Advertisement

அதைக்கேட்ட தேவி இங்கிருந்து செல்ல விரும்பாமல் அத்துடன் அந்த பேச்சை முடித்து விட்டார்..

 ரிஷி இருந்தால் அவனது தலையிட்டால் அவர் நினைத்தது நடக்காது. என தெரிந்து கொண்ட தேவி. அண்ணனின் கொள்கை தெரிந்து இருந்ததால்.. ரிஷியை சிக்கலில் மாட்டி வைக்க தீர்மானித்தார்.. அதன் மூலம் ராஜேந்திரனே ரிஷியை வெறுத்து வீட்டை விட்டு செல்லும்படி கூறுவார் என்று நினைத்து அதை செய்தார்..

 ராஜேந்திரனுக்கு பெண்கள் என்றால் தெய்வம் என்று நினைப்பவர்..

பெண்களுக்கு ஒரு கஷ்டம் அதுவும் ஒரு ஆணால் ஏற்பட்டது என தெரியவந்தால் யார் எவர் என்று பார்க்காது அவரது தண்டனையை வேறாக இருக்கும்..

இங்கு வந்ததிலிருந்து துளசி மையலாக ரிஷியை பார்ப்பதை தேவி தெரிந்து கொண்டார்..

 23 வயதில் சடங்கில் துளசிக்கு முறை செய்யும் பொழுது அந்த சிறு பெண்ணின் மீது பிடித்தமும் விருப்பமும் ரிஷிக்கு ஏற்பட்டது.. காலம் சென்று 5 வருடம் கடந்ததும் அது காதலாக மாறியது.. ராஜேஸ்வரிக்கும் இதுதான் விருப்பம் என தெரிந்து கொண்ட ரிஷி வந்தனாவுக்கும் துளசிக்கும் ஒரே வயது என்பதால் அவளுக்கும் இருபது வயதை தாண்டும் போது விருப்பத்தைக் கூறி திருமணம் செய்து கொள்ளலாம் என காத்திருந்தான்..

 அந்த இளம் ஜோடிகளின் ஆசையில் மண் அள்ளி போட்டார் தேவி..

 இருவரின் சொல்லப்படாத காதல் சொல்லாமலேயே பிரிந்து விட்டது..

 பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய துளசியை மேலும் படிக்க வைப்பதாக கூறிய ராஜேஸ்வரியிடம் படிப்பு வரவில்லை என்று கூறி அவள் தையல் சமையல் போன்ற கலைகளை கற்க விரும்பியதால் துளசியை தனியே வெளியே அனுப்ப விரும்பாமல் விட்டிற்கே ஆள் வரவழைத்து அதை கற்க உதவி செய்தார் ராஜேஸ்வரி..

 அவர் செய்த பெரும் உதவியால் அவள் தையலையும் சமையலையும் சிறப்பாகக் கற்றாள்.. சமையல் கல்வி முடிந்தபின் ராஜேஸ்வரியின் வீட்டில் வேலையாட்களின் உதவியோடு துளசியே சமைப்பாள்.. பார்வதிக்கும் உடல்நிலை சரியில்லாததால் அவரை வீட்டு வேலை செய்ய துளசி அனுமதிக்கவில்லை..

 தேவியின் மகள் மோனிஷா அங்கிருக்க விரும்பாமல் ராஜேந்திரனின் கட்டுப்பாடு பிடிக்காமல் மதுரையில் ஒரு ஹாஸ்டலில் தங்கி படிக்க போவதாக கூறி சென்றுவிட்டாள்..

தேவி ராஜேந்திரனிடம் பல பொய்களைக் கூறி வாங்கும் பணத்தில் முக்கால்வாசியை மகளின் தேவை என்று மோனிஷாவுக்கு அனுப்பி வைப்பார்..

ராஜேந்திரனும் அவளது படிபிற்கு என தனியாக பணம் கொடுப்பார்..,

 கையில் அதிகம் பணம் இருந்தால் கெட்டுப் போகும் காலத்தில் மோனிஷாவும் விதிவிலக்கல்ல..

