Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 7

???????

கமிஷனர் சீக்ரெட் மீட்டிங் என்று அவசரமாக வரும்படி கூறியும் விக்ரம் அரைமணி நேரம் தாமதமாகவே வந்தான். அவனுக்கிருக்கும் வேலைப்பளு தெரிந்தும் மற்ற போலீஸ் ஆட்களுக்கு முன் விக்ரமிற்கு சலுகை கொடுக்க விரும்பாமல் விக்ரமை அவர் தாமதமாக வந்ததற்கு திட்டிவிட்டார்..

 அவனும் அதை பெரிதுபடுத்தாமல் மீட்டிங்கில் கலந்து கொண்டான்.

 கமிஷனர் பேச ஆரம்பித்தார்.

” விக்ரம் நீ சென்னை வந்து 2 டேஸ் ஆயிடுச்சு இது ரொம்ப சீக்ரெட் மிஷன் ஒரு சின்ன க்ளூ கூட எதிரிகளுக்கு லீக் ஆகி விடக்கூடாது..”

” அதனால இந்த கேஸை நீ கையில் எடுத்து அந்த கடத்தல் கும்பல்களை பிடிக்கணும். அதுக்கு உனக்கு மூன்று மாதம் மட்டும் கால அவகாசம் தருவேன்..”

” நீ என்ன வேணும்னாலும் பண்ணு உனக்கு முழு சுதந்திரம் மேலிடத்திலிருந்து கிடைச்சிருக்கு.. பட் யாரையும் என்கவுண்டர் பண்ணக்கூடாது.. நீ பிடிக்கும்போது தப்பித்து ஓட முயற்சி பண்ணினால் முட்டிக்கு கீழே சுட்டு ஆளை பிடி.. அவன் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி யாராக வேனுமென்றாலும் இருக்கட்டும். நோ ப்ராப்ளம்.. “

” உண்மையை சொல்வதற்கு எவ்வளவு வேணும்னாலும் அடி டார்ச்சர் பண்ணு ஆனால் உயிர் போய்விட கூடாது. அந்த அயோக்கிய ராஸ்கல்களை உயிரோட சட்டத்துக்கு முன்னாடி ஒப்படைக்கனும்.. இவ்ளோ சலுகை மட்டும் தான் நமக்கு சிஎம் இடமிருந்து கிடைச்சிருக்கு,. இது சிஎம் ஆடர் ஓகே. ரொம்ப தீவிரமா நுணுக்கமா ஸ்கெட்ச் போட்டு அந்த ரவுடி நாய்களை தூக்கு.. அதுவரை நீ ஸ்டேஷனுக்கு வரவேண்டாம் அண்டர்கிரவுண்ட்ல இருந்து உன்னோட வேலையை ஆரம்பிக்கலாம்..”

” உனக்கு நீ செலக்ட் பண்ணுற டீம் ஃபுல் சப்போர்ட் பண்ணுவாங்க.. ஓகே காய்ஸ் மீட்டிங் ஓவர்.. ” என்று கூறி நீண்ட உரையயை கமிஷ்னர் முடித்துவிட்டு. விக்ரமிற்கு தனியாக வரும்படி கண்ணால் சைகை செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்..

விக்ரமும் அவனது குழுவிடம் இருந்து விடைபெற்று கமிஷ்னரின் பின்னால் யாரும் சந்தேகப்படாத அளவிற்கு சென்று விட்டான்..

 அங்கிருந்து சிறிது நேர இடைவெளியின் பின் ஒருவர் பின் ஒருவராக கமிஷ்னரின் வீட்டிற்கு வந்தார்கள்..

” விக்ரம் இரு காப்பி போட்டு எடுத்துட்டு வரேன். ” என்றார்.

” இல்ல சார் வேணாம். நான் இங்க வந்ததை நம்ம எதிராளி யாரும் பார்க்க முதல் நான் இங்க இருந்து போயிடணும்.” என்றான் விக்ரம்.

