Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 17.

 அவனுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது அதனால் துளசியுடன் அவன் வீட்டில் இருக்கும் நேரம் நமக்கு ரிஷிவந்தியன்..

போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது விக்ரம் சாகர்.. 

ரிஷி கையில் துளசியை தூக்கிக்கொண்டு அவனது அறைக்கு சென்று இறக்கி விட்டதும்.. அவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள்.. ரிஷியும் அவளுக்கு ஏற்பட்டிருக்கும் மன தாக்கத்தை பொறுத்துகொண்டு அவள் அடிப்பதை ஏதோ மயிலிறகால் வருடியது போன்று வாங்கிக்கொண்டு நின்றான்..

 துளசி கை வலிக்கும் வரை அடித்து ஓய்ந்து விட்டு அங்கிருந்த சுவரோடு சாய்ந்து அமர்ந்து முட்டிக்காலில் தலையை வைத்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள்..

துளசி செய்த அனைத்தையும் ரிஷி அவளது மனநிலையை இவ்வாறு வெளிப்படுத்துகிறாள் என்று தடுக்காமல் பார்த்துகொண்டிருந்தான்.. அதற்கு மேல் துளசி அழுது ஓய்ந்து அங்கே கால்களை நீட்டி படுத்து விட்டாள்..

 துளசி தூங்கி விட்டதை தெரிந்து கொண்ட ரிஷி அவள் அருகில் சென்று அவள் தூக்கம் கலையாது மெதுவாக தூக்கிக்கொண்டு மீரா நிஷா இருவருக்கும் அருகில் அவளை படுக்க வைத்தான்..

படுக்க வைத்து விட்டு நிமிர்ந்து நீண்ட பெருமூச்சு ஒன்றை எடுத்து விட்டு.

” எதற்கு?. என்ன காரணம்?. என்று தெரியாமலே நாம ரெண்டு பேரும் வாழ்க்கையில நிறைய சோதனை மற்றும் கஷ்டங்களை அனுபவித்து விட்டோம்.. இனிமேல் உன்னை அன்பாக அரவணைத்து காதலோடு இம்சை பண்றது மட்டும் தான் என்னோட ஒரே வேலை.. அதற்கு தயாராகிக் கொள் ஜிங்கினமணி.. ” என்று துளசியின் தலையை தடவி விட்டு மூவருக்கும் சேர்த்து போர்த்திவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்று விட்டான்..

ஆள் அரவமற்ற கடற்கரைக்கு வந்தவன் அந்த நள்ளிரவு நேரத்தில் கடலை பார்த்து அலைகள் கரையை தொட்டு வந்து போகும் சத்தத்தை கேட்டுக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.. அப்பொழுது அவனது அருகில் கிருஸ்ணா வந்து அமர்ந்தான்..

 அருகில் ஆளரவம் தெரிந்ததும் திரும்பிப் பார்த்த ரிஷி சந்தோஷை பார்த்து ” என்ன சாந்தோஷ் நீ இன்னும் வீட்டுக்கு போய் தூங்கலையா?… இந்த நேரத்தில் நீ இங்க என்ன பண்ற?..” என்றான் ரிஷி..

” சார் நீங்க சொன்னது உண்மையா?.. துளசி என்னோட தங்கச்சியா?..” என்று அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை ரிஷியின் வாயாலேயே கேட்டான்.. தெளிவு படுத்திக் கொள்வதற்கு..

 அதற்கு ரிஷியோ ” நான் பொய் சொல்லுவேனா?.. சந்தோஷ் என்னுடைய பேச்சுல உனக்கு நம்பிக்கை இல்லையா?.. துளசி உன்னோட தங்கச்சி தான் நாளைக்கு மார்னிங் துளசி எழுந்ததும் உனக்கு கால் பண்றேன் நீயும் அத்தை மாமா கார்த்தி எல்லாரையும் அழைச்சுட்டு வீட்டுக்கு வாங்க எல்லாரையும் வைத்து எல்லா விளக்கத்தையும் உங்களுக்கு தெரியப் படுத்துறேன்.. டைம் பாரு சந்தோஷ் ரொம்ப லேட் நைட் ஆயிடுச்சு நீ சேஃபா வீட்டுக்குப்போய்டு.. நாளைக்கு மீட் பண்ணலாம் பாய் குட் நைட்.. ” என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து கையில் இருக்கும் மண்ணை தட்டிவிட்டு அவனது காரை நோக்கி சென்று விட்டான்..

 சந்தோஷுக்கு ரிஷியின் மேல் நூறுவீதம் நம்பிக்கை இருந்தது எதற்காகவும் அவன் பொய் சொல்லவோ தேவையற்ற வேலை பார்க்கவோ மாட்டான்.. இதற்கு பின்னால் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு தனது வீட்டிற்கு சென்றுவிட்டான்..

