Advertisement

சிந்தாமல் நின்றிசைக்கும் செந்தேனே!!!

“நான் ஒன்னும் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கல… ஏதோ அழகா இருக்கன்னு ட்ரை பண்ணேன் நீ விழுந்துட்ட… என்கிட்ட சொல்லாம உன்னை யாரு வீட்டை விட்டு வர சொன்னது… உன்னை கல்யாணம் பண்றதுல எனக்கு என்ன லாபம்? இதுவே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணா எனக்கு ஐம்பது சவரன் நகை கிடைக்கும்… கூடவே ஒரு காரும், ஐஞ்சு லட்சம் பணமும் கிடைக்கும்…”

“அதான் எங்க வீட்டுல பார்த்த பொண்ணுக்கே ஓகே சொல்லிட்டேன்… நீயும் உங்க வீட்டுல பார்க்கற பையனை கல்யாணம் பண்ணிக்கோ…” என்றவனின் குரலில் துளியும் நேசமுமில்லை, தன்னெதிரே கண்ணீரோடு நின்றிருந்த தன் காதலியின் மீது இரக்கமும் இல்லை.

இனி இவன்தான் தன் வாழ்வு என்று வீட்டில் ஏற்பாடு செய்திருந்த கல்யாணத்தை மறுத்து பெற்றவர்களை எதிர்த்து தன்னவனைத் தேடி வர அவன் சொன்ன செய்தியில் தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமோ என்ற வெறுமையும், தான் ஏமாளியான கோபமும் சேர்ந்து கலவையான உணர்வில் நின்றிருந்தாள் பெண்ணவள்.

********************************

“அம்மாவுக்கு உன்னை இப்பவே பார்க்கணும் போல இருக்கு கண்ணா…”

“ரெண்டு நாள் கழிச்சு உங்க முன்னாடி இருப்பேன்…”

 

“நல்லதுப்பா… எவ்வளவு நாளாச்சு நீ ஊருக்கு வந்து? உனக்கு பிடிச்ச பலகாரங்களை செய்ய ஆரம்பிக்கறேன்…” என்றார் தாய் தனலட்சுமி.

“சரிம்மா… உங்க உடன்பிறப்பு அவர் குடும்பம் எல்லாரும் வந்தாச்சா?” என்றவனின் தளர்ந்த தேகமும் லேசான மனதும் தன் இயல்பை வெளிக்காட்ட,

“ஏன் அவரை உன் மாமான்னு சொல்லி கேட்க மாட்டியா?” என்று அருகே கேட்ட இன்னொரு குரலில் பரவசமானவன்,

“அது என் மாமனுக்கு பொண்ணு இருந்திருந்தா அப்படி கேட்டிருப்பேன்… நான் அவர் மாப்பிள்ளையாகிட்டா என்கிட்ட கொஞ்சம் நஞ்சம் முறுக்கிட்டு திரியறதை அவரும் குறைப்பாரு இல்ல…” என்றதும் எதிர்ப்புறம் நிலவிய நொடி நேர அமைதியை எதனால் என்று கணித்தவன் வாய்விட்டு சிரித்தான்.

“சரி சரி உங்க உடன்பிறப்பை நான் ஒன்னும் சொல்லல… கொஞ்சம் உங்க கோபத்தை குறைங்க… நீங்க ரெண்டு பேரும் அங்கவிடற மூச்சுக்காத்து இங்க வரைக்கும் வந்து என்னை பொசுக்கிடப்போகுது…” என்று இன்னும் கேலிக்குரலில் சொன்னவனை இருகுரலும் ஒருசேர சேர்ந்து அதட்டியது.

*****************************************

“நான் அவ்வளவு ஈஸியா வெளியே வர முடியாதுடா மீரா… உனக்குத் தெரியும்ல…” என்றதும் சகோதரிகள் மூவரின் முகமும் அப்படியே சுருங்க இன்னும் கலங்கித்தான் போனான்.

இது அவனாக விரும்பி தேர்ந்தெடுத்ததுதான் ஆரம்பத்தில் துள்ளிக்குதித்த மனம் இன்று நடக்கும் அனைத்தையும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப்பார்த்தது…

“அவன் வரலைன்னா என்ன? நம்ம கடைக்காரங்களை துணியை இங்க கொண்டு வர சொல்லுங்களேன்… கண்ணா கூட இருந்து புள்ளைங்க இங்கயே எடுத்துக்கட்டும்…” என்று வள்ளி தன் கணவனிடம் கூற அவரும் சம்மதித்து தங்கள் மேனேஜரை அழைக்க செல்ல அவரை தடுத்தான்.

“வேணாம் சித்தப்பா… வீட்டுக்கு வர வைக்க வேணாம்… நானே கூட்டிட்டு போறேன்… அக்கா நீங்க எல்லாம் ரெடியா இருங்க… நம்ம கூட்டம் குறைவா இருக்கும் போது போகலாம்…” என்றதும் சகோதரிகள் ஆர்ப்பரித்து தயாராக சென்றனர்.

*********************************

“இப்ப முடிவா என்னதான் சொல்ற?”என்று தீர்க்கமாக கேட்ட தந்தையிடம்,

“அந்த பொண்ணை நீங்க வேணாம்னு சொல்ல பெருசா எந்த காரணமும் இல்லையே… இது என் வாழ்க்கை எனக்கு என்ன வேணுமோ என்ன விருப்பமோ அதை நான்தானே முடிவு பண்ண முடியும்…” என்றான் அதே உறுதியோடு.

“இதுவரைக்கும் உன் விருப்பத்துக்கு நாங்க விட்டது போதும்… இனி முடியாது…”என்ற தந்தையைத் தொடர்ந்து,

“நாங்க சொல்றதை நீ கேட்கலைன்னா இனி உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல… அதுக்கு அப்புறம் உன் விருப்பம்…” என்ற குரலில் திரும்பி பார்த்தவன் அதைக் கூறியவரைக் கண்டு முகம் இறுகிப்போனான்.

***********************************************

ஹாய் பிரெண்ட்ஸ்! டீசர் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்பறேன்… கூடிய சீக்கிரம் அத்தியாயங்களோடு வந்து உங்களை சந்திக்கிறேன்… நன்றி! வணக்கம்!

Advertisement