Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 11.

 மேலும் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் துளசி மீராவை மிகவும் கண்ணும் கருத்துமாக அவளது வீட்டில் வைத்து பார்த்துக் கொள்கிறாள்..

 விக்ரம் யோசித்து பதில் சொல்லுமாறு அவகாசம் கொடுத்தும் துளசி மறு நாள் காலையில் விக்ரம் வந்ததும் திட்டவட்டமாக ரிஷியின் வீட்டுக்கு போக விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாள்..

 விக்ரம் காரணம் கேட்டதற்கும்

 வேலை செய்வதற்காகவே இருந்தாலும் தற்போது மீராவின் உடல்நிலை மற்றும் மனநிலை கருதி இன்னொருவரின் வீட்டில் அவளால் மீராவை வைத்து கொண்டு இருக்க முடியாது. என்றும் யாராவது ஒருவர் மீராவின் மனதை காயப்படுத்துவதற்காக வேண்டும் என்றே மீராவின் அப்பாவைப் பற்றி கேட்பார்கள்.

 அதன் மூலம் பழையவற்றை மறந்திருக்கும் குழந்தை மீண்டும் மனதளவில் காயப்படுவதை அவள் விரும்பவில்லை. என்றும் அவளிடம் இருக்கும் சேமிப்பை வைத்து மீராவிற்கு குணமாகும் வரை அவர்களது வாழ்க்கை பிழைப்பு செல்லும். என்றும் கூறிவிட்டு. விக்ரமிற்கும்,ரிஷியிடமும் நன்றி தெரிவித்ததாக கூறும்படி சொல்லிவிட்டு. தனது மகளை காப்பாற்றிய நன்றி என்றும் அவளது மனதில் இருக்கும். என்றும் அவளை தவறாக நினைக்க வேண்டாம். அவளது மகளின் மன நிலையே தற்போது தனக்கு முக்கியம் என்றும். இனிவரும் காலங்களில் அவளது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் மீராவை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வதாகவும் கூறிவிட்டு. மகளது ஸ்கேன் ரிப்போர்ட் வந்ததும் தலையில் பயப்படும்படி வேறு பிரச்சினை எதுவும் இல்லை என்று டாக்டர் கூறியதும் மீராவை மருத்துவமனையிலிருந்து அவளது வீட்டிற்கு துளசி அழைத்து சென்றுவிட்டாள்..

மீராவிடம் இருந்து ஓர் இம்மியும் அசையாமல் மகளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் துளசி. அவள் தூங்கினால் அந்த நேரத்தில் அவளது வீட்டு வேலைகளை செய்வதும் அவள் விழித்து இருந்தால் அவளது மனநிலைக்கு ஏற்றவாறு அவளுடன் பேசி அவளுடன் சிரித்து விளையாடி என்று குழந்தை மீராவிற்காக துளசியும் தற்போது ஒரு குழந்தையாகவே மாறி விட்டாள் என்றுதான் கூறவேண்டும்..

 காலையில் எழுந்தால் துளசி வேலைக்குப் போவதும் மீரா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் போவதுமாக அவர்களது நாட்கள் கடந்துவிட்டது.. ஞாயிற்றுக்கிழமைகளிலும் துளசியின் விடுபட்ட வீட்டு வேலைகள் இருப்பதால் அதை அவள் முடிக்க நினைத்து லீவ் நாளிலும் ஓய்வில்லாமல் அவள் வேலை செய்வதாலும் மீராவுடன் நேரம் செலவழிக்க அவளுக்கு முடியவில்லை..

 அதற்கெல்லாம் சேர்த்து வைத்து மகள் குணமாகும் வரை உள்ள காலத்தை மகளது மனநிலையை சந்தோஷமாக வைத்திருப்பதே குறிக்கோளாக கொண்டு துளசி மீராவுடன் கவலைகளை மறந்து சிரித்து பேசி நேரத்தை சந்தோசமாக மகளுடன் செலவழிக்கிறாள்..

 இவ்வாறு இவர்களது நாட்கள் அடுத்து வரும் பூகம்பத்தை துளசி எதிர்கொள்வதற்கு சிறிது கால அவகாசம் கொடுத்து விட்டு நாட்கள் சென்றது..

 ரிஷியோ மிகவும் கோபத்தோடு இருந்தான்..

