Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை..

அத்தியாயம் 12.

மாமா பையா கோட்டைக்குள்..

 சந்தோஷ் அவனுக்கு பிடித்த அந்த பெண்ணை கட்டிலுக்கு வரும்படி அழைத்து இரண்டு நாட்கள் டைம் கொடுத்திருந்தான்.. அதன் பின் ஜெகனிடம் இருந்து கைபற்றிய பெண்களை கைமாற்றி விட்டு வந்ததும்.. அவனால் அவனை மன்னிக்கவே முடியவில்லை.. அவனின் செயல் ரொம்ப கீழ் தரமாக இருந்ததை உணர்ந்தவுடன் வெட்கம் கொண்டான்.. பையாவின் கோட்டையில் அவன் சிறை வைத்திருந்த அவளை விடுவித்து விட்டு அவளை காதலித்து திருமணம் முடித்துக் கொள்வதாகவும் காத்திருக்கும்படியும் கூறி அவளுக்கு வாக்களித்தான்..

ஆனால் அவளோ சந்தோஷின் பேச்சை நம்புவதாக இல்லை.. ” ப்ளீஸ் சார் என்ன விட்டுடுங்க நான் போயிடுறேன்.. எனக்கு லவ் கல்யாணம் இதிலெல்லாம் அதிக விருப்பமில்லை நான்தான் என் குடும்பத்தை பார்த்துக் கொள்வேன் சார்.. அதனால் தான் ஊர்ல இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்ததேன்.. இப்போ என்னை காணோமுன்னு தேடுவாங்க சார்.. ஒரு மாதம் முடிந்ததும் சம்பளபணத்தை வீட்டுக்கு அனுப்பனும்.. ஆனா நான் வேலைக்கு போறதுக்கு முன்னாடி உங்க ஆளுங்க என்ன தூக்கிட்டு வந்துட்டாங்க. நான் உங்களைப் பற்றியோ உங்களோட இந்த கூட்டத்தை பற்றியோ வெளியில் சொல்லவே மாட்டேன்.. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க சார். என்னோடு சேர்த்து தூக்கிட்டு வந்த பொண்ணுங்க இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியல. ஆனா என்ன மட்டும் ஏன் இன்னும் இங்க வச்சு இருக்கீங்க?.. நீங்க நினைக்கிற மாதிரி நான் தப்பான பொண்ணு இல்ல சார்..” என்றாள் விஜி..

” ஹலோ ஹலோ வெயிட் முதல்ல ஒப்பாரி வைக்கிறதை நிறுத்து.. நானே மனசு மாறி உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. நீ என்னமோ எனக்கு கல்யாண ஜோடியா மாறாமல் பழைய பட ஹீரோயின் மாதிரி சார் வாங்க சார் என்ன காப்பாத்துங்க சார். விட்டுடுங்க சார். அம்மா தேடும் ஆட்டுக்குட்டி தேடும் என்று ஒப்பாரி பாடுற.. திரும்பவும் நான் மனசு மாறி உன்ன தவறாக தொட நினைக்கும் முன்னாடி நீயா ஒழுங்கு மரியாதையா என்ன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ரெடியாகிடு.. இப்ப என்ன உன்னோட வீட்டுக்கு நீ உழைத்து சம்பள பணம் அனுப்பனும் அவ்வளவு தானே. நானே பையாகிட்ட சொல்லி இங்க உனக்கு ஒரு வேலை போட்டு தர சொல்றேன். அப்புறம் மாசம் மாசம் சம்பளம் வரும். நீ உன் வீட்டுக்கு பணம் அனுப்பலாம் எப்படி ஐடியா?.. உனக்கு வேலைக்கு வேலையும் ஆச்சு எனக்கு உன்ன சைட் அடிச்ச மாதிரியும் ஆச்சு.. ” என்றான் சந்தோஷ்..

