Advertisement

 நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை.

அத்தியாயம் 10.

 சென்னை மாநகராட்சி பலதரப்பட்ட மக்களையும் தன்னகத்தே உள்ளடக்கி தமிழ்நாட்டின் தலைநகரமாக சிறந்து விளங்குகிறது..

 இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா அன்றைய நாளுக்கான டியூட்டி முடிந்ததும் வீட்டிற்கு வந்தான்..

 கடந்த மூன்று வருடமாக அவனுக்கு திருமண பேச்சை  வீட்டில் அதிகம் அவனது பாட்டி திலகவதி எடுப்பதால் அவனுக்கு வீட்டில் இருப்பதற்கே விருப்பம் இல்லாமல் வேலை என்று சுற்றி திரிந்தான்..

 கிருஷ்ணாவின் அப்பா ஈஸ்வரமூர்த்தி மற்றும் அம்மா மீனாட்சி இருவரும் காலேஜில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து திருமணம் முடித்தவர்கள்..

 திலகவதி  இன்றுவரை பழைமைவாதியாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவர்.. அவருக்கு காதல் வேற்று சாதி மத மக்கள் என எதுவும் பிடித்தமில்லை..

 அப்படி இருந்த அவருக்கு மகனாகப் பிறந்த ஈஸ்வரமூர்த்தி தாய்க்கு பிடிக்காத இரண்டையும் ஒன்றாகவே மீனாட்சியை  திருமணம் செய்ததன்  மூலம் செய்து முடித்து விட்டு தாயின் முன்பாக வந்து நின்றார்.. 

 திலகவதி கணவன் மற்றும் வேறு குழந்தைகள் என்று யாரும் இல்லாமல் ஈஸ்வரமூர்த்தியே தஞ்சம் என்பதால் அவரைப் பகைத்து ஒதுக்கும் நிலை அவருக்கு இல்லாததால் இருவரையும் ஏற்றுக்கொண்டார்..

 ஆனால் ஈஸ்வரமூர்த்தி இருக்கும் போது மீனாட்சியை ஒன்றும் சொல்ல மாட்டார்.. ஈஸ்வர மூர்த்தியின் தலை அந்த வீட்டில் இருந்து வெளியேறினால் போதும் மீனாட்சி காண அன்றைய நாளில் சித்திரவதைகள் ஆரம்பித்துவிடும்..

 அவர்களின் காதலின் சாட்சியாக ஒரு வருடத்திலேயே அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் மீனாட்சி..

 குழந்தை இல்லை என்ற குற்றச்சாட்டின் மூலம் அவரை சித்திரவதை செய்வதற்கு திலகவதிக்கு வாய்ப்பு இல்லாததாலும் முதல் குழந்தையே ஆண் குழந்தையாக வேறு பிறந்ததினாலும். திலகவதிக்கு மீனாட்சியை வேறு வழிகளில் துன்புறுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.. 

 அதனால் மகன் அவரது சொல்கேட்டு அவர் காட்டும் பெண்ணை திருமணம் செய்யவில்லை என்கிற காரணத்தை  வைத்து வீட்டிற்கு என தனியாக வேலை ஆட்கள் யாரையும் வைக்காமல்  மீனாட்சியிடம் வீட்டுவேலைகள் தோட்ட வேலைகள் என அதிகமாக வேலை வாங்கி அவரது மனத்தாங்கல்களை போக்கி கொள்வார்..

 மீனாட்சியும் வறுமைப்பட்ட குடும்பத்துப் பெண் என்பதால் அவரது செயல்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் பொறுத்து போக ஆரம்பித்தார்..

திலகவதி என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் மீனாட்சி எதிர்த்து கேள்வி கேட்காமல் விட்டதால் திலகவதிக்கு அது இன்னும் நன்கு வசதியாக போய்விட்டது..

 ஈஸ்வர மூர்த்தியும் கிருஸ்ணாவும் வீட்டில் இல்லாத நேரங்களில் இன்றுவரை மீனாட்சிக்கு கஷ்ட காலங்கள் தான்..