அவன் கூறுவதில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்டு கமிஷ்னரும் ரகசிய பைல் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து விக்ரமின் கையில் வைத்தார்.. ” எனக்கு இந்த அயோக்கியன் மேல ரொம்ப சந்தேகம் இருக்கு. இவனெல்லாம் பசுத்தோல் போர்த்திய விஷப்பாம்பு.. இவனோட சப்போர்ட் அவங்களுக்கு இருக்கிற படியால் தான் அவங்களால் இவ்வளவு ஈசியா பொண்ணுங்களை கடத்த முடியுது.. இந்த பைலில் அவனை பற்றிய முழுவிபரமும் இருக்கு நீ எப்பவுமே இவன் மேல ஒரு கண்ணு வச்சுட்டே இந்த கேசை எந்த கோணத்துல இருந்து விசாரிக்கலாம் என்பதை ஆரம்பி..” 

” எஸ் சார். ” என்றான் விக்ரம்..

” இந்த பைல் உன்கிட்ட இருக்கு என்கிற விஷயம் வெளிய யாருக்கும் தெரியக்கூடாது. சின்னதா விஷயம் வெளிய லீக் ஆனாலும் அவன் உஷார் ஆகிடுவான். அப்புறம் நமக்கு இந்த கேஸ் ரொம்ப சிக்கலில் வந்து முடியும்..” என்று கூறி பல கவனம் சொல்லி விக்ரமை அங்கிருந்து அனுப்பி வைத்தார் கமிஷ்னர்..

அவனும் எழுந்து சல்யூட் வைத்துவிட்டு அங்கிருந்து வீட்டின் பின் வழியாக வெளியே சென்று விட்டான்..

 விக்ரமும் மூன்று மாத காலக்கெடுவில் எவ்வாறு இந்த கேசை ஆரம்பித்து முடிப்பது என்ற தீவிர யோசனையில் சென்றான்..

 ரிஷியின் ஆபீஸில்.

 அவனது நேரடி பார்வையில் இருந்தும் ஆபீஸில் மேனேஜர் மூர்த்தியால் இவ்வாறு ஒரு குளறுபடி நடந்திருப்பதை அவனால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

 மோட்டார் பைக் மற்றும் கார் போன்ற வாகனங்களுக்கும் உதிரிபாகங்கள் தயாரிப்பதே ரிஷியின் தொழிலாக்கும். ராஜேஸ்வரியின் தந்தை காலத்திலிருந்தே நம்பகமான ஒரு உதிரிபாக நிறுவனமாக ஆர் வி. நிறுவனம் கஸ்டமரிடமும் மக்கள் மத்தியிலும் நீங்காத இடத்தைப் பெற்றிருந்தது..

சில காலமாக ரிஷியின் மனநிலை தொழிலில் அதிகம் ஈடுபட முடியாத நிலையில் இருந்தது…

 ராஜேஸ்வரிக்கு குழந்தையின்மை இருந்தது போன்று. ரிஷியின் தங்கை வந்தனாவுக்கும் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கடந்தும் குழந்தையின்மையால் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்து விட்டாள்.. வந்தனாவின் கணவன் மகேஷினால் அவளை சமாதானப்படுத்தவோ ஆறுதல் சொல்லவோ முடியாத கட்டத்தில் ரிஷியை அங்கு வருமாறு அழைத்திருந்தான்..

வந்தனா மற்றும் அவள் கணவன் மகேஷ் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு எந்தவித குறைபாடும் இல்லாததால் அவள் கோயில் தெய்வங்கள் விரதம் என முயற்சித்தும் அவளுக்கு ஐந்து வருடங்களாக குழந்தை பலன் கிடைக்க வில்லை. அதனால் ஏற்பட்ட மனச்சோர்வினால் வாழப் பிடிக்காமல் தற்கொலைக்கு முயற்சித்தாள்..

 ரிஷி தொழிலில் கால்பதித்து சரிந்திருந்த தொழிலை நிமிர்திவிட்டு கார் மற்றும் பைக் தயாரிப்பின் தலைசிறந்த நாடான ஜெர்மனியில் உதிரிபாகங்கள் தயாரிப்பிற்கான ஒரு சிறிய கிளையை ஆரம்பித்தான்..

 அங்கு ஆரம்பித்த தொழிலை பார்த்துக் கொள்வதற்காக வந்தனா மற்றும் மகேஷ் திருமணம் முடிந்ததும் அவர்களை அந்த தொழிலை நடத்துமாறு கூறி அவர்களின பெயரிலேயே எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தான்.. 