 சந்தோஷ் கூறியவற்றை கேட்டுவிட்டு அவள் அதற்கு உடன்படவில்லை.

” என்னது இங்க நான் வேலை பாக்கணுமா? நான் வந்தது ஐடி கம்பெனில வேலை பார்க்க. நீங்க பண்ணுற தொழிலுக்கு இங்க நான் என்ன வேலை பண்ண முடியும்?.. ” என்றாள் விஜி.

” ஹலோ என்ன ரொம்ப ஓவரா போற?.. இது என்ன அப்படி தப்பான வேலை திருடாமல் களவு எடுக்காமல் பொய் சொல்லாமல் தொழில் பக்தியோட என்ன வேலை பண்ணினாலும் அது தரமான வேலைதான்.. பார்த்தல்ல இங்கே எத்தனை பேர் வேலை பாக்குறாங்கன்னு.. இவர்களுக்கு எல்லாம் குடும்பம் பிள்ளை குட்டிகள் எதுவும் இல்லையா?.என்ன அவங்களும் குடும்பத்தோடு நல்லாத்தான் இருக்காங்க.. உன்ன அதிகமா பேச சொல்லலை. உனக்கு நான் சாய்ஸ் தரல. நான் சொல்றதை மட்டும்தான் உன்னை கேட்க சொல்றேன்.. நான் பையாகிட்ட பேசிட்டு உனக்கு என்ன வேலை தரலாம் என்று முடிவு பண்ணிட்டு வரேன் நீ ரெடியா இரு.. ” என்று கூறிவிட்டு அவள் கூறுவதை கேட்காமல் அங்கிருந்து சென்று விட்டான் சந்தோஷ்..

 சந்தோஷ் மாமா பையாவின் அறைக்குள் கதவை தட்டிவிட்டு அவனது அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்றான்.. அங்கு பையாவோ தீவிர யோசனையில் ஈடுபட்டு இருந்தான்..

 சந்தோஷ் வந்ததைப் பார்த்ததும் பையா அவனிடம் தனது திட்டத்தை கூற ஆரம்பித்தான்.. ” வா சந்தோஷ் இரு.. உன்னை தான் கூப்பிடனும் நினைத்தேன். நீயே வந்துட்ட. இப்போ என்ன பிரச்சினை என்று சொன்னா எப்படியும் நான் சாரங்கபாணியை போய்ப் பார்த்து நம்ம திட்டத்தை பற்றி சொன்னதை.. அவனை வெளிய யாருன்னு காட்டிக் கொள்ளாமல். வெளியே வேறு யார் மூலமாவது தகவல் சொல்லி விடுவான்.. அந்த ஏசிபிக்கு.. அந்த விக்ரமோ வேட்டை நாய் மாதிரி ஆக்ரோஷமாக யாரை புடிச்சி அள்ளிப் போடலாம் என்று திரிகிறான்.. ஆனால் டெல்லியில் நம்மளுடைய நிலைமை புரியாம டீலர் ஹெட் நம்மள ரொம்ப டார்ச்சர் பண்றான். நம்ம இந்த மாசம் முடிக்கவேண்டிய டார்கெட் முடிச்சு அனுப்பியே ஆகணும்.. இருந்தாலும் ரொம்ப ரிஸ்க்கான வேலை.. இப்போதைக்கு ஜெகன் கடத்தல் பிளான் பண்ணி இருக்கானா?. இல்லையா?.. என்று நமக்கு தகவல் தெரியணும்.. டீலர் கேட்ட பொண்ணுங்களை விட நம்மகிட்ட குறைவாகத்தான் இருக்காங்க.. ஜெகன் இப்போ உஷாரா இருப்பான்.. இந்த சாரங்கபாணியுடன் பார்ட்னர்ஷிப் வச்சிக்க பேசினோமே.. அதே போல திரும்பவும் அந்த ஆளை போய் சந்தித்து ஜெகனிடம் ஏதாவது கைவசம் பொண்ணுங்க இருந்தா இரண்டையும் சேர்த்து நாமலே கை மாத்துற மாதிரி பேசி பார்க்கணும்.. நீ என்ன சொல்ற வேறு ஏதாவது மாற்று ஐடியா வச்சிருக்கியா?.. ” என்றான் மாமா பையா..