 கிருஸ்ணாவின் சிறுவயதுகளில் திலகவதி  மீனாட்சியிடம் கடுமையாக நடந்து கொள்வதை பார்த்து அவனும் பாட்டியை சற்று கண்டித்து வைத்தான்..

 விக்ரமுடன் சேர்ந்து மீராவின் கேஸ் விஷயமாக நான்கு நாட்களாக அலைந்து திரிந்துவிட்டு இன்று தான் வீட்டிற்கு வந்தான் கிருஸ்ணா..

 ஏன் இன்றும் வீட்டிற்கு வந்தோம் என்று அவன் நினைத்து வருந்தும்படி திலகவதி மீண்டும் அவனது திருமண பேச்சை அவன் வந்து சற்றும் ஓய்வு எடுப்பதற்கு கூட நேரம் கொடுக்காமல் சிறு உரல் வைத்து வெற்றிலையை இடித்துக்கொண்டே பேச்சை ஆரம்பித்தார்..

 திலகவதியின் கணவர் ஜாடையில் கிருஸ்ணா இருப்பதால் திலகவதிக்கு கிருஸ்ணாவை மிகவும் பிடிக்கும்.. அவனின் பேச்சுக்கு  அந்த வீட்டில் மறு பேச்சே இல்லை.  அப்படி இருந்தும் அவனது திருமணப் பேச்சில் மட்டும் அவனால் திலகவதியிடம் இருந்து தப்பிக்க இயலவில்லை..

 கிருஸ்ணாவும் அவனது ஜூனியர் சாந்தியும் காதலிக்கிறார்கள்..

 பாட்டியின் குணத்தை நன்கு அறிந்தபடியாலும் சாந்தியின் வீட்டு சூழ்நிலையாலும் தற்போது அவர்களது காதலை வீட்டில் சொல்வதற்கு வாய்ப்பு கிடைக்காததால். திலகவதியின் பேச்சை கேட்காமல் திருமணத்திற்கான நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறான்..

 கிருஸ்ணா வீட்டிற்குள் வந்ததும் தாயை பார்த்து மீனாட்சியை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவரது கையால் சாப்பிடுவதற்காக அமர்ந்தான்..

அன்று ஞாயிற்றுக்கிழமை அதனால் ஈஸ்வர மூர்த்தியும் வீட்டில் இருந்தார்..

75 வயதிலும் பேச்சில் பிசிறு தட்டாமல் அர்த்தம் திருத்தமாக சொல்ல வேண்டியதை பேச ஆரம்பித்தார் திலகவதி..

” ஏன்யா ராசா இந்த பாட்டி உசுரோட இருக்கும்போதே உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்த்துட்டு உன்னோட புள்ளையும் தூக்கி கொஞ்சினால் என்னோட  ஆயுளை முடித்துக் கொள்வேன் ராசா.. ” என்றார் திலகவதி.

 அதற்கு கிருஸ்ணாவின் தம்பி கார்த்திக். ” ஏன் பாட்டி உனக்கு இந்த பேராசை இப்பவே 100 வருசத்தில முக்கால் வாசி வருஷம் வாழ்ந்துட்டதானே. இன்னும் உனக்கு இந்த பூமியில வாழனும்னு என்கிற ஆசை அதிகமா இருக்கே. இது சரி இல்லையே. வாழ்ந்த வரைக்கும் எங்க அம்மாவை கொடுமை படுத்தியது பத்தலயா.? ” என்றான்..

 அதற்கு திலகவதி பாட்டியோ அவனை முறைத்துவிட்டு. ” அவன் கிடக்கிறான் ராசா கிறுக்கு பையன் இப்படித்தான் ஏதாவது உளறிக்கிட்டே இருப்பான். நீ சொல்லு ராசா இந்த வருஷமாவது உனக்கு கல்யாணம் நடந்தே ஆகணும். என்ன மாதிரியான பொண்ணை பாட்டி உனக்கு பார்க்கட்டும்..  வசதியில் முன்ன பின்ன இருந்தாலும் ராசாவுக்கு புடிச்சிருந்தா எனக்கும் சரிதான். ஆனா ஒரு கண்டிஷன் பொண்ணு நம்ம சாதி மதத்தில் இருக்கணும்..” என்றார் திட்டவட்டமாக..