 சந்தோஷை அனுப்பிவிட்டு கடற்கரையில் இருந்து வீட்டிற்கு வந்த ரிஷிக்கு அப்பொழுதும் அவனுக்கு உறக்கம் வரவில்லை.. இந்த ஐந்து வருடத்தில் அவனது தூங்காத இரவுகள் ஏராளம்..

 அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த காலைப் பொழுதும் ரம்மியமாக வடிந்தது..

 வழமையாகவே நேரத்தோடு எழும் துளசிக்கு மன அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட ஒரு வித அமைதி நிலை நீடித்து இன்னும் அவள் துயில் கலையவில்லை..

 நேரம் காலை 7 மணி ஆனதும் இன்னும் ரிஷியிடமிருந்து அழைப்பு வரவில்லை என்பதால் கைபேசியை பார்த்துக்கொண்டே இருந்த சந்தோஷை மீனாட்சி மிகவும் பாடு படுத்தி விட்டார்..

” கண்ணா மாப்பிள்ளைக்கு நீ போன் போட்டு பார்?.. என் பொண்ணை பாக்குறதுக்கு எல்லாம் எனக்கு நீங்க தரும் நேரம் வரும்வரை எல்லாம் காத்திருக்க பொறுமை இல்லை ..” என்று விடிந்ததிலிருந்து ஒரு கப் காபியை சந்தோஷுக்கு கொடுத்துவிட்டு அவனது காது ஜவ்வு கிழியும் வரை துளசி தான் தனது மகள் என்று தெரிந்ததும் அவளை இதற்கு முன் கோவிலில் பார்த்தது பற்றி அங்கு நடந்ததை ஒன்று விடாமல் பல முறை கூறி விட்டார் மீனாட்சி..

 மீனாட்சிக்கு ஒரு பழக்கம் உள்ளது.. திலகவதியாள் ஏற்பட்ட துன்ப காலத்திலும் அவரது மனம் கலங்கினாலும் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்ததில்லை.. மகள் இறந்து விட்டாள் என்று செய்தி கேட்ட நேரம் மருத்துவமனையில் வைத்து அழுதாரே தவிர வீட்டில் அதை நினைத்து கண்ணீர் விடவில்லை.. குடும்பத்தில் இருக்கும் பெண் வீட்டில் இருந்து கண்ணீர் விட்டால் அந்த வீட்டிற்கு அது சாபமாக மாறி விடும் என்று நன்றாக தெரிந்து வைத்திருந்த மீனாட்சி சோகம் மனசு கஷடம் என்றால் கோவிலுக்கு தான் செல்வார்.. அங்கு சென்று அந்த இறைவனை மனதார பார்த்து இருந்து விட்டு அவரது மனதில் இருக்கும் அனைத்து கஷ்டங்களையும் அவரது காலில் சமர்ப்பித்து விட்டு வந்தால் அதிலிருந்து அவருக்கு விடுதலை ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வு.. இதை பழக்கப்படுத்திக் கொண்டதால் அழும் தேவை வந்ததில்லை.. அதனால் தன் இறந்த மகள் உயிரோடு இருக்கிறாள். தனக்கு மகளாகவே கிடைக்க போகிறாள் என்ற சந்தோஷத்தை மட்டுமே வெளிப்படுத்தினார்..

 ஒரு தாய்க்கு வரக்கூடாத கொடுமையாக மகள் உயிருடன் இருந்தும் அவளுக்கு ஈமக்கிரியை செய்து வருடாவருடம் திதி செய்யும் கொடுமையும் ஏற்பட்டுவிட்டது.. அதை நினைத்து வந்த கவலையையும் சோகத்தையும் மனதின் ஆழத்தில் புதைத்து விட்டு மகளைப் பார்க்கும் ஆர்வத்தில் சந்தோஷை போட்டு பாடாய் படுத்தி விட்டார்..

 தாயின் அவஸ்தையைப் பார்க்க முடியாமல் அவனே ரிஷிக்கு அழைத்து விட்டான்..

 அழைப்பை ஏற்று ரிஷி துளசி இன்னும் எழவில்லை என்பதை கூறி விட்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் வருமாறு கூறினான்.. அவனுக்கும் ஒரு மகள் இருக்கிறாள் என்று தெரியாமல் இருந்த வலி தகப்பனாக மகளை பிரிந்து இருந்தவனுக்கு மீனாட்சியின் நிலை நன்கு புரிந்திருந்தது..

 சூர்யாவை அழைத்து நிஷாவையும் மீராவையும் ஸ்கூலுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்படி கூறி அவனுடன் அனுப்பி வைத்தான் ரிஷி..

குழந்தைகள் அவர்கள்.. அவர்களுக்கு தெரியக்கூடாது பல விஷயங்கள் இருப்பதை உணர்ந்து இன்றும் அவர்களை அனுப்பி வைத்தான்..