 ஆண்களின் சகவாசம் குடி போதை மருந்து என அனைத்திற்கும் அடிமையாகி விட்டாள்..

குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருவரின் சுய நினைவை முற்றாக காலத்திற்கும் அளிக்கக்கூடிய ஒரு போதை வஸ்து.. மோனிஷாவின் கையில் கிடைத்த படியால் அதை பருகி முதல் முறையாக அவளது கர்ப்பை காவு கொடுத்தாள்..

 என்ன நடந்தது என்ன நடந்தது என்று தெரியாமல் மூன்று மாதத்திற்கு பின் அவள் கருவுற்றிருப்பது தெரிந்துகொண்டு யார் என்ன இது எவ்வாறு நடந்தது என எதுவும் புரியாமல் இந்த குழந்தை அவளுக்கு தேவை இல்லை என அழித்துவிட்டாள்..

 கைப்பேசியில் தாயும் மகளும் உரையாடும் பொழுது தேவி அவருக்கு ரிஷி தொல்லையாக இருப்பதைக் கூறி அவனை வீட்டை விட்டு வெளியேற்ற அவர் வைத்திருக்கும் திட்டத்தையும் கூறினார் மோனிஷாவிடம்..

தாயை தெரிந்தால் பிள்ளையின் குணத்தை தெரிய வேண்டுமோ?..

 அவளுக்கு கிடைத்த அந்த போதைவஸ்தை அதிக பணம் கொடுத்து மோனிஷாவை பார்க்க வந்த தேவிக்கும் வாங்கிக் கொடுத்தாள்..

 அந்த போதைவஸ்து அவ்வளவு இலகுவில் யாருக்கும் கிடைத்து விடாது.. யாரும் அதை விரும்பவும் மாட்டார்கள்.. ஒரு ஆண் ஒரு பெண்ணை அடைய வேண்டும் என்றால் அதை பயன்படுத்துவான்..

 இருவரும் பயன்படுத்தினால் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு உயிர் வாழும் காலம் வரை நினைவில் இருக்காது.. ஒருவர் பயன்படுத்தினால் மற்றொருவருக்கு யார் யாருடன் உறவு வைத்தோம் என்பது தெரியும்..

 மோனிஷா கொடுத்த போதைவஸ்தை தேவி பயன்படுத்தினார்..

 அந்த போதை வஸ்து பயன்படுத்துபவர்களுக்கு உணர்வுகள் தூண்டப்பட்டு என்ன நடக்கிறது என்று எதுவும் நினைவில் இருக்காது..

 அதையே தைப்பொங்கல் அன்று இரவு இரண்டு கப்பில் உள்ள பாலில் சரிசமமாக கலந்தார்..

 என்றுமே அனைவருக்கும் இரவு பால் கொடுத்துவிட்டு அவளது அன்றைய வேலையை முடித்து விட்டு அவர்கள் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுசுக்கு செல்வாள் துளசி..

 அதேபோன்று அன்றும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பாலை கலந்து எடுத்து கொடுத்து விட்டு வந்து ரிஷிக்கு கொடுக்கச் செல்லும் பாலில் தேவி போதைவஸ்து கலந்திருப்பதை தெரியாமல் ரிஷிக்கும் எடுத்துச் சென்றாள்..

 அங்கிருந்தே அவளது பாலை குடித்து விட்டாள்..

அப்பொழுதுதான் காலத்தில் சோதனை ஆரம்பித்தது..

 தேவி எதிர்பார்த்தபடியே அந்த போதை வஸ்துவினால் அவர்களது உணர்வுகள் தூண்டப்பட்டு ஏற்கனவே ஒருவர் மீது ஒருவர் விருப்பம் வைத்தவர்கள்.. அவர்களின் சுய நினைவு மறக்கப்பட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத வகையில் சிறிது நேரத்திலேயே இருவரும் உடலால் ஒன்றிணைந்து விட்டார்கள்..

