Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 16 

 மாலை ஆறு மணி ஆனதும் லைவ் டெலிகாஸ்ட் மூலம் விக்ரம் எவ்வாறு இந்த கேஸினுள் வந்தான். எவ்வாறு இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்தான். அதற்கு அவன் பயன்படுத்திய வழிகள் என்ன என அனைத்தையும் ஆதாரத்தோடு அவனும் அவனது டீமும் மக்களுக்கு தெரியப்படுத்த பேட்டி கொடுக்க தயாராகினார்கள்..

 பேட்டியோடு கூடிய பார்ட்டியை விக்ரம்தான் நடத்துகிறான்.

வந்திருந்தவர்கள் அனைவருக்கும் காபி மற்றும் வடை கேக் போன்ற பலகார வகைகள் கொடுக்கப்பட்டது..

 பத்து நிமிடத்தில் அனைவரும் அதை உண்டு முடித்ததும் விக்ரம் பேச ஆரம்பித்தான்.. அனைவரது கண்களும் கேமராக்களும் அவனையே போக்கஸ் பண்ணியது..

” இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் மாலை நேர வணக்கம்.. நான் விக்ரம் சாகர்.. இது என்னோட அம்மா சிவகாமி எனக்கு வைத்த பெயர்.. எனக்கு இன்னும் ரெண்டு பெயர் இருக்கு.. என்னை தத்தெடுத்த காலஞ்சென்ற முன்னாள் கமிஷ்னர் ராஜேந்திரன் ராஜேஸ்வரி தம்பதியின் தத்து புதல்வன் ரிஷிவந்தியன் நான்.. மூன்றாவதா இந்த கேஸ்க்காக நானே எனக்கு வச்சுக்கிட்ட பெயர் தான் தாதா மாமா பையா..” என்று கூறிவிட்டு. அவனின் தாய் சிவகாமியுடன் அவன் சிறுவயதில் வாழ்ந்த நிகழ்வுகளையும் அதன்பின் அவன் கொலை செய்து சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டதும். 18 வயதில் அவனுக்கான தண்டனை காலம் முடிந்ததும். அங்கு ராஜேந்திரன் அவனைப்பார்த்து தத்துப் பிள்ளையாக தத்தெடுத்து அழைத்துவந்து படிக்க வைத்து அவர்களது சொத்தில் பாதியை எழுதி வைத்தது முதல் அனைத்தையும் அவன் யார் என்று கூறினான்..

 அதைத் தொடர்ந்து ” வளர்ப்பு அம்மா ராஜேஸ்வரி அவரின் ஆசைக்கு அவங்களோட குடும்ப பிசினஸை ரிஷிவந்தியனாக பார்த்துக் கொள்கின்றேன்.. அப்பாவின் விருப்பப்படி ஐ பி எஸ் ட்ரெயினிங் முடித்து விக்ரம் சாகராக போலீஸ் டிபார்ட்மென்ட் உள் வந்தேன்.. இப்போ ஐந்து வருட அண்டர்கிரவுண்ட் ஆபீஸரா என்னோட முதல் கேஸ் சம்பந்தமான அனைத்தையும் கண்டுபிடிக்க யார்? யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் யார் எவ்வாறு?. பெண்களை கடத்துகிறார்கள் என்ன செய்கிறார்கள்? என அனைத்தையும் வேரிலிருந்து மரம் கிளைவரை வளர்ந்திருப்பது போன்று ஆதி முதல் அந்தம் வரை கண்டுபிடிப்பதற்காக நானும் எனது டீமும் மாமா பையா கடத்தல்காரர்களாக இருந்தோம்.. யாருக்கும் சந்தேகம் வராதபடி மாறுவேடத்திலும் நான் என்னை தெரியப்படுத்தாமலும் இருந்தோம்…. கடத்தல் கூட்டத்திற்குள் போலீசார் அவர்களது அடையாளத்தை மறைத்து சென்று அங்கிருந்த தகவல்களை எனக்கும் எனது டீமுக்கும் தெரியப்படுத்துவார்கள்.. அதன்மூலம் அவர்கள் யார் எங்கு எப்பொழுது பெண்களை கடத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அங்கு மாமா பையா வாகாக நானும் எனது டீமும் சென்று அந்த பெண்களை அவர்களிடம் இருந்து காப்பாற்றி விட்டு. நாங்க போட்ட வேஷத்திற்காக வெளி உலகத்தை நம்ப வைக்க அந்த பெண்களை வேறு இடத்தில் கை மாற்றுவதாக காட்டிக்கொண்டு அந்த பெண்களை மறுவாழ்வு மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்போம்.. இவ்வாறுதான் கடந்த ஐந்து வருடங்களும் மூன்று முகங்களுடன் தினமும் எனது நாட்கள் கழிந்தது.. வீட்டில் இருக்கும் யாருக்கும் இதைப் பற்றி எதுவும் தெரியாது.. ரிஷியாக வீட்டில் இருக்கும் நான்.. விக்ரமாக போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதையும் வீட்டில் இருப்பவர்கள் அறிந்திருக்கவில்லை மாமாவாக கோட்டைக்குள் இருப்பதையும் யாரும் அறிந்திருக்கவில்லை..”

