Advertisement

 நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 13.

 ஒரு மாதம் கழித்து..

 மாமா பையா பெண்களை அழைத்துக்கொண்டு டெல்லிக்கு செல்வதை எவ்வாறோ தெரிந்து கொண்ட அமைச்சர் சாரங்கபாணி வேறு ஆள் வைத்து இந்த விஷயத்தை ஏசிபி விக்ரம்சாகர்க்கு தெரியப்படுத்தினார்..

 எலி தானே போய் வலையில் சிக்கியது போன்று அவனை காட்டிக் கொடுக்க முன்வந்த சாரங்கபாணியை அவன் வைத்த ஆள் மூலமாகவே சைபர் கிரைம் போலீஸ் மூலம் அந்த நம்பரை ட்ரேஸ் பண்ண சொல்லி யார்? என்ன? என்ற தகவல்களை எடுத்துக்கொண்டு அவனை பிடித்து விட்டான்.. அவன் மூலம் சாரங்கபாணியை நெருங்கிவிட்டான் விக்ரம்..

 அந்த அயோக்கியனோ அமைச்சர் பதவியில் இருக்கிறான். அதனால் சரியான ஆதாரங்கள் இல்லாமல் அவன் மேல் கை வைக்கவோ நெருங்கவோ முடியாத சூழ்நிலை விக்ரமிற்கு.. அவனது பின்புலத்தை தெரிந்து கொண்டவர்கள் பயத்தில் அவனுக்கு எதிராக சாட்சி சொல்வதற்கும் வரமாட்டார்கள்..

 இதற்கு ஒரே வழி போதையில் யாரிடமாவது அவனது தற்பெருமைகளை பேச வைத்து அதை வாக்குமுலமாக வீடியோ எடுத்து அதன் மூலமாக சாரங்கபாணியை கைது பண்ண முடியும் விக்ரமினால் ..

கமிஷ்னர் இந்த மிஷன் முடிப்பதற்கு கொடுத்த காலக்கெடு முடிவதற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளது.. அதற்குள் சரியாக அனைத்தையும் முடித்தாக வேண்டும்..

 சாரங்கபாணியின் மூலமாகவே வாக்குமூலம் எடுப்பதற்கு என்ன பண்ணவேண்டும் என்று விக்ரம் திட்டம் தீட்டிவிட்டான்..

 பையாவிற்கு விக்ரமை தொல்லை செய்வதே முக்கிய வேலையாக வைத்திருப்பான் போல்..

 அங்கு இங்கு என்று விக்ரமை போக்குக் காட்டி அலைய வைத்துவிட்டு அவன் தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மாற்று வழியில் பெண்களை அழைத்துக் கொண்டு டெல்லிக்கே சென்று விட்டான்..

 ஒன்றை பிடித்தால் ஒன்று தானாக சிக்கும் என்று தீர்மானித்த விக்ரம் ஒரு கட்டத்திற்கு மேல் பையாவை பின்தொடர்வதை நிறுத்திவிட்டு தனது முழு கவனத்தையும் சாரங்கபாணியின் மீது வைத்தான்..

அனைத்து கோணங்களிலும் யோசித்த விக்ரம் திடீரென்று அவனுக்கு ஒரு பொரி தட்டியது.. ஒரு பெரும் தவறு ஒன்று நடப்பதை உணர்ந்து கொண்டான்..

 சாரங்கபாணி க்கும் மேல் ஒருவன் இருப்பதை உணர்ந்து கொண்டான் இதை அனைத்தையும் சாரங்கபாணியின் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும் என்பதை அறிந்து கொண்டு நேரடியாக அவனே சாரங்கபாணியை சந்திப்பதற்கு முடிவெடுத்தான் விக்ரம்..