 ஒருவழியாக நிஷா துளசியை தட்டி எழுப்பி விட்டாள்..

 ஆழ்ந்த சயனத்தில் இருந்த துளசி மிகவும் சிரமத்தின் பின்னே கண்களை திறந்தாள்..

கண்களைத் திறந்ததும் சற்று நேரம் ஒன்றும் புரியாமல் அவள் எங்கே இருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்வதற்காக கண்களை சுழற்றி பார்த்துவிட்டு ஒரு நிலைக்கு வரும்போது நிஷா ஸ்கூலுக்கு தயாராகி சிரித்த முகத்தோடு நின்றிருந்தாள்.. அவளைப் பார்த்ததும் நேற்று நடந்தது அனைத்தையும் ஒரு முறை நினைவு கொண்டு வந்த துளசியை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு ” மம்மி போயிட்டு வரேன் வந்து நம்ம ரெண்டு பேரும் ஜாலியா விளையாடலாம். டாடி சொன்னாங்க இனி மம்மி மீரா நான் டாடி எல்லாரும் இங்கதான் இருப்போமாம் ஐ ஜாலி பாய் மம்மி.. ” என்று மிகுந்த சந்தோஷத்துடன் கூறிவிட்டு குழந்தை நிஷா அங்கிருந்து வெளியேறினாள்..

 அடுத்து வந்த மீரா தாயை பார்த்து அவளும் கட்டியணைத்து முத்தமிட்டு விட்டு ” அம்மா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்.. நீ இங்க ஏன் மா இருக்க?.. வா நாம நம்ம வீட்டுக்கு போலாம்.. அன்னைக்கு உன்னை திட்டின பாட்டி இப்பவும் இங்கதான் இருக்காங்க.. எனக்கு பயமா இருக்கு அவங்க திரும்ப உன்னை திட்டுவாங்கம்மா அதனால நமக்கு இந்த வீடு வேணாம் அம்ம. நீயும் நானும் நம்ம வீட்டுக்கு போயிடலாம்.. ” என்றாள் மீரா அவளது மனதில் தேவி துளசியை திட்டியது ஆழமாக பதிந்து விட்டது..

கீழே மீனாட்சி குடும்பம் துளசியை பார்ப்பதற்காக வந்துவிட்டதை கூறி அவளை கீழே வரும்படி அழைக்க வந்த ரிஷியின் காதில் மீரா கூறியது அனைத்தும் விழுந்து விட்டது..

ஏற்கனவே மீரா தனது குழந்தை என்ற உண்மை தெரிந்ததும். அவனது குற்ற உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.. அவன் வெளியே சாதாரணமாக காட்டிக்கொண்டாலும் மனதளவில் மிகவும் துடித்துப் போனான்.. அப்படி இருக்கும்பொழுது அவனது குழந்தை மனதில் தன்னை விட்டு பிரியும் எண்ணம் இருப்பதை தெரிந்து கொண்டவன் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானான்..

 மீரா பேசியதற்கு துளசியோ என்ன கூறுவது என்று தெரியாமல் இருந்தாள்.. அவளுக்கே உண்மை எது?. பொய் எது?. ரிஷி மீராவின் உண்மையான அப்பா தானா?..என்ற எந்தவித உண்மையும் தெரியாமல் இருக்கும் பொழுது என்னவென்று குழந்தைக்கு கூறி ஆறுதல் படுத்துவாள்..

ரிஷியோ அந்த அறையின் கதவை தட்டிவிட்டு அவனுக்கு எதுவும் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாமல் உள்ளே வந்தான்.. ” மீரா குட்டி நிஷா குட்டியும் நீங்களும் ஸ்கூல் போறதுக்கு கார் ரெடியா இருக்கு.. சூர்யா மாமா உங்களையெல்லாம் அழைச்சிட்டுப் போவார். நீங்க பத்திரமா அவரோட போயிட்டு வாங்க.. ஈவினிங் டாடி உங்களை ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டிட்டு போறேன்..” என்று கூறி மீராவை கீழே அனுப்பிவிட்டு துளசின் முன் வந்தான்..

” ப்ளீஸ் துளசி கீழே எல்லாரும் உன்னை பார்க்க வந்துட்டாங்க. நீ 5 மினிட்ஸ்ல ரெடி ஆகிட்டு கீழே வா. உனக்கு பல விஷயங்களுக்கான உண்மை எல்லாமே நான் தெரியப்படுத்துகிறேன்.. என்னை பழைய ரிஷியா நீ நம்பினால் வா.. ” என்றுவிட்டு கீழே சென்றான்..