விக்ரம் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு பத்திரிகை நிருபர் அவனிடம் கேள்வி கேட்டார்.. ” சார் இடையூறு பண்றேன்னு என்னை தப்பா நினைக்க வேண்டாம்.. எனக்கு ஒரு டவுட். சாதாரணமாக ஒரு மனிதனால் ஆபீஸ் பிசினஸ் மற்றும் வீடு குடும்பம் என்று அனைத்தையும் 24 மணி நேரத்தில் எங்களால் சமாளிக்க முடியலையே..! நீங்க எப்படி தினமும் 3 இடத்துல மூன்று வேடங்கள். போட்டு வீட்டையும் பார்த்து கொண்டு இருந்திங்க எங்களால் நம்பக்கூடிய மாதிரி இல்லயே சார். ” என்றார்..

 அவர் கேட்ட கேள்வியை நினைத்து சிரித்து கொண்ட விக்ரம். ” இருபத்தி நான்கு மணி நேரம் என்பது சாதாரண விஷயம் இல்லை.. அதுல எவ்ளோ பண்ணலாம் தெரியுமா?.. அரைச்ச மாவையே அரைக்காமல் இந்த லைப் எனக்கு அடுத்து என்ன நடக்கும் என்று திரில்லிங்காவும் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காவும் இருந்துச்சு.. ஆபீஸ் பிசினஸ் போலீஸ் ஸ்டேஷன் கேஸ் குற்றவாளிகள் அதோடு மாமா பையா கேங். இப்படி ஒவ்வொருநாளும் டென்சனும் அதோடு சேர்த்து சுவாரசியமாகவும் எனக்கு கடந்துடுச்சி.. சரியான டைமுக்கு வேலை செய்யணும்.. பிஸினஸில் சரிவு இல்லாமல் ஆபீஸ் பார்த்துக் கொள்ளனும்.. சரியான நேரத்துக்கு நாங்க செய்ற அண்டர்கிரவுண்ட் மிஷன் சம்பந்தமான ரிபோட் கமிஷ்னர் மற்றும் சிஎம் ரெண்டு பேருக்கும் அனுப்பனும்.. அத்தோடு நான் ஒரே நாளில் மூன்று இடத்திலேயும் இருக்கிறது இல்லை.. அன்றைய நாளில் எது முக்கியமோ அந்த இடத்தில் மட்டும் தான் நான் அதிக நேரம் இருப்பேன்.. டைம்டேபிள் போட்டு எனக்கு எல்லா வகையிலும் சந்தோஷ் கிருஷ்ணாவும் என்னோட பிஏ சூரியகுமார் இருவரும் எனக்கு ரொம்ப சப்போட்டா இருந்தாங்க அதனால என்னால ஈசியா மேனேஜ் பண்ண முடிஞ்சது.. ” என்றான் ரிஷி வந்தியன்..

 அதைக்கேட்ட பத்திரிகை நிருபர்.. ” இன்னொரு கேள்வி சார்.. அமைச்சர் சாரங்கபாணிக்கு வேண்டுமென்றால் தெரியாமலிருக்கலாம்.. ஆனா உங்க போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருக்கிற ஐஜி முத்துசாமிக்கு நீங்கதான் அண்டர்கிரவுண்ட் ஆபீஸர் மாமா பையா என்று எப்படி தெரியாமல் இருக்கும்.. அவர் எப்படி உங்களை மீறி அந்த கடத்தல் கூட்டத்திற்கு உதவி புரிந்தார்.. ” என்றார் நிருபர்..