அவனும் தங்கை குடும்பத்தை பார்த்து ஆறு மாதங்கள் கடந்து விட்டதால் ஜெர்மன் சென்று வந்தனாவை பார்த்து ஆறுதல் படுத்தி விட்டு. கவுன்சிலிங் அழைத்து சென்று ஓரளவிற்கு வந்தனா மனதளவில் தயாராகி விட்டாள். என்று தெரிந்த பின் அவளை மகேஷிடம் விட்டுவிட்டு அவன் மீண்டும் சென்னைக்கு வந்தான்..

 அந்த மன உளைச்சலாலும் நிஷாவின் பிடிவாத குணங்கலினாலும் அவனின் வாழ்க்கைமுறை என அனைத்தும் சேர்ந்து அவனை சோர்வடைய செய்துவிட்டது. தொழிலில் அவனால் அதிக கவனம் எடுக்க முடியாததால் இந்த குளறுபடி நடந்ததை கவனிக்க முடியாமல் போய்விட்டது..

 ரிஷியின் பிஏ சூர்யா மிகவும் திறமையானவன். ரிஷியின் நம்பிக்கையானவனும் கூட.. அவனும் மேனேஜரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் ரிஷி இல்லாத தைரியத்திலும் நீண்ட வருடம் இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் திமிரிலும் அவரே ஒரு முடிவெடுத்து தரமற்ற மூலப்பொருட்களை வாங்கி உதிரிபாகங்கள் செய்து ஆடர் பிடித்த இடத்திற்கு ஒப்படைத்துள்ளார்..

 அவர்கள் அதை பரிசோதித்துவிட்டு பொருளின் தரம் இன்மையை குறிப்பிட்டு பொருளை திருப்பி அனுப்பி ரிஷிக்கும் மெயில் மூலம் தெரியப்படுத்தினார்கள்..

அவனும் கடந்த ஒரு மாதமும் ஜெர்மனியில் இருந்த காரணத்தால் அதை கவனிக்க மறந்துவிட்டான்..

அதுபோன்று தரமற்ற மூலப் பொருளினால் செய்த உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் வாகனங்கள் வெகு சீக்கிரம் பழுதடைதல் போன்ற பிரச்சினைகளால் வாடிக்கையாளர்கள் ஆர்வி நிறுவனத்தின் மேல் கோர்ட்டில் கேஸ் போட்டு விட்டார்கள்..

 அதனால் வேலை நிறுத்தம் ஏற்பட்டதால் லேபர்களில் சிலர் கொந்தளித்து மேனேஜரை தாக்கி அதனால் அவர் காயமடைந்து தற்போது ரிஷியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்..

 ரிஷி இன்று மதியம் இந்த வழக்கு சம்பந்தமாக கோர்ட்டிற்கு சென்றான்..

  நிறுவனத்தின் மேல் போடப்பட்ட கேஸை வாபஸ் செய்யுமாறும். இந்த குளறுபடி நடந்த நேரம் அவன் நாட்டிலேயே இல்லை என்பதை உறுதிப் படுத்தி விட்டு.வாடிக்கையாளருக்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் நிறுவனத்தை மூடினால் அதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் தெரியப்படுத்தி இனி இவ்வாறு நடக்காது என்பதை கூறி கோர்ட்டினால் வழங்கப்பட்ட பைன் தொகையையும் செலுத்திவிட்டு வந்தான்..

 தாயின் கஷ்டத்தையும் பாசத்தையும் பார்த்தும் வளர்ப்பு தாய் தந்தையின் உண்மையான பாசத்திலும் வளர்ந்ததால் ஒழுக்கமற்ற செயல்கள் எதிலும் அவன் இதுவரை காலமும் விடுபடவில்லை.. புகைப்பிடித்தல் மது மாது போன்ற எவ்விதமான கெட்ட பழக்கங்களும் அவனுக்கு இருந்ததில்லை..

 வேலைப்பளு காரணமாக அதிக மன அழுத்தம் ஏற்பட்டால் மனதை வருடும் இனிய மென்மையான எஸ்பிபியின் பாடல்களை கேட்பான்..

 அதுவே அவனது ஒரே பொழுது போக்காகும்..

 இப்பொழுதும் இன்றைய நாளில் வேலைப்பளு டென்ஷன் காரணமாக மனச்சோர்வினால் மனதை இதமாக்கும் எஸ்பிபியின் பாடல் தொகுப்பை கேட்டுக்கொண்டு சென்றான்.

