Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 18..

அனைவரும் ரிஷியின் முகத்தையே பார்த்தார்கள்.. அவன் கூறப்போவது என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம். தவிப்பு போன்ற பல உணர்வுகளை அவர்களது முகத்தில் காட்டி அமர்ந்திருந்தார்கள்..

இப்பொழுது ரிஷியின் வாயிலாகவும் நடந்தவற்றையும் பார்ப்போம்..

 சிறு வயதிலிருந்தே வசதி படைத்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பார்வதி மேல் திலகவதிக்கு சிறு பொறாமை உணர்வு இருந்து வந்தது..

அவரது ஏழ்மை நிலையை அறவே வெறுத்தவர் பார்வதியுடன் அதிகம் சேர்ந்து அவரது உடை அணிகலன்கள் என அனைத்தையும் பயன்படுத்தி பகட்டான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையை சிறுவயதில் பார்வதியிடம் தீர்த்துக் கொண்டார்..

காலம் ஒரே மாதிரி சுழலாமல் அப்படியே எதிர்ப்பதமாக மாறிவிட்டது.. ஒரு கட்டத்தில் பார்வதியின் தந்தை நோய்வாய்ப்பட்டதால் சிகிக்சை செய்து அவரை காப்பாற்ற எடுத்த முயற்சியில் தந்தையும் இறந்து சொத்தும் கை விட்டுப் போய்விட்டது.. 

எதிர்மாறாக திலகவதி எதிர்பார்க்காத அளவிற்கு அவருக்கு ஒரு வாழ்க்கை கிடைத்தது.. அவரின் அழகில் மயங்கி ஈஸ்வர மூர்த்தியின் தந்தை திலகவதியை திருமணம் செய்து சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்..

 பிறந்து வளர்ந்த ஊரில் சொத்துக்கள் அனைத்தும் இல்லாமல் போனதன் பின் இருக்க விரும்பாமல் பார்வதியும் அவரது தாயாரும் சென்னைக்கு வந்து விட்டார்கள்..

புதிதாக சென்னைக்கு வந்ததால் போவதற்கு இடம் தெரியாமல் அன்று இரவு ஒரு கோயிலில் தங்கி இருந்தார்கள்.. அடுத்த நாள் அந்த கோயிலை சுற்றி கூட்டி சுத்தம் செய்துவிட்டு அங்கு கொடுத்த அன்னதானத்தை ஊண்டுவிட்டு அடுத்தது எங்கு செல்வது என தெரியாமல் இருந்தவர்களுக்கு அவர்களது நடவடிக்கைகளை அன்ன தானம் கொடுத்த ராஜேஸ்வரி பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவர்களிடம் பேசி அவரை வீட்டுக்கு வேலை செய்வதற்கு அழைத்துச் சென்று விட்டார்..

 பார்வதியும் அவரது தாயாரும் தஞ்சம் புகுந்ததோ ராஜேஸ்வரியின் வீட்டில்..

 ஈஸ்வர மூர்த்தியின் தந்தையை திருமணம் செய்து சென்னைக்கு வந்த திலகவதி மீண்டும் அவரது ஊருக்கு செல்லவில்லை.. ஏன் என்றால்?.. அவர்களது சகோதரங்கள் அவர்களிடம் பணம் கேட்டு உதவி கேட்டு அவர்களை தொல்லை செய்வார்கள் என்று நினைத்து செல்லாமல் இருந்துவிட்டார்..

 அதன்பின் காலங்கள் உருண்டோட திலகவதிக்கு ஈஸ்வரமூர்த்தி பிறந்ததும் வேறு பிள்ளைகள் பிறக்காமல் போவிட்டது.. அவர்களது வாழ்க்கையும் அன்பு பாசம் போன்ற பிணைப்புகளுக்கு அப்பாற்பட்டாதாகி விட்டது.. திலகவதிக்கு பணம் அதன் மூலம் கிடைக்கும் பகட்டான வாழ்க்கை ஒன்றே கொள்கையாகவும் ஈஸ்வரமூர்த்தியின் தந்தைக்கு பிஸினஸ் பார்பதும் அதை விரிவு படுத்துவது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபாடு கொண்டுவிட்டார்.. அவரும் ஈஸ்வரமூர்த்தியை அன்புடன் அரவணைக்க தவறிவிட்டார்… 

பணம் இருந்தபடியால் ஈஸ்வரமூர்த்தி வேலையாள் மூலமே வளர்ந்தார்..