” சரியான கேள்வி சார்.. முன்னமே சொன்னேன் தானே. பெண்களை தவறான தொழிலுக்கு பயன்படுத்தும் பொருக்கிகளை நாம பொதுவா மாமா என்று கூறவோம்.. அதனால நான் தெரிவு செய்த பெயர் மாமா மிஷன். என்னை இந்த கேஸ்க்காக அண்டர்கிரவுண்ட் ஆபீஸரா நியமித்தது நம்ம தமிழ்நாட்டோட சிஎம்.. எனக்கு பொதுவாகவே என்னோட மனசோட உள்ளுணர்வு சொல்றதை நான் அதிகம் கேட்பேன்.. அப்படித்தான் பஸ்ட் மீட் நான் கமிஷ்னர் பார்த்ததும் அவர் எனக்கு சப்போர்ட் பண்ணுவார் என்று தோன்றியதை நான் புரிந்து கொண்டு அவருடன் இந்த மிஷனை ஆரம்பித்தேன்.. அதே மாதிரி ஐஜி முத்துசாமியோட பார்வை நடவடிக்கை என எதுவுமே எனக்கு நல்லதா படலை ஆரம்பத்திலிருந்தே நான் அவரை சந்தேக லிஸ்டில் தான் வச்சிருந்தேன்.. அதனால சிஎம் நான் இங்கே வந்ததும் எனக்கு இந்த மிஷன் கொடுக்கும் பொழுது எனக்கும் சிஎம் க்கும் கமிஷனருக்கும் மட்டும்தான் இது தெரியும்.. பத்தோட பதினொன்றாக தான் ஐஜி என்னை பார்த்தார்.. எனக்கு சந்தோஷ் கிருஷ்ணா மற்றும் விஜயசாந்தி இவங்க மேல ஒரு பிடித்தமான நம்பிக்கையும் வந்தது அவங்களையும் இந்த கேஸ்ல சேர்த்துக் கொண்டேன்..” என்றான் மாமா பையா..

 வேறு யாரும் கேள்வி கேட்காததால் அவனை பற்றி கூற ஆரம்பித்தான் ரிஷி..

” ஆபீஸில் ரிஷியாக இருக்கும் பொழுது எனது நிஜ அடையாளத்தில் இருந்து நான் பண்ண வேண்டிய வேலைகள் சைன் பண்ண வேண்டிய பைல்கள் அனைத்தையும் எனது பிஏ சூரியகுமார் மூலம் எனது அறைக்கு எடுத்து வந்து அந்த வேலையை முடித்துவிட்டு அங்கிருந்து ஆபீஸின் பின்புற வழியாக மாமா பையா வாக கோட்டைக்குள் சென்று விடுவேன்.. நான் ஆபிசில் இருப்பது போன்றே எனது பிஏ சூரியகுமார் மெயின்டெயின் பண்ணிக் கொண்டு இருப்பான்.. அதனால் அங்கு இருக்கும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.. மாமா பையாவாக கோட்டைக்குள் இருக்கும் நேரத்தில் மாறு வேடத்தில் முகக்கவசம் அணிந்து இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கிருஷ்ணாவும் விஜயசாந்தியும் தவிர வேறு யாரும் என்னை பார்த்து விடாதவாறு மிகவும் பாதுகாப்பாக இருப்பேன்.. இங்கு உதவியாக இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கிருஷ்ணா இருந்தார்.. “