 இதைக் கேட்டதும் கிருஸ்ணா கண்முழி பிதுங்கி நின்றான்.. என்றே கூற வேண்டும். பாட்டியையும் குடும்பத்தையும் பகைத்துக் கொள்ளாமல் எவ்வாறு சாந்தியை திருமணம் செய்து கொள்வது என்ற தீவிர யோசனையில் இருந்தான்..

தற்போது அவனது திருமணத்திற்கு இருக்கும் ஒரே தடை திலகவதி மட்டும்தான்.. தாய் தந்தை இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்பதால் அவனது திருமணத்திற்கு தடை சொல்ல மாட்டார்கள். என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது..

 அப்போது அந்தத் திருமண பேச்சுக்கு முடிவு காட்டுவதற்காக ” பாட்டி ப்ளீஸ் இன்னும் எனக்கு ஒரு வருஷம் மட்டும் டைம் தாங்க. அதுக்குள்ள நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் தயவு செஞ்சு இப்ப என்னை விட்டுடுங்க. இப்போதைக்கு கல்யாணம் பேச்சு எடுக்க வேண்டாம். முக்கியமான ஒரு கேஸ் போய்கிட்டு இருக்கு என்னோட சிந்தனை முழுக்க அந்த கேஸ்ல மட்டும் தான் இருக்கணும்.. அதனால இப்போதைக்கு இந்தப் பேச்ச விட்டுடுங்க.. ” என்று திலகவதியின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சி அவரை கூல் பண்ணிவிட்டு அவனது அறைக்குச் சென்றுவிட்டான்..

 கிருஸ்ணா பேச ஆரம்பித்த காலத்திலிருந்தே அவனது பேச்சுக்கு மட்டும் திலகவதி எதிர் பேச்சு பேசாமல் மதிப்பு கொடுத்த படியால் அவரால் இந்த பேச்சையும் தட்ட முடியவில்லை.. இன்னும் ஒரு வருஷம் தானே கொடுத்து பார்க்கலாம் என்று நினைத்து விட்டார்..

 அறைக்குள் சென்ற கிருஸ்ணா அவனது காதலி சாந்தியுடன் கைபேசியில் பேச ஆரம்பித்துவிட்டான்..

 போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வரும்போது தான் அவளைப் பார்த்து விட்டு வந்தான்..  அப்படி இருந்தும் ஏதோ நீண்ட காலமாக பார்க்காதது போன்று சிறிது நேரமும் பேசி அவளை சற்று இயல்பாக ஆக்கி விட்டு.. வீட்டில் நடந்த திருமண பேச்சை அவளுக்கு புரியும்படி கூறிவிட்டு. அவனது வேலைப்பளுவினால் ஏற்பட்ட அசதியில் உறங்கி விட்டான்..

 மீனாட்சிக்கு 55 வயது ஆகியும் இன்னும் புது மருமகள் போன்று திலகவதியின் பேச்சுக்கும் செயலுக்கும் கட்டுப்பட்டு பயந்து மரியாதையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..

 இன்றுவரை காலையில் இருந்து திலகவதி உறங்கும் வரை மீனாட்சி தான் அவருக்கு அனைத்தும் செய்ய வேண்டும். அப்படி இருந்தும் சிறிதும் நன்றி இல்லாமல் மீனாட்சியை குற்றம் சொல்லி திட்டிக்கொண்டே இருப்பார்..

 ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் பக்கா மாமியாராக நடந்துகொண்டார் திலகவதி..

 மீனாட்சியை பிடிக்காத ஒரே காரணத்திற்காக மனிதனாகப் பிறந்த யாரும் செய்ய அஞ்சும் ஒரு பாதகச் செயலை செய்துவிட்டு சிறிதும் குற்றவுணர்ச்சி இல்லாமல் நீண்ட நெடிய வருடங்களாக காலையில் இறைவனை வணங்கிவிட்டு மூன்று வேளையும் நன்றாக உணவருந்திவிட்டு ஒரு சாதாரண மனிதர் போன்று அவரது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் திலகவதி..