 ராஜேஸ்வரியின் வீட்டில் பார்வதியும் அவரது தாயாருமே சமையல் மற்றும் வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு அங்கேயே இருந்து விட்டார்கள்.. அவரிடமும் அவரது தந்தையிடமும் நம்பிக்கையையும் பெற்று விட்டார்கள்..

 பார்வதிக்கு திருமண வாழ்க்கையில் அதிகம் விருப்பம் இல்லாமல் இருந்துவிட்டார்..

 காலச்சக்கரத்தில் காலங்கள் வேகமாக சென்று ஈஸ்வரமூர்த்தி காலேஜ் படிப்பை நிறைவு செய்யும் தருணத்தில் மீனாக்ஷி முதல் வருசத்திற்கு அங்கு சேர்ந்தார்..

கண்டதும் காதல் என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் அதை நம்பி ஏற்றுக் கொள்வார்கள்.. அதேபோன்று தாயின் அரவணைப்பு தந்தையின் பாதுகாப்பு பாசம் என எதுவும் கிடைக்காமல் வளர்ந்த ஈஸ்வர மூர்த்தியும் மீனாட்சியின் அமைதியான அழகையும் குணத்தையும் பார்த்து பார்த்து இருந்தவர் மீனாட்சியின் மேல் காதலில் விழுந்துவிட்டார்..

அவருக்கான காலேஜ் காலம் முடிவடையும் தருணத்தில் மீனாட்சியிடம் அவரது காதலை கூறி திருமணத்திற்கு சம்மதம் கேட்டார்..

 மினாட்சியின் குடும்பமும் வருமைபட்ட குடும்பம் என்பதால் அவருக்கு காதலில் விழ பயம் வந்தது..

 ஈஸ்வரமூர்த்தி படிப்பு முடிந்ததும் தந்தையுடன் இணைந்து அவரது பிஸினஸை பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார்.. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மீனாட்சி சந்திப்பதற்காக அவர் படித்த காலேஜின் அருகில் வந்து நின்று மீனாட்சியை பார்த்து விட்டு செல்வார்..

 இவர்களது காதலும் இவ்வாறு சென்று மீனாட்சியின் காலேஜ் படிப்பின் இறுதி வருடமும் வந்தது..

 நாள் தவறாமல் பின் தொடர்ந்து அவரது காதலையும் பொறுமையையும் அன்பையும் காட்டி மீனாட்சியின் மனதை கவர்ந்து விட்டார் ஈஸ்வரமூர்த்தி..

 இதற்கிடையில் ஈஸ்வரமூர்த்தியின் தந்தை நோயினால் பீடிக்கப்பட்டு இறந்துவிட்டார்..

 திலகவதியின் அர்த்தமற்ற கொள்கையும் பிடிவாதமும் தெரிந்த படியால் அன்பை காட்டாவிட்டாலும் அவருக்கு என்று இருக்கும் ஒரே உறவு தாய் என்பதால் அவரை ஒதுக்க விரும்பாமல் மீனாட்சியை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார்..

 சாதி மாற்றி மகன் திருமணம் செய்தது பிடிக்காவிட்டாலும் அவருக்கும் விட்டுச் செல்ல வேறு போக்கிடம் இல்லாததால் அங்கேயே மகனுடன் இருந்தார்..

 மீனாட்சிக்கு நித்தமும் ஒவ்வொருநாளும் அவரால் என்ன முடியுமோ அனைத்து வேலைகளையும் கொடுத்து துன்புறுத்துவார்..

 மீனாட்சியும் ஈஸ்வரமூர்த்தி இடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்..

 கிருஸ்ணாவும் அவர்களுக்கு பிறந்தான்..

 சந்தோஷுக்கு மூன்று வயது இருக்கும் பொழுது மீனாட்சி மீண்டும் கருவுற்றார்..

