Advertisement

 நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

          எபிலாக்.

இரண்டு வருடத்திற்கு பின்..

 

பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் தாதியின் சுடு சொற்களைக் கேட்டு மனம் வருந்தி அழுது கரைந்து இறைவனிடம் மரணத்தை பிச்சை கேட்டு மரணித்துப் போனார் திலகவதி..

 தேவியும் அவரது கணவரும் எந்த மகனுக்காக வந்தனாவை திருமணம் செய்து வைத்து அந்த சொத்துக்களை பெற நினைத்தாரோ.. அதற்கு தடையாக இருக்கும் ரிஷியை வீட்டை விட்டு அனுப்ப சதி செய்தாரோ.. அந்த மகன் முரளி ஒரு பெரும் செல்வந்தரின் மகளை காதலித்து திருமணம் செய்தான்..

ரிஷியின் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மகன் இருக்கிறான். என்ற நம்பிக்கையில் அவனிடம் தஞ்சம் புக வந்த தாயையும் தகப்பனையும் மனைவியின் சொல் கேட்டு வீட்டை விட்டு அனுப்பி விட்டான்..

 அதன்பின் போக்கிடம் இல்லாமல் வாழும் காலத்தில் தேவிக்கு என தேவியின் தந்தையால் கொடுக்கப்பட்ட சொற்ப சொத்துக்களையும் கணவனும் மனைவியும் ரேஸ் குதிரை சீட்டாட்டம் போன்ற சூதுகளை விளையாடி சொத்துக்களையும் பணத்தையும் இழந்து விட்டுத்தான் ராஜேஸ்வரியிடம் வந்தார்கள்..

 அங்காவது கிடைக்கும் உணவை உண்டு விட்டு அமைதியாக வாழ்ந்து இருக்கலாம்.. அதையும் பேராசைப்பட்டு இழந்து விட்டு மகளும் இறந்தபின் மகன் கைவிட்ட பின் முதியோர் இல்லத்திற்கு சென்றார்கள்..

 அங்கு சென்றும் தேவி அங்கிருக்கும் வயோதிகர்களுக்கு அவரால் முடிந்த உதவிகளைச் செய்யாமல் அவர் அவர்களிடம் வேலை வாங்கி பகட்டாக இருந்து உணவு உண்ணும் எண்ணத்தை கைவிடாமல் இருந்தபடியால் முதியோர்கள் தேவியின் நடவடிக்கையால் துன்புறுத்தப்பட்டார்கள்.. அவர் மேல் அந்த நிர்வாகிக்கு அதிருப்தி ஏற்பட்டதால் அங்கிருந்தும் இருவரும் துரத்தப்பட்டார்கள்..

கணவனால் வியர்வை சிந்தி உழைக்க முடியாது அதற்கு மிகுந்த சோம்பல்..

 கோவிலில் வந்து மடத்தில் உண்டு விட்டு அங்கேயே தங்கியிருந்தார்கள்..

 அங்கேயும் கோவிலை சுற்றி கூட்டி சுத்தம் செய்து போன்ற வேலைகள் செய்யாமல் கோவிலுக்கு வந்த பக்தர்களின் நகைகளை திருட ஆரம்பித்தார் தேவி..

 அதில் சிசிடிவி கேமரா மூலம் கையும் களவுமாக மாட்டிய தேவி தற்போது சிறைச்சாலையில் கடுங்காவல் தண்டனையில் உள்ளார்.. அங்கும் ஜெயிலரின் கோபத்திற்கு ஆளாகி அங்கு இருக்கும் கைதிகள் அனைவருக்கும் சமையல் செய்யும் வேலையை அவர் மிகுந்த கஷ்டத்துடன் உடலை வருத்தி செய்து கொண்டிருந்தார்..

மனைவியின் வழிநடத்தல் இல்லாமல் தேவியின் கணவர் அதே கோவிலில் பிச்சை எடுத்தார்..

 ஒரு பெற்றோர் செய்த கருமம் பெற்றோரின் சொத்தில் பங்கு இருப்பது போன்று அவர்களது பாவங்களிலும் பிள்ளைகளுக்கு பங்கு இருப்பது தெரியாமல் முரளி அதிகம் பணத்தாசை பிடித்து ஆடிவிட்டான்.. அவனும் ஒரு விபத்தில் இரண்டு கால்களையும் இழந்து மனைவியால் கைவிடப்பட்டு தந்தையின் அருகில் தந்தையே யார் என்று அடையாளம் தெரியாமல் அவனும் பிச்சை எடுத்தான்..

 ரிஷியின் வீட்டிலோ துளசி அவளது கணவனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மீண்டும் குழந்தை உண்டாகி தற்போது 6 மாதமாக இருந்தாள்..