” ஏசிபி விக்ரம் சாகர் ஆகிய நானும்.. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவும் பெண் இன்ஸ்பெக்டர் விஜயசாந்தியும் இன்னும் சிலரும் அந்தக் கடத்தல் கும்பலுடன் இணைந்து இந்த ஐந்து வருடங்களாக முற்றிலுமாக கடத்தலே இல்லாது ஒழித்து சென்னையில் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தீவிரமாக போராடினோம்.. இதோ அதன் பலனாக இன்று உங்கள் முன் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது.. விக்ரம் சாகர் ஆக தேவைப்படும் நேரம் மட்டும் மீட்டிங் அட்டென்ட் செய்வதற்கும் ஸ்டேஷன் சென்று சைன் பண்ணுவதற்கும் கிருஷ்ணாவுடன் அங்கு செல்வேன்.. என்னுடன் மாமா பையா வாக இருக்கும் நேரத்தில் சந்தோஷ் காதலித்த பெண்தான் இன்ஸ்பெக்டர் விஜயசாந்தி என்கிற விஜி.. மூன்று இடங்களிலும் மூன்று இடத்திலும் இருக்கும்பொழுது ரிஷி – பிஏ சூரியகுமார் மாமா பையாவாக இருக்கும்போது சந்தோஷ். அதே சந்தோஷ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவாக விக்ரம் சாகராக இருக்கும்போது எனக்கு இந்த கேஸை இவ்வாறு வெற்றிகரமாக முடிப்பதற்கு அவர்களது முழு ஒத்துழைப்பையும் உதவியையும் செய்து உள்ளார்கள்.. அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.. நான் ஐபிஎஸ் ட்ரெய்னிங் முடித்ததும் ஐந்து வருடங்களுக்கு முன் சிஎம் மற்றும் டிஜிபி. கமிஷ்னர் என அனைவரும் என்னையும் எனது டீமையும் அண்டர் கிரவுண்ட் ஆபீஸராக நியமித்த நியமன கடிதம்..” என அதை எடுத்து மீடியாவிற்கு முன் காட்டினான்..

” இந்த கேஸில் எங்களது தீவிரத்தன்மையை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற வெறியை தரக்கூடிய எங்களது தாரக மந்திரம்.. எங்களுடன் எங்களது டீமும் தினமும் காலையில் அந்த நாளை எங்களது வேலையை உற்சாகமாகவும் வெறியுடனும் செய்து முடிப்பதற்கு இரத்தத்திலும் மனதிலும் ஊற வேண்டும் என்பதற்காக சத்தமாக கத்தி உரக்கச் சொல்வோம்..” இதைக் கூறிவிட்டு அந்த டீமை அருகே வரும் படி கண்களால் அழைத்தான்..

அவர்களும் பையாவின் கோட்டைக்குள் அவனது சத்தம் கேட்டதும் எவ்வாறு ஒன்று கூடுவார்களோ அதே போன்று ஒன்று கூடினார்கள்..

அனைவரும் ஒன்று கூடியதும் மாமா பையா பேச ஆரம்பித்தான்..

” நான் யார் உங்களுக்கு” என்றான் சத்தமாக..

 வழமைபோன்று அதற்கு அவர்களும்

” மாமாஆஆஆஆ பையாஆஆஆஆ ” என்று அவர்களது தாரக மந்திரத்தை உரக்கக் கூறினார்கள்..

” நாம என்ன வேலை பண்றோம். ” என்றான் பையா..

அடுத்த கூற வேண்டியதை அவர்களும் சத்தமாக கூறினார்கள்..

” மாமாஆஆஆஆ வேலை பண்றோம்..” என்றனர்..

 அவர்களது தாரக மந்திரத்தை உரக்கக் கூறியதும் விக்ரம் பேச ஆரம்பித்தான்..

” இப்படித்தான் இந்த ஐந்து வருஷமும் எங்கள் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஆரம்பித்து முடியும். கேஸ் மற்றும் குற்றவாளிகள் என அவர்களோடு அவர்களாக நாங்களும் ஒன்றிணைந்து யாருக்கும் சந்தேகம் வராதபடி இந்த கேஸை வெற்றிகரமாக கண்டுபிடித்தோம்.. நாங்கள் காப்பாற்றிய சிறுவர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பெற்றோர்களாலும் நம்பி காதலித்தவர்களாலும் அவர்களின் சொந்தங்களாலும் கைவிடப்பட்டவர்கள்.. காதலித்து ஏமாற்றப்பட்டவர்கள்.. வீட்டில் சண்டை பிடித்து வெளியே வந்தவர்கள்.. சிறு குழந்தைகளை சாக்லேட் ஐஸ்கிரீம் போன்றவற்றில் போதை மருந்து கலந்து கொடுத்து என கடத்தி உள்ளார்கள்.. எங்களால் காப்பாற்றப்பட்ட பெண்களை வெளியே தெரிய படுத்த நாங்கள் விரும்பவில்லை.. அதையும் மீறி ஒரு சில பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்த விரும்பினார்கள்.. அவர்கள் விரும்பிய காரணத்தால் இதோ அவர்கள் இங்கு வந்துள்ளார்கள்.. ” என அவர்களை பேசும்படி கூறி விட்டு சற்று தள்ளி நின்றான் ரிஷி..