 அவர் கருவுற்று மூன்று மாதத்திலிருந்து மூர்த்திக்கு பிஸ்னஸில் சிறுசிறு தடைகளும் தடங்கல்களும் ஏற்பட்டது..

 தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் அவருக்கு பணம் கிடைக்காமல் போய் அவரது பகட்டான வாழ்க்கை இழந்து விடுவோம் என்று பயந்து கோவிலுக்கு சென்றார் திலகவதி..

அங்கே எதிர்பாராதவிதமாக பார்வதியை பார்த்தார்..

 மூன்றாவது வெள்ளிக்கிழமை திலகவதி கோவிலுக்கு சென்றிருக்கும் போது ஒரு ஜோசியரிடம் மூர்த்தியின் ஜாதகத்தை காட்டி கேட்ட போது.. மீனாட்சி கருவுற்றிருக்கும் காலம் உங்களுக்கு கூடாது என்றும். அந்த குழந்தை பிறந்து அந்த வீட்டிற்கு வந்தால் அவர்களது அனைத்து தொழிலும் நிர்மூலமாக்கி அவர்கள் நடு தெருவில் நிற்கும் காலம் வரும். அந்த குழந்தையால் ஈஸ்வர மூர்த்தியின் செல்வாக்கிற்கு ஆபத்து என்று கூறினார்..

இது ஒன்று அவருக்குப் போதுமானதாக இருந்தது.. யார் வாழ்ந்தாலும் சரி யார் இறந்தாலும் சரி விடிந்ததும் அந்த நாள் முடிவடையும் தருணத்தில் அவர் நினைத்தபடி அவரது வாழ்க்கை பணத்தால் நிறைந்திருக்க வேண்டும் என்பதே திலகவதியின் ஒரே சிந்தனையாக இருந்தது..

  அந்த குழந்தையை கருவிலேயே அழிக்க நிறைய திட்டம் தீட்டினார்..

அது எதுவும் பலனளிக்காமல் போய் அந்த குழந்தையும் பிறந்தது..

 அன்று கோவிலில் சந்தித்த பார்வதியை அவர் எங்கு இருக்கிறார்.. என்ற தகவலை தெரிந்து கொண்ட திலகவதி பார்வதியை அழைத்து இந்த குழந்தை பிறந்தது தனது மகனின் உயிருக்கு ஆபத்து என்றும் தந்தையையும் மகளையும் சிறிது காலம் பிரித்து வைத்து அவர்களது கெட்ட காலம் முடிந்ததும் மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம் இல்லாவிட்டால் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்று அந்த ஜோசியர் கூறியதாக பார்வதியிடம் அழுது கரைந்தார்..

 இளகிய மனம் கொண்ட பார்வதியோ திலகவதியின் நயவஞ்சகத் திட்டம் தெரியாமல் சிறிது காலம் திலகவதி கேட்டதற்கு இணங்க ஒரு உயிரை காப்பாற்றி அதன் மூலம் இன்னொரு உயிர் பிழைக்கும் என்றால் ஏன் இதை செய்யக்கூடாது என்று நினைத்து அவரும் தாய் இறந்ததன் பின் தனித்து தான் இருக்கிறார்.. அதனால் முழுமனதாக அந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து திலகவதி எடுத்துக்கொண்டு வந்து பார்வதியின் கையில் கொடுத்து இதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் பார்வதியை வளர்க்குமாறும் கேடு காலம் முடிந்ததும் அவரே வந்து மீண்டும் குழந்தையை வாங்கி கொள்வதாகவும் கூறி பார்வதியிடம் கொடுத்து அனுப்பினார்.

 அவரே அழைக்காமல் குழந்தையை வீட்டிலில் இருக்கும் யாரிடமும் தெரிய படுத்த கூடாது காட்டக்கூடாது என்று திலகவதி பார்வதியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்.. 

 குழந்தை எங்கு என்ற கேள்வி வரும் என்பதால் வேறு ஒருவருடைய இறந்த குழந்தையை பணம் கொடுத்து வாங்கி அங்கே மாற்றி வைத்து விட்டார்..