 அவரின் பாதகச் செயல் ஈஸ்வரமூர்த்தி மீனாட்சி. கிருஸ்ணா. மற்றும் கார்த்திக் என அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியவரும் நாளே அவரது இறுதி நாளாக இருக்கும்..

சிலர் சாகும் வரையிலும் கூட மனிதராக மனிதாபிமானத்தோடு இருக்க விரும்புவதில்லை. அந்த வகையில் திலகவதியும் ஒருவர் என்பதை நிரூபித்து விட்டு அவரது காலத்தை முடித்துக் கொள்வார்..

 இந்த குடும்பத்திற்குள் இவ்வாறு சில சிக்கல்களோடு மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..

 இங்கோ மாமா பையாவின் கோட்டைக்குள்.. விக்ரமை ஜெகன் டீம் பக்கம் திசை திருப்பி விட்டு அவனது மாங்கல்யமும்  மாப்பிள்ளையும் என்கிற திருமண சேவை நிலையத்தின் மூலம் பதிவு செய்த பெண்களில் கடத்துவதற்கு தோதான பெண்களை தெரிவு செய்து கடத்த திட்டமிட்டு விட்டான்..

 அந்தத் திட்டத்தை தெரிந்துகொண்ட ஜெகன் அமைச்சர் சாரங்கபாணியிடம் அந்த விஷயத்தை காதில் போட்டு விட்டான்..

 அதற்கு அமைச்சரோ தற்போது போலீஸ் இந்த கேஸின் பக்கம் தீவிரமாக இருப்பதை தெரிந்து கொண்டு இதை வைத்தே அவனை சிக்க வைக்க தீர்மானித்து ஜெகனை இதில் தலையிடாமல் தடுத்து பையாவின் கடத்தலை தடை செய்யாமல் விட்டுவிட்டார்..

 அனைத்து இடங்களிலும் ஆட்களை வைத்திருக்கும் பையாவிற்கு இவர்களது திட்டம் தெரியாமல் போகுமா?..

 புதிதாக யாரும் எதிர்பார்க்காத அளவில் இந்த விஷயத்தில் சாரங்கபாணியை சிக்க வைப்பதற்காக பையா அவரை சந்திப்பதற்கு அனுமதி கேட்டிருந்தான்..

 அவரும் மீன் தானாக வலையில் வந்து சிக்குகிறது என்று நினைத்து அவனை சந்திப்பதற்கு அனுமதி அளித்தார்..

” வணக்கம் அமைச்சரே..! சௌக்கியமா இருக்கீங்களா?.. ” என்று நக்கலாக குசலம் விசாரித்தான் மாமா பையா..

 அதற்கு அவரும் அணையும் விளக்கு பிரகாசமாகதான் எரியும் அதனால் பையாவின் ஆட்டமும் அவரது பதவியை வைத்து முடித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டு அவனுக்கு வணக்கம் வைத்தார்..

 இருகரம் கூப்பி ” வணக்கம் தம்பி.. ” என்றார் சாரங்கபாணி..

 ஒரு வேங்கையும் ஒரு நரியும் மோதிக்கொள்ள போகிறது..

மாமா பையா பேச ஆரம்பித்தான்.

” சார் நீங்க யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உங்களுக்கு தெரியும்.. நம்ம ரெண்டு பேரும் ஒற்றுமை இல்லாமல் சண்டை புடிச்சி அடிச்சிட்டு இருந்தோம்ன்னா அந்த ஏசிபி நம்மளை புடிச்சு உள்ள போட்டுட்டு அவன் இன்னும் இரண்டு ஸ்டாரை வாங்கி குடுத்திட்டு பதவி உயர்வு வந்ததும் நமக்கு டாட்டா காட்டிட்டு போய்கிட்டே இருப்பான்.. இந்த சென்னையை பொறுத்த வரைக்கும் ஒன்னு நீங்க இருக்கணும். இல்லையா நான் இருக்கணும். அப்படி இல்லைன்னா நாம ரெண்டு பேரும் மட்டும் தான் உயரத்தில் இருக்கணும் நம்மளை மிஞ்சி ஒருத்தன் யாரா இருந்தாலும் இனி பொறந்து தான் வரணும்.. ” 