 மகனின் பிரசவத்தில் துளசி அடைந்த துன்பத்தை கண்ணெதிரே கண்ட ரிஷி அடுத்த குழந்தை வேண்டாம் அவனே குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதாக கூறியும் அவனது மணிக்குட்டி வேண்டாம்.. என மறுத்து அவளுக்கு அடுத்த குழந்தை அவனது கவனிப்பில் வேண்டும் என்று அவனிடம் அடம்பிடித்து இதோ உண்டாகி இருக்கிறாள்..

வந்தனா மகேஷ் தம்பதியரை ஜெர்மனியில் இருக்கும் பிஸினஸை விற்று விட்டு மீண்டும் அவனுடனேயே இந்தியாவிற்கு வந்து விடும்படி கூறினான்.. அவர்களும் அங்கே தனியாக இருந்து கஷ்டப்படுவதற்கு அண்ணனுடன் இருக்க வந்தனா விரும்பியதால் மகேஷும் அதை ஏற்றுக்கொண்டு அங்கிருக்கும் பிஸினஸை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து சென்னையில் புது பிஸினஸ் ஆரம்பித்தார்கள்..

 ரிஷியும் கடத்தல் குறைந்து களவும் கொலையும் சென்னையில் அதிகரித்ததால் மகேஷிடம் அவனது பிஸினஸை ஒப்படைத்து சூரியகுமாரை அவனுக்கும் பிஏ வாக நியமித்து அவனது ஆர் வி உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு முழுதாக அவனை விக்ரம் சகராக மாற்றி சென்னையில் புதிதாக ஆரம்பிக்கும் கொலை மற்றும் கொள்ளை குற்றங்களை குறைத்து அடியோடு இல்லாது ஒழிக்க முழுதாக அவனையே ஏசிபி யாக அர்ப்பணித்தான்..

 ஐஜி கடத்தல் கேஸில் கைது செய்த படியால் கமிஷ்னரே தற்பொழுது ஐஜியாக பிரமோஷன் அடைந்துள்ளார்..

 அதனால் மீண்டும் விக்ரமிற்கு உதவிகளையும் செய்து கேஸில் அவனுக்கு வழிகாட்டியாக இருந்தார்..

 விஜியின் தாய் நோயினால் இறந்ததால் அவள் அவளது இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அவளது ஒரு வயது குழந்தை குடும்பம் என இருந்து விட்டாள்..

 சந்தோஷுக்கு வருத்தம் இருந்தாலும் மனைவியின் விருப்பம் என அதை தடுக்காமல் விட்டுவிட்டான்..

 கடத்தல் கேஸில் சந்தோஷும் விக்ரமும் ஈடுபட்டிருக்கும் பொழுது இல்லாத ஓர் உறவு இந்த கேஸில் சந்தோஷுக்கு விக்ரம் மாமாவாக இருந்தாலும் அவன் மாமா என்று சலுகை எடுக்காமல் உயர் அதிகாரி என்று மதித்து அவனது கட்டளைக்கு பணிந்து கேஸில் தீவிரமாக ஈடுபட்டான்..

 மீண்டும் அவனது மணிக்குட்டி கருவுற்றிருப்பதால் முன்பு குடும்பம் பற்றி பெரிதாக கவலை இல்லை கேஸில் முழுதாக ஈடுபட்டு விட்டான்.. ஆனால் தற்பொழுது குடும்பம் மனைவி குழந்தைகள் என இருப்பதால் அவர்களையும் ஒரு கண் பார்த்துக் கொண்டு விக்ரம் சிரத்தையாக மணிக்குட்டியையும் பார்த்துக்கொண்டான்..

 இடையில் விஜியின் தங்கை மாலதியை சந்தோஷின் தம்பி கார்த்திக் குடும்பத்தின் அனுமதியுடன் காதலித்து திருமணம் செய்துகொண்டான்..

 காலங்கள் யாருக்கும் காத்திருக்காமல் மேலும் மூன்று வருடம் கடந்துவிட்டது..

மீராவிற்கு 15 வயது முடிந்தும் இன்னும் அவள் வயதிற்கு வரவில்லை என்ற சிறு கவலை துளசியின் மனதை அரித்துக் கொண்டிருந்தது..

மூன்றாவதும் அவளுக்கு பிறந்தது ஆண் குழந்தைதான்..

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மீரா மாவட்டத்தில் முதலாவதாக வந்து அவளுக்கும் அவளது பெற்றோருக்கும் பெருமை தேடி தந்தாள்..

