Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 15.

 விக்ரம் அனைத்தையும் தயார் செய்து வைத்துவிட்டு நேரம் பார்த்து காத்திருந்தான்..

அப்பொழுது அவனது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது..

 தெரியாத புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தும் அதை எடுத்து காதிற்கு பொருத்தி பேசத் தயார் ஆகினான். ” ஹலோ யார் நீங்க?..” என்றான் விக்ரம்..

அந்த பக்கம் சற்று நேரம் அமைதியாக இருந்தான். அமைதியாக இருந்தால் காரியம் நடக்காது என்பதை புரிந்து கொண்டு பேச ஆரம்பித்தார். ” ஹலோ ஏசிபி விக்ரம் நான் யாருன்னு என்னோட குரல் வச்சும் நீங்க கண்டுபிடிக்க வில்லையா?. நான் எதுக்கு கால் பண்ணி இருக்கேன்னா?.. நீ வச்சு இருக்கிற லிஸ்ட்ல இருக்குற என்னோட நேம் நீ எடுத்துடனும் இல்லன்னு சொன்னா உனக்கு வேண்டப்பட்டவங்க உயிர் அந்த உடலை விட்டு போய்விடும்.. அப்புறம் நீயே யோசிச்சு நல்ல முடிவா எடு இன்னும் பத்து நிமிஷத்துல உனக்கு மீண்டும் கால் பண்ணுவேன்.. ” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்..

 விக்ரமும் அந்தக் குரல் யாருடையது என்பதை தெரிந்து கொண்டான்..

” ஓ சிட்.” என்று சற்று நேரம் யோசித்தான்..

அவன் யோசித்தும் அவனால் எந்த ஒரு சரியான முடிவையும் எடுக்க முடியவில்லை..

 மீண்டும் பத்து நிமிஷத்தில் சரியாக அந்த அழைப்பு வந்தது..

 இந்தமுறை அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான் விக்ரம். ” ஹலோ சார் நீங்க இப்ப இருக்கிற உயர்ந்த பதவிக்கு இவ்வளவு காலமும் செய்து இருக்கிற குற்றத்துக்கு சரியான தண்டனை கிடைத்தே ஆகவேண்டும்.. நீங்க எதை வைத்தும் என்னை பிளாக் மெயில் பண்ண முடியாது.. எல்லாருக்குமே தெரியும் நான் இன்னும் சிங்கிளாக இருக்கேன் என்று.. நீங்களா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தா என்ன தண்டனை கிடைக்கும் என உங்களுக்கே நல்லா தெரியும். இல்ல இன்னும் ஏதாவது பெரிய குற்றம் செஞ்சு கையும் களவுமா மாட்டினால் அதுக்கும் என்ன தண்டனை கிடைக்கும் என்று உங்களுக்கு நல்லாவே தெரியும். நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இப்ப நீங்க தான் யோசிச்சு நல்ல முடிவா எடுக்கணும்.. ” என்றான் சற்று கோவமாக விக்ரம்..

 அந்தப் பக்கம் விக்ரம் பேசியதை சற்று நேரம் கேட்டிருந்து விட்டு சத்தமாக சிரித்தார்..

” ஹா ஹா ஹா ஹா.. ஹலோ ஏசிபி விக்ரம் சாகர்.. யாரை எங்க கொண்டு பாதுகாப்பா வச்சிருக்கீங்க என்பதும் எனக்கு தெரியும்.. இடமும் நல்லாவே தெரிஞ்சு இருப்பதால் தான். நான் இப்ப உங்ககிட்ட டீல் பேச வந்து இருக்கேன்.. ” என்றான் அந்தப் பக்கம் உள்ளவன் குற்ற உணர்ச்சியே இல்லாமல்..