 நேரம் பிற்பகல் மூன்று மணி.

ரிஷிக்கு பசி எடுக்கவும் அருகில் இருந்த ஹோட்டலுக்கு காரை விட்டான்..

 இறங்கி உள்ளே சென்று ஓரமாக இருந்த மேசையில் போய் அமர்ந்தான்.

 அவனுக்கு மிகவும் பிடித்த மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் லாலிபாப் சிக்கன் பெப்பர் ஃப்ரை போன்றவற்றை ஆர்டர் செய்துவிட்டு மீண்டும் ப்ளூடூத் மூலம் பாடல் கேட்க ஆரம்பித்தான்..

 சிறிது நேரத்தில் அவன் ஆர்டர் செய்த உணவை சூடாக அவனது மேசைக்கு கொண்டு வந்து வைத்துவிட்டு சர்வண்ட் அங்கிருந்து சென்று விட்டான்..

 ரிஷியும் பசி அடங்கும் வரை உணவை உண்டு விட்டு அதற்கான பணத்தை கட்டி . சர்வண்டிற்கும் டிப்ஸ் வைத்து விட்டு அங்கிருந்து அவனது ஆபீஸ்க்கு சென்றான்..

 ஆபீஸ் சென்று சூர்யாவிடம் கோர்ட்டில் நடந்த வற்றை கூறிவிட்டு.. லேபர்களிடமும் இனி எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்பதை தெரியப்படுத்தி விட்டு அவர்களை வேலையை தொடர்ந்து செய்யுமாறு கூறினான்..

 அதன்பின் அங்கிருந்து மேனேஜரை சேர்த்திருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்றான்..

 அங்கு சென்று அவரை சந்தித்து நீண்ட வருடங்கள் அவர் வேலை செய்த காரணத்தால் அவருக்கான மருத்துவ செலவை முழுவதுமாக செலுத்திவிட்டு அவரை அங்கிருந்தே வேலைநீக்கம் செய்தான்..

 அவனுக்கான அன்றைய நாளின் ஓட்டம் இன்னும் முடியவில்லை என்பதை ஞாபகப்படுத்தும் விதமாக நேரம் மாலை ஐந்து மணி ஆகியது..

 நேரத்தை பார்த்து விட்டு உடனடியாக நிஷாவின் ஞாபகம் வர அங்கிருந்து நிஷா படிக்கும் ஸ்கூலிற்கு அவளை அழைத்து வரச்சென்றான்..

 பத்து நிமிடத்தில் ஸ்கூல் வந்து நிஷாவையும் அழைத்துக் கொண்டு அவள் கேட்ட ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பதற்கு ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்துச் சென்றான்..

 நிஷாவும் போதும் போதும் என்கிற அளவுக்கு அவளுக்கு பிடித்தமான பல பிளேவர்களில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டாள்..

 அதன்பின் அங்கிருந்து அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள்..

 வீட்டிற்கு செல்லும் குறுக்குப் பாதையில் கார் செல்லும் போதும் எங்கிருந்தோ வந்த ஒரு கல் காரின் பின் கண்ணாடியை உடைத்தது..

 அதில் நிஷா சற்று பயந்து ரிஷியை கட்டி அணைத்துக் கொண்டாள்..

 ரிஷி காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்க முற்படும்போது மீண்டும் அடுத்த கல் காரை நோக்கி வந்து காரின் கண்ணாடியை உடைத்து..

 ரிஷி அங்கே சென்று யார் என்று பார்க்கும் போது மீரா தலையில் ரத்தம் வழிய அரைமயக்கத்தில் கீழே கிடந்தாள்..

 அதைப் பார்த்து ரிஷி பதட்டத்தோடு அவனது கை குட்டையை மீராவின் தலையில் கட்டி தூக்கிக்கொண்டு காரில் ஏற்றி மேனேஜரை சேர்த்த அதே மருத்துவமனைக்கு விரைந்து சென்றான்..

மீராவின் நிலை என்னவாகுமோ?..

என்னுடன் தொடர்ந்து பயணித்து தெரிந்து கொள்ளுங்கள் பட்டுஸ்???? 

 

Advertisement