 நிஷா அனைவருடனும் அந்த குடும்பத்தில் ஒன்றி அவளுடைய தம்பிகள் இருவருடனும் விளையாடி மீராவின் அறிவுரையை கேட்டு அன்பாக அந்தக் குடும்பத்துடன் ஒன்றிணைத்து விட்டாள்..

 மீரா +1 சேர்ந்து இரண்டு மாதம் கழித்து ஸ்கூலில் வைத்து பெண் பூ பூத்தது..

 விக்ரமிற்கு அளவில்லாத ஆனந்தம்.. துளசிக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை.. வானத்தில் பறப்பது போன்று மகிழ்ச்சியில் மகளை கவனித்து அதற்கு உரிய அனைத்து சடங்குகளையும் சிறப்பாக அவளது தாய் மீனாட்சியுடன் சேர்ந்து செய்தாள்..

 பிரமாண்ட மண்டபத்தில் அவர்களது சொந்தங்களும் சுற்றத்தாரும் நண்பர்களும் கூடி மீராவிற்கு சடங்கு செய்தார்கள்..

 மீராவின் தாய் துளசிக்கு சடங்கு செய்தவரே கணவன் ஆவார் என்ற செய்தி அவளது காதில் கேட்டதிலிருந்து காதல் கணவனாக என்று ரிஷியை மனதில் நினைத்தாளோ..! அந்த தாயின் மகள் மீராவின் காதிலும் அதே செய்தி விழுந்து.. அவளுக்கு மாமன் முறை சடங்கு செய்தவனே அவளது கணவனாக வேண்டும் என்ற தீர்மானத்தை மனதில் எடுத்துவிட்டாள்..

 

 தகப்பன் பெயர் தெரியாதவள் என்று பத்து வயதில் ஊரால் கேலி செய்யப்பட்ட மீரா. அதே ஊர் வியக்கும் வண்ணம் உயர் பதவியை அடைந்து அவளது மனதில் நீங்காத இடம் பெற்ற கண்ணாளனை திருமணம் செய்து அவளது வாழ்க்கையை அமோகமாக அமைத்துக் கொள்வாள்..

 விக்ரமின் ஐந்து வயது மகன் சிவராஜ் அன்று இரவு அழுதுகொண்டே தந்தையை எழுப்பினான்.. சத்தம் கேட்டு என்னவென்று கேட்ட தந்தையிடம்

” அப்பா சூச்சு போகும்போது இது சிப்பு சிக்கிடுச்சு..” என்று கை காட்டினான் குழந்தை..

 அதற்கு விக்ரம் சிரித்துவிட்டு மகன் வலியில் துடிப்பதை கண்டு வேகமாக அவனது ஆணுறுப்பை வெளியே எடுத்து அதற்கு மருந்து தடவி அவனது அருகில் படுக்க வைத்து தட்டி கொடுத்து தூங்கவைத்தான்..

 குழந்தையோ வலியில் தூங்காமல் அழுது கொண்டிருக்க அதில் துளசி வழித்து விட்டாள்..

 மகனின் அழுகைச் சத்தம் கேட்டு என்னவென்று கேட்ட துளசியிடம் தாயை முறைத்துவிட்டு தந்தையிடம் திரும்பி தாயிடம் கூறவேண்டாம் என கூச்சம் கொண்டான்..

 ஐந்து வயது ஆரம்பித்து ஓரளவிற்கு அனைத்தையும் செய்ய ஆரம்பித்ததும் யாரையும் அவனிடம் அண்டவிடாமல் தனியாக குளித்து விடுவான்..

 அப்படிப்பட்டவன் இதை தாயிடம் தந்தை கூறி விடுவாரோ என்று தந்தையின் வாயைப் பொத்தி வேண்டாம் என சைகை செய்தான்..

 அதற்கு விக்ரம் தாயிடம் எதையும் மறைக்கக்கூடாது பெற்ற தாயை விட சிறந்த ஆசானும் இல்லை.. சிறந்த தெய்வமும் இல்லை.. என்று கூறி அவனது காயத்தை பார்க்குமாறு துளசியிடம் அவனை திருப்பினான்..

 அதில் கோபம்கொண்ட அச்சிறு வாண்டு தந்தையுடனும் பேசாமல் தாயுடனும் பேசாமல் அங்கிருந்து கதவைத் திறந்து வெளியேறிப் அவனுக்கு என தனியாக ஒரு அறையை தேடி சென்று விட்டான்..