நடு இரவில் போதையின் தாக்கம் குறையாமலே துளசி அங்கிருந்து வந்தனாவின் அறைக்கு சென்று படுத்து விட்டாள்..அதனால் அது வேறு யாருக்கும் தெரியாமல் போய்விட்டது..

தேவியின் திட்டப்படி அவர்கள் இணைந்தது நடந்து விட்டது..

ஆனால் பிற்காலத்தில் அதை வைத்து தேவி ரிஷியை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்பது நடக்காமல் மாறாக காலமே அவர்களைப் பிரித்து வைக்க திட்டம் தீட்டியது..

 தாயின் விருப்பபடி சரிந்து இருந்த பிஸ்னஸை தூக்கி நிறுத்தி பார்த்துக் கொண்டான் என்றால். வளர்த்த தந்தையின் ஆசைப்படி ஐபிஎஸ் படித்தான்..

 ராஜேஸ்வரி உயிருடன் இருக்கும் பொழுதே அவன் அவருக்கு தெரியாமல் தந்தையின் விருப்பப்படி ஐபிஎஸ் எக்ஸாம் எழுதி பாஸ் ஆகி விட்டான்.. எவ்வாறு அதை அவரிடம் எடுத்துச் சொல்லி அங்கிருந்து ஐ பி எஸ் டிரைனிங் செல்வது என்று தவித்துக் கொண்டிருந்த போது அவனுக்கு அந்த சங்கடத்தை கொடுக்காமல் காலமே ராஜேஸ்வரியின் உயிரை பறித்துவிட்டது..

அவனுக்கு ட்ரெய்னிங் செல்வதற்கான ஆர்டர் கையில் கிடைத்ததும் ராஜேந்திரனிடம் துளசியை பிடித்திருப்பதாகவும் ஆளுக்கு 20 வயதைக் கடந்ததும் அவனது ட்ரெய்னிங் முடிந்து பதவி கிடைத்ததும் அவளைத் திருமணம் செய்து கொள்வதாகவும் அதுவரை அவளை பார்த்துக் கொள்ளும்படியும் அவரிடம் கூறிவிட்டு வந்தனாவை இங்கு வர விடாமல் ராஜேந்திரனை போய் பார்த்துக் கொள்ளுமாறும் கூறி இரு பெண்களுக்கும் அவனால் முடிந்து பாதுகாப்பை வழங்கி விட்டு அவன் வீட்டைவிட்டு ட்ரெய்னிங் சென்றான்..

 ரிஷி ட்ரெய்னிங் செல்லும் முன்பே இந்திரன் 58 வயதில் ஓய்வு பெற்றார்.. சூரியகுமாரின் உதவியுடன் அவன் மீண்டும் வரும்வரை ராஜேந்திரனை அவர்களது பிஸ்னஸையும் ஆஃபீசையும் பார்த்துக் கொள்ளும்படியும் கூறிவிட்டு சென்றான்..

தேவியின் எண்ணத்தில் மண் விழுந்ததால் மூன்று மாதங்களின் பின் துளசி சமைக்கும் நேரங்களில் தாளிப்பு வாசனை ஒத்துக்கொள்ளாமல் அவள் வாந்தி எடுப்பதும் கருவுற்றிருக்கும் பெண்களிடம் ஏற்படும் மாற்றங்கள் அவளிடமும் தெரிவதால் அவருக்கு புரிந்து விட்டது ரிஷியின் குழந்தை தான் இது என்று.. அவனை அவமானப்படுத்தி வீட்டைவிட்டு துரத்தப்போட்ட திட்டம் நிறைவேறாமல் போனதால் அதை துளசியிடம் செய்தார்..

துளசி கருவுற்றிருக்கிறாள் என்றும் அவள் நடத்தை கெட்டவள். என்றும் அவளை தகாத வார்த்தைகளால் திட்டி ராஜேந்திரனுக்கு முன்பே அவளை அவமானப்படுத்தி வீட்டைவிட்டு பார்வதியுடன் அனுப்பிவிட்டார்..