 மயக்கம் தெளிந்த மீனாட்சிக்கும் மகள் பிறந்திருக்கிறாள் என்று ஆசையுடன் வந்த ஈஸ்வரமூர்த்திக்கும் பேரிடியாக இருந்தது..

 மகளின் இறப்பை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து துடித்து போனார் மீனாட்சி.. ஒரு தாயின் துடிப்பை பார்த்து ஒரு பெண்ணாக இருந்தும் சற்றும் இரக்கமில்லாமல் பகட்டான வாழ்க்கை போய் ஜோசியர் சொன்னது போன்று தெருவில் நிற்கும் நிலை கண்ணெதிரே வந்தது.. அதை நினைத்து அவரின் இழப்பிற்குமுன் அந்த குழந்தையை பிரிந்து இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என இலகுவாக நினைத்துவிட்டார் திலகவதி..

 ஒரு வழியாக அந்தக் குழந்தையின் இழப்பை கடந்து அவர்களும் வந்தார்கள்..

மீண்டும் மூன்று வருடத்திற்கு பின் மீனாட்சி கருவுற்றார் பெண் குழந்தை என்று எதிர்பார்த்து சற்று ஏமாற்றத்துடன் கார்த்திக் பிறந்தான்..

இனி குழந்தை வேண்டாம் இதுவே போதும் என்று குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொண்டார்கள்..

 இரண்டு பேரன்களை மட்டும் திலகவதி கொஞ்சுவது போன்ற நடித்துக் கொண்டிருந்தார்.. மீனாட்சியை பிடிக்காத காரணத்தால் மீனாட்சியின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் மீதும் அவருக்கு அதிக விருப்பம் இல்லை ஆனால் அவரை அந்த வீட்டில் நிலைநாட்டி கொள்வதற்காக பேரன்கள் மீது அக்கறையும் பாசமும் இருப்பது போன்று காட்டிக் கொண்டார்..

 திலகவதிக்கு கொடுத்த வாக்கை பார்வதி காப்பாற்றினார்.. பார்வதிக்கு கொடுத்த வாக்கை காலங்கள் சென்றும் திலகவதி காப்பாற்றவில்லை..

குழந்தையை வளர்க்க பணம் தருவதாக கூறிய திலகவதி அதுவே தொலைந்து விட்டது அதற்கு ஏன் பணம் செலவழிக்க வேண்டும் என்று நினைத்து பணம் கொடுக்காமல் விட்டுவிட்டார்..

 பார்வதியோ பற்று கோல் அற்ற வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு அர்த்தமாக குழந்தையை எடுத்து அனைத்தையும் அவரே பார்த்து வளர்த்தார்..

 ராஜேஸ்வரி ராஜேந்திரனை திருமணம் முடித்து செல்லும்பொழுது பார்வதியும் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வேலைக்கு சென்றார்..

 அங்கு வேலை செய்யும் காலத்தில் தான் அந்த குழந்தையை அவர் அழைத்து வந்தார்.. அப்போதுதான் பத்து வருடம் கழித்து ராஜேஸ்வரியும் குழந்தை உண்டாகி இருந்தார்.. இந்த குழந்தை ஏது என்று கேட்டபொழுது நண்பியை காட்டிக் கொடுக்க விரும்பாமல் அனாதை குழந்தை தனக்கும் வரும் காலத்தில் ஒரு உதவியாக இருக்கும் என்றும் வளர்க்கப் போவதாக கூறி வளர்த்தார்..

 துளசிமணி என்று பெயரிட்டார்..

 காலங்கள் சென்று எட்டு வருடம் முடிந்து விட்டது..

துளசிக்கும் பத்து வருடம் கழித்து ராஜேஸ்வரிக்கு பிறந்த வந்தனாவுக்கும் ஒரே வயது..

இருவரும் தோழிகளாக இருந்தார்கள்.. ராஜேஸ்வரிக்கு துளசி என்றால் தனி பிரியம்..

அப்பொழுதுதான் அந்த குடும்பம் ராஜேந்திரனின் விருப்பப்படி ரிஷியை தத்தெடுத்து அழைத்து வந்தார்கள்..