 ” சார் நீங்களும் நானும் ஒரே தொழில் தான் பண்ணுறோம்.. என்ன நீங்க பெரிய பதவில இருந்துகொண்டு ஆள் வைத்து நீங்க பின்னாலிருந்து பண்ணுறீங்க.. நான் யாரோட சப்போர்ட்டும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் இந்த தொழில் பண்ணுறேன்.. இப்ப என்னோட விருப்பம் எல்லாம் நீங்களும் நானும் பார்ட்னர் ஆகிவிட்டால் சட்டத்தின் மூலமாமாக  வரும் பிரச்சினைகளை நீங்க சமாளிச்சு கொள்ளுவீங்க. ஏனைய தேவைகள், பிரச்சினைகள் வந்தாலோ என்னோட ஆட்களை வைத்து நான் சமாளித்து கொள்வேன்.. எனக்கு உங்களோட பார்ட்னராக முழு சம்மதம் உங்களுடைய விருப்பம் என்ன என்று யோசித்துக் கூட கூடிய சீக்கிரம் பதில் சொல்லுங்க அப்பத்தான் அந்த ஏசிபியோட ஆட்டத்தை நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அடக்கலாம் உங்க பதிலுக்காக காத்திருப்பேன் வரட்டுமா?.. என்று கூறிவிட்டு அவனது கெத்து குறையாமல் கையசைத்து விட்டு அங்கிருந்து வீர நடைபோட்டு வெளியேறி சென்றுவிட்டான் மாமா பையா..

பையா சென்றதும் அமைச்சர் சாரங்கபாணியிடம் ஜெகன் வந்தான்..

” என்ன சார் அவனா வந்தான் நம்மளை அவன் கூட கூட்டு சேர்த்து பேசிட்டு போறான்.. நீங்க பாத்துட்டு பேசாம இருக்கிங்க?.. ” என்றான். சற்று கோபத்தோடு எங்கே தன்னை விட்டு அவனை சேர்த்துக் கொண்டால் தனது இடம் கீழே இறங்கி விடுமோ என்ற பயத்தில்..

” அட முட்டாளே..!  இப்போ அவனுக்கும் நமக்கும் பொதுவா இருக்கிற ஒரே எதிரியும் பிரச்சினையும் அந்த ஏசிபி இந்த கேஸ்ல ரொம்ப தீவிரமா இருப்பது மட்டும் தான். அதனால நாம யாராலயும் வெளியே தலைகாட்ட கூட முடியாத நிலைமை. பையா  ஏசிபியை பார்த்து பயந்துட்டான் போலடா அதனாலதான்  இந்த நடு சாமத்துல நம்மளோட உதவியை தேடி வந்து இருக்கான்..  நமக்கும் அவனோட ஆட்கள் பலம் கிடைக்கும். அப்படி பார்த்தால் நமக்கு தான் லாபம் அந்த ஏசிபியை பையாவை வைத்து போட்டுத் தள்ளிட்டு அவனை கை காட்டிவிட்டால் போதும் அப்புறம் பாரு வேடிக்கையை போலீஸ் அவனை அள்ளிட்டு போயிடுவாங்க. அதன்பின் பாரு பையாவும் இல்லை அந்த ஏசிபியும் இல்லை. நாம தான் இந்த சென்னைக்கு அவன் சொன்ன மாதிரி உயரத்தில் இருக்க போற ஒரே ராஜா.. ” என்று நரி தந்திரமாக திட்டமிடுவது போல் அவனும் திட்டமிட்டு  பையாவை சிக்கலில்  சிக்கவைப்பதற்கு தீட்டிய திட்டத்தை நினைத்து  நக்கலாக சிரித்தான் அமைச்சர் சாரங்கபாணி…

யார் யாரின் வலையில் சிக்குவார்களோ..? பொறுத்திருந்து பார்ப்போம்.. 

Advertisement