” இனி உங்க வயதுக்கும் பதவிக்கும் என்னால் மரியாதை கொடுக்க முடியாது டா.. உன்னால என்னையோ என்னைச் சார்ந்தவர்களையோ நெருங்கவே முடியாது.. உன்னால ஒரு ஆணியும் புடுங்க முடியாது.. உன்னால் ஆனதை பார்த்துக்கோ.. உனக்கு பிக்ஸ் பண்ணின நேரத்திற்கு உன் கைல விலங்கு மாட்டி இருப்பேன்.. அதை யாராலயும் தடுக்க முடியாது. அதை தடுக்க உன்னால முடிஞ்சா நீ என்ன வேணும்னாலும் முயற்சி பண்ணு ஓகே. உன்னோட டைமுக்கு நான் அங்கு இருப்பேன் பாய்..” என்று போலீஸ் என்ற திமிரும் மிடுக்கும் சற்றும் குறையாமல் அதிகாரமாக பேசி விட்டு வைத்தான் விக்ரம்..

 குற்றவாளிகளை கைது செய்யும் நேரம் நெருங்கி விட்டதை தெரிந்ததும் அவனது குடும்பத்தை யாராவது எதுவும் பண்ணுவதற்கு முன்பு அவனே அவர்களை தகுந்த பாதுகாப்போடு வேறு ஒரு இடத்தில் தங்க வைத்து விட்டான்.. இருந்தும் தற்போது பேசியவன் இடம் தெரியும் என்று சொல்லும் போது அவனது பாதுகாப்பு படைகள் மூலம் மிகுந்த நம்பிக்கை இருந்தபடியால் குடும்பத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவனது பணியை முழுமையாக செய்து முடிப்பதற்கு நேரம் வந்தவுடன் சிங்கமாக கர்ஜித்துக் கொண்டு வேட்டையாடும் களத்திற்குள் இறங்கிவிட்டார்கள் விக்ரம் சாகர் மற்றும் அவன் தயார் படுத்திய டீமை சேர்ந்த மற்ற போலீசார்களும்..

 அவர்கள் கைது பண்ண இருக்கும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் தப்பிக்க முடியாதபடி தகுந்த போலீஸ் பாதுகாப்பு கொடுத்து இருந்தான்.. அவர்களது செல்போன் வாங்கி கணக்கு என அனைத்தையும் முடக்கி விட்டான்.. யாரும் ஓடவும் முடியாது. பதுங்கவும் முடியாது..

 விக்ரமின் பிளான்படி கிட்டத்தட்ட 5 மணி நேரம் குற்றவாளிகள் அனைவரையும் கண்காணித்து அந்த இடத்திற்கே சென்று அவர்களை சுற்றி வளைத்து முறையான அரஸ்வாரண்ட் காட்டி அவர்களை கைது பண்ணி அழைத்து சென்றான்..

திட்டமிட்டபடியே ஆள் வைத்து சாரங்கபாணியை தூண்டிவிட்டு அவரது வாயாலேயே அவன் செய்த குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக்கொள்ள வைத்து அதை வீடியோ ஆதாரம் செய்து கொண்டான்.. சாரங்கபாணியின் மூலம் அவர்களுக்கு மேல் இருக்கும் அந்த முக்கிய குற்றவாளியும் ஆதாரங்களுடன் மற்றும் ஜெகன் அவனது குழு என இன்னும் சென்னையை சுற்றியுள்ள அனைத்து கடத்தல் கும்பல்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள்..

இந்தக் கூட்டத்தை பிடிப்பதற்கு விக்ரம் பல தியாகங்கள் செய்து விடாமுயற்சி செய்து போராடியதன் பலனாக ஆதாரத்துடன் கைது பண்ணினால் ஜென்மத்துக்கும் வெளியே வராமல் இவர்களுக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் என்கின்ற நிலை வந்ததும் அவர்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி இதோ அவர்களை வெற்றிகரமாக கைது பண்ணி விட்டான்..

 கமிஷ்னரை அழைத்து அவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளி நாளைக்கு கோர்ட்டில் அவர்களை ஆஜர்படுத்துவதற்கான அனைத்து ஆவணங்களையும் இருவரும் சேர்ந்து தயார்படுத்தி விட்டு நிமிர்ந்தபோது அடுத்த நாள் நன்கு விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்களே இருந்தது..

 ஓய்வெடுக்க நேரம் இல்லாமல் கோட்டிற்கு செல்வதற்கு முன் 

 திலகவதி செய்த குளறுபடியை சரி செய்வதற்கு தயார் ஆகினான்..