அண்ணன் என்று வந்தனாவுக்கு அறிமுகப்படுத்திய ராஜேந்திரன் துளசிக்கு ரிஷி என்ன உறவு என்று அறிமுகப்படுத்தாமல் விட்டுவிட்டார்..

சீர்திருத்த பள்ளியில் இருந்து இங்கு வந்த ரிஷி தனியாக வளர்ந்தபடியால் வந்தனாவையும் துளசியையும் பார்த்து அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது..

 வந்தனா அண்ணா என்று ரிஷியை சுற்றி திரிவாள்.. பார்வதி அங்கு வேலை செய்வதால் துளசி அதிகம் ரிஷியுடன் ஒட்ட மாட்டாள்..

 ரிஷியும் காலேஜில் சேர்ந்தான்.. ஐந்து வருடங்கள் அவனது படிப்பு முடிந்து இருபத்தி மூன்றாவது வயதில் அவன் ராஜேஸ்வரியின் சரிந்திருந்த தொழிலில் கால் பதித்தான்..

இருபத்தி மூன்று வயது ஆண்மகன் ரிஷி .. ஒருவர் பின் ஒருவராக வந்தனாவும் துளசியும் சடங்காகினார்கள்..

 வந்தனாவுக்கு சடங்கு செய்தது போன்றே துளசிக்கும் எந்த பாகுபாடுமின்றி ராஜேஸ்வரி சிறப்பாக செய்தார்.. ராஜேந்திரனின் தங்கை தேவிகாவின் மகன் முரளியை வைத்து வந்தனாவுக்கு சடங்கில் மாமன் முறை செய்தார்கள் என்றால்.. மாட்டேன் என்று ஒதுங்கி நின்ற ரிஷியை வைத்து கட்டாயப்படுத்தி துளசிக்கு சடங்கு கழித்தார்கள்..

சடங்கில் மாமன் முறை செய்பவரே திருமணம் செய்யும் முறை என்று யாரோ கூறியதைக் கேட்ட துளசியின் மனதில் ரிஷியின் முகம் ஆழப்பதிந்து விட்டது..

 ரிஷி பிஸ்னஸிலும் ராஜேந்திரன் போலீஸ் டியூட்டியிலும்.. தீவிரமாக ஈடுபட்டதால் அவர்களும் ஒரு பிழை செய்து விட்டார்கள்.. ராஜேஸ்வரியின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட கட்டியை யாரும் அறிந்து கொள்ளவில்லை.. அது சிறிது சிறிதாக நோயில் தள்ளி அதிக வயிற்று வலியின் காரணமாக அவர் துடித்து மருத்துவமனையில் சேர்த்து இனி ஆபரேஷன் செய்தும் வேலை இல்லை என்று டாக்டர் கைவிரித்த பின் ஒரு மாதத்தில் இந்த உலகில் இருந்து உயிர் பிரிந்துவிட்டது…

 அப்பொழுது ரிஷிக்கு இருபத்தி எட்டு வயது.. அவருக்கு ரிஷிக்கு துளசியை திருமணம் செய்து வைக்க விருப்பம் ஆனால் துளசி 18 வயதில் மிகவும் சிறு பெண்ணாக இருக்கிறாள் என்று நினைத்து உறுத்தலாக இருந்தபடியால் அதை யாரிடமும் அவர் தெரியப்படுத்தவில்லை..

ராஜேஸ்வரிக்கு ராஜேந்திரனின் தங்கை தேவியின் குணமும் நடத்தையும் பிடிக்காது.. ராஜேந்திரன் வசதி படைத்த ராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்ட பொழுது அந்த பணத்தில் அவர்களும் பிழைத்து விடலாம் என்று அண்ணனைத் தேடி பாசத்தோடு வருவது போன்று நடித்து அங்கு வரும் போதெல்லாம் பணம் பறிக்கும் அவரது குணத்தை தெரிந்து கொண்ட ராஜேஸ்வரி அவரை ஒதுக்கி வைத்தார்..

