பேரையும் இப்படி ஒரு சிக்கலில் மாட்டி பிரிக்க நினைத்தை தெரிந்து கொண்டேன்.. அதைக் தெரிந்து கொண்டதும் புழுவாக வேதனையில் துடித்து விட்டேன்.. அப்புறம் அங்க இருந்து துளசியை பார்க்கிறதுக்கு போனேன் துளசி என்னை பார்க்க விரும்பாமல் திட்டி அனுப்பியதும்.. திரும்பவும் அவளுக்கு காவலுக்கு போலீசை வைத்து விட்டு.. இந்த கேஸ் விஷயமா ஓட ஆரம்பித்தேன்.. மீராவை ஸ்கூல்லில் வைத்து இந்த பங்ஷன் அன்று துளசியை எப்படியாவது வீட்டுக்கு அழைத்து வரும்படி கேட்டேன்.. நிஷாவும் மீராவும் சேர்ந்து துளசியை இங்கே அழைச்சிட்டு வந்தாங்க. அபோது தான் எல்லாருக்குமே என்னோட பொண்ணையும் மனைவியையும் அறிமுகப்படுத்த முடிந்தது..” என்று அவனுக்கு எவ்வாறு உண்மைகள் தெரிந்தது என்பதை அனைவருக்கும் கூறினான்..

 ரிஷி கூறியதைக் கேட்ட வந்தனா தேவியை வீட்டை விட்டு வெளியே போகும்படி கூறினாள்.. அதன்பின் அவளது சிறு வயது சினேகிதி துளசியை அணைத்து ஆறுதல் படுத்தி இனி எப்பொழுதும் அவளது அண்ணியாக மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று கூறினாள்..

 மீனாட்சி திலகவதியிடம் வந்து ” நான் கல்யாணம் முடிச்சு வந்த காலத்திலிருந்து நீங்க என்ன ரொம்ப கொடுமை படுத்தியும் நான் எல்லாத்தையும் சாதித்துவிட்டு உங்கள ஒரு அம்மாவா தான் பார்த்தேன்.. என்னை ஒரு குழந்தைக்கு அம்மாவாக நினைத்து பார்க்காமல் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை துணிந்து செய்து விட்டிங்க.. எல்லாம் எதுக்கு இந்த பணத்துக்காக தானே இனிமேல் அந்த பணம் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த மாதிரி எல்லாத்துக்குமே கிடைக்கும்.. ஆனா இந்த வயது போன காலத்துல நானோ என்னோட பசங்களோ உங்க மகனோ யாருமே உங்களுக்கு பச்சைத்தண்ணி கூட கொடுக்க மாட்டோம் எந்த உதவியும் பண்ணமாட்டோம்…. என்னோட பொண்ணு எல்லாரும் இருந்தும் எப்படி தனியா வளர்ந்தாளோ அப்படி இனி நீங்களும் நாங்க எல்லாரும் இருந்தும் தனியாக இந்த பணத்தை வைத்து நீங்களே உயிர் வாழ்கிற காலம் வரைக்கும் உங்களை பார்த்துக்கோங்க.. இதுதான் என் பொண்ணை பிரிஞ்சு நான் பட்ட வேதனைக்கு நான் உங்களுக்கு தரும் தண்டனை.. இதுவரைக்கும் உங்க மகன் என்னோட பேச்சை மீறியதில்லை.. உண்மையை தெரிஞ்சும் அதற்குப் பிறகு மீற மாட்டார் என்று நம்புகிறேன்.. ” என்று வேதனையோடு கூறிவிட்டு அவரது கணவரை பார்த்தார்

மீனாட்சி..

 ஈஸ்வர மூர்த்தியும் மீனாட்சியின் கையைப்பிடித்து அவரின் பேச்சுக்கு சம்மதம் தெரிவித்தார்..

 ஒருவர் செய்த பாவத்திற்கு அவரது இளமைக் காலத்தை விட வயோதிக காலத்தில் சொந்தங்களை இழந்து உதவிக்கு யாரும் இல்லாமல்.. கிடைக்கும் தண்டனை மிகவும் கொடுமையானது.. அதை தான் இனி திலகவதி அனுபவிப்பார்..

 தேவி வீட்டை விட்டுப் போவதற்கு கையில் பையுடன் வரும் போது அவரிடமும் மீனாட்சி பேச ஆரம்பித்தார்..