 இங்கு ரிஷியோ விக்ரம் செய்த மாபெரும் உதவியால் சற்று மன அமைதி அடைந்து அவனது பிசினஸில் முழு கவனத்தையும் செலுத்தி மேனேஜரினால் தட்டிப்போன அனைத்து அடர்களையும் தரமாக முடித்துக் கொடுத்து. மீண்டும் புது அடர்களை படிப்பதற்கு தீவிரமாக தனது வேலைகளை செய்தான்.. அதன் பலன் இந்த ஒரு மாதத்தில் அபரிதமானது.. அவன் இந்த பிசினசில் கால் பதிக்கும் போது இருந்த சரிவு நிலையும் தற்போது பிசினஸ் இருக்கும் வளர்ச்சி நிலையை நினைத்து இன்னும் அதிக கவனம் எடுத்து பிசினஸை பார்த்து வேறு வேறு இடங்களில் கிளைகள் ஆரம்பிக்க முடிவெடுத்தான் ரிஷி ..

 காலங்கள் யாருக்கு என்ன வைத்திருக்கும் என்பதை நாமும் அது நிகழும் போது மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்..

ரிஷி எதை விரும்பினானோ அது இன்று நடந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு சந்தோஷத்தில் வீட்டைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல் அவனது வேலையில் முழு கவனத்துடன் ஈடுபட்டு விட்டான்..

ஆனால் ரிஷியின் நினைவில் மண் விழும் நாள் தூரத்தில் இல்லை என்பதை ரிஷி வலியுடன் கூடிய அனுபவத்தில் உணரும்போது காலம் கடந்து விடும்.. என்று ரிஷி அறியாமல் வேலை வேலை என இந்த ஒரு மாதமும் வீட்டை பற்றி கவலை இல்லாமல் இருந்துவிட்டான்.. அதன் பலனும் அனுபவிப்பான்.. 

துளசி ரிஷியின் வீட்டிற்கு வந்து இன்றுடன் இருவது நாட்கள் முடிந்துவிட்டது..

 அவளது வீட்டில் அவள் எப்படி இருந்தாலோ அப்படியே ரிஷியின் வீட்டில் இருக்கும் கெஸ்ட் ஹவுசில் இருக்கிறாள்..

நேரம் காலை ஆறு மணி..

 துளசி எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வாசலில் கோலம் போட்டாள்..

அந்த நேரம் காலை ஜாக்கிங் போய்விட்டு வந்த ரிஷி அவளை பார்த்துவிட்டு அவளிடம் பேசுவதற்காக வந்தான்..

” ஹாய் குட்மார்னிங் துளசி.” என்றான் சிரித்துக்கொண்டே..

 சத்தம் கேட்டு பின்பக்கம் திரும்பி பார்த்த துளசி ரிஷி சிரித்த முகத்துடன் நின்று இருப்பதைப் பார்த்து அவள் இருகரம் கூப்பி அவளுக்கு தெரிந்த தாய் மொழி தமிழில் வணக்கம் வைத்தாள்..

” வணக்கம் சார். ” என்றாள் துளசி.

” ப்ளீஸ் துளசி வேலை சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம் எனக்கு ஒரு கப் காஃபி கிடைக்குமா?.. ” என்றான்..

” இதுல தவறா நினைக்க எதுவுமே இல்ல சார்.. நீங்க இருங்க இதோ எடுத்துட்டு வரேன் என்று விட்டு அவள் இருக்கும் கெஸ்ட் ஹுவுசின் உள்ளே சென்றாள் துளசி..

தினமும் ஸ்கூல் நாட்களில் ரிஷி நிஷாவை எழுப்பி ஸ்கூல் அனுப்புவதற்குள் மிகவும் பாடுபட்டு விடுவான்..

அவனே எதிர்பாராத அதிசயம் என்னவென்றால்?. துளசி இங்கு வந்ததும் சிறிது நாட்களிலேயே துளசியிடம் என்ன பிடித்ததோ அதிகமாக ஒட்டிக் கொண்டாள் நிஷா.. துளசி கெஸ்ட் ஹாவுசில் இருப்பதால் நிஷாவும் துளசியுடன் தான் தூங்குவாள்.. அதனால் மீராவுக்கும் நிஷாவை போன்ற சகல விதமான வசதிகளையும் வித்தியாசம் இல்லாமல் செய்து கொடுத்தான் ரிஷி..