விக்ரம் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த ஒரு விஷயம் மட்டும் அவனால் எளிதாக முடிக்க முடியவில்லை..

ரிஷி துளசியை தேடிச்சென்று அவளது வீட்டு கதவைத்தட்டி களைத்துப் போனான்.. ஆனால் யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை.. அதன்பின் மேலும் இரண்டு மணி நேரம் அங்கேயே நின்று ஜன்னல் மற்றும் கதவு என அனைத்தையும் தட்டிப் பார்த்தான் அவனது தொல்லை தாங்க முடியாமல் மீரா தூங்கியதும் கதவை திறந்தாள் துளசி..

 அவள் சற்று கதவை திறந்ததும் ரிஷி உள்ளே வந்துவிட்டான்..

” என்ன சார் நீங்களும் என்னை நிம்மதியா இங்க இருக்க விட மாட்டீங்களா?.. நான் இங்க இருந்தும் வேற எங்கயாவது மீராவை அழைத்துக்கொண்டு போகத்தான் நீங்களும் ஆசைப்படுறீங்களா?.. அவங்க யார்?. என்னை தகாத வார்த்தைகளால் அப்படி பேசுறதுக்கு. என்ன உரிமை இருக்கு?. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் எனக்கும் என்னோட பொண்ணுக்கும் எந்த ஒரு அவப்பெயரும் வேணாம்னு சொல்லி நான் எங்கேயும் வராமல் இங்க தனியாக நானும் என் பொண்ணும் என்னோட வேலை பார்த்துட்டு நிம்மதியா இருந்தோம்.. விக்ரம் சார் தான் ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டுகொண்டார்.. நீங்க மீராவை காப்பாத்தின நன்றி கடனுக்காக நிஷாவை பார்த்துக்கொள்ள நான் அங்க வந்தேன்.. ஆனா அந்த பொம்பள என்ன எப்படி உங்களோட பணத்துக்கு ஆசைப்பட்டு நீங்க கூப்பிட்டதும் நிஷாவை பார்த்துக்கொள்ளம் சாக்கில் உங்களை வளைத்து போட்டு தகப்பன் இல்லாத மீராவுக்கு உங்களை அப்பாவா ஆக்க நான் முயற்சி செய்து இங்கே வந்து இருக்கேன் என்று எப்படி சொல்லலாம்..” என்று அழுது கரைந்தாள் துளசி..

துளசியின் துடிப்பையும் அழுகையும் ரிஷியால் பார்க்க இயலவில்லை..

இவ்வளவு துன்பத்திலும் அவனை நெருங்கவோ அவனை அணைத்து ஆறுதல் தேடவோ துளசி முயற்சி செய்யவில்லை.. இருந்த நிலையிலேயே தேவி அவளைத் திட்டியதை ஒரு ஆணிடம் கூறக்கூடிய வார்த்தைகளை மட்டும் அவளது மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காக ரிஷியிடம் கூறினாள்..

 அவனும் அவளது கண்ணியத்தை பார்த்து அவளிடம் நெருங்காமல் சற்று விலகி நின்று அவள் கூறியவற்றை கேட்டுவிட்டு துளசியிடம் பேச ஆரம்பித்தான்..

” ப்ளீஸ் துளசி அவங்களுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. இனி இவ்வாறு ஒரு தவறு நடக்காது. இங்கே இருக்கிறது உங்களுக்கு பாதுகாப்பு இல்லை.. தயவுசெய்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என்னோட வாங்க. இனிமேல் உங்களோட ஒழுக்கத்துக்கும் மீராவின் அப்பா யார்? என்கிற பேச்சு சம்பந்தமான எந்த ஒரு பிரச்சினையும் யாராலயும் வராது.. இதுதான் கடைசியும் முதலும். இனி இப்படி வராம நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை நம்பி நீங்க வாங்க.. ” என்றான் ரிஷி..

 துளசியின் மனம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு காயப்பட்டு விட்டது.. அவளால் அதை இலகுவாக துடைத்தெறிந்து விட்டு அடுத்த கட்டத்திற்கு போவதற்கு மனது தயாராக இல்லை.. 