அங்கு வந்திருந்த பெண்களில் ஒரு பெண். ” அனைவருக்கும் வணக்கம்.. நான் வதனி எனக்கு 20 வயது.. ஒரு பரதேசியால் வயது கோளாறு காரணத்தால் அவன் பேசிய காதல் வசனத்தில் மயக்கம் கொண்டு ஏமாந்து அவனால் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நான் ஜெகன் எனும் ஒரு கொடியவனின் கையில் எண்ணை விற்றுவிட்டு அவன் சென்று விட்டான்.. அவர்கள் என்னையும் என்னோடு சேர்ந்து நடத்திய பெண்களையும் டெல்லிக்கு அனுப்ப தயாராக இருந்த நிலையில் இதோ இந்த மாமனிதன் மாமா பையா வாக அங்கு வந்து ஜெகனிடம் இருந்து எங்களை காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்தார்.. என்னைப் போன்று ஏதோ ஒரு வழியில் ஏமாற்றப்பட்டு அல்லது கைவிடப்பட்டு விரக்தி நிலையில் இருக்கும் பெண்களை கடத்தி டெல்லி மற்றும் மும்பையில் விபச்சார விடுதிகளில் விற்று விடுகிறார்கள்.. என்னைப் போன்று பல பெண்கள் அதனால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.. இதோ ஏசிபி விக்ரம் சாகர் மாமாவாக ஜெகன் இடம் இருந்து எங்களை காப்பாற்ற என்று வந்தாரோ அன்றிலிருந்து இந்த ஐந்து வருடங்களும் அவரால் காப்பாற்றப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் காப்பகத்திலும் குழந்தைகள் சிறுவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இந்த கயவர்களின் கடத்தலில் இருந்து தப்பித்து இதோ சுய தொழில் செய்கிறோம். அத்தோடு எங்களுக்கு அவசியமாக தேவையான பயிற்சிகளும் கொடுத்துள்ளார்கள் நாங்க இனி தனியாக வெளியே சென்றால் தைரியமாக எங்களுக்கு என ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கூடிய வசதியையும் அரசாங்கத்தின் உதவியுடன் எங்களுக்கு செய்து கொடுத்துள்ளார்.. கிட்டத்தட்ட அவரது பணிக்காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றி உள்ளார்.. அவர்கள் அனைவரும் இங்கே வருவதாக கூறியும் விக்ரம் சார் வேண்டாம் என்று கூறிவிட்டார்.. வந்து மீடியாவின் முன் அவர்களை அவர்களது பெற்றோர்களும் சகோதரர்களும் பார்த்தால் அவர்களுக்கு குற்ற உணர்ச்சியாகவும் இனி அந்தப் பெண்களின் எதிர்கால வாழ்க்கை வேறு விதங்களில் பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொண்டு வர விரும்பிய பெண்களை தடுத்து நிறுத்தி விட்டார் ஏசிபி சார்.. அவரின் நல்ல மனதினையும் எண்ணத்தையும் புரிந்து கொண்ட நாங்கள் அவரை யாரும் ஒரு சொல் தவறாக சொல்ல விரும்பாமல் உண்மையை உள்ளதை உள்ளபடி மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அவரின் வார்த்தையை மீறி இன்ஸ்பெக்டர் கிருஸ்ணாவின் உதவியுடன் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.. இதோ நான் இருக்கும் காப்பகத்தில் என்னுடன் சேர்ந்து இருக்கும் பெண்களின் விவரங்கள் அரசினால் சான்று படுத்தப்பட்டவை..” என்று கூறி விக்ரம் காப்பாத்திய பெண்கள் அனைத்து காப்பகத்திலும் இருந்து வந்து அவனது வேலையை பாராட்டி நன்றி தெரிவித்தார்கள்..