” அதோ அங்கு இருக்கிறாங்களே திலகவதி அவர்களாவது அவங்க மகனோட பணத்துக்குத்தான் ஆசைப்பட்டாங்க.. ஆனா நீங்க யாரோட பணத்துக்கு ஆசைப்பட்டு என்ன உரிமையில் என் பொண்ணுக்கும் என்னோட பேத்திக்கும் இப்படி ஒரு கஷ்டத்தை கொடுத்தீங்க.. இந்த பணத்துக்கு முற்றுமுழுதாக சொந்தக்காரி அந்த வந்தனா பொண்ணு மட்டும்தான்.. ராஜேஸ்வரியோட அப்பா உழைத்து தேடிய சொத்து இது.. அதுல நாலாவது மனிதரா உங்களுக்கு எப்படி உரிமை இருக்கும்.. இந்த சொத்து யாருக்கும் போகாமல் நீங்க தட்டி பறிப்பதற்கு உங்க அப்பாவோ இல்ல உங்க கணவரோட அப்பாவோ தேடிய சொத்தா? இது.. ராஜேஸ்வரி உங்க அண்ணனை கல்யாணம் முடித்தாலும் உங்க அண்ணணுக்கே இந்த சொத்துல பங்கு இல்லை.. அப்படி இருக்கும்போது உனக்கு எப்படி பங்கு வரும்?.. யார் சொத்து கிடைக்கும் சொகுசா இருந்து வாழலாம் என்று நினைத்தா நீயும் உன் கணவரும் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளைப் பெத்தீங்க?.. சுயமாக உழைத்து வாழ முடியாத உங்களுக்கு என்னத்துக்கு குடும்பமும் வாழ்க்கையும். ஒன்னு செத்துப் போகணும் இல்லையா பிச்சை எடுக்கனும்.. எல்லாரும் சேர்ந்து என் பொண்ணோட வாழ்க்கையில் விளையாடி எங்களையும் பொண்ணையும் பிரிச்சு அப்புறம்.. கணவனையும் மனைவியையும் தகப்பனையும் பிள்ளையையும் பிரித்துவிட்டிங்களே பாவிகளா.. நீங்க எல்லாம் நல்லாவே இருக்கமாட்டிங்க.. எங்க கண்ணீர் வேதனை நீங்க செய்த பாவமும் உங்களை வாழவே விடாது.. போ வெளிய உழைக்க சோம்பல் என்றால் பிச்சை எடு.. உன் கையாலாகாத புருஷனை கூட்டிட்டு இங்கேருந்து போயிடு.. ” என்று அமைதியாக சாந்தமாக இருந்த மீனாட்சியே தேவியை கை வலிக்கும் வரை கன்னம் கன்னமாக அடித்து முகத்தில் காரி துப்பி தலைமுடியை பிடித்து இழுத்து சென்று வீட்டு வாயிலின் வெளியே தள்ளிவிட்டார்.. அதை அங்கிருந்த யாரும் தடுக்கவில்லை..

 அனைவரும் தங்களை கொஞ்சம் ஆறுதல் படுத்திக் கொண்டு திருமணம் பேச ஆரம்பித்தார்கள்.. துளசி அங்கிருந்து எழுந்து சமையலறைக்கு சென்று அனைவருக்கும் ஜூஸ் தயாரித்து எடுத்து வந்து கொடுத்தாள்.. அதன்பின் வேலையாட்கள் உதவியோடு அனைவருக்கும் மதிய உணவு சமைக்க சென்று விட்டாள்..

 அந்த சமையல் அறையில் அவளது பல நினைவுகள் அடங்கியுள்ளது.. அனைத்தையும் ஒரு முறை நினைத்து பார்த்து விட்டு அவளது கைவண்ணத்தில் ஒரு விருந்தை சமைத்தாள்..

 இவர்களின் பேச்சுவார்த்தை முடிவடையும் நேரம் மதிய உணவு வேளையும் வந்தது.. அனைவரையும் அமர வைத்து துளசி பரிமாறி அவர்களுடன் சேர்ந்து அவளும் உணவு உண்டு சந்தோஷமாக இருந்தாள்..

 அதன்பின் ரிஷியின் உதவியோடு சந்தோஷ் அவனது காதலைப் பற்றி தனது பெற்றோரிடம் கூறினான்..

 ரிஷியின் அழைப்பை ஏற்று விஜியும் அங்கே வந்தாள்..

 மீனாட்சிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டதால் ரிஷி துளசி மற்றும் சந்தோஷ் விஜி இரண்டு ஜோடி திருமணத்தையும் ஒரே மேடையில் வரும் முகூர்த்தத்திலேயே நடத்துவதற்கு பேசி முடித்தார்கள்..

இடையில் ஒரு நாள் மீனாட்சி குடும்பம் விஜி வீட்டுக்கு சென்று விஜியை பெண் கேட்டு அவளின் பெற்றோரின் சம்மதத்தை பெற்று திருமணத்தை நடத்து வதற்கான வேலைகளை ஆரம்பித்தார்கள்..

அதன் பின் அனைவரும் கடந்த கசப்புகளை மறந்து இவர்களது திருமணத்தை மகிழ்ச்சியாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தார்கள்..

Advertisement