 அன்று மீராவின் நிலையை கண்ணார கண்டு துன்பப்பட்டவன் அவன் ஒருவனே.. அன்றே மீராவின் பெற்றோரை மனதில் வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தான்.. மருத்துவமனையில் சேர்த்ததும் துளசி மட்டுமே மீராவின் தாய் தந்தை இல்லை என்று தெரிந்ததும் மீராவை நினைத்து சற்று கவலை கொண்டு மீராவுக்கான சகல உதவிகளையும் செய்தான்.. அவன் அவ்வாறு மீராவை நினைத்துக் கவலைபட்டு கொண்டிருக்க. துளசியோ சற்றும் பொறுப்பற்ற செயலாக மீராவிற்கு இருக்கும் ஆபத்தை நன்கு விக்ரம் எடுத்துக் கூறியும் புரிந்துகொள்ளாமல் அவளது வீட்டிற்கு பாதுகாப்புகள் எதுவுமின்றி மீராவை அழைத்துச் சென்றுவிட்டாள்..

 துளசியின் இந்த முட்டாள்தனமான செயலில் தான் ரிஷி அடுத்து மீராவின் நிலை என்னவாகுமோ என்று நினைத்து துளசியின் மேல் கடும் கோபத்தில் இருந்தான்.. 

 மோனிஷா உயிரோடு இருந்தாலாவது ரிஷியால் துளசியிடம் மீராவிற்கு வர இருக்கும் ஆபத்தை எடுத்துக்கூறி புரியவைத்து ஏதாவது உதவி செய்ய முடியும். அவனுக்கும் மனைவி இல்லாமல். துளசிக்கும் கணவன் இல்லாத நிலையில் அவன் ஏதாவது உதவி செய்யப் போய். அது அவளது ஒழுக்கத்திற்கு அவப்பெயரை கொண்டு வந்துவிடும் என்று பயந்து ஒதுங்கி இருந்தான்..

 இவ்வாறு ஒதுங்கி இருந்தால் சரி வராது என்று முடிவு எடுத்து மீண்டும் விக்ரமிடம் உதவியை நாடினான்.

 விக்ரமும் ரிஷியின் வேண்டுகோளை ஏற்று துளசிக்கே தெரியாத வகையில் யாரும் சந்தேகப் படாதவாறு அவர்களது வீட்டை கண்காணிப்பதற்கு மப்ஃட்டியில் போலீசை அனுப்பி இருந்தான்..

 வார வாரம் துளசி கடைக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களையும் மீராவிற்கு தேவையான மருந்தையும் வாங்கிக் கொண்டு வருவதால். அவள் வீட்டை விட்டு அதிகம் வெளியே செல்ல வாய்ப்பு அமையவில்லை.. அதனால் போலீஸ் அவர்களை கண்காணிப்பது துளசிக்கு தெரியவில்லை..

 இவ்வாறே நாட்கள் யாருக்கும் எதற்காகவும் நிற்காமல் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு ஒரு மாதம் கடந்து விட்டது..

 மீராவிற்கும் காயங்கள் ஆறி பூரணமாக குணமாகி விட்டாள்.. ஆனால் இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து அவளை ஸ்கூல் அனுப்புவதற்கு முடிவெடுத்து இருந்தாள் துளசி..

 இங்கோ விக்ரம் மிகுந்த மனச்சோர்வுடனும் ஒருவித அழுத்தத்தோடும் இருந்தான்..

 அவனுக்கு ஒரு நாள் விடிவதும். அதே நாள் முடிவதும். ஒரு வித பதட்டத்தையும் குற்ற உணர்ச்சியையும் கொடுத்தது..

 கமிஷ்னரின் உதவியுடன் மீரா கண்விழித்து நல்லபடியாக வீட்டிற்கு வந்ததும் ஆதாரப்பூர்வமாக அவளது மருத்துவ ரிப்போர்டையும் மீராவின் வாக்குமூலத்தையும் இணைத்து ஊடகங்களுக்கு விக்ரம் அனுப்பி வைத்தான்.. அதன் மூலம் அவனுக்கு இரண்டு நன்மைகள்..

 ஒன்று மீரா எந்தவித பெரிய ஆபத்தும் இல்லாமல் கடத்தல் கூட்டத்தில் இருந்து தப்பித்து வந்து விட்டால் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்திய சந்தோஷம். இரண்டாவது அவளுக்கு பழையது அனைத்தும் மறந்துவிட்டது குற்றவாளிகள் யாரையும் தெரியவில்லை அதனால் வேறு வழியில்தான் இந்த கேஸை விசாரிக்க ஆரம்பிக்க வேண்டும். என்று போலீஸ் கவலைப் படுவது போன்று குற்றவாளிகள் ஒளிந்து கொள்ள உதவிய அதே மீடியாவை வைத்து அவர்களை வெளியே எடுப்பதற்கான வேலையை செய்து விட்டான் விக்ரம்.. 