 அந்த பெண் கூறியதை கேட்டு மற்றும் ஒரு நிருபர் விக்ரமிடம் கேள்வி கேட்டார்.. ” உங்களுக்கு ஏன் இந்த கேஸ்ல இவ்வளவு தீவிரத்தன்மை வந்தது என்று தெரிந்து கொள்ளலாமா?.. ” என்றார்.

 கேள்விக்கு அவனின் தாய் சிவகாமி பாதிக்கப்பட்டதை விளக்கமாக எடுத்துக் கூறினான்.. ” இந்த காரணம் தான் என் தாய் போன்று இன்னொரு பெண் இந்த கயவர்கள் வாழும் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நான் இந்த மிஷனில் தீவிரமாகவும் வெறியாகவும் ஈடுபடுவதற்கு காரணமாகும்.. இவ்வளவு தீவிரமாக நான் இருந்தும் எனது மகள் மீராவை கடத்தியுள்ளார்கள்.. ரிஷியாக நான் அவளை காப்பாற்றினேன்.. ” என்று அன்று மீரா இருந்த நிலையை நினைத்து வேதனையுடன் கூறினான ..

 இவ்வளவு போராடிய அவனின் ரத்த உயிர் மகள் மீராவை அவனுக்கே தெரியாமல் அவளின் பிறப்பிற்கு காரணமானவர்களையும் தகப்பன் பெயர் தெரியாதவள் என்ற அவச் சொல்லை கேட்டு இருக்கிறாள்.. என்பதை தெரிந்து கொண்ட நாளிலிருந்து புழுவாக துடித்துக் கொண்டிருந்தான் விக்ரம்.. அதற்கு காரணமானவர்களுக்கு கொடூர தண்டனை வழங்கவும் காத்திருக்கிறான்..

 அதனைத் தொடர்ந்து மீண்டும் விக்ரம் பேசினான்.. ” நானும் ஒரு குடும்பஸ்தன் தான்.. மனைவி குழந்தைகள் சொந்தம் என அனைவரும் எனக்கும் இருக்கிறார்கள்.. அவர்களையும் பார்த்துக்கொண்டு பிசினஸ் மற்றும் ஏ சி பி யாகவும் தினமும் பல வகையில் போராடி உள்ளேன்.. நான் திருமணம் ஆகாதவன் போன்று வெளி உலகத்திற்கு காட்ட வேண்டிய சூழ்நிலை.. எனது பதவியால் எனது குடும்பத்திற்கு எதுவும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த திட்டம்.. கேஸில் இருந்து எனது குடும்பத்தை பாதுகாத்து வைப்பதற்காக நான் அனுபவித்த கஷ்டத்தை யாரும் அனுபவிக்க கூடாது.. என்று இந்த மாமா வேலையை செய்ய ஆரம்பித்ததால் எனது குழந்தை தகப்பன் பெயர் தெரியாதவள் என்ற பட்டத்தை கேட்கும் நிலையிலக்கு தள்ளப்பட்டாள்.. இன்னார்தான் எனது அப்பா என்று எனது குழந்தைக்கு இன்றுவரை தெரியாது.. படிக்கும் ஸ்கூலுக்கும் சரி அவர்கள் இருந்த இடத்திலும் சரி யாருக்கும் நான் தான் எனது குழந்தையின் தகப்பன் என்று இதுவரை தெரியாது.. நாளொன்று ஆரம்பித்து முடியும் நேரத்தில் அவள் தகப்பன் பெயர் தெரியாதவள் என்று சக மாணவர்களால் கேலி பேச்சுக்கு ஆளாகிய குழந்தை தான் எனது குழந்தை மீரா.. இந்த கேஸினால் எனது குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எனது குடும்பத்தை விட்டு நான் விலகி இருந்தேன்..” என்றான் வேதனையுடன்.. 

 ” இதோ எனது அன்பு மனைவி ஈஸ்வரமூர்த்தி மீனாட்சியின் தவ புதல்வியும். இன்ஸ்பெக்டர் சந்தோஷ்கிருஸ்ணாவின் தங்கையும் ஆகிய துளசி என்கிற மிஸ்ஸஸ் துளசிமணி ரிஷிவந்தியன்.. இதோ எனது மூத்த மகள் மீரா ரிஷிவந்தியன்.