 துளசியின் அன்பு முழுவதும் தனக்கு கிடைப்பதால் ரிஷி மீராவிற்கு செய்த இந்த மாற்றங்களை நிஷா எதுவும் தடுக்கவில்லை.. சொல்லப்போனால் இப்போது எல்லாம் நிஷா மீராவை கண்டு ஒதுங்காமல் சிரித்து பேசி பழக ஆரம்பித்து விட்டாள்..

 விக்ரமின் மூலம் ரிஷி மீராவிற்கு அந்த மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படிக்கும் குழந்தைகளால் நடந்த கொடுமையை தெரிந்து கொண்டான்.. அதன் பின் அவனும் அந்த ஸ்கூலின் ஸ்லீப்பிங் பார்ட்னராக இருப்பதால் கரஸ்போண்டட் மற்றும் பிரின்சிபல் மீராவின் கிளாஸ்டீச்சர் அனைவரையும் சந்தித்து கோபமாக மீராவின் நிலையை எடுத்துச் சொல்லி அவளை கேலி பேசிய மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பிள்ளைகளை கண்டித்து நற்பழக்கங்கள் சொல்லிக்கொடுத்து வளர்க்கும்படி கூறி அனுப்பி வைத்தான்..

தற்போது மீரா அனைத்தையும் மறந்து விட்ட காரணத்தால் மீண்டும் அவளுக்கு அதெல்லாம் தெரிய வேண்டாம் என்று அத்துடன் அந்த பிரச்சனையை பெரிது படுத்தாமல் விட்டு விட்டான் ரிஷி..

 இங்கே துளசி வந்தபின் நிஷாவுடன் சேர்த்து மீராவையும் அழைத்துக் கொண்டு தான் ரிஷி மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் இருவரையும் விட்டுவிட்டு பாதுகாப்பாக மீண்டும் வீட்டுக்கு ஈவினிங் அழைத்து வருவான்..

துளசி காஃபி போட்டு எடுத்து வந்து கொடுத்ததும் அங்கிருந்தே அதை குடித்து கொண்டு அவளுடன் எவ்வாறு பேசுவது என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி..

 அப்போது அவனது சிந்தனையை கலைப்பதற்காக மம்மிஇஇஇஇஇ என்று கத்திக் கொண்டே நிஷா எழுந்து வந்து துளசியை கட்டிக் கொண்டாள்..

 நிஷா ஒவ்வொருமுறையும் மம்மி என்று அழைக்கும் போது எல்லாம் துளசி சங்கடமாகவே உணர்வாள்.. ஆங்கில வழிக் கல்வி இல்லை என்றாலும் மம்மி என்றால் அம்மா என்று பொருள் என தெரியும் துளசிக்கு.. மீரா அம்மா என்று அழைப்பது போன்று துளசியும் மம்மி என்று அழைப்பதை அவள் சற்றும் ஏற்றுக் கொள்ளவில்லை.. அதை நிஷாவிற்கு புரியும்படி எடுத்துச் சொல்லியும் நிஷா அதை ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் மம்மி என்றே அழைத்தாள்..

 மீரா இயல்பிலேயே அமைதியான அன்பான குழந்தை. அதனால் நிஷா துளசியை மம்மி என்று அழைத்ததை அவள் தவறாக ஒன்றும் நினைக்கவில்லை..

 துளசி இங்கு வந்த புதிதில் நிஷா அவளுக்கு இட்ட கட்டளையை நினைத்து பார்த்தாள்..