” பையா நான் என்ன சொல்றேன்னா நாம திரும்பவும் அந்த ஆள் கிட்ட போயி இதை பத்தி பேசி நாம சொன்னால். அவன் நம்முடைய டீடைல்ஸ் எல்லாம் எடுத்து எங்க? யாருக்கு?. பொண்ணுங்களை அனுப்புறோம் அப்படின்ற முழு தகவலையும் ஏசிபிக்கு நீங்க சொன்ன மாதிரி கொடுத்து அனுப்பிடுவான்.. அப்புறம் கையும் களவுமாக பிடிபட்டு விடுவோம்.. நமக்கு இப்ப டில் தந்திருக்க டீலர் ரெண்டு வருஷத்துக்கு முன்னமே இருந்து நம்மகிட்ட டீல் வச்சிருக்கான். அவனையும் கைவிட்டுவிட முடியாது.. பொறுமையா நீங்க அவனிடம் இப்போ இங்க இருக்கும் நிலைமையை கொஞ்சம் சொல்லி புரியவைக்க பாருங்க.. இப்ப இருக்கிறதை அனுப்புறோம்.. அப்புறம் சேர்த்து நிலைமை சீரானதும் அனுப்புறோம்னு சொல்லி பாருங்க.. நம்ம ஆள்தானே சொன்னால் புரிந்து கொள்வான்.. என்று எனக்கு தோணுது.. எப்படி அனுப்ப போறோம்.. இனி வரும் பிரச்சினையை சீராக்க அந்த சாரங்கபாணியை போய் நீங்க பார்த்தீங்க.. ஆனா இப்ப நம்ம அனுப்பப் போவது பற்றி எப்ப.?.எங்க.? இருந்து யாருக்கு? என்ற தகவல் சாரங்கபாணிக்கோ இல்ல வேறு யாருக்குமே நம்ம ரெண்டு பேரையும் தவிர வெளியே தெரியக்கூடாது.. அப்போதுதான் அந்த ஏசிபிகிட்ட இருந்து கொஞ்சம் தப்பிக்க முடியும்.. இது உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல கொஞ்சம் யோசிச்சு பார்த்து எது சரியோ அதை நீங்களே முடிவெடுங்க.. ” என்றான் சந்தோஷ்..

” அப்போ ஓகே சந்தோஷ் நீ சொல்ற எல்லாமே சரியாத்தான் இருக்கு.. இது நமக்குள்ளேயே இருக்கட்டும் இப்போ மீட்டிங் அரேஞ்ச் பண்ணு.. பிரேயர் முடிஞ்சதும் இருக்கிற பொண்ணுங்களை அழைச்சிட்டு நானே டெல்லிக்கு போறேன்.. ஏசிபி கிட்ட மாட்டாமல் இருந்தால்.நான் திரும்ப வந்து விடுவேன்.. அப்படி மாட்டினால் இனி நீ தான் எல்லாத்தையும் என் இடத்திலிருந்து பார்த்துக் கொள்ளணும்.. இவங்க என் மேல வச்சி இருக்க அதே நம்பிக்கை அன்பு எல்லாத்தையும் இவங்க உன் மேலயும் வச்சிருக்காங்க.. எனக்கு அடுத்து இங்க எல்லாமே நீ தான் அப்படின்னு இங்க உள்ள எல்லாருக்குமே தெரியும்.. நீ எனக்கு எதிரியாதுனு நினைச்சுட்டு உன்னோட ரூமுக்குள் வைத்திருக்கிற அந்த பொண்ண சீக்கிரம் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இரு சந்தோஷ்.. நான் திரும்பி வருவேன் என்று நம்புவோம்.. அப்படி இல்லன்னா இதுதான் நம்ம சந்திக்கும் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம்.. வா இப்ப போய் மீட்டிங் அரேஞ்ச் பண்ணு நீ.. லேட் பண்ண டைம் இல்லை.. என்று பையா கூறிவிட்டு. சந்தோஷும் பையாவும் அங்கு இருக்கும் அவர்களது மீட்டிங் ஹாலை அடைந்தனர் இருவரும்..