” ப்ளீஸ் ப்ளீஸ் இப்போ நான் உங்கள கெஞ்சி கேட்கிறேன் தயவு செய்து என்னை இதுக்கு மேல எதுக்கும் கட்டாயப்படுத்தாமல். நீங்க இங்க இருந்து போயிடுங்க.. இந்த இரவு நேரத்துல நாங்க தனியா இருக்கிற இடத்துல நீங்க வந்து இப்படி நிற்கிறதை வெளி ஆட்கள் யாராவது பார்த்தா அதுவும் எனக்கு தான் பிரச்சினையா வந்து முடியும்.. என்னோட காயம் உங்களுக்கு வார்த்தையால சொன்னா புரியாது. அந்த காயத்தை பட்டவர்களுக்கு மட்டும் தான் அந்த காயத்துக்கான வலியும் உணர்ந்து கொள்ள முடியும்.. இந்த பத்து வருஷமா நான் அனுபவித்த வலிகள் எந்த ஒரு பொண்ணுக்கும் வரக்கூடாது என்றுதான் நான் தினமும் இறைவனை வேண்டுகிறேன்.. நீங்க இப்ப இந்த இடத்தை விட்டு போக வில்லை என்றால் நானும் மீராவும் நீங்க தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாத இடத்துக்கு போய் விடுவோம். அதுக்கு அப்புறம் நாங்க இங்கே இருக்கிறதும் கண்காணாத இடத்துக்கு போறதும் உங்க கைலதான் இருக்கு. எது நடக்கணும்னு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..” என்றாள் துளசி.. 

 துளசியின் மனக் கஷ்டத்தை சற்று உணர்ந்து கொண்டு அவளைக் கொலை செய்வதற்கு முயன்றார்கள் என்பதை விக்ரமின் மூலம் அறிந்து கொண்டவன். விக்ரமிடம் கை பேசியில் பேசி இங்கு நடந்தவற்றை சுருக்கமாக கூறி துளசிக்கும் மீராவுக்கும் தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தும்மாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் ரிஷி..

 அடுத்த நாள்காலை ஒவ்வொருவருக்கும் அவர்கள் புரிந்த கர்மங்களுக்கு ஏற்றவாறு நன்மைகள் செய்தவர்களுக்கு நல்ல விதமாகவும் தீமைகள் குற்றங்கள் செய்தவர்களுக்கு கெட்ட விதமாகவும் புலர்ந்தது..  

ஏசிபி விக்ரம் போலீஸ் படையுடன் கமிஷ்னரின் தலைமையில் அவனுக்கு கொடுக்கப்பட்ட மிஷனை வெற்றிகரமாக முடித்து இதோ குற்றவாளிகள் அனைவரையும் தகுந்த ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளோடு நிதிபதிகள் குழுவின் முன் உயர்நீதிமன்றத்தில் அனைவரையும் ஆஜர்படுத்தி விட்டான்..

 விக்ரம் சாட்சியாக கொடுத்த வீடியோ ஆதாரத்தில் அமைச்சர் சாரங்கபாணி ஐஜி முத்துசாமியின் முழு ஒத்துழைப்போடு பல வகையான முறைகளை கையாண்டு சென்னையை சுற்றி அவர்களுக்கு சாதகமாக குழுகளை அமைத்து குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் பின்புலங்களை நன்கு அறிந்து அவர்களை கடத்தினால் கேட்பதற்கோ போலீஸ் கேஸ் என பிரச்சினைகள் செய்வதற்கோ ஆள் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அதுபோன்றவர்களை கடத்தி பெண்களை தகாத தொழிலுக்கும் குழந்தைகளை கண் கிட்னி இதயம் போன்ற அவர்களது உறுப்புகளை எடுத்து ஏற்றுமதி செய்யும் கூட்டத்திற்கும் இவர்கள் கை மாற்றி விடுவார்கள்.. ஐஜி முத்துசாமி இந்த கடத்தலுக்கு அவருடன் சேர்ந்து சில பணப்பேய் படித்த அவரைப்போன்ற போலீசார் சிலரையும்.. சாரங்கபாணி அரசியலில் அடிமட்டத்தில் இருக்கும் தொண்டர்களுக்கு பணம் குடி பெண்கள் சகவாசம் என அனைத்தையும் ஆசை காட்டி அவர்களையும் அவர்களது திட்டத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்..

 கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டார்கள் ஐஜியுடன் சம்பந்தப்பட்ட போலீசார்.. அமைச்சருடன் சம்பந்தப்பட்ட எம் எல் ஏ அடிமட்ட தொண்டர்கள் மற்றும் ரவுடிகள். என அனைவரையும் விக்ரமின் டெக்னிக்கில் அவர்கள் செய்த குற்றங்களை வாக்குமூலமாக ஒப்புக்கொள்ள வைத்து அதை தற்போது கோர்ட்டில் ஒப்படைத்து விட்டான்..

 விக்ரம் கொடுத்த சாட்சிகள் அனைத்தையும் பொறுமையாக நீதிபதிகள் அலசி ஆராய்ந்து பார்த்து அதை குற்றவாளிகளிடம் கூறி தெளிவுபடுத்தி கொண்டு அவர்களுக்கான தண்டனை இரட்டை ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கினார்கள்..

 மக்களுக்கு நன்மை செய்யும் பதவியிலிருக்கும் ஐஜி முத்துசாமியும் அமைச்சர் சாரங்கபாணியும் கடத்தலுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து ஆதரவு நல்கிய படியால் அவர்கள் இருவருக்கும் பதவி நீக்கம் மற்றும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் செய்யுமாறு வருமான வரித் துறை யினருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது..

 இவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டதும் கோர்ட் முடியும் நேரத்தில் அமைச்சர் சாரங்கபாணி நீதிபதியிடம் அவருக்கான சந்தேகத்தை கேட்டார்.. ” சார் எங்க எல்லாரையும் கைது பண்ணி இருக்கீங்க ஆனா இந்த லிஸ்டுல பையாவை காணலையே அவனை தப்பிக்க விட்டுடிங்களா?..” என்றார்..

  அதற்கு நீதிபதி ஒருவர் ஓ அந்தக் கடத்தல் மன்னன் மாமா பையாவை தானே கேக்குற?.. அவரை என்ன பண்ணி இருக்க்கோம்.. என்று இன்னும் சற்று நேரத்தில் நாடு முழுவதும் பார்க்கும்.. அவனுக்கான ஸ்பெஷல் தண்டனை காத்திருக்கு.. ” என்றார் நீதிபதி..

 அதனைத் தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் டிவி ரேடியோ நிருபர்கள் அனைவருக்கும் இந்த கேஸ் சம்பந்தமான பேட்டியை கொடுப்பதற்காக கமிஷ்னர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது..

 இந்த கேசில் ஈடுபட்ட அனைத்து போலீசாரும் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு அன்று மாலை ஆறு மணிக்கு ஏசிபி விக்ரம் சகாரின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது..

 விக்ரம் அங்கிருந்து நேராக துளசியிடம் வந்து ரிஷியின் வீட்டிற்கு செல்லுமாறு கூறி கையோடு அவளை அழைத்துக் கொண்டு சென்று துளசியையும் மீராவையும் விட்டான்..

 அதன்பின் சற்று ஆசுவாசமாக இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்து அவனை சுத்தப்படுத்தி மாலை நேர டிஃபன் உண்டுவிட்டு கமிஷ்னர் மற்றும் அவனது போலீஸ் டீம் மீடியா ஆட்கள் அனைவரும் வந்து அமர்வதற்கு இருக்கைகள் மற்றும் அவர்களுக்கான சிற்றுண்டி வகைகள் என அனைத்து ஏற்பாடுகளையும் ஆள் வைத்து செய்ய ஆரம்பித்தான்.. மாலை ஐந்து முப்பது மணியிலிருந்து ஒவ்வொருவராக வர ஆரம்பித்துவிட்டார்கள்..

 இந்த பிரஸ்மீட்டில் தான் பல பூகம்பங்கள் வெடிக்க காத்திருக்கிறது அனைவரும் அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து என்னுடன் இணைந்திருங்கள்

Advertisement