 துளசி இங்கு வந்ததும் ரிஷி நிஷாவை அழைத்து துளசியை காட்டி இனி உன்னை பார்த்துக் கொள்வதற்காக துளசி இங்கு தான் இருப்பார். என்று கூறி நிஷாவை துளசி மற்றும் மீராவுடன் அன்போடு பேசி பழகி நடக்க வேண்டும். உதாசீனப்படுத்த கூடாது என்றும் கூறினான்.. ஐந்து நாட்கள் வரை துளசியை பார்ப்பதும் பேசுவதா வேண்டாமா என்று தயக்கத்தோடு கடந்து சென்று விடுவாள் நிஷா.. தினமும் அவளை பார்த்த துளசி தாயில்லாத குழந்தை தாய்க்காக ஏங்குகிறது என்பதை புரிந்துகொண்டு அவளாகவே சென்று நிஷாவுடன் பேச ஆரம்பித்தாள்.. துளசியே தன்னோடு அன்பாக பேச ஆரம்பித்ததால் அதன்பின் தயங்காமல் துளசியுடன் ஒட்டிக்கொண்டாள் நிஷாகுட்டி ..

 நிஷா மம்மி என்று அழைத்ததும் துளசி ஆன்ட்டி என்று அழைக்கும்படி நிஷாவிடம் கூறினாள்..

 அதற்கு நிஷா ஒரே பதிலாக ” நான் உன்னை மம்மி மட்டும் தான் கூப்பிடுவேன்.. மம்மி மட்டும் தான் எனக்கு இல்லை.. மம்மியை சாமிக்கு ரொம்ப பிடிச்சிட்டாம். அதனால சாமி மம்மியை மேல வர சொல்லி கூப்பிடவும் சாமிகிட்ட போயிட்டாங்கலாம். நான் குட்டி பொண்ணா இருக்கும் போது மம்மி வேணும் அழுவேன். அப்போ டாடி சொன்னார்.. இப்ப எனக்கு மம்மிதான் வேணும்.. ஆன்ட்டி வேண்டாம்.. நீ ஆன்ட்டியா இருந்தா இங்க இருக்க வேணாம். உங்க வீட்டுக்கு போயிடு. நிஷா குட்டி கூட பேசி பழகி பிரண்ட்ஷிஃப்பா இருக்கணும் என்றால் நீ எனக்கு மம்மியா மட்டும் தான் இருக்கணும்.. நிஷா குட்டி வேணுமா?. வேணாமா?.. இப்போ நீயே முடிவு எடு.. ” என்று ஒரு கையை குட்டி இடுப்பில் வைத்து. காயா? பழமா? என மறு கையின் இரு விரல்களை நீட்டி துளசியின் முகத்தையே பாவமாக பார்த்து நின்றாள் நிஷா..

 பிறந்ததிலிருந்து ஐந்து வயது வரையிலும் தாய் இல்லாமல் பிறரது வளர்ப்பில் வளர்ந்த குழந்தை. தாய்க்காக ஏங்குகிறாள். என்பதை நன்றாக உணர்ந்த துளசி அவள் வளர்ந்ததும் தான் அவளை பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு வந்தவர் என்பதை எடுத்து சொல்லி புரிய வைத்துவிடலாம்.. இப்போது குழந்தையின் மனதை புண்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்து நிஷா மம்மி என்று அழைக்கும் போது எல்லாம் அதைத் சிறு வருத்தத்தோடு கடந்து விடுவாள் துளசி..

 துளசியின் தீவிர சிந்தனையை கலைக்கும் படி ரிஷி துளசியை அழைத்தான்..

 அன்று நிஷா அவ்வாறு துளசியை மிரட்டியதை நினைத்து இன்றும் நிஷாவின் குறும்புகளை பார்த்து சிரித்தாள் துளசி..

 ரிஷி அவளை அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த துளசி ” என்ன சார் கூப்பிட்டீங்களா?. சொல்லுங்க சார்.. ” என்றாள்..