 அனைவரும் ஒன்று கூடியதும் பையா பேச ஆரம்பித்தான்.. ” ஹாய் கைஸ் இப்போ நீங்க எல்லாருமே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து ப்ஃரீயா இருக்கீங்க.. இப்ப என்ன சொல்ல வந்தேன்னா இந்த மாசம் நாம அனுப்பவேண்டிய பொண்ணுங்களுக்கு கொஞ்சம் குறைவா இருக்கு.. அதனால இப்ப வெளியில் இருக்கிற பிரச்சினைகளும் ஓரளவுக்கு என்ன நிலைமையில் இருக்குன்னு நியூஸ் பார்க்கிற உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. அதனால இந்த முறை நானே இருக்குற பொண்ணுங்கள அழைச்சுட்டு டெல்லி போகப்போறேன்.. அந்த ஏசிபி விக்ரம் கிட்ட சிக்கினால் என்ன புடிச்சு உள்ள போட்டுருவாங்க. சிக்காம வர முயற்சி செய்வேன்.. அப்படி முடியலன்னு சொன்னா எனக்கு தர அதே சப்போர்ட் மதிப்பு மரியாதை எல்லாத்தையும் சந்தோஷ்க்கு கொடுத்து நீங்களும் அவனை வழிநடத்தி அவனும் உங்களை வழி நடத்தி நான் வெளில வரும் வரைக்கும் தொழிலை நல்லபடியா நடத்தணும்.. இந்த இடத்தை கண்டுபிடித்து ஏசிபி இங்க வர வாய்ப்பு இல்லை.. அதனால பாதுகாப்பா இருங்க.. நம்ம டெல்லி டீலர் சொன்ன கால அவகாசம் ரொம்ப குறைவா இருக்கு நான் இன்னைக்கு நைட்டு இப்பவே கிளம்ப போறேன்.. லெட்ஸ் ஸ்டார்ட் த பிஃரேயர்.. ” என்றான் பையா..

 அவன் கூறியவற்றை கேட்டுவிட்டு அனைவரும் பிஃரேயர் பண்ண தயாராகினார்கள்..

” நான் யார் உங்களுக்கு?.. ” என்றான் பையா..

 கூடியிருந்த அனைவரும் ஒன்றாக

” மாமாஆஆஆஆ பையாஆஆஆஆ” என்றனர் சத்தமாக.

 அடுத்து ” நாம் என்ன வேலை பண்ணுறோம்?.. ” என்றான்.

” மாமாஆஆஆஆ வேலை பண்றோம்..” என்றனர் சத்தமாக..

 இம்முறை அதைக்கேட்டதும் அவனது உடல் ஒருமுறை ஆடி அடங்கியது இந்த முறையும் சந்தோஷ் அதை பார்த்து அவனது கையை பிடித்து ஆறுதல் கூறினான் கண்களால்..

அதை பார்த்து கண்களை மூடி ஒரு நிமிடம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு பேசினான் பையா..