 வந்தவர்கள் அனைவருக்கும் காபியும் பலகாரமும் கொடுத்து உபசரித்து விட்டு சந்தோஷ் பக்கத்தில் போய் ரிஷியும் அமர்ந்து துளசிக்காக காத்திருந்தான்..

 சந்தோஷிடம் சொல்லி திலகவதியையும் இங்கு அழைத்து வரும்படி கூறியிருந்தான்.. வயது முதிர்ந்த காலத்தில் உடல் நிலை முடியாமலிருக்கும் அவர் ஏன் எதற்கு என்று ஈஸ்வரமூர்த்தி கேட்டும் ” அழைத்து வாங்க எல்லாம் சொல்றேன்.. ” என்று கூறினான் ரிஷி..

 ரிஷிக்கு என்ன உண்மைகள் தெரியும் என்று அனைத்தும் திலகவதிக்கு முன்பு கூறிவிட்டான்.. அப்படி இருந்தும் எது நடக்கக்கூடாது என்று இத்தனை வருடங்களாக நினைத்திருந்தாரோ அது இன்று அவரது மகனுக்கு முன்பே அரங்கேற போவதை நினைத்து உடல் வருத்தத்தையும் விட பயம் அவரை அதிகம் வதைத்தது.. மகனும் அவரின் பாசமிகு பேரனும் அவருக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள் என்று நினைத்து பயந்ததில் அவருக்கு இயற்கை உடல் உபாதைகள் தானாகவே வந்து விட்டது..

 சற்று நேரத்தில் அனைவரையும் காக்க வைத்துவிட்டு அழகியல் லாவண்டர் நிற புடவை கட்டி தங்க பதுமை போன்று மெதுவாக மாடிப் படியிலிருந்து இறங்கி வந்தாள் துளசி..

 மகள் என்று அறியும் முன்பே கோவிலில் அவளை பார்த்து ரசித்து அவளது கஷ்டங்கள் போக வேண்டும் என்று அந்த இறைவனிடம் மன்றாடிய மீனாட்சிக்கு அவளே அவரது உயிரான மகள் என்று தெரிந்ததும்.. அவரது பாசம் மற்றும் தவிப்பை கட்டு படுத்த முடியாமல் எழுந்து அவள் அருகே ஓடி வந்து அவளை கட்டி அணைத்து.. மகள் இறந்துவிட்டாள் என்று தவித்த இந்த இருபத்தி எட்டு வருட பாசத்தையும் இந்த ஒரே நாளில் காட்டும் நோக்கத்தில் உச்சிமுகர்ந்து அதிக பாசத்தால் போராடினார் மீனாட்சி..

 துளசியால் திடீரென்று மீனாட்சியை அம்மா என்னும் ஸ்தானத்தில் வைக்க முடியாமல் தடுமாறினாள்..

 துளசியை அழைத்து வந்து மீனாட்சி அவரின் பக்கத்தில் இருக்க வைத்து விட்டு ” மாப்பிள்ளை நீங்க நேற்று டீவில சொன்னமாதிரி முதல் முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்கிறது இருக்கட்டும். இப்போசா துளசி எங்க பொண்ணு தான் என்று எப்படி உங்களுக்கு தெரியும்?.. உங்களுக்கு எப்போ கல்யாணம் நடந்துச்சு?.. உங்களோட பொண்ணுதான் மீரா என்றால் நீங்களும் ஏன் அவர்களை விட்டு பிரிந்து இருந்தீங்க?.. என்ற எங்களுடைய சந்தேகத்துக்கும் கேள்விக்கும் நீங்க பதில் சொன்னதுக்கு அப்புறம் எங்க துளசிக்கு உங்களை கல்யாணம் கட்டிக்க முழு சம்மதம் அப்படின்னு மனப்பூர்வமா சொன்னா? அடுத்த முகூர்த்தத்திலேயே விமர்சையாக ஜாம் ஜாம்னு கல்யாணத்தை பண்ணிடலாம் இப்ப நீங்க என்ன நடந்தது என்பதை விளக்கமாக சொல்லுங்க.. ” என்றார் மீனாட்சி..

 ” ரிஷிக்கு வந்த சோதனை இன்னும் முடியல போல இப்பயும் ஃப்ளாஷ்பேக் தெரிஞ்சு இந்த ஜிங்கனமணி சிரித்துக்கொண்டே சம்மதம் சொன்னால் தான் எனக்கு கல்யாணம் நடக்கும்னு சொல்லி என்னை இன்னும் சோதிக்கிறாங்க இறைவா எனக்கு ஒரு நல்லா வழி கட்டு.. ” என்று இறைவனிடம் மனதால் அவசர விண்ணப்பம் வைத்துவிட்டு அவனுக்கு தெரிந்த வகையில் அனைத்தையும் அனைவருக்கும் முன் கூற ஆரம்பித்தான் ரிஷி..

Advertisement