” ப்ளீஸ் துளசி சார் சொல்லாமல் நேம் சொல்லியே கூப்பிடுங்க.. நான் கேட்டுக் கொண்டதுக்காக நீங்க நிஷாவை பார்த்துக் கொள்ள வந்திருக்கீங்க மத்தபடி நீங்க இங்க சர்வண்ட் இல்ல துளசி.. அதை நீங்க மைண்ட்ல வைத்துக் கொள்ளுங்கள்.. உங்களுக்கு இன்னும் பூரணமாக ஹெல்த் குணமாக வில்லை அதனால நீங்க ஓவரா கஷ்ட பட்டு வேலை பண்ணாதீங்க.. அங்க வேலை செய்ற ஜானகியம்மாவே இங்கேயும் ஆள் வைத்து உங்களுடைய வீட்டையும் கிளீன் பண்ணிடுவாங்க.. உங்களுக்கு உணவெல்லாம் அங்கிருந்து இங்கே வந்து விடும். நீங்க விரும்பினா அங்கே வந்து சாப்பிட்டு கொள்ளலாம். அப்படி இல்லைன்னு சொன்னா இங்கே உங்களுக்கு எடுத்துட்டு வந்து கொடுத்துடுவாங்க.. நீங்க தனியா உங்களுக்குன்னு சமைச்சி வீட்டு வேலை எல்லாம் பார்த்து உங்கள் ஹெல்த் இன்னும் ஸ்பாயில் பண்ணிக்காதீங்க.. நல்லா ரெஸ்ட் எடுத்து மீராவும் நிஷாவும் ஸ்கூல்ல இருந்து வந்ததும் அவளோட ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணுங்க அது மட்டும் போதும். ” என்றான் ரிஷி..

 அதற்கு துளசியோ ” சார் ப்ளீஸ் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. விக்ரம் சார் ரொம்ப கேட்டுக் கொண்டதால்தான் நான் இங்க வர சம்மதிச்சு வந்தேன்.. எனக்கு வேலை செய்தால் தான் நீங்க சம்பளம் தரணும்.. சும்மா எனக்கு உங்க சம்பளம் பணம் வேண்டாம்.. இல்ல நிஷாவை பார்த்துக் கொள்வது மட்டும் தான் என்னோட வேலை அப்படின்னு நீங்க சொன்னால் நான் இங்க இருந்து போயிடுறேன்.. என்னோட வீட்டுக்கு. நான் இங்கே நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு போறதுக்கு உங்க கெஸ்டா வரல.. உங்களை நான் மரியாதையா சார் கூப்பிட்டாலே எனக்குப் போதும் நமக்குள்ள இப்படி ஒரு இடைவெளி இருப்பது தான் ரெண்டு பேருக்கும் நல்லது. என்னோட ஒழுக்கத்துக்கும் அது நல்லது..”

துளசி சொன்னதை கேட்டதும் ரிஷியால் பேச முடியாமல் வாய்மூடி நின்றான்..

” —- ——- “

 ரிஷியின் அமைதியை பார்த்து துளசியே தொடர்ந்தாள்.. ” இப்போ நீங்களே முடிவெடுங்க நான் இங்கே இருக்கணுமா?. இல்ல என்னோட வீட்டுக்கு போகணுமா?.. இனி நீங்க நடந்துகொள்வதில் தான் என்னோட முடிவு இருக்கு… ” என்று கூறிவிட்டு மீரா மற்றும் நிஷாவை ஸ்கூலுக்கு தயார்படுத்த சென்றுவிட்டாள்..

 ரிஷியின் மனதில் துளசி மேலான சிறு சலனம் வந்தாலும் அது மீராவின் அப்பாவிற்கு தெரிந்தால் துளசியின் வாழ்வில் பெரிய பிரச்சினையை கொண்டுவரும்.. என்று ரிஷி உணராமல் போய்விட்டான்..

 மீராவின் அப்பாவிற்கு தெரிந்தால் என்ன நடக்குமோ?..

 ரிஷியின் வாழ்க்கை தொடர்ந்து எவ்வாறு அமையுமோ.?

அவன் முன்பு முடிவு எடுத்தது போன்று பிசினஸ் மற்றும் வந்தனாவின் குடும்பம் என்று அவனது வாழ்க்கையின் மிச்ச காலத்தையும் அவனுக்கு என்று வாழாமல் கழித்து விடுவானோ? என்று காலம்தான் தீர்மானிக்கும்..

 

Advertisement