கமிஷ்னர் அவனுக்கு கொடுத்த மூன்று மாத இடைவெளியில் இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவனால் இன்னும் ஒருவரையும் கைது பண்ணவோ! யார்? அந்த பெரும்புள்ளி என்று கண்டுபிடிக்கவோ முடியாத கையாலாகாத நிலையில் நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறோம். என்ற குற்ற உணர்ச்சியும் அவன் கடத்தும் ஒவ்வொரு நாளும் கடத்தப்பட்ட பெண்கள் ஒவ்வொரு வித பிரச்சினைகளை சந்திப்பார்களே என்ற மன அழுத்தமும் அவனை மிகவும் சோர்வடைய வைத்து விட்டது.. துளசியின் வீட்டிற்கு காவல் போட்டும் யாரும் மீராவை எந்த விதத்திலும் தொல்லை செய்யாததால்..

அந்த வழியும் விக்ரமிற்கு அடைக்கப்பட்டது..

 இங்கு ரிஷியின் வீட்டில் ஜெர்மனியில் இருக்கும் அவனது தங்கை வந்தனா குழந்தை பிறப்பதற்கு ட்ரீட்மெண்ட் பண்ணுவதால் அவளுக்கு உதவியாக ரிஷியின் அத்தை தேவி மற்றும் அவரின் கணவரும் ஜெர்மன் சென்று விட்டார்கள்..

 அதனால் ஸ்கூல் மற்றும் வீட்டிலும் நிஷாவின் பொறுப்பு ரிஷியிடம் அதிகம் வந்துவிட்டது..

 அவனோ பிசினஸ் பார்க்கவும் மற்றும் வீட்டில் நிஷாவை சமாளிப்பதற்கும் மிகவும் திண்டாடினான்..

 இந்த நேரம் அழையாமல் துளசியின் நினைவு அவனுக்கு வந்து சென்றது..

 ஆணோ பெண்ணோ ஒரு குழந்தையை தாய் தனியாகவே நல்லொழுக்கத்தோடும் கட்டுப்பாடுகலோடும் வளர்க்க முடியும்..

 அதற்கு உதாரணம் துளசியும் துளசி வளர்த்த மீராவும்..

 துளசி அவளின் வறுமையின் காரணமாகவே மீராவிற்கு சரியான பாதுகாப்பு கொடுக்க முடியாமல் போனதால் குழந்தை கடத்தப்பட்டால்.

 ஆனால் இங்கோ ரிஷி ஒரே ஒரு பெண் குழந்தை நிஷாவை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டங்களை அனுபவித்தான்..

 துளசியும் வேலைக்கு சென்று வந்து தான் இந்த பத்து வருடமாக தனி ஒருவளாக மீராவை வளர்த்தாள்..

 ரிஷியின் அத்தை தேவி வீட்டிலிருந்தும் அவர்கள் நிஷாவை கவனித்துப் பார்த்துக் கொள்வதில்லை.. இருந்தாலும் நிஷா அவர்களின் பேத்தி அதனால் அவள் வீட்டில் இருக்கும் போது பாதுகாத்துக் கொள்வார்கள். என்ற நம்பிக்கையில் தான் மோனிஷா இறந்தபின் இந்த ஐந்து வருடங்களும் பிசினஸ் ஆபீஸ் என்று மறு திருமணம் பற்றிய சிந்தனையோ கவலையோ எதுவும் இன்றி கடந்து வந்தான்.. 

 தற்போதும் நிஷாவை பார்த்துக் கொள்வதற்காக என்று அவனுக்கு மறு திருமணம் செய்வதில் துளியும் விருப்பமில்லை..

 இன்னும் இரண்டு வருடங்கள் கடந்தால் 40 வயது ஆகி விடும் அதனால் இனி ஒரு திருமணம் என்பது அவனது வாழ்வில் தேவையற்ற ஒன்று என நினைத்துக் விட்டான். இனிவரும் காலங்களில் நிஷா மற்றும் வந்தனாவின் குடும்பம் குழந்தைகள் மற்றும் ஆபிஸ் பிசினஸ் என்று அவனது வாழ்க்கைக் காலத்தை கழித்து விடலாம் என்று நினைத்துவிட்டான்..

 எவ்வாறாயினும் வந்தனாவின் ட்ரீட்மென்ட் முடிந்து நல்லபடியாக அவளுக்கு குழந்தை உண்டாகியதும் அதன் வளர்ச்சியை பார்த்துவிட்டு தான் தேவியும் அவரது கணவரும் மீண்டும் நாடு திரும்புவார்கள்.. அதுவரை ஜானகியின் பொறுப்பிலும் அவனது பொறுப்பிலும் தான் நிஷா இருந்தாக வேண்டும்..