” தினசரி நாம வேலை ஆரம்பிக்க முன்னர் நம்மளோட இந்த திருவாசகத்தை எல்லாரும் ஒரு முறை பிரேயர் பண்ணிட்டு தான் நம்ம தொழிலை ஆரம்பிப்போம்.. அதே மாதிரி நான் இல்லாத நாட்களையும் நீங்க அதை கடைப்பிடிக்கணும் ஓகே.. எனக்கு டைம் இல்ல எல்லாரும் கலைந்து போய் ரெஸ்ட் எடுங்க.. நம்ம இடத்துல ஆரம்பித்த மாங்கல்யமும் மாப்பிள்ளையும் என்ற திருமணசேவை நிலையத்திற்கு பதிய வந்த பொண்ணுங்களில் கடத்தப்பட்ட பொண்ணுங்களை நான் டெல்லிக்கு அழைச்சிட்டு போய் டீலரிடம் கை மாத்தி விடப் போறேன் ஓகே.. திரும்ப சென்னைக்கு வந்தா சந்திப்போம்.. எல்லாரும் பாதுகாப்பாய் இருங்க.சந்தோஷ் உங்களை வழிநடத்துவான் நான் வரும்வரை.. ” என்று கூறிவிட்டு சந்தோஷை அழைத்துக் கொண்டு அருகில் பெண்களை வைத்து இருக்கும் இடத்திற்கு சென்றனர் இருவரும்..

 சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு சென்று அங்கு இருந்து பாதுகாப்பாக பெண்களை அழைத்துக்கொண்டு சந்தோஷிடம் கூறிவிட்டு பையா டெல்லிக்கு புறப்பட்டான்..

 கோவிலுக்கு வந்த துளசியை அவளது நேர்த்திக்கடன் முடிந்ததும் அவளது பர்ஷில் இருந்து விழுந்த புகைப்படத்தை எடுத்து பார்த்து அவள் யார் என்று அறிந்து கொண்ட அந்த நபர் ஆட்களை அழைத்து துளசியை கொல்லும்படி பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்..

 துளசியும் மீராவை அழைத்துக்கொண்டு ஆட்டோ தேடி ஆட்டோ கிடைக்காமல் இருவரும் பேசிக்கொண்டே வீட்டுக்கு செல்லும் பாதையில் நடந்தார்கள்..

 விக்ரம் மீராவின் பாதுகாப்பிற்காக காவலுக்கு வைத்த போலீஸ் மஃப்டியில் அவர்களை பின்தொடர்ந்து கோவிலுக்கு வந்தார்.. திடீரென்று துளசி நடந்து செல்லும்போது அவர்களை இடிப்பது போன்று வந்த லாரியை பார்த்துவிட்டு அவருக்கு சந்தேகம் ஏற்பட உடனடியாக விக்ரமிற்கு அழைத்து விவரம் கூறி அவனை விரைவாக வரும்படி கூறிவிட்டு போனை வைத்து அவரும் வேகமாக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்..

  கொஞ்ச காலம் அமைதியாக இருந்த கடத்தல் கும்பல் மீண்டும் மீராவை தாக்க முற்படுவதை பார்த்து கவலையுடன் வேகமாக அவள் நடந்து போகும் அந்த இடத்திற்கு வந்தான் விக்ரம்..

 அந்த போலீஸும் ஏசிபி விக்ரமும் அவர்களை காக்க வரும் முன் அவளுக்காக காலம் விதிக்கப்பட்ட அந்த சம்பவம் நடந்தேறி விட்டது..

 துளசி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது லாரி வேகமாக வருவதை பார்த்தாள்.. லாரி வரும் விதம் சரியில்லை என்று தெரிந்ததும் எதோ விபரீதம் என்று புரிந்து மீராவை மெதுவாக புல்தரையில் தள்ளிவிட்டு துளசி திரும்பும்போது சரியா அந்த லாரி வந்து அவளை அடித்து விட்டது.. அடிபட்ட இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள் துளசி..

யார் எவ்வாறு முயற்சித்தாலும் காலம் ஒன்றை நடத்துவது என்றால் அது நடந்தே ஆகும்..

அதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல..

 துளசியை கொல்லச் சொன்னது யார் எதற்காக?..

Advertisement