 எனது இரண்டாவது மகள் நிஷாஸ்ரீ ரிஷிவந்தியன்.. இதுதான் எனது அழகான அன்பான குடும்பம்.. இந்த சென்னை மாநகரத்தின் பெண்களுக்கான பாதுகாப்பிற்காக இந்த ஐந்து வருடங்களாக எனது குடும்பத்தை விட்டு நான் பிரிந்து இருந்தேன்.. இந்த கேஸை முடிவுக்குக் கொண்டு வந்த இன்றில் இருந்து எனது குடும்பத்துடன் நானும் சராசரி மனிதனாக வாழ போகின்றேன்.. இன்றோடு எனது மறைமுக ஓட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.. ரிஷிவந்தியனாக ஆபிஸிலும் விக்ரம் சாகராக போலீஸ் ஸ்டேஷனிலும் எனது கடமைகளை திறம்பட எந்த குறையும் இல்லாமல் செய்வேன்.. எங்களுக்கு நாங்கள் காதலித்ததால் நடந்த அவசர திருமணத்தை வெளியாட்கள் யாருக்கும் தெரியவில்லை.. வரும் முதல் முகூர்த்தத்தில் எனக்கும் எனது மனைவி துளசிக்கும் ஊரறிய திருமணம் விமரிசையாக நடைபெற உள்ளது.. அதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு எனது பேச்சை நிறைவு செய்கிறேன்.. ” என்று கூறி புகைப்படம் எடுப்பதற்காக அவனது குடும்பத்தோடு சேர்ந்து நின்றான்.. ஒரு முழு மனிதனாக ஒன்றாக நின்றார்கள் ரிஷிவந்தியன் குடும்பம்..

மீண்டும் இன்னொரு நிருபர் ரிஷியிடம் கேள்வி கேட்டார்.. ” உங்க குடும்பத்தை பிரிந்து இருந்தேன்.. என்று சொன்னீங்க.. அப்போ ரிஷியா உங்களோட இரண்டாவது மகளை நீங்க உங்களோட வைத்திருந்தீங்க உங்க மூத்த மகளை உங்க மனைவியோட அனுப்பி வைத்து ஏன் குழந்தைகளை பிரித்து வைத்திங்க?.. ” என்றார்..

அதற்கு ரிஷி பதில் கூறினான்.. ” என்னோட முதல் பொண்ணு மீரா அவங்க அம்மா செல்லம்.. இரண்டாவது பொண்ணு நிஷா என்னோட செல்லம்.. ரெண்டு பொண்ணுங்களையும் அம்மாவோட அனுப்பிவிட்டு இந்த டென்ஷனான நேரத்துல நான் மனசுக்கு ஆறுதல் இல்லாமல் மென்டலா ரொம்ப அப்சட் ஆகி இருப்பேன்.. அதனால் என்னோட ரெண்டாவது பொண்ணு நிஷா என்னோட இருந்து என்னை ஆறுதல் படுத்திவிட்டாள்.. காலத்தின் சூழ்நிலையால் அவர்கள் பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.. ” என்று கூறினான் ரிஷி..

அதன்பின் கமிஷ்னரும் பேசி நிருபர்களின் சிறுசிறு கேள்விகளுக்கான பதிலையும் கூறினார்..

 பிரஸ் மீட் முடிவடையும் தருணத்தில் விக்ரம் நன்றி உரை கூறும் பொழுது அனைவருக்கும் நன்றி கூறி விட்டு அவனது வளர்ப்பு தந்தை ராஜேந்திரனின் சினேகிதரான கமிஷ்னரின் உதவி இல்லாவிட்டால் இந்த கேஸை அவனால் இம்மி அளவும் நகர்த்த இயலாது என்பதை தெளிவாக எடுத்து கூறி அவருக்கு நன்றி கூறி அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றான்.. 

 பத்து மணி அளவில் ஒரு வழியாக அனைவரும் கலைந்து சென்றதும் ரிஷி துளசியின் முன் வந்து நின்று அவளது கையைப் பிடித்தான்..

 அவனது அன்பு மனைவி பத்ரகாளியாக நின்றாள்..