 ராஜேந்திரனும் எவ்வளவோ துளசியிடம் கேட்டுப் பார்த்தார். அவளுக்கு ஆதரவாக தான் நின்ற. யார் அது குழந்தையின் தகப்பன்?.. என்று சொல்லும்படியும் அவளுக்கு அவனையே திருமணம் செய்து வைப்பதாகவும் கூறினார்.. ஆனால் அவளுக்கே பதில் தெரியாமல் போனதால் துளசி அமைதியாகவே நின்றாள்..

 வளர்ப்பு மகளின் இந்த செயலால் பார்வதி மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டு நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டார்..

 இறுதியில் அங்கே இருக்கப் பிடிக்காமல் துளசியையும் வளர்த்த கடனுக்காக ஒதுக்கி வைக்க விரும்பாமல் அவர் செய்து கொடுத்த சத்தியத்தையும் மீற விரும்பாமல் துளசியை அழைத்துக்கொண்டு மீண்டும் அவரது ஊருக்கு சென்றுவிட்டார்..

ராஜேந்திரன் ரிஷியை பார்க்க செல்லும் நேரத்தில் அவன் துளசியைப் பற்றி கேட்டால் இருக்கிறாள். நன்றாக இருக்கிறாள். என்று சமாளித்து வந்தார்..

ஒரு கட்டத்திற்கு மேல் அவனிடம் உண்மையை கூறாவிட்டால் அவன் அதிகம் இன்னமும் ஆசையை வளர்ப்பான் என்று தெரிந்து கொண்டவர். துளசியை பற்றி தவறாக கூற விருப்பம் இல்லாததால் பார்வதி அவர்கள் சொந்தத்தில் ஒருவரை துளசிக்கு திருமணம் செய்து சொந்த ஊருக்கே அழைத்து சென்று விட்டார்..

இதை நினைத்து வருந்தாமல் மனதை ஆறுதல்படுத்தி அவனது கொள்கையையும். வாழ்க்கையையும் பார்த்துக் கொள்ளுமாறும் கூறினார்..

இருவருக்கும் நடந்தது எதுவும் தெரியாமல் காலத்தில் சோதனையால் இருவரும் பிரிந்தார்கள்..

 ரிஷியின் ட்ரெய்னிங் காலம் முடிந்து அந்த பேச்சிலேயே முதலாவதாக வந்தான்..

 அங்கிருந்து கன்னியாகுமரியில் மூன்று வருடம் ஒரு ஸ்டேஷனில் அவன் வேலை செய்தான்..

 அந்த நேரம் சென்னையில் அதிகம் கடத்தல் நடந்து பெண்கள் குழந்தைகள் காணாமல் போனார்கள்.. இது தொடர்ந்து தீவிரமாக நடந்த படியால் கமிஷ்னரின் ஆலோசனையின் பேரில் டிஜிபி சிஎம்மிடம் ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் பன்னி அவர்கள் மூவருக்கும் மட்டும் தெரிந்து ரிஷியை விக்ரம் சாகர் எனும் அவனது தாய் வைத்த பெயரில் அண்டர்கிரவுண்ட் ஆபீஸராக நியமித்தார்கள்..

 அவர்கள் நால்வரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது..

 ரிஷி அண்டர்கிரவுண்ட் ஆபீசராக சென்னைக்கு வந்த சிறிது நாட்களில் ராஜேந்திரனுக்கு உடல்நிலை முடியாமல் போனதால் அவரின் மிகுந்த போராட்டத்தின் மத்தியில் விருப்பமில்லாமல் அவருக்காக என்று ரிஷி மோனிஷாவை திருமணம் செய்து கொண்டான்..

 மோனிஷாவின் தீய பழக்கங்களினால் அவள் மூன்று தடவை கரு கலைத்துவிட்டாள்.. இந்த முறையும் உண்டாகியிருக்கும் கருவை கலைத்தால் அவளது உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் அவள் தேவியிடம் தஞ்சம் புகுந்தாள்.. தேவி ராஜேந்திரனிடம் மோனிஷாவின் நிலையை மறைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனதைக் கரைத்து அவரின் வாயாலேயே ரிஷிக்கும் மோனிஷாகும் தானே திருமணம் செய்து வைப்பதாக கூற வைத்துவிட்டார்..

 தேவிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக ரிஷியிடம் கெஞ்சி மன்றாடி திருமணத்தை நடத்தி வைத்தார்..

 அவரின் காலம் முடியும் முன்பே கருக்கலைப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளினால் இந்த பிரசவம் மிகுந்த சிக்கலுக்கு மத்தியில் நடந்ததால் நிஷா பிறந்ததும் மோனிஷா இறந்து விட்டாள்..

 அவர் ஆரம்பித்து வைத்த வாழ்க்கை அவரின் காலம் முடியும் முன் முடிந்ததால் ராஜேந்திரனும் மன உளைச்சல் காரணமாக உடலில் நோய் தாக்கம் அதிகரிக்க அவரும் இறந்து விட்டார்..

தகப்பன் யார் என்றே தெரியாத நிஷாவிற்கு ரிஷி தகப்பனான்..

இதுதான் தகப்பன் என தெரியாமல் தகப்பன் இருந்தும் அப்பா பெயர் தெரியாதவள் என மீரா கேலி செய்யப் பட்டால்..

ஒழுக்கம் அற்ற மோனிஷா திருமணமாகி கௌரவமாக குழந்தை பெற்றாள்..

 ஒழுக்கமே உயிர் மூச்சு என வாழ்ந்த துளசி தாய் தகப்பன் அண்ணன் தம்பி கணவன் என அனைத்து உறவுகளும் இருந்தும் யாருமற்ற நிலையில் மீராவை மிகுந்த சிரமத்தின் மத்தியில் பெற்றெடுத்தாள்.. 

” இதுதான் எனக்கு தெரிந்த உண்மை.. இதில் எனது தவறும் இருக்கு.. நான் அப்பவே மனசுல பட்டவுடனேயே துளசியிடம் எனது காதலை சொல்லி இருந்தால் அவளுக்கு இந்த கஷ்டம் வந்திருக்க வாய்ப்பே இல்லை.. ” என்றான் ரிஷி மனவருத்தத்துடன்..

” எங்களோட இந்த நிலைக்கு காரணமான உங்க அம்மா திலகவதிக்கும் என்னோட அத்தை தேவிக்கும் என்ன தண்டனை கொடுத்து இதை நிவர்த்தி செய்யலாம் என்று எனக்கு தெரியவில்லை.. என்னைவிட அதிகம் பாதிக்கப்பட்டது துளசி தான் அவர்கள் இருவருக்கும் துளசி என்ன தண்டனை கொடுக விரும்பினாலும் அது எனக்கும் சம்மதம்.. ” என்றான்.. 

 ” எனக்கு இப்படி ஒரு குடும்பம் இருக்கு என்று தெரியாமல் 10 வருடத்தையும் கழித்துவிட்டேன்.. துளசியோ குழந்தையுடன் பத்து வருடங்களாக சமூகத்தில் அவ பெயர்களைக் கேட்டு மிகுந்த கஷ்டத்தில் இருந்திருப்பாள்.. இதில் என்னோட தவறு எது என்று துளசி நினைக்கிறாலோ அதுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்..” என்றான் ரிஷி..

 ஈஸ்வரமூர்த்தி ரிஷியிடம் கேட்டார் அவரது தாய் திலகவதி துளசிக்கு செய்த அநியாயத்தை எவ்வாறு தெரிந்து கொண்டான் என்று..

 ரிஷி நான் துளசியோடு கொஞ்சம் தனியா பேசணும் இன்னும் நிறைய விஷயங்களை என்னோட பார்வையிலிருந்து அவர்களுக்கு புரிய வைத்து. அவளோட கஷ்டங்களையும் நான் தெரிந்து கொள்ளனும்.. அதன் பின் எவ்வாறு இதை நான் தெரிந்து கொண்டேன் என்று உங்களுக்கு கூறுகிறேன்.. ” என்றான்..

 துளசி ரிஷியுடன் பேசுவதற்கு ஒத்துக் கொள்வாளா?..

Advertisement