 தனது கூச்ச உணர்வை மதிக்காத தந்தையின் மீது கோபம் கொண்டு அந்தக் கோபத்தை வளர்த்து அவனும் வளர்ந்து ஆளாகி அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் பெருமையை விக்ரமின் மகன் யாரும் அந்த குடும்பத்தில் இதுவரையும் செயாத செயலை செய்து அந்த குடும்பத்தின் நிம்மதியையும் மதிப்பையும் கெடுப்பான் என்று யாரும் அப்பொழுது அறிந்திருக்கவில்லை..

 அவன் இந்த குழந்தை பருவத்தில் தங்களிடமிருந்து ஒதுங்கியதால் துளசிக்கும் பயம்தான்.. இருந்தாலும் வளர்ந்ததும் சரியாகி விடுவான் என்று நினைத்து விக்ரம் நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவனுடன் பேசி அவனை சமாதானப்படுத்த முயன்றான்.. ஆனால் அதுவும் முடியாமல் விக்ரமோ எங்கு நிஷா தனித்திருந்தால் மூர்க்கம் கொண்டு கோவத்தால் அவளது வாழ்வை அழித்து விடுவாள் என்று பயந்த விக்ரமே வரும் காலத்தில் அவனது மகனே அவ்வாறு ஒரு நிலையை அடையப் போவது அறியாமல் அதை தடுக்கவும் முடியாமல் திக்கற்று நிற்பான்..

 மூன்றாண்டு சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த தேவி கணவரைத் தேடி கணவரை கண்டுபிடிக்க முடியாமல் வாழ்வதற்கு வழி தெரியாமல் அவரும் கணவர் மற்றும் அவரது மகன் இருவருக்கும் அருகிலேயே அதே கோவிலில் பிச்சை எடுத்தார்..

தாய் தகப்பன் மகன் மூவருக்கும் அவர்களை அடையாளம் தெரியாத அளவிற்கு காலம் அவர்களது அழகையும் ஆணவத்தையும் உருத்தெரியாமல் குஷ்டரோக நோயை கொடுத்து அழித்து விட்டது.. 

 அனைத்து விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளுக்கும் துளசி குடும்பம்.. மீனாட்சி குடும்பம்.. விஜி மற்றும் வந்தனா குடும்பங்கள்.. மாலதி குடும்பம் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து கொண்டாடுவார்கள்..

 இதில் எதிலுமே விக்ரமின் மகன் சிவராஜ் கலந்து கொள்ள மாட்டான்..

 அவனையும் அடக்க ஒருத்தி வருவாள்..

 மகனது போக்கை நினைத்து துளசிக்கு வருத்தம் இருந்தாலும் மகள் மீரா மற்றும் நிஷா மகன் சிவராஜ் அடுத்த மகன் பிரம்மா நான்கு குழந்தைகளையும் ஒரே மாதிரி தான் துளசி வளர்த்தாள்.. அதில் சிவராஜ் மட்டும் அந்த குடும்பத்திற்கு சம்பந்தம் இல்லாதவன் போன்று குடும்பத்திற்கு எதிராக அனைத்திலும் ஈடுபடுவான் ..

 யாருக்கும் இல்லாத இந்த குணம் அவனுக்கு எங்கிருந்து வந்தது என்ற யோசனையில் விக்ரமிற்கு தோன்றிய ஒரே சிந்தனை அவனைப் பெற்ற தகப்பனின் தீய குணம் தனது மகனை பிடித்து விட்டதோ என்று பயந்துவிட்டான்..

 அவர்களது குடும்பத்தில் இருந்து அவன் பிரிந்து சென்று தகப்பன் சென்னையை காக்கும் போலீசாக இருக்கும்பொழுது மகன் அவர்களுக்கு எதிராக உருமாறி நிற்பான்..

 மீரா மற்றும் விக்ரம் சென்னையை காக்க போராடுவார்கள்..

 அக்கா மற்றும் தகப்பனுக்கு எதிராக சிவராஜ் உருவெடுப்பான்..

இது காலத்தின் விந்தை.. இந்த சோதனையில் இருந்தும் யாரும் வேதனை அடையாமல் அவனை காப்பாற்றுவதே அவர்களின் சாதனையாகும்..

 தம்பியை திருத்தி நல்ல மனிதனாக தாயிடம் ஒப்படைப்பேன் என்று அந்த 16 வயதிலும் தாய்க்கு சத்தியம் செய்தாள் மீரா..

 துளசிக்கு செய்த சத்தியத்தை காப்பாற்றுவாளா?.. மீரா..

 சிறு வயதிலேயே சிவராஜால் துளசியின் மனதில் சற்று சுணக்கம் இருந்தாலும் அனைத்தையும் மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொண்டு குடும்பத்துடன் ஒன்று இணைந்து வாழ்ந்தார்கள் அவர்கள் அனைவரும்.. 

                 ——முற்றும்….. 

Advertisement