” போட பிராடு நீ எனக்கு தாலி கட்டினியா?.. நாம காதலித்தோமா?.. நான் உனக்கு பொண்டாட்டியா?.. ஏன் இப்படி பொய்க்கு மேல பொய்யா அடித்துவிட்ட..” நான் உன்னை எவ்வளவு நம்பினேன். நீதான் ரிஷி நீதான் விக்ரம் என்று எனக்கு கூட தெரியலையே..! நான் இங்கே இருந்த ஒரு மாசமும் விலகி தானே போனேன்.. மீராக்கு அப்பா இல்லை என்பதை தெரிஞ்சிட்டு நீ தான் மீராவோட அப்பா என்று சொல்லி இப்படி ஒரு பிராடு தனம் பண்ணிட்டியே?.. படுபாவி என்னோட வாழ்க்கையை அழிச்சீட்டியே.. நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்?.. என்று ரிஷியுடன் சண்டைக்கு சென்றாள் துளசி..

” அடியேய் வாய மூடு. இங்கே நடுக் கூடத்தில் இருந்து எல்லாத்தையும் பேச முடியாது.. நான் ரொம்ப கோபக்காரன் என்னை கோவபடுத்தாமல் வா அறைக்குப் போய் பேசுவோம்.. நீ நம்ப மாட்ட என்று எனக்கு தெரியும் நாளைக்கே மீராவை அழைச்சுட்டு ஹாஸ்பிடல் போய் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்ப்போம்.. அப்போ தெரியும் மீராவோட அப்பா யாருன்னு.. உனக்கு எல்லாம் விளக்கமா புரியும்படி எடுத்துச் சொல்றேன் முதல்ல ஊரறிய நாம வரும் முகூர்ததிலேயே கல்யாணம் பண்ணிடுவோம் அப்புறம் எல்லாத்தையும் உனக்கு விளக்கமா சொல்றேன்.. ” என்று கூறி துளசி முரண்டு பிடித்தும் அதை பெரிதுபடுத்தாமல் அழகாக பூக் குவியலை தூக்குவது போன்று கையில் தூக்கிக்கொண்டு ரிஷியின் அறைக்குள் சென்றான்..

 சந்தோஷ் கிருஸ்ணாவிற்கே விக்ரம் சொன்ன செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்றால். அவனது பெற்றோர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மீனாட்சிக்கு கேட்கவும் வேண்டுமோ?.. பெரும் அதிர்ச்சியாக இருந்தது..

 இந்த இரவு நேரத்தில் ரிஷியின் வீட்டிற்கு வர இருந்தவர்களை கிருஸ்ணா தடுத்து காலையில் போகலாம் என்று கூறி நிதானப்படுத்தினான்..

 திலகவதிக்கு தலையில் இடி விழுந்தது போன்று அதிர்ச்சியாக இருந்தது அவன் சொன்னதை செய்து விட்டான். என்று மனம் வருந்தினார்.. அதோடு மட்டுமல்லாமல் அனைத்தும் ஈஸ்வரமூர்த்திக்கும் கிருஷ்ணாவுக்கும் தெரிந்து விட்டால் இந்நிலையிலும் அவரை என்ன செய்வார்களோ? என்று சற்று பயந்து விட்டார்..

 நேரடி ஒளிபரப்பில் அவனது பேட்டியை பார்த்த சிஎம் இந்த கேஸிற்காக குடும்ப வாழ்வை இழந்ததை வருத்தத்துடன் கூறியதை கேட்டவர். பதவி உயர்வுடன் கூடிய விடுமுறையை 6 மாதத்திற்கு விக்ரமிற்கு கொடுக்குமாறு உயர் அதிகாரிக்கு மெயில் அனுப்பினார்..

 திட்டம் தீட்டி இவர்களது வாழ்வில் விளையாடிய நயவஞ்சகர்களுக்கு இனி இவர்களது வாழ்க்கை ஆனந்தமாக கழிவதை பார்ப்பதே ஆகச்சிறந்த தண்டனையாகும்..

இனிவரும் எபிகளில் திலகவதி என்ன செய்தார்?… இவர்கள் எப்படி தங்களுக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள் என அனைத்தையும் பிளாஷ்பேக் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.. 

Advertisement