 அதனால் வேலைகளை சற்று குறைத்து கொண்டு நிஷாவுடன் நேரம் செலவழிக்க முயற்சி செய்தான். ஆனால் அவனால் முடியவில்லை.. ரிஷி ஜெர்மன் சென்றிருந்த நேரம் மேனேஜர் செய்த குளறுபடியால் நஷ்டமடைந்த பொருட்களை மீண்டும் புதிதாக கஸ்டமருக்கு கொடுப்பதற்கு அதிக கவனத்துடன் உழைத்தான் ரிஷி. அவன் நிஷாவுடன் நேரம் செலவழிக்கவில்லை என்றால் அவளது குணம் இன்னும் சற்று மூர்க்கமாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. என்று ரிஷிக்கு பயம் வந்துவிட்டது. பிடிவாதம் அதிகமாகிவிட்டால் இனிவரும் காலங்களில் அவள் வளர்ந்தாலும் அவனால் அவளை கட்டுபடுத்த முடியாமல் போய்விடும் என்றுதான் பயந்தான்..

அழையாமல் துளசியின் நினைவு வந்ததால் துளசியின் மேல் கோபமும் வந்தது.. விக்ரம் கேட்டதற்கு ஒத்துக்கொண்டு துளசி தனது வீட்டுக்கு வந்து இருந்தால் அவனுக்கு நிஷாவை பார்த்துக் கொள்வதற்கு இவ்வாறு ஒரு கஷ்டமான நிலை ஏற்பட்டு இருக்கப்போவதில்லை..

விக்ரம் செய்த பாதுகாப்பினால் மீராவை தாக்குவதற்கு கடத்தல் கூட்டத்தில் இருந்து யாரும் வரவில்லை அது துளசிக்கு ஒரு சாதகமாக அமைந்துவிட்டது.. ரிஷியின் வீட்டுக்கு போகவில்லை என்பதால் அவளுக்கு இழப்பு எதுவும் இல்லை..

 ஆனால் அவள் வராமல் போனதால் இன்று நிஷாவை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறான் அந்த கோபம்தான் துளசி மேல் ரிஷிக்கு வந்தது..

 ஆனால் அவன் குழந்தை மீராவை காப்பாற்றியதற்காக அவளும் அவனுக்கு உதவி செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.. துளசியை வேலைக்கு தான் வரும் படி விக்ரமிடம் கூறி இருந்தான் ஆனால் அதற்கும் அவள் உடன்படவில்லை..

 துளசி அவளது மகளிற்காக யோசித்து வராமல் இருந்தாள்.. என்றால் 

 ரிஷி தனது மகளுக்காக யோசித்தான்..

 நாட்கள் கடந்து செல்வதால் இனி அவளால் வேலைக்கு செல்லாமல் சமாளிக்க முடியாது என்ற நிலை வந்ததும். துளசி மீராவிற்காக அவள் செல்லும் சிவன் கோயிலில் அவள் குணமானதும் அங்கப்பிரதட்சணை செய்வதாக வேண்டிக் கொண்டிருந்தாள்.. நேர்த்திக்கடனை இன்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றிவிட்டு வரும் திங்கட்கிழமையில் இருந்து வழமை போன்று மீராவை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு அவளும் வேலைக்கு செல்ல நினைத்து இருந்தாள்..

 அதனால் அதி காலையில் எழுந்து அவளது வேலைகளை முடித்துக்கொண்டு மகளையும் தயார்படுத்தி அவளும் தயாரானதும் மீராவையும் அழைத்துக்கொண்டு சிவன் கோயிலுக்கு வந்தாள் துளசி..

 அவளது வாழ்வில் காலம் வைத்த துன்பத்தின் மிச்சத்தை நோக்கி அவள் பயணிப்பதற்கான நேரம் வந்துவிட்டது போல்..

மீராவின் பெயரில் அர்ச்சனை பண்ணுவதற்கு அர்ச்சனை தட்டு வாங்க பர்சை திறந்து பணம் எடுக்கும் போது அவளது பர்சில் இருந்து ஒரு புகைப்படம் கீழே விழுந்தது.. அதை துளசி கவனிக்காமல் பணத்தை செலுத்தி அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டு கோயிலுக்குள் சென்று விட்டாள்..

அந்த புகைப்படம் யாரின் கண்ணில் படக்கூடாதோ சரியாக காலமும் அவரது கண்ணிலேயே தென்பட வைத்தது..

 கீழே விழுந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்த அந்த நபர் துளசிக்கான அடுத்தகட்ட துன்பத்தை தருவதற்கு தயாராகினார்..

யார் அது?.

ஏன் துளசிக்கு துன்பமளிக்க வேண்டும்..?

இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வதற்கு தொடர்ந்து என்னுடன் பயணியுங்கள்.. ????

Advertisement