 துக்க வீட்டில் கிடைப்பதே ஆதாயம் என்று நினைத்த தேவி ராஜேஸ்வரியின் இறப்பிற்கு பின் அண்ணனுக்கு ஆறுதலாகவும் அந்த வீட்டிற்கு மூத்த பெண் இல்லை என்றும் கூறி அங்கேயே இருந்து விட்டார்..

 தேவி அவர் கணவர் மகன் முரளி மகள் மோனிஷா என குடும்பமாக ராஜேந்திரனின் வீட்டில் தங்கி விட்டார்கள்..

கொஞ்ச நாள் போனதும் இது தான் அவர்களுக்கு தகுந்த சமயம் என்று துக்கம் நடந்த வீட்டில் ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று கூறி அவரது மகன் முரளிக்கு வந்தனாவை திருமணம் செய்து தரும்படி ராஜேந்திரனிடம் கேட்டபோது அவர் தேவியை திட்டி அனுப்பிவிட்டார்..

 தாய் இல்லை என்ற வேதனை தெரியக்கூடாது என்று தேவியும் குடும்பத்தோடு இங்கேயே தங்கிவிட்டார் அது வந்தனாவுக்கு ஆபத்து என புரிந்து கொண்ட ரிஷி திருச்சியில் இருக்கும் பெண்கள் கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் படி வந்தனாவை அங்கு அனுப்பி வைத்துவிட்டான்..

 தொடர்ந்து ராஜேந்திரனிடம் தொல்லை கொடுத்த தேவியை ரிஷியிடம் கேட்டு சொல்வதாகக் கூறி அடக்கி வைத்தார்..

அன்று ரிஷி வந்ததும் ராஜேந்திரனும் வேலை ஓய்வு பெற போவதாகவும் அவர் இருக்கும் காலத்திலாவது மகளுக்கும் மகனுக்கும் திருமணம் முடித்து பார்க்க ஆசைப்படுவதாகவும் கூறினார்..

தாய் இறந்து ஒருவருடம் முடியாமல் இந்த பேச்சு வேண்டாம் என தட்டிக் கழித்தான் ரிஷி..

தேவியின் விருப்பத்தை ரிஷியிடம் ராஜேந்திரன் கூறினார்..

ஆரம்பத்திலிருந்தே முரளியை பிடிக்காமல் அவனது பார்வையும் போக்கும் சரியில்லை என்பதை தெரிந்து தான் வந்தனாவை இங்கு இருந்து அனுப்பி வைத்தான்.. மீண்டும் அவனுக்கு வந்தனாவை திருமணம் செய்து கொடுத்து அவனது தங்கையின் வாழ்வை சீரழிக்க விரும்பவில்லை.. ராஜேந்திரனிடமும் அதைக் கூறி தனக்கு விருப்பமில்லை என்று கூறினான்..

தன்னை நம்பும்படியும் தானே திருமண வயது வந்ததும் வந்தனாவின் விருப்பப்படி ஒரு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுப்பதாகவும் கூறினான்..

ராஜேந்திரன் தேவியிடம் ரிஷி கூறியதை கூறினார்.. தேவியோ ரிஷி யார்?.. இந்த குடும்பத்திற்கு. அண்ணன் தங்கை இருவருக்கும் நடுவில் வந்து பேசுவதற்கு என்று கூறினார்..

அதற்கு ராஜேந்திரன் அவன்தான் இந்த குடும்பத்திற்கு மூத்த மகன் எல்லாமே அவரது காலத்திற்குப் பின் வந்தனாவுக்கும் சரி இந்த குடும்பத்திற்கும் சரி பிஸினஸ் என அனைத்திற்கும் பொறுப்பானவன்.. அனைத்திற்கும் உரிமை உடையவன்.. அவரும் ராஜேஸ்வரியும் என்று விருப்பப்பட்டு அவனை தத்து எடுத்துக் கொண்டார்களோ அன்றிலிருந்து அவனே அந்த குடும்பத்திற்கும் அவர்களுக்கும் அனைத்துமானவன்.. இனி ரிஷி யார்?.. என்று தவறாக அவன் மனது கஷ்டப்படும் படி பேசினால் இங்கிருந்து சென்று விடும்படி கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார் ராஜேந்திரன்..

Advertisement